ஞாயிறு, 17 ஜூன், 2018

மணியாச்சி ஸ்டேஷனை உலுக்கிய வாஞ்சிநாதனின் துப்பாக்கி ஜூன் 17... 1911


மணியாச்சி ஸ்டேஷனை உலுக்கிய வாஞ்சிநாதனின் துப்பாக்கி ஜூன் 17... 1911 

சரியாக 106 வருடங்களுக்கு முன் இதேநாளில்தான் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு எழுச்சி ஏற்படுத்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது.
1911 ஜூன் 17 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பிலிருந்து காலை சரியாக 9.30 மணிக்கு மணியாச்சி மெயில் என்கிற ரயில் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. ரயிலின் முதற்பெட்டியின் அருகே சில ஆங்கிலேயே காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காரணம் அந்த பெட்டியில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட்  ஆஷ் தன் மனைவியுடன் பயணம் செய்ததே. கொஞ்ச நேரத்தில் பிளாட்பாரத்திலிருந்தவர்கள் விலகிநிற்க ரயிலின் புறப்பாடு சத்தம் பிளாட்பாரத்தின் கடைக்கோடி வரை கேட்டது. அப்போது இரு இளைஞர்கள் விறுவிறுவென ஓடிவந்தனர். ரயிலின் ஓட்டத்திலேயே இரண்டாம் வகுப்பு பயணப்பெட்டியில் அவர்கள் தாவி ஏறினார்கள். வண்டி வேகமெடுத்தது. மெயில், திருநெல்வேலி - மதுரை சந்திப்புகளுக்கிடையில் உள்ள மணியாச்சி ரயில்நிலையத்தில் நின்றபோது மணி சரியாக 10.35. இரண்டாவது மற்றும் 3 வது நடைமேடைகளுக்கு நடுவே உள்ள ரயில் பாதையில் ரயில் இப்போது நின்றுகொண்டிருந்தது.

கொடைக்கானலுக்கு செல்பவர்கள் 10.48 க்கு 3-வது நடைமேடைக்கு வரும் போட் மெயிலில் ஏறிச்செல்லவேண்டும். பதறியடித்து அதில் செல்லவேண்டிய பயணிகள் இறங்கி சுமைகளுடன் பிளாட்பாரத்தினை கடந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆஷ்சும் கொடைக்கானலுக்குதான் செல்லவேண்டும். ஆனால், ஆங்கிலேய கலெக்டர் என்பதால் அவரிடம் ஒரு பதற்றமுமில்லை. போட் மெயில் வந்தபின் செல்ல முடிவெடுத்து வண்டியிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், முன்னேற்பாடாக அவரது உதவியாள் காதர் பாட்சா ஆஷின் உடைமைகளை, இரண்டாவது நடைமேடையில் இருந்த முதல்வகுப்பு பயணிகள் அறையில் எடுத்துக்கொண்டுபோய் வைத்தான்.

துப்பாக்கி
கலெக்டர் ஆஷ் வந்திருப்பதை அறிந்து ஸ்டேஷன் மாஸ்டர் முதல்வகுப்பு பெட்டிக்கு வந்து ஆஷிடம் சம்பிரதாயமாக நலம்விசாரித்துவிட்டுச் சென்றார். ஸ்டேஷன் மாஸ்டரின் பிள்ளைகள் இருவர் தூரத்திலிருந்தபடி தங்களின் வெள்ளைக்கார கலெக்டரை ஆச்சர்யமாகப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். ஆஷ் அவர்களை சிநேகமான பார்வை பார்த்தார். மணித்துளிகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது இரண்டாம் நடைமேடையின் தென்பகுதியிலிருந்து இரு வாலிபர்கள் தலையை குனிந்தவாறு ஆஷ் இருந்த பெட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். ஆம்...வண்டி கிளம்பியபின் வந்து ஏறிய அந்த இருவர்தான் அவர்கள்! இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்த சம்பவமும் அதற்கு காரணமாகப்போகும் இந்த இருவரும் அந்த நொடியில் வெறும் ரயில்பயணிகளாத்தான் அங்கு மற்ற பயணிகளுக்கு தெரிந்தார்கள். அதனால் அவர்களை சர்வசாதாரணமாக கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

இருவரில் பச்சை சட்டை அணிந்த நபர் ஆஷ் இருந்த பெட்டியில் ஏறினார். மலையாளி போன்ற உடை அணிந்த மற்றொருவர் முதல்வகுப்பு பயணிகளின் வேலையாட்களுக்கான ஓய்வு அறையில் இருந்தபடி ஆஷ் இருந்த பெட்டியின் மீது தீவிரமாக தன் பார்வையை பதித்திருந்தார். அவர்கள் திட்டமிட்ட காரியம் நடக்க சில மணித்துளிகளே இருந்ததால் அவர் முகத்தில் சற்று பதற்றம் கூடியிருந்தது.

முதல்வகுப்பு பெட்டியில் ஏறிய பச்சை சட்டை வாலிபர் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து ஆஷை குறிவைத்தார். ஆங்கிலேயர்கள் குறிப்பாக மேலதிகாரிகள் மட்டும் பயணம் செய்யும் அந்தப் பெட்டியில் எளிய உடையில் ஒருவன் ஏறுவதை அதுவரை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஆஷ் அவன் கைத்துப்பாக்கியை எடுத்து தன்னை குறிவைத்தபோது ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்தார். டோண்ட் சூட் என கத்தினார். அதேசமயம் வாலிபனின் கவனத்தை திசைதிருப்ப தன் கனமான தொப்பியை எடுத்து அவன் மீது வீசவும் தவறவில்லை அவர். ஆனால், தொப்பிக்கு ஆஷை காப்பாற்ற விருப்பமில்லைபோல. அது குறிதவறி ஜன்னல் வழி பறந்து இரண்டாவது நடைமேடையில் போய் விழுந்தது. ஆஷ்க்கு எதிரே அமர்ந்தபடி ஜன்னல் வழியே பிளாட்பாரத்தில் ஊர்ந்துகொண்டிருந்த மக்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த திருமதி ஆஷ்க்கு இந்த சத்தத்துக்குப்பிறகுதான் அந்நியன் ஒருவனுடன் கணவர் போராடுவது புரிந்தது. அவளும் சத்தம் எழுப்பினாள். ஆனால் எல்லாம் வீண். பச்சை சட்டை வாலிபனின் கையிலிருந்த பிரௌனிங் எனப்படும் தானியங்கி துப்பாக்கியிலிருந்து குண்டு ஆஷ் நெஞ்சை துளைத்தது. ஆனாலும் மேலும் குண்டு பாய்ந்துவிடாதபடி நெஞ்சை பிடித்தபடி வாலிபனை விரட்டிப்பிடிக்க முயன்றார் ஆஷ். ஆனால் முடியாமல் சரிந்து விழுந்தார். அதற்குள் ஆஷின் மனைவி அவரைத் தாங்கியபடி கொலை கொலை என கூச்சலிட்டாள். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் பிள்ளைகள் பதறியடித்தபடி அங்கிருந்து ஓடினார்கள்.

பச்சை சட்டை வாலிபனுடன் வந்தவர் இப்போது அங்கு இல்லை. வெடிச்சத்தம் கேட்ட நொயில் ஓடி மறைந்திருந்தார். பச்சை சட்டை வாலிபரை ஆஷின் உதவியாளான காதர்பாட்ஷா உள்ளிட்ட சில பயணிகள் துரத்தியபடி சென்றனர். இரண்டாவது மேடையிலிருந்து பந்தென எகிறிகுதித்து ரயில் நிலைய வடக்குப்பகுதிக்கு வந்த பச்சை சட்டை வாலிபர் அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்தார். தன்னை சூழ்ந்திருந்தவர்களை விலகி ஓடிவிடும்படி துப்பாக்கியை காட்டி பயமுறுத்த பெரும் பதற்றம் சூழ்ந்திருந்தது ரயில் நிலையத்தை. அதற்குள் ஆஷ்க்கு முதலுதவி அளிக்க அவர் வந்த ரயில் திரும்ப திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், செல்லும் வழியிலேயே சரியாக 11-30 மணிக்கு மனைவியின் மடியிலேயே ஆஷின் உயிர் பிரிந்தது. அதிக ரத்தப்போக்கு அவர் மரணத்துக்கு காரணமானது.


ஆஷ் துரை

அதேநேரம் கழிவறையில் புகுந்த வாலிபன் துணிச்சலாக மக்களை விரட்டும் முயற்சியில் இருந்தான். அதற்குள் மணியாச்சி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டு காவலர்கள் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். கழிவறையை திறந்துபார்த்தபோது தலைப்பகுதியில் குண்டு பாய்ந்து முகம் முழுக்க ரத்தக்குவியலுடன் இறந்துகிடந்தார் வாலிபர். யார் இந்த ஆஷ் இவருக்கும் ஒரு இந்திய வாலிபனுக்கு என்ன தகராறு...

பச்சை சட்டை வாலிபனின் சட்டைப்பையில் இருந்த கடிதம் எல்லாவற்றுக்குமான விடைகளை சொன்னது. “ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தை பிடுங்கிக்கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருக்களாகிய வெள்ளையனைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சித்துவருகிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜினன் முதலியோர் தர்மம் செழிக்க ஆட்சி செய்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஒரு ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசித்துக்கொண்டு பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதை தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இச்செய்கையை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவவொருவனும் செய்யவேண்டிய கடமை”... இப்படிக்கு, வாஞ்சி அய்யர்.

தங்களுக்கு கிலி கொடுத்த இந்த விவகாரத்தின் பின்னணியை ஆங்கிலேய அரசு ஆராய முற்பட்டபோதுதான் தாய்நாட்டுக்காக தன் உயிரை ஈந்த அந்த பச்சை சட்டை வாலிபன் செங்கோட்டை சன்னதித் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மணியக்காரர் ரகுபதி என்பவரின் மகனான வாஞ்சிநாதன் என்பது உலகிற்கு தெரியவந்தது. அவருடன் சென்ற மற்றொரு வாலிபர் சங்கர கிருஷ்ணய்யர் என்பது பின்னாளில் நடந்த அடையாள அணிவகுப்பில் உறுதியானது. வாஞ்சிநாதனால் எந்தவிதத்திலாவது திட்டம் தோல்வியடைந்தால் சங்கர கிருஷ்ணய்யர் அதைத்தொடர்ந்து முடிப்பது என்பது அவர்களின் திட்டம் என்பது தெரியவந்தது.


வாஞ்சிநாதன்
இந்திய சுதந்திரப்போருக்கு விதைப்போட்ட அரசியல் கொலை சம்பவங்களில் முக்கியமானதாக வரலாற்றில் பதிவானது இந்த சம்பவம். வாஞ்சிநாதனை இப்படி ஓர் முடிவை நோக்கித் தள்ளிய விஷயம் என்ன?...

அன்றைய திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி நகரில் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் உச்சமாக இருந்தது. துறைமுக நகரான தூத்துக்குடியில் வெள்ளையர் நடத்திவந்த கப்பல் நிறுவனத்தின் முறையற்ற போக்கையும் அதற்கு காரணமான வெள்ளையர்களை கண்டிக்கும் விதமாக சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி நடத்தினார் வ.உ.சிதம்பரனார். இதனால் வெள்ளையர் எதிர்ப்புக்கு காரணமானார்.

இந்த நேரத்தில் துாத்துக்குடிக்கு உதவி ஆட்சியராக பணியில் அமர்த்தப்பட்டவர்தான் ஆஷ். ஆஷ் ஒரு கொடூரமானவன் கிடையாது. ஆனால் இனவெறி கொண்டவன். மேலதிகாரிகளின் சொற்படி கேட்டு நடப்பவன். 'இந்தியர்கள் ஒடுக்கப்படவேண்டியவர்கள்; தங்கள் சொற்படி பணிந்துசெல்லவேண்டியவர்கள்' என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவன். அதனால் தூத்துக்குடியில் வ.உ.சி தலைமையில் நடந்த பல சுதந்திரப் போராட்டங்களை நிகழ்வுகளை மழுங்கடிக்க பல யுக்திகளை செய்தான்.


1908 ல் நடந்த ஒரு போராட்ட நிகழ்வில் வ.உ.சி மற்றும் சிலரை தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைத்ததோடு இதுதொடர்பாக அவன் எடுத்த நடவடிக்கைகளை சில வெள்ளையர் அதிகாரிகளேகூட ஏற்கவில்லை. அத்தனை சர்வாதிகாரியாக இருந்தான் ஆஷ்.
ஆஷின் மரணத்துடன் வாஞ்சிநாதனை இணைத்த புள்ளி எது....செங்கோட்டையில் பள்ளிப்படிப்பும் திருவனந்தபுரம் ஸ்ரீமூலம் திருநாள் கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்த வாஞ்சிநாதனுக்கு வனத்துறையில் அரசுப் பணி கிடைத்தது. ஆங்கிலேயர்களை விரட்ட உருவான தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பில் அவருக்கு தொடர்பு உருவானது.

புரட்சிக்கர கருத்துகளை கொண்ட புத்தகங்களை படித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடும் மனநிலை ஒருகட்டத்தில் உருவானது. 22வது வயதில் முன்னீர்பள்ளம் சீதாராமையர் மகள் பொன்னம்மாளை மணந்தார். அப்போது நெல்லை மாவட்டத்தில் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது. வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் ஆங்கிலேய அரசால்  சிறைப்படுத்தப்பட்டு கொடுமைக்குள்ளானது அவரது கவனத்துக்கு வந்தது.

அப்போது புதியதாக கலெக்டராக வந்த ஆஷ் உத்தரவினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதனால் 4 பேர் இறந்ததும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவந்ததும் வாஞ்சிநாதனைப்போன்ற சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற பல ஆயிரம் இளைஞர்களுக்கு ஆத்திரம் தந்தது. ஆங்கிலேயர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என வாஞ்சிநாதன் உள்ளிட்ட சிலர் முடிவெடுத்தனர்.

வாஞ்சிநாதன்
இதற்காக வாஞ்சிநாதன் தன் நண்பர்களான சாவடி சொக்கலிங்கபிள்ளை, தர்மராஜ் ஐயர், ஜெகநாத ஐயர், அரிகர ஐயர், மகாதேவ ஐயர், அழகப்ப பிள்ளை, புனலூர் ராமசாமி பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணியம், தென்காசி சிதம்பரம் பிள்ளை, கடையநல்லூர் சங்கர கிருஷ்ணையர், தூத்துக்குடி சுப்பையா பிள்ளை, முத்துகுமாரசாமி பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை, தஞ்சாவூர் நீலகண்ட பிரம்மசாரி பிள்ளை ஆகியோருடன் 1911 ஆம் ஆண்டு செங்கோட்டை சாவடி அருணாசலப் பிள்ளை வீட்டில் ரகசிய கூட்டம் ஒன்றை நிகழ்த்தினார். கூட்டத்தில் ஆஷ்துரையை சுட்டுக் கொலை செய்வதென முடிவெடுக்கப்பட்டு சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. இதில் வாஞ்சிநாதன் பெயர் வர அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினார் வாஞ்சி. இதற்காக சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் அவரது குழந்தை இறந்தபோதும் அதில் வாஞ்சிநாதன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளையர்கள் மீது அத்தனை கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில், ஆஷ்துரை கொடைக்கானலுக்கு 1911 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி ரயிலில் புறப்பட்டுச் செல்வதாக வாஞ்சிநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பிறகு நடந்தவைகளை நாடறியும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆஷ் கொலை ஒரு மறக்கவியலாத வரலாறானது. நெல்லை சதி வழக்கு என நடத்தப்பட்ட இந்த வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 1912 பிப்ரவரி 15 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய சுதந்திர வரலாற்றில் பின்னாளில் வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து இருவேறு கருத்துகள் பேசப்பட்டன. எப்படியிருந்தாலும் தாய்நாட்டுக்காக ரத்தம்சிந்திய அவரது நினைவு போற்றத்தக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை!

சனி, 16 ஜூன், 2018

உலக தந்தையர் தினம்


உலக தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை...

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காககொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம்
முழுமையடையச் செய்கிறது.

வரலாறு

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த
தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.  மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.
இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்களில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது. அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது.  தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது.  சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.
1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார். மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.  1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.
தந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.


வணிகமயமாக்கல்

1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன. மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும். இந்த கவுன்சிலுக்கு டோடின் ஆதரவு எப்போதும் இருந்தது. இந்த விடுமுறையை வணிகமயமாக்குதலால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேலும் பரிசுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான பல்வேறு ஊக்குவித்தலுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த விஷயத்தில் அன்னையர் தினதிற்கான அனைத்து வணிகமயமாக்குதல்களையும் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும் அன்னா ஜார்விஸுக்கு எதிரானவராக இவரைக் கருதலாம்.

வணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.  1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது. எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு "இரண்டாவது
கிறிஸ்துமஸ்" போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது. 1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்.


உச்சரிப்பு

இந்த நிகழ்ச்சியின் பெயர் வழக்கமாக பன்மை உடைமையாகவே புரிந்து கொள்ளப்பட்டது (எ.டு. "தந்தையர்களுக்கு உரிய தினம்"), வழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது "பாதர்ஸ்' டே" என உச்சரிக்கப்பட்டது. மேலும் அதிகமாக ஒருமை உரிமைப் பொருளைக் கொண்டு "பாதர்'ஸ் டே" என்றே உச்சரிக்கப்பட்டது (எ.டு. "தந்தைக்கு உரிய தினம்"). டோட் அவரது தொடக்க விண்ணப்பத்தில் "பாதர்ஸ்' டே" என்ற உச்சரிப்பையே பயன்படுத்தியிருந்தார்,ஆனால் 1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் "பாதர்'ஸ் டே" என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்'ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.

உலகம் முழுவதிலுமான தேதிகள்

தந்தையர் தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தந்தையர் தினம் கடைபிடிக்கப்படும் தேதியைக் கொண்டு இந்தப் பிரிவில் சில குறிப்பிட்ட எடுத்துகாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான்

*இந்த விடுமுறை ரஷ்ய ஆயுதப் படைகளில் (ஆண் பெண் இருவரும்) பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மக்களுக்காக கொண்டாடப்படுவதற்காக இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சம்பிரதாய முறையாக தேசமக்களால் அனைத்து தந்தையர்களும் பிற ஆண்களும் ஆண்குழந்தைகளும் இந்த மகிழ்ச்சியை ஒப்புக்கொண்டனர்.
**சீனாவில் (சீனக்குடியரசின் ஆட்சியின் கீழ், தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில்), ஆகஸ்ட் 8 அன்று கடைபிடிக்கப்பட்ட முதல் தந்தையர் தினம் 1945 ஆம் ஆண்டில் சாங்காயில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்
சில கத்தோலிக்க நாடுகளில், சென். ஜோசப் தினத்தில்இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜோஸ் டே சன் மார்டின் அந்த நாட்டின் "தேசியத் தந்தையாக" கருதப்பட்டு தந்தையர் தினத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவரது நினைவு விழாவாக மாற்றிக் கொண்டாட பல்வேறு முயற்சிகள் நடந்தது.
1953 ஆம் ஆண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆகஸ்ட் 24 அன்று தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்மொழியப்பட்டது. ஜோஸ் டே சன் மார்டினை கெளரவப்படுத்துவதற்காக இது கொண்டாடப்பட வேண்டுமென மெண்டோசா புரொவின்ஸின் கல்வியகங்களின் பொது இயக்ககத்திற்கு இது அனுப்பப்பட்டது. 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் முதன் முதலில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியின் காரணமாக பள்ளி காலெண்டரில் இந்த தினம் சேர்க்கப்படவில்லை.
மெண்டோசா புரொவின்சில் இருந்த பள்ளிகளில் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாடின. மேலும் 1982 ஆம் ஆண்டில் மாநில ஆளுநர் அந்த மாகாணத்தில் தந்தையர் தினம் அதே நாளில் கொண்டாடப்படும் என சட்டமியற்றினார்.
2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு மாற்றுவதற்கு பல்வேறு முன்மொழிதல்கள் தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டமாக அர்ஜென்டினே கேமரா டே டிபுடடஸில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அனுமதியைப் பெற்றபிறகு இந்த செயல்திட்டம் அர்ஜென்டினா ஆட்சிப் பேரவைக்கு இறுதி மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆட்சிப்பேரவையானது புதிய முன்மொழியப்பட்ட தேதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றி அமைத்தது. எனினும் ஆட்சிப்பேரவையின் குறிப்பிட்ட பருவத்தில் இந்த செயல்திட்டத்தைப் பற்றி எந்த சொற்பொழிவும் நடக்கவில்லை. அதனால் இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.



ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

கோஸ்டா ரிகா

கோஸ்டா ரிகாவில் த யுனைடடு சோசியல் கிர்ஸ்டினா கட்சியானது இந்த தினத்தை ஜூன் மாத மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுவதற்கு பதிலாக சென் ஜோசப் தினமான 19 மார்ச்சில் கொண்டாடுவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாட்டின் தலைநகரமான சான் ஜோஸ், கோஸ்டா ரிக்காவிற்கு பெயரளித்த புனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மசோதா செயல்படுத்தப்பட்டது. மேலும் அதன் மூலம் குடும்பத்தினர் தொண்டரான செயிண்ட் ஜோசப்பின் பெருவிருந்து தினத்திலேயே தந்தையர் தினத்தையும் கொண்டாடுவதற்கு இது வழிசெய்யும். ஆனால் இன்றும் அதிகார்வப்பூர்வ தேதியாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையே உள்ளது.

ஜெர்மனி

ஹெரண்டக் அருகில் குடித்து விட்டு உலாவரும் நிகழ்ச்சி
ஜெர்மனியரின் தந்தையர் தினம் உலகத்தின் மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது.  பழைய இனத்தவரிலிருந்து இரண்டு சொற்கள் மற்றும்/அல்லது நிகழ்ச்சிகள் இதே பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக வேறுவிதமான கருத்தைக் கொண்டுள்ளது. அஸ்சென்சன் தினத்தில் மட்டுமே எப்போதும் வேட்டர்டக் கொண்டாடப்படுகிறது (ஈஸ்டர் முடிந்து நாற்பது நாளுக்கு பின்பு வரும் வியாழக்கிழமை). அது அரசாங்க விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இது மேனர்டக் எனப்படும் ஆண்களின் தினம் என்றும் அல்லது ஹெரன்டக் எனப்படும் நன்மகன் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டும் நடைபயணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பார வண்டிகளான பொல்லர்வேகனை மனித ஆற்றலைக் கொண்டு இழுத்துச் செல்வது பராம்பரியமாகும். இந்த பாரவண்டிகளானது வைன் அல்லது பியர் (பிராந்தியங்களைப் பொருத்து) மற்றும் பராம்பரிய பிராந்திய உணவுகள்,
சவுமகென் உணவு வகையான
ஹவுஸ்மன்கோஸ்ட் , லிபெர்வொர்ஸ்ட் (லிவர்ஒர்ஸ்ட்), ப்ளட்ஒர்ஸ்ட் (ப்ளட் சசஜ்), காய்கறிகள், முட்டைகள், மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். பல ஆண்கள் இந்த விடுமுறை தினத்தை மிகவும் அதிகமாக குடித்துவிட்டு தெருக்களில் குழுவாக அலைவதற்காக பயன்படுத்துகின்றனர். இதில் பங்குகொள்ளாமல் இருக்கும் மாறுதலை விரும்பாத ஜெர்மன் மக்கள் அதிகமான தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர்.  காவல்துறை மற்றும் அவசர நிலை சேவைகள் போன்றவை இந்த நாளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர். மேலும் சில இடது சாரிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த விடுமுறையை தடை செய்யும் படி கோரி வருகின்றனர்.
ஜெர்மனியின் சில பகுதிகளில் (பவரியா மற்றும் ஜெர்மனியின் வடக்கு பகுதி போன்றவை) தந்தையர் தினத்தை ஒப்பிடும் படியான இந்த நாளை "வேட்டர்டக்" என அழைக்கின்றனர்.

நியூசிலாந்து

நியூசிலாந்தில், தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

பிலிப்பைனஸ்

பிலிப்பைன்ஸில் தந்தையர் தினமானது ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறை அல்ல. ஆனால் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. 1960கள் மற்றும் 1970களில் பிறந்த பெரும்பாலான பிலிப்பைன் மக்கள் தந்தையர் தினத்தை கொண்டாடவில்லை. ஆனால் அமெரிக்காவைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தறிந்து அந்தத் தாக்கத்தினால் பிலிப்பைன் மக்கள் அமெரிக்காவின் பாரம்பரியத்தை பின்பற்ற மிகவும் விரும்பினர். மேலும் இதைப் போன்ற பிற அமெரிக்க விடுமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இணையத்தின் வருகையும் பிலிப்பைன் மக்களுக்கு இந்த விடுமுறைகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தது.

ரோமன் கத்தோலிக்க பாரம்பரியம்

ரோமன் கத்தோலிக்க பாரம்பரியத்தில் செயின்ட் ஜோசப் தினத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் 19 அன்று வழக்கமாக இது செயிண்ட் ஜோசப் விருந்து என அழைக்கப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட நாடுகளில் தந்தையர் தினமானது மதச்சார்பற்ற கொண்டாட்டமாக உள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

தைவான்

தைவானில் தந்தையர் தினம் ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறைதினம் அல்ல. ஆண்டின் எட்டாவது மாதத்தின் எட்டாவது நாளான ஆகஸ்ட் 8 இல் இந்த தினம் பரவலாக அனுசரிக்கப்படுகிறது. மண்டரைன் சைனிஸில் எண் 8 ஆனது பா என உச்சரிக்கப்படுகிறது. "பாபா" அல்லது "தந்தை" என்ற அர்த்ததில் இந்த உச்சரிப்பு "爸" "பா" என்ற எழுத்தை மிகவும் ஒத்துள்ளது. அதனால் தாய்வானியர்கள் ஆகஸ்ட் 8 ஐ அதன் செல்லப்பெயரில் "பாபா தினம்" (爸爸節) என வழக்கமாக அழைக்கின்றனர்.

தாய்லாந்து

தாய்லாந்தில் ராஜாவின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். தற்போதைய ராஜாவான புயிமிபொல் அடல்யதேஜிற்கு (ராமா IX) டிசம்பர் 5 ஆம் தேதி பிறந்த நாளாகும். தாய்ஸ் இந்த தினத்தை ஆண்தன்மையுடைய மலராக கருதப்படும் கன்னா மலரை (கோக் புட் ட ருக் சா) அவர்கள்து தந்தை அல்லது தாத்தாக்களுக்கு கொடுத்து கொண்டாடுகின்றனர். தாய் மக்கள் ராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையாக இந்த நாளில் மஞ்சள் நிற ஆடையை உடுத்துவர். ஏனெனில் மஞ்சள் நிறமானது திங்கள் கிழமையின் அந்த நாளின் நிறமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ராஜா புயிமிபொல் அடல்யதேஜ் பிறந்தார்.
இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் இருந்து கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. அன்னையர் தினமானது ராணியான சிரிகிட் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.


அமெரிக்கா

அமெரிக்காவில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் இதன் முதல் கொண்டாட்டம் தொடங்கியது.  தந்தையர்களைக் கெளரவப்படுத்துவதற்கான பிற கொண்டாட்டங்கள் பேர்மோண்ட் மற்றும் கிரெஸ்டனில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நவீன விடுமுறை இந்த இரண்டிலும் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது அல்ல.
வாஷிங்டனில் உள்ள கிரெஸ்டனில் பிறந்த சொனொரா ஸ்மார் டோடினால் இந்த நவீன தந்தையர் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை நிறுவுவதற்கு இவரே இயக்கு சக்தியாக இதற்குப் பின்னால் இருந்தார். அவருடைய அப்பாவான உள்நாட்டுப் போரில் அனுபவமுள்ள வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் தனி மனிதராக அவரது ஆறு குழந்தைகளையும் வளர்த்துள்ளார். அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு உழைத்த அன்னா ஜர்விஸால் இவர் ஊக்கமூட்டப்பட்டார். எனினும் தொடக்கத்தில் அவரது அப்பாவின் பிறந்த நாளான ஜூன் 5 ஆம் தேதியையே அறிவுறுத்தினார். இவர் நிறுவனர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தகுந்த காலம் தராததால் இந்த கொண்டாட்டம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனின் ஸ்போக்கன் YMCAவில் முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
பிரபலங்களான வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரைன்போன்றோரின் அதிகார்வப்பூர்வமற்ற ஆதரவால் விரைவாக இது பரவியது. 1916 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவரது குடும்பத்தாருடன் தனிப்பட்ட முறையில் இந்த தினத்தைக் கொண்டாடினார். 1924 ஆம் ஆண்டு ஜனாதிபதி கெல்வின் கூலிட்ஜ் இந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் படி பரிந்துரைத்தார். 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகக் கொண்டாட வழிவகை செய்தார். ரிச்சர் நிக்சனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 1972 ஆம் ஆண்டு வரை இந்த விடுமுறை தினம் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அண்மை ஆண்டுகளில் விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட பரிசுகளான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகளை இந்த விடுமுறை நாளில் அளிப்பதற்கு ஊக்கமளித்து வருகின்றனர். தந்தையர் தினப் பரிசுகளை அளிப்பதற்காக வழக்கமாக பள்ளிகளிலும் மற்றும்பிற குழந்தைகள் நிகழ்ச்சி நிரல்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


முன் வரலாறு

முதல் நவீன "தந்தையர் தின" கொண்டாட்டமானது ஜூலை 5, 1908 அன்று மேற்கு வெர்ஜினியாவில் உள்ள பேர்மோண்ட்டில் மத்திய யுனைட்டட் மெத்தொடிஸ்ட் தேவாலயம் என இப்போது அறியப்படும் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் தெற்கு தேவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. கிரேஸ் கோல்டன் கிளைடன் அவருடைய அப்பாவான, மெத்தொடிஸ்ட் மதகுருவான ஃப்ளெட்சர் கோல்டன் பிறந்த நாளுக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். இந்த நகரத்தில் பிற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தக் கொண்டாட்டம் அவர்களது நகரத்தைத் தாண்டி ஊக்குவிக்கப்படவே இல்லை. மேலும் எந்த அரசுப் பொது அறிவிப்பும் நகர கவுன்சிலால் மேற்கொள்ளப்படவில்லை. வேறு இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியின் மேல் ஆதிக்கம் செலுத்தின. அவை: ஜூலை 4 ஆம் தேதியில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் 12,000 பேர் கலந்து கொண்டு வெப்பமான காற்று பலூன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஒரு 16 வயது இளம் பெண் இறந்திருந்தார் அது ஜூலை 5 ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த நாள்களில் இது முக்கிய செய்தியாக இருந்தது. உள்ளூர் தேவாலயமும் கவுன்சிலும் ஆர்வமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை. மேலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய போதனை மீண்டும் நிகழ்த்தப்படாமல் இது கைவிடப்பட்டது. மேலும் கிளைடன் இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கவோ மற்றவர்களிடம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசக்கூட செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார்.

கிளைடன் அவருடைய அப்பாவின் இழப்பினால் துயருற்றிருந்தார். மேலும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மோனோநக் அருகில் உள்ள மோனோநக் சுரங்கத்தொழில் சேதத்தில் 361 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதில் 250 பேர் அப்பாக்கள் இந்த சம்பவத்தால் ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பா இல்லாத குழந்தைகள் ஆனார்கள். கிளைடன் அவருடைய மதகுருவான ராபர்ட் தாமஸ் வெப்பை இறந்த அனைத்து அப்பாக்களையும் கெளரவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

பேர்மோண்ட்டில் இருந்து 15 மைல்கள் (24 கிமீ) தொலைவில் இருக்கும் நகரமான கிரப்டன், மேற்கு விர்ஜினியாவில் அவரது அம்மா இறந்ததற்கான சடங்குகளை இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னா ஜர்விஸ் செய்திருந்தார். மேலும் அன்னா ஜர்விஸ்' அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு அறப்போர் நடத்தியதில் கிளைடனும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.



‘‘அன்னையி நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினா ஊரை வாங்கலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக்காட்டியிருப்பார்.
ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
இருந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையைவிட, அன்பை பொழியும் தாயைத்தான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகம் பிடிக்கிறது.
உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், ‘தந்தையர் தினம்’ என்பது 1910–ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது.
அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார்.
அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.


அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர கவர்னர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமையே (இன்று) ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தங்களது தந்தையை கவுரவித்து பரிசுகளை வழங்க, தமிழகத்தில் உள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
சென்னையில் உள்ள வாழ்த்து அட்டை கடைகளில், தந்தையர் தினத்திற்கு என்றே பிரத்யேக வாழ்த்து அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, தந்தைக்கு வாழ்த்து மடல் போன்று வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதேபோல், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் தந்தையர் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில், தங்களது தந்தைக்கு பிடித்த உணவை கூறினால், தயாரித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். சென்னையை போன்ற பெரு நகரங்களில் குடும்பத்துடன் இருந்தாலும், காலையில் குழந்தை கண்விழிக்கும் போது வீட்டை விட்டு வேலைக்கு புறப்படும் தந்தைமார்கள், இரவு குழந்தை தூங்கும் நேரத்தில் தான் வீடு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் உடனான உறவை வேலைப்பளு பிரிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் தனது சிறு வயது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லிவிட்டு பல தந்தைமார்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அந்த குழந்தையோ, பொம்மைக்கு பதிலாக தனது தந்தையே, அருகில் இருந்து விளையாட மாட்டாரா? என்று ஏங்குகிறார்கள். பொருளாதார தேவை அந்த அளவுக்கு குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுகிறது. இருந்தாலும், தந்தை மீதான பாசம் அந்த குழந்தைகளுக்கு குறைந்து போய்விடுவதில்லை.
சிறு வயதில், தாய்–தந்தையின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய்–தந்தைக்கு அவர்கள் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்போம்.


தெய்வங்கள் எல்லாம் தோற்கும் தந்தை அன்பின் முன்னே...

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை.
தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு  உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
வழிகாட்டி
தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை. சில தந்தைகள் தன் குழந்தைக்கு
நண்பனை போல இருப்பர். 'அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும்.
எப்படி வந்தது
அமெரிக்காவில் 1909ல் 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு துாண்டியது.
இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்
பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.


தந்தையர் தினம்: முதல் ஹீரோ அப்பாதான்!

 ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.
தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம். நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.

நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.

தந்தைக்கு மரியாதை

உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம்.

தந்தையின் தியாகம்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் அனுப்புங்கள்.

தந்தைக்கு மரியாதை

தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.

மெழுகுவர்த்தி

ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!


வியாழன், 14 ஜூன், 2018

உலக காற்று தினம் ஜூன்15 (World Wind Day).


உலக காற்று தினம் ஜூன்15 (World Wind Day).

உலக காற்று தினம் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில்
காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

2012

2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக சென்னை
மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை
ஜனனி ஐயர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


காற்றே... காற்றே...

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது.

உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15..!

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும்.இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.
இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும்,
அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.
நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.
மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.
இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான்.
மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து,
இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.
மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்.
இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.
இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?
உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள்.
இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம்.
ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.
காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்று மிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.
ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும் –
உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும்.
ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது
உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும்.
தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.
உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன
பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது.
மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது –
நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள்,
இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.
இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை.
உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.
தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.
உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது.


காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன.
வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம்.
எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.
காற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று.
மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?
* கண் எரிச்சல்
* தலைவலி
* தொண்டைக்கட்டு
* காய்ச்சல்
* காச நோய்
* ஆஸ்துமா
* சுவாசக் கோளாறு
* நுரையீரல் புற்றுநோய்
* உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)
சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.
கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.
வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.
சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.
காற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.
தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.
வாடை – வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம் – தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் – கிழக்கில் இருந்து வீசும் காற்று
கச்சான் (காற்று) – மேற்கில் இருந்து வீசும் காற்று
ஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது.
அதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி,
தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது.
இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.
காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. ‘PM 2.5’, ‘PM 10’ என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.
காற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.
வாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றன
அமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும்.
இதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும்.
காற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
வீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.
தொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம்.
பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.
வளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்
79% நைட்ரஜன்
20% ஆக்சிஜன்
3% கரியமில வாயு
1% இதர வாயுக்கள்
காற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.
காற்று மாசு ஏற்படுத்துபவை:
தொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகை
பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்
உலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்
ரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்
வாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு
விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!!
காற்று மாசடைவதை தடுப்போம் !!



புதன், 13 ஜூன், 2018

உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14


உலக ரத்த  கொடையாளர் தினம் ஜூன் 14

உலக சுகாதார நிறுவனம் , இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.


இரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இருந்தாலும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச குறுதி கொடையாளர் தினம் (World Blood Donor Day, June 14 ) கொண்டாடப்படுகிறது -அதிலும் 2012 ஆம் ஆண்டு உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி 90 லட்சம் யூனிட் ரத்தமே ஆண்டுக்கு சேகரிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 1 கோடியே 20 லட்சம் யூனிட்கள் என்று கூறியிருந்தது.தானம் செய்யப்பட்ட ரத்தத்தை 35 முதல் 42 நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆகவே புதிய ரத்தத்திற்கானத் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு மேலும் 2% இந்தியர்கள் ரத்த தானம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமானவர்களே ரத்த தானம் செய்ய முடியும். இவர்கள் ரத்த தானம் செய்ய அதிகம் முன் வரவேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
world blooddonors
மனிதர்களின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.இதில்,ஒரு நேரத்தில் 350 மில்லி (ஒரு யூனிட்) ரத்தத்தை கொடுக்கலாம்.இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. எடை சுமார் 50 கிலோவாகவும், உயரம் ஐந்து அடிக்கு அதிகமாகவும் இருப்பவர்கள் 450 மில்லி ரத்தம் கொடுக்கலாம். 100 மில்லி ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12.5 கிராம் இருந்தால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். எடுக்கப்பட்ட ரத்தம் 48 மணி நேரத்துக்குள் தானாவே மீண்டும் சுரந்து விடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு ரத்தத்தையும் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கும்.பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம்.
ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளில் ஒன்றைத்தான் மனிதர்கள் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் ரத்த வகையை அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டில் உள்ளவர்களும் அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இது மிகவும் அவசியம்.
அது சரி.. யாரெல்லாம் ரத்ததானம் செய்யக் கூடாது?
உடல் நலமில்லாதவர்கள்,மது மற்றும் போதை மருந்தின் போதையில் இருக்கும் போது, கருவுற்றிருக்கும் பெண்கள், இளம் தாய்மார்கள்,மலேரியா நோய் பாதித்தவர்கள் (நோய் குணமாகி மூன்று மாதம் கழித்து ரத்தம் கொடுக்கலாம்), இருதய நோய், சிறு நீரக கோளாறு, எய்ட்ஸ், ரத்த சோகை, தொழு நோய், வலிப்பு, உயர் ரத்த அழுத்தம், மலேரியா தாக்கி இருப்பவர்கள்,ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்ட மூன்று நாட்களுக்குள், தடுப்பூசி போட்ட ஒரு மாதத்துக்குள் அறுவை சிகிச்சை நடந்து குறைந்தது மூன்று மாதத்துக்குள் ரத்தம் கொடுக்க கூடாது.மஞ்சள் காமாலை, பால் வினை மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்களும் ரத்ததானம் கொடுக்க கூடாது.ரத்ததானம் கொடுக்க முடிவு செய்திருப்பவர்கள்,முன் தினம் இரவு மது அருந்தி இருக்க கூடாது மற்றும் நன்றாக நன்றாக தூக்க வேண்டும்.டென்சன் இல்லாமல் அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும்.


ஆனாலும், இந்த நவீன உலகில்கூட ரத்த தானம் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ரத்தம் கொடுத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். இதன் காரணமாக ரத்தத்ததைத் தானமாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையே உள்ளது.உலகில் 60 நாடுகளில் 99 சதவீதம் கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெற முடிகிறது. 73 நாடுகளில் இன்றும்கூட ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டி யிருக்கிறது. அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டியே நிலை உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.
இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் கொடையாளர்களுக்குப் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெறுவதை 2020-ம் ஆண்டுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு இலக்காக வைத்துள்ளது. இதன் காரணமாகவே ரத்த தானம் செய்வது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14-ம் தேதி உலக ரத்தக் கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதற்காக ஜூன் 14-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? ந்ன்கிஏஈர்க்ளா?ஏ பி ஓ ரத்த வகைகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் 1868-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். அவருடைய நினைவாகதான் இந்த உலக ரத்தக் கொடை யாளர்கள் நாள் அன்றைக்குக் கடைபிடிக்கப் படுகிறது.


உயிர் கொடுக்கும் தோழன்

ரத்தம் என்பது நமது உயிர் இயந்திரம் இயங்கத் தேவையான அடிப்படை அம்சம். அது எல்லோருக்கும், எந்த வயதினருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் எனப் பல காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை எடுத்து இன்னொருவருக்கு நேரடியாகக் கொடுப்பது என்பதெல்லாம் நிஜத்தில் எந்தக் காலத்திலும் முடியாது. அப்படியானால், விபத்தில் அடிபட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ரத்தம் கொடுப்பது?
ரத்த வங்கிகள்
ரத்தத்தைப் பெற்று, அதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் தரும் பணியை ரத்த வங்கிகள் செய்துவருகின்றன. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று, ரத்தம் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவும் அமைப்புதான் ரத்த வங்கி.
ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளில் ஒன்றைத்தான் மனிதர்கள் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் ரத்த வகையை அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டில் உள்ளவர்களும் அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இது மிகவும் அவசியம்.
ரத்தப் பொருத்தம்
பொதுவாக ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் ‘ஏ’ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு வகைக்கும், அந்தந்த வகை ரத்தத்தை மட்டுமே பதிலாகச் செலுத்த முடியும். ஆனால், மிகுந்த நெருக்கடியான நேரங்களில் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஓ’ வகை ரத்தத்தை அவருக்குச் செலுத்தலாம். அதனால்தான் இந்த வகை ரத்தம் உள்ளவர்களை ‘யுனிவர்சல் டோனர்’ என்றழைக்கிறார்கள். அதேபோன்று ‘ஏபி’ ரத்த வகையைப் பெற்றவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் செலுத்தலாம்.
ரத்தம் தேவைப்படுவோரில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்குச் சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் மட்டுமே தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்தம் உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமே தேவைப்படும்.
நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதே தானம். எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது சிறந்த தானம். ஒருவரது பசியைப் போக்கினால் அன்னதானம். பார்வை கொடுத்தால் கண் தானம். ஆனால், ஒருவருக்கு உயிரையே கொடுக்கலாம் என்றால் அது ரத்தத் தானம் தானம். ஏனென்றால், ரத்தத் துளி என்பது உயிர்த் துளி.
விழிப்புணர்வு குறைவு
ஆனால், இந்த நவீன உலகில்கூட ரத்த தானம் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ரத்தம் கொடுத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். இதன் காரணமாக ரத்தத்ததைத் தானமாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையே உள்ளது.
உலகில் 60 நாடுகளில் 99 சதவீதம் கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெற முடிகிறது. 73 நாடுகளில் இன்றும்கூட ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டி யிருக்கிறது. அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டியே நிலை உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.
மாற்றம் தேவை
இந்த நிலை மாற வேண்டாமா? பாதிக்கப்பட்டவர்கள் கொடையாளர்களுக்குப் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெறுவதை 2020-ம் ஆண்டுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு இலக்காக வைத்துள்ளது. இதன் காரணமாகவே ரத்த தானம் செய்வது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14-ம் தேதி உலக ரத்தக் கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதற்கு ஜூன் 14-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? ஏ பி ஓ ரத்த வகைகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் 1868-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். அவருடைய நினைவாகவே உலக ரத்தக் கொடை யாளர்கள் நாள் அன்றைக்குக் கடைபிடிக்கப் படுகிறது.
தான ரத்தம் பாதுகாப்பானதா?
#ரத்தத்தைத் தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம், ரத்த வங்கியில் முழுமையாகப் பரிசோதிக்கப்படும்.
#எய்ட்ஸ், பால்வினை நோய், மலேரியா, மஞ்சள் காமாலை போன்று ஏதாவது நோய் தாக்கியிருப்பவரின் ரத்தமா என்பது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் அங்குப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் சுத்தமானது என்று தெரிந்த பிறகுதான், ரத்த வங்கியின் பாதுகாப்பு அறைக்கு ரத்தம் கொண்டு செல்லப்படும்.
#பாதுகாக்கப்படும் ரத்தம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் வைக்கப்படும்.
#தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தைச் சுமார் 35 நாட்கள் வரை வைத்திருப்பார்கள். அதற்குள் பெறப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தி விடுவது நல்லது.
#தற்போது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியே பிரித்துப் பாதுகாக்கும் முறை வந்துவிட்டது.
#ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்துப் பாதுகாக்க முடியும்.


தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில் இந்தியாவில்
 தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
தானாக முன்வந்து தானங்களிலேயே சிறந்த ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஜூன் 14ம் தேதி, உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் ஹீரோ என்பது
இந்த ஆண்டு ரத்த தானத் தினத்தின் மையக்கருத்து.
ரத்ததானம் செய்வது என்பது மிகமிக உன்னதமான உயிர்காக்கும் சேவை.
ரத்தம் கொடுப்பதனால் நமக்கு இழப்புகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏராளமான தருணங்களில் ரத்தத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது.
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது

ஓ நெகடிவ் போன்ற அரிய குரூப் ரத்தம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.அது போன்ற குரூப் ரத்தம் உள்ளவர்கள் தாங்களே முன் வந்து ரத்த தானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

ரத்த வகைகளை கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற கார்ல் லான்ஸ்டீனரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம் உலக ரத்த தானம் செய்வோர் தினமாக, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் நாள் கொண்டாடப்படுகிறது.
மக்களிடையே ரத்ததானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்ததானம் அளிப்பவர்களை பெருமைப்படுத்தும் நோக்கிலும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தானத்தில் சிறந்ததென ஆயிரம் தானத்தை சொல்வோம்.
அன்னதானம் பசிபோக்கும்.
கல்விதானம் வறுமை போக்கும்.
உறுப்புதானமும், ரத்ததானமும் பிறரை வாழவைக்கும்.
உயிர் காக்கும் அருமருந்தாம் ரத்தத்தை, அட்சய பாத்திரமாய் அள்ளி அள்ளி வழங்கும் ரத்த கொடையாளர்களால் தான், இந்த உலகம் மனிதாபிமானத்தோடு இயங்குகிறது.
இன்று, தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தினம். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை விட, செங்குருதியை அள்ளி வழங்கும் வள்ளல்கள் தான் உன்னதமானவர்கள், உயர்ந்தவர்கள்.
உயிர்காப்பதே உயரிய நோக்கமாய் தொடர்ந்து ரத்ததானம் செய்தவர்கள் என்றும் போற்றத்தகவர்கள் !

செவ்வாய், 12 ஜூன், 2018

புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 .


புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 .

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா ( Ernesto Guevara de la Serna ) ( ஜூன் 14 , 1928 – அக்டோபர் 9 , 1967 )
அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
பெயர்
சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர். ஆனால்,
தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் ,
போல்க்னர் , கைடே, சல்காரி , வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா , காமுஸ்,
லெனின் போன்றவர்களது நூல்களையும்,
பிரான்ஸ் , ஏங்கெல்ஸ் , வெல்ஸ் , புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா ,
அலெக்ரியா , இக்காசா , டாரியோ ,
ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் ,
அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள்,
நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
கல்வி
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் [7] விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற
ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
பயணங்கள்
சே குவேரா இலங்கைக்கு சென்றபோது நாட்டிய மகோகனி மரம். இடம்: யகலகெல இறப்பர் தோட்டம், மெரககெகனை, கொரணை. ஆகத்து 8, 1959 [8]
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா ,
பெரு , ஈக்குவடோர் , பனாமா ,
கொஸ்தாரிக்கா , நிக்கராகுவா ,
ஹொண்டூராஸ் , எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர்
ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.


கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில்
கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார். [9] பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும்
பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சேவின் உடல். சி.ஐ.ஏ உளவாளி ஒருவரால் எடுக்கப்பட்டது
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும்
அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் [9] ஒக்டோபர் 9 , 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் "ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு" என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று. மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)


வாழ்க்கை நிகழ்வுகள்

"விடுதலை சே" என்ற வாசகத்துடன் முச்சக்கர வண்டி, கொழும்பு
1928 ஜூன் 14 - பிறப்பு
1945 – மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
1950 – உந்துருளியில் 3000 மைல் தூரம்
அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு , கொலம்பியா ,
வெனிசூலா , ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில்
தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
ஜூலை 6 – லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்
1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
[[ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
1957 மே 27, 28 - யுவேராப் போர். சூனூ 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
1958 ஆகத்து 21 - சிரோ ரிடன்டோ எட்டாவது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று லாஸ் வில்லாசு மாநிலத்திற்கு போக உத்தரவு.
அக்டோபர் 10 நாளன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
திசம்பர் சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
1959
ஜனவரி 1 - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
ஜூன் 2 - சேவும், அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு
ஐரோப்பா , ஆபிரிக்கா , மற்றும்
ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
1960
அக்டோபர் – சோவியத் கூட்டமைப்பு ,
கிழக்கு ஜெர்மனி ,
செக்கோஸ்லோவேகியா , சீனா,
வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
1961
ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
1962
மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
[ஆகஸ்ட் 27]] - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
1963
ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
[[ஜூலை 3 – பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற
அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
1964
பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
[[மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
1966
நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
1967
மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்.
அவரது இறுதிக்கூற்று வருமாறு:
“ "என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"
("I know you are here to kill me. Shoot,coward, you are only going to kill a man") ”
1968
ஜூலை 1 - பிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின்
பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.
1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
1997
ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.


சே குவேரா... ஒரு மனிதாபிமான போராளி பிறந்த நாள் இன்று!

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் "அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது" மறுக்க முடியாது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.
பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் தன் சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். (பெரும் வரலாறு இது, விரிவாக சொன்னால் 1 வாரம் ஆகும்).
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".
மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர் கடந்த வருடம்வரை அவர்தான். இந்த வருடம் தான் மோடி இரண்டாவதாக இடம் பிடித்தார்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்காம் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."
அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.
சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.
அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த நாள். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.
ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மானிட நேயம் மட்டுமே.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.
அவனுக்கு அழிவே இல்லை.
அந்த மனித நேயமிக்க மாவீரனான சே குவாரேவிற்கு அஞ்சலிகள்!
- ஸ்டான்லி ராஜன்


சே குவேரா எனும் சாகசக்காரன்! #HappyBirthdayCH

இதே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் 'சே குவேரா'. எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை விரும்பியப் போராளி. தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றி திரிய நினைத்த ஒரு ஜிப்ஸி. இன்று அவருக்குப் பிறந்தநாள்!
சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர். அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்று கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித்திரிந்தார்.
நீண்ட பயணத்துக்கு பின்னர், அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, 'பயணத்தை முடித்துக்கொள்ளலாம்' என தோன்றிவிட்டது. 'நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை' என அல்பர்ட்டோ நினைத்தார். ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். 'அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்' என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்த பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார். ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார். துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார். இதன்பின்னரே, 'இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்' என்று அவருக்குத் தோன்றியது. 'அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்' எனத் தீர்மானித்தார். வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் ‘சே’. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.
கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது.
ஆடம்பரங்களையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கி கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண். 'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார். நன்றி விகடன்.