பக்கங்கள்

திங்கள், 2 மார்ச், 2020

இந்திய தொழில்துறையின் தந்தை... பிறந்த தினம் !!


இந்திய தொழில்துறையின் தந்தை... பிறந்த தினம் !!
உலக வனவிலங்குகள் தினம்

🐅 உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

🐅 வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது, அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

📞 தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

📞 இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

📞 பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

📞 1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.

📞 ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார்.ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா


🏢 இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார்.

🏢 தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார்.

🏢 தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

🏢 இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்திற்கு அஸ்திவாரமாக இருந்த இவர் 1904ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் மறைந்தார்.👉 1940ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக