வியாழன், 7 ஜனவரி, 2010

புர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பிற‌ந்த நாள் ஜனவரி 17


எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.
திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்
அரசியல்
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.


விருதுகள்

பாரத் விருது - இந்திய அரசு

அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

பாரத ரத்னா விருது - இந்திய அரசு

பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)

சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)

வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி

நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)

மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்

பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்

மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்

கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்

கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்

கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்

கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்

கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்

திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

 பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்

கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா

நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்

பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்

மக்கள் திலகம் - தமிழ்வாணன்

வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்

புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்

இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்

மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்

ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.
1. சதி லீலாவதி -1936

2. இருசகோதரர்கள் -1936

3. தட்சயக்ஞம் -1938

4. வீரஜகதீஷ் -1938

5. மாயாமச்சேந்திரா -1939

6. பிரகலாதா-1939

7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941

8. அசோக்குமார் -1941

9. தமிழறிவும் பெருமாள் -1941

10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943

11. அரிச்சந்திரா -1944

12. சாலிவாகணன் -1945

13. மீரா -1945

14. ஸ்ரீ முருகன் -1946

15. ராஜகுமாரி -1947

16. பைத்தியக்காரன் -1947

17. அபிமன்யு -1948

18. மோகினி -1948

19. ராஜமுக்தி -1948

20. ரத்னக்குமார் -1949

21. மருதநாட்டு இளவரசி -1950

22. மந்திரிகுமாரி -1950

23. மர்மயோகி -1951

24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)

25. சர்வாதிகாரி -1951

26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)

27. அந்தமான் கைதி -1952

28. குமாரி -1952

29. என் தங்கை -1952

30. நாம் -1953

31. ஜெனோவா -1953(மலையாளம்)

32. ஜெனோவா -1953

33. பணக்காரி -1953

34. மலைக்கள்ளன் -1954

35. கூண்டுக்கிளி -1954

36. குலோபகாவலி -1955

37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956

38. மதுரை வீரன் -1956

39. தாய்க்குப் பின் தாரம் -1956

40. சக்கரவர்த்தி திருமகள் -1957

41. ராஜராஜன் -1957

42. புதுமைப்பித்தன் -1957

43. மகாதேவி -1957

44. நாடோடி மன்னன் -1958

45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959

46. பாக்தாத்திருடன் -1960

47. ராஜா தேசிங்கு -1960

48. மன்னாதி மன்னன் -1960

49. அரசிளங்குமரி -1961

50. திருடாதே -1961
51. சபாஷ் மாப்ளே -1961


52. நல்லவன் வாழ்வான் -1961

53. தாய்சொல்லைத் தட்டாதே -1961

54. ராணி சம்யுக்தா -1962

55. மாடப்புறா -1962

56. தாயைகாத்த தனையன் -1962

57. குடும்பத்தலைவன் -1962

58. பாசம் -1962

59. விக்கிரமாதித்தன் -1962

60. பணத்தோட்டம் -1963

61. கொடுத்து வைத்தவன் -1963

62. தர்மம் தலைகாக்கம் -1963

63. கலை அரசி -1963

64. பெரிய இடத்துப் பெண் -1963

65. ஆனந்த ஜோதி -1963

66. நீதிக்கு பின் பாசம் -1963

67. காஞசித் தலைவன் -1963

68. பரிசு -1963

69. வேட்டைக்காரன் -1964

70. என் கடமை -1964

71. பணக்காரக் குடும்பம் -1964

72. தெய்வத்தாய் -1964

73. தொழிலாளி -1964

74. படகோட்டி -1964

75. தாயின் மடியில் -1964

76. எங்க வீட்டுப் பிள்ளை -1965

77. பணம்படைத்தவன் -1965

78. ஆயிரத்தில் ஒருவன் -1965

79. கலங்கரை விளக்கம் -1965

80. கன்னித்தாய் -1965

81. தாழம்பூ -1965

82. ஆசைமுகம் -1965

83. அன்பே வா -1966

84. நான் ஆணையிட்டால் -1966

85. முகராசி -1966

86. நாடோடி -1966

87. சந்திரோதயம் -1966

88. தாலி பாக்கியம் -1966

89. தனிப்பிறவி -1966

90. பறக்கும் பாவை -1966

91. பெற்றால் தான் பிள்ளையா? -1966

92. தாய்க்கு தலை மகன் -1967

93. அரச கட்டளை -1967

94; காவல்காரன் -1967

95. விவசாயி -1967

96. ரகசிய போலீஸ்115 -1968

97. தேர்த்திருவிழா -1968

98. குடியிருந்த கோயில் -1968

99. கண்ணன் என் காதலன் -1968

100. ஒளிவிளக்கு -1968

101. கணவன் -1968

102. புதிய பூமி -1968

103. காதல் வாகனம் -1969

104. அடிமைப் பெண் -1969

105. நம்நாடு -1969

106. மாட்டுக்கார வேலன் -1970

107. என் அண்ணன் -1970

108. தலைவன் -1970

109. தேடிவந்த மாப்பிள்ளை -1970

110. எங்கள் தங்கம் -1970

111. குமரிக்கோட்டம் -1971

112. ரிக் ஷாக்காரன் -1971

113. நீரும் நெருப்பும் -1971

114. ஒரு தாய் மக்கள் -1971

115. சங்கே முழங்கு -1972

116. நல்ல நேரம் -1972

117. ராமன் தேடிய சீதை -1972

118. நான் ஏன் பிறந்தேன் -1972

119. அன்னமிட்டகை -1972

120. இதய வீணை -1972

121. உலகம் சுற்றும் வாலிபன் -1973

122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973

123. நேற்று இன்று நாளை -1974

124. உரிமைக்குரல் -1974

125. சிரித்து வாழவேண்டும் -1974

126. நினைத்ததை முடிப்பவன் -1975

127. நாளை நமதே -1975

128;. இதயக்கனி -1975

129. பல்லாண்டு வாழ்க -1975

130. நீதிக்கு தலைவணங்கு -1976

131. உழைக்கும் கரங்கள -1976

132. ஊருக்கு உழைப்பவன் -1976

133. நவரத்தினம் -1977

134. இன்று போல் என்றும் வாழ்க -1977

135. மீனவ நண்பன் -1977

136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977

தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்

1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956

2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956

3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957

4.மகாதேவி (மகாதேவி) -1958

5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.

6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959

7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960

8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961

9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961

10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961

11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962

12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962

13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962

14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962

15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963

16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963

17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963

18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964

19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954

20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954

21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964

22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964

23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964

24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965

25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965

26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965

27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966

28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966

29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967

30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967

31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967

32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967

33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967

34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967

35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967

36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968

37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968

38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968

39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968

40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968

41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969

42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969

43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969

44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970

45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970

46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971

47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971

48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972

49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972

50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972

51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973

52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975

53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975

54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975

55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976

56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976

57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976

58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978

59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978

60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978
இந்தி மொழி மாற்ற படங்கள்
1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956

2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961

3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962

4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963

5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966

6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970

7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974

8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975

9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976
புர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...
தமிழ் நூல்கள் :

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்

வெளியீடு - கல்வி உலகம் , இளந்தேரி (1977)
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள்.

ஆசிரியர் – சாலி.இக்பால்

வெளியீடு – நூர் பதிப்பகம் , சென்னை (1980)

3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை.

ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்f

வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)

4. அண்ணனுக்குப் பின் மன்னன்.

ஆசிரியர் – அடியார்.

வெளியீடு - மல்லி பதிப்பகம் , சென்னை (1978)

5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்

வெளியீடு – வானதி பதிப்பகம் , சென்னை (1985)

6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)

7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – நாகை தருமன்

வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம் , சென்னை (1979)

8. வரலாற்று நாயகன்

ஆசிரியர் – திருமூலன்

வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)

9. காலத்தை வென்றவர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி

ஆசிரியர் – அறிஞர் அண்ணா தொகுப்பு- ஆர்.சீனிவாசன்

வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)

11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)
12. அண்ணா தி.மு.க. வரலாறு

ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்

வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)

13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்

வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)

14. சத்துணவும் சத்துணர்வும்

ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்

வெளியீடு – வள்ளி புத்தக நிலையம் , சென்னை (1984)

15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்)

ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்

வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , சென்னை (1985)

16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு

ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன்

வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)

17. எம் தலைவன் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1987)

18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி

வெளியீடு – வித்வான் பதிப்பகம் , சென்னை (1975)

