பக்கங்கள்

சனி, 2 மே, 2020

பூக்களை போன்று பூத்து குலுங்குவோம்... இன்று உலக சிரிப்பு தினம் !



பூக்களை போன்று பூத்து குலுங்குவோம்... இன்று உலக சிரிப்பு தினம் !

உலக சிரிப்பு தினம்

😃 ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன்முதலில் 1998ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது.

😃 அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்



🎤 சோல் இசையின் தந்தை ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (துயஅநள துழளநிh டீசழறn) 1933ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தென் கரோலினாவில் (அமெரிக்கா) உள்ள பார்ன்வெலில் பிறந்தார்.

🎤 இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிக முக்கியமானவர். மேலும், பலத்த குரலில் பாடுவது, பாடிக்கொண்டே நடனம் ஆடுவது போன்று தனக்கென தனித்தன்மையை பெற்றிருந்தார்.

🎤 பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். இதுமட்டுமல்லாமல் ராக், ஜாஸ், டிஸ்கோ, டான்ஸ், இலத்திரனிசை, ரெகே, ஆஃப்ரோ-பீட், ஹிப் ஹாப் போன்ற இசை முறைகளிலும் இவர் தனது சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார்.

🎤 திரைப்படத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் என்ற பெயர் கொண்ட இவர் 2006ஆம் ஆண்டு மறைந்தார்.சுஜாதா



✍ தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன்.

✍ 1962ஆம் ஆண்டு இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை குமுதம் என்ற இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு தன் மனைவி பெயரான சுஜாதா-வின், பெயரை தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

✍ இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

✍ சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🎬 1913ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.🏁 1969ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் மறைந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக