புதன், 8 ஏப்ரல், 2015

முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்! (ஏப்ரல் 08 2015 )




ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1934
பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணி: எழுத்தாளர்பத்திரிகையாளர்திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்
பிறப்பு
ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலக்கியம் மீது ஆர்வம் 
சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எழுத்துலக வாழ்க்கை
ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.
அவரது படைப்புகள்
ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:
‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.
தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.
அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’
விருதுகள்
  • 1972 - சாஹித்ய அகாடமி விருது
  • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
  • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
  • 2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார் (ஏப்ரல் 08 2015)

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

மிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நாகூர் ஹனிபா. இவரது அம்மா ராமநாதபுரத்தை சேர்த்தவர். அப்பா நாகூரைச் சேர்ந்தவர். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்ற தனது பெயரை சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
சிறுவயது முதலே பள்ளி, திருமண விழாக்களில் பாடத் துவங்கினார். 15 வயதில் திருமண வீடுகளில் பாடத்துவங்கியவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண வீடுகளில் பாடியுள்ளார். திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அதன் உறுப்பினர் ஆனார்.

தி.மு.க.வுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம். தி.மு.க., சார்பாக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘உன் மதமா என் மதமா’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ போன்ற பாடல்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 96 வயதான அவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவர் குறித்த சில நினைவலைகள்...

# 1953 ஆம் ஆண்டு அது…..

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார். நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.
1953 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை.
இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது.  சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர். கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.
“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத் தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.

கழகத் தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா... இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா, உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட்டார்.
அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததைவிட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத் தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது.

உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார்.

    சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

    திராவிட நாட்டின் சேமம் வேண்டி

    சிங்கார ஆடைகள் வாங்குவீர்.

பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.

தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத் தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட  நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.

# 1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை ஹ்ம்வ் நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில்  இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில்  ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது

அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம்  திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.


#  “ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
    தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

    “திராவிடச் சோலையிலே
    தீரர் வாழும் வேளையிலே
    செந்தமிழை மேயவந்த
    இந்தி என்ற எருமை மாடே!
    முன்னம் போட்ட சூடு என்ன
    மறந்ததோ உனக்கு?
    என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
    ஓடிப்போ வடக்கு!”

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாகூர் ஹனிபா தி.மு.க. மேடைகளில் பாடிய பாடல் வரிகள் இவை.

#  “ஓடி வருகிறான் உதயசூரியன்”

  “அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா”

  “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

  “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

  “வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா”

என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’.

நன்றி: 'நாகூர் மண் வாசனை" வலைப்பூ

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)



சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)
    மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.
சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.
எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.
பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். பிறரின் கொண்டாட்டங்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்; நாமும் பங்கேற்போம்.
சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பெருநகரத்தின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வோம். வாருங்கள் கொண்டாடுவோம் சென்னையை; நம் பெருமையை.

