புதன், 15 நவம்பர், 2017

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் நவம்பர் 16.



தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் நவம்பர் 16.

தேர்தல் நடத்தி, அதன் மூலம்
மக்கள் தங்களுடைய வாக்குச்
சுதந்திரத்தை பயன்படுத்தி,
தங்களை ஆள ஒரு அரசை
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை
அவர்களுக்கு அளிப்பதனால்
மட்டுமே ஒரு நாட்டை
ஜனநாயக நாடாக உறுதி
செய்திட முடியாது.
அந்த நாட்டில் மக்களின்
அடிப்படை உரிமைகள்
அனைத்தும் முறையாக
காப்பாற்றப்படுகின்றனவா?
கண்ணியத்துடனான
வாழ்வுரிமை,
கல்வியுரிமை,
தொழிலுரிமை,
பாதுகாப்பு ஆகியன
மட்டுமின்றி, அவர்களுக்கு
கருத்துச் சுதந்திரம்
முழுமையாக உள்ளதா?
என்பதைத் தீர்மானித்தே அந்த
நாட்டை முழுமையான
ஜனநாயக நாடாக
ஒப்புக்கொள்ள முடியும்.
கருத்துச் சுதந்திரத்தை
அடிப்படை மனித உரிமை
என்கிறது ஐ.நா.வின் மனித
உரிமைப் பிரகடனம்.
“சுயமான கருத்தைக்
கொள்ளவும்,
வெளிப்படுத்தவும்
ஒவ்வொரு மனிதருக்கும்
உரிமை உள்ளது; எவ்வித
புறத் தலையீடுமின்றி ஒரு
கருத்தைக்
கொண்டிருக்கவும்,
தகவல்களை கோரவும்,
பெறவும் மட்டுமின்றி,
எவ்வித எல்லைக்கும்
உட்படாமல் தகவல்களையும்,
கருத்துக்களையும்
எந்தவொருஊடகத்தின்
வாயிலாகப் பெறுவதும்
இந்த உரிமைக்கு
உட்பட்டதாகும்” என்று
ஐ.நா.வின் மனித உரிமைப்
பிரகடனம் (Universal
Declaration of Human Rights
1948) கூறுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும்
எப்படி வாழ்வுரிமை,
சுதந்திரம், பாதுகாப்பு
ஆகியன அடிப்படை
உரிமையாகிறோ அதே
அளவிற்கு கருத்துச்
சுதந்திரம்
முக்கியமானதாகிறது.
கருத்துச் சுதந்திரம்
முழுமையாக
உறுதிப்படுத்தப்படும்
நாட்டில்தான் ஜனநாயகம்
உண்மையாக
தழைத்தோங்குகிறது.
அதனால்தான்
பத்திரிக்கைகளை
ஜனநாயகத்தின் ஒரு
(நான்காவது) தூணாக
கருதப்படுகிறது.
ஆனால், கருத்துச் சுதந்திரம்
எந்த அடிப்படையில்
நிறைவேறுகிறது? அது
பத்திரிக்கைகள் உட்பட்ட
ஊடகங்களின் சுதந்திரமான
செயல்பாட்டினால்தான்
நிறைவேறுகிறது.
அதனால்தான் பத்திரிக்கைச்
சுதந்திரம் ஒரு நாட்டில் எந்த
அளவிற்கு உள்ளதோ அந்த
அளவிற்கு அந்த நாட்டில்
கருத்துச் சுதந்திரம்
உள்ளதாக
மதிப்பிடப்படுகிறது.
ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும்
நாட்டில் அல்லது அந்த
காலகட்டத்தில் தனி மனித
கருத்துச் சுதந்திரம் இருக்க
முடியாது, ஏனெனில்,
மக்கள் அறிய வேண்டிய
தகவல்கள்
தடுக்கப்படுகின்றன. எனவே
கருத்துச் சுதந்திரம்
நிலைபெற அங்கு
வாய்ப்பில்லை என்பது
உறுதியாகிறது.
எனவே கருத்துச்
சுதந்திரத்தின்
அச்சாணியாகத் திகழ்வது
பத்திரிக்கை உள்ளிட்ட
ஊடகங்களின் சுதந்திரமே.
எனவேதான், எந்த ஒரு
நாட்டில் பத்திரிக்கைச்
சுதந்திரத்திற்கு,
பத்திரிக்கையாளர்களுக்கு
கட்டுப்பாடும்
அச்சுறுத்தலும்
நிலவுகிறதோ அந்த நாட்டில்
மக்களுக்கு எதிரான அரசின்
ஒடுக்குமுறை
நிலவுகிறது என்பதை
உறுதியாகக்
கூறிலாம்.இது வரலாற்றில்
பல முறை
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தில் உலக
நாடுகளும்
தெற்காசியாவும்
உலக நாடுகளில் குறிப்பாக
வட அமெரிக்க, ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளில்
பத்திரிக்கைச் சுதந்திரம்
அதன் முழுமையான
வீச்சுடன் செயல்படுகிறது.
அது அரசுகளைத் தாண்டி,
மக்களையும், மானுடத்தின்
இன்றைய, எதிர்கால
நலனையும் கருத்தில்
கொண்டு செயல்படுகிறது.
அதன் விளைவே,
சுற்றுச்சூழல்
விழுப்புணர்வு மேற்கத்திய
நாடுகளில் மேலோங்கி
இருக்கக்
காரணமாகவுள்ளது. ஆர்டிக்
கடலில் பனிப்பாறைகள்
வேகமாக உருகி
வருவதையும், அதன்
காரணமாக அங்கு வாழும்
பனிக் கரடிகளுக்கு
ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தலையும் உள்ளது
உள்ளவாறு செய்தியாக்கின
அங்குள்ள ஊடகங்கள். அது
தொடர்பான ஆய்வுகளை
வெளியிடுவதில்
முன்னுரிமை அளித்தன.
ஒரு பனிக்கரடி தனது
குட்டியுடன் சிறிய
பனிப்பாறை ஒன்றில்
கவலையுடன்
அமர்ந்திருப்பது போன்ற ஒரு
படத்தை வெளியிட்டு,
புவிக்கு ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தலை
வெளிப்படுத்தின. புவியின்
இயற்கையைப் பாதிக்கும்
எந்த தொழிலையும்
எதிர்க்கும் உணர்வை
மேற்கத்திய மக்கள்
பெற்றுள்ளதற்கு ஊடகங்கள்
திரட்டித் தந்த தகவல்களே
பெரும் பங்கு வகித்தன.
உலகை உலுக்கிய கச்சா
எண்ணெய்
விலையேற்றத்திற்குக்
காரணம், நாளும்
அதிகரித்துவரும் தேவையே
என்று கச்சா உற்பத்தி
நாடுகளும், அவைகளை
சுத்திகரிப்பு செய்து
விற்கும் பெரு
நிறுவனங்களும் கதை
விட்டபோது, அந்தப்
பொய்யை உடைத்தது
ஊடகங்களே. பெட்ரோலியத்
தேவை அதிகரித்து
வருமானால், பயன்பாடு
அதிகரித்திருக்க
வேண்டுமே? அப்படி ஏதும்
இல்லாத நிலையில்
விலையேற்றம் ஏன் என்ற
கேள்வியை எழுப்பியதோடு
நி்ன்றுவிடாமல்,
விலையேற்றத்திற்குக்
காரணம் ஊக வணிகமே
என்பதை ஆதாரத்துடன்
வெளிப்படுத்தி,
விலையிறக்கத்திற்கு
வழிவகுத்தன.
இது தெற்காசிய
நாடுகளில் குறிப்பாக
மாபெரும் ஜனநாயக
நாடென்று வர்ணிக்கப்படும்
இந்தியாவில்
நடைபெறவில்லை. கச்சா
எண்ணெய் விலை
அதிகபட்சமாக 143 டாலர்கள்
வரை உயர்ந்தது. பிறகு
அடுத்த சில மாதங்களில் 67
டாலருக்கு குறைந்த
பிறகும், கச்சா விலை
உயர்வைக் காட்டி உயர்த்தப்பட்ட
பெட்ரோல் டீசல் விலைகள்
குறைக்கப்படாமல்
இருந்ததற்கு காரணம் என்ன
என்று இங்குள்ள ஊடகங்கள்
பேச மறுத்தன.
பெட்ரோல், டீசல்
விலைகளைக் குறைக்க
வேண்டிய நடுவண் அரசு,
நாடாளுமன்றத் தேர்தல்
நெருங்கிவரும்
நிலையிலும்
குறைக்காததற்கு, இந்நாட்டு
அரசியல் கட்சிகளுக்கு
பெரும் நிதி ஆதாரமாகத்
திகழும் ஒரு பெரு
நிறுவனத்தின் இலாப நலனே
காரணம் என்பதை
தெரிந்திருந்தும் எழுத
மறுத்தன.
இந்திய அரசியலை
உலுக்கிய போபர்ஸ் பீரங்கி
பேரத்தில் தரகுப் பணம்
கைமாறியுள்ளது என்ற
தகவலை சுவீடன் நாட்டு
வானொலி ஒன்று தனது
செய்தியில் கூறியவுடன்,
தனது அயல்நாட்டு
செய்தியாளரின் வாயிலாக
அச்செய்தியைப்
பெரிதாக்கி, அதன் உள்
விவரங்களை
வெளிக்கொணர்ந்த இந்த
நாட்டின் ‘பாரம்பரியமிக்க’
ஆங்கில நாளிதழ்,
பின்னாளில் போபர்ஸ் பீரங்கி
பேர ஊழலை புதைக்கும்
நோக்குடன், அவ்வழக்கின்
முக்கியக் குற்றவாளியான
ஒட்டோவியோ குட்ரோக்கி
மீதான குற்றச்சாற்றை -
போதுமான ஆதாரங்கள்
இல்லை என்று கூறி -
திரும்பப் பெறும்போது,
அமைதியாக அந்தச்
செய்தியை
வெளியிட்டுவிட்டு
ஒதுங்கிக் கொண்டுவிட்டது.
மத்திய, மாநில அரசுகளின்
செயலிடங்களே நமது நாட்டு
ஊடகங்களின் செய்தி
மையங்கள் ஆகிவிட்டன. ஒரு
நேரத்தில் புலனாய்வு
செய்திகளுக்கு
கொடுக்கப்பட்ட
முக்கியத்துவம் இன்றைக்கு
இல்லை. இருந்திருந்தால்,
மத்திய இந்தியாவில் உள்ள
தண்டகாரண்ய வனத்திலுள்ள
பழங்குடியின மக்களுக்கு,
அங்குள்ள வளங்களை தோண்ட
வரிந்துகட்டிக்கொண்டு
வந்து நிற்கும் பெரு
நிறுவனங்களால் ஏற்பட்ட
அச்சுறுத்தல் வெளிக்
கொணரப்பட்டிருக்கும்.
அதனை அம்மக்களிடையே
பணியாற்றி வந்த
காந்தியவாதியான
ஹிமான்சு குமார்
வெளிக்கொணர்ந்தார்.
அவருக்கும் இங்குள்ள
பத்திரிக்கைகள் இடம்
கொடுக்கவில்லை.
அரசு கூறுவதை அப்படியே
செய்தியாக்கிடும்
கிளிப்பிள்ளைகளாக
முன்னணி ஊடகங்கள் (Main
Stream Medium)
உருமாறியுள்ளன.
பழங்குடியின மக்களின்
வாழ்வுரிமைக்கு
அச்சுறுத்தலாகியுள்ள
அந்தப் பெரு
நிறுவனங்களின் (Corporates)
விளம்பரங்கள் தங்களை வாழ
வைப்பதால் அவற்றிற்கு
எதிரான உண்மைகளை
வெளியிடத் தயங்குகின்றன.
இலங்கைப் பிரச்சனையில்
ஊடகங்கள்
இலங்கையில் தமிழர்களுக்கு
எதிராக ‘பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்’ என்று
கூறி சிறிலங்கப் படைகள்
நடத்திய இனப் படுகொலைப்
போர் தொடர்பான
உண்மைகளை பிபிசி,
சிஎன்என், அல் ஜசீரா போன்ற
பன்னாட்டு ஊடகங்கள்
துணிந்து வெளியிட்டன.
அதற்காக சிறிலங்க அரசு
அவைகளை நாட்டை விட்டு
வெளியேற்றியது. ஆனால்
இந்தியாவின் எந்த ஒரு
செய்தி நிறுவனமும்,
வேறு எந்த ஒரு முதன்மை
ஊடகமும் உண்மைகளை
வெளிக்கொணர அக்கறை
காட்டவில்லை.
கொழும்புவில்
அமர்ந்துகொண்டு, சிறிலங்க
இராணுவப் பேச்சாளர்
கூறியதை மட்டுமே
செய்தியாக்கி, இந்திய
மக்களின் கருத்துச்
சுதந்திரத்திற்கு இரண்டகம்
செய்தன.இறுதிக் கட்டப்
போரில் பல
பத்தாயிரக்கணக்கான
அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டனர் என்று தி
டைம்ஸ், லி மாண்ட்,
நியூயார்க் டைம்ஸ் என்று
அயல்நாட்டு ஊடகங்கள்
தங்களுக்குக் கிடைத்த
ஆதாரங்களை வைத்து
செய்தி வெளியிட்டன.
அப்படிபட்ட தார்மீகமான எந்தப்
பணியையும் செய்யாதது
மட்டுமின்றி, சிறிலங்க
அரசு என்ன கூறியதோ
அதையே அச்சரம் பிசகாமல்
வெளியிட்டு தங்களது
வணிகத் தர்மத்தை
நிலைநாட்டின. இதில்
இந்திய அரசின்
பின்னணியும்
இருந்தென்பதை சொல்லித்
தெரிய வேண்டியதில்லை.
ஊடக தர்மத்தை நிலை
நிறுத்திய
மனிதாபிமானிகள்!
மாறாக, தங்கள் நாட்டு மக்கள்
மீது சிறிலங்க அரசப் படைகள்
நடத்திய மானுடப்
படுகொலைப் போரை
கண்டித்து அந்நாட்டைச்
சேர்ந்த தமிழ், சிங்களப்
பத்திரிக்கையாளர்கள்
துணிந்து எழுதினர்.
அதற்கான விலையாக தங்கள்
இன்னுயிரை ஈந்தனர்.
சிறிலங்க அரசின் தமிழர்
விரோத நடவடிக்கைகளை,
அது எந்த அளவிற்கு இனப்
பகைமையுடன்
தமிழர்களுக்கு எதிராக
செயல்படுகிறது என்பதை
எழுதிவந்த தர்மரத்தினம்
சிவராம் (தாரகி) 2005ஆம்
ஆண்டு கடத்திக் கொலை
செய்யப்பட்டார்.
நினைத்திருந்தால் சிறிலங்க
அதிபர் ராஜபக்சவுடன்
தனக்கிருந்த தோழமையை
பயன்படுத்திக் கொண்டு தன்
வாழ்வை வளப்படுத்திக்
கொண்டிருக்கலாம், ஆனால்,
தமிழர்களுக்கு எதிராக அவர்
நடத்திய போரைக் கண்டித்து
எழுதினார். அரசின் ஊழல்
முகத்தை வெட்ட
வெளிச்சமாக்கினார். சிங்கள
அரசால் தனது உயிருக்கு
அச்சுறுத்தில் உள்ளது
என்பதை ஒரு
தாக்குதலிற்குப் பின்னர்
உணர்ந்தும் கூட, தனது
நிலையை மாற்றிக்
கொள்ளவில்லை. தொடர்ந்து
எழுதினார், தனது மரண
சாசணத்தை எழுதி
வைத்துவிட்டு பணியைத்
தொடர்ந்த அந்த
பத்திரிக்கையாளர்
கொழும்புவில் பட்டப் பகலில்
படுகொலை செய்யப்பட்டார்.
லசந்த விகரமதுங்காவின்
மரணம், ஒரு அச்சுறுத்தலாக
நடத்தப்பட்டதை உணர்ந்தும், பல
தமிழ், சிங்கள
பத்திரிக்கையாளர்கள்
இருமடங்கு துணிச்சலுடன்
செயல்படத் துவங்கினார்.
தங்கள் உயிரைக்
காத்துக்கொண்டு ஊடகத்
தர்மத்தை அழிய விடாமல்
நிலைநிறுத்தினார்.
அதற்காக நாட்டை விட்டு
வெளியேறி இன்றுவரை பல
நாடுகளில் அகதிகளாக
வாழ்ந்தும் வருகின்றனர்.
உள்நாட்டுப் போரினால்
வாழ்விடங்களை இழந்து
அகதிகளான மக்களுக்கு
தேவையான அளவிற்கு
உணவை அளிக்காமல்,
உணவையே தமிழ்
மக்களுக்கு எதிரான போர்
ஆயுதமாக சிறிலங்க அரசு
பயன்படுத்துகிறது என்று
எழுதியமைக்காக
பத்திரிக்கையாளர்
திசைநாயகம் பயங்கரவாத
சட்டத்தின் கீழ் சிறையில்
அடைக்கப்பட்டு
சித்தரவதைக்கு
உள்ளாக்கப்பட்டார். அந்நாட்டு
நீதிமன்றம் அவருக்கு 20
ஆண்டுக்கால சிறைத்
தண்டனை வழங்கியது,
ஆனால், ஊடக
செயல்பாட்டிற்கான
ஐரோப்பிய விருது
அவருக்கு வழங்கப்பட்டது.
சிறிலங்க அரசின்
அச்சுறுத்தலுக்குள்ளாகிய
சிங்கள பத்திரிக்கையாளர்கள்
பலர் தமிழர்களைப் போலவே
நாட்டை விட்டு வெளியேறி
இன்றுவரை அகதிகளாக
வாழ்கின்றனர். அவர்களில்
சிலர், தமிழர்களுக்கு
எதிராக சிறிலங்க அரசு
நடத்திய இனப்படுகொலைப்
போரில் நடந்த போர்க்
குற்றங்கள் தொடர்பான
அயர்லாந்து தலைநகர்
டப்ளினில் நடந்த நிரந்தர
மக்கள் தீர்ப்பாயத்தின் முன்
நின்று சாட்சிமளித்தனர்.
ஊடகங்களையும்,
ஊடகவியலாளர்களையும்
அவர்களின் பலவீனத்தை
நன்கறிந்து, தட்ட வேண்டிய
விதத்தில் தட்டி, அவைகளை
அடிமைப்படுத்தி
அரசுகளும், கட்சிகளும்,
நிறுவனங்களும்
தங்களுக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி வருகின்றன.
அதன் விளைவே உண்மையை
மக்களுக்கு
கொண்டுவருவதில்
முன்னணியில் இருந்த
பெரும்பாலான இந்தியப்
பத்திரிக்கைகளும்
ஊடகங்களும் இங்கு
அரசுகளின் ஊதுகுழலாய்,
நுகர்வோர் கலாச்சாரத்தினை
திணிக்கும் கருவிகளாய்,
நகர வாழ் மேல்தட்டு
மக்களின் விருப்பங்களை
நிறைவேற்றும் காட்சி
ஊடகங்களாய்
உருமாறியுள்ளன.
பிரச்சனையையும் எடுத்துக்
கூறி, பிரச்சனைக்கான
தீர்வையும் முன்மொழிந்து
அரசிற்கே வழிகாட்டியாக
இருந்து ஜனநாயகத்தினை
பலப்படுத்திவந்த இந்திய
ஊடகங்கள் இன்றைக்கு
தன்னிலையையும்
கடைபிடிக்க வேண்டிய ஊடக
தர்மத்தையும் கைவிட்டு
நிற்கும் நிலையில், இந்திய
மக்கள், தங்களுக்கு இந்திய
அரசமைப்பு வழங்கிய
கருத்துச் சுதந்திரத்தை
சரியாக பயன்படுத்தி,
நாட்டின் நடப்புகளில் உள்ள
உண்மையை தன் முயற்சி
எடுத்துப் புரிந்துகொள்ள
முற்பட வேண்டும்.
வணிகத்திற்காக தங்களையே
விற்றுவிடும் ஊடகங்களை
இனம் கண்டுகொள்வது
மட்டுமின்றி, கருத்துரிமை
எனும் உன்னதமான ஜனநாயக
உரிமையை நாம்
காத்துகொள்ளவும் இந்த தன்
முயற்சி அவசியமானதாகும்.

உலக சகிப்புத் தன்மை நாள் ( International Day for Tolerance ) நவம்பர் 16.



உலக சகிப்புத் தன்மை நாள் ( International Day for Tolerance ) நவம்பர் 16.

உலக சகிப்புத் தன்மை நாள் ( International Day for Tolerance ) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.


மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ஐ.நா., சபையால் ஆண்டுதோறும் நவ., 16ம் தேதி உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி அகில உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக்கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

International Day for Tolerance – 16 November

A simple temple shape with the letters ‘UNESCO’ inside it. Established by the United Nations, the International Day for Tolerance is held on 16 November each year. The day is a focus for educating people about the need for tolerance in society and helping them understand the negative effects of intolerance.

திங்கள், 13 நவம்பர், 2017

உலக நீரிழிவு நாள் ( World Diabetes Day ) நவம்பர் 14.



உலக நீரிழிவு நாள் ( World Diabetes Day ) நவம்பர் 14.

உலக நீரிழிவு நாள் ( World Diabetes Day ) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும்
இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.


நீரிழிவின் அரவணைப்பில் நம் விழிகள்! - தேவை விழிப்புணர்வு.....

21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கடந்த 1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.

ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் மற்றும்  சார்லஸ் பெஸ்ட் அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின் பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா?
62.4 மில்லியன்.மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்.

சரி நீரிழிவு என்றால் என்ன?
டயபெடிஸ் மெல்லிடஸ் (diabetes mellitus) எனும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாடானது, நம் உடலின் சர்க்கரை சேமிப்பையும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்துகிறது.

சற்று இன்னும் விளக்கம் தேவை?
நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது. நாம் அல்லது நமது உடலின் ஒவ்வொரு செல்களும் செயல்படுவதற்கு சக்தி தேவை. எனவே நாம் சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைடிரேட் இல் இருந்து குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை தயாராகிறது. இரத்த ஓட்டத்தின்போது,  இரத்தத்திலிருந்து குளுக்கோஸினை நமது உடலின் அனைத்து உயிருள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்வது இன்சுலின் எனப்படும் ஹார்மோன்கள் ஆகும். எனவே இந்த குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை,  ஆற்றலை,  சக்தியை இன்சுலின் துணையில்லாமல் நமது உடலின் செல்கள் ஏற்றுக்கொளவதில்லை.
இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது நமது உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி ஆகும்.

இந்த ”கணையமானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது”, அல்லது ”உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை நமது உடல் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை”  - நீரிழிவு குறைபாடு எனப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலின் சில உறுப்புகள் செயல் இழக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான உறுப்புகள் கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் நமது பாதங்கள். இன்சுலின் எனப்படும் ஹார்மோன் கணையத்தில் உள்ள வலியுணர்வுப்பகுதியில் உள்ள பீட்டா செல்களில் தயாராகிறது. நமது உடலில் நீரிழிவினால் அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புகள் - இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதம் ஆகும்.

கண்ணின் முக்கியமான பாகங்கள்:
இந்த நீரிழிவு விழித்திரை நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் கண்ணின் முக்கியமான பாகங்களைப் பற்றியும் நாம் எவ்வாறு ஒரு பொருளை பார்க்க முடிகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்பிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் சுற்றுப்பாதை  கண்ணைச் சுற்றி நான்கு எலும்புச் சுவர்களால் அமைந்துள்ளது. இது பொதுவாக கண் குழி  எனப்படுகிறது ஐ லிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் இமை நமது கண்களை பாதுகாத்து, இமைகள் திறந்து வழி விட்டு நாம் பார்க்கும் பொருள்களிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை நமது கண்ணுக்குள் அனுப்புகிறது.

கன்ஜங்க்ட்டிவா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தெளிவான இமை இணைப்புப்படலம் கண்ணின் மேற்பரப்பிற்கு அரணாகவும், கண் இமையோடு இணைந்தும் உள்ளது.

கார்னியா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விழி வெண் படலம் நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, இரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத கண்ணுக்கு முன்புறம் அமைந்துள்ள ஒரு மெல்லி திசு. அதன் வழியாக ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள்ளே செல்கிறது.
கார்னியாவைத் தொடர்ந்து இருக்கும் பகுதி ஐரிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கரு விழி, அதன் மையப்பகுதியில் உள்ள ஒரு துளை போன்ற பகுதி ஆங்கிலத்தில் ப்யூப்பில் என்று சொல்லப்படும் பாப்பா, அதன் வழியாக ஒளிக்கதிர்கள் செல்கிறது.

கண்ணின் பாப்பாவைத்தொடர்ந்து இருக்கும் பகுதியானது கிரிஸ்ட்டலின் என்ற புரோட்டீனால் ஆன, ஆங்கிலத்தில் லென்ஸ் என்று அழைக்கப்படும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய வில்லை.

ஒளிக்கதிர்கள் லென்ஸின் வழியாக ஊடுருவிச் சென்று கண்ணின் உள்ளே உள்ள கடைசிப்பகுதியான ஆங்கிலத்தில் ரெட்டினா என்று சொல்லப்படும் விழித்திரையில் பாய்ச்சப்பட்டு பிம்பம் பதிவாகிறது.
ரெட்டினாவானது ஒளிக்கதிர்களை நரம்பு தூண்டுதல்களாக்கி மூளைக்கு அனுப்புகிறது.

ரெட்டினாவிற்க்கும், லென்ஸிற்க்கும் இடைப்பட்ட பகுதி விட்ரியஸ் காவிட்டி எனப்படுகிறது.

விட்ரியஸ் காவிட்டி விட்ரியஸ் எனப்படும் ஜெல் போன்ற திரவத்தினால் நிரம்பியுள்ளது. இது கண்ணிற்கு தேவையான சத்தினை அளிப்பதோடு, கண்ணின் கோள வடிவத்தினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறது.

ரெட்டினாவானது பல அடுக்குகளைக் கொண்டது, ஒவ்வொரு அடுக்கும் பல செல்களால் ஆனது. விழித்திரையில் இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.
ரெட்டினாவின் உள்கடைசி அடுக்கில் ஒளியை சேகரிக்கக்கூடிய  ஃபோட்டோரிசெப்டார் எனப்படும் ஒளியை ஏற்க்கும் செல்கள் உள்ளன.
ரெட்டினாவிற்க்கு அடுத்து விழித்திரை நிறமி தோல் இழை எனப்படும் ரெட்டினல் பிக்மெண்ட் எப்பிதெலியம் மற்றும் விழிநடுப்படலம் எனப்படும் கோராய்டு அமைந்துள்ளன.

இந்த இரண்டு அடுக்குகளும் விழித்திரைக்கு தேவையான சத்தினை அளித்து அதிகப்படியான ஒளியை ஏற்றுக்கொள்கிறது.
விழித்திரையினால் பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் நமது பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்படுகிறது.

ஸ்க்ளீரா எனப்படும் வெண்மையான விழிவெளிப்படலம் ஒரு கடினமான இழைகளாலான அடுக்கு ஆகும், இது கண்ணின் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் பாதுகாக்கிறது.


நீரிழிவினால் நம் விழிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக்கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். 108 கோடி மக்களைக் கொண்ட நமது தேசத்தில் 270 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு குறைபாடானது கண்களில் ஏற்படும் புரை (கேட்டராக்ட்),   கண் நீர் அழுத்த நோய் (க்ளகோமா), மற்றும் டயபீடிக் ரெட்டினோபதி எனப்படும் கண்ணில் உள்ளே உள்ள விழித்திரையின் ரத்தகுழாய்களை சிதைத்தல் போன்றவற்றிற்க்கும் காரணமாகிறது.

கேட்டராக்ட் என்றால் என்ன?
நமது கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவது கேட்டராக்ட் (cataract) எனப்படுகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகக்குறைந்த வயதிலேயே ஏற்ப்படுகிறது.

க்ளகோமா  என்றால் என்ன?
 நமது கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும்போது, பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா (Glaucoma) எனப்படுகிறது. மற்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையோடு கணக்கிடும்போது,  புள்ளி விவரங்கள் நீரிழிவு பிரச்னை காரணமாக க்ளகோமா உள்ளவர்கள் இரண்டு மடங்கு என்கிறது.

டயபீடிக் ரெட்டினோபதி  என்றால் என்ன?நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு நீரிழிவு விழித்திரை நோய் (டயபீடிக் ரெட்டினோபதி - Diabetic Retinopathy) எனப்படுகிறது.

விழித்திரை (Retina) என்பது என்ன?
நமது கண்க்ளை போட்டொ கேமராவுக்கு ஒப்பிடலாம். (ஃப்லிம் கேமரா - டிஜிட்டல் கேமரா இல்லை).

விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் காணப்படும் ஃப்லிம் போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும்  விழிவெண்படலத்தின் வழியே சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் - உட்புறச் சுவரான விழித்திரையில் பிம்பம் பதிவாகிறது. விழித்திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று பார்வை நரம்பு வழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியாகும்.

நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கு அதிகமாக வருகிறது?
நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு பிரச்னை உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது. நீரிழிவு உள்ளவர்களில் பாதிபேருக்கு அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

டயபீடிக் ரெட்டினொபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது?
நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது.


இந்த கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடின கசிவு (Hard exudates) எனப்படும் லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படும்.

டயபீடிக் ரெட்டினோபதி முழுமையான பார்வையிழப்பினை எற்படுத்துமா?
இந்த நோயினை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்க்கு தொடர்ந்த கண் பரிசோதனை மற்றும் கண் மருத்துவரின் ஆலோசனை தேவை. அதனை தவிர்ப்பது முழுமையான பார்வையிழப்பிற்க்கு காரணமாகலாம்.

டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?
உங்களுக்கோ அல்லது தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமே நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் உங்களுக்கும் நீரிழிவு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.  உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது என்றால் ஒரு கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டயபீடிக் ரெட்டினோபதி எப்போதும் தீவிரமான நிலைக்கு வரும் வரை நம் பார்வையை பாதிப்பதில்லை. ஆனால் தீவிரமான நிலையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதனை, ஆரம்ப கட்ட நிலையில் நோயை கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வையிழப்பிற்க்கான சாத்தியக்கூறினை குறைக்கிறது.

டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய அவரது கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
- கண்ணின் வெளிப்புறத் தோற்றம்
- பார்வைத் திறன்
- கண் நீர் அழுத்தம்
- பார்வைக்குறைபாடு
- நிறக்குறைபாடு
இவ்வாறான அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் பாப்பா (pupil) விரிவதற்க்காக சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின் உள்ளறையை - கண்ணின் பின்புறத்தை இன்டைரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும் கருவியைக் கொண்டு விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதும் இல்லாத பரிசோதனையை செய்யபடுகிறது.

மேலே  கூறப்பட்டுள்ள மாற்றங்கள் ஏதும் விழித்திரையில் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏதும் இருக்குமேயானால் மேலும் சில பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவையும் செய்யப்பட்டு நோய் இருக்கிறதா இல்லையா என்பது உறுதி படுத்தப்படுகிறது.

* குறிப்பாக உங்கள் கண் மருத்துவர் உங்கள் விழித்திரையில் ரத்தகசிவு அல்லது நீர்க்கசிவு உள்ளதா என்று கவனமாக சோதனை செய்வார்.
* விழித்திரையில் வீக்கம் ஏதும் உள்ளதா? அல்லது மாக்குலாவில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை கவனிப்பார்.
* விழித்திரையை ஒட்டி ஏதேனும் கசிவு அல்லது கலங்கலான திட்டு ஏதும் சேர்ந்துள்ளதா என்பதனை கவனிப்பார். (இது ரத்தக்கசிவு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்க்காக).
* பார்வை நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்வார்.
* வேறு ஏதேனும் மாற்றங்கள் ரத்தக்குழாயில் ஏற்ப்பட்டுள்ளதா என்று கவனிப்பார்.
* ஒருவேளை உங்களுக்கு மாக்குலாவில் பாதிப்பு ஏதும் ஏற்ப்பட்டிருப்பதாக அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக உங்கள் கண் மருத்துவ நிபுணர் கருதினால் fundus fluorescein angiogram என்ற பரிசோதனையை செய்ய அறிவுறுத்தலாம். இந்த சோதனையின்போது உங்கள் கையில் ரத்தக்குழாயின் வழியாக ஒரு கரைசல் செழுத்தப்பட்டு அது உங்கள் கண்ணின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் செல்வது புகைப்படமாக எடுக்கப்படுகிறது. அது விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு இருக்கும் இடத்தையும், அளவையும் தெரிந்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

டயபீடிக் ரெட்டினோபதிக்கு தீர்வு என்ன?
முதல் நிலையில் சிகிச்சை ஏதும் தேவைப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை நோயைத் தவிர்ப்பதற்க்காக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள்.  நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவைப்பொறுத்து மருந்துகள், அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். உங்கள் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.


டயபீடிக் ரெட்டினோபதிக்கான அறிகுறிகள் என்ன?
* அடிப்படையில்  டயபீடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது என்பதே உண்மை. உங்களுக்கு நீரிழிவு இருப்பதாக நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனையை செய்து கொள்வதே நல்லது.(அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளச் செல்லும்போது உங்கள் கண் மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருப்பதை மறக்காமல் முதலிலேயே சொல்லவும்)
* ஒரு பொருளைப்பார்க்கும்போது அந்தப் பொருளின் மையப்பகுதி தெளிவாகத் தெரியவில்லை என்றால், அல்லது கலங்கலாகத் தெரிந்தால், கண்ணின் மாக்குலா என்ற பகுதியில் மாக்குலா இடிமா என்ற நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவரின் கவனம் தேவை என்பதை மறவாதீர்கள்.

* ஒருவேளை முதலில் குறிப்பிட்ட விழித்திரையின் மேலடுக்குகளில் உருவான புதிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்தால், பார்வை மறைக்கலாம்.
* ஒரு சில நேரங்களில் மறைக்கப்பட்ட பகுதிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே தெளிவாகி பார்வை தெளிவாகத் தெரியலாம். இருந்தாலும் ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம். எனவே முதல் முறையாக பார்வையில் தெளிவின்மை உணர்ந்தால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவதே பார்வையிழப்பை காப்பாற்றுவதற்க்கான வழி.

லேசர் சிகிச்சை எதற்காக தேவைப்படுகிறது?
Proliferative Retinopathy எனப்படும் நிலையில் ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன. எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன. இழந்த பார்வையை மீட்க முடியாவிட்டாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்ற வேண்டி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த லேசர் சிகிச்சையில் 1000 முதல் 2000 லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய புதிதாக உருவான அசாதரணமான மற்றும் பலவீனமான ரத்தக்குழாய்கள் எரிக்கப்படுகின்றன. அதன் மூலம் ரத்தம் மற்றும் நீர்க்கசிவு ஏற்ப்பட்டு பார்வை பாதிப்பது அல்லது பறிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

பொதுவாக சிகிச்சை முழுமையடைய இரண்டு அல்லது மூன்று  அமர்வுகள் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைப்படலாம். இந்த புதிய ரத்தக்குழாய்கள் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதற்க்கு முன்பே லேசர் சிகிச்சை அளிப்பது பார்வையை தக்க வைத்துக்கொள்வதற்க்கு பயன்படும். புதிய பலவீனமான அசாதாரணமான ரத்தக்குழாய்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம்.

எனவேதான் லேசர் சிகிச்சை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தொடர்ச்சியான  கண் மருத்துவரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ரத்தக்கசிவு இருந்தாலும், கசிவின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து சிகிச்சை வழங்கப்படலாம். பொதுவாக பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்வையை பாதுகாத்து மேலும் பார்வை குறைவதை தடுக்க உதவுகிறது. பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதவீதம் வரை குறைக்கிறது. இது கரும்புள்ளிகளை  நீக்குவதில்லை.

மேலும், விட்ரியஸ் பகுதியில் ஏற்க்கெனெவே ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றை சரி செய்வதில்லை. லேசர் சிகிச்சையின் மூலம் நோயில் முன்னேற்றம் கண்டாலும், சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா?
லேசர் சிகிச்சை பாதுகாப்பானதே. டயபீடிக் ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம். ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சைக்குப்பின்னரும் பார்வையிழப்பிற்க்கான வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு விட்ரெக்டமி எனப்படும் ஆபரேஷன் தேவைப்படும் என்பதையும்  டயபீடிக் ரெட்டினோபதி நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.

விட்ரெக்டமி ஆபரேஷன் என்றால் என்ன?
புதிய வளர்ச்சியடைந்த ஆபரேஷன் முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ சர்ஜரி மூலமாக 60 % முதல் 70% வரை  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தத்தையும் அசாதரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமே ஆகும்.

விட்ரெக்டமி ஆபரேஷனில் கண்ணின் மையப்பகுதியில் உள்ள அதிகமான ரத்தக்கசிவினால் பாதிக்கப்பட்ட, பார்வையிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் திரவம் நீக்கப்பட்டு வேறு உப்புக்கரைசல் நிரப்பப்படுகிறது. இந்த ஆபரேஷன் மூலம் பார்வை மேலும் குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் (Retinal Detachment) எனப்படும் நோயின் இறுதிக்கட்டத்தையும் தடுக்க முடியும்.
 
நீரிழிவு பற்றியும் டயபீடிக் ரெட்டினோபதி பற்றியும் எனக்கு சரியாகத் தெரிந்திராத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால்   டயபீடிக் ரெட்டினோபதியினால் நான் அதிக அளவில் பார்வையை இழந்து விட்டேன்.  எனது  பார்வையை மீட்டுக் கொள்ள எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
 - இது ஒரு பாதிக்கப்பட்ட அன்பரின் கேள்வி.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டயபீடிக் ரெட்டினோபதிக்கான சிகிச்சை என்பது இழந்த பார்வையை மீட்பதற்க்கான முயற்சி அல்ல. இருக்கின்ற பார்வையை காத்துக் கொள்வதும், மேலும் அதிக அளவில் ஏற்படவிருக்கும் பார்வையிழப்பை தடுப்பதற்க்கான வாய்ப்பே.

டயபீடிக் ரெட்டினோபதியினால் அதிகமான அளவில் பார்வையை இழந்தவர்கள், இழந்ததை எண்ணி கவலைப்படாமல், உங்கள் கண் மருத்துவரை சந்தித்து, நீங்கள் பெற்றுக்கொண்ட சிகிச்சையின் முழு விவரத்தையும் அதற்கான மருத்துவ அறிக்கைகளோடு ஆலோசனை செய்யலாம். குறைவான பார்வையோடு நிறைவான பயனுள்ள வாழ்க்கையை வாழ "லோ விஷன் எய்டு" எனப்படும் பார்வை உபகரண்ங்கள் மற்றும் கருவிகள் வந்துவிட்டன. அவற்றின் உதவியோடு ஒளிமயமான வாழ்க்கை வாழ முடியும்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண் பார்வையை பாதுகாத்துக்கொள்ள  சில முக்கியமான குறிப்புகள் :
* நீரிழிவு நோயாளிகள் பத்தில் இரண்டு பேர்  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

* ஆரம்ப காலத்தில் இந்த  டயபீடிக் ரெட்டினோபதிக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இருப்பதில்லை.

* நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும் நாளடைவில் அது பார்வையை இழக்கச் செய்யலாம்.

* இந்தியாவில் இன்று கண் பார்வை இழப்பிற்க்கு நீரிழிவு நோய் ஒரு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.

* நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் கண் பார்வையில் பழுது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

* முறையான திட்டமிட்ட கண் பரிசோதனைகள் மூலமும் தக்க சமயத்தில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் கண் பார்வையை பாதுகாக்கும்.

* லேசர் சிகிச்சை மூலம் பலருக்கு பார்வை இழப்பை தடுக்கலாம்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வருடம்தோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது தற்காப்பு நடவடிக்கையாகும்.

* அநேகமாக அனவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெட்டினோபதி கண்டறியப்பட்டால் நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வையை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வை நமக்கு மிக மிக முக்கியம். நாம் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் வருடாந்திர கண் பரிசோதனை மனதிற்கு நிம்மதி கொடுக்கும். வரும் முன் காப்போம்.  ஆரம்பத்திலேயே கண்டறிவோம். உடன் சிகிச்சை பெறுவோம். கண் பார்வையை தக்க வைப்போம்.
Thanks- Rajesh Reddy.



‘இனிய’ பெண்கள் கவனிக்க…-டி. செல்வகுமார்

வீட்டுக்கு வீடு வாசல் இருக்கிறதோ இல்லையோ, இன்று வீடுதோறும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவது இருக்கிறார். வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர்வரை நீரிழிவால் இன்றைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் நம் நாட்டில் அதிகம்!

மனித உடலில் உள்ள இன்சுலின் என்கிற முக்கியமான ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் வருகிறது. இந்த நோய் வருவதற்கு பரம்பரையும் முக்கியக் காரணம். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கும் இந்நோய் வருவதற்கு 80 சதவீத சாத்தியம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்ணே ‘கரு’


இந்த நோய்க்கு, 1923-ல் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டுபிடித்த கனடா நாட்டு மருத்துவர் ஃபிரெட்ரிக் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி, ‘உலக நீரிழிவு நோய்’ நாளாக 1991-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் கருப்பொருள் ஒன்றை மையப்படுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘பெண்ணும் நீரிழிவும்’!

“பொதுவாக வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ளதை சாப்பிடுவதை பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீரிழிவு நோய்க்கு விரதமும் கூடாது, விருந்தும் ஆகாது. யார் எந்தப் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் நீரிழிவு நோய் வந்துவிட்டால், உணவில் கட்டுப்பாடு அவசியம்” என்ற அறிவுரையுடன் தொடங்கினார் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் ஏ.பன்னீர்செல்வம். இந்த ஆண்டு கருப்பொருள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்:

குடும்ப ஆதரவே ஆதாரம்


“உடலில் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போவதால் 20 வயதைக் கடந்த பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. குடும்பத்தில் அம்மா அல்லது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ நீரிழிவு நோய் பாதிப்பதற்கான சாத்தியம் அதிகம். இதன் பின்விளைவுகள் பல பெண்களுக்குத் தெரிவதில்லை” என்றவர், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டார்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் அரிப்பு, அதிக தாகம் எடுத்தல், நாக்கு வறட்சி, அதிகப் பசி, சோர்வு, எடை குறைதல், தோலில் அரிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும் பெண்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பெண் மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்திருப்பவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும், என்கிறார்.

“முறையான உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோய் உள்ள பெண்கள் நேரம் தவறாமல் சாப்பிடாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து நினைவிழக்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகம் சாப்பிடுபவர்கள், இனிப்பு சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் பல தொந்தரவுகளைக் கொடுக்கும். ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அவர் மட்டுமல்மாமல் அவருடன் இருப்பவர்களுக்கும் பொறுப்பு அதிகம். ஏனென்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பெண்கள், தங்களைக் கவனித்துக் கொள்வதில்லை. இந்த வழக்கத்தைப் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும், மாதவிடாய் நின்ற பெண்களிடம் நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பெண்களுக்கு நீரிழிவு நோயுடன் உயர் ரத்த அழுத்தமும் இதய ரத்தக் குழாய் நோயும் இருக்கும். எனவே, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் தனி கவனம் தேவைப்படுகிறது.” என்கிறார் பன்னீர்செல்வம்.

பேறுகாலத்தில் கவனிப்பு


சில பெண்களுக்கு சிறு வயதிலே நீரிழிவு நோய் வந்துவிட்டால், தொடக்கக் காலத்தில் இருந்தே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாகப் பேறுகாலத்துக்கு முன்பு நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். குழந்தை பெற்றெடுக்கும்வரை அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கரு கலைந்து போகலாம். குறைப்பிரசவமாகி குழந்தை ஊனமாகவோ, மந்த புத்தியுடனோ, அதிக எடையுடனோ பிறக்கும் ஆபத்தும் உள்ளது.

டாக்டர் பன்னீர்செல்வம்
டாக்டர் பன்னீர்செல்வம்
இது குறித்து பன்னீர்செல்வம் மேலும் கூறும்போது, “ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து 120 மில்லி கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு 6 அல்லது 7-வது மாதத்தில் பாதிப்பு ஏற்படலாம். புத்தி மந்தமாகவோ அல்லது 3.5 கிலோவுக்கு அதிகமான எடையிலோ குழந்தை வளரும். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இந்த பாதிப்புகள் நிச்சயம் ஏற்படாது.

பிரசவத்துக்குப் பிறகு மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொண்டு, தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு நீரிழிவு நோய் இல்லாமலாகி விடும். இருந்தாலும், முறையான உணவு முறையும் உடற்பயிற்சியும் இல்லாவிட்டால் நீரிழிவு நோய் மீண்டும் வருவதற்கு சாத்தியமுள்ளது” என்றார்.

நீரிழிவின்றி ஆரரோக்கியமாக வாழட்டும் பெண்கள்!


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் நவம்பர் 14, 1889.


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் நவம்பர் 14, 1889.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

பிறப்பு: நவம்பர் 14, 1889

இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா)

பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்

இறப்பு: மே 27, 1964

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில்  சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.

திருமண வாழ்க்கை

நேரு அவர்கள், 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் (பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார்). இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.

காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய  குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929  லாகூர் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.

1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947  புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.

நேருவின் படைப்புகள்

வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.

1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”1936 ல் “சுயசரிதை”“இந்தியாவின் கண்டுபிடிப்பு”

இந்தப் படைப்புகள், ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், நற்பெயரையும் தேடித்தந்தது.

இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேருவின் பணிகள்

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது.  1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார். நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.

‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.

நேருவின் வெளிநாட்டு கொள்கைகள்

நேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள்

இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.

இறப்பு

1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

குழந்தைகள் தினம் நவம்பர் 14.


குழந்தைகள் தினம் நவம்பர் 14.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் இன்று. குழந்தைகளிடம் அன்பை பரிமாறிக்கொள்வதில் இவருக்கு இணை இவர்தான்.
குழந்தைகள் இவரை நேரு மாமா என்று அழைப்பார்கள். இவர் குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.


குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்  பிறந்த தினமான நவம்பர் 14ஆன இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, "குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்" என்றார்.
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர்.
அன்பான நேரு மாமா:
இவர்களது குழந்தைகளும் நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.
மலர்தூவி மரியாதை:
குழந்தைகளுக்கு அன்பான மாமாவாக திகழ்ந்த நேருவின் 126வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
குதூகலமான குழந்தைகள் தினம்:
உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா அறிவித்தது. எனினும் நவம்பர் 14 ஆம் தேதிதான் இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடச் சொன்னார் . உலகநாடுகளில் பட்டம் பெற்ற நேருவுக்குள் குழந்தை மனம் இருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .
சிறப்பு தினங்கள் என்று ஏராளமான நாட்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன . அதில் துக்ககரமான நினைவு நாட்களும் வருவது குறிப்பிடத்தக்கது .
இப்படி சிறப்பு தினங்கள் எல்லாம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன ?
மனிதர்கள் , சிறப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் , அதை மகிழ்ச்சியின் குறியீடாகவும் கொண்டாடுவதற்கும் வழி வகை ஏற்படுகிறது.
அந்த வகையில் , குழந்தைகள் தினத்தை எத்தனை பேர் உணர்ந்து கொண்டாடுகிறார் என்பது தெரியவில்லை . பெரிய ஜம்பவான்கள் எல்லோருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .
தேவையான வசதிகளையும் சுதந்திரத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்கிறார்கள் .
இப்போதெல்லாம் நடைமுறையில் குழந்தைகள் சாதிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இதற்கெல்லாம் வசதி வாய்ப்புகள் ஊடகத்தில் கொட்டிக் கிடக்கின்றன .
உரிய நேரத்தில் குழந்தைகளை வெற்றிப் பெறச் செய்வதே பெற்றோர்களின் முதல் கடமையாகும் . ஆனால் , தான்தோன்றியா பிள்ளைகளை விட்டு விடும் பெற்றோர்கள் இருப்பதால் தான் , ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தெருவுக்கு வந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .
கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை கைதிகள் போல வளர்க்கும் போக்கை நிறுத்தி விட்டு குழந்தைகள் மொழியில் திருத்த கூடுதலான திறமை ஒவ்வொரு பெற்றோருக்கும் நிச்சியம் வேண்டும் .
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வதற்காக ஐந்திலே இளம் மூங்கில்களை ஒடித்து விடுகிறார்கள் .
குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகளாகவே மாறினால் மட்டும் தான் , இன்றைய குழந்தைகள் நாளைய வெற்றியாளராக முடியும்

சனி, 11 நவம்பர், 2017

உலக நிமோனியா நாள், நவம்பர் 12



உலக நுரையீரல் அழற்சி நாள் ( World Pneumonia Day ) நவம்பர் 12.

உலக நுரையீரல் அழற்சி நாள் ( World Pneumonia Day ) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள்
கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு ,
மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.
நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.



உலக நிமோனியா நாள், நவம்பர் 12

நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு. ஆயினும் நிமோனியா என்பதே பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய நுண்ணுயிர்கள் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி(Pneumocystis Carinii) ஆபத்தானது. உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை இது தாக்கவல்லது.

health nov 12

நமது நுரையீரல்கள் வலதுபக்கத்தில் மூன்று பகுதிகளாகவும், இடது பக்கம் இரண்டு பகுதிகளாகவும்(lobes) அமைந்துள்ளன. நிமோனியா இவற்றில் ஒரு பகுதியை மட்டும் அல்லது ஒரு நுரையீரலின் எல்லாப் பகுதியையும், அல்லது இரண்டு பக்கத்திலும்கூட தாக்கலாம். இவ்வாறு நுரையீரலின் காற்றுப் பைகள் பாதிக்கப்பட்டால், அவை செயல் இழந்துபோய் மூச்சுத் திணறல் உண்டாகிறது. நிமோனியா யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால் குழந்தைகள், சளி, காய்ச்சல் உண்டானவர்கள், முன்பே நுரையீரலில் குறைபாடு உள்ளவர்கள், உடல் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள், மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள்,

அதிகம் புகைப்பவர்கள், அதிகம் குடிப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை இது எளிதில் தாக்கலாம். சுவாசிக்கும்போது கிருமிகள் நுரையீரலுக்குள் நேரடியாகப் புகுவதின் மூலமும், வாய், தொண்டை, மூக்கிலிருந்து கிருமிகள் நுழைவதின் மூலமும் நிமோனியா உண்டாகலாம். அதிக வெப்பமுள்ள காய்ச்சல், குளிர், நடுக்கம், மூச்சுத்திணறல், விரைவாகச் சுவாசித்தல், கடுமையான இருமல், சளியில் நிறமாற்றம், சுளீர் எனும் நெஞ்சு வலி, குழந்தைகள் சுறுசுறுப்பு குன்றிய நிலையில் உணவு உண்ணாமல் சுணங்கி காணப்படுவர், குழந்தைகள் மூச்சுவிடும்போது மெல்லியதாகவோ அல்லது இரைச்சலுடனோ ஒருவித ஓசை(grunting) எழுதல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும். நிமோனியாவுக்கு மருத்துவமனையில் தங்கிதான் சிகிச்சை தர வேண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது.

நிமோனியாவில் வேறொரு வகையும் உள்ளது. இதை, புரையேறி நிமோனியா(aspiration pneumonia) என்பர். உணவு, நீர், வாந்தி அல்லது இதரப் பொருட்கள் தவறாக சுவாசக்குழாயினுள் புகுந்து நுரையீரலில் வீக்கத்தையும், அடைப்பையும், கிருமித் தொற்றையும் உண்டுபண்ணுவதால் இந்த வகையான நிமோனியா உண்டாகிறது.

ஆண்டுதோறும் நவம்பர் 12ம் தேதியன்று நிமோனியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாகும். நிமோனியா காய்ச்சலால், 2012ம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 11 இலட்சம் சிறார் உலகில் இறந்துள்ளனர்.

வெள்ளி, 10 நவம்பர், 2017

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பிறந்த தினம் நவம்பர் 11, 1899.



முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பிறந்த தினம் நவம்பர் 11, 1899.

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ , தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பிறப்பும் இளமைக்காலமும்
1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் அவர்களுக்கு புதல்வனாய் பிறந்தார். தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள் , திரு. வி. க , நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும் , தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம்.
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.
விருதுகள்
1956ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் "முத்தமிழ் காவலர்" விருது வழங்கியது
1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது
1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது
பெருமைக்குரிய செய்திகள்
1. 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2. இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.
3. 1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது.

இயற்றிய நூல்கள்

1. அறிவுக்கதைகள்
2. அறிவுக்கு உணவு
3. ஆறு செல்வங்கள்
4. எண்ணக்குவியல்
5. எது வியாபாரம்? எவர் வியாபாரி?
6. எனது நண்பர்கள்
7. ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்
8. தமிழ் மருந்துகள்
9. தமிழ்ச்செல்வம்
10. தமிழின் சிறப்பு
11. திருக்குறள் கட்டுரைகள்
12. திருக்குறள் புதைபொருள் - பாகம் 1
13. திருக்குறள் புதைபொருள் - பாகம் 2
14. திருக்குறளில் செயல்திறன்
15. நபிகள் நாயகம்
16. நல்வாழ்வுக்கு வழி
17. நான்மணிகள்
18. மணமக்களுக்கு
19. மாணவர்களுக்கு
20. வள்ளலாரும் அருட்பாவும்
21. வள்ளுவர்
22. வள்ளுவரும் குறளும்
23. வானொலியிலே


“தமிழ்த் தேசியப் போராளி” கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள் 11.11.1899
‘தமிழ்த்தேசியப்போராளி’ கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்
11.11.1899
பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகிய நீதிக் கட்சியை “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பிய போது அதனை எதிர்த்து இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆவார்.
கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் பெரியண்ணன்-சுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் 11.11.1899 இல் பிறந்தார். இவர் தந்தையார் சிவத்தொண்டில் ஈடுபட்ட காரணத்தால் சிவனைக் குறிக்கும் வகையில் இவருக்கு விசுவநாதம் என்று பெயரிட்டார்.
இவரின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தததோடு கூட்டாகப் புகையிலைத் தொழிலையும் நடத்தி வந்தார். மூவரின் முதலெழுத்தைக் குறிக்கும் வகையில் கி.ஆ.பெ. (K.A.P.) எனும் பெயரினை தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப்பெழுத்தாக நிலைத்து விட்டது.
வலையானந்த சுவாமிகள் மூலம் சைவப்பற்றையும், மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றையும். வளர்த்துக் கொண்டார். ஆயினும் சைவத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு பாராட்டினால் அதை ஏற்க மறுத்தார். கி.ஆ.பெ.வி. சிவ தீட்சைப் பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் திருவாசகம் படிப்பதற்கு அனுமதி கேட்ட போது சைவராகிய வாலையானந்த சுவாமிகள் மறுத்தார். அதுமுதல் தன் கழுத்தில் சிவதீட்சைப் பெற்று தான் அணிந்திருந்த உத்திராட்ச மாலையை இனி அணிவதில்லை என்று கழற்றி வீசினார்.
1920ஆம் ஆண்டில் அகவை நிரம்பிய கி.ஆ.பெ.வி. நீதிக்கட்சியில் இணைந்து பார்ப்பனரல்லாத தமிழர்களுக்குப் பாடுபட்டதோடு, பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சாதிக்கொரு நீதி சொல்லும் ஆரிய மனுதர்மக் கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்ட மக்களும், கணவனை இழந்த பெண்களும் கொடுமைக்கு உள்ளான போது கொதிப்படைந்தார். 1927ஆம் ஆண்டு மே மாதம் சுமார்100 தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு முதன்முதலில் ஆலய நுழைவை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை, திருவானைக்காவல் கோயில்களிலும் கி.ஆ.பெ.வி.யின் தலைமையில் ஆலய நுழைவு மேற்கொள்ளப்பட்டது.
24.7.1927 அன்று அதே திருச்சிராப்பள்ளியில் “சுயமரியாதை அல்லது மூன்று நண்பர்கள்” நாடகம் அரங்கேற்றப்பட்டது. கி.ஆ.பெ.வி. இந்த நாடகத்தை பொறுப்பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவை குறித்து இந்நாடகத்தின் கதா பாத்திரங்கள் வலியுறுத்தின.
அன்றைய தெருக்கூத்து நாடகங்களில் “வண்ணான் பாட்டு” எனும் பெயரில் சலவைத் தொழில் செய்திடும் மக்கள் இழிவு செய்யப்பட்டனர். ‘வண்ணான் வந்தானே…. வண்ணாத்தியும் வந்தாளே….” என்று தொடங்கும் ஓடியன் கிராமப் போன் இசைத் தட்டுப் பாடல் ஒலிபரப்பிற்கு எதிராக தென்னிந்திய வண்ணார் குல மகாஜனக் கூட்டம் 3.11.1933இல் திருச்சிராப்பள்ளியில் கூடியது. இக்கூட்டத்திற்கு கி.ஆ.பெ.வி.தலைமை தாங்கி கண்டனம் செய்தார். (1)
1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி, பள்ளிகளில் கட்டாய இந்தியைப் புகுத்திய போது இதற்கு எதிராகத் தமிழறிஞர்கள் போர்க்குரல் எழுப்பினர். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகிய மூன்று தமிழறிஞர்களின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் மிக முகாமையானவை.
சென்னை மாகாணத்தில் தமிழரல்லாதப் பகுதிகளில் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழகப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர். இதில் நீதிக்கட்சியில் பணியாற்றிய தமிழரான கி.ஆ.பெ.வி.யின் பங்கு அளப்பரியதாகும்.
26.12.1937 அன்று திருச்சிராப்பள்ளியில் முதன்முதலில் கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கூட்டினார். அன்று நடந்த பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதில் அவர் வெளியிட்ட அறிக்கை அனைத்து தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்க்கும் படி அமைந்தது. அது வருமாறு:
“தமிழனுடைய நாடு படையெடுப்பால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது. தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுக்கப்பட்டது. தமிழனுடைய ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது. தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது. தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது. தமிழனுடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது. தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது.”
தமிழறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை திறப்புரை செய்த இம் மாநாட்டில் கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மாகாணத்தை தனி மாகாணமாகப் பிரிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இராசாசி இந்தியை ஆதரித்து பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ. தனது வாதத்திறமையால் வென்று காட்டினார். இராசாசி தமிழ் இட்டலி போன்றது. இந்தி சட்னி போன்றது என்பார். இவரோ சட்னி இன்றி இட்டலியை உண்ண முடியும். இட்டலியின்றி சட்னியை உண்ண முடியுமா? என்று பதிலடி தருவார்.
உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ, “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டிப் பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்” என்று பதில் தருவார்.
1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. நாடெங்கும் கயல், புலி, வில் அடங்கிய மூவேந்தர் கொடிகள் கி.ஆ.பெ.வி. அறைக்கூவலால் ஏற்றப்பட்டன.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்றபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந்தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்த வில்லை. அப்போது ,”நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாக சொல்லிப் புறப்பட வில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதை குழியே அதிகமாக வளர்க்கும்!” என்றார்.
எட்டயபுரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில், கி.ஆ.பெ.வி. பேசிய போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ.பெ.வி.யின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்பு போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தி சாதனை படைத்தார்.
இந்தி எதிர்ப்புப் போரின் போது கி.ஆ.பெ.வி.னுடைய மகன் இராசரத்தினம் மறைந்தார். அதுபற்றி சிறிதும் கவலை கொள்ள வில்லை. மகன் இறந்த அன்றும் மறு நாளும் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றார். நீதிக்கட்சி நடத்திய விடுதலை ஏடு தனது தலையங்கத்தில், ” வங்க நாட்டு பாபு சுரேந்திரநாத் பானர்ஜி தனது மகன் இறந்த போது அவரின் மனத்தின்மை மாறாது தொடர்ந்து பணியாற்றியதைப் போல கி.ஆ.பெ.வி. தன் மகன் இறந்த போதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடி வருகிறார்” என்று பாராட்டி எழுதியது.
சுயமரியாதை இயக்கத் தலைவராக விளங்கியவர் பெரியார். அவர் தமிழறிஞர்களோடு இணைந்து “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்ட போது தமிழ்த் தேசிய சிந்தனையாளரான கி.ஆ.பெ.வி.யை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
இராசாசி அரசால் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அந்தச் சிறையிலிருந்த படியே நீதிக்கட்சிக்கு தலைவரானார். சிறை மீண்டு வந்த பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை திடீரென்று ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றினார். எழுச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய உணர்ச்சியானது இதனால் திசை திருப்பப்பட்டது.
இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. அதனோடு பெரியார் நீதிக்கட்சியை சர்வாதிகாரப் போக்கோடு நடத்தி வருவதாகக் கருதினார். அவரின் செயல்பாடுகள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு உதவவில்லை என்பதாகக் கூறி 25 குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார்.
ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கப் போராடும் மறைமலையடிகள், உமா மகேசுவரனார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களை ஆரிய அடிமைகள், ஆரிய கூலிகள் என்று பெரியார் கூறியதை கி.ஆ.பெ.வி. தனது குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி, சாதாரண உறுப்பினராக நீடித்து வந்த நிலையில், 27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். (2)
இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும், கி.ஆ.பெ.வி.க்கும், பெரியாருக்குமிடையே நிலவிய முரண்பாடு கட்சித் சீரமைப்பு தொடர்பானதேயன்றி, “திராவிட நாடு” கேட்டதிலோ, “திராவிடர்கழகம்” பெயர் மாற்றியதலோ அல்லவென்றும் பெரியார் இயக்கங்கள் திரும்பத் திரும்ப கூறி வருகின்றன.
இது உண்மையல்ல, சேலம் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே கி.ஆ.பெ.வி. “திராவிட நாடு” கருத்தியலில் மாறுபாடு கொண்டுள்ளதையும், “தமிழ் நாடு”என்பதில் உறுதியாக இருந்துள்ளதையும் அறிஞர் அண்ணா அவர்கள் கி.ஆ.பெ.வி.க்கும், சவுந்தர பாண்டியனாருக்கும் எழுதிய இரண்டு கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன.
15.1.1942இல் சென்னையில் ஜஸ்டிஸ் இளைஞர் மாநாட்டிற்கு கி.ஆ.பெ.வி.யைத் தலைமை தாங்கும்படி அண்ணா கடிதம் ஒன்றின் மூலமாக கேட்டுக் கொண்டார். .கி.ஆ.பெ.வி.யின் கொள்கை நிலைப்பாட்டை உணர்த்தும் அண்ணாவின் கடித வரிகள் பின்வருமாறு:
“திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பற்றிய தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல, திராவிட நாடு பிரிவினை என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல. இக்கருத்தில் தங்களுக்கு விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதன் அவசியம் பற்றி தலைமை உரையில் விளக்குங்கள்” (3)
12.8.1944இல் W.P.சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு எழுதிய மற்றொருகடிதத்தில் கி.ஆ.பெ.வி.யை சந்தித்து வரக்கூடிய சேலம் மாநாட்டில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளும்படி அண்ணா கடிதம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார். அது பின்வருமாறு:
“அன்புடைய தலைவருக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கண்டேன். மகிழ்ந்தேன். KAPஅவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோசமே, மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், அவருடைய முன்னைய குற்றச்சாட்டுகளுக்கும், இன்றுள்ள கட்சியின் பிரச்சனைக்கும் இடையே பலப்பல மாறுதல்கள் உண்டாகி விட்டன எனவே பழையதைக் கிளறிக் கொண்டு எதிர்காலத் திட்டத்தை இடருடையதாக்கிக் கொள்ளக் கூடாது என்று கருதுகிறேன்.
குறிப்பாக, அவர் 1) கட்சிக்காக தரப்பட்ட நிதி, 2) கட்சியின் பத்திரிக்கை, 3) கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை 4) அமைப்பு முறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துபவர் 5) “தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும், திராவிட நாடு அல்ல என்று கூறுவார். K.A.P. தவிர மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப் பண்பு, முதலியவற்றுக்கு ஏற்றது என்பதையும் திராவிட நாடு என்னும் திராவிட கூட்டாட்சி என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
நிற்க. நண்பர் KAP அவர்கள் இந்தப்படியே விஷயங்களை யோசிப்பதைவிட இன்றும், இனியும் செய்ய வேண்டியதை யோசிக்க வேண்டும்,” (4)
கி.ஆ.பெ.வி. கொள்கை முரண்பாடு இல்லாதவராக இருந்திருப்பின், அண்ணா மேற்படி கடிதத்தில் தெரிவித்திருக்கும் “திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்திலே இருந்திருக்க முடியும். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற காரணத்தால்தான் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை தோற்றுவித்தார். தமிழர்களிடம் கொள்கை முழக்கம் பரப்பிட அதன் துணையாக ” தமிழர் நாடு” இதழைத் தொடங்கினார்.
திராவிடர் கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வேட்டில் தெளிவாகவே கி.ஆ.பெ.வி. பதிலுரைத்தார்.
“நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலிருந்து ‘தமிழ்க்கொடி’ தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்.” என்று விடையிறுத்தார். ( 5)
கி.ஆ.பெ.வி. தமிழர் கழகம் பெயரிலும், ம.பொ.சி. தமிழரசு கழகம் என்ற பெயரிலும் இயக்கம் தோற்றுவித்து செயல்பட்டு வந்ததை பெரியார் எதிர்த்தார். சென்னை கோகலே மண்டபத்தில் திரு.சி.டி.டி. அரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், “தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்பதும் தமிழர் ராஜ்ஜியம் என்பதும் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று பெரியார் பேசியதோடு நிறுத்திக் கொள்ளாது பிற இடங்களில் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார்.
அதற்கு பதிலுரையாக பின் வருமாறு தனது ஏட்டிலே கி.ஆ.பெ.வி. எழுதினார்.
“இதனால் தமிழ், தமிழர், ,தமிழரசு, ,தமிழ் நாடு, என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ் நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திரா, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.
அவ்விதமாய் இருந்தாலும் கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதை பொது மக்களே கருதிப் பார்க்க வேண்டும்.”
மேலும், பெரியார் ஆந்திரா, கேரளா, கன்னடிய நாடுகளுக்குச் சென்று ஆந்திரர் என்றும், கேரளர் என்றும், கன்னடியர் என்றும், தம்மைச் சொல்லிக் கொள்பவர்களிடம் போய் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கூறத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.(6)
1949இல் பெரியாரை விட்டு, அண்ணாதுரையும் விலகி திராவிட முன்னேற்றக்கழகம் அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வந்தார். கி.ஆ.பெ.வி.யிடம் அணணாவின் தி.மு.கழகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. கி.ஆ.பெ.வி. சொன்ன பதில் இது தான்: “கழகத்தை நடத்துவோர் வெற்றிப் பாதையில் விரைந்து செல்ல விரும்பினால், ‘திராவிட’ என்ற சொல் மாறி ‘தமிழர்’ என்ற சொல் அமைந்து ‘தமிழர் முன்னேற்றக் கழகம்’ என அது திகழ வேண்டும்” என்றார்.
பெரியாருக்கும் கி.ஆ.பெ.விக்கும் நடந்தது கொள்கை முரண்பாடு தானே தவிர, தனிநபர் முரண்பாடு அல்ல. பெரியாரிடம் தனிப்பட்ட முரண்பாடு கொண்டிருந்தால் கி.ஆ.பெ.வி. அண்ணாவோடு தி.மு.க.வில் இணைந்து பணியாற்றியிருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் அண்ணாவின் திராவிடத்தையும் எதிர்த்து நின்று அவர் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதி குலையாமல் இருந்துள்ளார். இதன் மூலம் பெரியாருக்கும் கி.ஆ.பெ.வி.க்கும் நிகழ்ந்தது கொள்கை முரண்பாடு தான் என்பதை அண்ணாவின் இரு கடிதங்களும், அண்ணாவின் இயக்கம் குறித்து கி.ஆ.பெ.வி.யின் பதிலும் இதனை திட்டவட்டமாக உறுதிப்டுத்துகிறது.
தமிழர் கழகத்தை நடத்தவியலாமல் சில ஆண்டுகளில் அதனை அவர் கலைத்த போதிலும் தமிழ் மொழி, தமிழர் நலனுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அதனை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றார். தமிழ் எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, இந்தியைத் திணிக்கும் வானொலி நிலைய எதிர்ப்பு, 1965ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் பங்கேற்கத் தவறவில்லை.
கி.ஆ.பெ.வி. தமது 91-ஆம் அகவையில், தமிழீழப் போரை முன்னெடுத்துப் போராடிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளின் போது பின் வருமாறு எழுதினார்:
“கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்!!! இத்தகைய வீரன் ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டு களாக வேறு எவனும் தோன்றியதில்லை (7)
இராசீவ் காந்தி படுகொலையை சாக்காக வைத்து தமிழர் உரிமைகளை பறிக்க முயன்ற தில்லி அரசைக் கண்டித்து பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலே, “1938இல் தமிழ்நாடு பிரிவினைப் போராட்டத்தைத் தொடங்கினோம். எங்களுக்குரிய உரிமையைக் கொடுக்காவிட்டால் நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியம் தான் உருவாகும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.(8)
95 அகவை வரை ஒரு தமிழ்த் தேசியராகவே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்து வந்த அவர் 19.12.1994 அன்று மறைந்தார்.
சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்” என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். (9) அவரின் கனவு மெய்ப்பட தொடர்ந்து போராடுவோம்!
நன்றி: முனைவர் கோ.வீரமணி எழுதிய “முத்தமிழ்க்காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தமிழ்ப்பணி”.
 அடிக்குறிப்புகள்:
1) நகரதூதன் 05.11.1933 பக்.09
2) சுப.வீரபாண்டியன் எழுதிய ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்”
3) வ.மணிமேகலை எழுதிய “முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்” ஒரு திறனாய்வு
4) பேரா. ந.க.மங்கள முருகேசன் எழுதிய” சுயமரியாதை இயக்கம்”
5) கி.ஆ.பெ.விசுவநாதம் கேள்வி-பதில், தமிழர் நாடு, 14.1.1950, பக்.48
6) தமிழர் நாடு, 25.1.1948, ம.பொ.சி. எழுதிய “புதிய தமிழகம் படைத்த வரலாறு”
7) கோவை மகேசன் நடத்திய “வீர வேங்கை” இதழ் 1990.
8) கி.ஆ.பெ.வி. தொடக்க உரை, பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாடு
9) கி.ஆ.பெ.விசுவநாதம் பேட்டி, மாலை முரசு19.12.1994.

திங்கள், 6 நவம்பர், 2017

கிரிக்கெட் வீரர் விராட் கோலி Virat Kohli, பிறந்த நாள் நவம்பர் 5, 1988



கிரிக்கெட் வீரர் விராட் கோலி Virat Kohli, பிறந்த நாள் நவம்பர் 5, 1988

விராட் கோலி (Virat Kohli, பிறப்பு நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் .
முதல்தரத் துடுப்பாட்டத்தில் தில்லி துடுப்பாட்ட அணியில் உள்ளார்.
மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008,2009 ஆண்டுகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆடியுள்ளார்.
ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோலி சில நேரங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார். "கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர். இவர் வலது கை மிதவேக
பந்து வீச்சாளரும் ஆவார்.
ஒ. ப. து நூறுகள்
ஒ.ப.து ஆட்டங்களில் எடுத்த சத
# ஓட்டங்கள் ஆட்ட எண் எதிர் ந
1 107 14 இலங்கை க
இந்
2 102* 19 வங்காளதேசம் தா
வங்
3 118 35 நியூசிலாந்து விச
இந்
4 105 36 நியூசிலாந்து கு
இந்
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயற்திறன்
நாள் எதிரணி எடுத்த ஓட்டங்கள்
ஆடி பந்துக
15 பிப்ரவரி 2015
பாக்கிஸ்தான் 107 126

ஞாயிறு, 5 நவம்பர், 2017

அக்டோபர் புரட்சி ( October revolution) நவம்பர் 7 , 1917 .


அக்டோபர் புரட்சி ( October revolution) நவம்பர் 7 , 1917 .

போல்ஷெவிக் புரட்சி ( Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி ( October revolution), 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். முதல் புரட்சி, 1917 பெப்ரவரியில் அரசரின் அதிகாரிகளுடைய திறமை குறைவாலும், கொடுங்கோன்மையினாலும் குடிமக்கள் பொறுமையிழந்து இப்புரட்சி நிகழ்ந்தது.
நவம்பர் 7 , 1917 (பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25 ) இல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில்
போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. இது
கார்ல் மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது
பொதுவுடைமைப் புரட்சியாகும்.
இந்தப் புரட்சி, ரஷ்ய இடைக்கால அரசாங்கத்தை வீழ்த்தியது. இதன் பின்னர்
1918 தொடக்கம் 1920 வரை இடம்பெற்ற
உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, 1922 இல்
சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
தொடக்க காலங்களில் இந்த நிகழ்வு
அக்டோபர் எழுச்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. லெனினின் எழுத்துக்களின் முழுமையான தொகுப்பின் முதல் பதிப்பு உட்பட்ட ஆவணங்களில் இவ்வாறே உள்ளது. காலப்போக்கில் அக்டோபர் புரட்சி பெரும் உலகளாவிய முக்கியத்துவம் உடைய நிகழ்வாகக் கருதப்பட்டது. ரஷ்யாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றிய
பனிப்போருக்கான அடித்தளம் இட்ட தொடர் நிகழ்வுகளில் முதன்மையானது இதுவேயாகும்.
1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.


உலகையே மாற்றிய அக்டோபர் புரட்சி!

ஓ ர் இடதுசாரி கட்சியின் போராட்டக் காட்சியை பார்த்தால், அதன் போராட்டக் கொடியில், பொதுவுடைமை விதையை விதைத்த கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகிய ஐந்து தலைவர்களின் படம் கண்டிப்பாக இடம்பெறும். அக்டோபர் புரட்சி நடந்து 98 ஆண்டுகள் ஆகின்றன.
19-ம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. சார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917ல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது.
1917 -ம் ஆண்டில் தோன்றிய அந்த புரட்சி, பல்வேறு காரணங்களால் எழுந்த ஒன்றாகும். 1894 முதல் 1917 வரை ஆண்ட கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ், கொடுங்கோன்மை மிக்கவராயிருந்தார். மக்களின் வறுமை மற்றும் நோய்களைப்பற்றி கவலைபடாத அவர், ரஷ்புத்தின் என்னும் மதகுருவிற்கு கட்டுப்பட்டவராகவும், தன் மனைவியின் சொல் கேட்பவராகவும் விளங்கினார்.
மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களும் நிலக்கிழார்களால் துன்பத்திற்குட்படுத்தப்பட்டனர். உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலையும், பொருளாதாரத் தட்டுப்பாடுகளும் காணப்பட்டன. கல்வியறிவின்மையாலும், நவீன விவசாய முறைகள் கைக் கொள்ளப்படாமையாலும் விவசாயிகள் வருந்தினர். 1861ல் இயற்றப்பட்ட அடிமை மீட்சிச் சட்டமும் அவர்களுக்கு யாதொரு முழுப்பயனையும் வழங்கவில்லை. எனவே உரிமை மற்றும் சமத்துவ எண்ணங்களால் உந்தப்பட்ட அவர்கள், கிளர்ச்சிகளை மேற்கொள்ளலாயினர்.


கிராமங்களில் வறுமையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகள், நகரங்களுக்கு குடியேற ஆரம்பித்தபோது, பிரச்னைகள் மேலும் சிக்கலடைந்தன. சமுதாய அவலத்தையும் சமுதாய மாற்றத்திற்கான வழிகளையும் சுட்டிக்காட்ட பல எழுத்தாளர்கள் எழுந்தனர். லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, டர்க்னேவ் போன்ற எழுத்தாளர்கள், விவசாயிகளின் அவலநிலையை தங்கள் எழுத்துகளால் படம் பிடித்துக் காட்டினர். அத்துடன் மக்கள் மனதில் பழமைக் கருத்துகள் மாறுபட வேண்டியதின் அவசியத்தையும் தோற்றுவித்தனர்.
மார்க்ஸின் மூலதனம் (DAS CAPITAL), மக்கள் மனத்தில் புரட்சிக் கருத்துகளுக்கு வித்தூன்றின. இதனை ஆதாரமாகக் கொண்டே, லெனின் பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணினார். அவருடைய நாவன்மையாலும் பேச்சாற்றாலாலும் மக்கள் விழிப்படைந்தனர்.
Advertisement
ரஷ்யா- ஜப்பான் இடையே 1904-ம் ஆண்டில் நடந்த போரின்போதும், முதல் உலகப் போரின் போதும் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தோல்வி, அந்நாட்டின் நிதி நிலைமையையும் மக்களின் வாழ்வையையும் சீர்குலைத்தன. அரசு எவ்விதமான சீரமைப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கின. இதனால் தொழிலாளர்கள் பணியாற்ற மறுத்தனர். போர் வீரர்கள் போரிட மறுத்தனர்.
1914-ல் முதலில் புரட்சியாளர்கள், கிரென்ஸ்கி தலைமையில் ஓர் அரசினை தோற்றுவித்தனர். 1917 ஜூலையில் இவர் தலைமையில் ஆட்சி கைப்பற்றப்பட்டது. மத்திய தர வகுப்பினரின் கையில் இருந்த ஆட்சியானது தொழிலாளர்கள், விவசாயிகள் கைகளுக்கு மாற வேண்டுமென இடதுசாரிப் பிரிவினரான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி விரும்பியது.
தலைமறைவு வாழ்கைக்கு பின் 1917ல் தாயகம் திரும்பிய லெனின், சமதர்மக் கோட்பாட்டை நிறுவ கடும் நடவடிக்கைகள் எடுக்கலானார். வலது சாரி பிரிவினராகவும், மிதவாதிகளாகவுமிருந்த மென்ஷ்லிக்குகளை விட லெனின் தலைமையிலான இடதுசாரிகள்,தொழிலாளர்கள், இளைஞர்கள் நிறைந்த போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் செல்வாக்கு லெனின் கைக்கு மாறியது. அன்று முதல் ரஷ்யா, 'சோவியத் குடியரசு' என அறிவிக்கப்பட்டது.
உலகையே மாற்றிய புரட்சி இதுவாகும். இதற்கு விலையாய் எண்ணற்ற இழப்புகளை சந்திக்க நேரிட்டது.
'உழைக்கும் மனிதர்களின் மைந்தன்' என தன்னை அறிவித்த லெனின், அதை செய்தும் காட்டினர்.

வியாழன், 2 நவம்பர், 2017

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு தினம் நவம்பர் 2, 1903.



தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு தினம் நவம்பர் 2, 1903.

பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,
தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
சூரியநாராயணன் என்பது. பின்னாளில்
சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும்,
இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர்
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால்
திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . அவர் 1898 ல் மறைந்தபோது,
மாமதுரைப் பெம்மான்மேல் மாலையெனப் பேர்புனைந்து
காமர் சிலேடை வெண்பாக் கட்டுரைத்த பாவலனே
பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேன்செய் தீவினையோ
என்று பாடி வருந்தினார்
இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார்.
இவரது நூல்கள்
தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
ரூபவதி
கலாவதி
மான விஜயம்
தனிப்பாசுரத் தொகை
பாவலர் விருந்து
மதிவாணன்
நாடகவியல்
தமிழ் விசயங்கள்
தமிழ் மொழியின் வரலாறு.
சித்திரக்கவி விளக்கம்
சூர்ப்ப நகை - புராண நாடகம்
பதிப்பித்த நூல்கள்
சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
தனிப்பாசுரத்தொகை (1901)
பரிதிமாற்கலைஞரின் மறைவு
நவம்பர் 2, 1903ல் பரிதிமாற் கலைஞர் என அழைக்கப்பட்ட சூரிய நாராயண சாத்திரியார் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:
“ என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே . ”