புதன், 28 செப்டம்பர், 2016

தந்தை என். சிவராஜ் பிறந்த தினம் செப்டம்பர் 29.

தந்தை என். சிவராஜ் பிறந்த தினம் செப்டம்பர் 29.

வறுமை என்னவென்று தெரியாத
நமச்சிவாயம் -வாசுதேவி
தம்பதியருக்கு சென்னை
ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த
கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29
ஆம் தேதி பிறந்தார்.
4 ஆம் வகுப்பு வரை தன்
வீட்டிலேயே படித்தார். பின்
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி
பள்ளியில் அப்போது தலைமை
ஆசிரியராக இருந்த
டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம்
வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக்
படிப்பை முடித்து வெஸ்லி
கல்லூரியில் 'இண்டர்மீடியேட்'
பயின்றார்.
பிறகு சென்னை
மாநிலக்கல்லூரியில் B.A பட்டம்
பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர்
இராதாக்கிருஷ்ணன் இவரின்
ஆசிரியராக இருந்தது
சிறப்புக்குரியது.
பின் சென்னை டாக்டர் அம்பேத்கர்
சட்டக் கல்லூரியில் சட்டப்
படிப்பினை முடித்தார். மேலும்
சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள்
பேராசியராக பணியாற்றினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட
தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
தனக்கு துணை நீதிபதி பதவி
தந்ததை ஏற்காமல் மக்கள் பணி
செய்வதை உயர்வாக கருதினார்.
1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம்
வயதில் அன்னை மீனாம்பாளை
வாழ்க்கை
இணையராக்கிக்கொண்டார்.
தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன
சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை
இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து
சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு
மறியல் போராட்டங்களில் தீவிரமாக
ஈடுபட்டனர்.
கல்யாணி, தயாசங்கர், பத்மினி,
போதி சந்தர் என 4 மகவுகள்
இவர்களுக்கு பிறந்தனர்.
பவுத்தத்தை தங்களுடைய
வாழ்வியல் நெறியாக இருவரும்
பின்பற்றினர்.
சென்னை மற்றும் அண்ணாமலை
பல்கலைக்கழகங்களில் செனட்
உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.
அப்பொழுது மிகப்பெரிய
அந்தஸ்தில் உள்ள பெரு
முதலாளிகளுக்கு சரி நிகராக
பந்தயக்குதிரைகளை வைத்து
போட்டிகளில் வென்று காட்டியவர்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை
அணியக்கூடாது, காலில்
செருப்பு போடக்கூடாது
என்பவை மனித உரிமைக்கு
துரோகமானது. இதனை
கண்காணித்து நடவடிக்கை
எடுத்திட தனி அதிகாரியினை
நியமிக்க வேண்டுமென சட்ட
சபையில் முழங்கியவர்.
சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட
சம்மேளனத்தின்
பொதுச்செயலாளராகவும்,
சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர்
துணைத் தலைவராகவும்
இருந்தவர்.
இரட்டை மலை சீனுவாசனாருடன்
டாக்டர் அம்பேத்கர் அமைத்த அகில
இந்திய தாழ்த்தப்பட்டோர்
சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942
முதல் தலைவராக இருந்தவர்.
பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F ஐ
கலைத்து விட்டு அகில இந்திய
குடியரசுக் கட்சியை அமைத்தார்.
1956 முதல் அக்கட்சியின் தலைவராக
தந்தை சிவராஜ் ஏக மனதாக
நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு
இறுதிக்காலம் வரை
அப்பொறுப்பினை வகித்தார்.
இந்து மதத்தினை புறக்கணித்து
விட்டு , மதம் மாறினால்தான் , நாம்
ஒரு தனி இனமாக உரிமைக்குரல்
எழுப்பிட முடியும்,போராட
முடியும் என வலியுறுத்தினார்.
நம் பூர்வீக பவுத்த நெறியினை
மக்களிடையே பரப்பினார்.
1945-46 ல் சென்னை மாநகர மேயராக
பதவி வகித்தார். அப்போது
கல்விக்காக 16 பள்ளிகளை
ஏற்ப்படுத்தி, இலவச உணவும்
அளிக்கச்செய்தார்.
1964 செப்டம்பர் 29 ஆம் நாள்
அதிகாலை 5.30 மணிக்கு
மாரடைப்பால் பரிநிப்பானம்
அடைந்தார்.
**********************************
புரட்சியாளர் அம்பேத்கருக்குப்
பிறகு அகில இந்திய அளவில் தலித்
மக்களின் தனிப்பெரும் தலைவராக
விளங்கியவர் தந்தை என்.சிவராஜ்
அவர்கள். அவர் பல்வேறு பதவிகளை
வகித்தவர். வழக்கறிஞர். சென்னை
சட்டக்கல்லூரியின் பேராசிரியர்,
அகில இந்திய அட்டவணைச் சாதிகள்
கூட்டமைப்பின் தலைவர். அம்பேத்கர்
உருவாக்க முயன்ற இந்திய
குடியரசு கட்சியை உருவாக்கி
இந்தியா முழுமைக்கு வளர்த்தவர்.
சென்னையில் வளர்ச்சிக்கு
வித்திட்ட முன்னோடிகளுள்
ஒருவர். இவ்வளவு சிறப்புகள்
வாய்ந்த தந்தை சிவராஜ் அவர்கள்
சென்னை மாநகராட்சியின்
உறுப்பினராகவும் பின்பு
மேயராகவும் பதவி வகித்தவர்.
தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை
மேயராக 20.11.1945 அன்று
பதவியேற்றார். 20.11.1946 அன்று
மேயர் பதவியை நிறைவு
செய்தார். இந்த இடைப்பட்ட தமது
பதவி காலத்தில் அவர் ஆற்றிய
பணிகள் ஏராளம் என்பதை
மாநகராட்சியின் அறிக்கைகள்
சான்றுகளாக விளங்குகின்றன.
அவர் தமது பதவி காலத்தில்
சென்னை நகராட்சியில் பல
சாலைகளை அமைத்தார் ,
பாலங்களை கட்டினார்,
குடிசைப்பகுதிகளை காரை
வீடுகளாக மாற்றியது, கண்வரும்
பூங்காக்களை அமைத்தார் (தி
நகரில் உள்ள நடேசன் பூங்கா,
சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள
நேப்பியர் பூங்கா உட்பட) மேலும்
பள்ளிகளை புதுபித்தது,
புதிதாக உருவாக்கியது,
பள்ளிகளில் மதிய உணவினை
அளித்தது உள்ளிட்ட பல பணிகளை
அவர் நிறைவேற்றினார். இவற்றில்
சிவராஜ் அவர்கள் நிகழ்த்திய
சாதனைகளில் சிகரமானது
சென்னையில் மிக பிரமாண்டமான
ஒரு விளையாட்டுத் திடலை
அமைத்தது.
மக்கள் விளையாட்டுத் அரங்கம்
உருவாக்கம் (People Stadium)
இன்றைக்கு சென்னையை
தெரிந்தவர்களுக்கு சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
பக்கத்தில் உள்ள மூர் மார்க்கெட்
பகுதியைத் தெரிந்திருக்கும், அந்த
இடத்திற்கு அருகில் சென்னை
மாநகராட்சிக் கட்டிடம், சென்னை
நகர அரங்கம் (Town Hall) மற்றும்
மிகப்பெரிய குளம் ஒன்றும்
இருந்தன. .குளத்தில் அல்லி மலர்கள்
நிறைந்திருந்ததால் அதற்கு அல்லி
குளம் என்று பெயர். அதற்கு
அருகில் கடந்த 1900களில்
மிகப்பெரிய பூங்கா ஒன்று
வெள்ளையர்களால்
அமைக்கப்பட்டிருந்தது, அதற்கு
மக்கள் பூங்கா (People’s Park) என்று
பெயர். அந்தப் பூங்காவைச் சுற்றி
ஏராளமான காலி நிலம் இருந்தது
அந்த காலி நிலத்தில்தான் மூர்
மார்கெட், சென்னை மிருகக்காட்சி
சாலை ஆகியன பிற்காலத்தில்
அமைக்கப்பட்டன.
இந்த காலி நிலப்பகுதியில்
பகுதியில்தான் பெரிய
விளையாட்டு அரங்கம் கட்ட
வேண்டும் மாநகராட்சியினால் 25
ஆண்டுகளுக்கு மேலாக
முயற்சிக்கப்பட்டது, ஆனால்
கைகூடவில்லை. பேராசிரியர்
சிவராஜ் அவர்கள் மேயர் ஆனவுடன்
மேற்கண்ட காலி இடத்தில் பெரிய
விளையாட்டு அரங்கம் கட்டப்படும்
என்று சென்னை மாநகர மன்றக்
கூட்டத்தில் தீர்மானத்தைக்
கொண்டு வந்து
நிறைவேற்றினார். அதன் பின்பு
உடனடியாகப் பணிகள் தொடங்கின.
பெரிய இடமாக இருந்தததால் அதை
சமப்படுத்துவதற்கு ராணுவத்தின்
உதவி கோரப்பட்டது. ராணுவம்
களத்தில் இறங்கி பெரிய பெரிய
தளவாடங்களைப் பயன்படுத்தி
நிலத்தை சமப்படுத்திக்
கொடுத்ததுடன், கட்டுமானப்
பணிகளையும் மேற்கொள்ள
உதவியது. விளைவாய் மிக
குறுகிய காலத்திற்குள் அதாவது
பத்து மாதத்திற்குள் விளையாட்டு
அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.
மக்கள் விளையாட்டரங்கம்
திறப்பு.
11 லட்சத்து நாற்பதாயிரம்
ரூபாயில் செலவில் கட்டி
முடிக்கப்பட்டத் திடல், ஒரே நேரத்தில்
35,000ம் பேர் அமரக்கூடிய மாபெரும்
விளையாட்டுத் திடலாக எழுந்தது.
அது மக்கள் பூங்கா இருக்கும்
இடத்திலேயே கட்டப்பட்டதால் அதற்கு
மக்கள் விளையாட்டு அரங்கம் (People
Stadium) என்று பெயரிடப்பட்டது.
மக்கள் விளையாட்டு அரங்கம் ஓர்
ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது
மிக பிரமாண்டமான சாதனையாக
இருந்தது எனவே மாநகராட்சியின்
ஆண்டு விழாவை அரங்கத்தின்
திறப்பு விழாவிலேயே நடத்த
வேண்டும் என மேயர் சிவராஜ்
அவர்களின் தீர்மானத்தின் பேரில்
இரு பெரும் விழாவாக
நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கான பேரணி
யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள்
மற்றும் அலங்கார வண்டிகளோடு
சென்னை தீவுத் திடலில் தொடங்கி
தாமஸ் மன்றோ சிலை வழியாக
வந்தன. மன்றோ சிலை அருகில்
மேடையில் அமர்ந்திருந்த மேயர்
சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள்
பேராணியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து சென்ற பேரணி
சென்ட்ரல் ரயில் நிலைய
மேம்பாலத்தினைக் கடந்து மூர்
மார்கெட் வழியாக மக்கள்
விளையாட்டு அரங்கை
வந்தடைந்தது. கலை நிகழ்ச்சிகள்,
போட்டிகள் நடந்தன. கோலாகலமான
நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மேயர் சிவராஜ் அவர்களின்
பணியின் சாதனைகளை
பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின.
மக்கள் விளைட்டுத் திடல் சர்வதேச
அளவில் அனைத்து
விளையாட்டுகளும்
விளையாடுவதற்கு தேவையான
வசதிகளைக் கொண்டதாக
இருந்தது. சர்வதேச கிரிக்கெட்,
கால்பந்தாட்டம், தடகளப் போட்டிகள்
ஆகியன நடத்துவதற்கு எற்ற
வகையில் மைதானம்
அமைக்கப்பட்டதால் சர்வதேசப்
போட்டிகள் தொடர்ந்து வந்த
ஆண்டுகளில் நடந்தன.
அதுவுமின்றி பள்ளிகள்,
கல்லூரிகள் மற்றும் உள்ளூர்
போட்டிகள் நடந்தவண்ணம் இருந்தன.
மாநகராட்சியின் ஆண்டு
அறிக்கையில் மக்கள் விளையாட்டு
அரங்கத்திற்கான தனி செலவின
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எனவே தந்தை சிவராஜ் அவர்களின்
சாதனைகளில் மிகப்பெரியதாக
மக்கள் விளையாட்டு அரங்கை
அமைத்ததை ஆய்வாளர்கள்
குறிப்பிடுகின்றனர். ஆனால்
தொடர்ந்து வந்த ஆண்டுகளில்
அவரது சாதனை எப்படி
மறைக்கப்பட்டது. அது எவ்வாறு
நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.
டாக்டர்.அம்பேத்கர் சிலை
அமைப்பும் பெயர் மாற்றமும்
நாடு விடுதலைப் பெற்ற பிறகு
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ்
தலைமையிலான ஆட்சி
அமைந்தது. 1963ஆம் ஆண்டு முதல்
1967 வரை சென்னை மாநிலத்தின்
முதல்வராக பக்தவச்சலம் இருந்தார்.
இந்த காலத்தில் சென்னை
மாநகராட்சியின் மேயராக குசேலர்
பதவியேற்றார். தலித் சமூகத்தின்
தலைவர்களுள் ஒருவராக இருந்த
குசேலர் அவர்கள் தந்தை சிவராஜ்
அவர்களின் தொடர்பில் இருந்தவர்,
விளைவாக 28.11.1963 அன்று நேரு
விளையாட்டரங்கின்
நுழைவாயிலில் புரட்சியாளர்
அம்பேத்கர் சிலையை நிறுவி
அதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம்
அவர்களின் கைகளால் திறக்க
வைத்தார். மிக கம்பீரமாக வட்டமான
படிகளோடு பீடம் அமைக்கப்பட்டது.
படிகள் உயர்ந்து உச்சியில்
அம்பேத்கர் சிலை நிற்கும்படி
அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நேரு 1964
மே மாதம் 27ம் நாள் மறைந்தார்.
இதன் விளைவாய் நேருவின்
நினைவாக தந்தை சிவராஜ் அவர்கள்
கட்டிய மக்கள் விளையாட்டரங்கத்தின்
பெயர் நீக்கப்பட்டு நேரு
விளையாட்டரங்கம் என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பிறகு எந்தவிதமான
மாற்றமும் இன்றி மக்கள் நேரு
விளையாட்டுத் திடலும், அம்பேத்கர்
சிலையும் பராமரிக்கப்பட்டு வந்தன.
பின்புதான் 30 ஆண்டுகள் கழித்து
நேரு விளையாட்டு அரங்கம் வேறு
தோற்றத்தை எடுத்தது.
நேரு ஸ்டேடியம் புதுப்பிப்பு
1993
கருணாநிதி அவர்களின் ஆட்சி
1990ல் கலைக்கப்பட்டப் பிறகு செல்வி
ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு
வந்தார். அவரது ஆட்சியில்
01.05.1992ம் நாளன்று தந்தை சிவராஜ்
கட்டிய நேரு விளையாட்டு அரங்கம்
இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்
என்று அறிவித்தார். அதன்படி நேரு
விளையாட்டரங்கம்
இடிக்கப்பட்டதுடன், மேயர் சிவராஜ்
அவர்கள் திறந்ததைக் குறிக்கும்
கல்வெட்டுக்களும், நுழைவாயிலி
ல் இருந்த டாக்டர். அம்பேத்கர்
சிலையும் அகற்றப்பட்டன.
தொடர்ந்து 260 நாள்களுக்குள்
அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு
17.01.1993 அன்று திறப்பு விழா
நடைபெற்றது.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா,
பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும்
தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஏற்கெனவே இருந்த மக்கள்
விளையாட்டு அரங்கம் பத்து
மாதங்களுக்குள் கட்டப் பட்டதால்,
புதிய நேரு விளையாட்டு
அரங்கம் 6 மாதங்களுக்குள் கட்டப்பட
வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டது. அது கின்னஸ்
சாதனையாகவும்
அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்ட முறையில் முதல் அரங்கம்
கட்டப்பட்டபோது தந்தை சிவராஜ்
அவர்கள் திறந்ததாக இருந்த
கல்வெட்டுகள் அகற்றப்பட்டு
கவனமாக மீண்டும்
அமைக்கப்படவில்லை. மேலும்
அம்பேத்கர் சிலையும் மீண்டும்
நிறுவப்படவில்லை. எனவே
மேற்கண்ட வரலாற்று சான்றுகளை
மீண்டும் அமைக்க வேண்டும் என
தலித் இயக்கங்கள் அரசிடம் கோரின.
ஆனால் ஜெயலலிதா அரசு அதை
காதில் போட்டுக்கொள்ளவே
இல்லை.
எனவே சென்னையில் தலித்
போராட்டக் கூட்டுக்குழு
அமைக்கப்பட்டது.
அம்பேத்கர் சிலையை மீண்டும்
நிறுவ வேண்டும், தந்தை சிவராஜ்
அவர்களின் பெயர் பொறித்த
கல்வெட்டுகள் மீண்டும் அமைக்கப்பட
வேண்டும் என்று கோரிக்கைகளை
முன்வைத்து போராட்டங்கள்
நடைபெற்றன.
இப்போராட்டங்களுக்கு பௌத்த
பெரியார் சுந்தராசனார் தலைமை
தாங்கினார். சொல்லின் செல்வர்
சக்திதாசன், டாக்டர் சேப்பன்,
உள்ளிட்ட முன்னணி தலைவர்களும்,
பல்வேறு அமைப்புகளைச்
சேர்ந்தவர்களும் போராட்டங்களை
முன்னெடுத்தனர். இதன்
விளைவாய் ஜெயலலிதா அரசு
இறங்கிவந்து அம்பேத்கர் சிலையை
மீண்டும் அமைக்க உறுதி தந்தது.
ஆனால் சிலையை நேரு
விளையாட்டரங்கின் முன்னே
வைக்காமல் பெரிய மேடு காவல்
நிலையத்தின் அருகில் சாலை
ஓரத்தில் வைத்துவிட்டது. இதனால்
தலித் மக்களிடையே கொதிப்பு
உருவாகி மேலும் போராட்டங்கள்
நடந்தன. இந்த போராட்டங்களினால்
தந்தை சிவராஜ் அவர்களின் பெயர்
பொறித்த கல்வெட்டுகள் வைக்கும்
கோரிக்கை மறைந்தே போனது.
அதுமட்டுமின்றி 1994ம் ஆண்டு
நேரு விளையாட்டரங்கிற்கு
செயலலிதா வந்தபோது
தற்குறிகளான அவரது கட்சியினர்
அம்பேத்கர் சிலையை முற்றாய்
மறைத்து பேனர்களை வைத்தனர்.
அதனால் அதை அகற்ற வேண்டி
போராட்டங்கள் நடைபெற்றன.
பிறகு ஆட்சிகள் மாறின, காட்சிகள்
மாறின. 2011ல் மீண்டும் ஆட்சிக்கு
வந்த ஜெயலலிதா அவர்கள் நேரு
விளையாட்டரங்கில் சில
புதுப்பிப்பு பணிகளை
மேற்கொண்ட போது அதற்காக ஒரு
தனிக் கல்வெட்டையும் வைத்தார்.
அது 11.11.2013 அன்று திறக்கப்பட்டது.
அப்போதும் தந்தை சிவராஜ்
திறப்புப் பற்றி யாருக்கும் எந்த
கவலையும் இல்லாமல் போனது.
தந்தை சிவராஜ் அவர்கள் திராவிட
இயக்கத்தின் முன்னோடிகளுள்
ஒருவர் என்று பேசிவரும்
திராவிடக் கட்சிகள் எவையும்
அவரின் வரலாற்றுப் பங்களிப்பைப்
பற்றி பேசுவதும் இல்லை.
அவருக்கான அங்கீகாரத்தை
அளிப்பதும் இல்லை என்பதற்கு இது
அப்பட்டமான சாட்சி.
இப்படி உயர்ந்த வரலாற்றையும்,
போராட்டங்களை கட்டமைத்த
வரலாறும், தலித் மக்களின் உன்னத
சாதனைகளையும் கொண்டதுதான்
சென்னையில் உள்ள நேரு
விளையாட்டு அரங்கம். ஆனால் இந்த
முற்போக்கு முகமூடிகள் தலித்
மக்களுக்கு எந்த வரலாற்று
பின்னணியும் இல்லை
என்பதுபோல பேசிக் கொண்டுத்
திரிகிறார்கள். எப்போதுதான் இது
மாறுமோ தெரியவில்லை.
நேரு விளையாட்டு அரங்கத்தை
கடக்கும் போதெல்லாம் எனக்கு இந்த
வரலாற்று சம்வங்கள் நினைவுக்கு
வரும். மனம் நெருடும். இதைப்
படிக்கும் ஒவ்வொருவருக்கும் இனி
அந்த நெருடல் உருவாகும் என
நினைக்கிறேன்.
அதோபோல, சிந்தாதிரிப்
பேட்டையில் உள்ள நேப்பியர்
பூங்கவை அமைத்ததும் மேயர்
சிவராஜ் அவர்கள்தான். பின்னர் அது
திமுக ஆட்சியில் மே தினப்
பூங்கா என பெயர் மாற்றப்பட்டது.
புதிய கல்வெட்டுகள் வைக்கப்பட்டன.
மேயர் சிவராஜ் அவர்களின் பெயர்
முற்றிலிம் மறைக்கப்பட்டது.
இந்த மோசடிகளை செய்பவர்கள்
நாமறிந்த முற்போக்காளர்கதான்.
வரலாற்றை மறைத்து அவர்கள் எதை
உருவாக்க முயல்கிறார்கள் என்பதை
உங்கள் யூகத்திற்கே
விட்டுவிடுகிறேன்.
குறிப்புகள்.
1. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள
புகைப்படங்கள் தந்தை சிவராஜ்
அவர்களின் குடும்ப புகைப்படத்
தொகுப்பிலிருந்து பெற்றவை.
சிவராஜ் அவர்களின் இளைய மகன்
தயாசந்தர் அவர்கள் அதை எனக்கு
அளித்தார். அவற்றில் சில மட்டுமே
இங்கு பதியப்பட்டுள்ளது.
2. மக்கள் விளையாட்டுத் திடலில்
அம்பேத்கர் சிலையை வைத்த மேயர்
குசேலர் அவர்கள் தனிப்பட்ட
முறையில் எனக்கு பாட்டனார்
முறை. எனது தந்தையின்
சித்தப்பா. அவர் பிறந்த ஊர்
தற்போது ஊத்துக்கோட்டைக்கு
அருகே, ஆந்திராவில்
சேர்க்கப்பட்டிருக்கும் மதனம்பேடு
கிராமம்.
3. பழைய நேரு விளையாட்டு
அரங்கத்தின் புகைப்படத்திற்காக
அலைந்துக் கொண்டிருக்கிறேன்.
அது கிடைக்கவில்லை. என் சிறிய
வயதில் அந்த அரங்கில்
விளையாடிய நினைவு
இருக்கிறது. ஒரே நேரத்தில்
இரண்டு கால் பந்தாட்ட போட்டிகள்
நடத்தும் அளவிற்கு அது பெரியது.
நன்றி - நமது தமிழ்மண்.

சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் செப்டம்பர் 30.


சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் செப்டம்பர் 30.

( International Translation Day ) ஆண்டுதோறும்
விவிலிய
மொழிபெயர்ப்பாளர் புனித
ஜெரோமின் (கிபி 347-420) நினைவு
நாளான செப்டம்பர் 30ஆம் நாள்
கொண்டாடப்படும் ஒர் சிறப்பு
நாளாகும். ஜெரோம்
மொழிபெயர்ப்புகளின்
பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட
'பன்னாட்டு
மொழிபெயர்ப்பாளர்களின்
கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம்
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு
வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு
பல்வேறு நாடுகளிலும்
மொழிபெயர்ப்புத் துறையில்
ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும்
முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில்
கொண்டாட அழைப்பு விடுத்தது.
தமிழகத்தின் பங்கு
தமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே,
யார்யாரால் பன்னாட்டு
மொழிபெயர்ப்பு தினம்
கொண்டாடப்பட்டது என்ற
மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில்
மொழிபெயர்ப்புக்கென்று
அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள்
இயங்குவது அறியப்படுகிறது.
பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ்
பல்கலைக்கழகத்தில்
மொழிபெயர்ப்புக்கென்று
தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு
பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி
பாடதிட்டத்திற்கேன்று
மொழிபெயர்த்து
வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி
மொழிபெயர்ப்பு
நூல்களாகும்.
பல மொழிபெயர்ப்பு நூல்கள்
வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட
நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள்
அபூர்வமாகவும், அருமையாகவும்
இடம்பெற்றிருந்ததன. இருப்பினும்
அந்த நூல்கள் பயன்பாடற்று
குப்பைகளாயின. அனைத்து பொது
நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக
அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன.

1990களில் சில இலக்கிய
மொழிபெயர்ப்பு நூல்களை
தமிழக அரசு வெளியிட்டது. அதில்
கலீல் கிப்ரான் எழுதிய தீர்க்கதரிசி,
ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வேக்பீல்டு
பாதிரியார் போன்ற சில ஆங்கில
மொழிபெயர்ப்பு நூல்கள்
குறிப்பிடத்தக்கது.

உலக இருதய தினம் செப்டம்பர் 29.

உலக இருதய தினம் செப்டம்பர் 29.

இருதயம் மனித உறுப்புகளில்
மகத்தான பங்கான
பங்காற்றுகிறது. 24
மணிநேரமும் உறங்காமல்
இயங்குவதால்தான்
நம்மால் நிம்மதியாக உறங்கி
எழுந்து அன்றாட பணிகளை
செய்யமுடிகிறது. நமக்கான
அயராது உழைக்கும் இதயத்தின்
ஆரோக்கியத்தைப் பற்றி நாம்
கவலைப்படுவதில்லை,
கண்டதையும் சாப்பிடுகிறோம்
தேவையற்ற பாரங்களை மனதில்
ஏற்றிக்கொள்கிறோம் விளைவு
இருதயம் நோய்க்கு
ஆளாகிவிடுகிறது.
மாரடைப்பு ஏற்பட்டு
இருதயத்திற்கு இடைஞ்சல்
என்றால் மட்டுமே நாம்
அதைப்பற்றி
கவலைப்படுகிறோம். இதயத்தைப்
பாதுகாக்கவும் இதயநோய் பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
செப்டம்பர் 29 ம் நாள் உலக இருதய
தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.
இதய நோயிலிருந்து
தப்பிக்க வல்லுனர்கள் கூறும்
வழிமுறைகள்:
*அவை, தொலைக்காட்சி
பார்ப்பதை குறைக்க
வேண்டும்; தொலைக்காட்சி
முன் குறைந்த நேரத்தையே
செலவிட வேண்டும்.
நாளொன்றுக்கு இரண்டு மணி
நேரத்திற்கு மேல்
தொலைக்காட்சியை
பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம்
மாரடைப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது.
*உயர் ‌புரூக்டோஸ்
உணவுகளை தவிருங்கள்;
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
மற்றும் குளிர்பானங்களில் உள்ள
உயர் ட்ரை கிளிசராய்ட் அளவு
மாரடைப்பு அபாயத்தை
அதிகரிக்க வாய்ப்புள்ளது.
*உப்பு அதிகளவில்
பயன்படுத்துவதால் உடலில்
ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும்.
இதன் மூலம் இதய நோய் ஏற்படும்
வாய்ப்பு அதிகரிக்கிறது.
*ரத்தத்தில் கொலஸ்ட்ரால்,
சர்க்கரை, பிபி போன்றவற்றின்
அளவை சீரான அளவில்
வைத்திருக்க வேண்டும்.
*காய்கறிகள் அதிகளவில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
*கொழுப்பு இல்லாத இறைச்சி,
மீன், ஆலிவ் எண்ணெய்,
மக்காச்சோளம், சூரிய காந்தி
எண்ணெய் வகைகள்
இருதயத்துக்கு
பாதுகாப்பளிக்கின்றன.
*புகையை தவிர்க்கவும்
; புகை பழக்கம் இதயத்தின்
தமனிகளை பாதித்து
குறுகலாக செய்கிறது. புகை
இலையில் உள்ள கார்பன்
மோனாக்சைடு ரத்தத்தில்
ஆக்சிஜன் அளவை
குறைக்கிறது. இதனால் ரத்த
அழுத்த பிரச்சனை ஏற்படும்,
இவை நாளடைவில் பெரிய
பாதிப்பை கொண்டுவரும்.
மேலும் புகை பிடிப்பவரின்
அருகில் இருப்பதையும்
தவிர்பது அவசியம்.
*நல்ல தூக்கம்; தூக்கமின்மை
என்பது மனதளவிலும்
உடலளவிலும் உபாதைகளை
கொண்டு வரும். மேலும் இருதய
தமனிகளில் கால்சியம் அளவை
அதிகரிக்க செய்யும்.
இதனால் ‌பிளேக், பக்கவாதம்
மற்றும் மாரடைப்பு ஏற்படும்.
*உடற்பயிற்சி அவசியம்;
ஒவ்வொரு நாளும் ஒரு அரை
மணி நேரம் உடற்பயிற்சி செய்து
வந்தாலே இருதய நோய்
வருவதிலிருந்து 60 சதவீதம்
தப்பிக்க முடியும்
*ஒரு நாளுக்கு சராசரியாக 10
ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
*சிரிக்கும் பழக்கத்தை
வளர்த்துக்கொள்வது, இதய
நோயிலிருந்து
விடுபடுவதற்கு சிறந்த மருந்து.

***********************************
இன்றைய சூழலில் இருதய
நோயால்
பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது.
உலகில் இருதய
நோய்களால் தான் அதிக
உயிரிழப்புகள்
ஏற்படுகின்றன. ஆண்டுதோறும்
1 கோடியே 73
லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இது 2030ல் 2 கோடியே 30
லட்சமாக உயரும்
எனவும் உலக சுகாதார
நிறுவன
ஆய்வு தெரிவிக்கிறது. இதில்
80 சதவீத
மாரடைப்புகள், தடுக்கக்
கூடியவை.
இருதயத்தை பாதுகாப்பது
பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக செப்டெம்பர் கடைசி
ஞாயிறு (செப்டெம்பர் 29)
உலக இருதய தினமாக
கடைப்பிடிக்கப்படுகிறது.
இரவுப் பணி, முறையற்ற
உணவு பழக்கம், அதிக
நேர பணி, குடும்பத்தில்
நிம்மதியின்மை போன்றவை
இருதய நோய் சாத்தியக்
கூறுகளை அதிகரிக்கின்றன.
உலகில்
மாரடைப்பால் இறப்பவர்களில், 20
சதவீதம் பேர்
புகை பிடிப்பவர்கள்.
மற்றவர்களை விட,
புகை பிடிப்பவர்களுக்கு
இருதய நோய் வரும்
வாய்ப்பு இரண்டு மடங்கு
அதிகம்.
புகை பிடிப்பதால்
இருதயத்துக்கு செல்லும்
ஒட்சிஜன் அளவு குறைகிறது.
புகை பிடிப்பவர்கள்,
வெளியிடும்
புகையினால் அருகில்
உள்ளவர்களும்
பாதிக்கப்படுகின்றனர். உடல்
பருமன்
ஆதலாலும், சர்க்கரை நோய்
காரணமாகவும்
இருதய நோய் ஏற்படலாம்.
சர்க்கரை நோயால்
இருதயத்துக்கு செல்லும்
ரத்தக்குழாய்கள்
சேதமடைவதால் மாரடைப்பு
ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளில் 75
சதவீதம்
பேருக்கு இக்குறைபாடு
இருக்கிறது.
* புகை பிடிப்பதற்கு நோ
சொல்லுங்கள்.
* உப்பு அதிகம்
பயன்படுத்துவதால்
ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும்.
இதன் மூலம்
இதய நோய் வாய்ப்பு
அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால்,
சர்க்கரை, ரத்த
அழுத்தம் போன்றவற்றை சீராக
வைத்திருக்க
வேண்டும்.
* யோகா மற்றும் தியானம்
செய்வது நல்லது. உடல் எடை
அதிகரிக்காமல்
பார்த்துக்கொள்ள
வேண்டும், தினமும்
குறைந்தது 30
நிமிடமாவது உடற்பயிற்சி
செய்வது அவசியம்.
முறையான உடற்பயிற்சி,
சரியான
உணவு பழக்கம், உரிய
முறையில் மருத்துவம்
எடுத்துக்கொள்வது இருதய
நோயிலிருந்து
பாதுகாக்கும்.
* முடிந்தளவு எஸ்கலேட்டர்,
லிப்ட்
ஆகியவற்றை பயன்படுத்தாமல்,
மாடிப்படிகளை பயன்படுத்த
வேண்டும்.
ஒரு நாளுக்கு சராசரியாக, 10
ஆயிரம் அடிகள்
நடக்க வேண்டும். * காய்கறிகள்,
அதிகம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
மதுப்பழக்கத்தை கைவிட
வேண்டும்.
கொழுப்பு இல்லாத இறைச்சி,
மீன்,
பருப்பு வகைகள், ஆலிவ்
எண்ணெய், மக்காச்சோளம்,
சூரிய காந்தி எண்ணெய்
ஆகியன,
ஓய்வின்றி உழைக்கும்
இருதயத்துக்கு
பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை
வளர்த்துக்கொள்வது,
இதய நோயிலிருந்து
விடுபடுவதற்கு சிறந்த
மருந்து.
இதயத்தை பாதுகாப்பது
எப்படி? இதயத்திற்கு இதம் தரும்
உணவுகள்,
மலர்களை பார்க்கும் போதும்,
மழலைகளைப்
பார்க்கும் போதும், மனதும்,
முகமும்
சிரிக்கும். ஓயாது துடிக்கும்
நம் இதயமும்,
சிரிக்க வேண்டாமா? இன்று
உலக இதய தினம்.
இதயம் இளமையாக சிரிக்க
வேண்டுமா? இதயத்திற்கு இதம்
தரும்
உணவுகளை சொல்கிறார்;
மதுரை சித்தா டாக்டர்
ஜெ.ஜெய
வெங்கடேஷ்.காதலையும்,
கோபத்தையும்
சமாளித்து துடிக்கும் இதயம்,
புகையாலும்,
மதுவாலும், எண்ணெய்
உணவாலும் வலியால்
துடிக்கிறது. "அட்ரினலின்,
தைராக்ஸின்'
ஹார்மோன்களால், கெட்ட
கொழுப்பு, அதிக ரத்த
அழுத்தம், ரத்தக் குழாய்
சுருக்கம்
போன்றவற்றால், இதயம்
சற்று பாதிக்கப்படுகிறது.
தினம் ஒருவேளை,
30 கிராம் தயிர் சாப்பிடுவது
நல்லது. பாலில்
உள்ள சத்துக்களை விட, தயிரில்
அதிக சத்துக்கள் உள்ளன.
சிவப்பு நிற பசலை,
பொன்னாங்கன்னி, கரிசாலை,
தண்டுக்கீரை, பீட்ரூட், கேரட்
ஆகியவற்றில்,
இதயத்தை பாதுகாக்கும்,
"ஆன்தோசயனின்கள்'
உள்ளன. இவை, இதயத்திற்கும்,
ரத்தக்
குழாய்களுக்கும் இடையே
உராய்வு அழுத்தத்தை,
குறைத்து
மென்மைப்படுத்துகின்றன.
குறைந்த தண்ணீரில் அவித்த
சோளம், கொள்ளு இரண்டும்,
ரத்தக் குழாய்களில் கெட்ட
கொழுப்பு சேர்வதை
தடுக்கின்றன.
சிவப்பு சோயா, பாதாம்,
பிஸ்தா,
சாரைப்பருப்பு, வெந்தயம்,
பட்டாணி, மீன்களில்
உள்ள, "ஒமேகா 3 அமிலம்', கெட்ட
கொழுப்பை கரைத்து, நல்ல
கொழுப்பை
அதிகப்படுத்துகிறது.
தக்காளி,
வெண்டைக்காயை அதிகம்
வேக வைக்கக் கூடாது.
பச்சையாக சாப்பிடுவது
இன்னும் நல்லது.
இவற்றிலுள்ள,
"லைக்கோபின்கள்' பித்தநீருடன்
வினைபுரிந்து, கெட்ட
கொழுப்பு உருவாவதை
தடுக்கின்றன. ஆப்பிள்,
ஸ்ட்ரா பெர்ரி, ஆப்ரிகாட்,
முலாம்பழம், கிவி,
மாதுளை, எலுமிச்சை,
ஆரஞ்சு,
புளு பெர்ரி சாப்பிட்டால்,
நுண்ணிய ரத்தக்
குழாய்களில் நைட்ரஜன்
ஆக்ஸைடு அதிகரித்து,
ரத்தக் குழாய்
விரிவடைகிறது. இதனால்
அடைப்பு மற்றும் சுருக்கம்
தவிர்க்கப்படுகிறது.
இதிலுள்ள
"பீட்டா கரோட்டின், விட்டமின் இ'
இரண்டும்,
இதயத்தை
பாதுகாக்கின்றன.பப்பாளி,
பிளம்சில்
உள்ள, மெக்னீசியம்,
பொட்டாசியம் இரண்டும்,
ரத்தத்தில் சோடியம்
அதிகரிக்காமல் தடுத்து,
இயல்பான நிலைக்கு
கொண்டு வருகின்றன.
இதிலுள்ள, "விட்டமின் ஏ' செல்,
அழிவை தடுக்கிறது. நல்ல
கொழுப்பை அதிகரித்து
வயிறு, இடுப்பு,
தொடைப்பகுதியில் உள்ள
கெட்ட
கொழுப்பை கரைத்து,
இருதயத்திற்கு தேவையற்ற
சுமையை தவிர்க்கின்றன.
சிறுமலை வாழை,
ரஸ்தாளியும் இருதய தசைக்கு
ஏற்றது.
முளைவிட்ட தானியங்கள்,
பார்லி, ஓட்ஸ்,
மட்டை அவல், சிவப்பு அரிசி,
கோதுமை, ஆலிவ்
எண்ணெய், கொழுப்பு
நீக்கப்பட்ட பால்,
முட்டை வெள்ளைக்கரு, அதிக
எடையுள்ள மீன்கள்,
தோலுரித்து, கொழுப்பு
நீக்கப்பட்ட கோழி,
சோயா சார்ந்த உணவுகள்,
குடலில்
கொழுப்பு படிவதைத்
தடுக்கிறது.வெள்ளைநிற
அரிசி, ரவை, மைதா, சீனி,
உப்பை குறைத்துக்
கொள்வது நல்லது. ஒவ்வொரு
மாதமும், சமையல்
எண்ணெய் மாற்றி பயன்படுத்த
வேண்டும்.கோபம், கவலை,
மனஅழுத்தம், பயத்தாலும்
இருதயம்
பாதிக்கப்படும். தியானம்,
மூச்சுப்பயிற்சி,
யோகா, எளிய
உடற்பயிற்சிகளால்
இருதயத்தை பாதுகாப்போம்.
இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.

***********************************
2020
ஆம் ஆண்டு உலக அளவில் இருதய
நோயால் பாதிக்கப்படும்
நாடுகளில் இந்தியா முதலிடத்தில்
இருக்கும் என் ஆய்வில்
தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில்
ஒரு பங்கு இறப்பிற்கு இருதய
நோயே காரணமாக உள்ளது. இதன்
அடிப்படையில் உலக இருதய
தினமான இன்று இந்த அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் இதயத்துக்காக கவனம்
செலுத்த வேண்டிய நல்ல நேரம்
இது. இந்திய நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புறங்களில் இதய நோய்கள்
காரணமாக ஏற்படும் இறப்பு
விகிதம் அதிகரித்துள்ளது.
அதிலும் 40 வயதுக்கு
உட்பட்டவர்களே இந்த பட்டியலில்
இருக்கின்றனர்.
மரபணு ரீதியாக ஏற்பட்டு வந்த
இருதய நோய் இப்போது நாம்
கையாளும் பழக்க வழக்கங்களால்
வாழ்க்கை முறைப்படியான
நோயாக மாறியுள்ளது.
இதய நோயிலிருந்து தப்பிக்க
வல்லுனர்கள் ஐந்து
வழிமுறைகளை பின்பற்ற
வழிவகுகின்றனர்.
அவை, தொலைக்காட்சி
பார்ப்பதை குறைக்க வேண்டும
்;
தொலைக்காட்சி முன் குறைந்த
நேரத்தையே செலவிட வேண்டும்.
நாளொன்றுக்கு இரண்டு மணி
நேரத்திற்கு மேல்
தொலைக்காட்சியை
பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம்
மாரடைப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது.
உயர் ‌புரூக்டோஸ் உணவுகளை
தவிருங்கள் ; பதப்படுத்தப்பட்ட
உணவுகள் மற்றும்
குளிர்பானங்களில் உள்ள உயர் ட்ரை
கிளிசராய்ட் அளவு மாரடைப்பு
அபாயத்தை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
புகையை தவிர்க்கவும் ; புகை
பழக்கம் இதயத்தின் தமனிகளை
பாதித்து குறுகலாக செய்கிறது.
புகை இலையில் உள்ள கார்பன்
மோனாக்சைடு ரத்தத்தில்
ஆக்சிஜன் அளவை குறைக்கிறது.
இதனால் ரத்த அழுத்த பிரச்சனை
ஏற்படும், இவை நாளடைவில்
பெரிய பாதிப்பை கொண்டுவரும்.
மேலும் புகை பிடிப்பவரின்
அருகில் இருப்பதையும் தவிர்பது
அவசியம்.
நல்ல தூக்கம்; தூக்கமின்மை
என்பது மனதளவிலும்
உடலளவிலும் உபாதைகளை
கொண்டு வரும். மேலும் இருதய
தமனிகளில் கால்சியம் அளவை
அதிகரிக்க செய்யும்.
இதனால் ‌பிளேக், பக்கவாதம் மற்றும்
மாரடைப்பு ஏற்படும்.
உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு
நாளும் ஒரு அரை மணி நேரம்
உடற்பயிற்சி செய்து வந்தாலே
இருதய நோய் வருவதிலிருந்து 60
சதவீதம் தப்பிக்க முடியும்.
நன்றிதினமலர்.வெப்துனியா

சீரடி சாய்பாபா பிறந்த தினம் செப்டம்பர் 28.

சீரடி சாய்பாபா பிறந்த தினம் செப்டம்பர் 28.

சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba,
செப்டம்பர் 28, 1838. – அக்டோபர் 15,
1918), ( மராட்டி : शिर्डीचे श्री
साईबाबा, உருது : ﺷﺮﺩﯼ ﺳﺎﺋﯿﮟ ﺑﺎﺑﺎ ),
மகாராட்டிரத்தில் அகமது நகர்
மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர்
இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை
இந்துக்களும் இசுலாமியரும் புனித
சாமியாராக போற்றுகின்றனர்.
இந்துக்கள் இவரை கடவுள்
தத்தாத்திரேயரின் அவதாரமாகக்
கருதுகின்றனர். இசுலாமியர் பிர் ( உருது :
ﭘﯿﺮ ) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.
சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது
பல்லாயிரக்கணக்கானவர்
தொழும் புண்ணியத் தலமாக
விளங்குகிறது.
ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக்
கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள்
என்று சாய் பாபா
தெரிவித்திருந்தார்.பக்தர்கள் பலர்
திரட்டிய தகவல்களில் இருந்து சாய்
பாபாவின் அவதார தினம் 1838
செப்டம்பர் 28 என தெரியவந்தது.
[1]
இந்து முஸ்லீம் சிநேகம்
வளர்த்தது
பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர்,
இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர்.
மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து
இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே,
மசூதியை மலர்களால் அலங்கரிக்க
விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை
அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு
அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல
நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும்
நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற
தமது உன்னத எண்ணத்தை
செயல்படுத்தியவர்.

**********************************
சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த
கண்கண்ட தெய்வம் என்பதை
எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த
உணர்வுடன் ஒத்துக்
கொள்கிறார்கள்.
16 வயதுக்குப் பிறகே பாபாவை மக்கள்
அறிந்து கொள்ள
தொடங்கினார்கள். அதற்கு
முன்பு பாபா எப்படி வாழ்ந்தார்
என்பதற்கு நிறைய தகவல்கள் இல்லை.
இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய
பக்கீரிடம் வளர்ந்து, வேங்குசா என்ற
மகானை குருவாக ஏற்று அவர் அரிய
சக்திகள் பெற்றார் என்று
பாபாவின் தோற்றம் பற்றி எல்லா
நூல்களிலும் பொதுவான
குறிப்புகள் உள்ளன. வேங்குசாவை
குருவாக ஏற்று அவரோடு 12 ஆண்டுகள்
வாழ்ந்ததை பாபாவே
உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 4
ஆண்டுகள் அவர் முஸ்லிம் பக்கீரிடம்
வாழ்ந்தார் என்பதும்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால்
அவர் இந்த பூமியில் தோன்றிய அவதார
நிகழ்வு மட்டும் புரியாத புதிராக
உள்ளது.
பாபா பக்தர்களால் புனித நூலாக
கருதப்படும் “சாயி சத் சரிதம்” நூலிலும்,
பாபாவின் தோற்றம் பற்றிய முழு விபரம்
இல்லை.
பாத்ரி கிராமத்தில் இந்து குடும்பத்தில்
பாபா பிறந்தார் என்ற ஒரே ஒரு வரி
மட்டுமே திரும்ப திரும்ப
சொல்லப்படுகிறது. அதில் ஒரு
தெளிவு ஏற்படும் வகையில், 1990-ம்
ஆண்டு செப்டம்பர் மாதம் 28- ந்தேதி
புட்டபர்த்தி சாய்பாபா உரையாற்றிய
போது சீரடி சாய்பாபா அவதாரம்
பற்றிய ஒரு தகவலை வெளியிட்டார்.
சீரடி சாய்பாபாவின் பெருமையை
உணரச் செய்யும் அந்த தகவலையும்
தெரிந்து கொள்ளுங்கள்....
மராட்டிய மாநிலம் பாத்ரி
கிராமத்தில் கங்கா பாவத்யா -
தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து
வந்தனர். தீவிர சிவ பக்தர்களான
அவர்களுக்கு திருமணமாகி நீண்ட
நாட்களாகியும் குழந்தை இல்லை.
ஒரு நாள் இரவு பலத்த மழை
பெய்ததால் ஆற்றில்
வெள்ளம் கரைபுரண்டோடியது.
படகோட்டியான கங்கா பாவத்யா,
தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு
சென்று விட்டார். வீட்டில்
தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.
அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை
தட்டினார். தேவகிரியம்மா கதவைத்
திறந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம்
பெய்வதால் இன்றிரவு மட்டும்
இங்கு தங்கிக் கொள்கிறேன்”
என்றார். “சரி” என்று கூறிய
தேவகிரியம்மா திண்ணையில் அவரை
படுத்துக் கொள்ள
அனுமதித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி
தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த
முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது
தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு
தேவகிரியம்மா சாப்பாடு
கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய
அந்த முதியவர், “எனக்கு கால்கள்
வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார்.
இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி
அடைந்தார்.
பணம் வாங்கிக் கொண்டு
யாராவது அவருக்கு கால் பிடித்து விட
வருவார்களா என்று தேடிப்பார்த்தார்.
யாரும் கிடைக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது என்ற
குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக்
கொண்டிருந்த போது, மீண்டும்
கதவுத் தட்டப்பட்டது.
இந்த தடவை ஒரு பெண்
வெளியில் நின்று
கொண்டிருந்தார். அவள், “இந்த
முதியவருக்கு நான் பணிவிடை
செய்யட்டுமா?” என்றாள்.
மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி
செய்யுங்கள்” என்று கூறி பணம்
கொடுத்து விட்டு, வீட்டுக்குள்
சென்று கதவைப் பூட்டிக்
கொண்டார்.
வெளியில் இருந்த முதியவரும்,
பெண்ணும் உண்மையில் பரமசிவனும்,
பார்வதியும் ஆவார்கள். அவர்கள்
இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க
முடிவு செய்தனர்.
அவர்கள் மீண்டும் கதவைத்
தட்டினார்கள். கதவைத் திறந்த
தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே
நம்பமுடியவில்லை.
வெளியில் பரமசிவனும், பார்வதியும்
காட்சி கொடுத்துக்
கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின்
உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா
இறைவன், இறைவி முன்பு விழுந்து
வணங்கினார்.
அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு
மூன்று குழந்தைகள் பிறக்கும். மூன்றாவது
குழந்தையாக நானே உன் வயிற்றில்
பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர்.
தேவகிரி யம்மாவுக்கு நடப்பது கனவு போல
இருந்தது. கங்கா பாவத்யா வீடு
திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால்
கங்கா பாவத்யா அதை நம்பவில்லை.
சில தினங்களில் தேவகிரியம்மா
கர்ப்பமடைந்தார். முதலில் ஒரு ஆண்
குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து
பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா
பெற்றெடுத்தார். மூன்றாவது
முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது
கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது
நம்பிக்கை ஏற்பட்டது.
தேவகிரியம்மாவுக்கு காட்சி
கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி
தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்
அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
தேவகிரியம்மா அவரைப்பின்
தொடர்ந்தார்.
தம்பதியர் இருவரும் காடு - மேடுகளில்
அலைந்து திரிந்தனர். நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த
தேவகிரியம்மாவுக்கு ஆண் குழந்தை
பிறந்தது.
ஆனால் அதை கண்டு
கொள்ளாமல் கங்கா
பாவத்யா சென்று
கொண்டிருந்தார். இதனால்
தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர
இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு
விட்டு கணவரை பின் தொடர்ந்து
சென்று விட்டார்.
முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை
கண்டெடுத்து மன்வாத்
கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு
கொண்டு சென்றார். அவர்
பாலபாபாவை 4 ஆண்டுகள்
வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை
வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.
அந்த குழந்தைதான் சீரடி சாய்பாபா!
இவ்வாறு புட்டபர்த்தி சாய்பாபா
கூறிய நிகழ்வு சில நூல்களில் உள்ளது. இதை
சிலர் ஏற்கிறார்கள். சிலர்
மறுக்கிறார்கள்.
சாய்பாபாவின் அவதார மூலத்தை
கண்டுபிடித்து விட அன்று
தொடங்கி இன்று வரை எத்தனையோ
பேர் முயன்று பார்த்து விட்டனர்.
யாராலும் ஒரு துகள் அளவு தகவலை கூட
பெற முடியவில்லை.
சாய்பாபாவின் அவதாரம் என்பது
ஆழ்ந்த எல்லையற்ற பெருங்கடல்
போன்றது. அந்த பெருங்கடலில் மூழ்கி
நாம் பக்தி, ஞானம், மனப்பக்குவம்
உள்ளிட்ட பல்வேறு முத்துக்களை எடுத்துப்
பயன்பெறலாம். ஆனால் ஒரு
போதும் அந்த பெருங்கடலின் கரையை
காண இயலாது.
சில ஆய்வாளர்கள் பாத்ரி
கிராமத்தின் பழைய ஆவணங்களை
எல்லாம் ஒன்று விடாமல் புரட்டி
பார்த்து, படித்து சீரடி சாய் நாதனின்
பிறப்பை கண்டு பிடித்து விடலாம் என்று
எவ்வளவோ முயன்றனர். நிறைய பேருக்கு
அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு
ஆய்வாளர், “பாத்ரி கிராமத்தின்
புறநகர் பகுதி போல திகழும் கும்கர்
பவ்டியின் எனும் குளக்கரையில்தான்
பாபா பிறந்தார். அவர் பரத்வாஜ
கோத்ரத்தை சேர்ந்தவர்” என்றார். ஆனால்
அதற்கு அவரால் ஆதாரம் காட்ட
இயலவில்லை.
மற்றொரு ஆய்வாளர் கூறுகையில்,
“பாத்ரி கிராமத்தில் உள்ள வைஷ்ணவ
கல்லி எனும் பகுதியில் இருக்கும் 4-423-6
என்ற எண் கொண்ட வீட்டில்
பிராமண பூசாரி குடும்பத்தில்
சாய்பாபா பிறந்தார்” என்றார்.
ஆனால் அவராலும் அதற்கு எந்த
சான்றையும் காட்ட முடியவில்லை.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சீரடி
சாய்பாபா பற்றிய இத்தகைய
ஆய்வுகள் சூடு பிடித்த பிறகே பாத்ரி நகர
மக்கள், உலகமே புகழும் அவதாரப்
புருஷர் தங்கள் ஊரில் அவதரித்ததை போற்றி
பெருமை கொண்டனர்.
இந்த நிலையில் 1972-ல் சாய் பக்தரும்
ஆய்வாளருமான வி.பி.கெர்
என்பவர் பாத்ரியில் மிக விரிவான
ஆய்வை நடத்தினார். சாய்பாபா
தன்னிடம் மிகவும் நெருக்கமாக
இருந்த மகல்சபாதியிடம் கூறிய சில
தகவல்களின் அடிப்படையில் அந்த ஆய்வு
நடந்தது.
பாத்ரியில் உள்ள பிராமண
குடும்பங்கள் அனைத்தையும் கெர் ஆய்வு
செய்த போது யஜீர்வேதி தேஷஸ்தா
என்ற பிரமாண பூசாரி குடும்பம் பற்றிய
தகவல்கள் சாய்பாபா கூறிய
தகவல்களுடன் ஒத்துப்போனது. அந்த
பிராமண பூசாரி குடும்பத்தை சேர்ந்த
ரகுநாத் என்பவர் பேராசிரியராக
இருந்தார்.
அவர் அளித்த சில தகவல்கள் மூலம்
சாய்பாபா பிறந்த போது ஹரிபாவ்
பூசாரி என்று பெயரால்
அழைக்கப்பட் டிருப்பது தெரிந்தது.
சாய்பாபா சிறுவயதில் அனுமன்
பக்தராக இருந்தார் என்றும் ஆய்வில்
தெரிந்ததாக கூறப்பட்டது.
இவற்றை தொகுத்து வி.பி.கெர்
- டெல்லி ஸ்டெர்லிங் பதிப்பகம்
மூலம் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
ஆனால் அவராலும் சாய்பாபா
பிறப்பை துல்லியமாக சொல்ல
இயலவில்லை.
இதற்கிடையே பாத்ரி கிராமத்தில் தான்
சாய்பாபா பிறந்தார் என்று 1975-ம்
ஆண்டு அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த
ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து “ஸ்ரீசாய்
சம்ரக் சமிதி” (சாய் நினைவாலய கமிட்டி)
என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.
சாய்பாபா பிறந்ததாக கூறப்படும்
வீட்டின் ஒரு பகுதியை விலை
கொடுத்து வாங்கினார்கள்.
அங்கு 1994-ம் ஆண்டு
சாய்பாபாவுக்கு கோவில் கட்டும் பணி
தொடங்கியது.
1999-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து
அக்டோபர் 19-ந் தேதி “ஸ்ரீசாய்
ஜன்மஸ்தன் மந்திர்” (சாய்பாபா
பிறந்த இடத்து ஆலயம்) திறக்கப்பட்டது.
தற்போது அங்கு ஏராளமான சுற்றுலா
பயணிகள் செல்கிறார்கள்.
என்றாலும் சீரடி சாய்பாபாவின்
அவதார தொடக்கத்தை மிகத்
துல்லியமாக இதுவரை யாராலும்
கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஒரு
விஷயத்தில் மட்டும் புரியாத புதிர்
நீடிக்கிறது.
விஞ்ஞான அடிப்படையில் சமீபத்தில்
சாய்பாபா அவதார நிகழ்வை
கண்டுபிடிக்க சிலர் முயன்றனர்.
அவர்களுக்கும் தோல்வியே மிஞ்சியது.
மக்களை பக்குவப்படுத்த வந்த அந்த
மகானின் அவதார ரகசியத்தை
கண்டறிய முயற்சி செய்வது வீண்
வேலை என்று பலரும் உணர்ந்தனர். எனவே
நாமும் அந்த சிந்தனையை கைவிட்டு
விடலாம்.
1854-ம் ஆண்டு குரு வேங்குசாவின் சைலு
ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய
பாபா பல இடங்களில் அலைந்து
திரிந்தார். சில வாரங்களில் அவர்
கால்கள் சீரடி நோக்கி தாமாக
நடந்தன.
ஒரு நாள் பாபா சீரடியை
சென்றடைந்தார். சீரடியில் அவருக்கு
அங்குள்ள வேப்ப மரம்தான்
பிடித்தமான இடமாக இருந்தது. அங்கு
போய் பாபா அமர்ந்து விட்டார். அப்போது
சில அற்புதங்கள் நடந்தன.

திங்கள், 26 செப்டம்பர், 2016

கூகுளுக்கு பிறந்த நாள் செப்டம்பர் 27.

கூகுளுக்கு பிறந்த நாள் செப்டம்பர் 27.

இணையத்தில் கூகுள்
இல்லையென்றால் எதையும் பார்க்க
முடியாது என்ற நிலை தான்
பெரும்பாலான
பயனர்களுக்கு. அவர்கள், கூகுள்
தேடுபொறியை பயன்படுத்தி தான்,
எல்லா தகவல்களையும் தேடி பெறுவர்.
அப்படிப்பட்ட கூகுள் தேடுபொறிக்கு
இன்று 17வது பிறந்தநாள்.
வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை
நமக்கு நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று தனது
பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது.
பழைய கணினி திரையில், தொடக்க
காலத்தில் இருந்த கூகுள் லோகோ உடன் கூடிய
முகப்பு பக்கத்தை காண்பிக்கும் டூடுல்
பயனர்களை பழைய நினைவுக்கு அழைத்து
செல்கிறது கூகுள்...
கூகுளுக்கு உண்மையான பிறந்த நாள்
எப்போது ?
கூகுள் பிறந்த நாள் எப்போது என்பதில் பலருக்கு
குழப்பம் ஏற்படலாம். தற்போதைக்கு
செப்டம்பர் 27ந்தேதி தான் கூகுள் பிறந்த
நாள் என்று கூறப்பட்டாலும், அதற்கு
பின்னால் ஒரு சுவாரஸ்யமான தகவல்
உள்ளது. அதனால் தான், லோகோவை
சொடுக்கினால் when is google's
birthday என்று தேடுகிறது கூகுள்...
2005ம் ஆண்டு வரை செப்டம்பர் 7ந்தேதி
தான் கூகுளின் பிறந்த நாளாக
கொண்டாடப்பட்டு வந்தது.
அதன் பின்னர் செப்டம்பர் 27ந்தேதியே
கூகுளின் பிறந்த நாளாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
google.com என்ற டொமைன்
பெயரை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர்
15ந்தேதி பதிவு செய்யப்பட்டது.
இருந்தபோது, லாரி பேஜ், சேர்ஜி
பிரின் ஆகியோரால் தொடங்கப்பட்ட
கூகுள், நிறுவனமாக அதன்
செயல்பாடுகள் தொடங்கிய
ஆண்டான 1998 யையே தொடக்க
ஆண்டாக கருத்தில் கொண்டு வயது
கணக்கிடப்படுகிறது.
கூகுள் தனது 4வது பிறந்த நாளை
2002,செப்டம்பர் 27 அன்று
கொண்டாடியது. 5வது பிறந்த
நாளை 2003, செப்டம்பர் 8 அன்றும்,
6வது பிறந்த நாளை 2004, செப்டம்பர் 7
அன்றும், 7வது பிறந்த நாள் 2005,
செப்டம்பர் 26 அன்றும்
கொண்டாடியது.