சென்னையின் வரலாற்று நிகழ்வுகளின் கால வரிசை
1522 - சாந்தோமில் போர்த்துகீசியர்கள் குடியேற்றம்
1639 - சாந்தோமுக்கு வடக்கே உள்ள 3 சதுர மைல் நிலப்பரப்பை பிரான்சிஸ்டே பெறுதல்
1640 - சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு, புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்படுகிறது. * என்ன தொழிற்சாலை?
1641 - ஆண்ட்ரூ கோகனுக்குக்கீழ் கிழக்குக் கடற்கரையில், இங்கிலாந்தின் முக்கிய தொழிற்சாலையாக சென்னை ஆனது.
1662 - சாந்தோமை கோல்கொண்டா ஆக்கிரமித்தது.
1672 - சென்னை ஆவணங்களை, முதல் முறையாக பதிவு செய்ய ஆளுநர் லாங்ஹார்னின் கட்டளை
1675 - சாந்தோமின் அரியணையை தகர்த்து, கோல்கொண்டாவின் அதிகாரத்தின் கீழ் போர்த்துக்கீசியர்கள் குடியேற்றம்
1678 - ஐகோர்ட்டை ஸ்ட்ரெயின் ஷாம் மாஸ்டர் நிறுவினார்
1686 - சென்னையில் அட்மிரால்டி கோர்ட் ஆரம்பமானது
1688 - சென்னை மாநகராட்சி உதயமானது.
1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார் பேட்டை ஆகியவற்றைப் பெறுதல்
1708 - திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகியவற்றைப் பெறுதல்
1734 - சிந்தாதிரிப்பேட்டை உருவாக்கப்படுதல்
1742 - வேப்பேரி,பெரம்பூர், புதுப்பாக்கம், எர்ணாவூர், சண்டையான்குப்பம் ஆங்கிலேயருக்கு கொடுக்கப்படுதல்.
1786 - சென்னை அஞ்சல் துறை அமைக்கப்பட்டு, சேவை துவக்கம்
1792 - சென்னை வானொலி ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது
1835 - மருத்துவப்பள்ளி துவக்கம்
1842 - மாநில உயர்நிலைப்பள்ளி திறப்பு
1844 - மகளிர், குழந்தைகள் மருத்துவமனை திறப்பு
1856 - சென்னையிலிருந்து ஆற்காடு வரை முதல் இருப்புப்பாதை துவக்கம்
1857 - மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் துவக்கம்
1873 - சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டப்பட்டது
1895 - தராஸ் டிராம்வே துவக்கம்
1900 - மூர் மார்க்கெட் திறப்பு
1913 - ரிப்பன் கட்டடம் திறப்பு
1914 - எம்டன் கப்பல் குண்டுவீச்சு
1936 - விக்டோரியா நினைவிடம் திறப்பு
1939 - சென்னையின் முன்னூறாவது ஆண்டு விழா கொண்டாட்டம்
1947 - ஆங்கிலேயர் நிறுவிய நகரம், இந்தியர்களுக்குச் சொந்தமானது.

புதன், 29 பிப்ரவரி, 2012

லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:


லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:
நீங்கள் உங்கள் ‘பொன்னான பிறந்த’ (Golden Birthday)  நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?
‘ பொன்னான பிறந்த நாளா?’  என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது ‘பொன்னான பிறந்த நாள்’. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை ‘ பொன்னான பிறந்த நாளா’ கக் கொண்டாடலாம்.
சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது ‘ பொன்னான பிறந்த நாளை’ கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்…..       விடை கடைசியில்…….

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை  400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!
லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள்.  எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.
 முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753  க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொது மக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களை இழந்து விட்டதாக நினைத்தனர்!
1930  களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக(  ஞாயிறு விடுமுறை)  இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில் வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால், இந்த முறை,  அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.
பழங்காலத்தில் லீப் வருடம்:
முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.
லீப் வருடமும் சினிமாவும்:
அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு ‘லீப் இயர்’ (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது.  தன் மனதுக்குப் பிடித்தவனை ‘ப்ரொபோஸ் ‘ செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.
19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த ‘The Pirates of Pinzance” என்கிற நகைச் சுவை  இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!
சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.
இக்குழந்தைகள் ‘Leaplings’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.
உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை ‘டைம்ஸ்’ பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!
2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:
இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான,  நோய்களை ‘rare disease’ என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01




"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01 
தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல்.
நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள்.
"நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.
தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924-ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.
வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை' அன்றுதான் நிறுவப்பட்டது.
பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.
அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை'.
அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.
அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.
மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.
நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.
அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.
மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.
""என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.
மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்' வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.
""என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி' என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு' செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).
மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.
சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.
பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.
"நாடகத் தந்தை' என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்' என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்' விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).
தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91-வது வயதில், 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

ஞாயிறு, 6 நவம்பர், 2011

கமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7,

கமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7, 

கமல்ஹாசன் சாதனை குறிப்புகள் .
பெயர் : சீ.கமல்ஹாசன்

பிறந்த தேதி : 7.11.1954

பிறந்த இடம் : பரமக்குடி

தந்தை : தியாகி டி.சீனிவாசன்

தாய் : சீ.ராஜலெட்சுமி

சகோதரர்கள் : சீ.சாருஹாசன்,சீ.சந்திரஹாசன்

சகோதரி : சீ.நளினி

மகள்கள் : க.சுருதி ராஜலெட்சுமி, க.அக்ஷ்ரா

முதல் படம் : களத்தூர் கண்ணம்மா

25 வது படம் : அபூர்வ ராகங்கள்

50 வது படம் : அவர்கள்

75 வது படம் : சிவப்பு ரோஜாக்கள்

100 வது படம் : ராஜபார்வை

125 வது படம் : எனக்குள் ஒருவன்

150 வது படம் : அபூர்வ சகோதரர்கள்

200 வது படம் : ஆளவந்தான்



1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா

2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960

3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்

4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி

5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்

6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்

7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே

8 முதல் வங்க மொழிப் படம் கபிதா

9 முதல் கன்னடப் படம் கோகிலா

10 முதல் தெலுங்குப் படம் பொன்னி

11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி

12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்

13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்

14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்

15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்

16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்

17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே

18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்

19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.

21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.

22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.

23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.

24 கமலின் 100வது படம் ராஜ பார்வை

25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை

26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.

27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்

28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.

29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.

30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.

31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.

32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.

33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்

34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.

35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.

36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.

37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.

38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.

39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.

40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி

41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.

42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.

43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.

44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.

45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.

47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126

49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)

50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.

51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்

52 இயக்கியப் படங்கள் இரண்டு

53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.

54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,

55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.

56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.

58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.

59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.

60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.

61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.

62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.

63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.

64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.

65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.

66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.

67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.

68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.

70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.

71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.

72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.

74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.

75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.

76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.

77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.

78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.

79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.

80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.

81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.

82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.

83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.

84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)

85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.

86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.

87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.

88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.

89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.

90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.

91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.

92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.

93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.

94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.

95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.

97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.

98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.

99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.

100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.

101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்

102 கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.

103 சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.

104 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.

கமல்ஹாசன் படங்களின் பட்டியல்

வ.எண். திரைப்படம் வெளியான தேதி

1 களத்தூர் கண்ணம்மா 12.08.1960

2 பார்த்தால் பசி தீரும் 14.01.1962

3 பாத காணிக்கை 28.09.1962

4 கண்ணும் கரளும்(ம) 28.09.1963

5 வானம் பாடி 09.03.1963

6 ஆனந்த ஜோதி 28.06.1963

7 அரங்கேற்றம் 09.02.1973

8 சொல்லத்தான் நினைக்கிறேன் 07.12.1973

9 பருவ காலம் 09.02.1974

10 குமாஸ்தாவின் மகள் 27.04.1974

11 நான் அவனில்லை 07.06.1974

12 கன்யாகுமரி(ம) 26.07.1974

13 விஷ்ணு விஜயம்(ம) 25.10.1974

14 அவள் ஒரு தொடர்கதை 13.11.1974

15 பணத்துக்காக 06.12.1974

16 சினிமா பைத்தியம் 31.01.1975

17 பட்டாம் பூச்சி 21.02.1975

18 ஆயிரத்தில் ஒருத்தி 14.03.1975

19 தேன் சிந்துதே வானம் 11.04.1975

20 மேல் நாட்டு மருமகள் 10.05.1975

21 தங்கத்திலே வைரம் 16.05.1975

22 பட்டிகாட்டு ராஜா 12.07.1975

23 ஞான்நின்னேபிரேமிக்குன்னு(ம) 25.07.1975

24 மாலை சூடவா 01.08.1975

25 அபூர்வ ராகங்கள்(ம) 15.08.1975

26 திருவோணம் 03.10.1975

27 மட்டொரு சீதாகுமாஸ்தாவின் மகள்(ம) 27.04.1975

28 ராசலீலா(ம) 12.12.1975

29 அந்தரங்கம் 12.12.1975

30 அக்னி புஷ்பம்(ம) 09.01.1976

31 அப்பூப்பன்(ம) 13.02.1976

32 சமஸ்ஸியா(ம) 27.02.1976

33 மன்மத லீலை 27.02.1976

34 ஸ்விம்மிங் பூல்(ம) 26.03.1976

35 அருது(ம) 26.03.1976

36 சத்யம் 06.05.1976

37 ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது 04.06.1976

38 உணர்ச்சிகள் 25.06.1976

39 குட்டாவும் சிட்சயும்(ம) 09.07.1976

40 குமாரவிஜயம் 30.07.1976

41 இதய மலர் 03.09.1976

42 பொன்னி(ம) 03.09.1976

43 நீ என்டே லஹரி(ம) 24.09.1976

44 மூன்று முடிச்சு 22.10.1976

45 மோகம் முப்பது வருஷம் 27.11.1976

46 லலிதா 10.12.1976

47 உயர்ந்தவர்கள் 14.01.1977

48 சிவதாண்டவம்(ம) 03.02.1977

49 ஆசிர்வாதம்(ம) 10.02.1977

50 அவர்கள் 25.02.1977

51 மதுர சொப்பனம்(ம) 03.03.1977

52 ஸ்ரீதேவி(ம) 25.03.1977

53 உன்னை சுற்றி உலகம் 29.04.1977

54 கபிதா(வ) 14.07.1977

55 அஷ்ட மாங்கல்யம்(ம) 22.07.1977

56 நிறகுடம்(ம) 29.07.1977

57 ஓர்மகள் மரிக்குமோ(ம) 26.08.1977

58 16 வயதினிலே 15.09.1977

59 ஆடுபுலி ஆட்டம் 30.09.1977

60 ஆனந்தம் பரமானந்தம் 30.09.1977

61 நாம் பிறந்த மண் 07.10.1977

62 கோகிலா(க) 07.10.1977

63 சத்யவான் சாவித்திரி(ம) 14.10.1977

64 ஆத்ம பாடம்(ம) 10.11.1977

65 மதனோற்சவம்(ம) 26.01.1978

66 காத்திருந்த நிமிஷம்(ம) 17.02.1978

67 அனுமோதனம்(ம) 24.02.1978

68 நிழல் நிஜமாகிறது 24.03.1978

69 மரோ சரித்ரா(தெ) 19.05.1978

70 இளமை ஊஞ்சலாடுகிறது 09.06.1978

71 சட்டம் என் கையில் 14.07.1978

72 வயசு பிலிச்சிந்தி 04.08.1978

73 வயநாடன் தம்பன் 30.10.1978

74 அவள் அப்படித்தான் 30.10.1978

75 சிகப்பு ரோஜாக்கள் 28.10.1978

76 மனிதரில் இத்தனை நிறங்களா 30.10.1978

77 ஈட்டா(ம) 10.11.1978

78 சொம்ம கொடுதி சோக்கொடுதி(தெ) 05.01.1979

79 சிவப்புக்கல் மூக்குத்தி 12.01.1979

80 நீயா 13.01.1979

81 அலாவுதீனும் அல்புத விளக்கும்(ம) 14.04.1979

82 நினைத்தாலே இனிக்கும் 14.04.1979

83 தாயில்லாமல் நானில்லை 14.04.1979

84 அந்தமைன அனுபவம் 19.04.1979

85 அலாவுதீனும் அற்புத விளக்கும 08.06.1979

86 இதி காத காது(தெ) 29.06.1979

87 கல்யாண ராமன் 06.07.1979

88 மங்கள வாத்தியம் 21.09.1979

89 நீலமலர்கள் 19.10.1979

90 உல்லாச பறவைகள் 07.03.1980

91 குரு 18.07.1980

92 குரு(தெ) 18.07.1980

93 வறுமையின் நிறம் சிவப்பு 06.11.1980

94 மரியா மை டார்லிங் 14.11.1980

95 மரியா மை டார்லிங்(க) 19.12.1980

96 ஆகலி ராஜ்யம்(தெ) 09.01.1981

97 மீண்டும் கோகிலா 14.01.1981

98 பிரேம பிச்சி 20.02.1981

99 ராம் லட்சுமண் 07.03.1980

100 ராஜ பார்வை 10.04.1981

101 உல்லாச பறவைகள் 07.03.1980

102 ஏக்துஜே கே லியே(இ) 1981

103 சவால் 03.07.1981

104 சங்கர்லால் 15.08.1981

105 அமாவாஸ்ய சந்துருடு(தெ) 1981

106 டிக் டிக் டிக் 07.11.1981

107 எல்லாம் இன்ப மயம் 05.12.1981

108 வாழ்வே மாயம் 26.01.1981

109 அந்த காடு(தெ) 1982

110 அந்தி வெயிலிலே பொன்னு(ம) 1982

111 மூன்றாம் பிறை 19.02.1982

112 சிம்லா ஸ்பெஷல் 14.04.1982

113 சனம் தேரி கஸம்(இ) 1982

114 சகல கலா வல்லவன் 14.11.1982

115 யே தோ கமால் ஹோ கயா(இ) 1982

116 பகடை பன்னிரண்டு 14.11.1982

117 ஜராஸி சிந்து 1983

118 சட்டம் 21.05.1983

119 சிநேக பந்தயம்(ம) 1982

120 சாகர சங்கமம்(தெ) 03.06.1983

121 சத்மா(இ) 1983

122 தூங்காதே தம்பி தூங்காதே 04.11.1983

123 ஏம் நயி பஹலி(இ) 29.06.1984

124 யாத்கார்(இ) 20.07.1984

125 ராஜ்திலக்(இ) 30.08.1984

126 எனக்குள் ஒருவன் 23.10.1984

127 கரீஷ்மா(இ) 07.12.1984

128 ஒரு கைதியின் டைரி 14.01.1985

129 காக்கி சட்டை 11.04.1985

130 அந்த ஒரு நிமிடம் 31.05.1985

131 உயர்ந்த உள்ளம் 27.7.1985

132 சாகர்(இ) 09.08.1985

133 கிராப்தார்(இ) 07.09.1985

134 மங்கம்மா சபதம் 21.09.1985

135 ஜப்பானில் கல்யாணராமன் 11.11.1985

136 தேகா பியார் துமாரா(இ) 20.12.1985

137 சுவாதி முத்யம்(தெ) 13.03.1986

138 நானும் ஒரு தொழிலாளி 01.05.1986

139 விக்ரம் 29.05.1986

140 ஒகராதா இத்தருகிருஷ்ணுடு(தெ) 02.10.1986

141 புன்னகை மன்னன் 01.11.1986

142 காதல் பரிசு 14.01.1987

143 விரதம்(ம) 15.05.1987

144 அந்தரி கண்டே கனுடு(தெ) 03.07.1987

145 பேர் சொல்லும் பிள்ளை 16.07.1987

146 நாயகன் 21.10.1987

147 பேசும் படம் 27.11.1987

148 சத்யா 29.01.1988

149 டெய்சி(ம) 19.02.1988

150 அபூர்வ சகோதரர்கள் 30.07.1988

151 உன்னால் முடியும் தம்பி 12.08.1988

152 சூரசம்ஹாரம் 14.04.1989

153 சாணக்யன்(ம) 01.09.1989

154 வெற்றி விழா 28.10.1989

155 இந்துருடு சந்துருடு(தெ) 24.11.1989

156 மைக்கேல் மதன காமராஜன் 17.10.1990

157 குணா 05.11.1991

158 சிங்கார வேலன் 10.04.1992

159 தேவர் மகன் 25.10.1992

160 மகராசன் 05.03.1993

161 கலைஞன் 14.04.1993

162 மகாநதி 14.01.1994

163 நம்மவர் 02.11.1994

164 சதிலீலாவதி 15.01.1995

165 சுப சங்கல்பம்(தெ) 28.04.1995

166 குருதிப்புனல் 23.10.1995

167 துரோகி(தெ) 26.10.1995

168 இநதியன் 09.05.1996

169 அவ்வை சண்முகி 10.11.1996

170 சாச்சி 420 (இ) 19.12.1997

171 காதலா காதலா 10.04.1998

172 ஹேராம் 18.02.2000

173 ஹேராம் (இ) 18.02.2000

174 தெனாலி 26.10.2000

175 ஆளவந்தான் 14.11.2001

176 அபய்(இ) 16.11.2001

177 பம்மல் கே சம்பந்தம் 14.01.2002

178 பஞ்ச தந்திரம் 28.06.2002

179 அன்பே சிவம் 15.01.2003

180 விருமாண்டி 26.02.2004

181 வசூல் ராஜா MMBS 14.08.2004

182 மும்பை எக்ஸ்பிரஸ் 15.04.2005

183 ராமா ஷாமா பாமா 09.12.2005

184 வேட்டை ஆடு விளையாடு 25.08.2006

185 தசாவதாரம் 13.06.2008

186 உன்னைப் போல் ஒருவன் 18.09.2009

தேசிய நாயகன் கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்



1 மாணவன்

2 குறத்தி மகன்

3 அந்துவேனி கதா(தெலுங்கு)

4 அவளோட ராவுகள்(மலையாளம்)

5 அவள் விஸ்வதய இருன்னு (மலையாளம்)

6 படக்குதிரா(மலையாளம்)

7 சக்கைபோடு போடு ராஜா

8 தப்பிதா தாளா(தெலுங்கு)

9 தப்புத் தாளங்கள்

10 நூல் வேலி

11 குப்பிடி மனசு(தெலுங்கு)

12 தில்லு முல்லு

13 அழியாத கோலங்கள்

14 பசி

15 நட்சத்திரம்

16 சரணம் ஐயப்பா

17 அன்பு தங்கை

18 அயனா(அரங்கேற்றம்)ஹிந்தி

19 ராணித் தேனீ

20 அக்னி சாட்சி

21 ஏழாம் ராத்திரி(மலையாளம்)

22 மீசம் கோசம் (தில்லு முல்லு)

23 நீதிதேவன் மயக்கம்

24 ஏதி தர்மமு எதி நியாயமு(தெலுங்கு)

25 மாற்றுவின் சட்டங்களே(தெலுங்கு)

26 உருவங்கள் மாறலாம்

27 யேதேஷ்(ஹிந்தி)

28 மன கணக்கு

29 பொய்கால் குதிரை

30 பெங்கி அல்லி அரவித ஹீவு(கன்னடம்)

31 அந்தரி கண்டே காடு(தெலுங்கு)

32 ஸ்நேக பந்தம்

33 மகளிர் மட்டும்

34 லேடிஸ் ஒன்லி(ஹிந்தி)

35 பார்த்தாலே பரவசம்



கமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய பாடல்கள்

வ.எண். திரைப்படம் பாடல்

1 அந்தரங்கம் ஞாயிறு ஒளி மழையில்



2 அவள் அப்படி தான் பன்னீர் புஷ்பங்களே

3 மனிதரில் இத்தனை நிறங்களா? மாமா மனசு இன்னி

4 சிவப்பு ரோஜாக்கள் நினைவோ ஒரு பறவை

5 ராஜபார்வை விழியோரது

6 சவால் தண்ணியே ! போட்டா

7 மூன்றாம் பிறை நரிக்கதை

8 எனக்குள் ஒருவன் மேகம் கொட்டட்டும்

9 ஜப்பானில் கல்யாண ராமன் அம்மம்மோய் அப்பப் போய்

10 விக்ரம் விக்ரம்,விக்ரம்

11 விக்ரம் கண்ணே தொட்டுக்கவா

12 பேர் சொல்லும் பிள்ளை அம்மம்மா....

13 நாயகன் தென்பாண்டி சீமையிலே

14 சத்யா போட்டா மடியுது

15 அபூர்வ சகோதரர்கள் ராஜா கையவச்சா

16 அபூர்வ சகோதரர்கள் அம்மாவனா கால

17 மைக்கேல் மதன காமராஜன் சுந்தரி நீயும்

18 குணா கண்மணி அன்போடு

19 குணா உன்னை நான்

20 சிங்கார வேலன் போட்டு வைத்த

21 சிங்காரவேலன் சொன்னப்படி கேளு

22 தேவர் மகன் சாந்துப் பொட்டு

23 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி

24 கலைஞன் கொக்கரக்கோ

25 மகாநதி அன்பான தாயை

26 மகாநதி எங்கோயோ

27 மகாநதி தன்மானம் உள்ள

28 மகாநதி பேய்களை

29 நம்மவர் எதிலும் வல்லவன்

30 அவ்வை சண்முகி ருக்கு ருக்கு(பெண் குரல்)

31 காதலா காதலா காசு மேலே

32 காதலா காதலா மெடோனா

33 காதலா காதலா சரவணபவ

34 ஹேராம் ராம் ராம்....

35 ஹேராம் நீ பார்த்த

36 ஹேராம் சந்நியாச மந்திரம்

37 ஹேராம் ராமரானாலும் பாபரானாலும்

38 ஆளவந்தான் கடவுள் பாதி

39 ஆளவந்தான் சிரி .....சிரி.....

40 ஆளவந்தான் கடவுள் பாதி.....

41 தெனாலி ஆழங்கட்டி மழை

42 தெனாலி இஞ்சிரங்கோ

43 பம்மல் கே.சம்மந்தம் கந்தசாமி மாடசாமி

44 பம்மல் கே.சம்மந்தம் ஏண்டி சூடாமணி

45 பஞ்சதந்திரம் வந்தேன் வந்தேன்

46 பஞ்சதந்திரம் காதல் பிரியாமல்

47 சரணம் ஐயப்பா அண்ணா வாடா

48 ஓ மானே மானே பொன் மானே

49 உல்லாசம் முத்தே முத்தம்மா

50 அன்பே சிவம் மச்சி மச்சி,

51 அன்பே சிவம் யார் யார் சிவம்,

52 அன்பே சிவம் நாட்டுக் கொரு செய்தி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25



விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25
விஜயகாந்த் நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி. 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி[1] மூலம்தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும் , 2011ல்இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவைஉறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள்

2007 - சபரி
2006 - தர்மபுரி
2006 - பேரரசு
2006 - சுதேசி
2004 - எங்கள் அண்ணா
2003 - தென்னவன்
2003 - சொக்கத்தங்கம்
2002 - ரமணா
2002 - தேவன்
2002 - இராச்சியம்
2001 - தவசி
2001 - நரசிம்மா
2001 - வஞ்சிநாதன்
2000 - வல்லரசு
2000 - சிம்மாசனம்
2000 - வானத்தைப் போல
1999 - பெரியண்ணா
1999 - கல்லழகர்
1999 - கண்ணுபடப் போகுதையா
1998 - தர்மா
1998 - வீரம் விளையும் மண்
1998 - உளவுத்துறை
1997 - தர்மச்சக்கரம்
1996 - தாயகம்
1996 - தமிழ்ச் செல்வன்
1996 - அலெக்சாண்டர்
1995 - திருமூர்த்தி
1995 - காந்தி பிறந்த மண்
1995 - கருப்பு நிலா
1994 - பெரியமருது
1994 - பதவிப் பிரமாணம்
1994 - சேதுபதி ஐபிஸ்
1994 - என் ஆசை மச்சான்
1994 - ஆணஸ்ட்ராஜ்
1993 - சக்கரத் தேவன்
1993 - ராஜதுரை
1993 - செந்தூரப் பாண்டி
1993 - கோயில் காளை
1993 - ஏழைஜாதி
1993 - எங்க முதலாளி
1992 - பரதன்
1992 - தாய்மொழி
1992 - சின்ன கவுண்டர்
1992 - காவியத் தலைவன்
1991 - மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
1991 - மாநகர காவல்
1991 - கேப்டன் பிரபாகரன்
1990 - புலன் விசாரணை
1990 - புதுபாடகன்
1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
1990 - சந்தனக் காற்று
1990 - சத்ரியன்
1990 - என் கிட்டே மோதாதே
1989 - ராஜாநாடி
1989 - மீனாட்சி திருவிளையாடல்
1989 - பொன்மனச்செல்வன்
1989 - பொறுத்தது போதும்
1989 - தர்ம வெல்லும்
1989 - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
1989 - ஊழவன் மகன்
1988 - மக்கள் ஆணையிட்டால்
1988 - பூந்தோட்ட காவல்காரன்
1988 - நீதியின் மறுப்பக்கம்
1988 - நல்லவன்
1988 - தென்பாண்டி சிமையிலே
1988 - தெக்கத்தி கள்ளன்
1988 - தம்பி தங்ககம்பி
1988 - செந்தூரப் பூவே
1988 - காலையும் நீயே மாலையும் நீயே
1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
1988 - உழைத்து வாழ வேண்டும்
1987 - வேலுண்டு வினையில்லை
1987 - வீரன் வேலுத்தம்பி
1987 - ரத்தினங்கள்
1987 - போ மழை பொழியுது
1987 - நினைவு ஒரு சங்கீதம்
1987 - சொல்வதெல்லாம் உண்மை
1987 - சிறை பறவை
1987 - சட்டம் ஒரு விளையாட்டு
1987 - கூலிக்காரன்
1986 - வீராபாண்டியன்
1986 - வசந்த ராகம்
1986 - தழுவாத கைகள்
1986 - மணக்கணக்கு
1986 - தர்ம தேவதை
1986 - கருமேட்டுக் கருவாயன்
1986 - ஒரு இனிய உதயம்
1986 - எனக்கு நானே நீதிபதி
1986 - ஊமைவிழிகள்
1986 - அன்னையின் மடியில்
1986 - அன்னை என் தெய்வம்
1986 - அம்மன் கோவில் கிழக்காலே
1985 - ராமன் சிறிராமன்
1985 - நானே ராஜா நானே மந்திரி
1985 - தண்டனை
1985 - சந்தோச கனவு
1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
1985 - அன்னை பூமி
1985 - அலை ஓசை
1985 - அமுத கானம்
1984 - நல்ல நாள்
1984 - வைதேகி காத்திருந்தாள்
1984 - வெள்ளை புறா ஒன்று
1984 - வெட்டி
1984 - தீர்ப்பு என் கையில்
1984 - சத்தியம் நீயே
1984 - குழந்தை ஏசு
1984 - குடும்பம்
1984 - ஈட்டி
1984 - 100வது நாள்
1984 - நாளை உனது நாள்
1983 - துரை கல்யாணம்
1983 - சாட்சி
1983 - ஆட்டோ ராஜா
1982 - பார்வையின் மறுப்பக்கம்
1981 - நீதி பிழைத்தது
1981 - சிவப்பு மாலை
1981 - manak kanakku
1981 - சட்டம் ஒரு இருட்டறை
1980 - தூரத்து இடிமுழக்கம்
1979 - ஓம் சக்தி
1978 - இனிக்கும் இளமை.
நன்றி - விக்கிபிடியா