திங்கள், 11 ஜூன், 2018

நடிகை பத்மினி பிறந்த தினம் ஜூன் 12, 1932.


நடிகை பத்மினி பிறந்த தினம் ஜூன் 12, 1932.

பத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ் ,
தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர்.
நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி
லலிதா , இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள்
திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். [2] மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. [2] திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில்
நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.

கலையுலக வாழ்வு

பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.
கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி
நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார்.
குச்சிப்புடி , மோகினியாட்டத்திலும் வல்லவர்.
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார். ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர்
வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.  தமிழில் சிவாஜி கணேசன் , எம். ஜி. இராமச்சந்திரன் ,
ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில்
சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும்,
மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர்.
வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.

விருதுகள்

சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958 )
சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957.
பிலிம் ஃபேர் விருது ( 1985 ).
சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
இறப்பு
பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்

வாழ்க்கை (1949)
பவளக்கொடி (1949)
சந்திரலேகா (1950)
காஞ்சனா (1952)
பொன்னி (1953)
தூக்குத் தூக்கி (1954)
எல்லாம் இன்பமயம் (1955)
ராஜா ராணி (1956)
உத்தம புத்திரன் (1958)
சம்பூரண இராமாயணம் (1958)
ராஜா தேசிங்கு (1960)
ஸ்ரீ வள்ளி (1961)
அந்தமான் கைதி
அமரதீபம்
அரசிளங்குமரி
அன்பு
ஆசை மகன்
இரு துருவம்
இரு மலர்கள்
இல்லற ஜோதி
எதிர்காலம்
எதிர்பாராதது
ஏழை படும் பாடு
கண் கண்ட தெய்வம்
கண்ணின் மணிகள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
கன்னியின் காதலி
காட்டு ராஜா
காவேரி
குருதட்சணை
குலமா குணமா
கோடீஸ்வரன்
சம்பூர்ண ராமாயணம்
சிங்காரி
சித்தி
செந்தாமரை
சொர்க்க வாசல்
தங்கப்பதுமை
திருமகள்
திருமால் பெருமை
திருவருட்செல்வர்
தில்லானா மோகனாம்பாள்
தெய்வப்பிறவி
நாட்டிய ராணி
நான் வணங்கும் தெய்வம்
பக்த மார்க்கண்டேயா
பணம்
பாலாடை
புனர்ஜென்மம்
பெண் தெய்வம்
மங்கையர்க்கரசி
மணமகள்
மதுரை வீரன்
மரகதம்
மல்லிகா
மாங்கல்ய பாக்கியம்
மாயாவதி
மீண்ட சொர்க்கம்
ராணி சம்யுக்தா
ராஜ ராஜன்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
வியட்நாம் வீடு
விளையாட்டுப் பிள்ளை
வீரபாண்டிய கட்டபொம்மன்.


`நடனக்கலையில் முத்திரை பதித்தவர்’ பத்மினியின் வாழ்க்கை குறிப்பு
நடிகை பத்மினி நடனக்கலையில் முத்திரை பதித்தவர் ஆவார். நடிகை பத்மினியின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:- சினிமாவில் அறிமுகம் திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932-லும், பத்மினி 1934-லும், ராகினி 1938-லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன் பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள். மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினி தான் நடனப்பயிற்சி பெற்றார். 40-களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.
ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க, முழுக்க நடனங்கள் கொண்ட “கல்பனா” என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதா-பத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார். “கல்பனா” மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.
சிவாஜிக்கு ஜோடி
1948 ஆகஸ்டு மாதம் வெளியான “வேதாள உலக”த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன. 1952-ல், “பராசக்தி” தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த “பணம்” என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி.
“பராசக்தி” வெளிவந்த சில நாட்களுக்குப்பின் “பணம்” வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
மங்கையர் திலகம்
1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த “மங்கையர் திலகம்” பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் “மங்கையர் திலகம்”.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.
பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.
சிவாஜியின் மகத்தான படமான “வீரபாண்டிய கட்டபொம்ம”னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன். பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “மீண்ட சொர்க்கம்” ஆகியவை முக்கியமானவை.
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட “போட்டி நடனம்”, கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், “வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி” என்று தயங்காமல் கூறலாம்.
மதுரை வீரன்
எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் “மதுரை வீரன்” முக்கியமானது அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார். இந்தப் படம் “சூப்பர் ஹிட்”. பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய “ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை” (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), “மேராநாம் ஜோக்கர்” ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார். இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது.
திருமணம்
“உலக நாட்டியப் பேரொளி” என்று புகழ் பெற்ற நடிகை பத்மினியின் திருமணம், கேரளாவில் உள்ள குருவாïர் கோவிலில் 1961-ம் ஆண்டு மே 25-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாப்பிள்ளை டாக்டர் ராமச்சந்திரன், கேரளாவில் உள்ள தலைச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்து, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ஆலப்புழையில் சொந்தமாக “கிளினிக்” நடத்தி வந்தார்.
குருவாïரில், குருவாïரப்பன் கோவிலில் நடைபெற்ற பத்மினியின் திருமணத்தைக் காண, தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரெயில்களிலும், தனி பஸ்களிலும், வேன்களிலும் குருவாïருக்குச் சென்றனர்.
தில்லானா மோகனாம்பாள்
திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். “தில்லானா மோகனாம்பாள்” ஒரு திரைக்காவியமாக அமைந்தது. 1967-ல் வெளி வந்த “இருமலர்கள்” ஒரு காதல் காவியம். இதில் சிவாஜிகணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். வியட்னாம்வீடு (1970) படத்திலும் சிவாஜி – பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
“தேனும் பாலும்” படத்தில் சிவாஜிகணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “சித்தி”யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. “திருவருட்செல்வர்”, “பேசும்தெய்வம்”, “குலமா குணமா” முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.
சிவாஜியுடன் அதிக படங்கள்
தமிழ் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர் – மஞ்சுளா நடித்த “ரிக்ஷாக்காரன்” படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
அமெரிக்காவில் உள்ள நிïஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார். எனவே, கணவருடன் அமெரிக்கா சென்ற பத்மினி அங்கு ஒரு நாட்டியப் பள்ளியை தொடங்கினார். டாக்டர் ராமச்சந்திரன், கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மகன் பிரேம் ஆனந்த்
கணவர் இறந்த துயரம் பத்மினியை வெகுவாக பாதித்தது. எனினும் தன் ஒரே மகன் பிரேம் ஆனந்த்தை நன்கு படிக்க வைக்க வேண்டும், அவன் எதிர்காலத்தை நன்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதேபோல் மகனை உயர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். இப்போது பிரேம் ஆனந்த், அமெரிக்காவில் இருந்து வரும் உலகப்புகழ் பெற்ற “டைம்” ஆங்கிலப் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்க்கிறார்.
பிரேம் ஆனந்துக்கு திருமணம் ஆகி விட்டது. மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். டாக்டருக்கு படித்தவர். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் (அதாவது, பத்மினிக்கு ஒரே ஒரு பேரன்). அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்.
பூவே பூச்சூடவா
கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில் 1985-ல் “பூவே பூச்சூடவா” என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார். நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான். நடிகை ஷோபனா பத்மினியின் அண்ணன் மகள் ஆவார். பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் அண்ணன்களில் ஒருவரது மகன் தான் இளம் நடிகர் வினித்.



‘நாட்டியப் பேரொளி’ பத்மினி (Padmini) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூஜாபுரம் பகுதியில் திருவாங்கூர் அரச குடும்பத்தில் (1932) பிறந்தவர். 4-வது வயதில் பரதநாட்டியம் பயின்றார். 10 வயதில் அரங்கேற்றம் நடந்தது. இவரைப் போலவே இவரது அக்கா லலிதா, தங்கை ராகிணியும் நடனக் கலைஞர்கள், நடிகைகள். மூவரும் ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்று புகழ்பெற்றவர்கள்.
* நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு 1948-ல் அறிமுகமாகினர். தொடர்ந்து 3 ஆண்டுகாலம் இவர்களது நாட்டியம் இடம்பெறாத படங்களே இல்லை. மூவரிலும் பத்மினியே உலகப் புகழ்பெற்ற நாட்டியத் தாரகையாகவும், நடிகையாகவும் மிளிர்ந்தவர். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
*‘கல்பனா’ என்ற இந்தித் திரைப்படத்தில் முதன்முதலாகத் தோன்றினார். ‘வேதாள உலகம்’ படத்தில் நடன மங்கையாகவும், ‘மணமகள்’ படத்தில் நடிகையாகவும் தமிழில் அறிமுகமானார்.
*தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள் என்று போற்றப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் முதன்முதலாக மாறி மாறி ஒரே தருணத்தில் நடித்த நடிகை பத்மினி மட்டுமே. அந்த மூவருடன் இவர் சேர்ந்து நடித்த படங்கள் 1953, 1956, 1957, 1958, 1960, 1971 ஆகிய ஆண்டுகளில் ஒருசேர வெளிவந்தன.
* ‘பணம்’ திரைப்படத்தில் (1952) முதன்முதலாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார். சிவாஜி - பத்மினி ஜோடி தமிழ்த் திரையுலகில் இணையற்ற ஜோடியாகப் பிரபலமடைந்தது. ஏறக்குறைய 60 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தித் திரையுலகையும் தன் அழகாலும் அற்புத நாட்டியத்தாலும் கொள்ளை கொண்டார். அசோக்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவி குமார் உள்ளிட்ட அனைத்து பிரபல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
*‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலாவுடன் இவர் ஆடும் போட்டி நடனம் வெகு பிரபலம். அதன் படப்பிடிப்பில், இவர் ஆடியபோது முழங்கால் உராய்ந்து ரத்தம் வழிந்தது. ‘ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, வலியைப் பொறுத்துக்கொண்டு ஆடினேன்’ என்று கூறியுள்ளார் பத்மினி. தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்.
* மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழ்பெற்று விளங்கி, ‘நாட்டியப் பேரொளி’ என்ற பட்டம் பெற்றவர்.
* ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘தூக்குத் தூக்கி’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘ராணி சம்யுக்தா’ போன்ற படங்கள் இவரது அபார நாட்டியத் திறன், நடிப்பாற்றலை பறைசாற்றுபவை.
* சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது பெற்றவர். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தியதோடு அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துவந்தார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
*பரதநாட்டியக் கலையால் புகழின் உச்சிக்குச் சென்றவர். தன் நடிப்பாலும், நாட்டியத்தாலும் ரசிகர்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துவரும் ‘நாட்டியப் பேரொளி’ பத்மினி 74 வயதில் (2006) மறைந்தார்.


இன்றும் நம் நினைவை விட்டு நீங்காத அவர் நடித்தப்படங்கள் பல! யார் மறக்க முடியும் அந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற அவர் நடித்த உணர்ச்சி மிகுந்த அந்த பாடல்கள் மற்றும் நாட்டியங்களை! அவர் வழியனுப்பு விழாவில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததால் அவருக்காக இந்தப் பதிவு அற்பணம! கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி பார்க்கும் பொழுது 'லலிதா, பத்மனி, ராகினி என்ற திருவாங்கூர் சகோதரிகள் நடனத்தால் நம் பெருசுகளையும், பிறகு நம்மவரையும் கவர்ந்த அவர்களை கொஞ்சம் நினைவுக்கூர்வோமா?
தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.
திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.
நடனப் பயிற்சி
மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.
கல்பனா
40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.
ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.
"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.
வேதாள உலகம்
இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.
"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.
"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.
இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.
1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.
வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.
லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.
அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.
பிரசன்னா
1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி.
டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.
லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.
ஏழைபடும்பாடு
இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.
பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.
படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.
காஞ்சனா
லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)
இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.
பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.
கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.
"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.
காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.
படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.
பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.
இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.
1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்.
சிவாஜிகணேசனுடன் முதல் படம்
1952ல், "பராசக்தி" தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த "பணம்" என்ற படத்திலும் சிவாஜிகணேசன் நடித்து வந்தார். இந்தப்படத்தின் கதாநாயகி பத்மினி.
சிவாஜியும், பத்மினியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட போது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
"பப்பிம்மா! நான் நாடக நடிகனாக இருந்தபோது, உங்கள் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, மணமகள் படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்போதெல்லாம், எதிர்காலத்தில் உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்றார், சிவாஜி.
பத்மினி, சிரித்துக்கொண்டே, "கணேஷ்! இப்போது தமிழ்ப்பட உலகில் இளம் கதாநாயகர்களே அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் `பராசக்தி' படம் பற்றி, இப்போதே பரபரப்பாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் புகழ் பெறுவீர்கள்" என்று கூறினார்.
"பராசக்தி" வெளிவந்த சில நாட்களுக்குப்பின் "பணம்" வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர்.
பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராகினி நடித்தார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.
இப்படத்தில் "வெண்ணிலாவும் வானும் போல..." என்ற பாரதிதாசன் பாடலை எம்.எல். வசந்தகுமாரி அருமையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்த பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றது.
தூக்குத்தூக்கி
1954ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "தூக்குத்தூக்கி"யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர்.
"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி பத்மினி.
இந்தப் படத்தில், "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லறஜோதி"யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது.
எதிர்பாராதது
1954 கடைசியில் வெளியான சரவண பவானிட்டி தயாரிப்பான "எதிர்பாராதது", சிவாஜி, பத்மினி இருவரின் திறமைக்கும் சவாலாக அமைந்த படம்.
இப்படத்தின் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார்.
இதில் சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். ஆனால் விபத்து காரணமாக சிவாஜி அடையாளம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்ள, பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும்போது, பத்மினி சித்தி ஸ்தானத்தில் இருக்கிறார்.
உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. கதையின் `கிளைமாக்ஸ்' எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்ள, நமது பண்பாட்டிற்கு ஏற்றபடியே கதை முடிகிறது. இறுதிக் கட்டத்தில் "சிற்பி செதுக்காத பொற்சிலையே" என்ற பாடலை சிவாஜி பாடிக்கொண்டிருக்க, கொட்டும் மழையில் பத்மினி ஓடி வருவார். அவரை கட்டித்தழுவ சிவாஜி முயலும் போது, பத்மினி அவரை அடித்து நொறுக்குவார். மெய் சிலிர்க்கச் செய்யும் கட்டம் அது.
சிவாஜிகணேசன் பலதரப்பட்ட படங்களில் நடித்து, நடிப்பின் இமயமாக உயர்ந்து கொண்டே போனார். இதனால் அவர் பானுமதி, சாவித்திரி, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடனும் நடிக்க நேரிட்டது.
இதேபோல், பத்மினியின் புகழும் உயர்ந்து கொண்டே போயிற்று. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் ஆகியோருடனும் சில படங்களில் இணைந்து நடித்தார். எனினும் சிவாஜி பத்மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது.
மங்கையர் திலகம்
1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும்
இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார்.
பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.
ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்."
தேவதாஸ்
லலிதா நடித்த படங்களில் சிறந்தவை "தேவதாஸ்", "கணவனே கண்கண்ட தெய்வம்" ஆகியவையாகும்.
"தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.
"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.
"எனக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்" என்று நடிகை பத்மினி 1961 ஏப்ரலில் அறிவித்தார்.
திரை உலக ராணிகள்
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.
பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.
பத்மினியை விட பானுமதி சுமார் 10 வயது மூத்தவர். எனவே நாளடைவில் பானுமதி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும், "நெம்பர்1" இடத்துக்கு பத்மினி உயர்ந்தார்.
பத்மினி, திருமணத்துக்கு முன்னதாக சிவாஜிகணேசனுடன் நடித்த படங்களில் பாக்யவதி (1957), புதையல் (1957), உத்தமபுத்திரன் (1958), தங்கப் பதுமை (1959), தெய்வப்பிறவி (1960), புனர் ஜென்மம் (1961) ஆகியவை முக்கியமானவை.
"புதையல்" படத்தில், சிவாஜி பத்மினி காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தங்கப்பதுமை
கண்ணகி கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் "தங்கப்பதுமை." ஜூபிடர் சோமு தயாரிப்பில், அரு.ராமநாதன் கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.
இதில், பத்மினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே, ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் குரலில் சிவாஜி பாடுவது படத்தின் சிறப்பு அம்சம். சிவாஜிகணேசன் கண் குருடாக்கப்பட்டதை அறிந்ததும் பத்மினி "ஆ" என்று அலறித் துடித்தக்காட்சி, "உங்கள் கண்கள் எங்கே அத்தான்?" என்று அழுகையுடன் கேட்டபோது காட்டிய முகபாவம், பத்மினியை நடிப்பின் சிகரத்துக்குக் கொண்டு போயின.
பத்மினியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "தங்கப்பதுமை."
சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்த படங்களில் ஒன்று "தெய்வப்பிறவி." இது ஏவி.எம். தயாரித்த படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம். கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்.
காதலித்து மணந்த பத்மினி மீது சிவாஜி சந்தேகப்படுவார். அதைத்தொடர்ந்து, கணவன் மனைவி இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டத்தை பத்மினி, சிவாஜி இருவருமே நன்கு சித்தரித்தனர்.
சிவாஜியின் மகத்தான படமான "வீரபாண்டிய கட்ட பொம்ம"னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன் .
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "மீண்ட சொர்க்கம்" ஆகியவை முக்கியமானவை.
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட "போட்டி நடனம்", கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், "வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி வைஜயந்திமாலா போட்டி நடனக்காட்சி" என்று தயங்காமல் கூறலாம்.
படம் வெளிவந்து 47 ஆண்டுகள் ஆகியும், இப்போது பார்த்தாலும், இன்று படமாக்கப்பட்டது போல இந்த நடனக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.
"மீண்ட சொர்க்கம்" ஸ்ரீதர் டைரக்ஷனில் உருவான படம். கதை அம்சத்தில் உள்ள குறை காரணமாக, இப்படம் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், பத்மினியின் நடனங்களும், நடிப்பும் சிறப்பாக இருந்தன.
மதுரை வீரன்
எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் "மதுரை வீரன்" முக்கியமானது. அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார்.
இந்தப்படம் "சூப்பர்ஹிட்."
ராஜபக்தி
1960ல் வெளியான "ராஜபக்தி" என்ற படத்தில் சிவாஜிகணேசனுடன் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய மும்மணிகள் நடித்தனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சிவாஜிக்கு ஜோடி இந்த மூவரில் எவரும் அல்ல; பண்டரிபாய்தான் சிவாஜிக்கு ஜோடி! பத்மினிக்கு ஜோடி டி.எஸ்.பாலையா!
இந்திப் படங்கள்
இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார்.
இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது. "தமிழில் அற்புதமான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பத்மினி, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாமா?" என்று பலர் கேள்வி எழுப்பினர்.
திருமண ஏற்பாடு
1961 ஏப்ரலில் பத்மினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை சினிமா உலகைச் சேர்ந்தவர் அல்ல என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டன.
பத்மினியை நிருபர்கள் முற்றுகையிட்டு, கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
"எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது உண்மை. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் முடிவான பிறகு, திருமணம் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கிறேன்" என்று பத்மினி கூறினார்.
"திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "நடிக்க மாட்டேன்" என்று பத்மினி பதில் அளித்தார்.
திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" ஒரு திரைக்காவியமாக அமைந்தது.
திருமணத்துக்குப்பின், மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க லண்டன் செல்ல விரும்பினார், டாக்டர் ராமச்சந்திரன்.
திருமணம் நடப்பதற்கு முன்பே இதுபற்றி பத்மினியிடமும், அவர் குடும்பத்தாரிடமும் ராமச்சந்திரன் பேசியிருந்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர்.
லண்டனில் பத்மினி
அதன்படி 1961ம் ஆண்டு பிற்பகுதியில் ராமச்சந்திரனும், பத்மினியும் லண்டன் சென்றார்கள். உயர் மருத்துவக் கல்வி பயில, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ராமச்சந்திரன் சேர்ந்தார். இருவரும் ஒரு பங்களாவில் வசித்தனர்.
படிப்பு முடிந்ததும், ராமச்சந்திரனும், பத்மினியும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அங்கு நிஜெர்சி நகரில் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி தொடங்கினார்.
ஆண் குழந்தை
இதற்கிடையே, பத்மினி ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனுக்கு பிரேம் ஆனந்த் என்று பெயர் சூட்டினார்கள்.
ஒரு முறை பத்மினி தன் கணவருடன் சென்னை வந்திருந்த போது, அவர்களை பட அதிபர்கள் சந்தித்து பத்மினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
சில கேரக்டர்களை பத்மினியால்தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.
பத்மினி மீண்டும் நடிப்பதற்கு ராமச்சந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பத்மினி தமிழ் சினிமா உலகில் மறுபிரவேசம் செய்தார்.
தில்லானா மோகனாம்பாள்
பத்மினி மீண்டும் படங்களில் நடிக்க முன்வந்ததை பட அதிபர்களும், ரசிகர்களும் வரவேற்றனர். சில அருமையான படங்களில் பத்மினி நடித்தார்.
குறிப்பாக, ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) ஒரு திரைக்காவியமாக அமைந்தது. பத்மினியின் திரை உலக வாழ்க்கையில், அவருடைய மிகச்சிறந்த 10 படங்களை தேர்ந்தெடுத்தால், அதில் "தில்லானா மோகனாம்பாள்" நிச்சயம் இடம் பெறும்.
நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜிகணேசனும், நாட்டிய தாரகை தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தனர்.
1967ல் வெளிவந்த "இருமலர்கள்" ஒரு காதல் காவியம். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.
திருலோக்சந்தர் டைரக்ஷனில், ஆரூர்தாஸ் வசனத்தில், எம்.எஸ்.விசுவ நாதன் இசையில் வெளிவந்த இப்படம், முக்கோணக் காதல் கதையை புதிய கோணத்தில் விவரித்தது.
வியட்னாம்வீடு (1970) படத்திலும், சிவாஜி பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
"தேனும் பாலும்" படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "சித்தி"யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
"திருவருட்செல்வர்", "பேசும் தெய்வம்", "குலமா குணமா" முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.
சிவாஜியுடன் அதிக படங்கள்
தமிழ்க் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர் மஞ்சுளா நடித்த "ரிக்ஷாக்காரன்" படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
இதன்பின் பத்மினி அமெரிக்கா திரும்பினார். கணவர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரியை கவனித்துக்கொள்ள, பத்மினி ஒரு நாட்டியப்பள்ளி தொடங்கினார்.
நடிகை பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன், மாரடைப்பால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 50. (பத்மினி வயது 47).
அமெரிக்காவில் உள்ள நிஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார்.
சொந்த வீடு
திருமணத்துக்குப்பின் பத்மினி "தில்லானா மோகனாம்பாள்", "வியட்னாம்வீடு", "இருமலர்கள்" உள்பட சில படங்களில் நடித்தபோதிலும், பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். கணவருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, சிறுமிகளுக்கு நடனப் பயிற்சி அளித்தார்.
பூவே பூச்சூடவா
கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில், 1985ல் "பூவே பூச்சூடவா" என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார்.
நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாசில் நினைத்தார். தன் விருப்பத்தை பத்மினிக்குத் தெரிவித்தார்.
கணவர் இறந்தபின் படத்தில் நடிக்க பத்மினி விரும்பவில்லை. எனினும் குடும்ப நண்பரான பாசில் வேண்டுகோளை தட்ட முடியவில்லை. எனவே, சென்னைக்கு வந்து, "பூவே பூச்சூடவா" படத்தில் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான்.
சிவாஜி-பத்மினி: 60 படங்களில் இணைந்து நடித்த இணையற்ற ஜோடி
மேட் ஃபார் ஈச் அதர் என்பார்களே அப்படியொரு ஜோடி சிவாஜி, பத்மினி ஜோடி. 1952ம் ஆண்டு வெளிவந்த பணம் படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதன் பிறகு 60 படங்களில் இந்த ஜோடி விதவிதமாக நடித்தது. அழகிலும், நடிப்பிலும் இருவரும் போட்டிபோட்டார்கள்.
"கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சி" இன்று இப்போது குறிப்பிடுவார்கள். அப்படி ஒரு கெமிஸ்ட்ரியை முதல் முதலாக உருவாக்கிய ஜோடி இவர்கள் தான். தில்லானா மோகனாம்பாளில் சிக்கல் சண்முகசுந்தரமாகவும், மோகனாம்பாளாகவும் இருவரும் வாழ்ந்தார்கள். வியட்நாம் வீட்டில் முதிய தம்பதிகளின் வேதனையை தத்துருபமாக பிரதிபலித்தார்கள். பல புராண படங்களில் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்தார்கள்.
லட்சுமி வந்தாச்சு, தாய்க்கு ஒரு தாலாட்டு, இரு துருவம், குலமா குணமா, தேனும் பாலும், வியட்நாம் வீடு, குருதட்சணை, திருமால் பெருமை, திருவருட்செல்வர், இருமலர்கள், தாயே உனக்காக, நான் வணங்கும் தெய்வம், செந்தாமரை, புனர்ஜென்மம், ஸ்ரீவள்ளி, தெய்வபிறவி, மரகதம், தங்க பதுமை, வீரபாண்டிய கட்டபொம்மன், உத்தமபுத்திரன், அமரதீபம், ராஜா ராணி, மங்கையர் திலகம், எதிர்பாராதது, இல்லறஜோதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி என வரிசைகட்டும் 60 படங்கள் இவர்களின் பெயரைச் சொல்லும். தமிழில் மட்டுமல்லாது 2 இந்திப் படங்களிலும் ஜோடியாக நடித்தனர். கேரளாவில் பிரேம் நஷீர், ஷீலா ஜோடிக்கு அடுத்து அதிக படங்களில் இணைந்து நடித்தது சிவாஜி பத்மினி ஜோடிதா

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12 .(World Day Against Child Labour )


உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12 .(World Day Against Child Labour ) 

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour ) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது . ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது  உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நோக்கம்

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.

உடல் ரீதியான பாதிப்பு

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு
உடல் ரீதியான பாதிப்பு
கொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால்
ஆஸ்துமா , காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்
சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்
கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
"குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஓவ்வொருவருக்கும் ஒரு காலமும் இருக்கிறது.ஒரு கடமையும் இருக்கிறது.அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் கடமையைச் செய்து வர வேண்டும். இதுவே சரியான ஒழுங்குமுறையாகும். இந்த ஒழுங்குமுறை மீறப்படுமானால் அதுவே சமூகச் சீரழிவாக மாறிவிடும்.
அரும்பு, மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சிப் பருவம்தான் தாவரங்களின் இயற்கை நியதி.இதில் மாறுபாடுகள் ஏற்படுமானால் அது அரும்பிலேயே அழுகி, மொட்டிலேயே கருகி, பூவிலேயே சருகாகி, பிஞ்சிலேயே வெம்பிப் போய்விடும் அல்லவா ? இந்த இயற்கை நியதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போகுமா என்ன ?
மனித குலம் குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள், முதியவர்கள் என வளர்ச்சி பெறுகிறது. இந்தப் படிநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இது மாறுபடுமானால், சமுதாயம் சீரழிவுக்கு உள்ளாகும்.
இளமைப் பருவம் கல்விக்கானது. “இளமையில் கல்’ என்றும், “இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்றும் கூறப்படுவது அதனால்தான். படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்; பணியாற்ற வேண்டிய வயதில் பணியாற்ற வேண்டும், இதற்கு ஏறுமாறாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது சமுதாய சீர்கேட்டின் அடையாளமாகும்.
இதனை எதிர்த்துதான் ஜூன் மாதம் 12-ஆம் திகதி உலகம் முழுவதும் “குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின’மாகக் கொண்டாடப்பட்டடு வருகின்றது. நமது நாட்டிலும் கூட விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்கங்களும், கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்படுகின்றன.
“”குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்” என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி பூணவேண்டும்.
நாடெங்கும் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், கூலி வேலை, எடுபிடி வேலை என எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாததுபோல நடந்து கொள்கின்றனர்.
எந்தக் கொள்கையானாலும், திட்டமானாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்க முடியாது.
குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 முதல் நடைமுறையில் இருந்தாலும் அது குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசின் கடமைகளை ஓரளவு அங்கீகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
“”மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுப் போவான்…” என்றார் கல்வியியலைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ.
படிக்க வேண்டிய வயதில் தொழில் செய்ய அனுப்பப்படும் குழந்தைகளின் நிலையும் அப்படித்தான்.
குழந்தைகளை வேலைக்கு வைப்பதை அனைவரும் எதிர்ப்போம் என இந்த நாளில் உறுதிபூணுவோம்.

வெள்ளி, 8 ஜூன், 2018

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 6:


தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 6: 

*செம்மொழியான தமிழ்மொழியாம்!!*
*#தமிழ்வாழ்க* *#செம்மொழியானதமிழ்மொழி*

*ஆன்ட்ராய்ட் அப்பத்தாவும்*
*டாக்கிங் டாமுக்கு தமிழ் சொல்லி கொடுக்கும்!*
*ஹாலிவுட் பட நாயகனும்*
*அழகு தமிழில் காதல்* *சொல்வான்!*

*பீட்டர் ஆங்கிலம் மாறி*
*இனி ஆங்கில பீட்டரும் தமிழ் பேசுவான்!*
*அமெரிக்காவில் அண்ணாச்சிக்கடைகள்*
*தமிழில் பொருள் விற்கும்!*

*ஃபேஸ்புக் பக்கங்களில்*
*ஸ்மைலிகள்* *மகிழ்ச்சியாகும்!*
*ட்விட்டர் பக்கங்களில்*
*ரீட்விட் மறு கீச்சாகும்!*

*ட்விட்டரின் முப்பாட்டன் திருக்குறள் என்பார்!*
*ஹாரிபாட்டர் தாத்தா* *விக்ரமாதித்தன் என்பார்!*
*டிகாப்ரியோவும் செந்தமிழ்* *பேசுவார்!*

*247 எழுத்தில் உலகம்*
*இயங்கும் 24 * 7 நாளும்*
*தமிழின்றி அமையாத*
*நிலை உருவாகும்!!*

*இந்தியாவில் துவங்கி இங்கிலாந்து வரை*
*உலகம் முழுவதும் இனி* *உரக்க சொல்லுவோம்!*
*தமிழ்மொழியும் செம்மொழியாம்!!*

வியாழன், 7 ஜூன், 2018

உலகப் பெருங்கடல்கள் தினம் ஜூன் 08 (World Oceans Day )


உலகப் பெருங்கடல்கள் தினம் ஜூன் 08 (World Oceans Day ) 

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day ) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில்
பிரேசிலின் , இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் , முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு
பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு,
ஆக்சிசன் எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

நோக்கம்

உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், 'உலக பெருங்கடல்கள் நாள்' ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

நெகிழியால் சீரழியும் ஆழி

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) எனும், நெடுங்காலம் அழியாத்தன்மை உடைய நெகிழியின் குப்பை கடல்களைச் சீரழிக்கிறது. மேலும், பிளாஸ்டிக்
குப்பையைக் கடலில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டின் (2015) மையப்பொருளாக உள்ளது. நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலக்கிறது. இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. நுண் உயிரினங்களும், சிதையாத நெகிழி பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் நெகிழி புகுந்துவிடுகிறது.

உலகப் பெருங்கடல்கள் நாள் 2016

உலக பெருங்கடல்கள் நாள் 2016 -இன் கருத்துருவாக " ஆரோக்கியமான கடல்கள், ஆரோக்கியமான கிரகம் " (“Healthy Oceans, Healthy Planet” ) என்பதாகும். இந்நாளை 90-க்கும் அதிகமான நாடுகளில், நூற்றுக்கணக்கான இடங்களில் கொண்டாடப்படுகிறது. பல இலட்சக்கணக்கான மக்களை, ஆன்சைட் மற்றும் ஆன்லைன் மூலம் உலகப் பெருங்கடல்கள் நாளுடன் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்திச்சேவை இணையமான 65 மில்லியன் மக்களை எட்டியுள்ள
துவிட்டரில், இன்சுட்டாகிராம் எனும்
மென்பொருள் உதவியுடன், 'உலக பெருங்கடல்கள் நாள்' குறுஞ்செய்திகள், இடுகைகள் என 290 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2015
உலகப் பெருங்கடல்கள் நாளை " ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம் " ("Healthy oceans, healthy planet" ) எனும் கருப்பொருள் கொண்டு, இரண்டாண்டுகள் கொண்டாடம் நோக்குடன், இவ்வுலகம் முதல் ஆண்டாக கொண்டாடியது. நீர்வாழ் பிராணிகள் தாவரங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள் , மற்றும் வணிகங்கள் போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1000 நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், எண்ணற்ற தனிநபர்கள் எங்கள் கடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருங்கடல்கள் நாளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பெருங்கடல்கள் நாள் 2014

2014இன் உலக பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் " "நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" ( "Together we have the power to protect the ocean" ) எனும் நோக்கத்தில் 2013 முதல்
2014 வரை வலையமைப்புச் சேவையான
துவிட்டரில், 700க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி பதிவுகள் இடம் பிடித்தது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள், மற்றும் சாதகமான வழிகளில் சொந்த, மற்றும்
சமூக ஒற்றுமையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் ஈடுபட்டனர்.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2013
2013இன் , உலக பெருங்கடல்கள் நாளின், " "நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" ( "Together we have the power to protect the ocean" ) என்ற கருப்பொருள் கொண்டு 2013 , மற்றும் 2014 வரை நிகழ்வுகளில் 600 க்கும் அதிகமான சேவையாளர்கள் பங்காற்றினர்.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2012
உலகப் பெருங்கடல்கள் நாள் 2012இன் கருப்பொருள், "இளைஞர்:அடுத்த அலை மாற்றம்" (Youth: the Next Wave for Change ) என்பதாகும். 2012இல் உலக பெருங்கடல்கள் நாளை 55 நாடுகளில் நடந்தது 500 நிகழ்வுகள், பெருங்கடல் திட்டம் சீரமைக்கப்பட்டத் தளமாக தொடங்கப்பட்டது.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2011
2011ஆம் ஆண்டின் உலகப் பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் 2012 போன்றதே, இருப்பினும் கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிகரித்திருந்தது. ஐ.நா. செய்தியாளர் கூட்டத்திலும், மற்றும் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு குழுவும், உலகப் பெருங்கடல்கள் நாள் குறித்து விவாதித்தது.

உலகப் பெருங்கடல்கள் நாள் 2010
உலகப் பெருங்கடல்கள் நாள் ( 2010 , சூன் 8 ) - கருப்பொருள், "எங்கள் சமுத்திரங்கள்: வாய்ப்புகளும் சவால்களும்" (“Our oceans: opportunities and challenges” ).

உலகப் பெருங்கடல்கள் நாள் 2009
2009இன் உலகப் பெருங்கடல்கள் நாள் கருப்பொருள், "எங்கள் கடல்கள், நமது கடமை" ( “Our Oceans, Our Responsibility” ).


கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம்

பெருங்கடல்கள்தான் மனித வாழ்வுக்கு அடித்தளம். உயிரினமே பெருங்கடல்களில்
இருந்து தோன்றியவைதான். பூமிப்பந்தின் 72 சதவிகித பரப் பளவையும், 140 மில்லியன் சதுர மைல்களையும் கொண்டது கடல் நீர்ப்பரப்பு. ஆனால், கடல் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை.
கடல் மிகப் பெரியதாக இருப்பதும், மிக ஆழமாகஇருப்பதும், எதிர்புறம் உள்ள கரை கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதும்.. இப்படி ஏதோ ஒரு காரணத்தால், கடல்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தோ அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு பற்றியோ நாம், பெரிதாக அக்கறை கொள்வதில்லை.
ஆயினும், நாம் தொடர்ந்து உயிர் வாழ, கடல்களே பிரதானம். பருவங்களும், தட்பவெட்ப நிலையும், ஏன் மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரமும் கடல் நீர் பரப்பை சார்ந்தே உள்ளன.
நாம் சுவாசிக்கும் துாய காற்றை யும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகமட்டுமல்லாமல், உலக நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன. பல நாடுகளுக்குப் பயணிக்க சர்வதேச வர்த்தகப் பாதை
களாகவும் கடல்கள் விளங்கு கின்றன. மக்களைப் பிரித்ததும், சேர்த்ததும் கடல்களே.
கடல் மாசு
''கடலுக்கு ஏற்படும் மாசுக்கான காரணங்களை மூன்று வகையாய் பிரிக்கலாம்'' என்று கடலியல் சுற்றுச்சூழலியலாளரான ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ் பாட்டின் கூறுகிறார். அவை, கடல்களில்நேரடியாய் கழிவுகளைக்கொட்டுவது, மழையினால் நீரில் அடித்து வரப்படுவது, மற்றும் காற்றில் இருந்து வெளியாகும் மாசுப் பொருட்கள்.''கடல்கள் பரந்தவை.. மிகப் பெரியவை என்பதால் மாசுகளை கரைத்து அபாயமற்றதாக்கி விடும்'' என்றுதான் அநேக
அறிவியலாளர்கள் தொடக்க காலத்தில் நம்பினர்.
1950களின் பிற்பகுதிகளிலும் 1960களின் ஆரம்ப காலத்திலும், அணுசக்தி வாரியத்திடம் உரிமம் பெற்றநிறுவனங்கள் அமெரிக்காவின்கடலோரங்களில் கதிர்வீச்சுக் கழிவுகளை கொட்டின. இது சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல் விண்ட்ஸ்கேலில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக் கழிவுகள் அயர்லாந்து கடலில் கொட்டப்பட்டதும், பிரான்ஸ் அணு வாரியத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் மத்திய தரைக்கடலில் கொட்டப்பட்டதும் பிரச்னையை ஏற்படுத்தியது. கடலில் இதையெல்லாம் கொட்டலாமா? என்ற கேள்வி எழுந்தது.
1967ல் டோரி கேனியான் என்னும் எண்ணெய்கப்பல் மோதி நொறுங்கிய சம்பவம் மற்றும் 1969ல் கலிபோர்னியா கடலோரத்தில் சாண்ட பார்பரா எண்ணெய் கசிவு ஆகியவை சர்வதேச தலைப்புச் செய்தியாக்கின. கடல் மாசு குறித்து தொடர்ந்து பேசப்பட்டது. ஸ்டாக்ஹோமில் 1972ல் நடந்த ஐ.நா. மனித சூழல் மாநாட்டில் கடல் மாசு முக்கிய விவாதப் பொருளானது. கழிவுகள் மற்றும் பிற பொருட்களை கடலில் கொட்டி கடலினை மாசுபடுத்துவதைத் தடுக்கும் ஒப்பந்தம் அதே வருடத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது, கப்பல்களில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகளுக்கு மடடுமே பொருந்தும் என்பதால், குழாய்கள் வழியே திரவ வடிவில் கொட்டப்பட்ட கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பாதிப்பை ஏற்படுத்துபவை
பூமியின் குப்பைத் தொட்டிபோல கடலை பயன்படுத்தத் துவங்கிவிட்டோம். இந்த மனோபாவம் கடந்த 20 ஆண்டுகளாக வலுத்ததால் கடல் மாசு அதிகரித்து வருகிறது. நெடுங்காலம் அழியாத்தன்மைக் கொண்ட பாலிதீன்குப்பைகள் கடல்களைச் சீரழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேரடியாகக் கடலில் பாலிதீன்குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், கழிவுகள் பெருமளவு கடலில் கலக்கிறது. கடல்களில் மிதக்கும் பாலிதீனின்
அளவு நுாறு மில்லியன் மெட்ரிக் டன்னைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற கழிவுகள் கடலில் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளா
கின்றன. இதனை ஆமை போன்ற உயிரினங்கள் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் நாம் உட்கொள்ளும் கடல் உணவு வழியாகவும் நம் உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
எண்ணெய் கசிவு
சரக்குக் கப்பல் போக்குவரத்தின் போது அவற்றில் இருந்து கசியும் பொருள்களும் கடல் சூழலைக் கேள்விக்குறியாக்குகிறது. உலகஅளவில் ஒவ்வோரு ஆண்டும் 706 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கலப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. இதில் 50 சதவிகிதம் கரைகளில் ஒதுங்குகிறது. முதலில் கடலின் மேல் மட்டத்தில் பரவும் எண்ணெய் படலம், சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு ஊடுருவி, கடல்நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது.
கடலில் பரவும் எண்ணெய் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப் படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு கரையில் ஒதுங்கும் எண்ணெய் படலத்தால் அங்கு வாழும்உயிரினங்களும் பாதிப்புக்குஉள்ளாகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டதில் கொட்டிய எண்ணெய் கழிவை அகற்ற அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படாதுபாடுபட்டதை அறிவோம்.
சுற்றுலா மேம்பாடு
உலகம் முழுவதுமுள்ளகடற்கரைச் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்காகக் கட்டடங்கள் பெருகி வருகின்றன. மற்றொரு புறம் வர்த்தக விஸ்தரிப்பும், தொழிற்சாலைகளும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் அதிகரித்து உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள் சென்றுசேருமிடம் கடலாகத்தான் இருக்கிறது.2005ல் ட்ரங்கேடா என்னும் இத்தாலிய நிழல் உலக கும்பல் ஒன்று நச்சுக் கழிவுகள் கொண்ட சுமார் 30 கப்பல்களை கடலில் மூழ்கச் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டது.
இதில் பெரும்பாலானவை கதிர்வீச்சுக் கழிவுகள். இச் சம்பவத்தை அடுத்து கதிர்வீச்சு கழிவுகள் வெளியேற்றப்படுவதில் நடக்கும் மோசடிகள் பற்றி பரவலான விசாரணைகள் எழுந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரசாயன ஆயுதங்களை பால்டிக் கடலில் கொட்டின.
நிலப்பகுதியில் மரங்களை வெட்டினால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதோ, அதுபோல் கடலில் பவளப் பாறைகள் வெட்டியெடுக்கப்படுவதால் சூழல் பாதிக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெருமளவு பவளப்பாறைகள் அழிந்து விடும் என கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏன் பாதுகாக்க வேண்டும்
அடுத்து, கடல்கள் காற்று மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை. நாம் காற்று மண்டலத்தில் வெளிவிடும், கரியமில வாயு அனைத்தையும் கடல்கள் உறிஞ்ச முற்படும் பொழுது அவை அதிக அமிலமயமாகின்றன. நாம் அவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றுகிறோமா? எனக் கேட்கலாம். மின்விளக்கை ஏற்றும் பொழுதும், அலைபேசிக்கு சக்தியேற்றம் செய்யும் பொழுதும், கார், விமானங்களில் பயணிக்கும்போது கரியமில வாயு வெளியேற்றத்துக்கு நாம் வழி செய்கிறோம். இதனால், கடல் அமிலமயமாவதற்கும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும் வழி செய்கிறோம்.
நாம் படிவ எண்ணெய்களை அதிக அளவில் எரிக்கும் பொழுது அதிக கரியமில வாயுவை வெளியேற்றி கடல்களை அதிக அமில மயமாக்குகின்றன. அமிலமயமாக்கப்பட்ட கடல் நீர். ெவளிமண்டலத்தைப் பாழ்படுத்தி, அதை நம்பியிருக்கும் பற்பல கடல்வாழ் உயிரினங்களையும் மடியச் செய்து விடுகிறது. இதனால் கடலின் உணவுச் சங்கிலியும் பாதிக்கிறது.
பெருங்கடல்கள் பரந்த வெப்ப உள்வாங்கிகளாக இருந்த போதிலும், அவை, காலநிலை மாற்றங்களுக்கு எளிதில் உட்படுபவை. காற்றுவெளியின் வெப்ப அதிகரிப்பு கடல்வாழ் உயிரின
அழிவுக்கு காரணமாகலாம். புயலையும் ஊழிக் காற்றையும்தோற்றுவிக்கலாம். உலகைச் சுற்றி தட்பவெட்ப நிலையை மாற்றிவிடலாம்.
என்ன செய்யலாம்
கடல் மாசுபாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.தேவையற்ற விமான, கார் பயணங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா வகையான சக்திப் பயன்பாட்டையும் குறைக்கலாம். லிப்ட் வேண்டாம் என்று சொல்லி படியேறலாம்.இவற்றின் மூலம் கரியமில வாயு காற்று மண்டலத்தில் கலப்பதைக் குறைத்து, கடல்களின் அழிவை மட்டுப்படுத்தலாம். பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்வதின் மூலமும், அவை கடலை அடைவதைக் குறைக்கலாம். பொருள் வாங்க கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை எடுத்துச்
செல்லலாம். கடல் பிரயாணத்தின் போது கப்பலிலிருந்து எதையாவது துாக்கி எறியவேண்டாம்.
கடற்கரை மகிழ்ச்சி தரும் இடம். எனவே அதனைப் பாதுகாப்பது நம் கடமை. கடற்கரையை விட்டு வெளியேறும் பொழுது இருந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வோம்.
நாம் எங்கு வாழ்ந்தாலும் கடலுக்கும் நமக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நமது சின்னஞ்சிறு செயல்பாடுகள்கூட கடலின் நலனுக்கு கேடுகள் விளைவிக்
கின்றன. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடல் மற்றும் அதன் உயிரினங்களுடன் பல வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே கடலைப் பாதுகாப்போம். கடலைக் காதலிப்போம்.
ப.திருமலை, பத்திரிகையாளர், மதுரை
84281 15522 நன்றி தினமலர்.


பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல் ஆகியவை 500 ஆண்டுகளுக்கு முன்புத்தான் அனைவராலும் அறியப்பட்டது. ஆனால் இந்திய பெருங்கடல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதாக வரலாற்று சான்றுகள் உள்ளன.
உலக பெருங்கடல் தினம் கொண்டாடாடுவதில் தமிழர்கள் முக்கியமானவர்கள் என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் உணவு மற்றும் வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.
52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக தான் கிடைக்கிறது. இப்படி நமக்குத் தேவையானதை அளிக்கும் கடலில் ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர், எண்ணெய் கசிவுகளோடு சுமார் 8.8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதாகவும் இது அடுத்த 2025 ஆண்டுக்குள் கடலில் பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை சுமார் 170 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கடல்சார் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடல் மாசு காரணமாக ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள், உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு அதிகமாக பரவத் துவங்கியதால் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், கடலோர பகுதிகளில் வணிகரீதியில் வளாகம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தள்ளது.
சென்னைவாசிகளின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது கடற்கரை தான். குடும்பத்தினருடன் குதுகலிக்க இதை விட சிறந்த இடம் வேறெதுவும் இருக்கவே முடியாது. நம் உணர்வுகளோடு கலந்த இந்த கடற்கரையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டவே இந்த உலக கடல் தினம்...

செவ்வாய், 5 ஜூன், 2018

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஜூன் 6 .


தமிழீழ மாணவர் எழுச்சி நாள்  ஜூன் 6 .

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிவகுமாரனின் நினைவு நாளாகிய
ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.


தமிழீழ மாணவர் எழுச்சி தினம்!
ஈழ தமிழர்களின் மனதில், போராட்டகுணத்தை ஊட்டிய தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக இன்று (சூன் 6) தமிழீழ மாணவர் எழுட்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1950களில் , இலங்கையில் சிங்கள இனவாதத்தால், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருக்கையில் தான், தமிழ் சுதந்திர வேட்கை ஆரம்பமானது. உரும்பிராயை சேர்ந்த தியாகி பொன். சிவகுமாரன் மாணவராக இருந்த காலத்திலேயே தமிழின உணர்வும், விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைளையும் நிலை நாட்ட, சிங்கள அரசுக்கு எதிரான ஆயுதப்போரட்டமே சிறந்தது என்று தமிழ் விடுதலை போரட்டத்திற்க்கு வித்திட்டவர் தியாகி. பொன்.சிவகுமாரன்.
சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை. புரட்சியும், போரட்டகுணமும் இளைஞர்களிடம் மிகுந்திருந்தது. மாணவர்களின் கல்வியை மட்டுப்படுத்துவதால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில், மாணவர்கள் மீது வன்முறைகள் நடந்தன. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமல்படுத்தப்பட்டது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரிகள் மீதும், அமைச்சர்கள் மீதும் ஆயுதபோரட்டங்கள் நடைப்பெற்றது. சில முயற்சிகள் தோல்வி அடைந்து, சிறை செல்ல நேர்ந்தாலும், விடுதலை சிந்தனையை சிறைப்படுத்த இயலவில்லை. வன்முறை சார்ந்த போராட்ட முறை, உரிமைகளை நிலை நாட்ட வழியே தவிர, வன்முறையை கொள்கையாக இருக்கக்கூடாது என்பது, மாணவர்களுக்கு தாய்வீரனின் ஆலோசனை.தமிழ் மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார்.
சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார். சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடையே இருந்த சாதியம், பெண்களின் மீதான அடக்குமுறை, மணக்கொடை போன்ற பின்னடைவுகளுக்கு எதிராகவும் கடுமையாக போராடினார். விடுதலைக்காகவும், சமத்துவ வாழ்வுக்காகவும், துணிந்து போராடிய, சிவகுமாரன் அவர்கள், களசெயற்பாட்டில் ஈடுபட்டுகொண்டிருந்த போது, எதிரிகளால், சுற்றிவளைக்கப்பட்ட போது எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு ஜூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக, உலகமெங்கும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட தாய்வீரனின் தியாகமும் வீரமும் தமிழீழத்திலும் உலகத்தமிழர்கள் மனதிலும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

திங்கள், 4 ஜூன், 2018

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 05. World Environment Day



உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 05.  World Environment Day

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day , WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

நோக்கம்

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

வரலாறு

இது ஐநாவின் பொது அவையினால் 1972 ஆம் ஆண்டில் மனித சூழலுக்கான ஐநா மாநாடு நடத்தப்பட்ட நாளில் ஏற்படுத்தப்பட்டது.
உலகச் சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகள்
பணியிடத்தில் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க தனி ஒவ்வொருவருக்கும் ஊக்கமூட்ட 2007இல் இருந்து சிங்கப்பூரில் சூழல் செயற்பாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
2015 சூன் 5ஆம் நாளன்று இந்தியப் பிரதமர்
நரேந்திர மோதி புதுதில்லி, பந்தயச் சாலை, 7ஆம் எண்ணிட்ட தம் இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார்.
உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடல்
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
புடவியின் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!
ஒன்றிவாழ்வோம் ஒருநிரை யாக
கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே!
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
புவியில் வாழும் உயிரினங் களோடும்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி!
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
உலக நாட்டு இணைந்த மக்கள்யாம்
எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும்
நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி! .
—"புவிப் பண்" இயற்றியது: அபே கே


"புவிப் பண்" அபே கே என்பவரால் எழுதப்பட்டு 2013 சூன் மாதத்தில் உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய அமைச்சர்கள் கபில் சிபல் , சசி தரூர் ஆகியோரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது. ஐநா பொது அவையின் அலுவல் மொழிகளான அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகளில் புவியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைவிட இந்தி, நேபால மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
கருப்பொருள்கள்
ஒவ்வோராண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கும் ஒரு தனியான முழக்கத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட்டது.இந்த முழக்கங்களைப்போலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கருப்பொருளும் உண்டு. 2009-2015 வரை பரப்பிய கருப்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.
2015
’ஏழு பில்லியன் கனவுகள்;ஒரே கோள்; விழிப்போடு நுகர்’.
2014
கருப்பொருள்:-'சிறு தீவுகளும் காலநிலை மாற்றமும்',
முழக்கம்:-'குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல.
2013
2011 சுற்றுச்சூழல் நாள்:
பிரான்டென்போர்க் வாயில் .
2011: தோனெத்ஸ்க் , உக்ரைன்
2012: எத்தியோப்பியா , கோன்சோ நகரில் மரநாட்டு நிகழ்வு.
2013இன் கருப்பொருள் சிந்தி. உண். சேமி.
பரப்புரை ஒவ்வோராண்டும் பேரளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின்பால் கவனத்தைக் குவித்தது. இந்த உணவு சேமிக்கப்பட்டால்,ஏராளமானோர்க்கு உணவு வழங்கி கரிமக் கால்தடத்தையும் குறைக்கமுடியும். உணவுப் பொருளை விரயமாக்கும் வாழ்முறைமை உள்ள நாடுகளின்பால் குறிப்பான கவனம் திருப்பப்பட்டது. உலகளாவிய உணவு விளைச்சலால் சூழலின் மீது ஏற்படும் ஒட்டுமொத்தத் தாக்கத்தைக் குறைக்க மக்கள் உண்ண விரும்பும் உணவின் தேர்வை அறிவிக்கும் உரிமையைப் பெறவைக்கும் குறிக்கோளையும் முன்வைத்தது.
2012
2012 உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள் பசுமைப் பொருளாதாரம்: நீயும் உள்ளாயா?
இந்த கருப்பொருள் மக்களை தம் செயல்பாடுகளையும் வாழ்க்கைப்பாணியையும் சீர்தூக்கிப் பார்த்து பசுமைப் பொருளாதாரத்தில் அவை எப்படி பொருந்துகின்றன எனக் கருதுமாறு கேட்டுக்கொள்ளச் செய்கிறது. இந்த ஆண்டின் விழாக்கலை விருந்தோம்பிய நாடு பிரேசில் அகும்.
2011
2011இன் கருப்பொருள் காடுகள்-உன் சேவையில் இயற்கை. கடற்கரைத் தூய்மிப்பு, கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியைப் பரந்து விரிந்த இந்தியா முன்னின்று நட்த்தியது.
உயிரியற் பல்வகைமை
2010
'பல உயிரினங்கள்; ஒரேகோள்; ஒரே எதிகாலம்.', என்பதே 2010இன் கருப்பொருள்.
2010 உலக [[உயிர்ப்பன்மைய ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியை ருவாண்டா முன்னின்று நடத்தியது.
2009
2009இன் உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள் || 'உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை ', உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடலாக மைக்கேல் ஜாக்சனின் ’புவிப் பாடல்’ அறிவிக்கப்பட்ட்து. '.இது மெக்சிகோவில் நடத்தப்பட்டது..

விருந்தோம்பிய நகரங்கள்

உலகச் சுற்றுச்சூழல் நாட்கள் உலகெங்கும் கீழ்வரும் நகரங்களில் தொடர்ந்து கொண்டாடப்பட்டன.:

ஆண்டு கருப்பொருள் ஓம்பு நகரம்

1974 ஒரே புவி எக்ஸ்போ '74 ஸ்போக்கேன், ஐக்கிய அமெரிக்கா
1975 மாந்தர் குடியேற்றம் டாக்கா , வங்காளதேசம்
1976 நீர்: வாழ்வின் அமுதம் கனடா
1977 ஓசோன் படலம் சுற்றுச்சூழல் அக்கறை; நிலங்கள் இழப்பும் மண் தரக்குறைவும் சில்ஹெட் , வங்காளதேசம்
1978 அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காளதேசம்
1979 குழந்தைகட்கான ஒரே எதிர்காலம் – அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காள தேசம்
1980 புதிய பத்தாண்டுக்கான புதிய சவால்: அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காள தேசம்
1981 நிலத்தடி நீர்; மாந்த உணவுத் தொடரில் நச்சு வேதிமங்கள் சில்ஹெட் , வங்காள தேசம்
1982 ஸ்டாக்கோல்முக்குப் பின் பத்ஹ்தாண்டுகள் (சுற்றுச்சூழல் அக்கறைகளைப் புதுப்பித்தல்) டாக்கா , வங்காள தேசம்
1983 தீங்கான கழிவுகளை மேலாளலும் கழித்தலும்: அமில மழையும் ஆற்றலும் சில்ஹெட் , வங்காள தேசம்
1984 பாலையாக்கம் ராஜ்சாகி, வங்காள தேசம்
1985 இளைஞர்: மக்கள்தொகையும் சுற்றுச்சூழலும் பாக்கித்தான்
1986 அமைதிக்கான தரு ஒன்ராறியோ, கனடா
1987 சுற்றுச்சூழலும் வாழிடமும்: கூரையினும் பெரிது நைரோபி , கென்யா
1988 மக்கள் சுற்றுச்சூழலை முதலில் வைத்தால் வளர்ச்சி என்றும் நீடிக்கும் பாங்காக், தாய்லாந்து
1989 புவி சூடாதலுக்கானஉலக எச்சரிக்கை பிரசெல்சு ,பெல்ஜியம்
1990 சிறுவரும் சுற்றுச்சூழலும் மெக்சிக்கோ நகரம் ,மெக்சிகோ
1991 காலநிலை மாற்றம். உலகப் பங்கேற்பின் தேவை சுடாகோல்ம் , சுவீடன்
1992 ஒரே பவி, அக்கறையோடு பகிர்ந்திடு இரியோ டி செனீரோ ,
பிரேசில்
1993 ஏழ்மையும் சுற்றுச்சூழலும் – சுழல்வட்டம் உடைப்போம் பெய்ஜிங் , சீன மக்கள் குடியரசு
1994 புவியெல்லம் ஒரே குடும்பம் இலண்டன் , ஐக்கிய நாடுகள்
1995 புவிச்சூழல் பேண ஒருங்கிணைந்த மாந்தர் யாம் பிரிட்டோரியா, தென் ஆப்பிரிக்கா
1996 நம்பூமி, நம் வாழிடம், நம் குடில் இசுதான்புல், துருக்கி
1997 புவியில் உயிர் தழைக்க சியோல் , தென் கொரியா
1998 புவி உயிர் தழைக்க, கடல்களைக் காப்போம் மாஸ்கோ , உருசியா
1999 புயொன்று – எதிர்காலம் ஒன்று – காப்பாற்றுவோம்.! டோக்கியோ, நிப்பான் (ஜப்பான்)
2000 சுற்றுச்சூழல் ஆயிரமாண்டு –செயற்படுதருணம் அடிலெய்டு , ஆசுத்திரேலியா
2001 உயிர்வைய விரிவலையில் இணை துரின், இத்தாலி; அவானா , கியூபா
2002 புவிக்கொரு வாய்ப்பு ஈவோம் சென்சென் , மக்கள் சீனக் குடியரசு
2003 நீர் –இதற்காக இரு பில்லியன் மக்கள் சாகின்றனர்! பெய்ரூத் , இலெபனான்
2004 தேவை தானே! கடல், பெருங்கடல்கள் – உயிரோடா, இல்லாமலா? பார்செலோனா ,எசுப்பெயின்
2005 பசுமை நகரங்களே நம் கோளின் திட்டம்! சான் பிரான்சிஸ்கோ , ஐக்கிய அமெரிக்கா
2006 பாலையும் பாலையாக்கமும் –வன்புலம் அகலாதே! அல்ஜியர்சு , அல்ஜீரியா
2007 உருகும் பனிக்கட்டி – சூடான தலைப்பு தான்? இலண்டன் , இங்கிலாந்து
2008 பழக்கத்தை மாற்றுt – தாழ் கரிமப் பொருளாதாரம் நோக்கி வெலிங்டன் , நியூசிலாந்து
2009 உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை மெக்சிகோ நகரம் , மெக்சிகோ
2010 பல உயிரினங்கள்; ஒரே கோள்; ஒரே எதிர்காலம். ராங்பூர், வங்காளதேசம்
2011 காடுகள்: உன் சேவையில் இயற்கை புதுதில்லி , இந்தியா
2012 பசுமைப் பொருளாதாரம்:அது உன்னை உள்ளடக்குகிறதா? பிரேசில்
2013 சிந்தி. உண். சேமி. காலடித் தடம் குறை மங்கொலியா
2014 குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல. பார்படோசு ,
2015 ஏழு பில்லிஅன் கனவுகள்; ஒரே கோள்; விழிப்புடன் நுகர். இத்தாலி
2016 பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை. சவூதி அரேபியா.



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.
மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.
புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.


ENUP இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை, சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம், சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல் இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம் ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல், புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி, பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் - வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி, ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி, நம் வசிப்பிடம், நம் வீடு
1997 - பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி - நம் எதிர்காலம், காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு - செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் - அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் - இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் - கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் - தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி - ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் - குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி
இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ் சூழல் சம்பந்தமான விடயங்களுக்கு மனிதநேயத்தை வழங்குதல், மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுப்பான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல். சூழல் சம்பந்தமான விடயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல், எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.
1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து
2009ல் உலக சூழல் தின முதன்மைக் கொண்டாட்டத்தை மெக்சிக்கோவில் நடத்துவதாக ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்ட தலைவரும் நிர்வாகப் பணிப்பாளரும், அறிவித்துள்ளார்கள். எனினும், எனினும் தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் ஆரம்பம் மெக்சிக்கோவில் இடம்பெற்றதாகக் கருதப்படுவதினால் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சில தாக்கங்கள் உருவாகலாம் என கருதப்படுகின்றது.
இன்னும் 180 நாட்களில் கோப்பன் ஹேகனில் நடைபெறவுள்ள நெருக்கடியான சூழல் மகாநாட்டில் காலநிலை மாற்றம் பற்றியும் வறுமை ஒழிப்பு பற்றியும், காடுகளின் சிறப்பான முகாமைத்துவம் பற்றியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர உள்ளனர். இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெறவுள்ளது. ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100 கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.




சனி, 2 ஜூன், 2018

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3, 1924.


கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3, 1924.

முத்துவேல் கருணாநிதி ( M. Karunanidhi, இயற்பெயர் தட்சிணாமூர்த்தி , பிறப்பு: சூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.

இளமைப்பருவம்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள
திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் . நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்  . தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான
முரசோலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு,
கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.


அரசியல்

மாணவர் மன்றம்

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த
திருவாரூர் பகுதியில் இளைஞர்களை " மாணவ நேசன் " என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள்  மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

முரசொலி நாளிதழ்

இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் , மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

முதன்மை கட்டுரை: இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13 , 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது
உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு),
ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு , தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு ” என்று அவர் கூறினார். அக்டோபர் , 1963 , இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று
அண்ணாதுரையும் , நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.


சட்டமன்ற உறுப்பினர்

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
6 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
2011 திருவாரூர் 109014 எம்.இராசேந்திரன் அதிமுக 58765 50249
2016 திருவாரூர் 121473 பன்னீர்செல்வம் அதிமுக 53107 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம்

வெற்றிகள்

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி
குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து
தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
1969–1971 -- கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
1971-1976—இரண்டாவது முறையாக
1989–1991 -- எம். ஜி. இராமச்சந்திரன் , மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001—நான்காம் முறை ஆட்சி
2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி

விமர்சனங்கள்

1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். , 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது . சர்க்காரியா கமிசன் 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி
இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.

குடும்பம்

மனைவிகள்
பத்மாவதி
தயாளு அம்மாள்
ராசாத்தி அம்மாள் மகன்கள்
மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு மகள்கள்
செல்வி
கனிமொழி
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல்
துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர்.
கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.
இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும்
குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்

20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி அவருக்கு மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார்.
1. பொன்னர் சங்கர் (திரைப்படம்)
2. பெண் சிங்கம் (2010)
3. உளியின் ஒசை(2010)
4. பாச கிளிகள்(2016)
5. கண்ணம்மா (2005)
6. மன்னை மெயின்ஹான் (2005)
7. புதிய பரவசம் (1996)
8. மதுரை மீனாட்சி (1993)
9. கமல் குட்டுக்கரன் (1990)
10. நியாய தாராசு (1989)
11. பாச பரவைகள் (1988)
12. பாதாத்த தோழிகல் (1988)
13. நீட்டிக்கான தங்கன் (1987)
14. பாலிவனா ரோஜ்கல் (1985)
15. கலாம் பாடல் சல்லம் (1980)
16. பிள்ளையோ பிள்ளை (1972)
17. அவான் பித்தனா? (1966)
18. பூமாலை (1965)
19. பூம்புகார் (திரைப்படம்) (1964)
20. காஞ்சி தெய்வீன் (1963)
21. ஈருவார் உல்லம் (1963)
22. தெயில்லா பிள்ளை (1961)
23. அரிசிலங்க்குமரி (1961)
24. குருவன்ஜி (1960)
25. புதுமை பித்தன் (1957)
26. புடியாஹால் (1957)
27. ராஜா ராணி (1956 திரைப்படம்)
28. ரங்கோன் ராதா (1956)
29. மாலிகலன் (1954)
30. திருபம்பியார் (1953)
31. பனோம் (1952)
32. மனோகரா (திரைப்படம்) (1952)
33. மணமகள் (1952)
34. பராசக்தி (திரைப்படம்) (1952)
35. மந்திரி குமாரி (1950)
36. மருதநாட்டு இளராசி (1950)
37. அபிமன்யு (திரைப்படம்) (1948)
38. ராஜகுமாரி (திரைப்படம்) (1947)
39. இளைஞன் (திரைப்படம்)

 மு. கருணாநிதி திரை வரலாறு

தமிழக முதலமைச்சராக இருந்தவரும்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதையத் தலைவருமான மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார்.
கருணாநிதி தனது 17 வயதில் இருந்து
தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை , வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

மந்திரி குமாரி (1950)
பராசக்தி (1952) [2]
திரும்பிப்பார் (1953)
மனோகரா (1954) [3]
அம்மையப்பன் (1954)
ராஜா ராணி (1956)
புதுமைப்பித்தன் (1957)
காஞ்சித்தலைவன் (1963)
பூம்புகார் (1964)
கண்ணம்மா (1972)
காலம் பதில் சொல்லும் (1980)
இளைஞன் (2011)
மண்ணின் மைந்தன்
புதிய பராசக்தி
பாலைவன ரோஜாக்கள்
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
உளியின் ஓசை

திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

1. பணம் (1952)
2. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

வசனம் எழுதிய திரைப்படங்கள்

1. ராஜகுமாரி (1947)
2. மலைக்கள்ளன் (1954)

திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள்

திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:
1. ஊருக்கு உழைப்பவண்டி - மந்திரிகுமாரி
2. இல்வாழ்வினிலே ஒளி.. - பராசக்தி
3. பூமாலை நீயே - பராசக்தி
4. பேசும் யாழே பெண்மானே - நாம்
5. மணிப்புறா புது மணிப்புறா - ராஜா ராணி
6. பூனை கண்ணை மூடி - ராஜா ராணி
7. ஆயர்பாடி கண்ணா நீ - ரங்கோன் ராதா
8. பொதுநலம் என்றம் - ரங்கோன் ராதா
9. அலையிருக்குது கடலிலே - குறவஞ்சி
10. வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சித்தலைவன்
11. ஒருவனுக்கு ஒருத்தி என்ற - பூம்புகார்
12. கன்னம் கன்னம் - பூமாலை
13. காகித ஓடம் - மறக்கமுடியுமா
14. ஒண்ணு கொடுத்தா - மறக்கமுடியுமா
15. நெஞ்சுக்கு நீதியும் - நெஞ்சுக்கு நீதி
திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்
பொன்னர் சங்கர் எனும் பெயரில் கருணாநிதி எழுதிய கதை நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

நாடகத் துறைக்கான பங்களிப்புகள்

சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
நச்சுக் கோப்பை
இலக்கியப் பங்களிப்புகள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று

விருதுகளும், பெற்ற சிறப்புகளும்

உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 9. அக்டோபர் 2009 அன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி. சி. குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர். கருணாநிதி அவர்கள், 1970ல், பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010 க்கான ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.


கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.

டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.

’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.

தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.

தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.

அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.

ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.

தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.

ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.

கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.

ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.

பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.

சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.

’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.

12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.

புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.

படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.

கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.

கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.

கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.

தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.

வெள்ளி, 1 ஜூன், 2018

உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 2.



உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 2.

1971 ஜீன் 2ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக பாலியல் தொழிலாளர்கள் தினமாய் அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய வருடம்.. அதாவது, 1976ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, பிரான்சு நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆவேசமாக புகுந்தார்கள்.
தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின்,அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்சு நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.
ஆனாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான சில உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் ஜீன் 2ந்தேதி பாலியல் தொழிலாளர் தினமாய் அனுசரிக்கப்படுகிறது.


பாலியல் தொழிலாளிகளுக்கு சிவப்புக் குடை பிடிக்கலாமா?
தே னீக்கள் தீண்டத் துடிக்கும் தனது தேகத்தை, வானவில்லுக்கே வண்ணம் தரும் தன்னுதடை, தன் தாய் தந்துபோன உயிர்நாடியை, சொந்தங்களோடு கழிக்க வேண்டிய அந்திப்பொழுதை, எவனோ ஒருவன் தரும் காசுக்காக விற்கிறாள் அவள். அவள் விற்பது உடலை மட்டுமல்ல. தனது ஆசைகளை, இன்பங்களை, சொந்தங்களை, காதலை. ஆனால் அவள் கற்பை விற்பதை மட்டும்தான் பார்க்கிறது இச்சமூகம். அதனால் தான் அவளுக்கு இந்தப் பெயரையும் வைத்துள்ளது – பாலியல் தொழிலாளி என்று.
அவளின் மொத்த அங்கத்தையும் கூறு போட்டு அருந்தும் ஆணினம் அவளை மனித பிறப்பாய் பார்ப்பதில்லை போல. எத்தனை எத்தனை இன்னல்களை அவள் இங்கு சந்திக்க வேண்டியுள்ளது. அவளுக்கு எதிராக நடக்கும் தீண்டல்கள், பலாத்காரங்கள், கொலைகள், அவளை பூனையிடமிருந்து உயிரைக் காக்க ஓடும் எலியைப் போல் இன்று ஓடவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வுலகில் அவளின் நலனைப் பற்றிக் கவலைப்படும் சில உயிர்களும் பிறந்துள்ளன.
அவளை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், அவளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவளைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நாள் – சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.
ஆண் இனமும் விதிவிலக்கல்ல
2012-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, உலகம் முழுதும் சுமார் 4 கோடி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். 75 சதவிகிதம் பாலியல் தொழிலாளர்களின் வயது 13-25. இதைக் கண்டு ஏளனம் செய்ய ஆண்களுக்கு ஒன்றுமேயில்லை. காரணம் சுமார் 80 லட்சம் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுஜனம் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே.
இன்று நாம் டிராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் டொனேஷன் கொடுக்கவும் காரணங்கள் சரியானது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரின் செயலுக்கும் தவறுக்கும் காரணம் உண்டென்றில், அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்படவும் காரணம் உண்டுதானே? அக்காரணம் அறிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் தயாராய் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட, பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது?
பெண்களே ஒதுக்காதீர்கள்
பாலியல் தொழில் செய்யும் பெண்களை மற்ற பெண்களே ஏளனமாய் நினைப்பதுதான் பெரும் கொடுமை. இவ்வுலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம் என்கின்றனர் வல்லுனர்கள். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான, ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை அல்லவா உருவாக்கும்?


கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில். அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் நாள் ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.
சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.
இனியாவது அவர்களிடத்திலும் கொஞ்சம் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்கான உறுதியை இந்த சிவப்புக் குடை நாளில் மேற்கொள்வோம்! நன்றி விகடன்.


இந்தியாவின் பிரபல ‘ரெட் லைட்‘ ஏரியாக்கள்

பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சில இடங்களில் இந்த பாலியல் தொழில் அங்கு வாழும் மக்களுக்கான பிரதான வருமானமாக இருக்கிறது.
உலகின் பல்வேறு இடங்களைப் போலவே இந்தியாவிலும் பாலியல் தொழில் மூலம் மிகப்பெரும் வருமானம் ஈட்டும் இடங்களும் உள்ளன.
சோனாகச்சி, கோல்கத்தா
சோனாகச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாலியல் தொழிலாளிகளைச் சந்திக்க முடியும். சோனாக்கச்சிக்கு ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்ற புகழும் உண்டு. இந்த பகுதியில் மட்டும் சுமார் 11,000 பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பெண் குழந்தை பிறக்கும்போதே பாலியல் தொழிலாளியாகப் பிறக்கும் கொடுமை காட்சியாக்கப்பட்டுள்ளது.
காமத்திப்புரம், மும்பை
இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதி இந்த காமத்திப்புரம் தான். இங்கு வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண்களால், அப்பகுதியில் ஒரு பீடி சுற்றும் தொழில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. 1980-களில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம் ஆகியோர் இந்த காமத்திப்புரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
புத்வார், புணே
புத்வார் பகுதி முழுக்க எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில், ஏறக்குறைய 5000 பாலியல் தொழிலாளிகள் வசிக்கின்றனர். இந்த புத்வர் பகுதி தான் இந்தியாவில் உள்ள மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாகும்.
மீர்கஞ்ச், அலகாபாத்
இங்கு அங்கீகரிக்கப்படாத, சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் தொழில் செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சாலையில் போகும் ஆண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்வதுண்டு. இந்த பகுதிக்கு செல்பவர்களுக்கு அழகான ஆபத்துகள் எப்போதும் காத்திக்கொண்டிருக்கும்.
ஜி.பி. ரோடு, டெல்லி
டெல்லியில் உள்ள ஜி.பி.ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் பாலியல் தொழிலை மையமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில், தரைத்தளத்தில் ஆட்டோமொபைல் போன்ற கடைகளும் மேல்தளங்களில் பாலியல் தொழிலும் நடைபெறுகின்றன.


இந்தியாவில் பாலியல் தொழில் நடக்கும் பலான இடங்கள்..!! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

பண்டையக் காலம் முதலே தேவர்களுக்கு பணி செய்து வந்த பெண்களை தேவர் அடியவர் என்று கூறப்பட்டு வந்தனர்.
இப்போது அது கெட்ட வார்த்தையாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலை அந்த சொல்லை கூறி குறிப்பிடவும் செய்கிறோம்.
இந்த பகுதில், இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்களை பற்றி பார்க்கலாம்…
சோனாகாச்சி – கொல்கத்தா :
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி. ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடமாக சோனாகாச்சி திகழ்கிறது.
கொல்கத்தாவில் இது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு 12,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் புரிவோர் இருக்கின்றனர்.
காமாத்திபுரா – மும்பை :
இந்தியாவின் இரண்டாவது பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம் காமாத்திபுரா. இங்கு பாலியல் தொழில் புரிவோர் பெரும்பாலும், வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களும், வறுமையில் வாடுபவர்களும்தான்.
புத்வார் பெத் – புனே :
புத்வார் பெத், இந்தியாவின் பாலியல் தொழில் புரிவோர் இடங்களில் மூன்றாவது இடத்தில உள்ளது.
இங்கு 5000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலார்கள் இருக்கின்றனர்.
இதே இடத்தில் ஏலேக்ட்ரோனிக்ஸ் பொருள்கள் விற்கப்படும் மையம் ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மீர்குஞ்சி (Meergunj) – அலகாபாத் :
இது மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. இங்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் புரிவதாக பல முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருக்கின்றன.
இங்கு சட்டவிரோதமாக, சாலையில் செல்வோரை கட்டாயப்படுத்தி அழைப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஓர் நரகம் போன்ற இடம் என்றும் அந்த பக்கம் செல்லவே பலர் பயப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
ஜி.பி ரோடு – டெல்லி :
மற்றுமொரு பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம், டெல்லியில் இருக்கும் ஜி.பி. ரோடு பகுதி ஆகும்.
இந்த சாலையில் நூற்றுக்கும் அதிகமாக விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் அமைந்திருக்கும் பல கடைகளின் மேல் மாடிகளில் சாதரணாமாக விபச்சாரம் நடைப்பெறுகிறது.
இத்வாரி – நாக்பூர் :
இத்வாரி எனும் இவ்விடம் கங்கா ஜமுனா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு கிரிமினல் குற்றங்களும் சேர்ந்து நடைப்பெருகிறது. இந்த இடம் மிகவும் ஹாட்டான இடமாக கருதப்படுகிறது.
சிவதாஸ்பூர் – வாரணாசி:
பண்டைய காலத்தில் இருந்து பாலியல் தொழில் நடைபெற்றுவரும் மற்றுமொரு இடமாக இந்த கிராமம் கருதப்படுகிறது.
இங்கு மிகவும் குறைந்த விலையில் விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.