பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர்
பிர்சா முண்டா (Birsa Munda) பிறந்த தினம்
நவம்பர் 15, 1875.
பிர்சா முண்டா (Birsa Munda) இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் ஆவர். பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
#பிர்சா_முண்டா
#Birsa_Munda, photograph in Roy (1912-72).JPG
பிறப்பு
நவம்பர் 15, 1875
உலிகாட், இந்தியா
இறப்பு
9 சூன் 1900
ராஞ்சிசிறை
இவரின் பெயரால் சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சின்த்ரி என்ற இடத்தில் பிர்சா தொழில் நுட்ப மையம் Birsa Institute of Technology Sindri) ஒன்றும், பெருல்லா (Purulia) என்ற இடத்தில் சித்தா கன்கோ பிர்சா பல்கலைக்கழகம் (Sidho Kanho Birsha University) மற்றும் ராஞ்சியில் பிர்சா முன்டா அத்லடிக் வளாகம் (Birsa Munda Athletics Stadium) ஒன்றும் அவரின் நினைவாக அரசு நிறுவியுள்ளது. அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்.
இவர் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த போராளிகளில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள். இவர் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று அறைகூவல் விடுத்துப் போராடினார்.
இளமை
இவர் 1875ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி இராஞ்சி மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகண் முண்டா ஆவார்.
பழங்குடி விடுதலை
ஆங்கிலேயர்களின் ஆட்சி இவருக்குப் பிடிக்கவில்லை அவர்கள் இந்திய மக்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று வாதிட்டார். மக்களைச் சித்திரவதை செய்து அவர்களின் சொத்துக்களைச் சுரண்டி செல்கிறார்கள் என்று கூறினார். ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். சோட்டா நாக்பூர் பகுதியில் பழங்குடிகளுக்காக அவர் செய்த சாதனை மிகவும் பாராட்டப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பொகாரோ ஸ்டீல் சிட்டி, என்ற இடத்தில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலை
உரிமைப் பறிப்பு
ஜமீன்தார்கள் பழங்குடிகளின் நிலத்தை வட்டிக்குக் கடன் கொடுக்கிறேன் என்ற போர்வையில் பிடுங்கி வைத்திருந்தார்கள். பழங்காலத்தில் எழுத்துப்பூர்வமான பத்திரப்பதிவுகள் எதுவும் இல்லாததால் ஆங்கிலேயர்களின் சட்டங்கள் அவர்களின் நில உரிமைகளை எளிதில் பிடுங்கிக்கொள்ள உதவியாக இருந்தது. நீதிமன்றங்களில் இவர்களின் வழக்குகள் தோல்வியைத் தழுவின. இதன் காரணமாக நிலவுடைமைதாரர்களிடம் அடிமையாகவும், கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
உரிமைப் போராட்டம்
அவர் பேசிய வாதங்கள் பழங்குடி மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்தது. அந்த காலகட்டமான 1890ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அபோதுதான் சோட்டா நாக்பூர் பகுதிகளில் மக்களை ஒன்று சேர்த்தார். 1894 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிளேயே நடந்த முதல் போராட்டம் ஆகும். 1990ஆம் ஆண்டு கெரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்.
பொய்த்துப்போன கனவு
இந்தியா விடுதலை அடைந்தும் இன்றுவரை அவரின் கனவு நிறைவேறவே இல்லை. பழங்குடிமக்கள் இன்னமும் தங்களை உயர்குடி என்று கூறிக்கொள்ளும் மக்களால் மறைமுக அடிமைத்தனத்தில் இருந்து மீண்டும் வரமுடியாத கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தொழிற்சாலை, நீர்ப்பாசனத் திட்டம் என்று அவர்களின் குடியிருப்பு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக