புதன், 12 ஏப்ரல், 2017

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி ( Good Friday )



புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி  ( Good Friday )

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி ( Good Friday ) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
இயேசு கல்வாரி மலையில்
சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இயேசு இறந்த ஆண்டு
இயேசு கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். சிலர் இயேசுவின் சாவு கி.பி. 34ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
விவிலிய ஆதாரங்கள்
இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து
சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:
மத்தேயு நற்செய்தி 26:36-75; 27:1-61
மாற்கு நற்செய்தி 14:32-72; 15:1-47
லூக்கா நற்செய்தி 22:39-62; 23:1-56
யோவான் நற்செய்தி 18:1-40; 19:1-42
விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்
நற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.
இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.
அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்" என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் "இவன் சாக வேண்டியவன்" என்று பதிலிறுத்தார்கள்.
இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த
பேதுரு கூட "இயேசுவை அறியேன்" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.
அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு
இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.
பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், "சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்தினார்கள்.
இயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, "இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.
படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" (கல்வாரி - Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக எழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்க்ள் மக்களுக்காகவும் அழுங்கள்" என்றார்.
"மண்டை ஓடு" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.
இதுவே நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் அவர் சிலுவையைச் சுமந்து சென்று, ஒரு குன்றின்மேல் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.
சிலுவையில் தொங்கிய இயேசு
இயேசு சிலுவையில் தொங்கியபோது, மிகுந்த வேதனைக்கு நடுவிலும் சில சொற்களைக் கூறினார். அவற்றை நான்கு நற்செய்தியாளரும் சிறிது வேறுபட்ட விதத்தில் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்பு வருமாறு:
மாற்கு 15:33-34
“ நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். ”
லூக்கா 23:32-34
“ வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். ”
லூக்கா 23:39-43
“ சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். ”
லூக்கா 23:44-48
“ ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். ”
யோவான் 19:25-27
“ சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். ”
யோவான் 19:28-29
“ இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். ”
யோவான் 19:30
“ அந்தப் புளித்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். ”
இயேசுவின் துன்பங்களையும் சாவையும் திருச்சபை நினைவுகூர்தல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது:


மிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:
1) இறைவாக்கு வழிபாடு
பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இவ்வாசகங்கள் கீழ்வருமாறு:
எசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16; 5:7-9
யோவான் 18:1-19:42
விவிலியம் இயேசு அனுபவித்த துன்பங்களையும் சாவையும் முன்னறிவித்தது எசாயா நூலில் உள்ளது. இயேசுவின் வாழ்க்கையின் இறுதியில் நடந்த நிகழ்ச்சிகளை வரலாறு போல எடுத்துரைக்கின்ற உரைக்கூற்று
யோவான் நற்செய்தியில் உள்ளது.
எபிரேயர் நூல்) இயேசு அனுபவித்த துன்பத்தின் பொருள் என்னவென்று விளக்குகிறது.
இந்த வாசகங்கள் முடிந்ததும் கீழ்வரும் பொது மன்றாட்டுகள் மக்கள் பெயரால் எழுப்பப்படும்:
திருச்சபைக்காக
திருத்தந்தைக்காக
திருநிலையோர் மற்றும் பொதுநிலையோருக்காக
திருமுழுக்குப் பெற தங்களைத் தயாரிப்போருக்காக
கிறித்தவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்காக
யூத மக்களுக்காக
இயேசுவை ஏற்காதோருக்காக
கடவுளை ஏற்காதோருக்காக
பொதுப்பணி புரிவோருக்காக
சிறப்புத் தேவையுடையோருக்காக
2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்
இயேசு உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.
3) நற்கருணை விருந்து
இயேசு சிலுவையில் உயிர்துறந்து மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பெரிய வெள்ளிக்கிழமையன்று தனியாகத் திருப்பலி நிகழ்வதில்லை. ஏனென்றால் இயேசுவே இப்பலியைக் கல்வாரி மலைமேல் ஒப்புக்கொடுத்தார். தம்மையே மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். இவ்வாறு தம்மை அன்புக் காணிக்கையாகக் கொடுத்த இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண்பார்கள்.
பின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள்.
பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு
புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை செய்யும் காட்சி
முதன்மை கட்டுரை: சிலுவைப் பாதை
பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. ஏனென்றால் இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது.
உரோமையில் திருத்தந்தை நிகழ்த்தும் சிலுவைப் பாதை தொலைக்காட்சி வழியாக உலக மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. முன்னாளைய திருத்தந்தையர்களாகிய ஆறாம் பவுல் (சின்னப்பர்) , மற்றும் இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) ஆகியோர் தாமாகவே சிலுவையைச் சுமந்துகொண்டு, உரோமையில் அமைந்துள்ள முன்னாளைய கேளிக்கை அரங்கமாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் களமாக மாறிய
கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை ஆண்டுதோறும் நிகழ்த்துவது வழக்கம். அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் அங்கு சிலுவைப் பாதை நிகழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டிலும் பெரிய வெள்ளியன்று (ஏப்ரல் 22) சிலுவைப் பாதையை நிகழ்த்தினார்.
2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.

2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருத்தந்தை பிரான்சிசு பெரிய வெள்ளிக் கொண்டாட்டத்தை 2013 மார்ச்சு 29ஆம் நாள் பிற்பகலில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தினார். மாலை வேளையில் உரோமையின் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகிய
கொலொசேயம் என்னும் வட்டவடிவ அரங்கில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டபோதிலும் தம் பகைவரை மன்னித்தது போன்று இன்றைய உலகிலும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று
திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.

2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

2014 ஏப்ரல் 18ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரின் 2000 ஆண்டு வரலாறு மிக்க வட்டவடிவ அரங்கமான
கொலொசேயம் என்னும் இடத்தில்
சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இது திருத்தந்தை பிரான்சிசு கொலொசேயத்தில் இரண்டாம் ஆண்டாகத் தலைமை தாங்குகின்ற சிலுவைப் பாதை ஆகும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்நீத்த நிகழ்ச்சியை சிலுவைப் பாதை நினைவுகூர்கின்றது. வத்திக்கானின் மறையுரையாளரான தந்தை ரனியேரோ காந்தலமேசா என்பவர் மறையுரை வழங்கினார். பேராசையும் பொருளாசையும் உலகில் பல தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அவர் கூறினார். மேலும், மனிதர்கள் பிற மனிதர்களை விற்பனைப் பொருள் போல நடத்தும் இழிவைச் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலை மாசுறச் செய்வது மனித இனத்திற்குப் பெரும் தீங்கு விளைப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் "எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களை நாம் கைவிடலாகாது." என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், "தீமை ஒருபோதும் வெற்றியடையாது. அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே இறுதியில் வெற்றிபெறும்" என்றுரைத்தார்.
சிலுவைப் பாதையின் 14 நிலைகளில் தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. உலகத்தின் பலபகுதிகளில் சிறுவர்கள் போர்ச்செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வறுமை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பெயர்ந்து செல்ல முனைவோர் பலர் சாவுக்கு உள்ளாகின்றனர். சிறைக்கூடங்களில் கைதிகள் இடவசதியோ பிற வசதிகளோ இன்றி அவதிப்படுகிறார்கள். முதியோர் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பலவிதமான அநீதிகளும் தீங்குகளும் இன்றைய உலகில் இன்னும் நீடிக்கின்றன. அவற்றை அகற்றிட இயேசுவின் சிலுவைச் சாவு மனிதருக்கு ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும் என்ற சிந்தனை சிலுவைப் பாதை வழிபாட்டின்போது வழங்கப்பட்டது.



புனித வெள்ளி சிறப்புக் கட்டுரை
2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. மரணம் என்பது முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான விடுதலை தொடங்குகிறது. மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம்.
தேவ ஆட்டுக்குட்டி
தங்களது பாவங்கள், குற்றங்கள், குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு அல்லது மாடு ஒன்றை பலி செலுத்துவதை பாரம்பரியமாகச் செய்து வந்தனர். உலகின் எல்லா நாகரிகங்களிலும் இந்த பரிகாரப் பலியைக் காணமுடியும். இவ்வாறு ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை பலியாகத் தரும்போது அது ஆடு எனில் அதை ’ பலியாடு’ என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை அவதானிக்க முடியும்.
இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக தனது இன்னுயிரை அவர் ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை விவிலியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கும்போது இன்னும் பல புனித உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
யூத மதத்தின் வீழ்ச்சி
இயேசு பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட காலகட்டத்தில் யூதமதத்தில் பல பிரிவுகள் தோன்றி யிருந்தன. அதற்குக் காரணம் எருசலேமின் வீழ்ச்சி. முதல் நூற்றாண்டின் யூத வரலாற்றாசிரியர் ஜொஸிஃபசின்(Josephus) ‘யூத தொன்மையியல் வரலாறு (Antiquities of the Jews c. 94) என்ற வரலாற்று நூல் நமக்கு இதை எடுத்துக் கூறுகிறது.
இயேசுவின் காலகட்டத்தில் யூத மதத்தின் அதிகார மட்டத்தில் யூத ஆட்சியாளர்களுக்குச் சமமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டு உயர் வர்க்கப் பிரிவினர் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள். மதத்தின் பெயரால் பொதுமக்களை மிரட்டி கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த இவர்களே இயேசுவை ’மேசியா’( மக்களை மீட்டுக் காக்க வரும் வலிமை மிக்க அரசன் என்பது பொருள்) என்று சாமன்ய யூத மக்கள் அவரை அழைப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள்.
யூத மதத்தை பல்வேறு பிரிவுகளாக்கி நீர்த்துப்போகச் செய்த சதுசேயர்களையும் பரிசேயர்களையும் பற்றிக் குறிப்பிடும் ஜொஸிஃபஸ், இவர்கள் கிரேக்கப் பண்பாடு மற்றும் தத்துவத்தில் மூழ்கிக்கொண்டிருந்ததை எடுத்துக் காட்டுகிறார்.
செலூக்கிய ஆட்சியாளர்கள் எருசலேமை வென்றபோது பரலோகத் தந்தையின் வீடாகிய எருசலேம் ஆலயத்தைக் கைப்பற்றி அதில் ஜியஸ் கடவுளின் சிலையை பிரதிஷ்டை செய்தபோது கிரேக்க மதத்திற்கும் யூத மதத்திற்கும் இடையிலான வெறுப்பும் இறுக்கமும் அதன் உச்சத்தை எட்டியது. யூதா மக்கபே என்ற யூதத் தலைவர் இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பெரும் படைத்திரட்டி கிளர்ச்சி செய்து ஆலயத்தை மீட்டார்.
மக்கபேயர்களின் எழுச்சிக்குப் பிறகு தத்துவங்களின் அடிப்படையில் யூத மதத்தில் மேலும் பல உட்பிரிவுகள் தோன்றின. இவை யூத சமூகத்தின் மீது மேலும் ஆதிக்கம் செலுத்த போட்டியிட்டன. இவ்வாறு யூத மதம் கடும் விரிசலை சந்திக்க காரணமாக இருந்தார்களை ஆராய்ந்தால் பரிசேயர்களும் சதுசேயர்களும் வந்து நிற்கிறார்கள்.
பரிசேயர்களும் சதுசேயர்களும்
பரிசேயர்கள் என்ற வார்த்தைக்கு ‘பிரிந்திருப்பவர்கள்’ என்ற பொருளையும் தருகிறது யூத மொழியின் மூல அகராதி. பரிசேயர்கள் சமூக அடுக்கில் கல்வியில் சிறந்து விளங்கி, வேத நூல்களில் புலமை பெற்றவர்களாக வாழ்ந்தவர்கள். சடங்காச்சாரங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்ட இவர்கள், யூதத் திருச்சட்டங்களுக்கு விளக்கம் கொடுப்பதில் புதிய முறையை உருவாக்கினர்.
அதுவே வாய்மொழிச் சட்டம் என்று மக்கள் மீது திணிக்கப்பட்டது. சீமோனுடைய ஆட்சியின்போது அவர்கள் மேலும் செல்வாக்கு பெற்று வளர்ந்தனர். மதவிவகாரங்களில் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் மூப்பர்களின் ஆலோசனை சபையில் இடம்பெறாத பரிசேயர்கள் தங்கள் செல்வாக்கால் இடம்பிடிக்கத் தொடங்கினர். அந்த ஆலோசனை சபையே பிற்பாடு நியாயச் சங்கம் என்று அழைக்கப்பட்டது.
இந்த நியாயச் சங்கத்திடம்தான் ரோமானிய ஆளுநரான பிலாத்து, இயேசுவை ஒப்படைத்து “ இவர்மீது நான் எந்தக் குற்றமும் காணவில்லை.” என்று இயேசுவைக் கைகழுவி, பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் பகையை சம்பாதித்துக் கொள்வதிலிருந்து தப்பித்து தன் பதவியை தக்க வைத்துக் கொண்டர்.
அதேபோன்று சதுசேயர்கள் சாலொமோனின் காலத்திலிருந்தே மதகுருமார்களாக உயர்பதவியில் இருந்து சேவை என்ற பெயரில் ஆடம்பரங்களை அனுபவித்து வந்தவர்கள். மக்கள் மீது கடும் செல்வாக்கைச் செலுத்தி வந்தவர்கள். இந்த இரண்டு தரப்பினருமே புனிதம் என்ற பெரில் யூத மதத்தை கீழான கோட்பாடுகளின் கூடாரமாக மாற்றினர்.
இயேசு மீது வன்மத்தை விதைத்தது எது?
பிறப்பால் யூதரான இயேசு, பரலோகத் தந்தை கையளித்த கட்டளைகளை மீறி நடந்துகொண்டிருந்த யூத மதப் பழக்கவழக்கங்களையும், ஒழுங்கீனங்களையும் எதிர்த்து விமர்சித்தார். யூதம் கற்பித்த கீழ்மைகளுக்கு எதிர்நிலையில் நின்று அவற்றுக்கு மேலானதைப் போதித்தார். இதனால் இயேசுவின் போதனைகள் தங்களது செயல்பாடுகளுக்கும் வாழ்க்கைமுறைக்கும் எதிரானதாக இருப்பதை உணர்ந்து அவர் மீது பரிசேயர், சதுசேயர் மற்றும் உயர்குடி யூதர்கள் கடுஞ்சினம் கொண்டனர்.
“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்பது யூத மதத்தின் கடுமையான அணுகுமுறை. “எதிரிக்கும் அன்பு செய் - ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு”. இது இயேசுவின் அன்புமுறை. “பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர் யூதர்கள்.
“உங்களில் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்று கூறி மன்னிப்பை போதித்தார் இயேசு. யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் கீழானவை என்று தீண்டாமையை போதித்தது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தி அனைவரும் சமம் என்றார் இயேசு.
மத குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்றது யூத மதம். ஆனால் தன் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு.
பெரு நோயாளிகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது யூத மதம். இயேசுவோ அவர்களை குணமாக்கி சமூக நீரோட்டத்தில் இணைத்தார். கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றது யூத மதம். இயேசுவோ தானே பாவங்களை மன்னித்து குணமளித்தது யூதர்களைக் கொதித்தெழச் செய்தது.
தந்தையின் விருப்பம்
நாளை புனித வெள்ளி. இயேசு நமக்காக கொடூரமான மரணத்தை ஏற்றுக்கொண்ட தினம். சீர்திருத்த ஞானத்தைப் போதித்து ஒரு தலைசிறந்த குருவாக விளங்கி, பாவங்களை மன்னித்து நோய்களிலிருந்து மக்களை விடுவித்து வாழ்வளித்தவர் இறைமகன் இயேசு. அவர் யார் என்ற கேள்விக்கான பதில் அவரது மரணத்தின் மூலமாகவே முழுமையாக வெளிப்படுகிறது.
மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட நிலையில், பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த பணியை நிறைவேற்றுவதிலேயே முனைப்புடன் இறுதிவரை நின்றார்.
தாம் மனிதனாகப் பிறந்து வந்ததன் நோக்கம் என்னவென்பதை அவரே அறிவித்திருந்தார்: “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு செய்வதற்கும் பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்காகவுமே வந்தார். (மாற்கு 10:45). இவ்விதம் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார்”(மாற்கு 14:36).



புனித வெள்ளி தினத்தின் சிறப்பு தெரியுமா?

உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை. பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். பஸ்கா பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை. இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, இவரை இஷ்டப்படி செய்யுங்கள், என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதக்குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, கபாலஸ்தலம் எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர். இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்: 1.கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
2.தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.
3.தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.
4.கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.
5.தாகமாயிருக்கிறேன்.
6. எல்லாம் முடிந்தது.
7.கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனிதகுலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே பெரிய வெள்ளி தினமாகும்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த தினம் டிசம்பர் 26.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த தினம் டிசம்பர் 26.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் ( 26/12/1904 - 30 -11 -1992)
பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும்.

அன்னை மீனாம்பாள் குறித்து சில முக்கிய குறிப்புகள்:-

பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .

திராவிட  கழக தலைவர்  ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.

சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.

இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.

1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.

இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.

டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .

அன்னை மீனாம்பாள் குடும்பம்:
அன்னை  மீனாம்பாள்   26 -12 -1904 இல்  வி .ஜி.வாசுதேவப்பிள்ளை -மீனாட்சி தம்பதியருக்கு மகளாய்  பிறந்தார்.
அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ. ம.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர். வள்ளலுங்கூட இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர். அன்னையாரின் தந்தை திரு. வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.
தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.

பொது வாழ்க்கை :-

சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர். "என் அன்பு சகோதரி" என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். திராவிட  கழக தலைவர்  ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
கிட்டதட்ட 1970  வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது.

 அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதிவிகள் அவரைத் தேடிவந்தன. அவரில் சில:-

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள்,

கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள்,

திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள்,

சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள்,

 தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் ,

சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்,

சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் ,

 போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர்,

S.P.C.A உறுப்பினர்,

நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்,

 தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்,

 அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் ,

சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்,

விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்,

காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்,

 மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள்,

சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்,

அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்,

 லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.

அரசியல் வாழ்க்கை :-

அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இன்னைந்து பணியாற்றியவர், அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தான் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். அன்னையவர்கள் பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் சிறப்பித்திருக்கிறார்.
31 -1 -1937   இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள்  பேசியது :-
" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்க  வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுவம் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
30 -11 -1992   இல் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தார்.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் ஏப்ரல் 12 .

சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்
ஏப்ரல் 12 .

சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் (International Day of Human Space Flight)  இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதியை கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.

ஏப்ரல் 12 ஆம் தேதியை மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப் பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைந்ததுதான்.

ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12  வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12 தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.

யூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷ்யாவில் மாஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934, மார்ச் 9 இல் பிறந்தார்.  இவர் பிறந்த இப்பிரதேசம் பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டு காலமானார்).

இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணையில் வேலை பார்த்தார்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதி நேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பள்ளிக் கூடத்தில் (Orenburg Pilot's School) இணைந்து மிக்- 15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். 1957 ம் ஆண்டில் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்தார். நார்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் பணியை ஆரம்பித்தார்.

1960 இல் சோவியத் யூனியன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும்  திட்டத்தை தொடங்கியது. இதில், 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வானார்கள். ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்ப தேர்வு செய்யப்பட்டார்.

யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்டோக் விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1.48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும். 

1968 மாதம் 27 தேதிககாரின் ஓட்டி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. சாதனை படைத்த ககாரின் தனது 34 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

யூரி ககாரின் மிகக் குறுகிய காலம் இவ்வுலகில் வாழ்ந்த போதிலும் அவர் பெயர் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது. 

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children ) ஏப்ரல் 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children )
ஏப்ரல் 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children ) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள
வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ ,
உகாண்டா , எத்தியோப்பியா ,
குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஏப்ரல் 12.

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஏப்ரல் 12.

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த
உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது .
உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

திங்கள், 10 ஏப்ரல், 2017

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்



சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

சித்திரை மாதப் பிறப்பை ‘ சைத்ர விஷூ புண்ணிய காலம் ’ என்பார்கள் . ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது , சித்திரை முதல் நாள் ; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை . பல்குண- சைத்ர மாதமாகிய சித்திரையை ‘ வசந்த ருது’ என்பார்கள் .
சித்திரை முதல் நாளில் , திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர் . பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.
சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு . இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல , கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள் . இந்த வைபவத்துக்கு ‘ பஞ்சாங்க படனம்’ என்று பெயர். திதி , வாரம், நட்சத்திரம் , யோகம் , கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம் .
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் பார்த்து அன்றைய நாளின் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும் ; நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீரும்; அனுதினமும் அன்றைய யோகம் என்ன என்பதை அறிவதால் நோயற்ற வாழ்வு கிட்டும் ; கரணம் அறிவதால் காரிய ஸித்தி உண்டாகும் . அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய இந்தப் பழக்கத்தை , சித்திரை முதல் நாளே துவங்குவது விசேஷம் !
வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து , மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு . வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்ற னர் . கேரளத்தில் ‘ சித்திரை விஷு ’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது . பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க - வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள் , பழ வகைகள் , காய் வகைகள் , புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி , தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர் . மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் , அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள் . இது ‘ விஷுக்கணி ’ ( விஷுக் காட்சி ) எனப்படுகிறது . பிறகு , கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள் . சிறியவர்கள் , பெரியவர் களுக்கு நமஸ்காரம் செய்வார்கள் . அவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிப்பார்கள் . அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு . இதை ‘ விஷுக் கைநீட்டம் ’ என்பர் .
தமிழகத்தில் , தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், வேப்பம்பூக்களைச் சேகரித்துப் பச்சடி செய்து சாப் பிடுவார்கள். கசப்பும் இனிமையும் கலந்தது வேப்பம்பூ பச்சடி . கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது

சித்திரை சிறப்புகள்



சித்திரை சிறப்புகள்

தமிழ் மாதங்களில் முதலாமவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய். சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைகின்றன.
வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை பிறப்புக்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும், அவறை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சித்திரையில் செய்வது என்ன?
சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.
காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க்க மக்கல் தயாராகின்றனர்.
பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.
இனிப்பும் கசப்பும் கலந்த விருந்து!
சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்து தடபுடலாக இருக்கும். அன்றைய தின சமையலில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்க்கை என்ற தத்துவத்தை உணர்த்தவே சமையலில் வேப்பம் பூவும், பாயசமும் சரி விகிதமாக பரிமாறப்படுவதாக ஐதீகம். இவ்வழக்கம் கர்நாடக்கத்திலும் உள்ளது.

சித்திரை சிறப்புகள

வரலாற்றில் சித்திரை மாதத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில:
* சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர்.
* சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
* சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மீன (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
* சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
* சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. ராம நவமியும், ஹனுமன் ஜெயந்தியும் சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.
* திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்தாகக் கூறப்படுகிறது.
* சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.
இத்தகையை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சித்திரை தாயை நாமும் உவகையோடு வரவேற்று, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோம்.

தமிழுக்கு ஏன் 60 வருடங்கள்? தமிழ் ஆண்டுகளின் கதை...



தமிழுக்கு ஏன் 60 வருடங்கள்? தமிழ் ஆண்டுகளின் கதை...

தமிழ் ஆண்டுகளின் கதை
60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது:
ஒரு முறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய 60 ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்குத் தரக் கூடாதா என்று வேண்டியுள்ளார். “என்னைத் தன் மனதில் வைக்காத ஏதேனும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் அவர். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடிஅலைந்தும் நாரதரால் காண முடியவில்லை.அதனால் நாரதர் கிருஷ்ணனிடமே வந்து “நானும் ஒரு பெண்ணாகி உங்களோடு இருந்துவிடுகிறேன்” எனச் சொல்ல, கிருஷ்ணன் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் 60 வருடம் வாழ்ந்து 60 மகன்களைப் பெற்றார்.அவர்களில் ஒருவர்தான் இன்று புதிதாய் பிறக்கிற ‘மன்மத’ ஆண்டு.
சென்னையின் கிருஷ்ணாம்பேட்டையில் (!) வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக்களஞ்சிய நூலை 1910-ல் வெளியிட்டார். அவரது மகன் 1934-ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழில் மட்டுமா 60?
இந்தக் கதை இருக்கட்டும். 60 ஆண்டுகள் வந்ததற்கு வரலாற்றுப் பின்புலமும் உண்டு.
60 ஆண்டுகள் காலண்டர் முறை என்பது காலத்தைப்பற்றிய மனிதஅறிவின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே. உலகின் பல காலண்டர்களில் அது வெளிப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் காலண்டர்களிலும் வெளிப்பட்டுள்ளது.
உலக அளவில் 60
இன்றைய இராக் எனப்படுகிற நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட ஒரு முறையை பயன்படுத்தியுள்ளனர். 12 மாதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.அவர்களின் மாதங்களில் வாரங்களே கிடையாது. ஒரு நாளுக்கு 12 மணிநேரம் என்ற கணக்கும் அவர்களிடம் இருந்தது.
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் ஒரே நேரத்தில்இரண்டு காலண்டர்களைக் கையாண்டுள்ளனர். புனிதமான சடங்குகளுக்காக 260 நாட்கள் கொண்ட ஒரு புனித காலண்டரும் மற்ற விஷயங்களுக்காக 365 நாட்கள் கொண்ட ஒரு காலண்டரும் வைத்துள்ளனர்.
அதில் 20 நாட்கள் கொண்ட 18 மாதங்கள் இருந்துள்ளன. மாயன் மக்களின் வாழ்வில் இந்த இரண்டுகாலண்டர்களும் ஒன்றின் மீது இன்னொன்று ஏறிக்கொண்டு பயணம்செய்தன. (நம்ம ஊர் பஞ்சாங்கத்தையும் காலண்டரையும் போலத்தான்.) அவையும் 60 ஆண்டுகள் சுழற்சிமுறையைப் பயன்படுத்தியுள்ளன எனவும் தகவல்கள் உள்ளன.
சீனத்திலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் புழக்கத்தில் உள்ளது.
இந்திய காலண்டர்
இந்தியத் துணைக்கண்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, சூரியனை அடிப்படையாகக்கொண்டு 360 நாட்களும் 12 மாதங்களோடும் ஒரு காலண்டரும் கிருஷ்ணரை மையமாக வைத்தும் ஒரு காலண்டரும் இருந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. அதன்படி ஆங்கில வருடம் 2015 என்பது கிருஷ்ண வருடம் 5117 ஆக உள்ளது.
தமிழ் காலண்டர்
பழந்தமிழர் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.
ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.
ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.
ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது.
ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது.
தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.
நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் மட்டும் அல்ல. அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏப்ரல் 14தான் புத்தாண்டு.
இந்தியாவுக்கு வெளியிலும் பர்மா,கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதிதான் புத்தாண்டு.
பழமையான வான சாஸ்திரமான சூரிய சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கிற தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.
60 வருடச் சுற்று
60 வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் முதல் ஆண்டில் இருந்து மறுபடி தொடங்கினாலும் இந்த ‘ஒரு 60 வருட சுற்று’ என்பது தற்போதைய ‘ஒரு நூறாண்டு’ எனும் சுற்றுக்கு சமமானது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.
தொடர் ஆண்டு முறை
இந்தப் பழைமையான ‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ காலப்போக்கில் மாறிவிட்டது. புத்தர் பிறந்தநாளிலிருந்து புத்த சமயத்தவரும், மகாவீரரை வைத்து சமணர்களும் தொடர் ஆண்டு முறையை பின்பற்றுகிறார்கள். மலையாளிகள், வங்காளிகள், உள்ளிட்டோரும் தொடர் ஆண்டுமுறைக்கு மாறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் தொடர் ஆண்டு தேவை எனும் கோரிக்கை எழுந்தது.
பேரரசரின் பிறப்பு, அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சியின் தொடக்கம், ஒரு தலை நகரின் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ஆண்டுமுறையை பழங் காலத்தில் தமிழர்கள் கடைப்பிடித்து வந்தனர்.சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மூலம் கிடைக்கிற விவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழ், தமிழ்நாடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை பொதுவான ஒரு ஆண்டுக் கணக்கில் குறித்து வைத்து வரலாற்றைப் பாதுகாக்கத் தமிழர்கள் முயலவில்லை. இந்த மனநிலைக்கு சுழற்சி முறையிலான 60 ஆண்டுகள் முறையே காரணம் என என்ற விமர்சனமும் உள்ளது.
திருவள்ளுவர் ஆண்டு முறை
அதனால்தான், யேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் 1921 ல் தமிழ் அறிஞர்கள் முடிவு செய்தார்கள். இந்தத் திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு 1971முதல் பின்பற்றிவருகிறது.
சீனாவின் காலண்டரும் 60 ஆண்டுகள் முறையை கடைப்பிடித்தாலும் அங்கே தங்களின் பழங்கால வரலாற்றை தொகுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட்டு தற்கால காலக் கணக்கோடு பொருத்தியிருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே பழைய வரலாற்றை விஞ்ஞானரீதியாகத் தொகுப்பதுதான் நோக்கம் என்றால் அதற்கான வழிகள் பிறக்கவே செய்யும்.




இந்துகளின் ஆண்டுமுறை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்களும், சில நேரங்களில் பிற மக்களும் பின்பற்றும் நாட்காட்டி முறையாகும். இதில் பல்வேறு மொழியினரும் உள்ளடங்குவர்.
தமிழர்களில் பெரும்பாலான மக்கள் இந்த ஆண்டுமுறைகளையே பின்பற்றினாலும், அவை தமிழ்ப் பெயர்களில் இல்லாத நிலையில் அவை எந்த வகையிலும் பயனுள்ளதாக இருந்ததில்லை.
பெரும்பாலான சோதிடர்கள் சாதகங்கள் குறிப்பதற்கும் நாள் குறிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 60 ஆண்டுகள் ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள சில இந்துகளும், பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் ஆண்டுமுறையைப் பற்றி பெரிதும் கருதுவது கிடையாது; மாதங்கள், தேதிகள், கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி போன்றவற்றை கருத்தில் கொள்வர்.
தமிழ்ப்புத்தாண்டு போன்ற பல விழாக்கள் இந்த தமிழ் ஆண்டுகளின் அடிப்படையில் அமைவனவே. இந்துகளால் பரவலாகக் கொண்டாடப்படும் சஷ்டியப்தப் பூர்த்தி எனும் அறுபதாம் ஆண்டுக்கொண்டாட்டங்களும் இந்த ஆண்டின் அடிப்படையில் அமையும் ஒன்று.
பல பழைமையான தமிழ் நூல்களும், கல்வெட்டுகளும் இந்த தமிழ் ஆண்டுகளையே குறிப்பிடுகின்றன.
அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள் வருமாறு :
உத்தம ஆண்டுகள்
பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரசோத்பத்தி
ஆங்கீரச
சிறிமுக
பவ
யுவ
தாது
ஈசுவர
வெகுதானிய
பிரமாதி
விக்ரம
விச
சித்திரபானு
சுபானு
தாரண
பார்த்திப
விய
மத்திம ஆண்டுகள்
சர்வசித்த
சர்வதாரி
விரோதி
விகிர்தி
கர
நந்தன
விசய
சய
மன்மத
துன்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
அதம ஆண்டுகள்
பிலவங்க
கீலக
சவுமிய
சாதாரண
விரோதி கிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த, இராகூச
நள
பீங்கள
காளயுக்தி
சித்தார்த்தி
ரவுத்ரி
துன்மதி
துந்துபி
உருத்ரோத்காரி
இரத்தாகூசி
குரோதன்
அகூய
60 ஆண்டுகளின் பெயர் பட்டியல்
தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இவற்றில் தமிழ்ப் பெயர்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளவை முன்பு குறிப்பிடப்பட்ட ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லாத காரணத்தினால் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும். அறுபது தமிழ் ஆண்டுப்பெயர்களை முதல் முதலில் வெளியிட்டவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார். தெய்வமுரசு என்னும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக 2009 ஆம் ஆண்டில் அவர் இப்பணியைச் செய்தார். எனினும் இவை எந்த அளவிற்கு மக்களால் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இது பற்றி அறிஞர்களிடம் பல்வேறு விவாதங்கள் நடத்தேறியும், தமிழர்கள் இவ்வாண்டுமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களா என்பதும், இல்லை திருவள்ளுவர் ஆண்டுமுறையை பின்பற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறும் பொழுது ஆண்டுமுறைகளும் மாற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எண். பெயர் பெயர் (தமிழில்) பெ (ஆ
01. பிரபவ நற்றோன்றல் Prab
02. விபவ உயர்தோன்றல் Vibha
03. சுக்ல வெள்ளொளி Sukla
04. பிரமோதூத பேருவகை Pram
05. பிரசோற்பத்தி மக்கட்செல்வம் Prac
06. ஆங்கீரச அயல்முனி Aang
07. ஸ்ரீமுக திருமுகம் Srim
08. பவ தோற்றம் Bhav
09. யுவ இளமை Yuva
10. தாது மாழை Dhaa
11. ஈஸ்வர ஈச்சுரம் Eesv
12. வெகுதானிய கூலவளம் Bahu
13. பிரமாதி முன்மை Pram
14. விக்கிரம நேர்நிரல் Vikra
15. விஷு விளைபயன் Vishu
16. சித்திரபானு ஓவியக்கதிர் Chitr
17. சுபானு நற்கதிர் Subh
18. தாரண தாங்கெழில் Dhaa
19. பார்த்திப நிலவரையன் Paart
20. விய விரிமாண்பு Viya
21. சர்வசித்து
முற்றறிவு முழுவெற்றி
[6] Sarva
22. சர்வதாரி முழுநிறைவு Sarva
23. விரோதி தீர்பகை Virod
24. விக்ருதி வளமாற்றம் Vikru
25. கர செய்நேர்த்தி Kara
26. நந்தன நற்குழவி Nand
27. விஜய உயர்வாகை Vijay
28. ஜய வாகை Jaya
29. மன்மத காதன்மை Man
30. துன்முகி வெம்முகம் Dhun
ஆண்டின் தமிழ்ப் பெயர் ஆட்சி
மேலே 60 ஆண்டுகளின் பெயருக்கு இணையான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாடப்பட்ட பாடல் ஒன்று
விவேக சிந்தாமணி நூலில் உள்ளது.
ஒருநான்கும் ஈரரையும் என்றே கேளாய் உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)
ஒருநான்கும் ஈரரையும் – நான்கும் இரண்டும் ஆறு – ஆறாவது ஓரை கன்னி – கன்னியே நான் அரையும் சொல்லை நீ கேளாய்
உண்மையாய் ஐயரையும் சொல்வனவற்றையும் கேட்டேன்.
இருநான்கு மூன்று – 2 * 4 * 3 = 24 – 24 ஆவது தமிழாண்டு விக்ருதி – இதன் தமிழ்ப்பெயர் வளமாற்றம். - நீ எனக்கு வளமான மாற்றம் (விடை) தரவில்லை.
என் மொழியைக் கேட்டபடி உன்னை எனக்குக் கொடுத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பெருநான்கு பேறும் பெறுவாய். உன்னிடம் அறுந்து கிடக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கும் பெறுவாய்.
பெண்ணே!
பின்னை மேலும் ஒரு மொழி புகலவேண்டாம்.
இன்றே உன்னைத் தருக.
சரியாக நான்கு – நான்காவது தமிழாண்டு பிரமோதூத – இதன் தமிழ்ப்பெயர் பேருவகை
பத்து – பத்தாவது தமிழாண்டு தாது – இதன் தமிழ்ப்பெயர் மாழை – மாழை = தங்கம்
பதினைந்து – பதினைந்தாவது தமிழாண்டு விசு – இதன் தமிழ்ப்பெயர் விளைபயன்.
தங்கமே பேருவகையோடு விளையும் பயனைக் காண்.
சகியே (காதல் கனியே) என் ஆசையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாது.
காதலன் காதலியிடம் இவ்வாறு உரையாடுகிறான்.

சனி, 8 ஏப்ரல், 2017

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம் ஏப்ரல் 08, 2015.




எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம்  ஏப்ரல் 08, 2015.

ஜெயகாந்தன் ( ஏப்ரல் 24 , 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம்
சிறுகதைகள் , புதினங்கள் , கட்டுரைகள்,
திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்  . பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி , தாமரை , கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான " உன்னைப் போல் ஒருவன் " மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள் " ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.
ரயிலில் டிக்கெட்இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர்,
பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர் . பின் முழு நேர எழுத்தாளர்!

படைப்புகள்
தன் வரலாறு

ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்.

வாழ்க்கை வரலாறு

வாழ்விக்க வந்த காந்தி 1973 ( ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 (
முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
கைவிலங்கு (ஜனவரி 1961)
யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
பிரம்ம உபதேசம் (மே 1963)
பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
எங்கெங்கு காணினும்... (மே 1979)
ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
கரிக்கோடுகள் (ஜூலை 1979)
மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
இந்த நேரத்தில் இவள்... (1980)
காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
காரு (ஏப்ரல் 1981)
ஆயுத பூசை (மார்ச் 1982)
சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
உன்னைப் போல் ஒருவன்
ஹர ஹர சங்கர (2005)
கண்ணன் (2011)

சிறுகதைகள் தொகுப்பு

ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
தேவன் வருவாரா (1961)
மாலை மயக்கம் (ஜனவரி 1962)
யுகசந்தி (அக்டோபர் 1963)
உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
குருபீடம் (அக்டோபர் 1971)
சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
சுமைதாங்கி
பொம்மை

ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல்
(கால முறைப்படி)
வ.எண் கதையின் பெயர் வெளியா காலம்
1 ஆணும் பெண்னும் -/-/1953
2 பட்டணத்து வீதியிலே -/-/1953
3 பேசும் புழுக்கள் 15/9/1953
4 காலம் தோற்றது -/12/1953
5 சாந்தி பூமி -
6 சுமை பேதம் -
7 கண்ணன் பிறந்தான் -
8 உதயம் -
9 பிழைப்பு -
10 மீனாட்சி ராஜ்யம் -
11 காந்தி ராஜ்யம் -
12 சொக்குப்பொடி 16/05/1954
13 சட்டம் வந்த நள்ளிரவில் 23/05/1954
14 மரணவாயில் 30/05/1954
15 சாந்தி சாகரம் 13/06/1954
16 எச்சரிக்கை 20,27/06/1954
17 தத்துவச் சொறி 04/07/1954
18 இவர்களும் இருக்கிறார்கள் 11,18/07/1954
19 இலட்சியச் சிலுவை -/-/1954
20 யாசனம் -/05/1955
21 தேரைப்பழி -/06/1955
22 ஆலமரம் ----
23 பித்துக்குளி -/07/1955
24 பேதைப்பருவம் -/08/1955
25 தனிமனிதன் -/-/1955
26 பொறுக்கி -/-/1955
27 தமிழச்சி -/-/1955
28 சலிப்பு -/03/1956
29 வேலைகொடுத்தவன் -/08/1956
30 பூ வாங்கலியோ பூ -/09/1956
31 தீபம் -/11/1956
32 தாம்பத்தியம் -/2/1957
33 திரஸ்காரம் -/3/1957
34 ரிக் ஷாகாரன் பாஷை -/4/1957
35 பெளருஷம் -/5/1957
36 சினம் எனும் தீ 6/6/1957
37 பால் பேதம் -/8/1957
38 எது, எப்போது -/09/1957
39 ஒருபிடி சோறு -/10/1957
40 ராசா வந்துட்டாரு -/11/1957
41 ஒரு பிரமுகர் -/12/1957
42 முச்சந்தி -/01/1958
43 தாலாட்டு -/03/1958
44 டிரெடில் -/04/1958
45 சாளரம் -/06/1958
46 கண்ணம்மா -/08/1958
47 நந்தவனத்தில் ஒரு ஆண்டி -/09/1958
48 பிணக்கு -/10/1958
49 போர்வை -/12/1958
50 யந்திரம் -/12/1958
51 பட்டணம் சிரிக்கிறது -/-/1958
52 அபாயம் -/-/1959
53 ஓவர்டைம் -/02/1959
54 பற்றுகோல் -/03/1959
55 தர்க்கம் -/04/1959
56 செக்சன் நம்பர் 54 -/07/1959
57 புகைச்சல் -/07/1959
58 இனிப்பும் கரிப்பும் -/07/1959
59 நிந்தாஸ்துதி -/09/1959
60 போன வருசம் பொங்கலப்போ -/10/1959
61 சர்வர் சீனு -/10/1959
62 ராஜா -/10/1959
63 கேவலம் ஓரு நாய் -/10/1959
64 உண்ணாவிரதம் -/11/1959
65 துறவு -/-/1959
66 நீ இன்னா சார் சொல்றே -/-/1959
67 இரண்டு குழந்தைகள் -/-/1959
68 குறைப்பிறவி -/-/1959
69 தேவன் வருவாரா -/-/1959
70 அன்புக்கு நன்றி 14/01/1960
71 சுய ரூபம் -/01/1960
72 வெளிச்சம் 07/04/1960
73 துர்க்கை 27/03/1960
74 சிலுவை -/05/1960
75 இதோ, ஒரு காதல் கதை 08/05/1960
76 சீட்டாட்டம் 17/07/1960
77 புதிய கதை -/-/1960
78 வாய்ச்சொற்கள் 14/08/1960
79 இது என்ன பெரிய விஷயம் 11/09/1960
80 பொம்மை 30/10/1960
81 தொத்தோ -/-/1960
82 உடன்கட்டை 11/12/1960
83 பத்தினிப் பரம்பரை -/12/1960
84 நிறங்கள் -/-/1960
85 உறங்குவது போலும் -/-/1960
86 மே--20 -/-/1960
87 மூக்கோணம் 09/01/1961
88 மூங்கில் 26/05/1961
89 கற்பு நிலை 21/05/1961
90 நான் இருக்கிறேன் 30/07/1961
91 என்னை நம்பாதே -/-/1961
92 தர்க்கத்திற்கு அப்பால் 5/11/1961
93 லவ் பண்ணூங்கோ ஸார் 17/12/1961
94 சோற்றுச்சுமை -/-/1961
95 மாலை மயக்கம் -/-/1962
96 சுமைதாங்கி -/-/1962
97 கருங்காலி 3/2/1962
98 அடல்ட்ஸ் ஒன்லி -/4/1962
99 மெளனம் ஒரு பாஷை -/5/1962
100 ஒரெ நண்பன் 10/06/1962
101 பிம்பம் -/-07/1962
102 முன்நிலவும் பின்பனியும் 26/08/1962
103 இல்லாதது எது 07/10/1962
104 பூ உதிரும் 16/12/1962
105 கிழக்கும் மேற்கும் 21/07/1963
106 தரக்குறைவு 16/06/1963
107 யுகசந்தி 21/07/1963
108 உண்மை சுடும் 22/09/1963
109 ஆளுகை 00/00/1963
110 பொய் வெல்லும் 10/11/1963
111 சாத்தானும் வேதம் ஓதட்டும் 29/12/1963
112 இருளைத் தேடி 08/03/1964
113 ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் 12/04/1964
114 எத்தனை கோணம் எத்தனை பார்வை 21/06/1964
115 ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் 28/08/1964
116 விளக்கு எரிகிறது 09/11/1964
117 புதிய வார்ப்புகள் 14/03/1965
118 அந்தக் கோழைகள் 16/05/1965
119 சட்டை 03/10/1965
120 சுயதரிசனம் 00/00/1965
121 முற்றுகை 00/00/1965
122 இருளில் ஒரு துணை 14/08/1966
123 லட்சாதிபதிகள் 0/0/1966
124 அக்கினிப் பிரவேசம் 20/11/1968
125 பாவம் பக்தர்தானே! 03/05/1967
126
நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்
17/03/1968
127 அக்ரஹாரத்துப் பூனை 09/11/1968
128
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
19/01/1969
129 ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது 13/04/1969
130 தவறுகள் குற்றங்களல்ல 05/10/1969
131
டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
07/11/1969
132 கண்ணாமூச்சி 0/0/1969
133 அந்த உயிரின் மரணம் 0/0/1969
134 அந்தரங்கம் புனிதமானது 0/0/1969
135 இறந்த காலங்கள் 0/0/1969
136 விதியும் விபத்தும் 0/0/1969
137 எங்கோ, யாரோ, யாருக்காகவோ 2,3/04/1970
138 குரு பீடம் 0/0/1970
139 நிக்கி 0/0/1970
140 புதுச் செருப்பு கடிக்கும் 02/05/1970
141 சீசர் 16/09/1971
142 அரைகுறைகள் 0/0/1971
143 சக்கரம் நிற்பதில்லை 15/11/1974
144 இந்த இடத்திலிருந்து 0/0/1975
145 குருக்கள் ஆத்து பையன் 0/0/1975

கட்டுரை
பாரதி பாடம்
இமயத்துக்கு அப்பால்
தொகுப்பு
ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)
திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்
சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங் )
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங் )
ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் :
லெனின்)
உன்னைப் போல் ஒருவன்
யாருக்காக அழுதான்
புதுச்செருப்பு கடிக்கும்


விருதுகள்
1972 – சாஹித்ய அகாடமி விருது
2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.


வியாழன், 6 ஏப்ரல், 2017

உலக சுகாதார தினம் ஏப்ரல் 7.



உலக சுகாதார தினம் ஏப்ரல்  7.

உலக நலவாழ்வு நாள் ( World Health Day ) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

உலக நலவாழ்வு நாள் 2007: வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்
1. நலவாழ்வுக் கேடுகள் எல்லை கடந்தவை.
2. வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்.
3. நலவாழ்வே பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நலக்கேட்டை உண்டுபண்ணும்.
4. பன்னாட்டளவிலான நலவாழ்வு அச்சுறுத்தல்களுக்கு விரைந்து முகம் கொடுக்க வேண்டும்.
5. உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

முன்னைய உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்
1. 2007 - அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
2. 2006 - ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
3. 2005 - ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
4. 2004 - சாலை வீதிப் பாதுகாப்பு
5. 2003 - குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
6. 2002 - நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
7. 2001 - மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
8. 2000 - பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
9. 1999 - சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
10. 1998 - பாதுகாப்பான தாய்மை
11. 1997 - முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
12. 1996 - தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
13. 1995 - இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.



வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்


வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மனநல உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஆ.காட்சன் கூறியதாவது:
மன அழுத்தம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கு நிகரான ஒன்றாக தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் சர்க்கரை வியாதி போல இதுவும் ஒரு நோய்தான். இதனால் வளர் இளம் பருவத் தினரும், 40 வயதுக்கு மேற்பட்டவர் களும் அதிகம் பாதிப்புக்கு உள் ளாகின்றனர். எப்போதும் அதிக மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வு, விருப்பமுள்ள செயல்களில்கூட நாட்டம் இல்லாத தன்மை, தான் எதற்கும் உதவாதவன், வாழ்வதற்கு தகுதியில்லாதவன், இனி வாழ்வ தற்கு வழியில்லை என்ற எண்ணங் கள், தூக்கமின்மை, பசியின்மை, கவனக்குறைவு, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
மன அழுத்தம் தீவிரமாகும் போது, குறிப்பாக வயதானவர் களுக்கு தற்கொலை செய்ய தூண்டுமாறு மாயக்குரல்கள் கேட்பது, பிறர் மீது தேவையற்ற சந்தேகம் போன்றவை ஏற்படலாம். தோல்விகள், பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமல்ல, எந்தவித காரணங்களும் இல்லாமல்கூட ஒருவருக்கு மன அழுத்த நோய் ஏற்படலாம்.
மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் எல்லோருக்கும் வெளிப்படையாக இந்த அறிகுறிகள் காணப்படுவதில்லை. சில சமயங்களில் பள்ளி, கல்லூரியை புறக்கணிப்பது, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது, திடீரென்று ஏற்படும் போதைப் பழக்கம்கூட வளர் இளம் பருவத் தினரின் மன அழுத்த நோயின் வெளிப்பாடாக இருக்கலாம்.
காரணமே கண்டுபிடிக்க இயலாத உடல் நோய் அறிகுறி கள், தலைவலி, நரம்புக் கோளாறுகள்கூட வயதானவர் களின் மற்றும் பெண்களின் மன அழுத்த நோயின் அறிகுறிகளாக வெளிப்படலாம். இவ்வாறு பல வகையான மன அழுத்த நோய்கள் இருப்பதால் தகுந்த ஆலோசனை யும், காலம் தாழ்த்தாத சிகிச்சையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவர் ஆ.காட்சன்
சில நேரங்களில் இருதுருவ மன நோய் என்ற பைபோலார் மன நோயின் ஓர் அங்கமாக மன அழுத்த நோய் ஏற்படும். மன அழுத்த நோயால் பாதிக்கப் படுபவருக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இவர்கள் வேண்டுமென்றே தங்களை தனிமைப்படுத்திக் ்கொள்பவர்களோ, மனதளவில் பலவீனமானவர்களோ அல்ல. எனவே, தேவையற்ற ஆலோ சனைகளையும், கட்டாயப்படுத்து தலையும் தவிர்த்து சிகிச்சை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சலிங் மட்டுமே நிவாரணி அல்ல. மிதமாக மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மூளை நரம்புகளில் செரடொனின் என்ற வேதியியல் பொருளை சமநிலைப்படுத்தும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பைத்தியம் பிடித்தவர்கள்தான் மனநல மருத்துவரை பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணம் இன்னமும் பொதுமக்களிடம் நிலவுவதால் காலம் தாழ்த்தி அல்லது தேவையற்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதிக சிக்கல்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதன், 5 ஏப்ரல், 2017

இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் பிறந்த தினம் 06 ஏப்ரல் 1938 .



இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் பிறந்த தினம் 06 ஏப்ரல் 1938 .

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார்.
தஞ்சாவூர் மாவட்டம்,
திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி , தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு  உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்

வரலாறு

நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

எதிர்த்துப் போராடியவை

பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.

நடைப் பயணங்கள்

1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.


உருவாக்கிய அமைப்புகள்

1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network) [9]
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
வானகம் , நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்

தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்)
விகடன் வெளியீடு
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
நெல்லைக் காப்போம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
எந்நாடுடையே இயற்கையே போற்றி,
விகடன் வெளியீடு
பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது

திங்கள், 3 ஏப்ரல், 2017

செல்போன்-ன் பிறந்தநாள் ஏபரல் 3...





செல்போன்-ன் பிறந்தநாள் ஏபரல் 3...

செல்போன் 03-04-1972 ஆம் நாளில் கண்டுபிடிக்கப்பட்டது...

கண்டு பிடித்தவர்
திரு "மார்ட்டீன் குய்ப்பர்" ஆவார்..

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855.



தமிழறிஞர்  மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855.


மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ( ஏப்ரல் 4 , 1855 - ஏப்ரல் 26 , 1897 ) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில்
ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே
தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர்
நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசிரியப் பணி

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.
மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார்.
1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
சமயப்பணி
திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

தமிழ்ப்பணி

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு
திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
“ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! ”
“ அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமே யாகும். ”
முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)
“ நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார் ”
இறுதி நாட்கள்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி  பிறந்த நாள் ஏப்ரல் 3.

கிருஷ்ணசாமி ( K. Krishnasamy ) பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில்1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம் நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள்  ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடி என்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார் பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி வேளாண்மை கல்வியை தொடராமல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார் .

அரசியல் வாழ்க்கை

கிருஷ்ணசாமி ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக வாதாடியவர் . மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23. சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குத்தித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
இவர் 1996தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஓட்டப்பிடாராம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  . பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் , ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார் [19] . குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.

போராட்டங்கள்
விழுப்புரம் 12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை, அதன் தொடர்ச்சியாக 22. சனவரி 1984 அன்று கைது செய்து மதுரை சிறையில்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

உலக ஆட்டிசம் தினம் ஏபரல் 2



 உலக ஆட்டிசம் தினம் ஏபரல் 2

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை. இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கண்டுகொள்வது எப்படி?
* ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல்
* தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல்
* 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல்
* ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்
* 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல்
* 18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல்
* கைகளை உதறிக் கொண்டே இருத்தல்
* ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை
* கதை கேட்பதில் விருப்பமின்மை
* தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு
* கீழே விழுந்து காயம் ஏற்பட்டாமல் வலியை உணராதிருத்தல்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தைகளிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் பெற வேண்டும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.
மதுரையில் ஆட்டிசம் விழிப்புணர்வுக்காக "வேள்வி&' அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் பரசுராம் ராமமூர்த்தி (96555 73751, parasuram.ramamoorthi@gmail.com) கூறும்போது, "ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார்.
20 லட்சம் பேர்
உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
"ஆட்டிசம்" குழந்தைகளுக்கு ஆதரவு தரலாமே! பெற்றோர், பயிற்றுனர்கள் ஆதங்கம்
இன்று "ஆட்டிசம்" தினம். இக்குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறார், மதுரையை சேர்ந்த குழந்தைகள் வழிகாட்டு மனநல டாக்டர் ப்ரீத்தி.
ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்
இவர்கள் பிறக்கும் போது நார்மலாக இருப்பர். தலைநிற்பது, நடப்பது எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் தாயின் முகம் பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. பேச்சுத்திறன் குறைவாக இருக்கும். 2 வயதுக்குள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டால், தொடர் பயிற்சியின் மூலம் குணப்படுத்துவது எளிது. சில பெற்றோர் குழந்தை பேசாததை கண்டு கொள்ளாமல், "டிவி" முன் உட்காரவைத்து, தங்கள் வேலைகளைச் செய்கின்றனர்.
இதனால் குழந்தையின் பழகும் திறன் ரொம்பவும் குறைந்து விடும். அடைத்து வைக்காமல், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் அழைத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். மூளையை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்னை தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல் விட்டால் இளம் பருவத்தில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
"ஆட்டிசம்" குழந்தைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்னையும், வேதனையும் கொஞ்சமல்ல... இதோ இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்.
அதிகரித்து வரும் "ஆட்டிசம்"
ஆண்டவர், சிறப்பு பயிற்றுனர், ஸ்பார்க் மையம்: இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். மாத்திரைகளால் இதை குணப்படுத்தி விடலாம் என்று யாராவது சொன்னால், பெற்றோர் நம்பக்கூடாது.
இது நோய் அல்ல. குறைபாடு தான். மற்ற குழந்தைகளோடு பழகவிடுவது தான் சிறந்த பயிற்சி. நம்மைவிட திறமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களின் விருப்பத்தை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு ஒருஆசிரியர் என்ற முறையில் தொடர் பயிற்சி அளித்தால், நல்ல நிலைக்கு வருவார்கள்.
பள்ளியை விட்டு விரட்டினர்
சுகந்தி, குடும்பத்தலைவி: என் 2வது மகன் திலக் பாலாஜிக்கு ஆறு வயதாகிறது. பேச்சு தாமதமானதால் பயிற்சிக்கு அழைத்து வந்தோம். பிள்ளைக்காக, வேலையை விட்டு விட்டேன். தொடர் பயிற்சிக்கு பின், இப்போது பரவாயில்லை. ஆனால் பள்ளியில் சேர்த்து விட்டால், வெளியே ஓடுகிறான் என்று விரட்டி விட்டனர். என் மகனை திரும்பவும் சிறப்புப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறேன். சொல்லிக் கொடுத்தால் நன்றாக படிப்பான். ஆனால் பள்ளியில் புறக்கணிப்பது வேதனையாக இருக்கிறது. என் மகனும், மற்ற குழந்தைகள் போல, நன்றாக படிக்க வேண்டாமா?
சண்முகசுந்தரி, குடும்பத்தலைவி: சரவணகுமார் 3வது பையன். இப்போ 8 வயசாகுது. மூணு வயசுல தான், பேசாம இருந்தது, நேருக்கு நேரா பார்க்கமா இருந்ததை கண்டுபிடிச்சோம். இப்ப ஒன்றரை வருஷமா பயிற்சிக்கு கூட்டிட்டு வர்றேன். சொல்றதை புரிஞ்சுக்குறான். பொருட்களை எடுக்கத் தெரியுது. மூத்த பசங்க ரெண்டு பேரும், இவனை நல்லா பார்த்துக்குறாங்க. ஆனா பஸ்சில கூட்டிட்டு போனா ஓடிட்டே இருப்பானு, சத்தம் போடுறாங்க. சிலசமயம் பஸ்சை விட்டு இறங்கச் சொல்வாங்க. என் பையனை, நாங்க சந்தோஷமாக வளர்க்குறோம். ஆனா மத்தவங்க புறக்கணிக்கறதை தாங்க முடியல.
சமுதாய அங்கீகாரம் இல்லையே
ராணி சக்கரவர்த்தி, மனோதத்துவ நிபுணர், ரக்ஷனா குழந்தைகள் வழிகாட்டு மையம்: 15 ஆண்டுகளாக "ஆட்டிசம்" குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறேன். அரசு வழங்கும் அடையாள அட்டையில் கூட, இவர்களை "மனவளர்ச்சி குன்றியோர்" என்றே சான்றிதழ் வழங்குகின்றனர். உண்மையில் இவர்களுக்கு மனவளர்ச்சி, நம்மை விட சிறப்பாக இருக்கும்.
இதை யாரிடம் சொல்லி புரிய வைப்பது? "ஆட்டிசம்" குழந்தைகளுக்கு என, தனி குறைபாடுகள் உள்ளன. மிக வேகமாக, துறுதுறுவென இருப்பதால், மற்றவர்கள் இக்குழந்தைகளை இடைஞ்சலாக நினைக்கின்றனர். அவர்களின் தேவையை அழகாக எடுத்துச் சொல்லும் திறமை படைத்தவர்கள். பேசத் தெரியாவிட்டாலும் பசிக்கிறது என்றால், தட்டை காண்பிக்கத் தெரியும். அந்தளவுக்கு நுட்பமானவர்கள்.
இவர்களை மனவளர்ச்சி குறைந்தவர்களாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளிகளில் ஆசிரியர்கள் கூட இவர்களை புரிந்து கொள்வதில்லை. தாமதமாக கற்றுக் கொள்ளும் இவர்களை, "மூளை வளர்ச்சியில்லை" என்று கேலி செய்கின்றனர்.சிலநேரம் அரசுப் பள்ளிகளில் கூட, இவர்களை அனுமதிப்பதில்லை. இக்குழந்தைகளை தனிமைப்படுத்தினால், நிலைமை மோசமாகும். மற்ற மாணவர்களை பார்த்து பார்த்து, தங்களை மாற்றிக் கொள்ளும் இயல்பு உள்ளது.
எனவே, இவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் எதையாவது பிடித்து இழுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது, "பிள்ளைய வளர்த்த லட்சணத்தைப் பார். இவ்வளவு திமிரா" என, மற்றவர்களின் பார்வையில் ஏளனத்துக்கு ஆளாகின்றனர். பக்கத்து வீட்டு குழந்தைகளை கூட, இவர்களுடன் விளையாட விடுவதில்லை.
பள்ளியிலும், சமுதாயத்திலும், அக்கம், பக்கத்திலும் ஏளனத்திற்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை போதிய பயிற்சி. அதுவும் இரண்டு வயதுக்குள்ளாகவே. அரசு சான்றிதழிலும் "ஆட்டிசம்" அடையாள அட்டை வழங்க வேண்டும். சாதாரண பள்ளிகளில் இவர்களும் பயில வேண்டும்.



ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.
ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.
இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:
ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.
அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அறிகுறிகள் என்ன?
ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.
ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.