19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை)

ஆசிரியர் – ராஜவர்மன்

வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ் , சென்னை (1984)
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர்

ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு

வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1983)

21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர்

ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்

வெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1986)

22. நினைவுகளின் ஊர்வலம்

ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன்

வெளியீடு – திருமகள் நிலையம் , சென்னை (1986)

23. எமனை வென்ற எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – தஞ்சை தமிழழகன்

வெளியீடு - மக்கள் பதிப்பகம் , சென்னை (1985)

24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர்

ஆசிரியர் – அ.வசந்தகுமார்

வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம் , சென்னை (1985)

25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும்

ஆசிரியர் – எஸ்.குலசேகரன்

வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம் , சென்னை (1985)

26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை)

ஆசிரியர் – வலம்புரிஜான்

வெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)

27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – பாலாஜி

வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)

28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம்

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

29. அப்பலோ டு அமெரிக்கா

ஆசிரியர் – பா.ஜீவகன்

வெளியீடு – மேத்தா பிரசுரம் , சிவகாசி (1985)

30. சத்துணவு பாடல்கள்

ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன்

வெளியீடு - அறிவரசி பதிப்பகம் , தருமபுரி (1984)
31. இந்தி ஆதிக்கப் பேரில் புரட்சித்தலைவர்


ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன்

வெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)

32. நான் ஏன் பிறந்தேன்?

ஆசிரியர் – வேலன்

வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம் , சென்னை (1988)

33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள்

ஆசிரியர் – கா.சுப்பு

வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை , சென்னை (1984)

34. நான் கண்ட எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1988)
36. முப்பிறவி எடுத்த முதல்வர்

ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார்

வெளியீடு - சாயிகீதா பதிப்பகம் , சென்னை (1985)
37. சொல்லும் செயலும்

ஆசிரியர் – ஆ.அசோக்குமார்

வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)

38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – புலவர்.செ.இராச

வெளியீடு – கொங்கு ஆய்வு மையம் , ஈரோடு (1985)

39. எம்.ஜி.ஆர் சரணம்

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு - நெய்தல் பதிப்பகம் , சென்னை (1988)
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்

வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம் , சென்னை (1981)

41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள்

ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம்

வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1986)

42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம்

ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன்

வெளியீடு – அப்போலா வெளியீடு , சென்னை (1988)
43. முப்பிறவி கண்ட முதல்வர்

ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன்

வெளியீடு - ரேவதி பதிப்பகம் , சென்னை (1985)

44. செம்மலின் பொன்மனம்

ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன்

வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ் , மதுரை (1988)

45. புரட்சியார் ஒரு காவியம்

ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி

வெளியீடு - சித்ரா பதிப்பகம் , வேலூர் (1987)

46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும்

ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம்

வெளியீடு – கலைக்கருவூலம் , சென்னை (1988)

47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)

48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை

ஆசிரியர் – மாருதிதாசன்

வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம் , நாமக்கல் (1981)

49. உலா வரும் உருவங்கள் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன்

வெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)

50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1985)
51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள்


ஆசிரியர் – நாகை தருமன்

வெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)

52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை

ஆசிரியர் – கழஞ்சூர் சொ செல்வராஜி

வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , வேலூர் (1985)

53. வெற்றித்தலைவர் வீர வரலாறு

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு - தில்லை பதிப்பகம் , சேலம் (1987)

55. ஜீவ நதிகள்

ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன்

வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம் , சென்னை (1988)

56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி

ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன்

வெளியீடு - தாமரைப் பதிப்பகம் , சென்னை (1985)

57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை

ஆசிரியர் – ஏ.கே.வில்வம்

வெளியீடு - ரோமா பதிப்பகம் , சென்னை (1985)

58. வள்ளலும் உள்ளமும்

ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி

வெளியீடு - ஆரோம் பதிப்பகம் , குமரி (1987)

59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும்

ஆசிரியர் – ரசிகன் அருணன்

வெளியீடு - அருணா பப்ளிசிட்டி , சென்னை (1987)

60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1984)
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா?

ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை

வெளியீடு – நெல்சன் பதிப்பகம் , சென்னை (1961)

62. தர்மம் வென்றது

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1987)

63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1

ஆசிரியர் – எஸ்.விஜயன்.

வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ் , சென்னை (1989)

64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம்

ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன்

வெளியீடு – கன்னிப் பதிப்பகம் , சென்னை (1985)

65. சத்தியா மைந்தன் சாதனை

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ் , சேலம் (1978)

67. சத்துணவு நாயகன்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம் , சேலம் (1987)

68. இதயவானில் உதய நிலவு

ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன்

வெளியீடு - இளவளகி பதிப்பகம் , வேலு\ர் (1985)
69. பரிபூரண அவதாரம் (நாடகம்)

ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்

வெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1985)

70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2

ஆசிரியர் – எஸ்.விஜயன்

வெளியீடு - அருள்மொழி பதிப்பகம் , சென்னை (1991)

71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா?

ஆசிரியர் – கி.வீரமணி

வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு , சென்னை (1982)

72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள்

ஆசிரியர் – இனியவன்

வெளியீடு – அவ்வை மன்றம் , சென்னை (1986)
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ்

ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன்

வெளியீடு - குறளகம் , பழனி (1988)

74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு

ஆசிரியர் – ஜோதிமணவாளன்

வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சிவகாசி (1993)

75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும்

ஆசிரியர் – மோகன்தாஸ்

வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ் , பெங்களுர் (1993)

76. காலத்தை வென்றவர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பதிப்பகம் , நாகப்பட்டினம் (1991)

77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள்

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1991)

78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா

வெளியீடு – மயிலவன் பதிப்பகம் , சென்னை (1993)

79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கு.சண்முகசந்தரம்

வெளியீடு – குமரன் பதிப்பகம் , சென்னை (1992)

80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு

ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ

வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம் , சென்னை
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம்

ஆசிரியர் – மெய்க்கீர்த்தி

வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை , சென்னை (1978)

82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும்

ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன்

வெளியீடு – புரட்சியார் ரசிகன் , சென்னை (1985)

83. அண்ணா கொள்கைக்கு நாமம்

ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள்

வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு , சென்னை
84. வெற்றி நமதே

ஆசிரியர் – ஜோதி மணவாளன்

வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சென்னை (1991)

85. அரசும் தமிழும்

ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன்

வெளியீடு - தமிழ்ச்சுரங்கம் , மதுரை (1986)
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம்

ஆசிரியர் – குமரிச் செல்வன்

வெளியீடு - நாகர்கோவில் ( 1982)

English Books:




1.Dr.M.G.R.A.Phenomenon

Author- Dr.Jagathrakshakan

Publisher- Appolo Publications, Chennai (1984)



2.All India Anna Diravida Munnetra Kazhagam

Author- Dr.R.Thandavan

Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)



3.Poems- I Call M.G.R an Angel

Author- S.Yesupatham

Publisher- Packiam Publications, Chennai (1984)



4.Impact M.G.R.Films

Author- V.Kesavalu

Publisher- Movie Appreciation Society, Chennai (1990)



5.The Dynamic M.G.R

Author- A.P.Janarthanam M.P.

Publisher- Chennai (1978)



6.M.G.R.-The Man and Myth

Author- K.Mohndass

Publisher- Panther Publishers, Chennai (1992)



7.The Image Trap (M.G.R Film & Politics)

Author- M.S.S.Pandian

Publisher- Sage Publications India, New Delhi (1992)

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்
1. வேதநாயகன்

ஆசிரியர் – ரவீந்திரன்

வெளியீடு - சென்னை ( 1993)

2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம் ,வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு

வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம் , சென்னை
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கலைமணி

வெளியீடு – தமிழ் நிலையம் , சென்னை (1967)

4. ஆயுள் பரிசு

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம் , சென்னை

5. இதயத்தில் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – மா.செங்குட்டுவன்

வெளியீடு – வண்ணக் களஞ்சியம் , சென்னை (1967)

6. தமிழக முதல்வர்

ஆசிரியர் – சிவாஜி

வெளியீடு - அசோகன் பதிப்பகம் , சென்னை.

7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு

வெளியீடு - சேகர் பதிப்பகம் , சென்னை

8. அண்ணாவின் அரசு

வெளியீடு - அன்பு நிலையம் , சென்னை

9. அண்ணாவின் பாதை

வெளியீடு – ராஜா பதிப்பகம் , அருப்புக்கோட்டை

10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்

வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ் , சென்னை

11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர்

வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ் , சென்னை

12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்

14. வரலாற்று நாயகன்

ஆசிரியர் – கரு.கருப்பையா

15. புரட்சித்தலைவர்

ஆசிரியர் – தேவிப்பிரியன்
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – சக்கரைப்புலவர்

17. தலைவா உன்னை யாசிக்கிறேன்

ஆசிரியர் – அடியார்
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.

19. Dr. M.G.R in Indian News Papers

Author- Dr. Mohanrajan


20. C.M. Speech's

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ஆஸ்கார் நாய‌க‌ன் உதய‌ தின‌ம் சனவரி 6...

அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு...
ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
திரைப்பட இசையமைப்புகள்



ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்


1992 ரோஜா ரோஜா ரோஜா
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே
1993 புதிய முகம்
1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
1993 உழவன்
1994 டூயட்
1994 காதலன் ஹம்ஸே ஹே முக்காப்லா
1994 கருத்தம்மா
1994 மே மாதம் 1994 புதிய மன்னர்கள்
1994 வண்டிச்சோலை சின்னராசு
1994 பவித்ரா
1994 சூப்பர் போலீஸ்
1994 கேங் மாஸ்டர்
1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
1995 இந்திரா
1995 முத்து
1995 ரங்கீலா ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
1996 லவ் பேர்ட்ஸ் ஃபயர்
1996 மிஸ்டர் ரோமியோ
1997 இருவர்
1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே
1997 ரட்சகன் ரக்ஷடு
1997 தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே
1998 தோலி சஜா கே ரக்ஹ்னா
1998 கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
1999 தாஜ் மஹால்
1999 சங்கமம்
1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு
1999 ஜோடி
1999 தாளம் தாள்
1999 என் சுவாசக்காற்றே
1999 படையப்பா
1999 1947 எர்த்
1999 தக்ஷக்
1999 புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி
2000 ரிதம் ரிதம்
2000 தெனாலி தெனாலி
2000 தில் ஹே தில் மே
2001 ஸ்டார்
2001 பார்த்தாலே பரவசம் பரவசம்
2001 அல்லி அர்ஜூனா
2001 சுபைதா
2001 ஒன் 2 கா 4
2001 லவ் யூ ஹமேஷா
2001 லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா
2002 பாபா
2002 காதல் வைரஸ்
2002 தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
2002 சாத்தியா
2003 உதயா
2003 பரசுராம்
2003 பாய்ஸ் பாய்ஸ்
2003 வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு
2003 கண்களால் கைது செய்
2003 தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
2004 நியூ நானி
2004 தேசம் ஸ்வதேஸ்
2004 லகீர்
2004 மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
2004 தில் நே ஜிஸே அப்னா கஹா
2004 கிஸ்னா
2005 போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
2005 மங்கள் பாண்டே - தி ரைஸிங்
2005 அ... ஆ ...
2005 வாட்டர்
2006 ரங் தே பசந்தி
2006 சில்லுனு ஒரு காதல்
2006 வரலாறு
2007 குரு குரு குரு
2007 ப்ரோவோக்டு
2007 சிவாஜி
2007 அழகிய தமிழ் மகன்
2007 எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008 ஜோதா அக்பர்
2008 ஜானே து யா ஜானே நா
2008 அடா : எ வே ஆப் லைப்
2008 சக்கரகட்டி
2008 யுவ்ராஜ்
2008 ஸ்லம் டாக் மில்லியனியர்
2009 டில்லி 6
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
[திரைப்பட அல்லாத இசையமைப்புகள்


தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)


செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
இவர் பெற்ற விருகள்...
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.


ந‌ன்றி விக்கிபீடியா

புதன், 30 டிசம்பர், 2009

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அணைவருக்கும் எனது இனிய   புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .....
2010

புதன், 23 டிசம்பர், 2009

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளும் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். அடிப்படை உணர்வு ஒன்றுதான்.
உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்கள் மினுக்கும் விளக்குகளை காய்த்துச் சிரிக்கும். தேவபுதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
பெத்லகேமில் கிறிஸ்துமஸ்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” யில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள். பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன் கதவில் “சிலுவை” தீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஈரானில் கிறிஸ்துமஸ்
இஸ்லாமிய நாடான ஈரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்த போது இருந்த முப்பெரும் மனிதர்கள் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது “சிறுநோன்பு” எனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் “பெருநோன்பு” நோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.
சீனாவில் கிறிஸ்துமஸ்
கம்யூனிச நாடான சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். மக்கள் வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று அரசர்களுக்கு இறை இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் குடில்
1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இறை இயேசு பிறந்த மாட்டுக் குடில், இறை இயேசுவின் பெற்றோர்கள் இறை இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்
மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் கேக்
ஒவ்வொரு விழாக்களுக்கும் ஓர் சிறப்பான உணவு விழா உணவாக கருதப்படும். கிறிஸ்துவம் மேற்கித்திய கலாச்சாரத்தின்படி கேக் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பான உணவு பொருளாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பூ
மெக்சிகோவில் “போய்ன்செட்டியா” என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் “புனித இரவின் பூ” என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு
ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக “ஜுல்பக்” என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்
கிறிஸ்துமஸ் குறித்து கிறித்தவர்களிடம் வேறு சில நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவை;
கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.


கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.
கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.
கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான ஒன்றாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் பிற கிறிஸ்துமஸ் அழகூட்டும் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன் சில நாட்களில் இம்மரத்தின் அழகூட்டப்படுவதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றையும் சேர்த்துக் காணலாம் அல்லது சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும். ஆமாம். இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி தோன்றியிருக்கும்?
எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.
ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
-இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கிறித்துவ மதத்தில், கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றிருக்கலாம் என்கின்றனர் சிலர்.
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக் கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதை ஒன்றுள்ளது. இதனடிப்படையில்தான் கிறிஸ்துமஸ் மரம் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டு வந்து விழா கொண்டாடியதால், அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றுள்ளது என்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இப்படி கிறிஸ்துமஸ் மரம் குறித்து பல செய்திகள் சொல்லப்படுகின்றன.


ந‌ன்றி‍‍‍ .. முத்துக்க‌ம‌ல‌ம்....

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நிறங்களும் அவற்றின் குணங்களும் ...



நிறங்களும் அவற்றின் குணங்களும் ...


உலகம் வண்ணமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமுண்டு. வெண்மை தூய்மையையும், சிவப்பு தடையையும் உணர்த்துவது இயல்பு. இவ்வாறே ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு தன்மையை உடையது. பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றே. வெண்மை மற்றும் கருமை நிறத்தைத் தனியாகவே குறிப்பிடுகின்றனர். மற்ற வண்ணங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.


உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே: பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.


வலிமையின் நிறம் சிவப்பு: வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை: மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.

ஆழமான ஊதாவே: ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்நிறம் நிறைவு, சொகுசு , தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் விளங்குகிறது. ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. ஆன்மீக உணர்வைத் தூண்டக்கூடிய இந்நிறம் சீரான சிந்தனையையும், ஆழ்ந்த எண்ணங்களையும் ஊக்குவிக்கிறது.வானவில்லின் புறத்தில் கடைசியாக இருக்கும் நிறமாதலால், காலம்(Time), வெளி(Space)மற்றும் பிரபஞ்சம் (Cosmos) இவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அதிகப்படியான ஊதாநிறப் பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, அழுத்தம், வெளிப்படையாகப் பேசாமை (Introvert) போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் சரியான வண்ணக்கலவையாக இல்லாவிடில் அது அருவருக்கத் தக்கதாகத் தோற்றமளிக்கிறது.


ஆர்வம் தரும் ஆரஞ்சு: செயல்பாட்டைத் தூண்டக் கூடிய வண்ணம் ஆரஞ்சு. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடு எனவும் ஆரஞ்சு வண்ணம் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையால் ஆரஞ்சு உருவாவதால், செயல் திறன், உணர்வுகள் இரண்டையும் தூண்டும் தன்மையுடையதாக உள்ளது இந்த வண்ணம். மனம் மிகுந்த சோர்வாக இருக்கும்பொழுது ஆரஞ்சு வண்ண உடை அணிவதால், மனச்சோர்வில் இருந்து விடுபட இயலும். அதே நேரம், இவ்வண்ணத்தை கறுப்புடன் சேர்த்துப் பயன் படுத்துகையில் இது எதையோ இழந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதாக மாறிவிடுகிறது. மேலும் அதிகப் படியான ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தைக் (நீலத்திற்கு எதிரான தன்மை) காட்டுகிறது.

திங்கள், 7 டிசம்பர், 2009

ர‌ஜினிகாந்த் பிற‌ந்தநாள் டிசம்பர் 12



ர‌ஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாசி ராவ் காயக்வாட்  ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் சுடார் என்றும் அழைக்கின்றனர்.
இளமை
ர‌ஜினிகாந்த் டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

திரைப்படங்களில்..
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ர‌ஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ர‌ஜினிகாந்த் நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான சுரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ர‌ஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா (திரைப்படம்) வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஆசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில்  ர‌ஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.

ர‌ஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு சப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
ஆன்மீக ஈடுபாடு...
ரசினிகாந்து ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருச்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிசிகேச் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் தொடர்பு
1990களில் ர‌ஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 03நவ08 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாக கோரினர்.
குடும்பம்
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார்

ஓஷோ பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11,


ஓஷோ  எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார்.தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார்.அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும்,உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும், சமயங்களையும் பற்றி விவாதித்தார். 1974 - ஆம் ஆண்டு புனே (பூனா) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் .அவரின் சவாலான சொற்பொழிவுகளும்,சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின. இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார்.
அவரின் சீடர்களால் அமெரிக்காவில் உலக அளவில் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூகத்திற்கு 1981- ம் ஆண்டு இடம் பெயர்ந்தார்.அது பின்னாளில் ஒரேகான் மாகாணத்தின் ரஜ்னீஸ்புறமாக அறியப் படுகின்றது .

விஸ்வநாதன் ஆனந்த் பிற‌ந்த‌நாள் டிசெம்பர் 11


விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் தேசிய சந்துரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி லைற்றினிங் கிட் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். 1987இல் உலக இளநிலை வெற்றிவீரரான முதலாவது இந்தியரானார்.விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகிரானில் அலெக்சி சிறோவ்-ஐத் 3.5 - 0.5 என்ற ரீதியில் தோற்கடித்ததன் மூலம் தமதாக்கிக் கொணடார். எனினும் அவர் 2002இல் இடம்பெற்ற நொக்-அவுட் ஆட்டத்தில் ருஸ்லான் பனமரியோவிடம் தோற்றார்.
உலகச் சதுரங்க வெற்றிவீரர்
விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோ நகரில் செபம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றினார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்



2000 சதுரங்க வெற்றிவீரர்


1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்


1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்


1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்


1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)



பத்மபூஷண் (2000)


பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.


ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)


தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)


தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985).

மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11 ...


மகாகவி பாரதி பிற‌ந்த‌நாள் டிசம்பர் 11...
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,


வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்..
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகானவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

உலக மனித உரிமைகள் நாள்


உலக மனித உரிமைகள் நாள்
உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

வியாழன், 3 டிசம்பர், 2009

கொடி நாள் டிசம்பர் . -7 .


கொடி நாள் டிசம்பர் . -7 .


நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .
அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .

புதன், 2 டிசம்பர், 2009

டிசம்பர் 3 அனைத்துலக ஊனமுற்றோர் நாள்


அனைத்துலக ஊனமுற்றோர் நாள் (International Day of Disabled Persons) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாளன்று உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.
ஐக்கிய நாடுகள் அவை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 இன் டிசம்பர் 3-ம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச ஊனமுற்றோர் தினம் என அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதன், 25 நவம்பர், 2009

மாவீரர் நாள்

மாவீரர் நாள்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகள்
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப் பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27 ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
கொடியேற்றுதல்
மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.
கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர்நாள்

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.
மாவீரர் நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
 மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
 தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.
புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.
தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

கார்த்திகைப் பூ
இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மாவீர‌ன் உத‌ய‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 26


வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட சைவ நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
வரலாற்று முக்கியத்துவம்.
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசிய வாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.

பிரபாகரன் கூற்றுக்கள்.
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."




'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'


"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."


"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."


"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."


"செய் அல்லது செத்துமடி."