வியாழன், 22 டிசம்பர், 2016

விடுதலைப் போராட்ட வீரர் கக்கன்ஜி நினைவு தினம் டிசம்பர் 23,

விடுதலைப் போராட்ட வீரர் கக்கன்ஜி நினைவு தினம் டிசம்பர் 23,

கக்கன் ( Kakkan, ஜூன் 18 , 1908 – டிசம்பர் 23,
1981 ), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்
தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்)
தலைவர், இன்னும் இதரப் பல
பொறுப்புக்களை 1957 முதல் 1967
வரை நடைபெற்ற காங்கிரசு
அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த
அரசியல்வாதியும் ஆவார்.கக்கன்
தமையனார் விஸ்வநாதன் ஒரு
வழக்கறிஞர் ஆவர். அவர் இந்து
முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்.
இளமைக்காலம்
கக்கன் ஜூன் 18, 1907 ஆம் ஆண்டு
மதராஸ் இராசதானியாக தமிழகம்
இருந்தபொழுது மதுரை மாவட்டம்,
மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற
கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில்
பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன்,
கிராமக் கோயில் அர்ச்சகராக
(பூசாரியாக)ப்
பணிபுரிந்தவர்.தொடக்கக் கல்வியை
மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு
மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை
படித்தார்.
இந்திய விடுதலை
போராட்டம்
கக்கன் தனது பள்ளி
மாணவப்பருவத்திலேயே கங்கிரசு
இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர
போராட்டத்தில் ஈடுபடலானார்.
அன்றைய காலகட்டத்தில் பறையர்கள்
மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது
தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி
அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும்
உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக்
கொண்டு வந்ததின் விளைவாகத்
பறையர்கள் மற்றும் சாணார்கள்
கோயில்களில் நூழைய
தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம்
நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள்
மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை
கோயிலினுள் நுழைந்தார்
ஆங்கிலேயனே
வெளியேறு இயக்கத்திலும் கக்கன்
பங்கேற்று அலிப்பூர் சிறையில்
அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த
தொகுதிப் பேரவைத் தேர்தலில்
வெற்றிபெற்று 1946 முதல் 1950
வரை உறுப்பினராகப் பொறுப்பு
வகித்தார்.
சுதந்திர இந்தியாவில்
அரசியல் பணி
கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின்
மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957
வரை பொறுப்பு வகித்தார்
.காமராசர் தமிழகத்தின் முதல்வர்
பொறுப்பை ஏற்கும் பொருட்டு
தான் வகித்து வந்த தமிழ்நாடு
காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை
விட்டு விலகியபொழுது கக்கன்
அந்தப் பதவியை ஏற்றார்  . 1957 இல்
இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும்
தேர்தலில் வெற்றிபெற்று
மதராஸ் மகாணத்தின் ஆட்சி
பொறுப்பை ஏற்றது. கக்கன்
பொதுப்பணித்துறை,ஆதிதிராவிடர்
நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை
ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13,
1957 இல் பொறுப்பேற்று
கொண்டார்  . மார்ச் 13,
1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை
விவசாயத் துறை அமைச்சராக
பொறுப்பு வகித்தார்  . ஏப்ரல் 24,
1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின்
உறுப்பினராக நியமனம்
செய்யப்பட்டார்
அக்டோபர் 3, 1963
அன்று மாநில உள்துறை அமைச்சராகப்
பொறுப்பேற்று 1967 வரை
அப்பொறுப்பிலிருந்தார்
நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப்
பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்
மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன.
ஆதிதிராவிட மக்களின்
முன்னேற்றத்திற்காக அரிசன சேவா
சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்
விவசாய அமைச்சராகப்
பொறுப்பில் இருந்த காலத்தில்
இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள்
மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன.
இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப்
பாராட்டி இந்திய அரசு இவரின்
உருவப்படம் பொறித்த சிறப்பு
அஞ்சல் தலையை 1999  ஆண்டு
வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.
இறுதி காலம்
மேலூர் (தெற்கு) தொகுதியில்
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை
எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி.
ராமனிடம் தோற்றார்  . இத்தேர்தல்
தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை
தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்)
தலைவர் பொறுப்பு வகித்தார். 1973
இல் அரசியலில் இருந்து ஒய்வு
பெற்றார்.
தனிக் கருத்து போக்கு
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக
இருந்த காரணத்தினால், கக்கன் அதிக
சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார்.
மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி
நடப்பவர். பெரியார் தனது
சுயமரியாதை இயக்கத்தின் சார்பில்
இந்துக்களின் கடவுளான இராமனின்
உருவப்படம் எரிப்பு போராட்டத்தை
அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு
தனது கடும் கண்டனத்தை
தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச்
செயல் என்றும், சுதந்திரத்திற்காக
பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய
கடவுளை அவமதிப்பதாகும் என்று
எச்சரிக்கையும் விடுத்தார் .
************************************

விடுதலைப் போராட்ட வீரரும்,
இந்தியாவின் தலைசிறந்த
அரசியல்வாதியும், தமிழக
முன்னாள் அமைச்சருமான பி. கக்கன்
(P. Kakkan) பிறந்த தினம்  (ஜூன்
18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்
பத்து:
l மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில்
உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில்
பிறந்தவர் (1908). தந்தை, கிராமக்
கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே
தொடக்கக் கல்வியை மேலூரில்
பயின்றார். 12-வது வயதில் படிப்பைத்
தொடர முடியாததால் ஒரு
வீட்டில் பண்ணை வேலை செய்தார்.
l ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே.
என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
படிப்பைத் தொடர்ந்தார். மதுரை
வைத்தியநாத ஐயர் இவரைத் தன்
வளர்ப்பு மகனாக அரவணைத்துக்
கொண்டார். மாணவப்
பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில்
இணைந்தார். வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று
சிறை சென்றார்.
l சிறையில் கசையடி உட்பட பல
கொடுமைகளை அனுபவித்தார்.
1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை
தொடங்கப்பட்டது. இவர் அதன்
உறுப்பினராகப்
பொறுப்பேற்றார்.
நாடாளுமன்ற மக்களவை
உறுப்பினராக 1952 முதல் 1957 வரை
பணியாற்றினார். காமராசர்
முதல்வராக பொறுப்பேற்றபோது
அவர் வகித்து வந்த தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை
ஏற்றார்.
l 1957-ல் தேர்தலில் மீண்டும்
காங்கிரஸ் வெற்றி பெற்று
மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப்
பொறுப்பை ஏற்றது.
பொதுப்பணித்துறை, ஹரிஜன
நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை
ஆகிய துறை களின் அமைச்சராகப்
பொறுப்பேற்றார். விவசாயத்
துறை அமைச் சராகவும், மாநில உள்துறை
அமைச்சராகவும்
செயல்பட்டுள்ளார்.
l இவர் அமைச்சர் பொறுப்பு
வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை
அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின்
முன்னேற்றத்துக்காக அரிசன சேவா
சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு
விவசாயப் பல்கலைக்கழகங்கள்
தொடங்கப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ்
ஆயிரக்கணக்கான பள்ளிகளைத்
திறந்தார். அவர்களுக்கென
வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.
l மேலும் காவல் துறையில்
காவலர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத்
துறையைத் தொடங்கியது, கூட்டுறவு
விற்பனைக் கூடங்களைத்
தொடங்கி வைத்தது உட்பட
ஏராளமான நலத் திட்டங்களை
செயல்படுத்தினார்.
அமைச்சரான பிறகும் தன் மகளை
மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.
l அரசாங்க பணத்தில் வாழாமல்,
இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து
குடும்பத்தை கவனித்து வந்தார். தனது
தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை
இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து
அளித்த அரசாணையைக்
கிழித்தெறிந்தார். பதவிக்
காலத்தில் எந்தப் பரிசுப்
பொருளையும் யாரிடமிருந்தும்
பெற்றதில்லை.
l இவரது தம்பி தனது தகுதி, திறமையின்
அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த
போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது
என்று பிறர் கருதுவார்கள்
என்பதால், அதில் சேர வேண்டாம்
என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர், 10
ஆண்டுகள் மாநில முக்கியத்
துறைகளின் அமைச்சர் என
பொறுப்புகள் வகித்தபோதும்
தனக்கென்று சல்லிகாசுகூட
சம்பாதிக்காமல் நேர்மையின்
வடிவமாகத் திகழ்ந்தவர்.
l 1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு
பெற்றார். விடுதலைப் போராட்டத்
தியாகத்துக்காக அவருக்கு
வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின்
பூதான இயக்கத்துக்கு
அளித்துவிட்டார். முடக்கு
வாதத்தால் பாதிக்கப்பட்டு
தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம்
செலுத்த முடியாததால், மதுரை
அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
l இந்திய அரசு இவர் உருவப்படம்
பொறித்த அஞ்சல் தலையை
வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின்
சின்னமாகவும், பொது
வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும்
என்பதற்கு சிறந்த
முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன்
1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில்
காலமானார்.

புதன், 21 டிசம்பர், 2016

தேசியக் கணித தினம் டிசம்பர் 22 .


தேசியக் கணித தினம்  டிசம்பர் 22 .
இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்
உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.


ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.

ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார். அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.

இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.
  

கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் டிசம்பர் 22,1887.


கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் டிசம்பர் 22,1887. 

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது

பிறப்பு
குடந்தை சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.

இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். [சான்று தேவை] ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

கல்வி
இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார்.

1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.


கும்பகோணத்தில் சாரங்கபாணித் தெருவில் உள்ள இராமானுசனின் வீடு
கணக்கியலர்

கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.

கற்பிக்கப்படாத மேதை
மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே.

பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வு
பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")

சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

இளமையும் கல்வியும்

1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.[ எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம்]. இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

1907-11 இல் படைப்பு வெள்ளம்
மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[http://www.hinduonnet.com/fline/fl1617/16170810.htm

கலங்கரை வெளிச்சத் தொடர்
சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார்.

இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.

பேரா. ஜி. ஹெச். ஹார்டி
1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.

ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.

நான்கு பொன்னான ஆண்டுகள்
கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.

இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.

சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளி

இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:

{\displaystyle x^{2}-10y^{2}=+1or-1} {\displaystyle x^{2}-10y^{2}=+1or-1}

மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:

{\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+\dotsb }}}}}}}}} {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+\dotsb }}}}}}}}}

இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு

3 + 1/6 = 19/6.

x =19, y = 6 இரண்டாவது விடை.

{\displaystyle 19^{2}-10*6^{2}=361-360=1} {\displaystyle 19^{2}-10*6^{2}=361-360=1}

மூன்றாவது ஒருங்கு:

{\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6}}}}} {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6}}}}}

இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான்.

இன்னொரு நோட்புக்கின் அற்புதம்
துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919–20 இல் செய்த ஆராய்ச்சிகள்.

ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:

• மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.

சிறப்புக்கள்
1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அன்னை சாரதா தேவி பிறந்த தினம் டிசம்பர் 22 .


அன்னை சாரதா தேவி பிறந்த தினம் டிசம்பர் 22 .

அன்னை சாரதா தேவி (ஆங்கிலம்:Sarada Devi, வங்காள: সারদা দেবী; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) (22 திசம்பர் 1853 – 20 சூலை 1920), ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

இளமைக்காலம்

ஜெயராம்பாடியில் சாரதா தேவியின் வீடு (நடுவில்)
அன்னை சாரதா தேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தார். இவர் பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

ஐந்து வயதில் இவர், ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். தமது கணவரைப் பலர் பைத்தியக்காரர் என்று கூறுவதால் வருத்தப்பட்டு அவருக்கு உதவி செய்ய வந்தார். அங்கு ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்விற்குத் துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.

சங்க ஜனனி
சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியை ’சங்க ஜனனி’ என்று குறிப்பிடுவார். ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், 1888 ஏப்ரல் மாதம் கயைக்குச் சென்ற அன்னை, அங்கு உள்ள சன்னியாசிகளுக்கு உள்ள மட வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தி அழுதார். அவர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் "..உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இதுதான்: உமது பெயரைச் சொல்லிக் கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள், அவர்களிடம் வந்து உமது அமுதமொழிகளைக் கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை" என்று பிரார்த்தித்தார். இவ்வாறு தமது பிரார்த்தனை மூலம் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு முதல் விதையை இட்டார். அதனாலேயே ’சங்க ஜனனி’ (இயக்கத்தை தோற்றுவித்தவர்) எனப் போற்றப்படுகிறார்.

பெண் கல்வி
அன்னை சாரதா தேவி பெண் கல்வியை ஊக்குவித்தார். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.

கடைசி உபதேசம்
1919 இறுதியிலிருந்து அவரது உடல் ஆரோக்கியம் குன்றியது. அவரது நோய் கடுமையான காய்ச்சல் (Kala-azar) என்று கல்கத்தாவில் கண்டு பிடிக்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிநாள் 1920 ஜூலை 20 வரை அவர் இந்த நோயால் அவதிப்பட்டார். ”மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுகெல்லாம் என் அன்பைத் தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு” என்று தமது கடைசி உபதேசத்தை அளித்தார்.


ஆன்மிகவாதி, ராமகிருஷ்ணரின் துணைவி

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் (1853) பிறந்தார். தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார்.

# கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார். ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார்.

# வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

# அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார்.

# நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர்.

# சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

# இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார்.

# ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.

# அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.

# ‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

விகடன் குழுமம் எஸ். பாலசுப்ரமணியன் நினைவு தினம் டிசம்பர் 19, 2014 .

 விகடன் குழுமம் எஸ். பாலசுப்ரமணியன் நினைவு தினம் டிசம்பர் 19, 2014 .

எஸ் எஸ் பாலன் என அறியப்படும் எஸ். பாலசுப்ரமணியன் (S. Balasubramanyan, டிசம்பர் 28, 1936 - டிசம்பர் 19, 2014) திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், விகடன் குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.

ஜெமினி ஸ்டுடியோஸ், விகடன் குழுமம் ஆகியவற்றின் நிறுவனர் எஸ். எஸ். வாசனின் மகனான இவர் சென்னையில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெமினி, விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்

தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும்.

பத்திரிகைத் துறை பங்களிப்புகள்

1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

குடும்பம்

இவருக்கு ஆறு பெண்களும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இவரின் மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.

மறைவு
19 டிசம்பர் 2014 அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.

பேராசிரியர் க.அன்பழகன்  பிறந்த நாள் டிசம்பர் 19 .

பேராசிரியர் க.அன்பழகன்  பிறந்த நாள் டிசம்பர் 19 .

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இளமைப் பருவம்

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19-12-1922 அன்று மகனாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பொது வாழ்க்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா. அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.

”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.
எழுத்துப் பணி

எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய பேசும் கலை வளர்ப்போம்,(பிரபல வாரப்பத்திரிகையில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தொடர் கட்டுரையாக வெளி வந்த்து), தமிழர் திருமணமும் இனமானமும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

பிற நூல்கள்;

    உரிமை வாழுது
    தமிழ்க்கடல்
    அலை ஓசை
    விடுதலைக் கவிஞர்
    தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
    இன-மொழி வாழ்வுரிமைப் போர்
    தமிழினக்காவலர் கலைஞர்
    நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
    தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
    விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

வியாழன், 15 டிசம்பர், 2016

ஓய்வூதியர் நாள் டிசம்பர் 17 .

ஓய்வூதியர் நாள் டிசம்பர் 17 .


ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களை பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசமபர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

புதன், 14 டிசம்பர், 2016

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

பன்னாட்டுத் தேயிலை நாள்
( International Tea Day ) 2005 ஆம் ஆண்டு
முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15
ஆம் நாள் தேயிலை உற்பத்தி
செய்யப்படும் வங்காளதேசம் ,
இலங்கை , நேபாளம் , வியட்நாம் ,
இந்தோனேசியா, கென்யா,
மலாவி, மலேசியா , உகாண்டா ,
இந்தியா , மற்றும் தன்சானியா
உட்படப் பல நாடுகளில் நினைவு
கூரப்பட்டு வருகிறது.
தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்கள், தேயிலை
உற்பத்தி செய்வோர், மற்றும்
தேயிலையைப்
பயன்படுத்துபவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை
அரசாங்கக்களுக்கும்,
குடிமக்களுக்கும் கொண்டு
செல்வதே இந்நாளின் முக்கிய
நோக்கம் ஆகும். முதலாவது
பன்னாட்டுத் தேயிலை நாள் 2005
டிசம்பர் 15 இல் புது தில்லி
நடைபெற்றது. இரண்டாவது
பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15
இல் இலங்கையில் கண்டி நகரில்
நடைபெற்றது. [3] பன்னாட்டுத்
தேயிலை நாள் கொண்டாட்டங்கள்
ஊடாக நடைபெறும் பன்னாட்டு
மாநாடுகள் தேயிலைத்
தொழிற்சங்க இயக்கங்கள்
முன்னெடுக்கின்றன.
பின்னணி
2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின்
அரசு சார்பற்ற அமைப்புகள்,
மற்றும் தொழிற்சங்கங்கள்
இணைந்து உலக சமூக மாமன்ற
மாநாட்டை பிரேசிலில் நடத்தின.
இதன் விளைவாக 2003 இல் உலக
சமூக மாமன்றத்தின் ஆசிய
மாநாடு இந்தியாவில்
ஐதராபாது நகரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கை,
இந்தியத் தேயிலைத் தோட்டத்
தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து
கொண்டனர். இதன் போது, 2004 ஆம்
ஆண்டு மும்பை மாநாட்டில்
தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்கள் பிரச்சினை
தொடர்பாக தனியான மாநாடு
ஒன்று நடத்துவது என்று
முடிவெடுக்கப்பட்டது. 2004
மும்பை மாநாட்டில் பன்னாட்டுத்
தேயிலைத் தொழிலாளர்களின்
பிரச்சினை ஏனைய
தொழிற்துறை சார்ந்த
தொழிலாளர்களின்
பிரச்சினைகளில் இருந்து
வேறுபட்டது என அடையாளம்
காணப்பட்டது. இவர்களது
பிரச்சினைகளை வெளிப்படுத்த
தனித்துவமான தினத்தின்
அவசியம் குறித்து உடன்பாடு
எட்டப்பட்டது. பிரித்தானியாவின்
முதலாவது இந்திய அசாம்
தேயிலைத் தோட்டத்தில் சீன
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838
டிசம்பர் 15 இல் மேற்கொண்ட
முதலாவது சம்பளப்
போராட்டத்தின் நினைவாக
ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல்
இந்நாளைக் கொண்டாடுவதென
2005 ஆம் ஆண்டில் பிரேசிலில்
நடந்த மாநாட்டில் முடிவு
செய்யப்பட்டது.
************************************
இன்று உலகில் தண்ணீருக்கு
அடுத்த படியாக உலக
மக்களால் அதிக அளவில்
அருந்தப்படும் பானமாக தேநீர்
உள்ளது. தேயிலையை சர்வ
நோய் நிவாரணி பானமாக
உலக சுகாதார நிறுவனம்
அறிவித்தமையினால் இன்று
உலகின் அனைத்து
நாடுகளும் தேநீரைப்
பருகும்படி தம்நாட்டு
மக்களை ஊக்குவித்து
வருகின்றன.
எனவே தேயிலை
உற்பத்தியின் தேவை
மக்கள்தொகை
அதிகரிப்பிற்கேற்ப
அதிகரித்துச் செல்லவேண்டிய
தேவை உள்ளது. எனவே,
தேயிலை உற்பத்திற்கான
சூழலைக் கொண்டுள்ள
நாடுகள் தேயிலை
உற்பத்தியில் ஈடுபட்டு
வருகின்றன.
அறுபதுகளுக்கு முன்பதாக
சீனா, இந்தியா மற்றும்
இலங்கை உள்ளிட்ட சில
நாடுகளே தேயி-லையை
உற்பத்தி செய்து வந்தன.
ஆனால் இன்று உலகின் 58
நாடுகள் தேயிலை
உற்பத்தியில் ஈடுபட்டு
வருகின்றன.
சர்வதேச தேயிலை
தொழிலாளர் மாநாடு
ஒன்றின் தொடர்ச்சியாக 2005
ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
பிரேஸிலின் போர்டே
அல்க்கிரியில் உலக சமூக
மாமன்ற கூடுதல் நிகழ்வு
நடந்தது. இந்த நிகழ்வில்
ஆங்கிலேயரின் ஆட்சியில்
முதலாவது இந்திய அஸாம்
தேயிலைத் தோட்டத்தில் சீன
நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத்
தொழிலாளர்கள் 1838
டிசம்பரில் நடத்திய
முதலாவது சம்பளப்
போராட்டத்தினை நினைவு
கூறும் விதமாக சர்வதேச
தேயிலைத் தினமாக டிசம்பர்
15 ஆம் திகதியை
அறிவிக்கலாம் என்று
முடிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக
முதலாவது சர்வதேச
தேயிலை தின மாநாடு
புதுதில்லியில் 2005 டிசம்பர்
15 அன்று நடந்தேறியது.