புதன், 25 நவம்பர், 2009

மாவீரர் நாள்

மாவீரர் நாள்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகள்
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப் பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27 ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
கொடியேற்றுதல்
மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.
கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர்நாள்

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.
மாவீரர் நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
 மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
 தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.
புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.
தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

கார்த்திகைப் பூ
இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மாவீர‌ன் உத‌ய‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 26


வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட சைவ நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
வரலாற்று முக்கியத்துவம்.
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசிய வாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.

பிரபாகரன் கூற்றுக்கள்.
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."




'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'


"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."


"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."


"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."


"செய் அல்லது செத்துமடி."

வியாழன், 19 நவம்பர், 2009

நவ.,21ம் தேதி ஹலோ தினம்.....

ஹலோ தினம்!  இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். 

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அனைத்துலக மாணவர் நாள் நவம்பர் 17 ...


அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

வரலாறு 
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

நவம்பர் 17

கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன

காதல் மன்னன் ஜெமினியின் பிறந்தநாள்  17 நவம்பர் ....
ஜெமினி கணேசன்  17 நவம்பர் 1920 – 22 மார்ச்சு 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்குகிறது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளையும், பட்டங்களை வழங்கப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாகலாம். தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ் ரேவதி சுவாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

வியாழன், 5 நவம்பர், 2009

வீரமாமுனிவர் பிறந்தநாள் நவம்பர் 8...


வீரமாமுனிவர்
தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

பெயர்மாற்றம்...
மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
தமிழக வாழ்க்கை முறை..
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்
அவரின் தமிழ் படைப்புகள்...
இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.
சதுரகராதியை,நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும் முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும் நகரினை ஒக்கும் வீடே
இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.
அன்பு வைத்த உயிர்நிலை அ•திலார்க் கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன் துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான் ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.
முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருகொலி முடிவிலாக் கடுகு பறையொலி கடுகு கலமொலி கடுகு கடலொலிக னிவெழாத் தொடுகு குழலொளி கொடுகு குரலொலி தொடுகு துதியொலி தொடுதலாற் படுகு முகிலொலி படுகு கடலொலி படுத லிலமண மாயதே.

திங்கள், 2 நவம்பர், 2009

உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...


உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...
கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
*கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்,
1960 - தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம்

1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

 கமல்ஹாசன் கலைப்பயணம்

2009 - "உன்னைப்போல் ஒருவன்" 'WEDNESDAY' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மீள்தயாரிப்பு

2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)

2006 - வேட்டையாடு விளையாடு

2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)

2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

2004 - விருமாண்டி (த) (எ) (இ)

2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)

2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)

2003 - அன்பே சிவம் (எ)

2002 - பஞ்சதந்திரம்

2002 - பம்மல் கே.சம்பந்தம்

2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)

2001 - லேடீச் ஒன்லி

2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)

2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)

2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)

2000 - தெனாலி

2000 - தெனாலி (தெலுங்கு)

2000 - ஹே ராம் (த) (எ) (இ)

2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)


தொண்ணூறுகள்

1998 - காதலா காதலா

1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)

1996 - அவ்வை சண்முகி

1996 - பாமனெ (தெலுங்கு)

1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)

1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)

1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)

1995 - சதி லீலாவதிi (த)

1994 - நம்மவர்

1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)

1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)

1994 - மகாநதி (திரைப்படம்) (b)

1993 - கலைஞன்

1993 - மகராசன் (த)

1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.

1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)

1992 - சிங்காரவேலன்

1991 - குணா

1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)

1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)

1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)

1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)


எண்பதுகள்

1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்

1989 - வெற்றி விழா

1989 - சாணக்யன் (மலயாளம்)

1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.

1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)

1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)

1988 - உன்னால் முடியும் தம்பி

1988 - சூர சம்ஹாரம்

1988 - டெய்சி (மலையாளம்)

1988 - சத்யா (த)

1988 - பேசும் படம்

1987 - புஷ்பக் (ஹிந்தி)

1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)

1987 - புஷ்பக விமானா (கன்னடம்)

1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)

1987 - நாயக்குடு (தெலுங்கு)

1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)

1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.

1987 - பேர் சொல்லும் பிள்ளை

1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)

1987 - விரதம் (மலயாளம்)

1987 - காதல் பரிசு

1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)

1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)

1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)

1986 - விக்ரம் (த)

1986 - நானும் ஒரு தொழிலாளி

1986 - சிப்பிக்குள் முத்து

1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்

1986 - மனக்கணக்கு (நட்புக்காக)

1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)

1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)

1985 - மங்கம்மா சபதம்

1985 - ஜிராப்டார் (ஹிந்தி)

1985 - சாகர் (ஹிந்தி)

1985 - உயர்ந்த உள்ளம்

1985 - அந்த ஒரு நிமிடம்

1985 - காக்கிச் சட்டை

1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.

1984 - கரிஷ்மா (ஹிந்தி)

1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)

1984 - ராஜ் திலக் (ஹிந்தி)

1984 - யாட்கார் (ஹிந்தி)

1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)

1984 - ஜே தேஷ் (ஹிந்தி)

1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)

1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)

1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)

1983 - சத்மா (ஹிந்தி)

1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்

1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)

1983 - சினேக பந்தம் (மலையாளம்)

1983 - சட்டம்

1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)

1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)

1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)

1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)

1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - பகடை பன்னிரெண்டு

1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.

1982 - ராணித் தேனி (நட்புக்காக)

1982 - எழம் ராத்திரி (மலையாளம்)

1982 - சகலகலா வல்லவன்

1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)

1982 - ஷிம்லா ஸ்பெஷல்

1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.

1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)

1982 - அந்தகடு (தெலுங்கு)

1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)

1982 - வாழ்வே மாயம்

1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)

1981 - எல்லாம் இன்பமயம்

1981 - டிக்! டிக்! டிக்!

1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)

1981 - சங்கர்லால்

1981 - சவால்

1981 - கடல் மீன்கள்

1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)

1981 - ராஜ பார்வை (த)

1981 - ராம் லக்சுமன்

1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)

1981 - மீண்டும் கோகிலா

1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)

1981 - தில்லு முல்லு (நட்புக்காக)

1980 - நட்சத்திரம் (நட்புக்காக)

1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)

1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)

1980 - வறுமையின் நிறம் சிகப்பு

1980 - குரு

1980 - உல்லாசப் பறவைகள்

 எழுபதுகள்

1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)

1979 - நீல மலர்கள் (நட்புக்காக)

1979 - மங்கள வாத்தியம்

1979 - கல்யாணராமன் (தமிழ்)

1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)

1979 - இடிகாதா காது (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்

1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)

1979 - நினைத்தாலே இனிக்கும்

1979 - தாயில்லாமல் நான் இல்லை

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)

1979 - நீயா!

1979 - சிகப்புக்கல் மூக்குத்தி

1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.

1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)

1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)

1978 - மதனோல்சவம் (மலையாளம்)

1978 - யீட்ட (மலையாளம்)

1978 - அவள் அப்படித்தான்

1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!

1978 - சிகப்பு ரோஜாக்கள்

1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)

1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)

1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)

1978 - இளமை ஊஞ்சலாடுகிறது

1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)

1978 - நிழல் நிஜமாகிறது

1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)

1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்

1977 - நாம் பிறந்த மண்

1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - ஆடு புலி ஆட்டம்

1977 - 16 வயதினிலே

1977 - ஊர் மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)

1977 - நிறைகுடம் (மலயாளம்)

1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - கபிதா (வங்காளம்)

1977 - உன்னை சுற்றும் உலகம்

1977 - சிறீதேவி (மலையாளம்)

1977 - மதுர சொப்னம் (மலையாளம்)

1977 - அவர்கள் (நட்புக்காக)

1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)

1977 - சிவதாண்டவம் (மலையாளம்)

1977 - உயர்ந்தவர்கள்l

1976 - லலிதா (நட்புக்காக)

1976 - மோகம் முப்பது வருஷம்

1976 - மூன்று முடிச்சு

1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)

1976 - பொன்னி (மலையாளம்)

1976 - இதய மலர்

1976 - குமார விஜயம்

1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)

1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)

1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

1976 - சத்தியம்

1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)

1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)

1976 - மன்மத லீலை

1976 - சமசியா (மலையாளம்)

1976 - அப்பூப்பான் (மலையாளம்)

1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)

1975 - அந்தரங்கம்

1975 - ராசலீலா (மலையாளம்)

1975 - மற்றொரு சீதா (மலையாளம்)

1975 - திருவோணம் (மலையாளம்)

1975 - அபூர்வ ராகங்கள்

1975 - மாலை சூட வா

1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)

1975 - பட்டிக்காட்டு ராஜா

1975 - தங்கத்திலே வைரம்

1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)

1975 - தேன் சிந்துதே வானம்

1975 - ஆயிரத்தில் ஒருத்தி

1975 - பட்டாம்பூச்சி

1975 - சினிமா பைத்தியம்

1974 - பணத்துக்காக

1974 - ஆய்னா (ஹிந்தி)

1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)

1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)

1974 - அவள் ஒரு தொடர்கதை

1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)

1974 - அன்புத் தங்கை

1974 - கன்யாகுமாரி (மலையாளம்)

1974 - நான் அவனில்லை

1974 - குமாஸ்தாவின் மகள்

1974 - பருவ காலம்

1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்

1973 - அரங்கேற்றம்

1972 - குறத்தி மகன்

1970 - மாணவன்

அறுபதுகள்

1963 - ஆனந்த ஜோதி

1963 - வானம்பாடி

1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)

1962 - பாத காணிக்கைi

1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)


1960 - களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

ராஜ பார்வை

அபூர்வ சகோதரர்கள்

சத்யா

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

மைக்கேல் மதன காமராஜன்

தேவர் மகன்

ஹே ராம்

விருமாண்டி

மகளிர் மட்டும்

மும்பை எக்ஸ்பிரஸ்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்


1999 - விவி நெ.1 (இந்தி)

1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

1998 - Chachi 420

2000 - ஹே ராம்

2004 - விருமாண்டி

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)

2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)

2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)

2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)

2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)

2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)

1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)

1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)

1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)

1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)

1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)

1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)

1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)

1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)

1974 - ஆய்னா (நடனங்கள்)

 விருதுகள்

*மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

*சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

18 பிலிம்பேர் விருதுகள்.

பத்மஸ்ரீ விருது (1990)

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)

திங்கள், 19 அக்டோபர், 2009

ஆப்பிள் தினம் அக்டோபர் 21 ...



 ஆப்பிள்  தினம்   அக்டோபர் 21 ...

*ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள்.மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது. வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது.

*மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது. இப்பொழுது 'fuji apple' கூட கிடைக்கிறது. பல நிறங்களில் கிடைத்தாலும் பலன் என்னவோ ஓன்றுதான்.
*ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.

*ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.
*ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
*தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.
*அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது.  சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.
குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.
ஆப்பிளை அப்படியே உண்ணலாம். சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்து உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.
ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம்.
ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம்.
ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் அதன் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால், நன்கு அலம்ப வேண்டும் அல்லது தோலை நீக்கிவிடுவது நல்லது.


உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும்.
இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.
தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது.
பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும்.
இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.

ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!


மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!
*ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

*உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.

*எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.

*ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.

*நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.

*நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.

*மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.


             மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

புதன், 14 அக்டோபர், 2009

உலக வறுமை ஒழிப்பு நாள்...அக்டோபர் 17 .


உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையால் 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பட்சாமக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் 1987 முதலாவதாக பிராண்சின் பரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.
ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.இந்தியாவில் மும்பையில் சாலையோரத்தில் ஏழைப் பெண்கள் துணி துவைக்கும் காட்சி.ஏழ்மை நிலையை absolute அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் relative ஏழ்மை நிலை என்றும் அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர்.ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் விழுக்காடாக குறிக்கலாம்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...


தீபாவளி
தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையை சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும். இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர்.கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
கொண்டாடும் முறை....

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

                                 அனைவரும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

உலக உணவு நாள் அக்டோபர் 16 ...


உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

அக்னி சிறகுக்கு உதய நாள் அக்டோபர் 15


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 
வாழ்க்கை..
அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்
*அக்னிச் சிறகுகள்
*எழுச்சித் தீபங்கள்
*இந்தியா 2020
*india 2010

உலகத் தர நிர்ணய நாள் அக்டோபர் 14..

உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வோர் ஆண்டும் ஐ.எஸ்.ஓ. மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பல தொழில்நுட்பக் குழுக்களும், துணைக் குழுக்களும், பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை அந்நிபுணர்கள் வகுத்தளிக்கின்றனர் அல்லது மேம்படுத்துகின்றனர். IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. 2007ம் ஆண்டில் கொண்டாடப்படும் 38-ஆவது உலகத் தர நிர்ணய நாளின் மையக் கருத்து, "தரங்களும் மக்களும்: சமூகத்துக்கான சேவை" (Standards and the citizen: Contributing to society) என்பதாகும்.
இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards - BIS) ஈடுபட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ-வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பு இது.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கே. பி. சுந்தராம்பாள்...உதய நாள் அக்டோபர் 10


கே. பி. சுந்தராம்பாள்...
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். கோவை, கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.
நாடக வாழ்வில்.....

வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார். 1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.
திருமணம்...
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.
காங்கிரஸ் பிரச்சாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார்.
திரைப்படத் துறை....
பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்தநந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.
தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார். 1980 செப் 19இல் இவர் மறைந்தார்.

நாமக்கல் கவிஞர் உதய நாள் 10-10-1888

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை...

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கத்தியின்றி ரத்தமின்றி ...


கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் (கத்)
ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு
உயிர்பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டை
யொன்று புதுமையே (கத்)
குதிரையில்லை யானையில்லை
கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை
ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)
கோபமில்லை தாபமில்லை
சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கை யொன்றும்
பண்ணுமாசை யின்fறியே (கத்)...

தமிழன் என்றொரு இனமுண்டு ...



தமிழன் என்றொரு இனமுண்டு

தனயே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனர்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்த்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகாரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணிமணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும்f தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னதெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப்போரில் கடனிருந்தான்
சாந்தம் தவதுடனிருந்தான்

நன்றி -விக்கீபிடியா.

வியாழன், 1 அக்டோபர், 2009

காந்தி ஜெயந்தி....


மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
இளமை...

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார்.

 தென்னாப்பிரிக்காவில்...
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்...
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்து. மேலும், இந்தயாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
 மரணம்...
1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொள்கைகள்..

பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 சுயசரிதை..
காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

நன்றி விக்கிப்பீடியா..

புதன், 30 செப்டம்பர், 2009

சிவாஜியின் பிறந்தநாள் அக்டோபர்01


சிவாஜி கணேசன்  (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கை..
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

 திரைப்பட வாழ்க்கை...
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும். இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை..
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்..
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.

பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994) 
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்...

படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
மன்னவரு சின்னவரு (1999)
பூப்பறிக்க வருகிறோம் (1999)
என் ஆசை ராசாவே (1998)
யாத்ர மொழி (மலையாளம்) (1997)
கோபுர தீபம் (1997)
ஒன்ஸ் மோர் (1997)
பசும்பொன் (1995)
எங்கிருந்தோ வந்தான் (1995)
பாரம்பரியம் (1993)
சின்ன மருமகள் (1992)
நாங்கள் (1992)
முதல் குரல் (1992)
க்னோக் அவுட் (1992)
தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
ஞானப் பறவை (1991)
காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
புதிய வானம் (1988)
என் தமிழ் என் மக்கள் (1988)
அன்புள்ள அப்பா (1987)
வீரபாண்டியன் (1987)
தாம்பத்தியம் (1987)
கிருஷ்ணன் வந்தான் (1987)
குடும்பம் ஒரு கோயில் (1987)
முத்துக்கள் மூன்று (1987)
ராஜ மரியாதை (1987)
ஜல்லிக்கட்டு (1987)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
சாதனை (1986)
மண்ணுக்குள் வைரம் (1986)
லக்ஸ்மி வந்தாச்சு (1986)
ஆனந்தக் கண்ணீர் (1986)
விடுதலை (திரைப்படம்) (1986)
மருமகள் (1986)
முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
படிக்காதவன் (1985)
ராஜ ரிஷி (1985)
பந்தம் (1985)
நீதியின் நிழல் (1985)
படிக்காத பண்ணையார் (1985)
நாம் இருவர் (1985)
நேர்மை (1985)
இரு மேதைகள் (1984)
வாழ்க்கை (1984)
வம்ச விளக்கு (1984)
சரித்திர நாயகன் (1984)
சிரஞ்சீவி (1984)
எழுதாத சட்டங்கள் (1984)
தராசு (1984)
திருப்பம் (1984)
சிம்ம சொப்பனம் (1984)
தாவனிக் கனவுகள் (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
சுமங்கலி (1983)
சந்திப்பு (1983)
உண்மைகள் (1983)
மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
நீதிபதி (1983)
வெள்ளை ரோஜா (1983)
காஷ்மிர் காதலி (1983)
வசந்தத்தில் ஒரு நாள் (1982)
வா கண்ணா வா (1982)
தியாகி (1982)
துணை (1982)
தீர்ப்பு (1982)
சங்கிலி (1982)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
ஊரும் உறவும் (1982)
ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
நெஞ்சங்கள் (1982)
ஹிட்லர் உமாநாத் (1982)
கருடா சௌக்கியமா (1982)
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
கீழ்வானம் சிவக்கும் (1981)
கல்தூன் (1981)
அமரகாவியம் (1981)
சத்ய சுந்தரம் (1981)
ரிஷி மூலம் (1980)
இரத்த பாசம் (1980)
விஷ்வரூபம் (1980)
எமனுக்கு எமன் (1980)
தர்ம ராஜா (1980)
மோகனப் புன்னகை (1980)
மாடி வீட்டு ஏழை (1980)
நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
வெற்றிக்கு ஒருவன் (1979)
திரிசூலம் (1979)
பட்டாகத்தி பைரவன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
நான் வாழவைப்பேன் (1979)
கவரி மான் (1979)
இமயம் (1979)
வாழ்க்கை அலைகள் (1978)
என்னைப் போல் ஒருவன் (1978)
ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
தியாகம் (1978)
புண்ணிய பூமி (1978)
அந்தமான் காதலி (1977)
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
அண்ணன் ஒரு கோயில் (1977)
தீபம் (1977)
இளைய தலைமுறை (1977)
நாம் பிறந்த மண் (1977)
அவன் ஒரு சரித்திரம் (1976)
உத்தமன் (1976)
உனக்காக நான் (1976)
சத்தியம் (1976)
ரோஜாவின் ராஜா (1976)
கிரகப் பிரவேசம் (1976)
டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
அன்பே ஆருயிரே (1975)
அவன் தான் மனிதன் (1975)
தங்கப்பதக்கம் (1974)
அன்பைத்தேடி (1974)
என் மகன் (1974)
தீர்க்க சுமங்கலி (1974)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
கௌரவம் (1973)
ராஜபாட் ரங்கதுரை
இராஜராஜசோழன் 1973)
பாரத விலாஸ் 1973)
பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
வசந்த மாளிகை (1972)
நீதி (1972)
சவாலே சமாளி (1971)
மூன்று தெய்வங்கள் (1971)
சுமதி என் சுந்தரி (1971)
பாபு (1971)

குலமா குணமா (1971)

தங்கைக்காக (1971)

இரு துருவம் (1971)

வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஐயர் வேடம்

விளையாட்டுப் பிள்ளை (1970)

எங்கள் தங்கம் (1970)

எங்க மாமா (1970)

பாதுகாப்பு (1970)

காவல் தெய்வம் (1969)

தெய்வ மகன் (1969)

சிவந்த மண் (1969)

தங்கச் சுரங்கம் (1969)

குருதட்சனை (1969)

தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்

உயர்ந்த மனிதன் (1968)

கௌரி (1968)

எங்க ஊரு ராஜா (1968)

திருமால் பெருமை (1968)

கலாட்டா கல்யாணம் (1968)

என் தம்பி (1968)

இரு மலர்கள் (1967)

கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்

தங்கை (1967) .... மதன் வேடம்

திருவருட்செல்வர்(1967)

மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை

மகாகவி காளிதாஸ் (1966)

செல்வம் (1966)

திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக

சாந்தி (1965)

பழனி (1965)

அன்புக்கரங்கள் (1965)

புதிய பறவை (1964)

கை கொடுத்த தெய்வம் (1964)

நவராத்திரி (1964)

ராமதாசு (தெலுங்கு) (1964)

பச்சை விளக்கு (1964)

இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்

கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்

பார் மகளே பார் (1963)

ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்

அறிவாளி (1963)

குலமகள் ராதை (1963)

குங்குமம் (1963)

அன்னை இல்லம் (1963)

பலே பாண்டியா (1962)

பார்த்தால் பசி தீரும் (1962)

பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)

ஆலயமணி (1962)

நிச்சய தாம்பூலம் (1962)

படித்தால் மட்டும் போதுமா (1962)

வடிவுக்கு வளைகாப்பு (1962)

கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்

பாலும் பழமும் (1961)

பாப்பா பரிகாரம் (1961)

பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்

பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்]

புனர் ஜென்மம் - (1961)

படிக்காத மேதை (1960)

பாவை விளக்கு (1960)

இரும்புத்திரை (1960)

தெய்வப் பிறவி (1960)

பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)

மரகதம் (1959) .... வரேந்திரன்

வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்

பாகப்பிரிவினை (1959)

தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)

தங்கப்பதக்கம் (1959)

சபாஷ் மீனா (1958)

ஸ்கூல் மாஸ்டர் (1958)

சாரங்கதார (1958)

உத்தமபுத்திரன் (1958)

காத்தவராயன் (1958)

அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்

மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்

தங்கமலை இரகசியம் (1957)

வணங்காமுடி (1957)

தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)

புதையல் (1957)

பாக்யவதி (1957)

அமரதீபம் (1956) .... அசோல்

பெண்ணின் பெருமை(1956)

ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்

தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா

கள்வனின் காதலி (1955) .... முத்தையன்

மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்

முதல் தேதி (1955) .... சிவஞானம்

கூண்டுக்கிளி (1954)

அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)

எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்

மனோகரா (1954) .... மனோகரா வேடம்

அன்பு (1954)

பூங்கோதை (1954)

பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்

பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்

பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்