வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

உலக சிங்கம் தினம் – ஆகஸ்ட் 10


உலக சிங்கங்கள் தினம் ஆகஸ்ட் 10,
World Lion Day August 10,

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.  ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும்போது, அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப் பரவல் இயற்கையாய் நடைபெறுகிறது. இது போல பறவைகள், பூச்சிகள் முதல் காடுகளின் ராஜாவான சிங்கங்கள் வரை ஒவ்வொன்றும் தமது பங்குக்கு இயற்கையோடு இயற்கை யாய் இணைந்து வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இயற்கையை அளவுக்கு அதிகமாய் சுரண்டி பிழைக்கிறது.இப்படி உலகம் முழுவதும் இன்று அருகிக் கொண்டே இருக்கும் காடுகளை காப்பாற்றும் முயற்சி யில் ஒன்றுதான் உலக கானுயிர்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம். அப்படித்தான் உலக புலிகள் தினம், உலக யானைகள் தினம்,  உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆக. 10-ம் தேதி (உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் மட்டுமே சிங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும், அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும் சிங்கங்கள், இயற்கையிலேயே கேட்கும் திறன் அதிகம் பெற்றவை. சிங்கங்களின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்பது அதன் சிறப்பம்சம். ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரையிலும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ வரையிலும் எடை கொண்டதாக இருக்கும். “வனங்களின் அரசன்” என வர்ணிக்கப்படும் சிங்கங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வலியுறுத்தும் வகையில், உலக சிங்கங்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது


இது குறித்து கானுயிர் ஆர்வலர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, “இன்றைய கானுயிர்களில் உள்ள பெரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையை வைத்தே, நமது காடுகளின் வளத்தை எளிதாக கணக்கிட்டு விடலாம். கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்தியாவில் 44 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை, கணக்கில்லா வேட்டைகளின் மூலம் இன்று வெறும் 2,226 மட்டுமே உள்ளன. புலிகளைப் போல அல்லாமல், திறந்த வெளியில் வாழப் பழகிய சிங்கங்களுக்கு அவைகளின் வாழ்க்கை முறையே எமனாகிப் போனது. மனிதர்களின் பேராசை களால் தொடர்ந்து சிங்கங்கள் கடுமையான அழிவை சந்தித்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கிழக்கு ஐரோப்பா, பாரசீகம் என்று அழைக்கப்பட்ட ஈரானில் இருந்து ஈராக், பலூசிஸ்தான், இந்தியாவின் மேற்கு, மத்திய பகுதிகள் முழுவதும் பரவி நர்மதை நதிக்கரை வரை வாழ்ந்து வந்த ஆசிய சிங்கங்கள் இன்று வெறும் 500 சதுர மைல் பரப்பளவுள்ள வனப் பகுதியில் முடங்கி கிடக்கின்றன.


முதலாம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்களின் அழிவுகள் துவங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் பாரசீகம், மற்றும் இந்தியாவில் ஆங்கிலேயர் களாலும், மன்னர்களாலும் வேட்டையாடி கொன்று குவிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடையும் வேளையில் ஜுனாகத் நவாப்பின் காப்புக்காடுகளில் மட்டும் ஒரு சில ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவைகளின் சந்ததிகளே இன்று குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் வாழ்கின்றன. 2015 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இவைகளின் எண்ணிக்கை வெறும் 523 மட்டுமே.


அதில் முழு வளர்ச்சி அடைந்த ஆண் சிங்கங்கள் எண்ணிக்கை 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் குட்டிகள் 213 என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிங்கங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வனப்பகுதிகளுக்கு வெளியே இருக்கிறது என்பதே.” என்றார்கள்.


#lion_day
"காட்டின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கத்தினை கவுரவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி 'உலக சிங்க தினமாக' கொண்டாடப்படுகிறது.

வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்குகிற சிங்கத்திற்கு மரியாதையை செலுத்தும் இந்த நிகழ்வினை, 'பிக் கேட் ரெஸ்க்யூ' என்னும் அமைப்பு உருவாக்கியது. இதுவே உலகிலேயே சிங்கங்களுக்கென்று பிரத்தேயேகமாக அமைந்த ஒரு சரணாலயமாகத் திகழ்கிறது. இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மக்கள் ஒன்று கூடி தங்களால் இயன்ற வகையில் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்

சிங்கங்களை பொறுத்த வரை, மனிதர்களோடு அதற்கு உள்ள தொடர்பு என்பது, 32 ஆயிரம் வருடங்களாகத் தொடர்கிறது. பிரான்சின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பேலியோலித்திக்' கால மனிதனின் குகை ஒவியங்களில் கூட சிங்கங்கள் பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.


பண்பாட்டு ரீதியாக பொறுத்த வரை பைபிளில் 157 இடங்களில் சிங்கங்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேறு எந்த மிருகங்களை பற்றியும் இந்த அளவில் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் தேசங்களின் கொடிகள் , சின்னங்கள் ஆகியவற்றில் சிங்கத்தின் உருவம் இடம்பெறுகிறது.

சிங்கங்களில் வாழிடம் அழிக்கப்படுவது, உணவு கிடைக்காமல் போவது, மனிதர்களினால் உண்டாக்கும் பிரச்சினை ஆகியவையே தற்போது சிங்கங்களுக்கான தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சிங்கங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து வருகிறது என்ற போதும், இந்தியாவைப் பொறுத்த வரை சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.


#world_lion_day_august_10

உலக சிங்க தினம்; அழிவின் விளிம்பில் ‘காட்டு ராஜா’- 2 லட்சமாக இருந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்தது

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டை யாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாது காக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது.


பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

ஆப்பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்களில் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங் கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள்.


ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங் கங்கள். இவை மிக அழகான வையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன. ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.


இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித - விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன. அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம் என்றார்.

உலக பூனை தினம் ஆகஸ்ட் 8.


உலக பூனை தினம் ஆகஸ்ட் 8.(World Cat Day)

பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.


உலகளாவியரீதியில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி
உலக பூனை தினமாக
கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில்,
பூனைகள் தொடர்பிலான
சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

🎯உலக பூனை தினம்🐒 (World Cat Day)

🐒பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது👀.

🐒உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.

🐒உலகில் 40 வகையான பூனை இனங்களில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பூனைகள் உலகில் வாழ்கின்றன.ஆய்வுத் தடயங்களின் பிரகாரம், உலகில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வீட்டுப் பூனைகள் வாழ்ந்துவருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

🐒பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.

🐒பூனைகளுக்கு சுவை அரும்புகள் இல்லை.

🐒பூனைகள் 100 இற்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.

🐒சராசரியாக பூனை ஒரு நாளில் 16-18 மணி நேரங்கள் உறங்குகின்றன.

🐒மனிதர்களின் கைரேகையினைப் போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவையாகும்.

🐒பூனையின் காதில் அவற்றின் இயக்கத்தினை கட்டுப்படுத்தும் 32 தசை நார்கள் உண்டு. இதனால், பூனைகள் தமது காதினை 180° வரையும் அசைக்கக்கூடியதுடன், அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டவையாகும்.

🐒பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகமானதாகும்.

🐒விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ் நாட்டினால் 1963ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தப் பெண் பூனை தனது விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமியினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

🐒இங்கே சுவாரஷ்சியமான விடயம் என்னவென்றால் Félix என்கின்ற பாரிஸ் நகர தெருப்பூனையே விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண் பூனை தப்பிச்சென்றமையினால் கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண் பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

🐒32 மாடிகள் (320மீட்டர்கள்) உயரத்திலிருந்து பூனைகள் காங்கிரீட் தரையில் விழுந்தாலும் அவை பெரும்பாலும் உயிர்பிழைத்து விடுகின்றன.


பூனைகள் பற்றிய தகவல்கள்:-

பூனை (Cat) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணும் விலங்கு ஆகும். இவை காடுகளில் வாழ்ந்து வந்தாலும் மனிதர்களால் பழக்கப்பட்டு பெருமளவில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வளர்ப்பு பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 கிலோவிலிருந்து 7 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்கு குறைவாகக் காணப்படும்.

சிறிய பறவைகள், எலி போன்ற சிறிய விலங்குகள், மீன்கள் போன்றவை இவற்றின் விருப்ப உணவுகளாகும். இவற்றின் கால் நகங்கள் கூர்மையாக வளைந்து தன் வேட்டை உணவினைப் பிடிக்க ஏதுவாக உள்ளன. பற்கள் கடினமான உணவினைக் கடித்து உண்ணக் கூடியதாகவும் இருக்கின்றன.

பூனைகள் இரவில் (இருட்டில்) நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை. அதுபோல் பூனைகளின் கேட்கும் திறன் மிக அதிகம். அவற்றின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகின்றன. இவை அதிகபட்சமாக 64 கிலோஹேர்ட்ஸ் வரையிலான சத்தத்தைக் கேட்கும் திறன் உடையவை. பூனைகளுக்கு 30 முதுகெலும்புகள் உள்ளன. பூனைகளின் மோப்ப சக்தி மனிதனை விட 14 மடங்கு அதிகம். இவை ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் உறங்கும்.

பூனையை போற்றுதும்!

எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும், என்ன டென்சனாக இருந்தாலும், ரிலாக்ஸ் பண்ண சிலர் பார்ப்பது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனை இடம்பெறும் கார்ட்டூன் தான். பூனையின் கண்களும், அதன் மீசையும் ஒரு அழகு தான். பூனையை தூக்கி அதன் தலையை ஆசையுடன் தடவி விட்டு பார்க்கும் சுகம் தனி தான்.
சாதாரணமாக, பூனை குறுக்கே போனால் சகுனத் தடை, காரியத் தடை என்று சொல்வார்கள். 'சகுனம் சரியில்லை, போற காரியம் ஜெயமாகாது; உள்ளே வா, ஒரு டம்ளர் தண்னி குடிச்சுட்டு போ' என்கிறோம். இது முழுதும் சரி அல்ல. ஏனென்றால் பூனைக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அதிலும் கடுவண் பூனைக்கு அபார சக்தி உண்டு. கரும்பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.
பூனைகள் எகிப்தியர்களால் வழிபடப்பட்டது. பூனைக்கு பல ஆயுள்கள், மறுவாழ்வுகள் (பிறவிகள்) என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் சமூக தாக்கத்தை இன்றும் உணரலாம். வி.ஐ.பி.க்கள் கோரும் ‘ஜெட்-க்ளாஸ் செக்கூரிட்டி’ கருப்பு பூனைகளுக்கு புல்லட் புரூஃப் வெஸ்ட் தயவில் ஆயுள் கெட்டி. எவரெடி பாட்டரியின் உருளைபரப்பில் உறையும் கருப்புபூனைக்கும் ஒன்பது ஆயுள்.
உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. செல்லப் பிராணிகள் என்று பார்க்கும்போது பூனையையும் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். அது குட்டி ஈன்றி அதனைப் பராமரிப்பது என்பதும் நல்லதுதான். பழங்காலத்தில் பூனை இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், எலி இல்லாத வீடும் இல்லாமல்தான் இருந்தது. அதனால் பூனையை வீட்டில் வளர்ப்பது ஒன்றும் தவறில்லை.
மதிமேல் பூனை, ருசி கண்ட பூனை, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என நினைக்குமாம்- இப்படி பூனை பற்றிய பழமொழிகள் உலவுகின்றன.
சாதரணமாக அதிக உயரத்தில் இருந்து குதித்தால் அடி அதிகம் படும். குறைந்த உயரத்தில் இருந்து விழுந்தால் அடி குறைவாக இருக்கும். பூனைக்கு இந்த விதி தலை கீழ்.
முதல் மாடியிலிருந்து விழும் பூனையைக்காட்டிலும், ஏழாவது மாடியிலிருந்து தரையில் விழும் பூனை அதிக சேதாரமின்றி தப்பிவிடும் என்று பௌதீகஸ்தர்கள் நிறுவியுள்ளனர். காற்றின் வழியே விழுகையில் பூனை பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்கிறதாம். காற்றின் உராய்வையும், குடை போன்ற வடிவத்தின் கீழ் மேல்புறங்களின் அழுத்த வித்தியாசங்களினாலும் கிட்டத்தட்ட மிதந்தவாறே தரையை அடைகிறது. தலைகுப்புறத் தள்ளிவிட்டாலும் சுதாரித்து இந்த ’பாரசூட் நிலையை’ அடைந்து விடுமாம். முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டால், சுதாரித்துகொண்டு இவ்வாறு பாரசூட் போல விழுவதற்குள் தரையை தொட்டுவிடுவதால் அடி பலமாக வாய்ப்பு அதிகம்.

பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும். ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம் அடைந்ததால் மக்கள் கவலையிலுள்ளனர். ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் பணக்கார பூனை - ரூ.1,400 கோடி சொத்து

உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த 19ம் திகதி காலமானார்.

கார்ல் லாகெர்பெல்ட் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ‘சவ்பெட்’ என பெயர் கொண்ட அந்த பெண் பூனை மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

கார்ல் லாகெர்பெல்ட் ஒரு பேட்டியின் போது, சட்டம் அனுமதித்ததால் தனது செல்லப்பிராணியான சவ்பெட்டை திருமணம் செய்து கொள்வேன் என்றும், கண்களின் வழியாக தாங்கள் இருவரும் உரையாடிக்கொள்வதாகவும் வேடிக்கையாக கூறினார்.

மேலும், சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்த அவர், தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதி பூனைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், கார்ல் லாகெர்பெல்ட் மறைவுக்குப் பின், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் சவ்பெட் பூனை பெயரில் உயில் எழுதப்பட்டிருப்பதாகவும், அதனை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் உலகிலேயே பணக்கார விலங்கு என்ற பெயரை ‘சவ்பெட்’ பூனை பெற்றுள்ளது.

பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?


சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.
பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.


டாம் அண்ட் ஜெர்ரி முதல் பீஸ்ட் வரை... இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பூனைகள்! #CatDay

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ தான். மனதில் எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் ஒரு 5 நிமிடம் டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனைகள் வரும் எதாவது ஒரு கார்ட்டூன் பார்த்தால் போதும். மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். பெரியவர்களைக் கூட குழந்தைகளாக்கிவிடும் வல்லமை படைத்தது தான் பூனை. பாத்திரத்தில் உள்ள பாலைத் திருட்டுத் தனமாக குடித்து விட்டு அமைதியாக எதுவுமே நடக்காதது போலிருக்கும் அந்த அப்பாவியான 'லுக்'கை பூனையால் மட்டுமே கொடுக்க முடியும். பூனைகளின் குறும்புத்தனத்தை கொண்டாடுவதற்காகவே ஆகஸ்ட் 8-ம் தேதியைச் சர்வதேச பூனை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.  பூனை தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. நம்முடைய வீட்டில் கூட ஜெர்ரியைப் பிடிக்கக் கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். பூனைக்கு அழகே அதனுடைய கண்களும் மீசையும் தான். அதை விடப் பூனை தன்னுடைய தலையை மேலும் கீழும் தூக்கிப் பார்க்கும் பார்வையை எத்தனைத் தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பூனை வீடியோக்களோ, புகைப்படங்களோ வந்தால் அதைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலையைச் செய்வார்கள். உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில் 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதன் கூட சுத்தத்தைப் பற்றி அதிகளவு அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் பூனை மிகவும் சுத்தமான விலங்கு. தனக்குக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தன் உடலின் மேற்பகுதியை நாக்கால் நக்கி நக்கி சுத்தம் செய்வதிலேயே செலவிடும். மீன் குழம்பை விட அதிகளவில் விரும்பி சாப்பிடக் கூடியது கருவாட்டுக் குழம்புதான். பூனைகள் சுமார் 18 லிருந்து 20 ஆண்டுகள் வரைதான் வாழக்கூடியது. ஆனால் இங்கிலாந்தில் பாபி என்ற பூனை 24 வயது வரை வாழ்ந்துள்ளது. பூனைகள் 24 வயது வரை வாழ்வது மனிதன் 114 வருடங்கள் வாழ்வதற்குச் சமமானது. மேலும், சில பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்களும் உள்ளன.

பூனைகள் பெரும்பாலும் 2.5 லிருந்து 7 கிலோ வரையிலான எடையுடன் இருக்கும். சராசரியாக 23-25 செ.மீ உயரமும், 46 செ.மீ உடல் நீளமும் வளரக்கூடியது. சாதாரணமாக நாயின் வால் 15 செ.மீ வரை தான் இருக்கும். ஆனால் பூனைக்கு 30 செ.மீ வரை நீளமான வால் இருக்கும். அதேபோல் பூனைக்கு மனிதனை விட 3 பற்கள் அதிகம். இதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் பூனைகள் மனிதனை விட 3 கி.மீ வேகம் அதிகமாக ஓடக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 48 கி.மீ வேகம் ஓடிவிடும். இரண்டே மாதத்தில் கர்ப்பமடைந்து,முதல்முறை மட்டும் 2 லிருந்து 3 குட்டிகள் போடும், இரண்டாவது முறையிலிருந்து 4 முதல் 6 குட்டிகள் வரைப்போடும். வாழ்நாளில் 150-க்கும் மேற்பட்ட குட்டிகளை போட்டுவிடும். கும்பகர்ணனைப் போல, ஒரு நாளைக்கு 12 லிருந்து 16 மணி நேரம் தூங்குமாம். அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் பூனையானது, டாம் அண்ட் ஜெர்ரியில் வருவது போலவே அதனுடைய தலை எந்த இடத்தில் நுழையுமே அந்த இடத்தில் எல்லாம் நுழைந்து விடும் உடலமைப்பைக் கொண்டது.

பூனைகளுக்கு அதிக இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் தமது காதை 180°வரை அசைக்கக்கூடியதுடன், தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாகவும் அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது. இரவில் சிறு சத்தம் கேட்டாலும், சட்டென்று இரையை வேட்டையாடிவிடும். பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன்னங்கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்குமாம். இதனால் சிறிது சத்தம் கூட இல்லாமல் வேட்டையாட முடியும். சத்தம் போடாமல் வேலையைக் கச்சிதமா முடிக்கும் திறமை பூனைகளுக்கே உள்ள ஒரு தனி சிறப்பு தான். மற்ற நேரத்தில் பூனைகள் 100-க்கும் அதிகமான சத்தம் எழுப்பும் என்பதும் ஆச்சர்யமிக்கது.

பழங்காலத்தில் பூனைகள் இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், அப்போதெல்லாம் எலிகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் அன்பாகப் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வீட்டில் ஒருவர் போன்று நேசித்து வளர்க்கத் தொடங்கினர். சாதாரணமாக, அதிகளவு உயரத்தில் இருந்து குதித்தால் அதிக அடிபடும். குறைந்தளவு உயரத்தில் இருந்து குதித்தால் குறைவாக அடி படும். ஆனால் பூனைகளுக்கு இது நேர்மறை. பூனைகள் 32 மாடி உயரத்தில் இருந்து குதித்தாலும் அவற்றுக்கு அடிபடுவது மிக மிகக் குறைவே. பெரும்பாலும் பூனைகள் அதிக உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்ளும். இதனால் அதிக உயரத்தில் இருந்து குதித்தாலும் மிகக் குறைவாகவே காயங்கள் ஏற்படும். ஆனால் குறைந்த உயரத்தில் இருந்து குதிக்கும்போது தங்கள் கால்களை தயார் செய்வதற்குள் கீழே விழுந்து விடுவதால் அதிக அடிபட்டுவிடுகின்றன.

வீடுகளில் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இணையத்திலும் பூனைகள் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டன. பூனைகளுக்கு என்றே ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள், அனிமேஷன்கள் என்று இணையதளத்தில் எல்லா இடங்களிலும் எதாவது ஒரு வகையில் பூனைகள் இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் உள்ள Pet-களில் அதிக பாப்புலராக இருப்பதே பூனைகள் தான். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பூனை புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. 3.5 லட்சம் பூனை உரிமையாளர்கள் பூனைகளுக்கென ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் கணக்குகள் (Account) வைத்துள்ளனர். இதில் 15% பேருடைய பூனைகள் இணையதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் Instagram மற்றும் SnapChat ஐ அவர்களின் பூனைகளுக்காகவே பயன்படுத்துகின்றனர். பூனைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தும் 3-ல் இரண்டு பேர் பூனைகளுடன் செல்ஃபி எடுத்துப் பதிவிடுகின்றனர். யூடியூப்-ல் இதுவரை அதிகமாகப்  பார்க்கப்பட்டது  Nyan Cat வீடியோ தான். இதுவரை சுமார் 16.1 கோடி பேர் பார்த்துள்ளனர். பூனை பற்றிய வலைத்தளங்கள் மட்டுமின்றி திரைப்படங்களும் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி,  தன்னுடைய குறும்புத்தனத்தைக் காட்ட விண்வெளி வரை சென்றது ஃபெலிசிட் (Felicette)என்ற பெண் பூனை. 1963ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி  விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணம் முடிந்து உயிருடன் பூமிக்குத் திரும்பியதே இதன் சிறப்புக்கு முக்கிய காரணம்.

பூனைகளின் குறும்புத்தனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு  இவர்கள்தான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், 'சாக்ஸ்' என்ற பூனையை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் ஓய்வு அறை, பத்திரிகையாளர் அறை என எங்கு வேண்டுமானாலும் சுற்றிவர அதற்கு அனுமதி உண்டு. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இரண்டு பூனைகளை வளர்த்து வந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்தில் பூனைகளுக்கு உணவு ஊட்டுவார். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம் பூனைகளோடு நெருக்கமானவர். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என்று கூறியுள்ளார். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்துள்ளார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என்றும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது. வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள், இசையும், பூனைகளும் என்று கூறியது நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை  ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட பீஸ்ட் (Beast)என்ற பூனையை வளர்த்து வருகிறார். இது போன்று வின்ஸ்டன் சர்ச்சில், ஊர்சுலா என்ரெஸ், லெனின் என்று இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்துள்ளது பூனைகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எசமானரைக் கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், உலகம் முழுவதும் பூனை செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படுகிறது. உங்களுக்குப் போர் அடிக்கும் நேரத்தில் யூடியூபில் 'Cats'என்று மட்டும் தேடிப் பாருங்கள். நேரம் போவதே தெரியாது. உங்களுடைய வீட்டில் கூட கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். உங்களுக்கும்பூனைக்கும் இடையே நடைபெற்ற சின்ன சின்ன சுவாரஸ்யமான நிகழ்வை கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளலாமே...? 

உலக பூனைகள் தினம் ஆகஸ்டு 8-ந் தேதி



இன்று (ஆகஸ்டு 8-ந் தேதி) உலக பூனைகள் தினம்.

“யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்” என்பது ஒரு தமிழ் பழமொழி. அதற்கேற்ப, பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். கடந்த 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் பூனைகளை வீட்டில் வளர்க்கத்தொடங்கினர் என்கிறது வரலாறு. எகிப்தியர்கள் பூனைகளை புனிதமாக கருதினர். பூனை தலை மற்றும் பெண்ணின் உடலமைப்பு கொண்ட கடவுள் உருவத்தை எகிப்தியர்கள் வணங்கியுள்ளார்கள். பூனைகளைக் கடத்தி, வெளிநாட்டில் விற்றால், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. வீட்டில் பூனை இறந்தால், ஆண்கள் தங்கள் புருவத்தை மழித்து, துக்கம் அனுசரித்தனர்.

பொதுவாக, வீட்டுப்பூனை மற்றும் காட்டுப்பூனை என்று இரு வகைப்படும். உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன. இவற்றில் 40 இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாகும். இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன. பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும். தன் உடலை அவ்வப்போது நக்கி, சுத்தம் செய்துகொள்ளும்.

இரை தேட உதவும் உடல் அமைப்பைக் கொண்டவை பூனைகள். மனிதர்களுக்கு உள்ளதைவிட அதிகமான முதுகுத்தண்டு எலும்புகள் உள்ளதால், பூனையின் உடல் அதிக அளவில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அதனால், முதுகுத்தண்டை வளைத்து எழ முடியும். தன்னுடைய தலை நுழையும் அளவு ஓட்டை இருந்தால்கூட அதன்மூலம் அது வெளியேறும் ஆற்றல் கொண்டது. அதன் காதுகள் 180 டிகிரி சுழலும் ஆற்றல் கொண்டது. ஒரே சமயத்தில் இரண்டு காதுகளையும் வெவ்வேறு பக்கம் சுழற்றும் ஆற்றல் கொண்டது பூனை. அவற்றின் கண்களுக்கு மூன்று இமைகள் உண்டு. மூக்கிலுள்ள மீசைகள் அதை வழிநடத்துகின்றன. மூக்கின் முகட்டிலுள்ள பகுதி, மனிதனின் கைரேகை போன்ற தனித்தன்மை கொண்டது. ஒரு பூனைக்கு உள்ளது போன்று மற்றொரு பூனைக்கு இருக்காது. மூக்கின் நேர்கீழே இருக்கும் பொருட்களை பூனையால் பார்க்க முடியாது.

காட்டுப்பூனைகள் தனித்து வாழும். ஆனால், வீட்டுப்பூனைகள் கூட்டமாக வாழும். பொதுவாக இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருக்கும். குறிப்பாக, பூனைக்குட்டிகள் தூங்கும்போதுதான், வளர்ச்சிக்கான இயக்குநீர் (ஹார்மோன்) சுரக்கும். ஆகையால், ஒரு நாளில் சுமார் 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்கும். அது தன் வாழ்நாளில் சுமார் 70 சதவீத நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும். பொதுவாக தூங்குவதற்கு, உயரமான இடத்தையே தேர்ந்தெடுக்கும்.

பூனையின் கண்பார்வைத் திறன் கூர்மையானது. அதன் கேட்கும் திறனும் அசாத்தியமானது. எலி நடக்கும் சத்தத்தைக்கூட கேட்கும் ஆற்றல் அதற்கு உண்டு. அதிக அளவு வெப்பத்தை தாங்கக்கூடியவை. பூனைகள் 100 விதமான சத்தங்களை எழுப்பும். ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அதை பிற பூனைகள் புரிந்துகொள்ளும்.

பூனைகள் இறைச்சி மற்றும் தாவர உணவு என்று இருவகை உணவுகளையும் உண்ணும் தன்மை கொண்டவை. மிதமான சூடு கொண்ட உணவுகளையே உண்ணும். மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்ணுவதில்லை. கடல் தண்ணீரை குடிக்கும் தன்மை கொண்டவை. பூனைக்கு பசும்பால் தரக் கூடாது. மேலும், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, திராட்சை, சாக்லெட் ஆகியவற்றை தரக்கூடாது.

பூனைகள் மனிதர்களோடு தோழமை உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை. மனிதர்களின் மீது தனது உடலைத் தேய்த்து தன் தோழமை உணர்வை வெளிப்படுத்தும். பூனைக்கு பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. எனவே, பூனையின் உடல்நிலை சரியில்லை எனில், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உரிய காலத்தில் நோய் தடுப்பூசிகளை போடவேண்டும். பூனைகள் சராசரியாக 7 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. விதிவிலக்காக 38 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த எமகாதகப் பூனையும் உண்டு. மேலைநாடுகளில் பூனையின் உரோமத்திலிருந்து பெண்களுக்கான மேலாடைகள் செய்யப்படுகின்றன. ஒரு மேலாடை செய்ய 24 பூனைகளின் தோல் தேவைப்படும். மேலும், தொப்பிகள், போர்வைகள், கையுறைகள், பொம்மைகள் போன்றவையும் பூனைத்தோலால் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பூனை குறுக்கே போனால், சிலர் அதை கெட்ட சகுனமாக கருதுவதுண்டு. இதே போன்ற நம்பிக்கை அமெரிக்காவிலும் உண்டு. ஆனால் அவர்கள், கருப்பு பூனை குறுக்கே போனால் மட்டுமே அதை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கருப்பு பூனை குறுக்கே போனால், அது நல்ல சகுனம்.

பூனை மரத்திலிருந்து இறங்கும்போது, தலையை கீழ் நோக்கி வைத்து இறங்காது. மிகக்குறுகலான பாதையிலும், மிகுந்த எச்சரிக்கையுடன், லாவகமாக, விழாமல் நடக்கும் ஆற்றல் கொண்டது. இதனால்தான், இவ்வாறு நடப்பவர்களை ‘பூனை நடை’ நடக்கிறார் என்கிறோம்.

உயரத்திலிருந்து பூனைகளை எப்படி தூக்கிப்போட்டாலும், அவை கீழே தரையில் விழும்போது, கால்களை ஊன்றி நிற்கும் தன்மை கொண்டவை. பூனையின் மூளை கிட்டத்தட்ட 90 சதவீதம் மனித மூளையைப் போன்றதே. அவற்றாலும், மனிதர்களை போல உணர்ச்சிகளைக் காட்ட முடியும். எங்கு சென்றாலும், தான் வசிக்கும் இடத்துக்கு சரியாக திரும்பி வரும் ஆற்றல் பூனைக்கு உண்டு. அதன் மூளையில் மின்காந்த சக்தி இருப்பதே காரணம். தன் உயரத்தைவிட ஆறு மடங்கு உயரத்தை தாண்டும் ஆற்றல் பூனைக்கு உண்டு. அலாஸ்காவிலுள்ள ஒரு நகரத்துக்கு பூனை ஒன்று 20 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளது. மெக்சிகோ நகரத்துக்கு 2013-ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் பூனை ஒன்றும் போட்டியிட்டது. வளர்த்த எஜமானர் இறந்த பிறகு, பூனை ஒன்றுக்கு 10.5 மில்லியன் டாலர் சொத்து கிடைத்தது.

1963-ம் ஆண்டு பிரான்ஸ் விண்வெளிக்கு அனுப்பிய பூனை, மீண்டும் உயிருடன் பூமிக்கு திரும்பி வந்தது பலருக்கும் ஆச்சரியம். டோவ்சர் என்ற பெண் பூனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த இது, ஸ்காட்லாந்தில் ஒரு மது உற்பத்தி நிறுவனத்தில் வளர்க்கப்பட்டது. அது தன் வாழ்நாளில் 28,899 எலிகளை கொன்றதே, இதுவரை உலக சாதனையாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தெய்வீக தன்மை வாய்ந்தவர்களின் ஆன்மா, தற்காலிகமாக தங்கும் இடமாக, பூனையின் உடல் விளங்குகிறது என்று நம்புகிறார்கள் பவுத்தர்கள். இந்திய வாஸ்து சாஸ்திரம் பூனைகள் குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறது. சாம்பல் நிற பூனை அதிர்ஷ்டத்தின் அடையாளம். ஒரு வீட்டில் கருப்பு பூனை நுழைகிறது என்றால், அது அதிர்ஷ்டம். நீங்கள் வெளியே பயணம் கிளம்பும்போது, இடது புறமாக பூனை போனால், அது நல்ல சகுனம். வீட்டினுள் பூனை குட்டிகள் போட்டால், அந்த குடும்பத்தலைவருக்கு செல்வம் சேரும். அந்த வீட்டில் தீய சக்திகள் நுழையாது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒருவரை, பூனை பின்தொடர்ந்து சென்றால், அது அந்த குடும்பத்துக்கு செல்வத்தை கொண்டுவரும். ஒரு வீட்டில் பூனை இறந்தால், அது அந்த வீட்டுக்கு ஆகாது. பூனை தன் ஒரு காதை மூன்று முறை நக்கினால், வீட்டுக்கு விருந்தினர் வருவார். மூன்று கருப்பு பூனைகளை ஒன்றாக கண்டால், அது மிகுந்த அதிர்ஷ்டமாகும்.

முனைவர் வே.ஞானப்பிரகாசம், முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
நன்றி தினத்தந்தி

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.1945 .


ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.1945 .

1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.

இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
பசிபிக் போர்முனை, இரண்டாம் உலகப் போர் பகுதி
Two photos of atomic bomb mushroom clouds, over two Japanese cities in 1945.
அணுகுண்டு வீச்சின் விளைவாக ஹிரோஷிமா நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (இடது); நாகசாக்கி நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (வலது)
நாள் 6–9 ஆகத்து, 1945
இடம் ஹிரோஷிமா; நாகசாக்கி. - சப்பான் நாடு
அணுகுண்டு வீச்சின் விளைவு விவாதத்துக்கு உரியது. சப்பான் சரணடைய தூண்டுதலாக இருந்திருக்கலாம்.
பிரிவினர்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொடி ஐக்கிய அமெரிக்க நாடுகள்
 ஐக்கிய இராச்சியம்

சப்பான் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
வில்லியம்.எஸ்.பார்சன்ஸ்
பவுல் டபிள்யு. டிப்பெட்சு, ஜூனியர்
ஷுன்ரோக்கு ஹதா
படைப் பிரிவுகள்
மான்ஹாட்டன் மாவட்டம்
509ஆம் கூட்டுக் குழு
இரண்டாம் பொதுப் படை
இழப்புகள்
இல்லை
90,000–166,000 பேர் ஹிரோஷிமாவிலும்
60,000–80,000 பேர் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டனர்
இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள்
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.


சரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை

நேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" (instrument of surrender) கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது.

பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.

அணுகுண்டு வீச்சு

இந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. "மான்ஹாட்டன் செயல்திட்டம்" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், "பருத்த மனிதன்" (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.

விளைவு

இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன.

அணுகுண்டுகளின் பெயர்கள்

ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்.


சின்னப்பையன்

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

குண்டுமனிதன்

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சப்பான் சரணடைதல்

1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் "சரண் ஆவணத்தில்" (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

அணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் "அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்" (Three Non-Nuclear Principles - சப்பானிய மொழியில்: Hikaku San Gensoku) என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு:

சப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது.
அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது.
அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது.
இக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், "தீர்மானங்களாக" (Resolutions) நிறைவேற்றப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

அணுகுண்டு வீச்சின் பின்புலம்
தொகு
பசிபிக் போர்

சப்பானுக்கு எதிரான விளம்பரம் - நேச நாடுகள் போரின் முதல் கட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை வலியுறுத்தின.
1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது.

1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.

அதே காலகட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு,[3] பிலிப்பீன்சுக்குச் சென்று, அதன்பின் போர்னியோவைத் தாக்கின.சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின.[6] 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது.

சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு

ஐக்கிய அமெரிக்காவின் போர் விளம்பரம் சப்பான் ஆக்கிரமிக்கப்படப் போவதை மக்களுக்கு அறிவிக்கிறது. "சாம் மாமா" (Uncle Sam) சட்டைக்கையைச் சுருட்டி, திருகிகைக் கையிலெடுத்து சப்பானியரைத் தாக்க அணியமாகிறார்.
1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன. "வீழ்ச்சி நடவடிக்கை" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை".

"ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.

நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது.

ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.


ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.1945 .

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. லிட்டில்பாய்அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் 1941, டிச.7ல், அதிர்ச்சி தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப் போரில் இறங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. ஜப்பானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. 1945 ஆக., 6ம் தேதி, ஜப்பான் நேரப்படி காலை 8:16 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4:46) ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3,50,000. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மீண்டும் தாக்குதல்:

மூன்று நாட்கள் கழித்து ஆக. 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது 'பேட்மேன்' என்ற 2வது அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை, 2.30 லட்சமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, 6 நாட்கள் கழித்து 1945 ஆக.15ல் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சிஅடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

90 : ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்படுவதற்கு முன், நகரில் 90 ஆயிரம் கட்டடங்கள் இருந்தன. தாக்குதலுக்குப்பின் 28 ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தப்பின. அதே போல 200 டாக்டர்கள் இருந்தனர். 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1780 செவிலியர்கள் இருந்தனர். தாக்குதலுக்குப்பின் 150 பேர் மட்டுமே பிழைத்தனர்.
நன்றி தினமலர் .

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை


தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்

தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்
தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அது குறித்த பரவலான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில். தாய்ப்பாலின் மகத்துவம், பாலூட்டுவதால் தாய்க்கு நேரும் நன்மைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், தாய்ப்பாலூட்டும் சரியா பொசிஷன் பற்றி விரிவாகச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.


சீம்பால்... சிறப்புகள்!

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டப்படும்போது, உலகம் முழுக்க ஒரு மில்லியன் சிசு இறப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், குழந்தை பிறந்ததும் பழுப்பு நிறத்தில் தாய்க்குச் சுரக்கும் முதல் பாலான சீம்பாலில் இருக்கும் கொலஸ்ட்ரம். அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்ல இந்த சீம்பால்தான், குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் நோய்த்தடுப்பு மருந்து. அதை அவசியம் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூடத் தேவையில்லை. ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.


தாய்ப்பாலின் மகத்துவம்!

தாய்ப்பாலால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள், புட்டிப்பால், பசும்பால் போன்றவற்றால் ஈடுகொடுக்க முடியாதவை.

* தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபுளின்என்ற நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தை பிறந்த முதல் 10 நாட்களில் தாய்க்குச் சுரக்கும் பாலில் அதிகளவு இருக்கும். அது பல்வேறு விதமான அடிப்படை நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும்;

தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கும்.

* தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளுக்குக் காதுகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இரண்டு வயதுவரை 43% குறைக்கப்படும்.

* பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்கும் தனிச்சிறப்பு தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு.

* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

* ‘லான்சர்’ மருத்துவ இதழின்படி, தாய்ப்பால் புகட்டுவதினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்கள் 13% தடுக்கப்படுகின்றன.

* புட்டிப்பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் 5% & 8% வரை அதிக
அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும் அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் திறனுடன் செயல்படுகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

தாய்ப்பால், தாய்க்குத் தரும் பலன்களும் அதிகம்!

* பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் ரத்தப்போக்கு குறையும்.

* தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடை இயற்கையாகவே இயல்புநிலைக்குத் திரும்பும்.

* குழந்தைக்குப் பாலூட்டும் காலம்வரை, அடுத்த கர்ப்பம் இயற்கையாகவே தவிர்க்கப்படும். இது ஒவ்வொரு பெண்ணைப் பொருத்து மாறுபடலாம்.

* தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் பின்னாளில் அந்தப் பெண்களைத் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

* தாய்க்கும் குழந்தைக்குமான அற்புத உறவை வலுப்படுத்தும்.

பாலூட்டும் தாய்க்கான சிறப்பு உணவுகள்!

பொதுவாக தாய்க்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 850 மிலி பால் சுரக்கும். அதற்காக அவருக்கு 600 கலோரி எனர்ஜி, இயல்பைவிட அதிகமாகத் தேவைப்படும். அதை ஈடுகட்டக்கூடிய சிறப்பு உணவுகள் இவை...

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

பழங்கள்

பால்
வேர்க்கடலை மற்றும் நாட்டுச் சர்க்கரை
பேரீச்சம்பழம், உலர் பழங்கள், நட்ஸ்

மீன், கோழி, ஆட்டு இறைச்சி


நாட்டுக்கோழி முட்டை

முளைகட்டிய தானியம் மற்றும் பருப்பு-, பயறு வகைகள்


தாய்ப்பால் புகட்டும் சரியான பொசிஷன் எது?

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, மார்பகக்காம்பும் அதைச் சுற்றியுள்ள கருவட்டப் பகுதியும் குழந்தையின் வாய்க்குள் இருக்கும்படி புகட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தையால் தாய்ப்பாலை முழு ஆற்றலுடன் உறிஞ்சிப் பெற முடியும். மார்பகக்காம்பில் மட்டும் வாயைவைத்துக் குடிக்கும்போது குழந்தைக்கு பாலை உறிஞ்சுவது சிரமமாக இருக்கும் என்பதுடன், தாய்க்கும் அது வலி, புண்ணை ஏற்படுத்தலாம்.

குழந்தையின் கழுத்தும் தலையும் நேராகவோ, அல்லது கழுத்து சற்று பின்புறம் வளைந்தோ இருக்க வேண்டும்.

குழந்தையின் உடம்பு, தாயை நோக்கி உடலோடு உடல் அணைத்தவாறு இருக்க வேண்டும்.

தாய் குழந்தையின் உடல் முழுவதையும் தன் கரங்களால் தாங்கிப் பிடித்து, அதற்கு கதகதப்பான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க வேண்டும்.

குழந்தை மற்றும் தாய் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது சரியான முறையில் பால் புகட்டப்படுவதுடன், குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கப்பெற்றதா என்பதை தாயால் உணர முடியும்.


தாய்ப்பால்... உலக நாடுகளில் இந்தியாவின் இடம்.?!

உலகிலேயே தாய்ப்பால் ஊட்டுவதில் முதல் இடம் வகிக்கிறது, ருவாண்டா. அந்நாட்டில் சுமார் 90% தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். இலங்கை 76% பெற்று இரண்டாவது இடத்திலும், கம்போடியா மற்றும் நேபாள நாடுகள் 74% பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. தாய்ப்பால் ஊட்டுவதில் 25% பெற்று இந்தியா 31வது இடத்தில் இருப்பது வருத்தமான செய்தி. வரும் ஆண்டுகளில் இளம் தாய்மார்கள் இந்நிலை மாற்றுவார்கள் என்று நம்புவோம்!
நன்றி விகடன்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் ஆகஸ்ட் 2.


தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்
ஆகஸ்ட் 2.

வண்ணம் தீட்டும் புத்தகங்கள் வண்ண படங்கள் கொண்ட புத்தகங்கள் போன்றவை குழந்தைகள் விரும்புவதில் பிரபலமான ஒன்றாகும். ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.

எனவே இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய வண்ண புத்தக தினம் ஆகஸ்டு 2.


தேசிய வண்ண புத்தக தினம் ஆகஸ்டு 2.

வண்ண மயமான உலகத்தில் நாம் வாழ்கிறோம். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களின் அழகில் மயங்காதோர் யார்? நீல வானும் நீலக் கடலும் நம் கண்ணைவிட்டு நீங்குமா? வானவில்லும் மயிலின் தோகை விரிப்பும் பல வண்ணங்களை நம் கண் முன் நிறுத்தவில்லையா?

சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை இப்படி ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அழகு.

வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் வாரி இறைத்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருவிழாவாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பல வண்ணக் கோலங்களால் அழகு படுத்துகிறார்கள். வண்ணங்களுடன் கற்பனையும் கலை உணர்வும் நிறைந்து தெருவே அழகில் மிளிர்கிறது.

வண்ணங்களில் எல்லோரும் ஈடுபாடு காட்டினாலும் குழந்தைகளே அதிக ஈடுபாடு காட்டுகின்றன. வண்ண வண்ணப் பொம்மைகளுடன் விளையாடுவதில் குழந்தைகளுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

வண்ணங்களில் உள்ள ஈடுபாட்டால் வண்ணம் தீட்டுவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று வெளிவரும் நாள், வார, மாத இதழ்கள் சிறுவர் பகுதியில் வண்ணம் தீட்டும் பகுதி இடம் பெறுகிறது. அவர்களின் வண்ணம் தீட்டும் ஆர்வம் வீட்டுச் சுவரையும் விட்டு வைப்பது இல்லை.

புத்தகங்களில் வண்ணங்கள் தீட்டுவது குழந்தைகளுக்கே உரியது. பெரியவர்களுக்கு உரியது அல்ல என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. பெரியவர்களும் புத்தகங்களில் வண்ணம் தீட்டுவதைப் பொழுதுப்போக்காகக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தில்தான் தேசிய வண்ணப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

வண்ணங்களின் அருமை, பெருமைகள் எங்களுக்கும் தெரியும். குழந்தைகளைப் போலப் புத்தகங்களில் வண்ணம் தீட்ட நாங்களும் குழந்தைகளா? பெரியவர்களாகிய எங்களைக் குழந்தைகளாகச் சொல்கிறீர்களே. இது நியாயமா? என்ற கேள்வி எழும்.

குழந்தைகளுக்கு எண்ணற்ற கதைகள் சொன்னவர் ஈசாப். அவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளுடன் குழந்தையாக அவர் விளையாடி மகிழ்வார்.

குழந்தைகளுடன் அவர் விளையாடுவதைப் பார்த்த ஒருவர் ‘எவ்வளவு பெரியவர் நீங்கள்? குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களே’ என்று கேட்டார்.

அதற்கு ஈசாப், ‘வில்லில் எப்போதும் நாணைப் பூட்டி வைப்பார்களா?’ என்று கேட்டார்.

‘எப்போதும் பூட்டி வைக்க மாட்டார்கள். வேட்டைக்குச் செல்லும் போதுதான் வில்லில் நாணைப் பூட்டி இருப்பார்கள். வேட்டை முடிந்ததும் நாணை அவிழ்த்து விடுவார்கள்’ என்று பதில் சொன்னார் அவர்.

‘எப்போதும் வில்லில் நாணைப் பூட்டி இருந்தால் நாண் தளர்ந்து விடும். வேட்டைக்குப் பயன்படாது. அதைப் போலத்தான் நானும் செயல்படுகிறேன். குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுகிறேன். மன அழுத்தம், பரபரப்பில் இருந்து விடுபடுகிறேன். கவலை நீங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறேன்’ என்றார் ஈசாப்.

குழந்தைகளைப் போலப் பெரியவர்களாகிய நாமும் வண்ணம் தீட்டுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கலாம்.

காலம் மாறுவது போல எண்ணங்களும மாறுகின்றன. பெரியவர்களும் வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான பெரியவர்கள் விரும்பும் சிறந்த பொழுதுபோக்காக வண்ணம் தீட்டுதல் உள்ளது.

இன்று அவர்களுக்காக வண்ணம் தீட்டும் புத்தகங்கள் நிறைய வெளிவருகின்றன. நுணுக்கமாக வண்ணம் தீட்டும்படி அவை அமைந்துள்ளன. கலைத்திறமையை வளர்த்து அவர்களைப் பெருமைப்படுத்துகின்றன.

நீண்ட பயணத்தின் போது வண்ணம் தீட்டும் புத்தகம் இருந்தால் போதும். பொழுது போவது தெரியாது. தனிமையை உணர மாட்டோம்.

வண்ணம் தீட்டும் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்து என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள். வண்ணம் தீட்டும் பயிற்சியை யோகம் என்றும் தியானம் என்றும் புகழ்கிறார்கள்.

சொற்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை வண்ணம் தீட்டுவதால் வெளிப்படுத்தலாம். நம்முள் உள்ள கலை உணர்வை வெளிக்கொண்டுவரும் முயற்சி இது.

இன்று பெரியவர்கள் பலர் வண்ணம் தீட்டுவதை இனிய பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நண்பர்களுடன் சேர்ந்து வண்ணம் தீட்டும் குழு அமையுங்கள். ஒன்றாக வண்ணம் தீட்டுங்கள். எண்ணங்கள் தூய்மையாகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளையுங்கள்.
- பேராசிரியர் எ.சோதி
நன்றி தினத்தந்தி.

திங்கள், 29 ஜூலை, 2019

தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ ஜூலை 30.


தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ ஜூலை 30.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனைகளில் செயல்பாடுகள், சாதனைகள், மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.


மேலும் மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இன்று சிறப்பு கண்காட்சியும், மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பயனாளிகள் தெரிவிக்கவும், மருத்துவமனை ஊழியர்கள் தங்களது பணிகள் குறித்து தெரிவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு உதவும் சமூக அமைப்புகளை பாராட்டவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளின் சாதனை குறித்த விளக்க கண்காட்சி அந்தந்த மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறை மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவும் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

உலக புலிகள் தினம் ஜூலை 29.



உலக புலிகள் தினம் ஜூலை 29.

இயற்கையை விரும்புபவர்களுக்குப் புலிகள் பிடிக்கும். புலிகளைத் தவிர்த்து விட்டு காடுகளைப் பாதுகாக்க முடியாது. புலிகளைப் பாதுகாப்பது என்பது மனிதர்களைக் காப்பது என்பதே பொருள். புலிகள் சுதந்திரமாகப் பாதுகாக்கப்பட்டால் காடுகளையும், காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உயிரினங்களின் உணவுச் சங்கிலியையும் காப்பாற்றி விட்டோம் என்றே அர்த்தம். 13 நாடுகளில்தான் இவை இருக்கின்றன. 15 முதல் 25 வருடங்கள் வரை வாழும் இவை உண்மையில் ஒரு தனிமை விரும்பி. மான்களை விரும்பி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் 105 நாள்கள்தான். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகளின் உடலில் உள்ள கோடுகள் ஒவ்வொரு புலிகளுக்கும் தனித்துவமானவை.

பதினெட்டு கிலோ எடை இறைச்சியை உண்ணும் இவை தனியாகவே வேட்டையாடும். தனியாக மோதினால் சிங்கத்தை வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல்கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாக கொண்டு வாழும். அதில் வேறொரு புலி வந்தால் சண்டைதான். 60 கி.மீ. வேகத்தில் ஓடும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும். இந்த நீளமான புலியைப் பற்றிய தகவல்கள் எல்லாம் ஏன் என்கிறீர்களா? சர்வதேச புலிகள் தினம் இன்றுதான்.


அழிந்து கொண்டே வரும் புலிகள் இனத்தைக் காப்பதற்கு என்றே 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் நாளை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மூவாயிரம் புலிகளை மட்டுமே உலகெங்கும் விட்டு வைத்திருக்கிறோம். சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகைகள் இருந்து வந்துள்ளன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க 49 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் அழிந்து போவதை பெரும்பாலும் தடுக்கவே முடியவில்லை. அரசு மட்டுமல்ல, நாமும் இணைந்து விழிப்புஉணர்வை உண்டாக்கினால்தான் புலிகளின் அழிவை, இல்லை இல்லை நமது அழிவையும் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி விகடன்.

சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.




 சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.

புலிகளுடைய வாழ்வாதாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்கப்படுமா?

புலியைக் கண்டால் எல்லோருக்கும் ‘கிலி’ ஏற்பட்டது அந்த காலம். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. இன்று மனிதனைக் கண்டு புலிகள் அஞ்சி ஓடுகிற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மனிதர்கள் புலிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

20-வது நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்கு எல்லை வரை பல நாடுகளிலும் எட்டு வகை புலிகள் இருந்தன. அதில், தற்போது பாலி இனம், காஸ்பியன் இனம் மற்றும் ஜாவன் இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இந்திய இனம் (ராயல் பெங்கால் புலிகள்) இந்தோசீனா இனம், சுமித்திரன் இனம், சைபீரியன் இனம் மற்றும் தெற்கு சீன இனம் ஆகியவைகளே எஞ்சியுள்ளன. இந்த இனங்களில் தற்போது 4,600 முதல் 7,200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.


சர்வதேச அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்திய இனமான ராயல் பெங்கால் புலிகள் 60 சதவீதம் உள்ளன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீத ராயல் பெங்கால் டைகர் காணப்படுகின்றன. 20-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

அதன்பின் புலிகள் வாழ்விடம் அழிக்கப்பட்டதாலும் அவை வேட்டையாடப்பட்டதாலும் இந்தியாவின் பாரம்பரிய ராயல் பெங்கால் புலிகள் எண்ணிக்கை குறைந்து விட்டன. காடுகளின் செழிப்பு அங்கு வாழும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே புரிந்து கொள்ளப்படுகிறது. Thanks Tamil Hindu

நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?


நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

Friendship Day 2019 : நண்பர்கள் தின வரலாறு தெரியுமா உங்களுக்கு?

Friendship Day 2019 :  நாம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சிறப்பான நாளை நம் அம்மாவிற்காக, அப்பாவிற்காக, மற்றும் நம் உடன்பிறப்புகளுக்காக நாம் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நண்பர்கள் தினம் என்பது மிகவும் சிறப்பான நாளாகும். ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது இந்த நண்பர்கள் தான்.

Friendship Day 2019 : சிறப்புக் கட்டுரை
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுவது வழக்கம். இவ்வருடம் ஆகஸ்ட் 4 ஆன இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஹிட்லரின் உற்ற நண்பர் யாரென்று தெரியுமா ?

ஒவ்வொரு நாட்டிலும் இந்த நண்பர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக ஓஹியோவில் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் சபை ஜூலை 30ஐ நண்பர்கள் தினம் என்று அறிவித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தின வரலாறு
உலக நண்பர்கள் தினம் 1958ல் கொண்டாடுவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு நண்பர்கள் தினத்தினை உருவாக்கியவர் ஜாய்ஸ் ஹால் என்பவராவார். ஆனால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் கூட வாழ்த்து அட்டைகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் நண்பர்கள் தினம் நல்ல வரவேற்பினைப் பெற்ற பின்பு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் மனைவி நானே அன்னன் நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.

ஜூலை 20 தேதியில் பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்தியா, நேபாளம், தென்னமெரிக்க நாடுகளில் இந்நாள் வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள், மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை


நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை.

நண்பர்கள் தினம்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் நண்பர்களின் கையில் பட்டை அணிவித்து வாழ்த்து அட்டைகளுடன் பரிசு பொருட்களை கொடுத்து நட்பை பரிமாறிக் கொள்வது ‘பிரண்ட்ஷிப் டே’ இலக்கணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன். நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.

உலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை. நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.


ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் ஜூலை 27 (1968).



ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம்   ஜூலை 27  (1968).
               
*ஏ.டி.எம்மை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”.* *இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது.*
*ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன்.*
*வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.*
*குளித்துகொண்டிருந்த பாரனுக்கு இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.* *அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.*
*1967ஆம் ஆண்டு ஜூலை் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது.* *ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது.*
*ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ”* *நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.*
*இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.*

புதன், 17 ஜூலை, 2019

உலக நீதி நாள் ஜூலை 17


உலக நீதி நாள் ஜூலை 17

உலக நீதி நாள் கொண்டாடுவோம்!
'எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.

திங்கள், 15 ஜூலை, 2019

கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 .


கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 .

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான  தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15  ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில்  ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர்  புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன்  கொண்டாடப்படுகிறது.

உண்மை கல்வி வள்ளல் காமராஜர்...!

மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும்  நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும்  வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா  எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து  வருகிறது.

விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு  காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படுகிறது. சென்னையில் உள்ள  காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வியறிவு தினத்தை காங்கிரஸ்,. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட  கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

எழுத்தறிவித்தவன் இறைவன்

அந்தக் காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு  அனுப்ப மிகவும் கஷ்டப்பட்டனர். பிள்ளைகளை பள்ளிக்கு வரவைக்க தான் பிறந்த  எட்டயபுரத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி  வைத்தார், காமராஜர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க, இலவச  கல்வி, மதிய உணவு, சீருடை என கல்வி வளர்ச்சி ஒன்றே இந்த நாட்டின் வளர்ச்சி என  கருதி செயல்பட்ட காரணத்தினால், கல்விக்கண் திறந்த கடவுளாக போற்றப்படுகிறார்,  பெருந்தலைவர் காமராஜர்.

நம் நாடு முன்னேற நாளும் உழைத்த தலைவர், நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில்  தொய்வு ஏற்படக் கூடாது என்று கல்யாணமே செய்துக் கொள்ளாத தலைவர்.
இன்றைக்கு தமிழகம் கல்வி, ஐ.டி. தொழில்நுட்பத்தில் மேம்பட்டு திகழ காமராஜர்  ஏற்படுத்தி கொடுத்த அடிப்படை கல்வி என்றால் மிகை இல்லை.

காமராஜர் எப்போதும் எளிமையான வாழ்க்கை நடத்தினார். வேட்டி, சட்டை அணிந்தார்.  அதிகமாக பேச மாட்டார். ஆனால், மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்பார்.
பொற்கால ஆட்சி..!

தமிழக கிராமங்கள் பள்ளிக் கூடங்கள், பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது  காமராஜரின் ஆட்சியில்தான்.காமராஜர் ஆட்சியில் தொடக்கக் கல்வி எழுச்சி பெற்றது.

கல்வியில் தமிழகம் முன்னோடி

இந்தியாவில் 12% பேர் மட்டுமே உயர்கல்விக்குச் செல்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில்  இந்த எண்ணிக்கை 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.படிக்காத மேதையான  காமராஜர் கல்விச் செல்வத்தை தான் பெரிதாக நினைத்தார். தனக்கு கிடைக்காத அந்தச்  செல்வம் மற்றவர்களுக்கு கிடைக்க பாடுபட்டார்.

மாணவர்கள், மதியம் உணவு கிடைக்கிறது என்பதற்காகவது பள்ளிக் கூடத்துக்கு  வருவார்கள் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். வாழும் போதே  சிலைகள் எழுப்பப் பெற்ற தலைவர்கள் வெகுசிலரே. 1961, அக்டோபர் 9-ம் தேதி  சென்னையில் காமராஜர் சிலையை பிரதமர் நேரு திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.  தன் குருவான காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி (ஆண்டு 1975)  காமராஜர் காலமானார்.

கறுப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராஜர் தியாகத்தின் மறு உருவமாக விளங்கினார்  என்றால் மிகையில்லை! 
நன்றி விகடன்.

செவ்வாய், 2 ஜூலை, 2019

ஒரு வருடத்தின் நடு நாள் ஜூலை 02.


 ஒரு வருடத்தின் நடு நாள் ஜூலை 02.

 ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னர் 182 நாட்களும் அதற்கு பின்னர் 182 நாட்களும் இருக்கும். நாம் பயன்படுத்தும் நாட்காட்டியானது கிரிகேரியன் காலண்டர் என குறிப்பிடப்படுகின்றது. இது ஏறத்தாழ பூமியின் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் கால அளவினை கொண்டுள்ளது. சுழற்றி நேரத்திற்கும் காலண்டர் நேரத்திற்கு இருக்கும் மிகச்சிறிய வித்யாசமே நான்குவருடத்திற்கு ஒரு லீப் வருடம் வந்து ஒரு நாள் அதிகரிக்கின்றது. கிரிகேயனின் காலண்டர் கிரிகேரி என்ற போப்பின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த காலண்டருக்கு முன்னர் ஜூலியன் காலண்டரே பயன்பாட்டில் இருந்தது. கிரிகேரி வாழ்ந்த காலம் 1502-1585. நாம் பயன்படுத்தும் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் லத்தின் மொழியில் இருந்து வந்தவை / தழுவியவை. தற்போது நிகழும் ஜூன் மாதமும் ஜூனியஸ் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான். (ஜூனோ என்ற பெண் கடவுளை குறிக்கலாம் என நம்புகின்றனர்)

அது சரி ஏன் பிப்ரவரி மாதத்திற்கு 28 அல்லது 29 நாட்கள் வருகின்றது நியாயமாக பார்த்தால் டிசம்பருக்கு தான் இந்த மாறுதல்கள் வரவேண்டும் என்று தோன்றலாம். அதுவும் சரி தான். ஆரம்பத்தில் வருடத்தின் முதல் மாதம் ஜனவரியாகவும் கடைசி மாதம் பிப்ரவரியாகவும் இருந்தது. அப்போது பிப்ரவரியில் 23 நாட்களே இருந்தன. பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கு நாட்கள் இறுதியானது. பிப்ரவரி கடைசியில் இருந்தாதால் அதற்கு 28 அல்லது 29 என வந்தது. பின்னர் மீண்டும் மாதங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன.

நடு வருட நாளில் (ஜூலை 2) என்ன செய்யலாம்?
ரொம்ப உற்சாகமா புதுவருடத்திற்கு ஏகப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் எடுத்திருப்போம். அது எல்லாம் எந்த அளவிற்கு இருக்குன்னு பார்த்து மறுஆய்வு செய்து திரும்பவும் உற்சாகமா ஆரம்பிப்போமே.