செவ்வாய், 4 ஜூன், 2019

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5


உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5

1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.


இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.


சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.


இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சுழலை பாதுகாப்போம்..எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்வோம் என இந்த நாளில் சூளுரைப்போம்.

வெள்ளி, 31 மே, 2019

உலக பெற்றோர் தினம் ஜூன் 1 .


உலக பெற்றோர் தினம் ஜூன் 1 .

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜீன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில்

உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கையைக் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர். It is the same day as International Children's Day.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டதுParents' Day is celebrated throughout the United States.

தென் கொரியாவில்

தென் கொரியாவில் பெற்றோர் தினம் மே 8 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

வியாழன், 30 மே, 2019

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.


உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'புகையிலை மற்றும் நுரையீரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

 புகைபிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு, இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.80 லட்சம்: புகையிலை பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 10 லட்சம் பேர், புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள்.10 இந்தியாவில் புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 10 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களில், 6.25 லட்சம் பேர் தினமும் சிகரெட் புகைக்கின்றனர்.1,000 உலகில் தினமும் ஆயிரம் கோடி சிகரெட் பயன்படுத்தப்படுகிறது.4 உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் புகையிலையால் உயிரிழக்கின்றனர்.50 புகைப்பவர்களில், 50 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.4,000
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இதில் 250 தீங்கு விளைவிப்பன மற்றும் 50, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

78உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.


உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.

புகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.

இதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். #NoTobacco #WorldNoTobaccoDay

ஞாயிறு, 19 மே, 2019

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த தினம் மே 20, 1845.


பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த தினம் மே 20, 1845.

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார். 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.

அயோத்தி தாசர்

பண்டிதர் அயோத்திதாசர்
பிறப்பு
காத்தவராயன்
மே 20, 1845
நீலகிரி மாவட்டம்
இறப்பு
5 மே 1914 (அகவை 68)[
தேசியம்
இந்தியர்
பணி
சித்த மருத்துவர்
அறியப்படுவது
தென்னிந்திய சாக்கிய பெளத்த இயக்கம்
பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.

கல்வியும், புலமையும்

அயோத்திதாசர் 1845 மே 20 இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது.

தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.

சமயம் தொடர்பான கருத்துகளும் பணிகளும்

தன்னுடைய 25 ஆம் வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவினார் . அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகி ராமன், இராசராம் என்றும். புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி எனப் பெயர் சூட்டினார்.

அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குவாதம், பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாகவும் அது அமைந்தது.

பண்டிதருடைய காலம் (19 நூற்றாண்டின் பிற்பகுதி ) இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலமாக இருந்தது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தும் இந்து சமயத்துக்குள் திணிக்கப்பட்டது. 'யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர் இல்லையோ' அவர்களெல்லாம் இந்துக்கள் என 1861 முதல் 1891 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'இந்து' அடையாளத்திற்குள் வலிய திணிக்கப்பட்டார்கள். பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் 'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தவர். அவ்வாறு 'இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளம் ஒன்றைத் தேடத் துவங்கினார். தமிழகத்தில் பக்தி வடிவங்களில் 'தமிழ்ச் சைவ' மீட்டுருவாக்க முயற்சி நடந்தது. இதுவும் ஒரு வகையில் சாதியத்தை உள்வாங்கியவர்களின் முயற்சியாகவே இருந்தது. 'தமிழ் சைவம்' பிராமண எதிர்ப்புப் பேசினாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் பண்டிதர் தமிழ் சைவத்தோடு இணையவில்லை.

பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, மேற்படி 10 கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். இந்த அவமானபடுத்துதல் பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. நாம் யார்? இந்துக்களா ? சாதி இழிவுகள் ஏன் நம்மீது திணிக்கப்படுகிறது? என எண்ணி சுயத்தைத்தேடி நகர்ந்தார். வேதம், இந்து, பிராமணீயம்,சடங்குவாதம்..முதலானவற்றை கேள்விக்குட்படுத்தினார்.

ஆதி திராவிடர்களுக்கான செயற்பாடுகள்

1870 களில் அயோத்தி தாசர் நீலமலையின் தோடர் மற்றும் பிற மலைவாழ் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தார். 1875இல் அத்வைதானந்த சபையை நிறுவினார். வெசிலியன் மிஷன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக நடத்திய அருட்திரு டி ஜான்ரத்தினத்துடன் (Rev. John Rathinam) தொடர்பு ஏற்பட்டது. ஜான்ரத்தினம் நடத்திய 'திரவிடர் கழகம்' அதன் சார்பாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார்.

1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார். அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் திராவிட மாகாசன சபையை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார் இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் புத்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன.

அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி அதை இரண்டு பிரிவாக பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு, அது வங்காளின் கங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண காங்கிரசு என விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார். ஆக மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசபிகல் தொடர்பு, காங்கிரசு கட்சி, அனைத்திலுமிருந்து வேறுபட்டும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் சுய கருத்தியலை, சுய அரசியலைத் துவக்கினார்.

ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார்.

இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்:

இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நகரும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்.
1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடுஇணையற்ற மாமனிதர்.

பௌத்தத்திற்கு மாறல்

அயோத்தி தாசர் தனது வழிநடப்பவர்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டைச் சந்தித்து பௌத்தத்திற்கு மாறும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.தமிழகப் பறையர்கள் பௌத்த மதத்தினரே என்றும் அவர்களுக்குச் சொந்தமான தமிழகத்தை ஆரியர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அயோத்திதாசர் கருத்துத் தெரிவித்தார்.:9–10 ஆல்காட்டின் உதவியுடன் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரிடம் தீட்சை பெற்றார். அங்கிருந்து திரும்பிய அயோத்திதாசர் சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியைத் தோற்றுவித்து, தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார். ’’இந்திய பௌத்த சங்கம்’’ எனவும் அறியப்பட்ட சாக்கிய பௌத்த சொசைட்டி 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

தமிழன் இதழ்


ஒரு பைசாத் தமிழன்-ஜூலை 1907 இதழ்
ஒரு பைசாத் தமிழன்
சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 சூன், 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது[5][8]

இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் அந்த இதழில் விளக்கியிருந்தார்:

"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடும் நேர்த்தியாகவும் இதழின் சின்னம் இருந்தது.

முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டது.

பெயர்மாற்றம்

தமிழன்-செப்டம்பர் 1908 இதழ்
ஓராண்டுக்குப் பிறகு, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' (26. ஆகத்து 1908 - பக் 2) என்ற விளக்கத்துடன் 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26. ஆகத்து 1908 முதல் வெளிவந்தது.

தமிழனில் வெளி வந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக மகளிர் பத்தி (Ladies column) தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றது. அடுத்து பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.

மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ’யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ’வேஷ பிராமண வேதாந்த விவரம்’, ’ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு’, ’விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தற்வு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீணடாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன.

திராவிட அரசியலின் முன்னோடி

திராவிட மகாஜன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.

படைப்புகள்

பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

க. அயோத்தி தாசர் நூல்கள்

அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
அம்பிகையம்மன் சரித்திரம்
அரிச்சந்திரன் பொய்கள்
ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
இந்திரர் தேச சரித்திரம்
இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
சாக்கிய முனிவரலாறு
திருக்குறள் கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர் வரலாறு
நந்தன் சரித்திர தந்திரம்
நூதன சாதிகளின் உள்வே பீடிகை
புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
புத்த மார்க்க வினா விடை
மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
முருக கடவுள் வரலாறு
மோசோயவர்களின் மார்க்கம்
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
விபூதி ஆராய்ச்சி
விவாஹ விளக்கம்
வேஷ பிராமண வேதாந்த விவரம்
பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
வேஷபிராமண வேதாந்த விவரம்
தொடங்கி நடத்திய இதழ்கள்
தொகு
திராவிடப்பாண்டியன் (1885)
(ரெவரென்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து)

ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907–1914)

சனி, 4 மே, 2019

அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் , மே 5, 1914


அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் ,
மே 5, 1914

மே 5 பன்மொழி புலவர் , தென்னிந்திய பௌத்த மீட்டுருவாக்கத்தின் தந்தை தாத்தா அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாளில் அவரைப் பற்றி அறிவோம்.

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 – மே 5,1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் #ஆதிதிராவிட #மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் #பறையர்களின்  #மூலச் #சமயம் #பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார்.

1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.

அயோத்தி தாசர்

பண்டிதர் அயோத்திதாசர்
பிறப்பு
காத்தவராயன்
மே 20, 1845
நீலகிரி மாவட்டம்
இறப்பு
1914
தேசியம்
இந்தியர்
பணி
சித்த மருத்துவர்
அறியப்படுவது
தென்னிந்திய #சாக்கிய #பெளத்த #இயக்கம்
பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவருடைய #தாத்தா பட்லர் #கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.....

கல்வியும், புலமையும்
________________________

அயோத்திதாசர் 1845 மே 20 இல் சென்னை  ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது..

தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.

சமயம் தொடர்பான கருத்துகளும் பணிகளும் :--

தன்னுடைய 25 ஆம் வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை  அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவினார் . அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகி ராமன், இராசராம் என்றும். புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி எனப் பெயர் சூட்டினார்.

அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குவாதம், பார்பனிய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாகவும் அது அமைந்தது.

பண்டிதருடைய காலம் (19 நூற்றாண்டின் பிற்பகுதி ) இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலமாக இருந்தது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தும் இந்து சமயத்துக்குள் திணிக்கப்பட்டது. 'யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர் இல்லையோ' அவர்களெல்லாம் இந்துக்கள் என 1861 முதல் 1891 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'இந்து' அடையாளத்திற்குள் வலிய திணிக்கப்பட்டார்கள். பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் 'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தவர். அவ்வாறு 'இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளம் ஒன்றைத் தேடத் துவங்கினார். தமிழகத்தில் பக்தி வடிவங்களில் 'தமிழ்ச் சைவ' மீட்டுருவாக்க முயற்சி நடந்தது. இதுவும் ஒரு வகையில் சாதியத்தை உள்வாங்கியவர்களின் முயற்சியாகவே இருந்தது. 'தமிழ் சைவம்' பிராமண எதிர்ப்புப் பேசினாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் பண்டிதர் தமிழ் சைவத்தோடு இணையவில்லை.

பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, மேற்படி 10 கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ..
இந்த அவமானபடுத்துதல் பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. நாம் யார்? இந்துக்களா ? சாதி இழிவுகள் ஏன் நம்மீது திணிக்கப்படுகிறது? என எண்ணி சுயத்தைத்தேடி நகர்ந்தார். வேதம், இந்து, பிராமணீயம்,சடங்குவாதம்..முதலானவற்றை கேள்விக்குட்படுத்தினார்....

ஆதி திராவிடர்களுக்கான செயற்பாடுகள் :--

1870 களில் அயோத்தி தாசர் நீலமலையின் தோடர் மற்றும் பிற மலைவாழ் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தார். 1875இல் அத்வைதானந்த சபையை நிறுவினார். வெசிலியன் மிஷன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக நடத்திய அருட்திரு டி ஜான்ரத்தினத்துடன் (Rev. John Rathinam) தொடர்பு ஏற்பட்டது. ஜான்ரத்தினம் நடத்திய 'திரவிடர் கழகம்' அதன் சார்பாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார்[3].

1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார்....
 அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் திராவிட மாகாசன சபையை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்....
இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் புத்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன..!

ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார்.

இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்:

இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நகரும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்.
1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடுஇணையற்ற மாமனிதர்....

அறிவுவழி பௌத்தம் ஏற்றல் :--

அயோத்தி தாசர் தனது வழிநடப்பவர்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டைச் சந்தித்து பௌத்தத்திற்கு மாறும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்...
தமிழகப் பறையர்கள் பௌத்த மதத்தினரே என்றும் அவர்களுக்குச் சொந்தமான தமிழகத்தை ஆரியர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அயோத்திதாசர் கருத்துத் தெரிவித்தார்...
:9–10 ஆல்காட்டின் உதவியுடன் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரிடம் தீட்சை பெற்றார்... அங்கிருந்து திரும்பிய அயோத்திதாசர் சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியைத் தோற்றுவித்து, தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார். ’’இந்திய பௌத்த சங்கம்’’ எனவும் அறியப்பட்ட சாக்கிய பௌத்த சொசைட்டி 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது...

தமிழன் இதழ் :---

ஒரு பைசாத் தமிழன்-ஜூலை 1907 இதழ்
ஒரு பைசாத் தமிழன்
சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 சூன், 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது[4][7]

இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் அந்த இதழில் விளக்கியிருந்தார்:

"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடும் நேர்த்தியாகவும் இதழின் சின்னம் இருந்தது.

முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டது...

பெயர்மாற்றம் :--

தமிழன்-செப்டம்பர் 1908 இதழ்
ஓராண்டுக்குப் பிறகு, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' (26. ஆகத்து 1908 - பக் 2) என்ற விளக்கத்துடன் 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26. ஆகத்து 1908 முதல் வெளிவந்தது.

தமிழனில் வெளி வந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக மகளிர் பத்தி (Ladies column) தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றது. அடுத்து பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.

மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ’யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ’வேஷ பிராமண வேதாந்த விவரம்’, ’ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு’, ’விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தற்வு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீணடாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன...

திராவிட அரசியலின் முன்னோடி :--

திராவிட மகாஜன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்....

படைப்புகள :-

பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

க.அயோத்தி தாசர் பண்டிதனார் நூல்கள் :-

அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
அம்பிகையம்மன் சரித்திரம்
அரிச்சந்திரன் பொய்கள்
ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
இந்திரர் தேச சரித்திரம்
இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
சாக்கிய முனிவரலாறு
திருக்குறள் கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர் வரலாறு
நந்தன் சரித்திர தந்திரம்
நூதன சாதிகளின் உள்வே பீடிகை
புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
புத்த மார்க்க வினா விடை
மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
முருக கடவுள் வரலாறு
மோசோயவர்களின் மார்க்கம்
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
விபூதி ஆராய்ச்சி
விவாஹ விளக்கம்
வேஷ பிராமண வேதாந்த விவரம்
பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
வேஷபிராமண வேதாந்த விவரம்
தொடங்கி நடத்திய இதழ்கள்
திராவிடப்பாண்டியன
ஒரு பைசா தமிழன், ஆகிய பத்திரிக்கைகளை நடத்தினார்.

சனி, 13 ஏப்ரல், 2019

தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14.



தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு

ஒரு புத்தாண்டுக் கோலம்
கடைபிடிப்போர்
தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ் தமிழர்
வகை
பண்டிகை,
முக்கியத்துவம்
தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாட்டங்கள்
பகிர்ந்து உண்ணுதல், பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
நாள்
தமிழ் நாட்காட்டியில் சித்திரை முதல் நாள்
2018 இல் நாள்
ஏப்ரல் 14
தொடர்புடையன
வைசாக்கி, விஷூ (கேரளா), பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய்லாந்தின் புத்தாண்டு


ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

வரலாறு
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி  முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.

மரபுகள்

தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி. புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
தைப்புத்தாண்டு சர்ச்சை
தைப்புத்தாண்டு
முதன்மைக் கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்  தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஆண்டுகள்
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.
சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்
 பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பானை தினம் ஏப்ரல் 13.


பானை தினம் ஏப்ரல் 13.

மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.

பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.


பானை செய்முறை :

இதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி  , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள்  (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள  வண்டிச்சக்கரத்தின்   நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் .


பானை வகைகள்

நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.

அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
ஓதப் பானை - ஈரப் பானை
ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
கரிப்பானை - கரி பிடித்த பானை
கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
காடிப் பானை - கழுநீர்ப் பானை
காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
கூர்ப் பானை - கூர் முனைப் பானை
கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
சின்ன பானை - சிறிய பானை
தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
படரப்பானை - அகற்ற - பெரிய பானை
பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
மிண்டப் பானை - பெரிய பானை
மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை


பானைகளுக்குள்பானைகளுக்குள்  பண்பாடு..  பண்பாடு.

இயந்திரத்தைக் காட்டிலும் மனித கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களில் கலைநயம் மிளிரும். கலைநயத்துடன் பக்குவமாய் வடிவமைக்கப்படும் பொருள்தான் மண்பானை.பழந்தமிழர்கள் களிமண்ணால் செய்து சூளையில் சுட்டு பயன்படுத்திய தொழில்நுட்பமே பானை. உலோகங்கள் கண்டுபிடிப்பதற்கு முன் சமைக்கவும் தண்ணீர் பிடித்து வைக்கவும் பானைகள் பயன்படுத்தப்பட்டன; பண்டங்கள் நிரப்பி வைக்கவும் பயன்பட்டன. பிள்ளைகள் விளையாடும் சின்ன சொப்பில் இருந்து பெரிய பெரிய பானைகள் வரை விதவிதமான வடிவில் தயாரிக்கப்பட்டன.பானைகளை செய்வதற்கு அதற்கென்று உரிய களிமண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அதை பதமாகக் குழைத்து சக்கரத்தில் ஏற்றி தேவையான வடிவில் பானைகளைச் செய்வார்கள்.உலக நாகரிகத்தின் முன்னோடியாக மண்பானைகள் கருதப்படுகின்றன. மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஓட்டுத்துகள்களைக்கொண்டு காலத்தையும் நாகரிகத்தையும் கண்டறிகின்றனர் தொல்லியல் அறிஞர்கள். பானைகளிலும் பாறைகளிலும் சித்திரங்கள் எழுதித் தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட மனிதன் எழுத்துருவைப் பிற்காலத்தில் கண்டுபிடித்தான். தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இறந்தவர்களை பானைக்குள் வைத்து புதைக்கும் பழக்கம் ஆதிக்காலத்தில் இருந்துள்ளது. இதை ஈமத்தாழி என்று அழைத்தனர். மண் சட்டியை பானை கலம் குடம் தாழி குழிசி தசும்பு என பல்வேறு பெயர்களில் அழைத்தனர். பல்வேறு வடிவங்களில் அமைத்தனர்.'மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறை' என்பது புறநானூற்று(௩௩) வரி. காட்டில் வேட்டையாடிய வேடுவன் மான் கறியை வட்டியிலே கொண்டு வந்து கொடுக்கிறான். அதற்கு பண்டமாற்றாக ஆயர்குல பெண் தயிரை பானையில்(தசும்பு) கொண்டுவந்து தருவாள் என்கிறது இந்தப் பாடல்.'ஆங்கண் இருஞ்சுனை நீரோடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி'இது அகநானூற்று(௩௯௩)பாடல். பானைகளில் (குழிசி) சுனை நீர் கொண்டு வந்து சோறு சமைத்து உண்டதை தெரிவிக்கிறது இந்தப் பாடல்.பானை குடங்களைச் செய்து பழகிய தமிழர்கள் அக்குடங்களில் அழகியலை புகுத்தினர். பல்வேறு பூ வேலைப்பாடுகளையும் வண்ணங்களையும் தீட்டி அழகு பார்த்தனர். 'நுண் செயல் அம்குடம் இரீஇப் பண்பின்'(அகம் ௩௩௬) என்ற வரிதான் நம் மூதாதையர் பானைகளில் வண்ணங்களையும் ஓவியங்களையும் தீட்டி மகிழ்ந்தனர் என்பதற்கு சாட்சி.பண்டை தமிழ் மக்கள் இறந்து விட்டால் ஈமத்தாழி எனப்படும் பெரிய பானைகளில் வைத்து புதைத்தனர். அரசன் மீது அன்பு வைத்திருக்கிறாள் ஒரு பெண். அரசனோ இறந்து விடுகிறான். அந்தப் பெண்ணோ அரசனுடன் சேர்ந்து தானும் இறந்து போக ஆசைப்படுகிறாள். அதற்காக குயவனிடம் தனக்கும் சேர்த்து பெரிய பானையாக செய்யுமாறு கூறுகிறாள். 'கலம்செய்கோவே கலம் செய் கோவே......வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி'(௨௫௬)என்று துயரத்துடன் வேண்டுகோள் வைக்கிறாள். மண்பானையில் சமைக்கும் உணவு சுமை மிகுந்தது. ஆரோக்கியம் மிக்கது. ஆனால் மண் பானைகள் வெறும் சமையல் பாத்திரங்களாக மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவை சரித்திர பானைகளாகவும் காலத்தை அறியும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன.மண்ணின் இயல்புமண்ணுக்கென்று ஓர் இயல்பு உண்டு. வெப்பமற்று இருக்கையில் தனித்தனித் துகள்களாய் இருக்கும். ஒன்றோடொன்று பிணைபடாமல் அதன் மூலக்கூறுகள் அமைந்திருக்கும். ஆனால் ஈரமானதும் அவற்றுக்கிடையே நீரேறுவதால் சற்றே நெகிழ்வடைந்துவிடும். வண்டல் அதிகமுள்ள களிமண் தான் ஏற்றுக்கொண்ட நீரை எளிதில் இழக்காது. முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கும். அந்த மண் தான் பானைகள் செய்வதற்கு ஏற்றது. நெகிழ்வும் நுண்மையும் களிமண்ணுக்கு அதிகம். அவ்வாறு ஈரத்தில் குழைத்து குழைத்துப் பிசைந்த களிமண்ணை தேவையான வடிவங்களில் வார்த்து எடுக்கலாம். வார்க்கப்பட்ட பொருள்கள்தாம் மட்பாண்டங்கள். பின்பு அவற்றைக் காயவைத்தாலோ தீயிலிட்டுச் சுட்டாலோ பிரிக்கமுடியாதவாறு இறுகிவிடும். அதனால்தான் சுட்ட பாண்டங்கள் உறுதியாக இருக்கின்றன. நன்றி தினமலர்.


ஆரோக்கியம் தரும் மண் பானை சமையல்

உணவு பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அனைவருமே தங்களுடைய ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே வரத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் ஆர்கானிக் பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் தயாரிக்கப்படுகின்ற உணவின் மூலக்கூறுகளால் மட்டுமே, முழு ஆரோக்கியத்தை பெற முடியாது. உணவு சமைக்கப்படும் பாத்திரம், எரியூட்டப்படும் நெருப்பு ஆகியவையும் முக்கியம்தான் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“உணவு சமைப்பதற்கு மண் பாத்திரமே மிகச்சிறந்தது. மண்பானை பாத்திரம் என்பது மரபு மட்டும் அல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரித்து தரக்கூடியது. மண் பானை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது. இப்போது கிடைக்கக்கூடிய பாத்திரத்தில் உலோகத் தன்மை இருப்பதால் உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் சில்வர் பாத்திரத்தில் சமைத்த உணவை உண்ணுவது சிறந்தது. ஆனால் இவை அனைத்தும் வியாதி உள்ளவர்களுக்கு சொல்லக்கூடியது. நல்ல பசி, நல்ல தூக்கம், சிக்கல் இல்லாத இயற்கை உபாதை, இவை மூன்றுமே மனிதனுக்கு மூன்று தூண்கள் போன்றது. இவை மூன்றையுமே மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நமக்கு வழங்குகிறது. மண் பானை ஒரு குளிர் பதன பொருளாகவும் பயன்படுகிறது.

சென்னை போன்ற இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. ஆனால் மண் பானையை பயன்படுத்த முடியும். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண் பானையில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. மண்பானை உணவு ரத்தக் குழாய்களை சீராக்குகிறது, ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

உடல் சூட்டை தணிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ள வேண்டி நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பதே புத்திசாலித்தனம். இயற்கை உணவுகள் எப்பொழுதுமே நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது. அவற்றை முறையாக சமைத்து உண்ணும் போதுதான் அதனுடைய முழு சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.


மண்பானை சமையல் & மண் பானை குடிநீர் நன்மைகள்:

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும்.மண்பானை சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண்பானை சமையல் முறையில் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

மண் பானை பயன்கள் :
மண்பானை சமையல்:
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.

மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்றவை குணமாகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. நீண்ட ஆயுள் தருகிறது. ஆகையால் நாம் தினமும் மண்பானையில் சமைப்போம்.


மண் பானை குடிநீர் :

மண் பானை குடிநீர் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்தது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. .

நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன. அந்த தாதுக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கப்படும்.

மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.


தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும். பிராண சக்தி அதிகரிக்கும். மண் பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.

புட் பாய்சன் (Food Poison) குணமாக கைவைத்தியம்..!

 முன்னோர்கள் கூறிய மண் பானை பயன்கள் -:
மண்பானை சமையல் அந்த காலத்து முன்னோர்கள் அதிக வயது வரை வாழ்ந்த காரணம் என்ன என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் மண்பானையில் சமைத்தது தான் காரணம்.

மண்பாண்டத்தை மட்டும் அந்த காலத்து முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர்.

அவற்றிலும் வெள்ளிப் பாத்திரங்கள் உடலுக்கு மிக அதிகமாக குளிர்ச்சியை அளிக்கிறது.

நீண்ட ஆயுள் வேண்டுமா?களிமண் பாத்திரங்கள்
நாம் உடலுக்கு அதிகம் நன்மை அளிக்க கூடிய பித்தலை, செம்பு, வெண்கலம் மற்றும் மண்பானைகள் ஆகியவற்றை தினமும் உங்கள் சமையல் பாத்திரங்களாக பயன்படுத்தினாலே போதும். நீண்ட ஆயுள் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

மண் பானை பயன்கள் அறிந்து கொண்டீர்களா சரி இனியாவது மண்பானை சமையல் மற்றும் மண்பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.


செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

உலக வானொலி தினம் பிப்ரவரி 13.


உலக வானொலி தினம் பிப்ரவரி 13.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல்,  ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. 
பிறகு 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. 
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்பு சம்பந்தமான முடிவெடுப்பவர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .


மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .

வீர வணக்கம் ! வீர வணக்கம் !!

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.

சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.

சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.

இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.

'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.


வியாழன், 24 ஜனவரி, 2019

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!

பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

பெண் குழந்தைகள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்....

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

புதன், 9 ஜனவரி, 2019

பொங்கல் விழா தகவல்கள்


பொங்கல் விழா தகவல்கள்...

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை (13-1-18)

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை (சனிக்கிழமை) கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.
இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.



இரண்டாம் நாள் தைப்பொங்கல் (14-1-18)

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் (15-1-18)

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் (16-1-18)

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். நன்றி மாலை மலர்.