வியாழன், 12 ஏப்ரல், 2018

தமிழ்ப் புத்தாண்டு



தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

வரலாறு

தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு
சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேசத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேசமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம் , பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி  முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின் திருக்கோணேச்சரம் , 1622ஆம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடப்பட்டதாக
போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்கின்றன.

மரபுகள்

தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது
கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.
போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல் , யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.

தைப்புத்தாண்டு சர்ச்சை

தைப்புத்தாண்டு
முதன்மை கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு , 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் , ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் [10] தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில்
மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும் , சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.  இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்  1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்

கன்னடத்து அலசூர் சோமேச்சரத்தில் 1876இல் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு. இதில் அறுபது ஆண்டில் பத்தாவதான தாது ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அறுபது ஆண்டுகள் ( ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம் ) பெரும்பாலான
இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
இந்துக் காலக் கணிப்பு முறையில் , இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு.
பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
வரலாறு
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்) [1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது. [2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன. [3] ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும். [
தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. [5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது. [6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு. [8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது. [9]
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது. [10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.

பட்டியல்
எண். பெயர் பெயர் (தமிழில்)
பெயர் (ஆங்கிலத்தில்)
கிரகோரி ஆண்டு எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்)
கிரகோரி ஆண்டு
01. பிரபவ நற்றோன்றல் Prabhava 1987–1988 31. ஹேவிளம்பி பொற்றடை Hevilambi 2017–2018
02. விபவ உயர்தோன்றல் Vibhava 1988–1989 32. விளம்பி அட்டி Vilambi 2018–2019
03. சுக்ல வெள்ளொளி Sukla 1989–1990 33. விகாரி எழில்மாறல் Vikari 2019–2020
04. பிரமோதூத பேருவகை Pramodoota 1990–1991 34. சார்வரி வீறியெழல் Sarvari 2020–2021
05. பிரசோற்பத்தி மக்கட்செல்வம் Prachorpaththi 1991–1992 35. பிலவ கீழறை Plava 2021–2022
06. ஆங்கீரச அயல்முனி Aangirasa 1992–1993 36. சுபகிருது நற்செய்கை Subakrith 2022–2023
07. ஸ்ரீமுக திருமுகம் Srimukha 1993–1994 37. சோபகிருது மங்கலம் Sobakrith 2023–2024
08. பவ தோற்றம் Bhava 1994–1995 38. குரோதி பகைக்கேடு Krodhi 2024–2025
09. யுவ இளமை Yuva 1995–1996 39. விசுவாசுவ உலகநிறைவு Visuvaasuva 2025–2026
10. தாது மாழை Dhaatu 1996–1997 40. பரபாவ அருட்டோற்றம் Parabhaava 2026–2027
11. ஈஸ்வர ஈச்சுரம் Eesvara 1997–1998 41. பிலவங்க நச்சுப்புழை Plavanga 2027–2028
12. வெகுதானிய கூலவளம் Bahudhanya 1998–1999 42. கீலக பிணைவிரகு Keelaka 2028–2029
13. பிரமாதி முன்மை Pramathi 1999–2000 43. சௌமிய அழகு Saumya 2029–2030
14. விக்கிரம நேர்நிரல் Vikrama 2000–2001 44. சாதாரண பொதுநிலை Sadharana 2030–2031
15. விஷு விளைபயன் Vishu 2001–2002 45. விரோதகிருது இகல்வீறு Virodhikrithu 2031–2032
16. சித்திரபானு ஓவியக்கதிர் Chitrabaanu 2002–2003 46. பரிதாபி கழிவிரக்கம் Paridhaabi 2032–2033
17. சுபானு நற்கதிர் Subhaanu 2003–2004 47. பிரமாதீச நற்றலைமை Pramaadhisa 2033–2034
18. தாரண தாங்கெழில் Dhaarana 2004–2005 48. ஆனந்த பெருமகிழ்ச்சி Aanandha 2034–2035
19. பார்த்திப நிலவரையன் Paarthiba 2005–2006 49. ராட்சச பெருமறம் Rakshasa 2035–2036
20. விய விரிமாண்பு Viya 2006–2007 50. நள தாமரை Nala 2036–2037
21. சர்வசித்து
முற்றறிவு யாவுந்திறல்
[13] Sarvajith 2007–2008 51. பிங்கள பொன்மை Pingala 2037–2038
22. சர்வதாரி முழுநிறைவு Sarvadhari 2008–2009 52. காளயுக்தி கருமைவீச்சு Kalayukthi 2038–2039
23. விரோதி தீர்பகை Virodhi 2009–2010 53. சித்தார்த்தி முன்னியமுடிதல் Siddharthi 2039–2040
24. விக்ருதி வளமாற்றம் Vikruthi 2010–2011 54. ரௌத்திரி அழலி Raudhri 2040–2041
25. கர செய்நேர்த்தி Kara 2011–2012 55. துன்மதி கொடுமதி Dunmathi 2041–2042
26. நந்தன நற்குழவி Nandhana 2012–2013 56. துந்துபி பேரிகை Dhundubhi 2042–2043
27. விஜய உயர்வாகை Vijaya 2013–2014 57. ருத்ரோத்காரி ஒடுங்கி Rudhrodhgaari 2043–2044
28. ஜய வாகை Jaya 2014–2015 58. ரக்தாட்சி செம்மை Raktakshi 2044–2045
29. மன்மத காதன்மை Manmatha 2015–2016 59. குரோதன எதிரேற்றம் Krodhana 2045–2046
30. துன்முகி வெம்முகம் Dhunmuki 2016–2017 60. அட்சய வளங்கலன் Akshaya 2046–2047

இம் முறையிலுள்ள குறைபாடுகள்
வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம் , தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது
இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு , சாலிவாகன சகாப்தம் , விக்கிரம ஆண்டு , கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.


முதன்மை கட்டுரை: தமிழ் ஆண்டுகள்

சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.  சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.  இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.


தமிழ்ப் புத்தாண்டு அரசியல்!

திமுக ஆட்சியின்போது செய்யப்பட்ட தமிழ் புத்தாண்டு மாறுதல் ஏன் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை? தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் தேதி என்ற நடைமுறையை மாற்றி, தை முதல் தேதியே இனி தமிழ் புத்தாண்டு தினம் என திமுக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
 தமிழறிஞர்கள், தமிழ் மொழி, தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த அறிஞர்களின் கருத்தின்படி இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வந்த அதிமுக அரசு அதை மாற்றி சித்திரையையே தொடர செய்தது.
சித்திரை முதலான மாதங்கள் தமிழில் வழக்கத்திற்கு வந்ததற்கு முன் மேழம் முதல் மீனம் வரையான மாதங்கள் வழக்கிலிருந்ததாக தமிழறிஞர்கள் கருதுகின்றனர். எனினும் தமிழகத்தின் வரலாற்று தொடக்க காலமாகிய சங்க காலத்திலிருந்தே சித்திரை முதலான மாதங்கள் வழக்கிலிருந்தன. சங்க இலக்கியங்களில் இப்பெயர்களே பயன்படுத்தபட்டுள்ளன. சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களில் முதல் மாதம் சித்திரையா? தையா? என்பதில் தமிழறிஞர்களுக்குள் சர்ச்சை இருந்து வந்திருக்கிறது.
தையில்தான் தமிழ் புத்தாண்டு தொடங்க வேண்டும் என்பவர்கள் பல்வேறு ஆதாரங்களை கொடுக்கின்றனர்.
1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப்படுகிறது.
2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது
3.பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப்படுகிறது
4.தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தை புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது
5.சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் சமஸ்கிருதம் இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும்
6. "நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு''
-என்ற பாரதிதாசன் பாடலை, தைதான் புத்தாண்டாக வேண்டும் என குரல் எழுப்புபவர்கள் தங்களுக்கு சாதகமான முழக்கமாக இணைத்துக்கொள்கின்றனர். இதற்கு மாறாக சித்திரையே தமிழ் புத்தாண்டின் முதலாக தொடரவேண்டும் என்பவர்களின் கருத்துக்களும் ஆணித்தரமாகவே உளளன.
சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டு டன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத் தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக் கியங்களில் காணப்படவில்லை.
எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும், புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.
அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டி தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில், தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது, பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை அதாவது 360 பாகைகளை, 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம். கி.பி. 998 ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல் வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 -161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண் டின் தொடக்கமாகும்.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்வீகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி எழுதி இருப்பவர்கள் பெரும்பாலும், ஹிந்து மதத்திற்கு எதிரானவர்களா கவும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றுவர்களாக வும் இருக்கிறார்கள் என்பதே.
இதனாலேயே தை முதல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்ட மும் பெரும்பான்மையான தமிழர்களிடம் எடுபடாமல் போய்விட்டது.


தமிழ் புத்தாண்டு பிறப்பு மற்றும் வழிபாடு...

சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.
புதுவருட விழாவானது; உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமையங்களின் நியதிகளுக்கு அமைவாக புதுவருடத்தினை கொண்டாடுகின்றார்கள். அதற்கேற்ப சித்திரைமாத முதல் நாளை இந்து சமயத்தைப் பின்பற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
புதுவருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்) மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மருந்து நீர்

மருந்து நீர் வைத்தல் என்பது முக்கிய விஷயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருந்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருந்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.
விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும். தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.
அதன் காரணமாக இப்புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். மருதடி விநாயகர் ஆலயம் தற்போழுது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று வருவதனால் அலங்காரத் திருவிழா நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

புத்தாடை தரிசனம்

ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும். பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு

வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது. வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது.
சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும். சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது
ஐதீகம்.
இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

புதுவருட தினத்தில் செய்ய வேண்டியவை :

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அறுசுவை உணவு

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

கலை கலாச்சார நிகழ்வுகள்

நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும். இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.

புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது. குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும்.
புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.
புதுவருடம் பிறந்ததன் பின் பஞ்சாங்க கணிப்பின்படி சுப தினத்தில் சுப நேரத்தில் தொழிலிலுக்குச் செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாரும், ஆரம்ப காலத்தில் முற்றத்தில் விளக்கேற்றி வைத்து, அதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மண்வெட்டியைக் கொண்டு வீட்டின் தந்தை மண்ணை வெட்டி கத்தியால் ஒரு பிலா மரத்தின் கிளையினை வெட்டுவதே வழக்கத்தில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்தந்த ஆண்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட வர்ண உடைகளை அணிந்து, சுப திசை சுப நேரம் ஆகியவற்றுக்கு அமைய அலுவலகத்திற்குச் செல்வதே வழக்கமாகி விட்டது.
வருடப்பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்தநாள். அதை நம் மனம் போல மாற்றிக் கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியுமா? அதுபோலத்தான். நாம் என்றைக்குப் பிறந்தோம் என்பதை நம் பெற்றோர் சொன்னதைக் கேட்டுத்தான் நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் பிறந்தது முதல் நம் பெற்றோர் நம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு வரவே, நம்முடைய பிறந்த நாள் என்றைக்கு வருகிறது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே வருஷம் பிறக்கும் நாளை சித்திரை மாதத்தில் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கொண்டாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அதை அப்படியே பின்பற்றி, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஏப்ரல் 12 .



மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஏப்ரல் 12 .

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ( International Day of Human Space Flight ) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த
உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது .

உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இன்று சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்


 ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக (International Day of Human Space, April 12) உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும்.
மனித விண்வெளிப் பயணத்துக்கான உலக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதி கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. ரஷியாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி நாள் காரணம்...
ஏப்ரல் 12 ஆம் தேதியை மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணம் விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப் பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைந்ததுதான்.
மேகம்... மேகம் தூரம் போகும், மேஜிக் ஜர்னி...
ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12 வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷியாவில் ஏப்ரல் 12 தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.
ககாரின்...
யூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷியாவில் மொஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934, மார்ச் 9 இல் பிறந்தார். இவர் பிறந்த இப்பிரதேசம் பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டில் காலமானார்).
சொந்தவாழ்க்கை...
இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணையில் வேலை பார்த்தார்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதி நேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பள்ளிக் கூடத்தில் (Flight Orenburg Pilot's School)இல் இணைந்து மிக்- 15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். 1957 ம் ஆண்டில் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்தார். நோர்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் பணியை ஆரம்பித்தார்.
20ல் ஒருவர்....
1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதில், 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன.
விண்வெளியில் பறந்த முதல்நபர்....
கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வானார்கள். ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்ப தேர்வு செய்யப்பட்டார்.
சுத்தி... சுத்தி வந்தாராம்
யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக் விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.
உலகை விட்டுப் பறந்தார்...
1968 மாதம் 27 தேதிககாரின் ஓட்டி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. சாதனை படைத்த ககாரின் தனது 34 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். யூரி ககாரின் மிகக் குறுகிய காலம் இவ்வுலகில் வாழ்ந்த போதிலும் அவர் பெயர் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது.

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் ( International Day for Street Children ) ஏப்ரல் 12


வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children ) ஏப்ரல் 12 

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children ) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள
வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ ,
உகாண்டா , எத்தியோப்பியா ,
குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

புதன், 11 ஏப்ரல், 2018

உலக பார்க்கின்சன் தினம் ஏப்ரல் 11.


உலக பார்க்கின்சன் தினம் ஏப்ரல் 11.

ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிறந்தார்.

இவர் தான் பார்க்கின்சன் நோய் அதன் அறிகுறிகள் விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.

இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans) முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது "பார்க்கின்சன் நோய்" என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது 69வது வயதில் (1824) மறைந்தார்.


பல்துறை ஆளுமை பார்க்கின்சன்

பார்க்கின்சன் என்ற நோய் பற்றியும், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்தும் உலகிற்கு முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட அறுவை சிகிச்சை மருத்துவ மேதை ஜேம்ஸ் பார்க்கின்சன். இவர் 1755ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது தந்தை அறுவை சிகிச்சை நிபுணர்.

ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது ஆரம்பக் கல்வியை திறம்பட முடித்துவிட்டு, லண்டன் மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியிலும் படித்து மருத்துவர் பட்டம் பெற்றார்.

மருத்துவத்துறையில் தன்னை முழுமனதோடு ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். புவி அமைப்பியல், தொல்லுயிரியல் மட்டுமின்றி, அரசியலிலும் பார்க்கின்சனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.

பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார். ‘ஓல்ட் ஹப்பர்ட்’ என்ற புனைப்பெயரில்  பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1799-1807 ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் மருத்துவத்தின் பக்கம் திரும்பினார். கீல்வாதம், கிழிந்த குடல்வால் (Raptured Appendix) உள்ளிட்டவை குறித்து பல மருத்துவக் கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.

பொது சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துவதில் தனி அக்கறை செலுத்தினார். அரசியலைப் போலவே தீவிரத் தன்மையுடன் பல மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தார்.  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்புக்காகப் போராடினார்.

 அந்தக் காலகட்டத்தில்தான்,  பக்கவாத நடுக்கம் வந்து அவதிப்படும் பலரைக் கண்ட ஜேம்ஸ் பார்க்கின்சன் மனம் வருந்தினார். இந்த நோய் எதனால் வருகிறது என ஆய்வு  மேற்கொண்டார். இந்த பக்கவாத நடுக்கம் மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். இந்த நோய்க்கு முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்பட்டது.

மருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட களங்களான புவி அமைப்பியல், தொல்லுயிரியல் மீது இவரது கவனம் திரும்பியது. இந்தத் துறைகளில் அதிக புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ‘ஆர்கானிக் ரிமைன்ஸ் ஆஃப் எ ஃபார்மர் வேர்ல்டு’ என்ற நூலின் முதல் பகுதியை 1804ம் ஆண்டு வெளியிட்டார்.

1808ம் ஆண்டு மற்றும் 1811ம் ஆண்டு அடுத்தடுத்த பகுதிகள் வெளிவந்து உலகப் புகழ் பெற்றது இந்த நூல்.பலவேறு திறமைகளைக் கொண்ட இவர் 1824ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.  இவரது பிறந்த தினமான ஏப்ரல் 11, உலக பார்க்கின்சன் தினமாக கடை பிடிக்கப்படுகிறது.


ஜேம்ஸ் பார்க்கின்சன் 10


இங்கிலாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1755) பிறந்தவர். அறுவை சிகிச்சை நிபுணரான தந்தை, மருந்துகள் தயாரித்தும் விற்பனை செய்துவந்தார். பார்க்கின்சன் சிறு வயதிலேயே லத்தீன், கிரேக்கம், இயற்கை தத்துவம், சுருக்கெழுத்து கற்றார்.

 லண்டன் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியிலும் பயின்றார். தந்தைபோல இவரும் அறுவை சிகிச்சை நிபுணரானார்.

 மருத்துவத் தொழிலில் சிறப்பாகப் பணிபுரிந்த இவர், பன்முகத் திறனும் பரந்த கண்ணோட்டங்களும் கொண்டிருந்தார். புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மட்டுமின்றி அரசியலிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.

 பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். ‘ஓல்ட் ஹப்பர்ட்’ என்ற புனைப்பெயரில் இதுபற்றி பல கட்டுரைகள் எழுதினார். சமூக சீர்திருத்தங்களும் அவற்றுக்கு உலகளாவிய அங்கீகாரமும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட.

 1799-1807 காலகட்டத்தில் இவரது கவனம் கொந்தளிப்பான அரசியல் களத்தில் இருந்து மீண்டும் மருத்துவத்தின் பக்கம் திரும்பியது. கீல்வாதம், கிழிந்த குடல்வால் (Raptured Appendix) உள்ளிட்டவை குறித்து பல மருத்துவக் கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.

 மக்களின் பொது சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்து வதில் முனைந்து செயல்பட்டார். அரசியல்போல, அதே தீவிரத்தன்மையுடன் பல மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்புக்காகப் போராடினார்.

 பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதன்முதலாக முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்றுதான் பெயரிட்டார். பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

 மருத்துவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட களங்களான புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மீது இவரது கவனம் திரும்பியது. இதுபற்றி ஆராய்ந்து பல்வேறு தாவரங்கள், விலங்குகளின் மாதிரிகளை சேகரித்தார்.

 புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் துறையில் அதிக புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ‘ஆர்கானிக் ரிமைன்ஸ் ஆஃப் எ ஃபார்மர் வேர்ல்டு’ என்ற நூலின் முதல் பகுதியை 1804-ல் வெளியிட்டார். 1808 மற்றும் 1811-ல் அடுத்தடுத்த பகுதிகள் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன.

 ஆண்டுதோறும் இவரது பிறந்த தினமான ஏப்ரல் 11-ம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 69 வயதில் (1824) மறைந்தார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்த தினம் ஏப்ரல் 11 , 1827.


மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே பிறந்த தினம் ஏப்ரல் 11 , 1827.

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே ( மராத்தி: जोतीबा गोविंदराव फुले
ஆங்கிலம் : Mahatma Jyotirao Govindrao Phule )
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி . சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857
சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.
1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.

முழுப் பெயர் ஜோதிபா கோவிந்த ராவ் புலே
பிறப்பு ஏப்ரல் 11 , 1827
கட்கன், சதாரா , மஹாராஸ்டிரா , இந்தியா .
இறப்பு நவம்பர் 28, 1890 (அகவை 63)
பூனே , மஹாராஸ்டிரா, இந்தியா
காலம் 19 ஆம் நூற்றாண்டு தத்துவம்
பகுதி இந்தியா
சிந்தனை மரபுகள் இந்திய தத்துவம்
முக்கிய ஆர்வங்கள் நன்னெறி , சமயம், மனிதநேயம்


வாழ்க்கை

அக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

பெண் உரிமை போராளி

மனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.


சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிபாபூலே...

புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது. ஆனால் தனது சமகாலத்தவரை விட புலே மிகவும் முற்போக்காக இருந்தார் எனத் தெரிகிறது.
மனுசாஸ்திரம் எல்லாப் பெண்களையும், ஜாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்துள்ளார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார்.
ஒரு பிராமண விதவையின் மகனை தனது மகனாக புலே தத்தெடுத்தார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரஸ்வட் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கிய பங்கு புலேயினுடையது. பிராமண சாஸ்திரத்தின் படி அக்காலத்தில் விதவைகள் தங்களது தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். மனித நேயமில்லாத இந்தப் பழக்கத்தை எதிர்த்து சவரத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தத்தை நடத்தினார், தாராபாய் ஷிண்டே..
1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.
பெண்களின் பிரச்சினையை பிராமண சூத்திராதி சூத்திரர்களின் பிரச்சினையாக புலே பார்க்கவில்லை. தனது சத்திய தர்மாபுஸ்தக் என்ற நூலில் எல்லா பெண்களும், ஆண்களும் ஒன்றே (சர்வ எகாண்டர் ஸ்திரீபுருஷ்) என்று பேசுகிறார். ஆண் – பெண் இருவருக்கும் பொதுவாக சமமான மனித உரிமைகள் தேவை என்று கூறும்போது, ஆண் – பெண் (ஸ்திரி – புருஷ்) என்று வேறுபாட்டினை காட்டும்படியான சொல்லைப் பயன்படுத்துகிறார். மனிதம் என்று பொதுவான வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை என்று கெய்ல் ஓம்வெட் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவிலேயே இதுபோல் முதன் முதலாக செய்தவர் புலே மட்டுமே.
ஆண் வழிச் சமுதாயம் பற்றி புலே பேசவில்லை. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு நிலை பற்றியும் கருத்துக் கூறவில்லை. ஆனால், பிராமணிய சமூக வாழ்நிலையில் இருந்த பெண்களின் நிலையோடு ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியுள்ளார்.
பிராமணிய அதிகாரம் முடிவடையும் காலத்தில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும் அந்தக் கருத்தினையே மறைமுகமாக கோடிட்டுள்ளார். சூத்திராதி சூத்திரர்களை அடிமைப்படுத்திய மிகப் பெரிய சூழ்ச்சியின் ஒரு பகுதியே பெண்களையும் அடிமைப்படுத்தியது என்பது இக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வெவ்வேறு ஜாதியின் அடிப்படையில் பெண்களை இயக்க ரீதியில் திரட்டும் தற்போதைய போக்கினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தலித் பெண்ணைப் போலவே பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திராதி சூத்திரர் என்று எண்ணினார். பெண்ணடிமைக்குரிய அடிப்படைக் காரணமாக வர்ணாஸ்ரமல்லாது பால் வேறுபாட்டை மட்டுமே காரணமாகக் கொண்ட அவரது கருத்து மிகப் புதுமையாக இருந்தது.
குடும்பம் என்ற ஏற்பாடு சமூகத்தின் மைய நிலையாக இருந்தது போல சமூகத்தில் அடக்குமுறைக்கும் மையமாக இருந்தது என்றே புலே நம்பினார். அதன் அடிவேர்கள் ஜாதிய முறையில் கிடைக்கும். வர்ணாசிரமம் பற்றிய புலேயின் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஆண் வழிச் சமுதாய முறையினால் ஆண் – பெண் இருபாலரின் ஏற்றத் தாழ்வும், பெண்ணடிமையும் ஏற்பட்டன என்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமான சீர்திருத்தவாதிகள் பெண்களின் பிரச்சினைகளான விதவை திருமணம், குழந்தை திருமணத்தை தடை செய்தல், சதி என்ற பழக்கத்தை தடை செய்தல், பெண்களுக்கு கல்வி உரிமை முதலியவற்றை கையிலெடுத்துள்ளனர். புலேயும் அவர்களில் ஒருவர். இளம் மணப்பெண் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராக செல்கிறாள் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.
ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்ய முடியாவினும் திருமணமும் குடும்ப வாழ்க்கை முறையும் சில மாற்றங்களுக்காவது உட்பட வேண்டும் என்று புலே நம்பினார். பரம்பரையாக பின்பற்றப்படும் திருமண சடங்குமுறைகளை மாற்றி அமைப்பது பற்றி சத்யதர்ம புஸ்தக் என்ற நூல் அலசுகிறது. புலேயைப் பின்பற்றி பல சமூக சீர்திருத்தவாதிகளும் திருமண சடங்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் கூறுகிறார். தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்களாக மாற்றியவர் ஈ.வே.ரா. பெரியார். நாட்டின் சில பகுதிகளில், தேசிய இயக்கத்தின் ஒரு அம்சமாக காந்திய கொள்கையின் வழியில் கல்யாணங்கள் நடைபெற்றன.
பண்டித ரமாபாய் கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்ததற்கு ஆதரவாக புலே இருந்தது பற்றி நாம் விளக்கியுள்ளோம். பால் சார்ந்த ஒரு அம்சத்தை அந்த ஆதரவில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பிராமண பரம்பரை வழக்கத்திலிருந்து விடுதலையாகும் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்.
ஒரு பெண் தனது அடிமைத்தளத்திலிருந்தும், பிராமண வழக்கங்களிலிருந்தும் வெளியில் வருவதற்கான தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். பிராமணியத்தை எதிர்த்த சூத்திரர்களின் புரட்சியாகவே அதைக் கண்ணுற்றார். சூத்திராதி சூத்திரர்களின் போராட்டத்தின் அடிப்படையாக பெண்ணுரிமையை நிலை நாட்டுவதும் அமையும் என்பதே புலேயின் எண்ணமாக இருந்தது.

மராட்டிய இலக்கியத்தின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் புலேயைப் பற்றி குறிப்பிடுவதில்லை. இது மிகவும் விநோதமாகவும் வருத்தமாகவும் உள்ளது. புலேயின் உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கு மொழியை அவர் உபயோகம் செய்தது, அவரது கோர்வையான கருத்துரையாடல்களில் வந்து விழுந்துள்ள மிகவும் காட்டமான சொல்லாடல்கள், அவரது கவிதைகள் (18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் துர்காராமின் தாக்கம் உள்ளவை) மராட்டிய சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்ற பக்தி இலக்கிய கவிதைகள் குறித்த அவரது ஆய்வு என்ற பல அம்சங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இவற்றில் ஏதோ ஒரு சிலவற்றை குறிப்பிடுபவர்களும் பிராமணர்கள் புலேயின் கருத்துக்களில் கவலை கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டவோ அல்லது மராட்டியத்தில் முதன் முதலில் அரசியல் விவாதம் செய்யும் நாடகமாகிய திருத்திய ரத்னைவை எழுதியவர் என்று சொல்வதற்கும் அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ளார்.
பால் சந்திர நமதா என்பவர் புலேயின் புலமை பற்றி எழுதிய கட்டுரையைத் தவிர்த்து, அவரது எழுத்துக்ள் மீதான அக்கறை கொண்ட விமர்சனங்கள் இல்லை என்றே கூறலாம். மராட்டியத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி இது. ஆனால் அந்த வேலையை நிறைவு செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் நமது கருத்துப் பதிவுகளை வரிசையாக இங்கே எடுத்துரைக்கலாம்.
உரையாடல் வடிவத்தில் எழுதுவது புலேக்கு மிகவும் பிடிக்கும். அவரது மிகப் பல நூல்களும், குறிப்பாக ஒரு நாடகமும், இந்த இலக்கிய வடிவத்தில் உள்ளன. ஒருபுறத்தில் மேற்கத்திய பழக்கமான கிரேக்க எழுத்துப் பரம்பரையையும் அவருக்குப் பிடிக்காவிடினும், உபநிடதங்களில் உள்ள வழக்கத்தையும் இது இணைப்பதாக இருந்தது. பாத்தாஸ் என்பவர்கள் இது போன்ற உரையாடல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். 1909 ஆம் ஆண்டில் வெளியான காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் என்ற புத்தகம் இந்த உரையாடல் வடிவத்தில் வெளியான முதல் பெரிய இந்திய நூல் என்றாகிறது.
அவருடைய காலத்தில் அவரது மொழி உபயோகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய மராட்டிய மொழியின் துள்ளலையும் முரட்டுத்தனத்தையும் அவ்வளவு எளிதாக மொழி மாற்றம் செய்ய முடியாது. நமது மொழி பெயர்ப்பாளர்கள் துணிவோடு இப்படிப்பட்ட ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர். இலக்கிய மராட்டியத்தை விடவும் பேச்சு மொழியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக இயக்கத்தை கட்டியதால் தனது எழுத்துக்களின் மூலம் முதன் முதலில் பொது ஜனத்தை அடைய முயன்றார். அவர்களுக்காக பேசும் போது அவர்களது பேசும் மொழியை உபயோகப்படுத்தினார் என எதிர்பார்க்கலாம். ஆனால் புலே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே சென்றார். பொது ஜனக் கல்விக்காக அவர் எழுதாத போது கூட வழமையான மராட்டிய மொழி போல் இல்லாமல் வித்தியாசமாக அவரது காலத்தில் தோற்றம் அளித்தது. உண்மையான மராட்டிய மொழி சமஸ்கிருத மொழி கலந்த பிராமணீய தாக்கம் கொண்டதாக இல்லாமல் பொது ஜனங்களின் மொழியாகவே இருக்க வேண்டும் என்று புலே அதற்கு மறு உருவம் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.
இந்த இடத்தில் மிக ஆர்வம் தரும் இன்னுமொரு கருத்தினை பதிவு செய்தல் வேண்டும். புலேயின் தனிப்பட்ட உதாரணம் தவிர மற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மராட்டிய நூல்களில் ஏழை முகமதிய விவசாயியோ அல்லது கைத்தொழிலாளியோ பேசப்படவில்லை. ஒவ்வொரு முறையும் இடம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை மராட்டிய முகமதியன் பேசிய வார்த்தைகள் அல்லது சொல்லாடல்களை புலே உபயோகப்படுத்தினார். ராணடேக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரி இதற்கு நல்ல உதாரணமாகும்: எப்படியாவது இந்த முதியவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவும் தீர்க்கதரிசி முகம்மது பற்றி ஒரு கவிதை எழுதினார். நம் காலத்தைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் உட்படுத்தும் கடுமையான தத்துவக் கொள்கைகளுக்கான பரீட்சையில் இந்தக் கவிதை வெற்றி பெறாது. ஆனால் முகம்மது இஸ்லாம் மதத்தில் தாராளமான முற்போக்கான சாரத்தைக் காட்டியவர் என்பது புலேயின் கருத்து.
தற்கால சமூக உண்மையை மொத்த ரூபத்தில் கண்டு உணரும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று புலே முயன்றார். சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவர் எவரும் செய்வதைப் போலவே இறந்த காலம் மற்றும் நிகழ் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இரு ஜாதி சமூகக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்காக அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முயன்றார். பிராமணர்களைப் போல சமகாலத்தில் கிறிஸ்தவ மத சேவகர்கள் பழைமைவாதிகளாகவோ எதிர்ப்பாளர்களாகவோ இருக்கவில்லை என்று அவர் நினைத்தது ஒரு உதாரணம். மத சேவகர்கள் இன உணர்வோடும் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் எந்த காரணங்களுக்காக அப்படி இருந்தனர் என்பது பண்டித ராமபாய் எதிர்நோக்கிய பிரச்சினை. இதுபோன்ற கேள்வியை புலே எழுப்பவில்லை.
திருத்திய ரத்னாவில் சிலை வழிபாட்டிற்கு எதிரான கடுமையான வாதத்தைக் காணலாம். ஒரு கிறித்துவ மதசேவகரை சிலைகளை உடைப்பவராக, அதுவும் கிறித்துவ சிலைகளல்லாது இந்து சிலைகளை உடைப்பராக மாற்றியுள்ளார். பக்தி இயக்கத்தையும், அதிலிருந்த உருவ வழிபாட்டினையும் புலே பெரிது பண்ணவில்லை. சில நூல்களில் புலேயால் தாக்கப்பட்ட தியானேஷ்வர் உருவ வழிபாட்டினை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளார். மராட்டிய சூத்திராதி சூத்திரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான பழக்கங்களை தாக்குவது போல் அவர் தனது வாதங்களை அமைக்கவில்லை. மத சேவகர்களின் செயல்பாட்டினை சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு. ஏகாதிபத்தியம் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதல் இத்தோடு தொடர்புடையது.
மிகவும் கவனமாக ஆராய வேண்டிய ஒரு கேள்வியும் உள்ளது. ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள் இன்றைய மகாராஷ்டிரத்தில் இல்லையென்றே சொல்லலாம். காரல் மார்க்ஸ் புரிந்து கொண்டது போல் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் பற்றி புலே ஓரளவு புரிந்திருந்தார். 1853 ஆம் ஆண்டில் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார், இந்தியாவில் இங்கிலாந்து இரண்டு வகையான சேவை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அழிக்கும் பணி. அதாவது பழைய ஆசிய சமூக முறையை அழித்தொழிப்பது. மற்றொன்று ஆக்கும் பணி.
அதாவது இந்தியாவில் மேற்கத்திய சமுதாயத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை அமைப்பதுதான் ஆங்கிலேய ஆட்சியின் எதிர்கால விளைவாக இருக்கும் என மார்க்ஸ் எழுதினார். ஆனால் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புலே சிந்தித்தார். பிராமண சமூக அமைப்பை முற்றிலுமாக ஆங்கில ஆட்சி முறை அழிக்க முடியும் என்றால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும் என அவர் கருதினார். புதிய சமத்துவ சமூகத்திற்குரிய நிர்வாக பொருளாதார ரீதியான அடித்தளத்தை ஆங்கில அரசாட்சி அமைத்து தரும் என்று நம்பினார். கட்டாயமாக அது நடந்தே தீரும் என்பதில் அவ்வளவு நிச்சயம் அவருக்கில்லை. ஆதலால் அவர் நம்பினார் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. மக்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆங்கில அரசின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் மிகவும் காலம் தாழ்த்துவதாக இருந்தது பற்றிய கருத்தில் ஓரளவிற்கு அவரிடம் ஒரு இரட்டைத் தன்மை காணப்பட்டது. மார்க்ஸ் மற்றும் புலே இரண்டு வேறுபட்ட கோணத்திலிருந்து கண்டு கொண்ட அதனது அழிக்கும் சக்தி மிக முக்கியமானது. அதையே இருவரும் எதிர்பார்த்தனர். ஏகாதிபத்தியம் பற்றிய புலேயின் கருத்து சரித்திர கண்ணோட்டத்தில் அமைந்தது என்று வாதிடலாம்.
ஏகாதிபத்தியம் தர்க்கத்திற்குரியதாக புலே கருதவில்லை. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கீழ்மட்ட மக்களிடம் அன்பாக இல்லை என்றும் நினைக்கவில்லை. ஆங்கில சட்ட அமைப்பில் புலே நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் சுரண்டல் தன்மையைக் காட்டுவதிலும் அநியாயமாக நடப்பதிலும் கொஞ்சமும் ஆங்கில சட்டத்துறை குறைத்துக் கொள்ளவில்லை. அவரது காலத்திலேயே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து நடந்த சூத்திராதி சூத்திரர்களின் கிளர்ச்சியில் அவருக்குள்ள அவநம்பிக்கை ஆங்கில அரசின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உமாஜிநாயக் தலைமையில் நடந்த கிளர்ச்சியைக் கூறலாம்.
பிராமண தேசியத்தின் உயர்ந்தோர் கூட்டத்தைப் பற்றி பற்றி கெய்ல் ஓம்வெட் கூறும் கருத்துக்கள் இதுபோல அமைந்துள்ளன. பி.டி. ராணடே இப்புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார், இது ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தின் படியான ஆய்வா? மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும்? பிராமண உயர்ந்த அறிவு ஜீவிகள் என்ற வேறுபாட்டினை ஒருவர் ஏற்றுக் கொண்ட போதிலும், அதே பக்கத்தில் மற்ற வகுப்பினர்களும், உழைக்கும் மக்களும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக வாசுதேவ் பாதக் என்ற பிராமணன் ரொமோசிஸ் உடன் சேர்ந்து இயங்கியதை புலே பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக புலேயும் அவரது தோழர்களும் சீடர்களும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிதமான கருத்துக்களைக் கொண்டனர். இறுதியாக தேசிய இயக்கத்தின் அடிப்படையை இழந்தனர்.
இதே போன்ற நிகழ்வினை இன்றும் நாம் காணலாம். இன்றைய நிலையில் இன்னும் மோசமான சூழ்நிலையாக உள்ளது. இன்றைய தேசிய அறிவு ஜீவிகள் தங்களது கொள்கைகளில் உலகமயமாகியும் உலகம் தழுவிய கண்ணோட்டம் கொண்டுள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றோம். வெளிறிய கண்கள் கொண்ட சிவந்த மக்கள் என்று பிராமணர்களைப் பற்றிய புலேயின் கருத்து இன்றும் உபயோகமாக உள்ளது. உள்ளூர் பிராமணர்கள் உலகலாவிய பிராமணர்களுடன் உறவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூத்திராதி சூத்திரர்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய கவனம் குறைந்து கொண்டே வருகிறது. அறிவு ஜீவிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பிரச்சினையாக கருதுவது இல்லை. உள்ளூர் பிராமணர்கள் வாஷிங்டன் பிராமணர்களின் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஆனால் உள்ளூர் பிராமணர்களுக்கும் பிறநாட்டு பிராமணர்களுக்கும் உறவு எதுவுமில்லை என்று நடித்துக் கொண்டே சூத்திராதி சூத்திரர்களும் இந்த விளையாட்டை ஒட்டியே செல்கின்றனர். சூத்திராதி சூத்திரர்களுக்காக பரிந்து பேசிய சமூக அரசியல் இயக்கங்கள் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக வேலை செய்துள்ளனர். ஒரு புதிய கண்ணோட்டமும் கூடுதல் செரிவான கொள்கைப் பிடிப்பும், ஏகாதிபத்தியம் குறித்து எழுந்தால் மட்டுமே புலேயின் கருத்தோட்டம் உபயோகம் உள்ளதாகவும், மாற்றங்களுக்கு உதவுவதாகவும் அமையும் என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மராட்டிய சமுதாய இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட இடதுசாரிகளுக்குமுள்ள உறவு பற்றியும் இதுபோலவே பேச வேண்டியுள்ளது. இடதுசாரிகள் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக புலேயையும் அம்பேத்காரையும் உபயோகப்படுத்துகிறார்கள். சரத் பட்டீல் தனது எழுத்துக்களில் மார்க்ஸ், புலே மற்றும் அம்பேத்காரை இணைத்துப் பேசுகிறார்.
நமது சமுதாயத்தில் உள்ள உண்மையான பிரச்சினை வலதுசாரிகளின் வெறித்தனமான குறுகிய நோக்கு காரணமல்ல. இடதுசாரிகளின் வளைந்த கொடுக்காத, மரபு பிறழாத தன்மையே முக்கிய காரணம் என்கிறார். ஏகாதிபத்தியம் பற்றி மிகவும் அரிதாகவே பேசுகிறார். மகாராஷ்டிரத்திலுள்ள இன்றைய சமூக அரசியல் குழுக்களின் நிலையும் இதுபோலவே உள்ளது என்பதும் உண்மை.
இந்த மாதிரியான அணுகுமுறை மிக முக்கியமான ஒரு கருத்தை நழுவவிடுகிறது. ஒரு அமைப்பை உருவாக்குபவரோடு எப்படி தொடர்புபடுத்துவது? இன்றைய பிரச்சினைகளோடு அந்த அமைப்பினைப் பற்றிய விளக்கம் செய்தல் வேண்டும். ஏகாதிபத்தியம் குறித்த புலேயின் மிதவாத கருத்துக்களை ஒதுக்காமல் புலேயின் பிற கருத்துக்களுக்கு உருப்படியாக விளக்கம் கூற முடியாது.

பிரச்சினையின் உண்மை இதுதான். சமுதாயத்தை அடிப்படையிலிருந்தே உருமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துனை ஆற்றல்களுக்கும் உரியவர்கள் சூத்திராதி சூத்திரர்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் பிராமணர்கள். தேசியத் தலைவர்களை பிராமணர்கள் என்று பழிசொல்லும் தவறுகளும், அதுபோல கம்யூனிஸ்ட்டுகளை பிராமணக் கம்யூனிஸ்ட் என்று பெயரிடும் தவறுகளும் நிறுத்தப்படுவதற்கு இந்தக் கருத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தடைகளை பார்க்காவிடில், எல்லா இயக்கங்களும் தேவையற்றவை என்ற நிலை உருவாகும். படைப்புத் திறன் கொண்டவர், முற்போக்குவாதி என்ற கண்ணோட்டத்தோடு புலேயின் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும்.

அமைப்புக்களை உருவாக்குபவர்கள் இவ்வாறே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவரது கூடாரம் மிக பரந்து பட்டது. வேகம் கம்பீரமானது. அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தன்மைகளின் படியே அதைக் கொள்கை ரீதியாகப் பார்த்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேயே ஆட்சி பழங்கதைகள், ஆண் – பெண் சமத்துவம், விவசாயத்தில் விளைச்சலுக்குரிய பிரச்சினைகள். இந்தப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்ட இந்திய நபர் 19ஆம் நூற்றாண்டில் யாருமில்லை. அப்படியெனில் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியா? இல்லை என்பதே இதற்குரிய பதில். பரந்த மனம் கொண்ட மனித தேசியவாதியாக மட்டும் இருந்தால் கூட சமூக சீர்திருத்தவாதியாக முடியும். ஆனால் புலே புரட்சியாளர். இந்திய சமுதாயத்தில் இருந்த வகுப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டு கொண்ட அறிஞர்களில் முக்கியமானவர். அவருக்கென்று முழுமை யான ஒரு அமைப்பு ரீதியான கருத்துக்களை கொண்டிருந் தார். துவை வர்னிக் என்ற இந்திய சமூக கட்டமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் சூத்திராதி சூத்திரர்கள் சமூகப் புரட்சியை வழிநடத்தும் செயல் வல்லவர்கள் என்று கண்டார்.


ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.
நண்பர்களே, இன்றைய காலகட்டத்திற்குக் கூட பொருத்தமாக இருக்கும், இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு என்ன தெரியுமா? 1855. நம்ப முடியவில்லைதானே? நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை.
இன்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன், இக்கடிதத்தை எழுதியவர் ஒரு பெண். பெயர்
முக்தா பாய் . மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தீண்டத் தகாத சமூகத்தைச் சார்ந்தவர்.
இதுபோன்று ஒரு கடிதத்தை எழுத, அதுவும் அக்காலத்தில் எழுத, எவ்வளவு துணிச்சல் தேவை.
இலட்சக் கணக்கான, பிற தாழ்த்தப் பட்ட, தீண்டத் தகாத வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்காத, கிட்டாத அறிவும், தெளிவான பார்வையும், போராட்ட குணமும், முக்தா பாய்க்குக் கிடைக்கக் காரணம், அவர் படித்த பள்ளியும், அதனை நடத்தியவரும்தான்.
அவர்தான்
ஜோதிராவ் புலே.
ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள், மகாராஷ்டிராவின், புனேயில் பிறந்தவர். இவரது தந்தை கோவிந்த ராவ்.
கோவிந்த ராவும் அவரது சகோதரர்களும் மலர் வியாபாரம் செய்து வந்தமையால், புலே என்னும் பெயர் அவர்களோடு ஒட்டிக் கொண்டது.
ஜோதிராவ் ஒரு வயதிலேயே தாயை இழந்தார். தொடக்கக் கல்வியை மட்டும் பயின்று, தந்தையின் கடைக்கு வேலைக்கு வந்து விட்டார். பதிமூன்று வயதிற்குள் திருமணமும் முடிந்து விட்டது.
ஜோதிராவின் உடல் கடையில் வேலை பார்த்தாலும், உள்ளமோ கல்வியைத் தேடி பூ போல் வாடியது.
ஜோதிராவின் கற்கும் ஆர்வத்தை உணர்ந்த, அவரது தந்தையின் நண்பர்கள் இருவர், உதவிட முன் வந்தனர்.
ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறித்தவர்.
ஜோதிராவ் 1841 இல் புனேயில் உள்ள ஸ்காட்டிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
1847 இல் புலே படிப்பை முடித்தபோது, ஒரு திடமான முடிவில் இருந்தார்.
எக்காரணம் கொண்டும் அரசு வேலைக்குச் செல்லக் கூடாது.
சிறு வயது முதலே, மனிதர்களை மனிதர்களாக வாழ விடாத, சாதிய ஒடுக்கு முறைகளைக் கண்டும், அதனால் மனம் நொந்தும் வாழ்ந்தவர்தான் புலே.
சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும், மற்ற பிரிவினர் கீழ் நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தை, நியாயத்தை, சாதியம் அளிப்பதை கண் கூடாகக் கண்டார்.
இந்நிலையினை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தார். செழிப்பான, பண பலம் மிக்க, படைபலம் மிக்க, உயர் சாதியினருடன், ஒன்றுமற்ற, நிராதரவான, தாழ்த்தப் பட்ட மக்களால் எப்படி போரிட முடியும். போரிடுவது என்றால், எந்த ஆயுதத்தைப் பயன் படுத்தி போரிடுவது என ஆழ்ந்து ஆராய்ந்தார்.
முடிவில் ஜோதிராவ் புலே, ஓர் வலிமைமிகு பேராயுதத்தைக் கண்டு பிடித்தார்.
கல்வி.
கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம் என உணர்ந்தார்.
தான் செய்ய நினைத்ததை முதலில் தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு, தானே ஆசிரியராய் இருந்து கல்வி கற்பித்தார்.
1851 இல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார். கணவன், மனைவி இருவருமே பள்ளியை நடத்தினர். மேலும் இரு பள்ளிகளைத் தொடங்கினார்.
பள்ளிகள் பலவற்றைத் தொடர்ந்து தொடங்கிய போதிலும், புலேயின் மனம் அமைதியின்றித் தவித்துக் கொண்டே இருந்தது.
பெருமளவிலான பெண்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கும் பொழுது, ஒரு சில பள்ளிகளால், எந்தவொரு பெரிய மாற்றத்தினையும் கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்திருந்தார்.
படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? பள்ளிகளை அதிகரிப்பது எப்படி? எப்படி அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் அளிப்பது? கேள்விகள் தொடர்ந்து எழுந்த போதிலும், விடைகளையும் கண்டு பிடித்தார். அரசாங்கத்தின் முன் வேண்டுகோளாய் வைத்தார்.
குறைந்தது 12 வயது வரையிலாவது, ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும்.
தனியார் கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்த புலே, நீண்ட காலத்திற்கு கல்வி அமைப்பு முழுவதும் அரசாங்கத்தின் வசமே இருக்க வேண்டும் என்றார்.
மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
எண், எழுத்து இரண்டையும் எழுத, படிக்க பழக்க வேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவினை அனைவரும் பெற்றாக வேண்டும்.
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தீண்டாமை இன்னும் ஒழிந்தபாடில்லை.
கல்வி அறிவு அனைவருக்கும் கிடைத்து விடவில்லை. பெண்கள் இன்னும் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க வில்லை.
புலே இன்றும் தேவைப்படுகிறார்.
தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப் பட்டோரின் விடுதலையை, இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொருவரும், ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என மூன்றினை, புலே குறிப்பிடுகிறார்.
அதிகாரம், கல்வி, அறிவியல்
நண்பர்களே, மூன்று ஆயுதங்களையும் ஏந்திப் போராடுவதே, ஜோதிராவ் புலே அவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மை அஞ்சலியாகும்.

திங்கள், 9 ஏப்ரல், 2018

உடன்பிறப்புகள் தினம் ( Siblings Day ) ஏப்ரல் 10


உடன்பிறப்புகள் தினம் ( Siblings Day ) ஏப்ரல் 10

உடன்பிறப்புகள் நாள் ( Siblings Day ) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10  ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள் ,
தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.  1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா ,
ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.


உடன்பிறப்புகள் நாள்
Siblings Day
கடைபிடிப்போர் பல நாடுகள்
முக்கியத்துவம் உடன்பிறப்புகளின் உறவுகளை மதிக்கும் வகையில்
நாள் ஏப்ரல் 10
காலம் ஒரு நாள்
நிகழ்வு ஆண்டுதோறும்
தொடர்புடையன ரக்சா பந்தன்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ( World Health Day )


உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ( World Health Day ) 

உலக நலவாழ்வு நாள் ( World Health Day ) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
உலக நலவாழ்வு நாள் 2007: வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்
1. நலவாழ்வுக் கேடுகள் எல்லை கடந்தவை.
2. வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்.
3. நலவாழ்வே பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நலக்கேட்டை உண்டுபண்ணும்.
4. பன்னாட்டளவிலான நலவாழ்வு அச்சுறுத்தல்களுக்கு விரைந்து முகம் கொடுக்க வேண்டும்.
5. உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.
முன்னைய உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்
1. 2007 - அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
2. 2006 - ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
3. 2005 - ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
4. 2004 - சாலை வீதிப் பாதுகாப்பு
5. 2003 - குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
6. 2002 - நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
7. 2001 - மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
8. 2000 - பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
9. 1999 - சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
10. 1998 - பாதுகாப்பான தாய்மை
11. 1997 - முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
12. 1996 - தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
13. 1995 - இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.


உலகம் முழுவதும் சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1950ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதியை உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, ‘Depression: Lets Talk’ என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர், மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். உலகில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவரும், இருபது ஆண்களில் ஒருவரும் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களுடைய உடல்நலக்குறைவு மற்றும் நோய்களுக்கு காட்டும் அக்கறையை மன அழுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மன அழுத்தத்தின் அடையாளங்களான ஆற்றலின்மை, பசியெடுக்கும் தன்மையில் மாறுதல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, கவனச் சிதறல், தன்னம்பிக்கையின்மை, குற்றவுணர்ச்சி, தன்னை வருத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவற்றை உணர்ந்தால் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களைச் சந்தித்து தீர்வு காண்பது அவசியமாகும்.

தனி மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுக்குள் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தாலும் 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்த நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் பாதிப்படைகின்றனர். மன அழுத்த நோயினால் வெகுநாள்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமன் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் மனநலம் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியமான தேவையாகவுள்ளது.

வியாழன், 5 ஏப்ரல், 2018

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஜெகஜீவன்ராம் பிறந்த தினம் ஏப்ரல் :5 ,1908.



இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஜெகஜீவன்ராம் பிறந்த தினம் ஏப்ரல் :5 ,1908.

ஜெகசீவன்ராம் (அ) ஜெகஜீவன்ராம் ( இந்தி : बाबू जगजीवन राम) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். பீகார் மாநிலம் , போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பட்டியல் சமூகத்தில் பிறந்தவர்.
1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.

பாபு ஜெகஜீவன்ராம்
இந்தியத் துணை பிரதமர்
பதவியில்
24 மார்ச்சு 1977 – 28 சூலை 1979
Serving with சரண்சிங்
பிரதமர் மொரார்ஜி தேசாய்
முன்னவர் மொரார்ஜி தேசாய்
பின்வந்தவர் யஷ்வந்திராவ் சவாண்
இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர்
பதவியில்
24 மார்ச்சு 1977 – 1 சூலை 1978
பிரதமர் மொரார்ஜி தேசாய்
முன்னவர் சர்தார் சுவரண்சிங்
பின்வந்தவர் சர்தார் சுவரண்சிங்
பதவியில்
27 1970 – 10 அக்டோபர் 1974
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் பன்சிலால்
பின்வந்தவர் சி. சுப்பிரமணியம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 5 , 1908
சந்த்வா கிராம்ம், போஜ்பூர் மாவட்டம், பீகார் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போது
இந்தியா )
இறப்பு 6 சூலை 1986 (அகவை 78)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி-ஜெகசீவன்,காங்கிரஸ் (1981–1986)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் (1977க்கு முன்பு)
ஜனநாயக காங்கிரஸ்(1977)
ஜனதா கட்சி (1977–1981)
பிள்ளைகள் மகன் சுரேஷ் குமார்
மகள் மீரா குமார்


இளமை வாழ்க்கை மற்றும் கல்வி

ஐந்து உடன் பிறந்தவர்களுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். ஆறாவது அகவையில் தம் தந்தையை ஜெகசீவன்ராம் இழந்தார். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1927-இல் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றபின் 1928 ஆம் ஆண்டில் வாரணாசி யில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும் பின்னர் 1931-இல் கல்கத்தா பல்கலை கழகத்திலும் படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். இந்தி ஆங்கிலம் வங்காளி சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தார்.

தீண்டாமைக் கொடுமை

சகசீவன் ராம் தீண்டத் தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. அதனைக் கண்டு அவர் வருத்தமும் சினமும் அடைந்தார். அந்தப் பானையை உடைத்தார். பிறசாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். பனாரசுப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது சகசீவன்ராம் சாதிய இழிவுகளை நேரடியாகச் சந்தித்தார். உணவு விடுதியில் பணியாளர்கள் இவர் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கழுவ மறுத்தார்கள். அது மட்டுமல்லாமல் முடி திருத்தும் தொழிலாளிகள் முடி திருத்த மறுத்தார்கள். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது சம்பூராணந்தா சிலையைத் திறந்து வைத்தார். இவர் சிலையைத் திறந்து விட்டு அகன்றப் பின்னர் அந்த இடத்தைக் கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள் இந்த அவமதிப்பு குறித்து மன வேதனை அடைந்தார்.

அரசியல் பணிகள்

1931 இல் காங்கிரசில் சேர்ந்தார். சகசீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து
காந்திஜியின் தலைமையில் நடந்த
சத்தியாகிரகப் போராட்டத்திலும்,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார். பட்டியல் சமுகத்தினரை கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார் .
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார். அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பட்டியல் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேளாண்மைக்கான பாசான நீருக்கான வரியை எதிர்த்து பதவியிலிருந்து விலகினார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.

வகித்த பதவிகள்

இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் கேபினட் அமைச்சராக பணிபுரிந்தவர் என்ற பெருமை பெற்றவர். பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நாடாளுமன்ற தொகுதியில் 1952 முதல் 1984-ம் ஆண்டு வரை எட்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
1. தொழிலாளர் துறை அமைச்சர் 1946-1952. 1946 இல் சவகர்லால் நேரு தலைமையில் அமைந்த நடுவண் அமைச்சரவையிலும், விடுதலைக்குப் பின் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சர் ஆனார். 1947 ஆம் ஆண்டில் செனிவாவில் நிகழ்ந்த பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
2. தொலை தொடர்புத் துறை அமைச்சர் 1952-1956. 1952 வரை தொழிலாளர் நலத்துறை, செய்தித் தொடர்பு, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தார். தொலைவில் இருக்கும் சிறு சிறு கிராமங்களுக்கும் அஞ்சல் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
3. போக்குவரத்து மற்றும் புகைவண்டித் துறை அமைச்சர் 1956-1962
4. போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் 1962-1963. 1963 இல் காமராசர் திட்டத்தின் கீழ் அமைச்சர் பதவியைத் துறந்தார். காங்கிரசின் கட்சிப் பணியை முழுமையாக செய்தார்.
5. தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் 1966-1967
6. உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் 1967-1970. 1967-70 காலத்தில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவியது. அப்போது பாபு சகசீவன் ராம் வேளாண் அமைச்சராக இருந்தபடியால் பசுமைப் புரட்சிக்கு வழி வகுத்தார்.உணவுப் பொருள்களின் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கச் செய்தார்.
7. பாதுகாப்புத்துறை அமைச்சர் 1970-1974, 1977-1979. 1970-74 காலக் கட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது பாக்கிசுத்தானிலிருந்து பிரிந்து வங்கத் தேயம் உருவானது.அந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப் படுகிறது.
8. வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் 1974-1977. 1975 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை தலைமையமைச்சர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது இந்திரா காந்தியை ஆதரித்தப் போதிலும் 1977 இல் காங்கிரசிலிருந்து விலகினார். பிறகு சனதாக் கட்சியில் இணைந்தார்.
9. இந்தியா நடுவண் அரசில் 23 மார்ச்சு 1977 - 22 ஆகஸ்டு 1979 முடிய மொரார்சி தேசாய் அமைச்சரவையில் துணைபிரதமராக இருந்தார். பின்னர் சனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதால் அதிலிருந்து விலகி காங்கிரசு (ஜே) என்று புதிய கட்சியைத் தொடங்கினார்.
10. அகில இந்தியத் தலைவர், பாரத சாரணர் படை 1976 - 1983.

நினைவுச் சின்னங்கள்

பாபு ஜெகசீவன்ராம் தேசிய நிறுவனம் என்பது நடுவண் சமூக நீதி அமைச்சரவையின் கீழ் 2008 மார்ச்சு முதல் இயங்கி வருகிறது.
மைசூர் பல்கலைக் கழகத்தில் ஜெகஜீவன்ராம் கல்வி ஆராய்ச்சி மையம் 2010 சூனில் தொடங்கப்பட்டது.
திருவல்லிக்கேணியில் உள்ள பெல்ஸ் ரோட்டுக்கு ஜெகஜீவன்ராம் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.
சொந்த வாழ்க்கை
ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும்,
மீரா குமார் (இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.

ஜெகசீவன்ராமை பற்றிய நூல்கள்

Sharma, Devendra Prasad (1974). Jagjivan Ram: the man and the times. Indian Book Co..
Chanchreek, Kanhaiyalal (1975). Jagjivanram: a select bibliography, 1908–1975 . S. Chand .
Singh, Nau Nihal (1977). Jagjivan Ram: symbol of social change . Sundeep Prakashan.
Ram, Jagjivan (1977). Four decades of Jagjivan Ram's parliamentary career . S. Chand.
Ramesh Chandra, Sangh Mittra (2003). Jagjivan Ram And His Times . Commonwealth Publishers.
ISBN 81-7169-737-2 .
Secretariat, Lok Sabha (2005). Babu Jagjivan Ram in parliament: a commemorative volume. மக்களவை (இந்தியா) Secretariat.
Maurya, Dr. Omprakash. Babu Jagjivan Ram . Publications Division, இந்திய அரசு . http://publicationsdivision.nic.in/Hindi-Roman/Au-Wise/HRB06.HTM .

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 .


 தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 .

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ( ஏப்ரல் 4 , 1855 - ஏப்ரல் 26 , 1897 ) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில்
ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே
தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர்
நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசிரியப் பணி

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.
மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார்.
1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

சமயப்பணி

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

தமிழ்ப்பணி

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு
திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
“ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! ”
“ அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமே யாகும். ”
முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)
“ நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார் ”

இறுதி நாட்கள்

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.
வெளியிட்ட நூற்கள்
நூற்றொகை விளக்கம் (1888)
மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பிறந்த நாள் ஏப்ரல் 04.


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பிறந்த நாள் ஏப்ரல் 04.

கிருஷ்ணசாமி ( K. Krishnasamy ) ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார்.

இளமை பருவம்

கிருஷ்ணசாமி பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம்  நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார் ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள்  ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடி  என்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார் . பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி வேளாண்மைக் கல்வியைத் தொடராமல் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார் .

அரசியல் வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்களுக்காக வாதாடியவர்.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று
திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க
தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
இவர் 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.  , அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார் . தேவேந்திர குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.

போராட்டங்கள்

விழுப்புரம் 12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை, அதன் தொடர்ச்சியாக 22 சனவரி 1984 அன்று கைது செய்து மதுரை சிறையில்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02 World Autism Awareness Day


உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02 World Autism Awareness Day 

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ( World Autism Awareness Day ); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

2017 கருபொருள்

"சுய அதிகாரம் மற்றும் சுய தீர்மானம் நோக்கி"


அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 02.

உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் 'ஆம்' என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு 'ஆட்டிசம்' பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில் தான் ஆட்டிசக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், ஈஈஜி, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்த போது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது. இது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத்திறன், சமூகத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கிறது. இவர்களுக்கு அறிவு இருக்கும்.ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.
ஏன் வருகிறது?
ஆட்டிசம் குறைபாடு ஒரு பரம்பரைக் கோளாறு. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப்பட்டால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்னை இருந்தால் அல்லது போலிக் அமிலச்சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வயிற்றில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
அறிகுறிகள் என்ன?
தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது. பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் அப்போது குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.
என்ன சிகிச்சை?
ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத்திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி தர வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப், அலைபேசி, டிவி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால், இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இவர்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே கவனமாக இதைத் தவிர்க்கவேண்டும்.
- டாக்டர்.கு.கணேசன்.தினமலர்.


ஏப்ரல்-2 உலக ஆட்டிசம்(Autism) தினமாக உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை முடக்கு நோயே ஆட்டிசம்(Autism) என்று அழைக்கப்படுகிறது.
மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளைபாதிப்பு அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட நான்கு மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களைவிட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2003-ஆம் ஆண்டு ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது. இன்று ஒன்றரை கோடியாக அதிகரித்துள்ளது.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சிறிய செயல்களைக் கூட செய்யாமல் இருக்கும். அதாவது தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மறுத்தல், கைகளில் ஒரு தன்மை இல்லாமல் போவது இவை ஆட்டிசம் நோயின் அறிகுறிகள்.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புகொள்ள இயலாது செய்யும் ஒருகுறைபாடு.
தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப் படாமல், தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள்.
ஸ்பெக்ட்ரல்டிஸ் ஆர்டர்(spectral-order) என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் உறவைப் பேணமுடியாது, மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுதல் போன்ற சாதாரண விஷயங்களில் கூட ஈடுபடமுடியாது. பொதுவாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நல்லமுறையில் பேச்சு வருவதும் உண்டு. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை.
இந்நோய்க்கு என்ன காரணம் என்று இதுவரை மருத்துவ உலகம் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோய்க்கு முறையான சிகிட்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் 2 ஆண்டிற்குள் ஆட்டிசம் நோயை குணப்படுத்தும் சிகிட்சை முறை கண்டுபிடிக்கப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.


68 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்பு

பிறக்கும் 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது என வி கேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடை பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள ஆட்டிசம் குழந்தைகள் படிக்கும் வி கேன் பள்ளி சார்பில் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம், போலீஸ் டிஜிபி அலுவலக கட்டிடம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட 23 கட்டிடங்கள் நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. யூரோ பிக்ஸ் பள்ளியின் உதவியுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெரம்பூர், போரூர், தி.நகர், நொளம்பூர் ஆகிய இடங்களில் நடந்த விழிப்புணர்வு பேரணிகளில் மழலையர் வகுப்பில் பயிலும் குழந்தைகள் கலந்துகொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வி கேன் அறக்கட்டளை நிறுவனர் கீதா ஸ்ரீகாந்த், வி கேன் பள்ளியின் ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் டாக்டர் பா.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:
ஆட்டிசம் ஒரு நோய் இல்லை. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு. மரபணு கோளாறு, கர்ப்பக்கால நோய் தொற்று, குறைமாத பிரசவம் போன்ற வற்றால் ஆட்டிசம் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறது. இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேசுவதிலும், பழகுவதிலும், ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதிலும் பிரச்சினை இருக்கும். இந்த குறைபாட்டை ஒன்றரை வயதில் கண்டுபிடித்துவிட்டால், அந்த குழந்தைகளின் பிரச்சினைகளை சரிசெய்து விடலாம்.
ஒரு கோடி குழந்தைகள் பாதிப்பு:
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் ஆட்டிசம் குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 198 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந் தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுக்கவும், ஆட்டிசம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.


இன்று ஏப்ரல் 2ம் திகதி சர்வதேச ஆட்டிசம் (மதியிறுக்கம் - Autism) விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பொருளாதார வளங்களாலும், ஆற்றலாலும் நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளாக கருதப்படுபவற்றில் அமெரிக்காவில் 166 பேருக்கு ஒருவருக்கும், சுவிற்சர்லாந்தில் 100 பேரில் ஒருவருக்கும் இந்த ஆட்டிசம் குறைபாடு காணப்படுகிறது. அப்படியாயின் நீங்கள் வசிக்கும் நாடுகளின் நிலை என்ன? ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய புள்ளிவிபரத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?
இன்றைய ஆட்டிசம் தினத்தை யொட்டிய சிறப்பு பதிவு இது.
ஆட்டிசம்' குறைபாடுகள் பற்றி பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வரும் wecanindia.org எனும் சமூக அமைப்பின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பிரசுரிக்கப்படுகிறது. - 4தமிழ்மீடியா குழுமம்
'ஆட்டிசம்' என்பது என்ன? அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு - Development disability! மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் துவங்கும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாது பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் 'ஆட்டிசம்' மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப்படுகிறது. தூய தமிழில் இது தற்புனைவு ஆழ்வு என குறிப்பிடப்படுகிறது.
ஆட்டிசத்தின் தன்மைகள் :
சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை
'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும்திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை
சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் 'ஆட்டிச’க் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (PRETEND PLAY) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. 'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
ஆடிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களைப் பீடிக்கும் 'ஆட்டிசம்' பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி என்ற எந்த பாகுபாடும் அதற்குக் கிடையாது. இன்று சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'Downs Syndrome’ என்ற மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டை விடவும் அது பரவலாகக் காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட 'ஆட்டிசம்' பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்
ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பா¢சோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் 'ஆட்டிச'த்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான் ' ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதோ சில உதாரணங்கள்:
நடத்தை ரீதியான அறிகுறிகள்
கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
தாமதமாகப் பேசத் தொடங்குதல்
விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ / உணரவோ அறியாதிருத்தல்
சமவயதுள்ள நபர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் அல்லது அந்த உறவை நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்
தீர்வு
எதனால் 'ஆட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.
இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்ததல்லவா?
தகவல் மூலம் : http://wecanindia.org/tabout_wecan.html
சென்னை கோட்டுபுரத்தில் இயங்கும் இவர்களது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நீங்களும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவலாம்.


இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம் ஏப்ரல் 1 (1935).


இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம் ஏப்ரல் 1 (1935).

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உலக போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து அதற்கான ஹில்டன் எங் குழுவை அமைத்தது. அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோருடைய கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய "The Problem of the Rupee – It’s origin and it’s solution" எனும் நூல்தான் அது.

அதன் வழிக்காட்டுதலில்தான் இந்திய  ரிசர்வ் வங்கி உருவானது. முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது . தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது.

நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது.

இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில், செயல்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாழ்த்துகள்...