உடன்பிறப்புகள் நாள் ஏப்ரல் 10.
(Siblings Day)
உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது. 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக