திங்கள், 20 நவம்பர், 2017

உலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day ) நவம்பர் 21



உலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day ) நவம்பர் 21 

உலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day ) உலகெங்கும் ஆண்டுதோறும்
நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 21, 1996 -ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில்
ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997 -ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ஐநாவின் டிசம்பர் 17 , 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தில்[1] இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது.


உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.

இந்த தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.

1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதனூடாக வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொலிகள், புதிய ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு போன்றவை மக்களை அதிகளவில் கவர்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஊடகமாக தொலைக்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு பிரதான காரணம் உலகளாவிய ரீதியில் மிகவும் குறைந்த வசதியில் தொலைக்காட்சியை நாடமுடியும் என்பதால் அதற்கான ரசிகரகளும் உலகளாவிய ரீதியில் அதிகமாக காணப்படுகின்றனர். சமூக வேறுபாடு வயது வேறுபாடு மற்றும் தேசிய வேறுபாடு ஆகியவற்றை களைந்து அனைவர் மத்தியிலும் பொதுவான விருப்பத்திற்கு உரிமையுடைய சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிரபப்பாகும் காணொலிகளிளை புரிந்துகொள்வதற்கு மேலதிக அறிவு தேவையில்லை. இதனால்; கல்வியறிவு குறைந்தவர்களும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம செலுத்துகின்றனர்.

தற்போது மனித உணர்வுகளை நேரடியாகவும் அவர்களின் நிலைமையை விளக்கிக்கூறும் பலம்மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. இதனால் உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதில் யுனெஸ்கோ அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்பாடு மற்றும் சிறந்த காணொளிகள் என்பது யுனெஸ்கோ திட்டங்களுக்கு அவசியம் என்பதால் தொலைக்காட்சி தினம் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டது. உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் என்பன தொடர்;பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக தொலைக்காட்சி பயன்பத்தப்பட வேண்டுமென யுனெஸ்கோ தெரிவித்திருந்தது. இதன்மூலம் சிறுவர்கள் மாத்திரமன்றி இளைஞர்களையும் தெளிவுபடுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற ஊடகத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் வன்முறைகளை குறைக்கலாம். அந்த வகையில் குறித்த செயற்பாட்டை செய்யும் பெரிய பங்கை தொலைக்காட்சி வகிக்கின்றது. இந்நிலையில் உள்ளுர் சமூகங்களின் முக்கியத்துவம் மற்றும் கலாசாரங்களின் கௌரவம் அவற்றின் பாதுகாப்பு என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி படைப்புகள் அமைய வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Today marks World Television Day


உலகத் தொலைக்காட்சி தினம்
By: புன்னியாமீன்

உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் நாள் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்படுகின்றது.

'தொலைவில் தெரியும் காட்சி" என்று தொலைக்காட்சி பொருள் பட்டாலும்கூட, பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன் படுத்தப்படுகின்றது. தொலைக்காட்சி என்பது கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது;. இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும், கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தரப்படுகின்றது. நேரில் காணமுடியாத சம்பவங்களைக் கூட கண்டுகளித்திட தொலைக்காட்சி உறுதுணையாக விளங்குகின்றது என்பது மறுக்க முடியாததாகும். தொலைக்காட்சி கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
1996ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 ல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
மேற்படி கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.

இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டு பிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார்.
இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியைக் அறிமுகம் செய்தவர் என்பதினால் 'ஜோன் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார். இயந்திரத் தொலைக்காட்சியை மட்டுமல்லாமல் ரேடார் தொழில்நுட்பம்இ 'பைபர் ஆப்டிக்ஸ்" என ஜோன் லூகி ஃபெர்டு இன் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றன.

ஸ்கொட்லாந்தில் பிறந்து வளர்ந்த 'ஜோன் லூகி ஃபெர்டு"டைய ஆய்வின் அடிப்படை ஸ்கொட்லாந்திலே ஆரம்பமானது. 'இயந்திரங்கள், மோட்டார், மின்சாரம்' போன்றவற்றில் 'ஜோன் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். 'Wireless World', 'Wireless Weekly' போன்ற வாரசஞ்சிகைகளை தொடர்ந்தும் வாசித்து வந்த ஜோன் 'டெலிவிஷன்' என்ற வார்த்தையை 1900ல் பாரீஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின் பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கண்டெடுத்தார்.
'தொலைவிலிருந்து பார்ப்பது' எனப் பொருள்படும் 'டெலிவிஷன்' என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பலரும் பல அமைப்புகளும் அப்படியொரு இயந்திரத்தை உருவாக்க முனைந்திருந்திருந்தனர். இந்த வகையில் 'பால் நிப்கோ" எனும் ஜெர்மனிய ஆய்வாளரின் ஆய்வுகள் ஜோனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு விம்பத்தை மறு உருவாக்கம் செய்யும் முறையை 'பால் நிப்கோ" கண்டுபிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முழுமையான தொலைக்காட்சியை ஏன் உருவாக்க இயலாது என ஜோன் சிந்தித்து வந்தார். தனக்கிருந்த தொழில் நுட்ப அறிவினைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளில் முழு மூச்சாய் இறங்கினார். இதனைத் தொடர்ந்தே அவருடைய வாழ்க்கையில் தொழில் முறைச் சிக்கல்கள், பணப் பிரச்சனை, மனவிரக்தி ஆகிய போராட்டங்கள் ஆரம்பமாகின.

இருப்பினும் தமது முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. இலண்டனுக்குத் தெற்கே சுமார் அறுபது மைல் தொலைவில் ஜோன் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். பணப் பிரச்சினை காரணமாக ஜோனின் ஆய்வுக் கூடத்தில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களே நிறைந்திருந்தன. பொருளாதார பலத்துடன் வேறு பல விஞ்ஞானிகளும் அதே ஆய்வுகளில் ஈடுபட்டிருந்ததனால், அவர்களுக்கு முன்னர் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டிய அவசியமும் ஆர்வமும் ஜோனுக்கு இருந்தது.
நிப்கோவின் கண்டுபிடிப்பைச் சார்ந்து 'டெலிவிசர்' என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை 1923ல் ஜோன் உருவாக்கினார். 1924ல் ஜோன் இலண்டனில் குடியேறினார். அந்த வருடத்திலே ஒரு கடையில் ஜானின் 'டெலிவிசர்' பொது மக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்டது. ஒரு பொம்மையின் உருவத்தை மக்கள் திரையில் கண்டு களித்தார்கள். 1925ம் ஆண்டு அக்டோபரில் ஜோன் தனது கண்டு பிடிப்பை மேலும் மேம்படுத்தினார். விளக்கு ஒளியில் பயந்தவாறே காமிராவின் முன் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன்தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனிதன்.
1926ம் ஆண்டில் இங்கிலாந்து 'ராயல் இன்ஸ்டியூசன்' முன்பு ஜோன் தனது தொலைக்காட்சிக் கருவியை இயக்கிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து ஜோனின் ஆய்விற்குப் பிரித்தானிய தபால் நிறுவனத்தாரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிட்டியது. இலண்டனிலும் அதனருகே புறநகர் பகுதி ஒன்றிலும் ஆய்வுக்காக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைக் கட்டடங்கள் நிறுவப்பட்டன.
இதனைப் பயன்படுத்தி ஜோன் பல சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கினார். இலண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு (438 மைல் தொலைவு) தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. 1928-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து கடல் கடந்து நியூயார்க் நகருக்குத் தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
சாதனைகள் ஜோனை மக்களிடத்தில் பிரபலப்படுத்தின. வெறும் வானொலி நிலையமாய் இருந்த பி.பி.சியிடம் (பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி கேட்டபொழுது, அவரது கோரிக்கையை பி.பி.சி. நிராகரித்தது.
பி.பி.சியின் துணையில்லாமல் தன்னால் தனியே ஒளிபரப்பைத் தொடங்க முடியுமென்று கருதிய ஜோன் 1929ல் பெர்லினிலிருந்து தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தார். பத்திரிகைகளின் பலத்த கண்டனத்தினால் பி.பி.சி தனது நிலையை மாற்றிக் கொண்டு 1929 செப்டம்பரில் ஜோனுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.
1933ம் ஆண்டில் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின், கேத்தோடு டியூபைக் கண்டுபிடித்திருந்தார். அவருடைய முயற்சியினால் உருவாகிய 'All Electronic Scanning System' ஜோனின் தொலைக்காட்சியைக் காட்டிலும் தெளிவான படங்களை ஒளிபரப்பும் திறமையைக் கொண்டிருந்தது.
இதனைக் காரணம் காட்டி பி.பி.சி, ஜோனுடன் தனது உடன்படிக்கையை முறித்துக் கொண்டு புதிதாய் நிறுவப்பட்ட 'EMI' நிறுவனத்தாருடன் பி.பி.சி. தன்னை இணைத்துக் கொண்டது. ஸ்வாரிகினின் நிறுவனமான 'RCA'யும், ''EMI'யும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவையைத் தொடங்கின. உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவது இந்த மூன்று நிறுவனங்களின் நோக்கமாய் இருந்தது. இதனால் சிறு கண்டுபிடிப்பாளரான ஜோன் லூகி பெர்ட் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.


இந்நிலையில் ஜோனிற்கு 'கேமாண்ட் பிரிட்டிஷ்' என்ற நிறுவனம் உதவி செய்ய முன் வந்தது. இயந்திரத் தொலைக்காட்சியின் மூலமாகவே புதிதாய் அறிமுகமான ஸ்வாரிகின்னின் இயந்திரத்தை மிஞ்ச முடியுமென ஜோன் முழுமையாக நம்பிக்கை கொண்டார். 'கேமாண்ட் பிரிட்டிஷ்' நிறுவனம் பில்லோ ·பாரன்ஸ்வர்த் என்கிற அமெரிக்க இளைஞனை ஜோனுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த அமெரிக்க இளைஞன் 'பாரன்ஸ்வர்த்", கேத்தோட் டியூபை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த ஒளிபரப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். ஜோனும் பாரன்ஸ்வர்த்தும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டு ஜோனின் முந்தைய கண்டுபிடிப்புகளையெல்லாம் மிஞ்சும் சாதனையைச் செய்தாலும், ''EMI' நிறுவனத்தாரின் ஆய்வு, முன்னேற்றத்தில் அவர்களுக்கு ஒரு படி முன்னே இருந்தது.
1937-38 வருட வாக்கில் ஜோன் மெல்ல மெல்லத் தனது ஆய்வுகளிலிருந்து ஒதுங்கித் தனிமையில் காலங் கடத்தலானார். தொடர்ந்து அவரது முக்கிய ஆய்வகம் நெருப்பில் அழிந்து போனது. எனினும் ஜோனின் மற்றொரு கண்டுபிடிப்பான தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் பிரபலமடைந்தது. 1940ம் வருடம் ஜோனின் நிறுவனம் 'சினிமா தொலைக்காட்சி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜோனின் புது முயற்சி, இரண்டாம் உலகப் போரினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினாலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தது.

முடிவாகத் தன்னுடைய 'இயந்திரத் தொலைக்காட்சி' ஆய்வுகளைக் கைவிட்ட ஜோன், கேத்தோட் டியூப்களைக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தினார். வண்ணங்களையும் தொலைக்காட்சியில் கொண்டு வர முடியுமென ஜோன் நம்பினார். அதற்கான முயற்சிகளில் ஜோன் தீவிரமாக ஈடுபட்டு அதனை 1943ல் நிரூபிக்கவும் முயன்றார். அவருடைய முயற்சி தோல்வி எனினும் பின் வந்த காலங்களில் அவருடைய முயற்சிகளே வண்ணத் திரைக்கு அடிப்படையாக அமைந்தது. வண்ணத்திரைக்கு மட்டுமல்ல மின் (Electronic) துறையில் ஜோனின் பல முயற்சிகளே பின்னர் மற்றவர்களால் சாதனைகளாகவும் புதுக்கண்டுபிடிப்புகளாகவும் மாறின. 1946 ஜூனில் ஜோன் மரணமடைந்தார்.
இந்த அடிப்படையில் வளர்ச்சி கண்ட தொலைக் காட்சி தற்போது பல விதமான தொழிநுட்ப மாற்றங்களுடன் மிக முக்கியமான தொலைத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. தொலைநுட்பத்தில் முன்னேறியுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் நடைபெறக்கூடிய தகவல்களை காட்சியுடன் உடனுக்குடன் அனைவருக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொது ஊடகமாகவே தொலைக்காட்சி திகழ்கின்றது.
நவீன காலத்தில் சம்சொங் 102 அங்குலம், எல் ஜி 102 அங்குலம், பேனசானிக் 103 அங்குலம். இவை, பல்வேறு வணிக நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ள மிக தெளிவான plasma தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவுகளாகும். போட்டியின் முடிவில்இ 103 அங்குலம் அளவுடைய பேனசானிக் தொலைக்காட்சிப் பெட்டியே உலகில் மிக பெரிய plasma தொலைக்காட்சிப் பெட்டியாக விளங்குகிறது.
இக்காலத்தில் மிக சிறிய செல்லிட தொலைபேசியிலும் தொலைக்காட்சியை காணக்கூடியதாக உள்ளது. சம்சொங் நிறுவனம் தயாரித்த Q1 என்னும் மிக சிறிய செல்லிட கணிணியின் திரை உள்ளங்கை அளவுடையதாக மட்டுமே இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் பெரிய அன்டனாக்கள் துணையுடன் இயங்கிய தொலைக்காட்சி, கேபல் தொலைக்காட்சி, இன்று செட்லயிட் தொலைக்காட்சி என்று நாளுக்கு நாள் வடிவமைப்புக்களிலும் முன்னேறிக் கொண்டேயுள்ளது.
தொலைக்காட்சி எனும்போது மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கை, இந்திய போன்ற நாடுகளில் திரைப்படங்களையும், நாடகங்களையும், மெகா சீரில்களையும் காண்பதற்கான ஒரு ஊடகம் என்ற ரீதியில் பெரும்பாலும் கருதப்படுகின்றது. ஆனால், தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மாத்திரமல்ல. இன்றைய தொலைக்காட்சி சேவைகளில் காணப்படும் போட்டி காரணமாக நேயர்களை கவர்ந்திழுப்பதற்காக வேண்டி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும்கூட தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த பல விடயங்களும் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்வி, அறிவியல், கலாசாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம், நாட்டு நடப்புகள், நிகழ்கால விடயங்கள்... என்று பல நல்ல பக்கங்களும் காணப்படுகின்றன.
இலங்கையில் முதல் முதலாக 1978ம் ஆண்டு ஐ.டீ.என். தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் அரச தொலைக்காட்சி சேவையாக ரூபவாஹினி உள்ளது. காலப் போக்கில் தனியார் தொலைக்காட்சிகளும் தமது ஒளிபரப்புக்களைத் தொடங்க அரசாங்கங்களினால் அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரம் இலங்கையில் தற்போது 15க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சி சேவைகள். காணப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ம் ஆண்டு முதன் முதலாக டெல்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது. இந்திய நாட்டில் தூர்தர்ஷனை மட்டுமே நம்பிய காலம் மாறி இன்றைய கால கட்டத்தில் செயற்கைக் கோள் ஒளிபரப்பின் மூலம் அதிகமான அலைவரிசைகளைக் காண முடிகிறது.


புதிய அலைவரிசைகளின் பிரவேசத்தினால் வேலைவாய்ப்புக்கள், விளம்பர செயற்பாடுகள் என்றும் இல்லாத அளவிற்கு பல்கிப் பெருகின என்றும் கூறலாம். அநேகம் பேர் தனியார் தொலைக்காட்சிகளிலும் பணிபுரியலாயினர். ஊர்கள் தோறும் கேபிள் டி.வி. வைத்து தொழில் தொடங்கி வரும் பலரும் நன்மை அடைந்தனர்.
விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது "சமுதாய அலைவாங்கித் தொலைக்காட்சி ''(Community Antenna T.V.--CAT)" என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர். பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது- விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.
எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றித் தொடர்ந்து பார்ப்பவர்களது கண்கள் பாதிப்படைகின்றன என்றும் கூறப்படுகின்றது. இளைஞர்களது கவனம், கற்கை நெறிகளிலிருந்து சிறிது மாற்றம் பெறுவதையும் கவனிக்கலாம்.
புதிய சினிமாப்படங்கள் கேபிள் டி.வி. மூலம் போடப்படுவதினால் திரைப்பட இயக்குநர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்.


Today marks World Television Day

The United Nations’ (UN) World Television Day is annually observed in many places around the world on November 21. The day recognizes that television plays a major role in presenting different issues that affect people.  The UN acknowledges that television can be used to educate many people about the world, its issues and real stories that happen on the planet. Television is one of the most influential forms of media for communication and information dissemination. It is used to broadcast freedom of expressions and to increase cultural diversity. The UN realized that television played a major role in presenting global issues affecting people and this needed to be addressed.  On December 17, 1996, UN General Assembly proclaimed November 21 as World Television Day to commemorate the date on which the first World Television Forum was held earlier that year. The UN invited all member states to observe the day by encouraging global exchanges of television programs focusing, among other things, on issues such as peace, security, economic and social development and cultural change enhancements.  World Television Day is a global observance and not a public holiday.

ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம் - நவம்பர் 19.



ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம் - நவம்பர் 19.

வாரணாசியில் பிறந் தவர். இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.

1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.

ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.

கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.

தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.

அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.

அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.

அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.

ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.

அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது.

சனி, 18 நவம்பர், 2017

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம் நவம்பர் 19 , 1917



இந்தியாவின் முன்னாள்  பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்  நவம்பர் 19 , 1917


பதவியில்
14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
குடியரசுத் தலைவர்
நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜெயில் சிங்
முன்னவர் செளதரி சரன் சிங்
பின்வந்தவர் ராஜீவ் காந்தி
பதவியில்
24 சனவரி 1966 – 24 மார்ச் 1977
குடியரசுத் தலைவர்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஜாகீர் உசேன்
வி. வி. கிரி
பக்ருதின் அலி அகமது
முன்னவர் குல்சாரிலால் நந்தா
பின்வந்தவர் மொரார்ஜி தேசாய்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
9 மார்ச் 1984 – 31 அக்டோபர் 1984
முன்னவர் நரசிம்ம ராவ்
பின்வந்தவர் ராஜீவ் காந்தி
பதவியில்
22 ஆகத்து 1967 – 14 மார்ச் 1969
முன்னவர் எம். சி. சாக்ளா
பின்வந்தவர் தினேஷ் சிங்
நிதியமைச்சர்
பதவியில்
26 சூன் 1970 – 29 ஏப்ரல் 1971
முன்னவர் மொரார்ஜி தேசாய்
பின்வந்தவர் ஒய். பி. சவாண்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 19 , 1917
அலகாபாத் , ஐக்கிய மாநிலங்கள்,
பிரித்தானிய இந்தியா
இறப்பு 31 அக்டோபர் 1984 (அகவை 66)
புதுதில்லி , தில்லி ,
இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்)
பெரோஸ் காந்தி
பிள்ளைகள் ராஜீவ் காந்தி
சஞ்சய் காந்தி
படித்த கல்வி நிறுவனங்கள்
சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
சமயம் இந்து சமயம்


இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24
1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.
ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.
1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.
1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.
எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.
எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இளமை
காந்தியுடன் சிறுமி இந்திரா
நேரு குடும்பம் - மத்தியில் இருப்பவர் மோதிலால் நேரு, (இடமிருந்து வலமாக) நிற்பவர்கள்,
ஜவஹர்லால் நேரு , விஜயலக்ஷ்மி பண்டிட் , கிருஷ்ணா ஹூதீசிங்க, இந்திரா மற்றும் ரஞ்சித் பண்டிட்; அமர்ந்திருப்பவர்கள்: சுவரூப ராணி, மோதிலால் நேரு மற்றும்
கமலா நேரு 1927களில்.
இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும் , கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை
ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார்.
நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது.
நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது.
ஐரோப்பாவில் கல்வி
1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் , சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.
1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள்.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார்.

பெரோஸ் காந்தியுடன் திருமணம்
இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள். [4] பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள். [6] சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார்.

அரசியல் ஈடுபாடு
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்
இந்திரா மற்றும் மகாத்மா காந்தி ( 1930களில்)
1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார். [7] இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா
மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
முதன்மை கட்டுரை: இந்திய-பாகிஸ்தான் போர், 1965
1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி
ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்
ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில்
தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின்
அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.
பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில்
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார்.
மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார்.
தலைமை அமைச்சர்
முதல் பதவிகாலம்
1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான
பொதுவுடைமைவாதிகள் மற்றும்
மொரார்ஜி தேசாய் தலைமையிலான
பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார். [10]
இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545 மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார்.
1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம்
முதன்மை கட்டுரை: இந்திய-பாகிஸ்தான் போர், 1971
பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது. கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின்
வெளியுறவுத்துறை அமைச்சரான
ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். [13] . இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது.
வெளிநாட்டு கொள்கை
1971ல் ரிச்சர்டு நிக்சனும், இந்திராகாந்தியும்
இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு
சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன.
இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள்,
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர்
பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000
போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன்
பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.
ரூபாய் மறுமதிப்பீடு
1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது.
அணு ஆயுதங்கள் திட்டம்
சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில்
பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.
பசுமை புரட்சி
முதன்மை கட்டுரை: பசுமைப் புரட்சி
1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவின் கடுமையான நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது.
கோதுமை , அரிசி , பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது.
1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார். இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது:
1. புதிய வகை விதைகள்,
2. இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற
3. புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு
4. உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம். [16]
சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை , கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன.
1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975)
1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள்.
உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது." [17]
. வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும்
1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார். [18] 1971 பாராளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார்.
ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் பாராளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் ( இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (பாராளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவால் பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும்
இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு" [19] உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், பாராளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன.
இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த
சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண் , சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர்.
நாட்டின் அவசரகால நிலை (1975–1977)
முதன்மை கட்டுரை: நெருக்கடி நிலை (இந்தியா)
தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது , நாட்டில்
அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார்.
சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த
குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. [20] ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார்.
தீர்ப்பின்படி ஆட்சி
தீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன.
தேர்தல்கள்
அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர்
ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும்.
நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம்
1984 சோவியத் ஒன்றியத்தின் நினைவு அஞ்சல்தலை
1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம் , பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி பாராளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது.
பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி
சௌத்ரி சரண் சிங் , பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது.
இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது.
1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம்
விடுதலைப்புலிகளிற்கும் , இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது.

மூன்றாம் பதவி காலம்
செலாவணி நெருக்கடி
1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது.
பஞ்சாப் நடவடிக்கை
ஹர்மிந்தர் சாஹிப், சிர்கா 1870
முதன்மை கட்டுரை: புளூஸ்டார் நடவடிக்கை
இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள்
பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான
பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது. இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம். [24] உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார்.
படுகொலை
முதன்மை கட்டுரை: இந்திராகாந்தி படுகொலை
தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர்
பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள்[25] சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார்.
சொந்த வாழ்க்கை
நேரு-காந்தி குடும்பம்
இந்திராகாந்தியின் தனிப்பட்ட நூலகம்
பிரோஜ்காந்தியுடன் இந்திரா - ஓவியம்
தொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த
ராஜீவ்காந்தியை , விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது
தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி , 2004
மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார்.
சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; முன்னாள் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தற்போது இந்திய அமைச்சரவைக்குத் தலைமையேற்றுள்ளார். ராஜீவின் குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும்
பிரியங்கா காந்தி வாத்ராவும் அரசியலில் இறங்கியுள்ளனர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்) [26] , சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முரண்பாடுகள்
மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.

உலகக் கழிவறை நாள் ( World toilet day ) நவம்பர் 19.


உலகக் கழிவறை நாள் ( World toilet day )  நவம்பர் 19.

உலகக் கழிவறை நாள் ( World toilet day ) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.



உலகக் கழிவறை நாள்: நவம்பர் 19

இந்தியாவில் 52 சதவீதத்துக்கும் அதிகமானோர் அடிப்படைத் தேவையான கழிப்பறை இன்றி இருப்பதாகக் கடந்த ஆண்டு வெளியான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது.

விளிம்பில்லாக் கோப்பை
விளிம்பில்லாக் கோப்பை
இந்திய மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் திறந்தவெளியைத்தான் கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதில்தான் இருக்கிறது.

ஆங்கிலோ இந்தியக் கோப்பை
ஆங்கிலோ இந்தியக் கோப்பை
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்கிறது ஐநாவின் அறிக்கை. ஆனால், கழிவறைப் பயன்பாடு அந்த அளவில் அதிகரிக்கவில்லை.

ஸ்மார்ட் கோப்பை
ஸ்மார்ட் கோப்பை
மத்திய அரசு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமான கழிவறைகளைக் கட்டியது. வருங்காலத்தில் கழிவறைப் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில்லாக் கோப்பை
தண்ணீரில்லாக் கோப்பை
கழிவறைப் பற்றாக்குறை அரசுப் பள்ளிகளிலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதி இல்லை.

இந்தியக் கோப்பை

குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறை அத்தியாவசியமானது.

நகரும் கோப்பை
தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாகக் கழிவறை இருந்தும் பராமரிப்பின்றிப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதற்காகத் தண்ணீர் இல்லாத கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு பரவலாக வேண்டும். பல வகைக் கழிவறைகள் இங்கே ஒளிப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.





உலக ஆண்கள் நாள் ( International Men's Day) நவம்பர் 19 .




உலக ஆண்கள் நாள் ( International Men's Day) நவம்பர்  19  .

 உலக ஆண்கள் நாள் ( International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.

யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.


ஆண்களுக்கு ஒரு தினம் – ஏன்?
இன்று ‘சர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19). எதற்கு ஆண்களுக்கு என்று ஒரு தினம்? இந்த தினத்தின்முக்கியத்துவம் என்ன?
‘சர்வதேச பெண்கள் தினம்’ (மார்ச் 8) பிரபலம் அடைந்த அளவுக்கு, ஆண்கள் தினம் அவ்வளவு பிரபலமாகவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கான கொண்டாட்டங்கள், வருடா வருடம் அதிகரித்து வருகின்றன.
இதைப் பற்றிய ஒரு பார்வை…
IMD (International men’s Day) உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தினமாகக் குறிப்பிடப்படுகிறது.
உண்மையில் 1960களிலேயே ‘ஆண்கள் தினம்’ தேவை என்ற அறை கூவல்கள் தொடங்கிவிட்டன. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால் முதன் முதலில் இதற்கான விதை விதைக்கப்பட்டது. எனினும், சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது.
இந்தியாவில், முதன் முதலில் 2007ம் வருடம் ‘ஆண்கள் உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது. 2009ம் வருடம் முதல், ஆண்களின் பிரத்யேக ஆடைத் தயாரிப்பு நிறுவனமான ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடுபிடித்துவருகின்றன.
இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் யாதெனில் –
சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துவது.
சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தை – மகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி,விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க விழையும் முயற்சி ஆகும்.
இப்படிப்பட்ட தினங்களை கடைப்பிடிப்பது ,
இனப் பாகுபாடுகளை கடந்து,
பாலின உறவுகளை மேம்படுத்தி,
ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து
பெண்கள் மற்றும் சக மனிதர்களை பரஸ்பரம் மதித்து பல முன் மாதிரியான ஆண்களை உருவாக்க ஏதுவாகும்.
இந்த கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் மற்றும் இணையம் தாண்டியும் வாழும் ஆண் குலத்துக்கும் ‘குங்குமம் தோழி’யின் இனிய ‘ஆண்கள் தின வாழ்த்துகள்.’ மேம்பட்ட மனித உறவுகளால் அமைந்த ஒரு சிறந்த சமுதாயமே நம் வருங்கால சந்த்தியினருக்கு நாம் அளிக்கும் கொடை. மனிதம் வளர்ப்போம்!

வெள்ளி, 17 நவம்பர், 2017

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு தினம் நவம்பர் 18, 1936.



 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு தினம்  நவம்பர் 18, 1936.

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: செப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்,
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: நவம்பர் 18, 1936
தொழில்: வக்கீல், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.
குழந்தை பருவமும் சட்டத்துறையும்
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.
சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.
கப்பல் நிறுவனம்
இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன், இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர் முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.
தேசிய மனப்பான்மை
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர், அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.
சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில் ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால், அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிiய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.


இலக்கிய படைப்புகள்
அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இறப்பு
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று விட்டார்.
நினைவஞ்சலி
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.
‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.
சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.
செப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.
கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.
விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.
‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.
காலவரிசை
1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.
1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.
1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.
1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.
1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.
1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.
1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.
1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.


இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு.


தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார்.
அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர். வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பிவருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.
வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்!
வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.
இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி
ரூ. 200-தான்! சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார். சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே!” என்று கர்ஜித்தார். சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது. ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர். வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.

பற்றியெரிந்த திருநெல்வேலி
தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள். இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது. வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.
முடக்கிப்போட்ட சிறை
ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடுசெய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாதபோது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார். சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பிவைத்தார் நெல்லையப்பர்.
விடுதலைக்குப் பின்னரும் துயரம்
1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள்
தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.
சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.
இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.
தமிழ்ப் பணி
பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.
வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார். வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது. இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக மட்டுமல்லாமல் கப்பலோட்டிய இந்தியராகவும் கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி.!

வியாழன், 16 நவம்பர், 2017

சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day) நவம்பர் 17.



சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day) நவம்பர் 17.

செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது. நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 சர்வதேச மாணவர் தினம்(November 17)

அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.
வரலாறு

1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

உலக குறைப்பிரசவ குழந்தை தினம் - நவம்பர் 17.



உலக குறைப்பிரசவ குழந்தை தினம் - நவம்பர் 17.

உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

குறைப்பிரசவ குழந்தை பிறக்க இதுதான் காரணம் #WorldPrematurityDay!

உலகம் முழுவதும் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பதாகவும், மேலும் ஒரு மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தால் இறப்பதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. குறைமாத பிரசவம் என்பது முழுமையான கர்ப்ப காலத்திலிருந்து முன்கூட்டியே பிரசவிக்கும் பிரசவம் ஆகும். பொதுவாக பிரசவ காலம் என்பது 40 வாரங்கள். இதில் 40 வாரங்களுக்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவக் குழந்தைகளாக கருதப்படுவர். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்கள் குறைமாத பிரசவங்கள் ஆகும்.மேலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைளுக்கு எடை குறைவு காரணமாக உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.


எனவே, இவர்களை தீவிரமாக கண்கானிக்க வேண்டியது அவசியம். சிசுவை சுற்றியுள்ள பனிக்குடம் வெடிப்பது, முந்தைய குறை பிரசவ நிகழ்வு, தாயின் சீரற்ற உணவு பழக்கம், உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல், மரபணு குறைபாடுகள் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். மேலும், போலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி குறைவு, ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் குறைப்பிரசவத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு தாயின் பங்களிப்பு மிகப்பெரும் காரணியாகும். தாய் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து, உறக்கம் வரை சீராக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் தாயின் உடல் எடை 40 கிலோவிற்கு குறையாமல் இருப்பது நல்லது.
தலைப் பிரசவமே குறைப்பிரசவமாக இருந்தால் அடுத்ததாக பிறக்கும் குழந்தையும் குறைப்பிரசவமாக அமைய வாய்ப்பு உள்ளது. தாய்மை அடைந்த பெண் உண்ணும் உணவில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், குறைப்பிரசவத்திற்கு ஹார்மோன் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
ஹார்மோனின் சமநிலையில் மாறுபாடு ஏற்படும்பொழுது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தவறாமல் தானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், உலர் பழங்கள், கேரட், பீட்ருட், கீரை, பால் சார்ந்த உணவுகள், மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் வாயிலாக பால் சுரப்பு நார்மலா இருக்கும். குறைப்பிரசவக் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு சில நேரங்களில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும்.


மேற்கண்டவைகளை உணவில் சேர்த்துவர பால் சுரப்பு நார்மலாக இருக்கும். குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறல், இரத்த ஓட்டப் பாதிப்பு, மஞ்சள் காமாலை, தொற்றுநோய்களும் ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், சந்தோஷமான மனநிலை, நிம்மதியான தூக்கம், மனக்கவலை இன்றி இருத்தல் போன்றவற்றால் குழந்தைப் பிறப்பு எளிதாகும் எந்த பிரச்னைகளும் இல்லாமல். நன்றி விகடன்.