திங்கள், 20 மார்ச், 2017

உலக காடுகள் தினம் மார்ச் 21.




உலக காடுகள் தினம் 

பன்னாட்டு வன நாள் ( International Day of Forests ) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்யவதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012 ,
நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறது.

பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.
வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. ஆனால் தற்போது பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய திட்டமிட்டுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.



உலக மக்கள் தொகை அதிகரித்து , பிற உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது.
இந்தியாவில் வனப்பரப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 400 ச.கி.மீ. இது மொத்த நிலப்பரப்பில் 19.32 சதவீதம். 1951 முதல் 1980 வரை அணைகள் மற்றும் பாசனத்திற்காக 5 லட்சம் எக்டேர் வனம் அழிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 0.6 சதவீத காடுகள் அழிக்கப்படுகின்றன. ஜப்பான் போன்ற தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த சிறிய நாடுகள் கூட, 60 சதவீத காடுகளை கட்டிக்காத்து வருகின்றன. இஸ்ரேலில் 1948 ல் 250 மி.மீ., இருந்த சராசரி மழையளவு, தற்போது 900 மி.மீ., அதிகரித்துள்ளது.பூமி சூட்டைத்தணித்து, வாயுமண்டலத்தை சுத்தப்படுத்துபவை மரங்களே. நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, நாம் சுவாசிக்க பிராண வாயுவை கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மரங்களை நட்டு வளர்த்த மன்னர்கள், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் பாதுகாப்பு கவசமாக திகழும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால், சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாக, நீண்டகாலம் பிடிக்காது.
மனிதன் இம்மண்ணில் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை தாவரம், பறவை, விலங்கினங்களுக்கும் உண்டு. மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும், உலகம் பொதுவானது. சுத்தமான பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியுமா? என சவால் எழுந்துள்ளது.
இன்று ( மார்ச் 21) உலக வனநாள். வனங்களை பாதுகாப்பது பற்றி வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:ராஜசேகரன், மதுரை வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர்: மன்னராட்சியில் மரங்களை வெட்டியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தேக்குமரங்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நம் வனங்களில் யூகாலிப்டஸ், தேயிலை நட்டனர். அனைத்து நதிகளும் உற்பத்தியாவது வனங்களில்தான். அதன் மதிப்பை நாம் உணரவில்லை.ஜப்பான் வனங்களை பாதுகாத்து, இந்தியா, தாய்லாந்திலிருந்து மரங்களை இறக்குமதி செய்கிறது. பசுமை போர்வையை அதிகரிக்க ஒரே வழி தனியார், புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், கல்வி நிறுவனங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்ப்பதுதான்.
டாக்டர் ராஜ்குமார், இயக்குனர், வனம் அறக்கட்டளை, தேனி: வனங்களில் மூங்கில் மரங்களின் உராய்வால், தீப்பற்றுவதாக கூறுவது தவறு. மனிதர்களால்தான் 100 சதவீதம் தீ விபத்து ஏற்படுகிறது. ஆடு, மாடு மேய்ச்சலுக்காக புல் மீது தீ வைக்கின்றனர். மழை பெய்ததும், சாம்பலிலிருந்து பசும்புற்கள் முளைக்கின்றன. வனத்தீயை அணைப்பது சாதாரண விஷயமல்ல.மக்கள் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனவளத்தை கண்டறிய ஆராய்சி செய்ய வேண்டும். மதுரை உட்பட 5 மாவட்டங்களின் 90 லட்சம் பேருக்கு குடிநீராதாரம் வைகை. முன்பு ஆண்டுக்கு 10 மாதம் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்தது. நீராதாரமாக இருந்தது வனப்பகுதியே. தற்போது, ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே தண்ணீர் செல்கிறது. வனவளத்தை காப்பாற்றினால் மட்டுமே, வைகையை ஆற்றை காப்பாற்ற முடியும். வைகையை காக்க, மேகமலையை வன உயிரின கோட்டமாக அரசு அறிவித்துள்ளது.
சுப்பிரமணியராஜா, செயலாளர், வன உயிரின பாதுகாப்பு அமைப்பு,
ராஜபாளையம்: காவல்துறை போல், வனத்துறைக்கு கூடுதல் அதிகாரம் தேவை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வனங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதை குறைக்க வேண்டும். மலையிலிருந்து வடியும் மழை நீரை உள்வாங்குவது தரைக்காடுகள். தரைக்காடுகள், மலை புல்வெளி மற்றும் சோலைக்காடுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியும். அடுத்து குடிநீருக்கான போர் ஏற்பட வாய்ப்புள்ளது. வனப்பகுதி அருகே வனப்பாதுகாவலர் அலுவலகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
காடு... அதை நாடு...-உலக காடுகள் தினம்-:காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1971ம் ஆண்டு, இத்தினம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகின் நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதற்கு முன் இது 50 சதவீதமாக இருந்தது. பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் கடுமையானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்மைகள் பலவிதம்: காடுகள் என்பது வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதல்ல. இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்) ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. இதைத் தவிர வீடுகளிலும், பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தப்பித்துக் கொள்ள மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்ப வெட்ப நிலை, சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
நமது கடமை: இன்றைய சூழலில் மரங்களை பார்ப்பது அரிதாகி விட்டது. சாலை, ரயில் பணிகளுக்காக அரசு, ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டித் தள்ளுகிறது. இதைத்தவிர வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதின் மூலம் பல மரங்கள் எரிந்து விடுகின்றன. மக்களும் வருமானம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு விளை நிலங்களை, குடியிருப்பு பகுதிகளாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பநிலை, பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
ஒன்றுக்கு பத்து: உலக வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, அதற்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. அப்படியிருந்தும் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்ன செய்வது: பல வழிகளிலும் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, அதன் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். புதிதாக காடுகள் வளர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு மரம் வளர்ப்பது அவசியம். இவ்வாறு அனைவரது வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரித்தால், பூமிக்கு தேவையான அளவில் காடுகள் நிலைப்பெறும். இதற்கு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய பொருளாதாரம், விவசாயத்தை பெருமளவில் சார்ந்துள்ளது. எனவே காடுகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

உலகக் கவிதைகள் தினம் மார்ச் 21 .


உலகக் கவிதைகள் தினம் மார்ச் 21 .

உலகக் கவிதைகள் தினம் எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

ஞாயிறு, 19 மார்ச், 2017

சௌதார் குளம் புரட்சி நினைவு தினம் மார்ச் 20. 1927...



சௌதார் குளம் புரட்சி நினைவு தினம் மார்ச் 20. 1927...

மாடுகுடிக்கும்இடத்தில்,மனிதர்கள்
(தீண்டத்தகாதவர்கள்) தண்ணீர் பருகுவதை தடுத்துவந்த ,சனாதான சாதி இந்துக்களின் ,மனிதநேயமற்ற ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த, மாமனிதர் பாபாசாஹேப் புரட்சியாளர் அம்பேத்கர்  அவர்களின் முதல் மனித உரிமை போர் பிரகிடமான மஹாட் (சவுதார்குளம்) சத்தியாகிரகம் நடந்தேறிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று...(20,March,1927)

ஜெய்பீம்  என்று முழங்கு

 பாபாசாகேப் வழியில் நடக்க துவங்கு ....

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20.






உலக மகிழ்ச்சி தினம் மார்ச்  20.


இன்பம் எம்முள்ளே இருக்க அதைத் தொலைத்து விட்டு வெளியே தேடுவோர் அநேகமானோர் இக்காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
துன்பம் எம்மை கட்டாயம் அநுபவித்து கஸ்டப்படவேண்டும் என்று அதுவாக வருவதில்லை. நாமாகத்தான் அதை அநுபவித்து முடிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். 20-3-14 ஆகிய இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் எனக் கூறப்படுகிறது.
பரபரப்பான இவ்வுலகில் கல்விக்கும், தொழிலுக்கும் பணத்திற்கும், மருந்துக்கும் என்று அதனைப் பெற்றுக்கொள்ள பறவையை விட வேகமாக பறந்தடித்துக் கொண்டு ஆணும் பெண்ணும் அல்லல் உறுகின்றனர். ஒருகணம் நாம் எவ்வளவுக்கு சந்தோசமாக இருக்கிறோம், என்று நினத்துப்பார்ப்பதில்லை. இன்றைய நாளிலாவது
மகிழ்ச்சியாக இருப்போம் என எண்ணம் கொண்டு விட்டால் எமது வாழ்வில் இனிமைப்பூ பூக்கத்தொடங்கி விடும்.
பாரதியார் கவிதைகளில் அம்மாக்கண்ணு பாட்டு பாரதி பாடியிருப்பதே அலாதிதான். அதில் இனிமையாக மகிழ்வு எங்கு உள்ளது என்று கூறுவது வித்தியாசமாக இருக்கிறது. பாடிப்பாருங்கள்,
“பூட்டைத் திறப்பது, கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத்திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
ஏட்டைத்துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டைபிடிப்பது சொல்லாலே
காற்றை யடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே
சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே”
எவ்வளவு அழகாக இன்பவீட்டை திறப்பது பெண் என்று கூறுவதில் இருந்து அன்புக் கோட்டையையே இனிய சொல்லால் பிடித்து விடலாம் என்கிறார். அதுதான் பெண்ணால் இன்ப வீடும் சொல்லால் அன்புக்கோட்டையும் பிடிக்க முடியுமாதலால்தான் தாய்மொழி என்றனரோ என எண்ணத்தோன்றுகிறது. அதோடு இன்னுமொன்றையும் கூறி எம்மைச் சிந்திக்க செய்கிறார், கடமை அறிவோம் என்று பாடுகிறார்.
“கடமை புரிவாரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்,
கடமை யறியோம் தொழிலறியோம் கட்டென்பதனை வெட்டெபோம்
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத்திங்கு களியுற்றென்றும் வாழ்குவமே”
தெரிந்த கடமையை தவறாது நாம் செய்து கொண்டே அதன்வழி இன்புற வேண்டும். அதற்கு மனதில் உறுதி வேண்டும் அத்தோடு வாக்கினிலே இனிமை வேண்டும். இனிமையாக எல்லோருடனும் பேசவேண்டும். நினைவு நல்லதாக இருந்து தேடும் பொருளும் நமக்கு கிடைக்கவேண்டும்.



கானும் கனவு உடனே நிறைவேறி இப்பூமி பெருமையடையும் வண்ணம் தனமும் இன்பமும் வேண்டும்.,அதற்கு இன்பத்தை நிலையாக பெற செய்யும் காரியங்கள் உறுதியாக கண்திறந்து உண்மையான உழைப்பில் இந்த மண் பயனுற விருப்பமோடு நற்செயல்கள் செய்யவேண்டும்.
சென்றது மீளாது என்று புத்தியில் படும்படி பாடி மகிழ்வாய் இருக்க வழிசொல்கிறார்.
“சென்றதினி மீளாது, மூடரே எப்போதும் சென்றதையே சிந்தனை செய்துகொன்றொழிக்கும்
கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக்குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர் எண்னமதைத் திண்னமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் அழிந்து போம்.
திரும்பி வாரா”
இப்படி தேற்றுகிறார். பாரதி இப்படி பாடி இருக்க நாம் துன்பத்தில் தோற்று விடுவோமா என்ன? இன்பத்தில்தானே வெற்றி பெறுவோம். கண்களுக்கு பார்வைபோல், செவிக்கு கேட்பது போல் வாய்க்கு உண்பதுபோல் மூக்குக்கு சுவாசம் போல் நாம் அனைவரும் இன்பத்தை சுத்தமான காற்றாய் உள்ளிளித்து துன்பத்தை அசுத்தமான காற்றாய் வெளியேற்றுவோம்.

உலகசிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.




உலகசிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.


உலக சிட்டுக்குருவிகள் நாள் ( World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும்
மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள்
2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான
உயிரியற் பல்வகைமை ( biodiversity ) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" ( We will save our House Sparrows ) என்பதாகும்.
அழியும் குருவிகள்
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை
1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால்,
காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு , குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.



‘சி ட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன.
தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
காடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் இனம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதற்கு, நம்முடைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் தான் காரணம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.
சிட்டுக்குருவிக்கு இன்று பலர் அடைக்கலம் கொடுத்து அந்த இனத்தை காப்பாற்றி வருவதால், ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் நம் கண்ணில் தென்படுகின்றன.
உருவத்தில் சிறியதாகக் காணப்படும் சிட்டுக்குருவி மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. இருப்பினும், அவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். சிட்டுக்குருவிகளில் ஆண், பெண் என்பதை ரோமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவிகள் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சிட்டுக்குருவிகளை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கின்றனர். யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம் கொண்டது இந்த சிட்டுக்குருவி இனம்.
அதே நேரத்தில், எதிர்களிடமிருந்து எந்த நேரத்திலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும். உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு, கீச்சு என்று கத்தும் மெல்லிய இசை, மென்மையான உடலைமைப்பு கொண்ட இவைகளை பிடிக்காதவர்கள் யாருமில்லை. இவைகள் 27 கிராம் முதல் 39 கிராம் வரை எடை உடையது. 8 செ.மீ முதல் 24 செ.மீ வரை நீளமுடையது. சுமார் 13 ஆண்டுகள் வாழக் கூடியது. மூன்று முதல் 5 மூட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.
முன்பெல்லாம் ஓலை, குடிசை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு மாட்டுத் தொழுவமும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இவைகள் தான் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக திகழ்ந்தன. ஆனால் இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், காற்று உட்புகாத அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்களாகவே நகரமும், கிராமும் காணப்படுகின்றன. இதனால், சிட்டுக்குருவியின் இருப்பிடம் அழிக்கப்பட்டு விட்டன. அடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதீர்வீச்சு சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. அடுத்து, ரசாயண உணவுகளை உட்கொள்வதாலும் இந்த இனம் அழிவதாக சொல்கிறார்கள்.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு 90 சதவீத சிட்டுக்குருவிகளை அழித்துவிட்ட பெருமை மனித இனத்தையே சேரும்.
எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவைகள். கொசு முட்டைகளை விரும்பித் திண்ணும் சிட்டுக்குருவிகள் அழிந்தால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். சிட்டுக்குருவிகள் கொண்டக்கடலை மாவு, திணை, கோதுமை, பச்சரிசி, பருப்பு, சாமை ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுமாம். பூச்சி, புழுவையும் இவைகள் விட்டுவைப்பதில்லை. ஆனால், இன்று இத்தகைய உணவுகள் மனிதனுக்கே கிடைக்காதபட்சத்தில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி கிடைக்கும்? இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களிடையே சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் என்று அறிவித்து அதை கடைப்பிடித்து வருகிறது. இதன்பிறகு ஓரளவு மக்கள் மத்தியில் சிட்டுக்குருவி பாதுகாப்பு எண்ணம் தோன்றி இருக்கிறது. அதோடுவிடாமல், மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்து மத்திய அரசு அசத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிட்டுக்குருவிக்கு இப்போது கூடுதல் மவுசு.
கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே அதிகமாக சிட்டுக்குருவிகளை இப்போது காண முடிகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு, இல்லை..இல்லை கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் அதில் தோட்டம் அமைத்து பயிரிட வேண்டும். சிட்டுக்குருவி வாழ வாழ்விடத்தை அதில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் வீட்டின் மொட்டை மாடிகளில் தானியங்கள் தூவுவதோடு குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும். வைக்கோல், புற்கள் வைத்தால் குருவிகள் கூடு கட்ட அவைகள் பயன்படும் என்று பட்டியலிடுகின்றனர் பறவை ஆர்வலர்கள்.
நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்… கீச்… குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.
சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு அதற்கான உணவு தானியங்களை வழங்கி வரும் ‘ட்ரி பேங்க்’ நிறுவனம் முல்லைவனம் கூறுகையில், “சிட்டுக்குருவிகள் இருந்தால் அந்தப்பகுதி சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ தானியத்துடன் கூடிய பாக்ஸ் வழங்கினோம். இந்த ஆண்டும் தானியம் அடங்கிய பாக்ஸை கொடுத்துள்ளோம். அந்த பாக்ஸில் 2 மாதங்களுக்கு தேவையான கோதுமை, பச்சரிசி, சாமை, திணை, கொண்டைக்கடலை உள்ளிட்டவைகளை அரைத்து கொடுக்கிறோம்.
சென்னையில் இன்றும் வில்லிவாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், ராமாவரம், குன்றத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வீடுகள் சிட்டுக்குருவி வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கின்றன. அவைகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அவைகளை காப்பாற்றவே இந்த தானிய பாக்ஸை வழங்கியுள்ளோம். சிட்டுக்குருவியின் கீச், கீச் என்ற சத்ததை கேட்பதை இனிமை” என்றார்.
நன்றி: விகடன்

சனி, 18 மார்ச், 2017

உலக தண்ணீர் தினம் மார்ச்.22.


உலக தண்ணீர் தினம்  மார்ச்.22.



உலக நீர் நாள் ( World Day for Water அல்லது
World Water Day ), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும்
மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 , ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி "பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்" எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
நீர்த் திட்டம் குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக மட்டத்தில் நீர் வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐநா நிறுவனத்தின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள்
யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" ( Water and Culture ) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
2007 இல், "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ( 'Coping with Water Scarcity' ) என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கருப்பொருள்கள்

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.
2006 - நீரும் பண்பாடும்
2007 - தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்
2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு
2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்
2010 - தரமான நீர்
2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்
2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு
2013 - நீர் நிறுவனம்
2014 - நீரும் ஆற்றலும்
2015 - நீரும், நிலையான மேம்பாடும்
2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள்

நோக்கம்

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.



உலக தண்ணீர் தினம்  மார்ச்.22.

அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.
கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.
நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.



செவ்வாய், 14 மார்ச், 2017

உலக "பை தினம்" மார்ச் 14.



உலக "பை தினம்" மார்ச்  14.

இன்று உலக "பை தினம்"....பெண்கள் தினம் தெரியும்,காதலர் தினம் தெரியும் அதென்ன "பை தினம்" என்று கேட்கிறீர்களா?
பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது.
3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது.
பை நாள்:
"பை நாள்" மற்றும் "பை எண்ணளவு நாள்" என்பன 'π' என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும்.
மாறிலியின் மதிப்பு:
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது எண்ணளவாக பையையும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).
ஐரோப்பாவில் ஜூலை 22:
பை எண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் (பையின் பரவலாக அறிந்த பின்ன எண்ணளவு 22/7 ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது.
கலிபோர்னியாவில் முதல் பை நாள்:
பை நாள் முதன்முறையாக 1988 இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப சாலையான எக்ஸ்புளோடோரியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் அத்தொழில்நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.
பை இனிப்புடன் முடிந்தது:
அணிவகுப்பின் முடிவில் பை (Pye)எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது.

திங்கள், 13 மார்ச், 2017

உலக நுகர்வோர் உரிமைகள் நாள் மார்ச் 15 .


உலக நுகர்வோர் உரிமைகள் நாள் மார்ச் 15 .

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

வரலாறு
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அவ்வுரை உலக அளவில் பாரிய அலைகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுட்டிக்கப்படுகின்றது.

புதன், 8 மார்ச், 2017

தமிழ்த் தேசியவாதி பழ. நெடுமாறன் பிறந்த நாள் மார்ச் 10 ,1933,



தமிழ்த் தேசியவாதி பழ. நெடுமாறன் பிறந்த நாள்  மார்ச் 10 ,1933,

பழ. நெடுமாறன் (10 மார்ச் 1933, மதுரை தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். அதனால் இந்திரா காந்தி அவர்களால் “என் மகன்“ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்]. காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் காங்கிரசை விட்டு கருத்து வேறுபாடுகளால் வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு
குடும்பம்
1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி, பழ. நெடுமாறன், கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.

1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார்.

கல்வி
மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது வாழ்க்கை
மாணவர் இயக்கம்
பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எசு.டி.சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 பணம் திரட்டி அளித்தார்.

அரசியல் ஈடுபாடு
1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி
1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்
1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்
1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்
1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்
உலகத் தமிழர் தொண்டு[தொகு]
1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை.
2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்.

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு

1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்  மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவிக் கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

தமிழ்த் தேசியத் தொண்டுகள்

1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.
1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.
1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.
2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.
2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும், இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்.

சிறை

மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.
1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
2002ஆம் ஆண்டு பொடாவில் கைது செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
பிணையில் வெளியே வந்த பிறகு 18 மாதங்கள் இவருக்கு பொது இடங்களிலும் ஊடகங்களிலும் பேசுவதற்கு தடை இடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டது.
இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது.

இதழியல் பணி

1960 - தமிழ்நாடு நாளிதழ் துணை ஆசிரியர்
1962 - குறிஞ்சி வார இதழ், செய்தி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.
உண்ணாநிலைப் போராட்டம்[தொகு]
முதன்மைக் கட்டுரை: பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்


அரசியல் நூல்கள்
நேதாஜி எங்கே?
பெங்களுர் முதல் டில்லி வரை
காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள்
நீதி கேட்கிறோம்?
சட்டமன்றத்தில் நமது குரல்
தேர்தல் தந்த திருப்பம்
மத்திய - மாநில உறவு - சில குறிப்புகள்
மதுரை முதல் மாஸ்கோ வரை
தமிழர் தன்னுரிமை முழக்கம்
தமிழன் இழந்த மண்
தமிழகம் - நதிநீர் பிரச்னைகள்
தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்
Why a new Constituent Assembly?
புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக
தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்
பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்
தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு
தடா முதல் பொடா வரை
உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்
மூன்றாவது அணி- மக்கள் தயார்! கட்சிகள் தயாரா?

ஈழத் தமிழர் சிக்கல்

இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்
Srilanka Tamils Problem - A Shocking Revelation
பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும்
Palestine Liberation Struggle & Tamil Eelam Liberation Struggle
பாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்
தில்லியின் துரோகக் கொள்கை
ஈழப் போர்முனையில் புலிகளுடன்
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
காவிய நாயகன் கிட்டு
தமிழீழம் சிவக்கிறது
தங்கவங்கமும் தமிழீழமும்
Tamil Eelam and Golden Bengal
காகிதப் புலி கருணா
இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்
நெடுங்கதைகள்[தொகு]
தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)
சோழ குல வல்லி
அருவிக்கரை அழகி
முல்லை வனத்து மோகினி
சந்தன முல்லை
இலக்கியம் - வரலாறு[தொகு]
தமிழ் வளர்த்த மதுரை
தமிழ் உயர் தனிச் செம்மொழி
எழுக உலகத் தமிழினம்
தமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள்
தமிழரும் கீதையும்
கவியரசர் என் காவலர்
பழந்தமிழர் பரவிய நாடுகள்

தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் மார்ச் 10, 1933



தமிழ்த்தேசியத்தந்தை  பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் மார்ச் 10, 1933 .

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ்தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.

வாழ்க்கை
பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.

கல்வி[தொகு]
பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

தென்மொழி இதழும் எழுத்துப் பணியும்

அவரது வீட்டில் இயல்பு நிலையில்..
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.

பெருஞ்சித்திரனாரின் அரசியல்
பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.

பெருஞ்சித்திரனாரின் குடும்பம்
பெருஞ்சித்திரனார் அவர்களின் குடும்பம் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத குடும்பமாக திகழ்கிறது. முதுபெரும்புலவர்.இறைக்குருவனார், தமிழ்மொழியின் தொன்மையை ஆய்ந்து உலகுக்குணர்த்திய சொல்லாய்வறிஞர்.ப.அருளியார், தமிழ்வழிப்பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய திருவாட்டி.இறை.பொற்கொடி, பகுத்தறிவுக் குமுகாயம் ஆக்கம் செய்யும் பெண்ணியப்போராளி தழல்.தேன்மொழி, பேராசிரியர்.மா.பூங்குன்றன், முனைவர்.கி.குணத்தொகையன், அறிஞர்.ஆறிறைவன், தமிழ்த்தேசியப்போராளி மா.பொழிலன், வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி, வரலாற்றறிஞர் தெள்ளியன் உள்ளிட்ட குடும்பமே இனத்தையும் மொழியையும் வழிநடத்துகின்றது. தென்மொழி, தழல், தமிழ்நிலம், மாணவர்களம் என்ற இதழ்களும் பல்வேறு இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகளும் இக்குடும்பத்தால் நடைபோடுகிறது.

நூல்கள்
அறுபருவத் திருக்கூத்து
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
இட்ட சாவம் முட்டியது
இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
கழுதை அழுத கதை
கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
கொய்யாக் கனி (பாவியம்)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு
செயலும் செயல்திறனும்
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தன்னுணர்வு
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
நமக்குள் நாம்....
நூறாசிரியம்
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
அருளி
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை
கவிதைக்கீற்றுகள்[தொகு]
பெருஞ்சித்திரனாரின் சில கவிதைக்கீற்றுகள் கீழே தரப்படுகின்றன.

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!

சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!

அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!
                                                             - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

செவ்வாய், 7 மார்ச், 2017

மகளிர் தினம் மார்ச் 08.



மகளிர் தினம் மார்ச் 08.

அனைத்துலக பெண்கள் நாள் ( International Women's Day ) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
வரலாறு
டாக்காவில் மார்ச் 8 பெண்கள் நாள் ஊர்வலம்
1975 இல் சிட்னியில்
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள்
1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த
மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்க பெண்கள் புரட்சி
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.  1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
பெப்ரவரி 28 , 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.
ரஷ்யாவில் பெண்கள் எழுச்சி
1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
ஐநா பேரறிவிப்பு
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

***********************************************************************************

பெண்கள் தினத்தை அல்ல... பெண்களை கொண்டாடுவோம்...

ஒவ்வொரு வருடமும் பெண்கள் தினத்தன்று, குறைந்தது மூன்று நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறேன். காலையில் ஒரு கல்வி நிறுவனம், பிற்பகல் ஒரு கல்வி நிறுவனம், மாலையில் ஏதேனும் ஒரு பெண்கள் அமைப்பு என மிக மகிழ்வோடு,மேடையில் பெண்ணின் பெருமைகள் குறித்து, மிகுந்த ஆர்வமுடன் பேசுவேன். ஆனால் இந்த வருடம், தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன் கொடுமைகளும், மூன்று வயது பெண்
குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் வாழ்கிற பதற்றமும், என்ன பெரியபெண்கள் தினம் என மிகுந்த அயர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.
கொண்டாட்டங்கள்
வருடத்தில் ஒருநாள், பெண்கள் தினம் அன்று மட்டும், பெண்களைத் தாயாக மதிப்போம், பெண்களைப் போற்றுவோம் என கோஷம் போட்டு விட்டு, மற்ற நாட்களில் எல்லாம் பெண்கள் மீது வன்முறையைச் செலுத்துவது என்றாகி விட்ட சூழலில், பெண்கள் தினம் என்பதே ஒரு சம்பிரதாயத்திற்காகத் தான் கடைபிடிக்கப்படுகிறதோ என தோன்றுகிறது.பெண்கள் தினத்தை, பெரும்பாலான நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் சமையல் போட்டி, கோலப் போட்டி, கூந்தல்
அலங்கார போட்டி நடத்தித் தான் கொண்டாடுகின்றன.
கசக்கும் உண்மைகள்
நான்கு மாதங்களுக்கு முன், எங்களுக்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்தான். முதல் குழந்தை பெண். பயணங்களில், உணவகங்களில், திரையரங்குகளில் நிறைசூலிக்கான கரிசனத்தோடு என்னிடம் பேசிய பெண்கள் எல்லோருமே, இது ஆண் குழந்தை தான் என்றே அசரீரி சொன்னார்கள். பிரசவ அறைக்கு என்னைத் தயார்
படுத்திய பணிப்பெண், "கவலைப்படாதம்மா...ஆம்பள புள்ளயாவே பொறக்கும்" என்றார். எனக்கென்னம்மா கவலை... ஏற்கனவே பொண்ணு இருக்குறதால, இது பையனா இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, அதுக்காக பையன் தான் வேணும்னு நினைக்கல, பொண்ணா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்" என்ற என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
"நீ மட்டும் தாம்மா இப்படி சொல்ற, ரெண்டாவது பொண்ணா பொறந்தா, பெத்தவங்க அந்த குழந்தை முகத்தைக்கூட பாக்க வரமாட்டாங்க என வருத்தப்பட்டார்.ஆபரேஷன் தியேட்டரில், நான் மயக்கத்திலிருந்த போதும், ஒரு செவிலிப் பெண், என் உறவினர்களிடம் இதையே கூறி இருக்கிறார். "இரண்டாவது பெண் குழந்தையா இருந்தா, குழந்தையை வாங்கவே மாட்டாங்க" என.
கருக்கலைப்பு
ஏறக்குறைய எல்லா மருத்துவமனைகளிலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்கிற அறிவிப்பு பலகை இருக்கிறது. கள்ளிப் பாலின் நவீன வடிவம் தான் கருக்கலைப்பு. என்றைக்கு மருத்துவமனைகளில், இந்த
அறிவிப்பு பலகை இல்லாமல் போகிறதோ, அன்றைக்கு பெண்கள் தினத்தை இன்னும் அதிக மகிழ்வோடு கொண்டாடலாம்.இந்த மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை நிபுணர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களைப் பார்த்த பிறகும், ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான் கவுரவம் என சில பெண்களே நினைப்பது தான் மிகு துயர்.
அம்மாக்களின் பதற்றம்
பெண் பிள்ளைகளைமகிழ்வோடு பெற்று வளர்க்கும் அம்மாக்களும் கூட, எந்நேரமும் பதற்றத்தில் இருக்கும் படியான சமூக சூழலின் அவலம், பெரும் வலியைத் தருகிறது.என் சிறுவயதில், மாலை நேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பக்கத்து தெருவிற்கு சென்று, அங்குள்ள பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அதற்கும் பக்கத்துத் தெருவிற்கு சென்று, மணிக்கணக்கில் விளையாடி இருக்கிறேன். யார் வீட்டிலும் தேடவே
மாட்டார்கள். எங்க போகப்போறா, வந்துடுவா என்ற நம்பிக்கை அன்று அவர்களுக்கு இருந்தது. அண்ணே, அந்த இருட்டைத் தாண்டி, வீட்டுக்குப் போக பயமாயிருக்குண்ணே, கொண்டு வந்து விடுங்கண்ணே என்ற எங்கள் வேண்டுகோளை ஏற்று, பத்திரமாக வீடு வரை கொண்டு வந்து விட்டுப் போன முன், பின்
அறிமுகமில்லாத அண்ணன்கள் இருந்தார்கள்.இன்று பக்கத்துத் தெருகூட வேண்டாம், நம் வீட்டின் அருகிலேயே, நம் பெண் குழந்தை களை விளையாடவிட பயமாக இருக்கிறது. மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொள்ள விடாமல்,
மகிழ்வாக விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தையை, போதும் வா....என இழுத்துக் கொண்டு போய் கதவை சாத்துவது எவ்வளவு கொடூரம்.
மாறிப்போன காலம்
ஊரில் திருவிழா, கல்யாணம், சாவு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் என் பெற்றோர், சுமதிக்கு பரீட்சை நடக்குது, உங்க வீட்ல இருக்கட்டும் என பக்கத்து வீட்டில் அடைக்கலப் படுத்தி செல்வார்கள். அங்கிள், ஆன்ட்டி வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்நாட்களில்,
பக்கத்து வீட்டு அத்தை, மாமா, என்னை அவர்களின் குழந்தையோடு குழந்தையாகப் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற போது, அவர்களின் குழந்தைகள் எங்கள் வீட்டில் தங்கினார்கள். இன்று அப்படி பெண் குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுச் செல்கிற சூழல் இருக்கிறதா... இல்லை யெனில் பெண் விடுதலை என்பது கேள்விக்குறி தான் இல்லையா...?ஆட்டோ டிரைவர் முதல் ஆசிரியர்கள் வரை, நம் பெண் குழந்தைகளுக்கு யாரால், எப்போது பாலியல் துன்புறுத்தல் நேருமோ என்கிற பயத்தில், என்ன பெரிய பெண்கள் தினம் என்கிற சலிப்பே மிஞ்சுகிறது.ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு என காதலின் பெயரால் இன்னும் எத்தனை பெண்களைத் தான் பலி கொடுக்கப் போகிறோம்..?ஒவ்வொரு முறையும், ஒரு அசம்பாவிதம் நடக்கும் போதும், அது கொஞ்சமேனும் இச்சமூகத்தை உலுக்கி இருந்தால், மனசாட்சியைத் தொட்டிருந்தால், அடுத்தடுத்து குற்றங்கள்
குறைந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான உக்கிரத்துடன் தான் பெண் மீதான கொடூரத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.
'எதிலும் பெண்களே இலக்கு
அரசியல், சினிமா,கலை,இலக்கியம் என பொது தளத்தில் இயங்கும் பெண்களை, கருத்து ரீதியாக எதிர் கொள்ளாமல், வார்த்தைகளால் புற முதுகிட்டு ஓட வைக்கிறார்கள். இங்கே பெண்களைத் திட்டுவதற்கான வார்த்தை கள் ஏராளம். ஆனால், ஒரு ஆணைத் திட்ட வேண்டுமெனில், தனியே வார்த்தைகள் தேவைப்
படுவதில்லை. பெண்களைத் திட்டுகிற வார்த்தையால், அந்த ஆணின் அம்மாவைத் திட்டுகிறார் கள். எப்படியாயினும் அந்த வசவுகளின் இலக்கு ஒரு பெண்ணே.
மாறாத காட்சிகள்
இப்போதெல்லாம் நான் சொற்பொழிவிற்காக செல்கிற, எல்லா மகளிர் கல்லுாரிகளிலும், ஒருவேளை உங்கள் புகைப்படம் தவறாக பயன் படுத்தப் பட்டிருந்தால், அதை செய்தவன் தான், வெட்கப்பட வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல. எந்த தவறும் செய்யாத நான் ஏன் அழ வேண்டும், நான் ஏன் உயிரை விட வேண்டும் என்ற உறுதியோடு வாழ்வை எதிர் கொள்ளுங்கள் என தொடர்ந்து வலியுறுத்திப் பேசி
வருகிறேன்.நாங்கள் பள்ளிக்குச் செல்லும் போது, வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு பாட்டுப் பாடி கேலி செய்வார்கள். அதற்கு பயந்து கொண்டு,இரண்டு கிலோ மீட்டர் சுற்றி தான் பள்ளிக்குப் போவோம். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு என் மாணவி சொல்கிறாள், "தினமும் நான் வர்ற வழியில் பசங்க நின்னு கிண்டல் பண்றாங்கனு நான் வேற வழியில் வர்றேன் மேம்" என. இந்த இருபத்தைந்து வருடங்களில், அதே போல் ஆண்கள் கிண்டல் செய்வதும், அதே போல் பெண்கள் வேறு பாதையில் சுற்றிக் கொண்டு செல்வதும் மாறவே
இல்லையெனில், என்ன வளர்ச்சியடைந்திருக்கிறோம்?, என்ன பெண் விடுதலை பெற்றிருக்கிறோம்?
தைரியம் வளர்ப்போம்
ஆண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவும், அந்த குழந்தையை, பெண்களை மதிப்பவனாக, பெண்ணை இழிவு செய்யாதவனாக, எந்த சூழலிலும் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தராதவனாக, காதல் என்ற பெயரில் பெண்கள் மீது வன்
முறையை கட்டவிழ்ப்பவனாக இல்லாமல் வளர்க்க வேண்டும்.அதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த பெண்கள் தினத்திலாவது, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்திற்கான, நம் கடமையை உறுதி மொழியாக ஏற்போம்.
கவிக்கோ அப்துல் ரகுமான், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட்டு விட்டு, குழந்தைகளைக் கொண்டாடுங்கள் என்று சொன்னது போல், பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதை விட, பெண்களைக் கொண்டாடுவது தான் முக்கியம்.
-சுமதிஸ்ரீசொற்பொழிவாளர்sumathi.ben@gmail.com
நன்றி விக்கிபீடியா.தினமலர்.

புதன், 1 மார்ச், 2017

'சொல்லின் செல்வர்' ரா. பி. சேதுப்பிள்ளை  பிறந்த தினம்  மார்ச் 02. (02.03.1896 )



'சொல்லின் செல்வர்' ரா. பி. சேதுப்பிள்ளை  பிறந்த தினம்  மார்ச் 02. (02.03.1896 )
ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.
தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார்.
1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக அமைந்தவை. எனவே அவரது உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும்பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.
சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏபரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1 , 1953.



மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1 , 1953.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1 , 1953 ), (மு. க. ஸ்டாலின்)
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழகத்தின்
துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15 , 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.  இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன். இவரது அண்ணன் மு.க. அழகிரியும் தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப்யர் சூட்டினார் கருணாநிதி .
பள்ளிப்பருவம்
ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை
சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
குடும்ப அரசியல் வாழ்க்கை
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1967 - 1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு
கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.
மாநிலச் செயலாளர்
இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது  . 1980 இல்
திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.
சிறை செல்லல்
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் [
இளைஞரணி தலைமையகம்
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார் .
தேர்தலில் தோல்வி
ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை
ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார் . அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.
மேயர்
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். [3] .
2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு அப்போதைய
முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் [3][5][6] . ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின் [3] .
அமைச்சர்
மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக
முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் [3] .
அரசியல் வளர்ச்சி
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப்

சனி, 25 பிப்ரவரி, 2017

உலக சாரணர் தினம் 22 - 02 - 2017.

உலக சாரணர் தினம்  22 - 02 - 2017.

---------------------
      *பேடன் பவல்*
---------------------

👮 தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய, சாரணர் இயக்கத்தைத் தொடங்கிய *ராபர்ட் பேடன் பவல் பிரபு* 1857ஆம் ஆண்டு பிப்ரவரி-22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


👮 இவர் 1906-ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

👮 இவருடைய பிறந்த நாளையே 1995-ஆம் ஆண்டிலிருந்து, *உலக சாரணர் தினமாக* அனுசரிக்கப்படுகிறது.


👮இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உள்ளது.

👮 சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர், தனது 83-வது வயதில் (1941-ம் ஆண்டு) மறைந்தார்....

வியாழன், 23 பிப்ரவரி, 2017

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா பிறந்த தினம் பிப்ரவரி 24.



புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா பிறந்த தினம் பிப்ரவரி  24.
செ. செயலலிதா என்று அறியப்படும்
கோமளவல்லி செயராம்  (24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016) முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராக பணிபுரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைப்பர்.
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட தமிழ் , தெலுங்கு , கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா)
மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய
வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு
தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்தபோது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமானபின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.
திரையுலகப் பங்களிப்பு
ஜெயலலிதா திரை வரலாறு
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார்.  மேலும் சிவாஜி கணேசன் ,
எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர் ,
முத்துராமன், ரவிசந்திரன் , சிவகுமார் , ஏ. வி. எம். ராஜன் , என். டி. ராமராவ்,
நாகேஸ்வரராவ் , தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அரசியல் பங்களிப்பு
பொதுக்கூட்டம் ஒன்றில்
கருணாநிதி , எம்ஜிஆருடன் ஜெயலலிதா
1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை ) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார். எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து  1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர்
ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27 இல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வர் செயலலிதா ஆவார். 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி. ஆர். குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக செயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார்.
சட்டமன்றப் பொறுப்புகள்
தமிழக முதல்வர்
ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
முதல் வரை தேர்தல் குற
ஜூன் 24, 1991
மே 11, 1996
1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழக 11வது முதல்
மே 14, 2001
செப்டம்பர் 21, 2001
தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார்
இப்பதவ முடக்க
மார்ச் 2, 2002
மே 12, 2006
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழக 14வது முதல்
மே 16, 2011
செப்டம்பர் 27, 2014
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழக 16வது முதல் (இப்பத முடக்க
மே 23, 2015
மே 22, 2016
2015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்
தமிழக 18வது முதல்
மே 23, 2016
டிசம்பர் 5, 2016
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழக 19வது முதல் (இப்பத முடக்க
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.  2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலுருந்து விலகினார். 2002, பிப்பரவரி 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
1. 1989 முதல் 1991வரை .
சட்டமன்ற உறுப்பினர்
ஆண்டு நிலைமை இடம்
1989 வெற்றி போடிநாயக்கனூர்
1991 வெற்றி பர்கூர் , காங்கேயம்
1996 தோல்வி பர்கூர்
2002 வெற்றி ஆண்டிப்பட்டி
2006 வெற்றி ஆண்டிப்பட்டி
2011 வெற்றி ஸ்ரீரங்கம்
2015 வெற்றி டாக்டர்.ராதாகிருஷ் நகர்
2016 வெற்றி டாக்டர்.ராதாகிருஷ் நகர்
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.  ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
2016 தேர்தலில் போட்டி
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில்
டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார் . அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்
மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
சட்டசபை
வருடம் பொதுத்தேர்தல் கிடைத்த வாக்குகள்
வ த
1977 6வது சட்டசபை 5,194,876 131
1980 7வது சட்டசபை 7,303,010 129
1984 8வது சட்டசபை 8,030,809 134
1989 9வது சட்டசபை 148,630 27 /
1991 10வது சட்டசபை 10,940,966 164
1996 11வது சட்டசபை 5,831,383 4
2001 12வது சட்டசபை 8,815,387 132
2006 13வது சட்டசபை 10,768,559 61
2011 14வது சட்டசபை 1,41,49,681 151
2016 15வது சட்டசபை 1,76,17,060 134
இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.
விருதுகளும் சிறப்புகளும்
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு (1972)
சிறப்பு முனைவர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
தங்க மங்கை விருது - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
புனைப் பெயர்கள்
'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி
அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்பட்டார்.
வழக்குகள்
ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்:
வண்ணத் தொலைக்காட்சி வழக்கு
ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
டான்சி நில வழக்கு
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர்
ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன  , இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.
நிலக்கரி இறக்குமதி வழக்கு
தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும்
இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு
அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பிறந்த நாள் பரிசு வழக்கு
1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ .யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு
முதன்மை கட்டுரை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில
ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
வருமானவரிக் கணக்கு வழக்கு
முதன்மை கட்டுரை: ஜெயலலிதா வருமானவரி வழக்கு
வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது. அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்
முதன்மை கட்டுரை: ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016
2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
மறைவு
நினைவிடம்
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள
அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய சனாதிபதி
பிரணப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை 6.10 மணிக்கு
ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர்
எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி
சசிகலாவும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கும் செய்தனர்.
கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு
ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும்
, அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்  . அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா 1961 தொடங்கி 1980 வரை திரைப்பட உலகில் நடித்தார். 14
திரைப்படங்களில் பாடியுள்ளார்.
நடித்த, திரைப்படங்களின் பட்டியல்
வ.எண். ஆண்டு திரைப்படம்
01 1961
சிறிசைல மகாத்மி (Shrishaila Mahatme)
02 1961 எபிஸில்
03 1961 மேன்-மனுஷி (Man-Mauji)
04 1964 சின்னட கோம்பே
05 1964 மனே அலியா(Mane Aliya)
02 1964 சின்னடா கொம்பே
03 1965 ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை
04 1965 ஆயிரத்தில் ஒருவன்
-- 1965 (செப்டம்பர் வெளியானது) மாவன்ன மகலு
-- 1965 நானா கர்தவ்யா
-- 1966 பதுகுவா தாரி
05 1965 ஆகஸ்ட் 21 நீ
06 1965 செப்டம்பர் 10 கன்னித்தாய்
07 1966 சனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை
08 1966 ஏப்ரல் 14 யார் நீ
09 1966 மே 6 குமரிப் பெண்
10 1966 மே 27 சந்திரோதயம்
11 1966 சூன் 16 தனிப் பிறவி
12 1966 ஆகஸ்ட் 18 முகராசி
13 1966 நவம்பர் 11 கௌரி கல்யாணம்
14 1966 நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த்
15 1967 ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன்
16 1967 ஏப்ரல் 14 மகராசி
17 1967 மே 19 அரச கட்டளை
18 1967 சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை
19 1967 செப்டம்பர் 7 காவல்காரன்
20 1967 நவம்பர் 1 நான்
21 1967 கந்தன் கருணை
22 1967 ராஜா வீட்டுப் பிள்ளை
23 1968 ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115
24 1968 ஜனவரி 15 அன்று கண்ட முகம்
25 1968 பிப்ரவரி 23 தேர்த் திருவிழா
26 1968 மார்ச் 15 குடியிருந்த கோயில்
27 1968 ஏப்ரல் 12) கலாட்டா கல்யாணம்
28 1968 ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன்
29 1968 மே 10 மூன்றெழுத்து
30 1968 மே 31 பொம்மலாட்டம்
31 1968 சூன் 27 புதிய பூமி
32 1968 ஆகஸ்டு 15 கணவன்
33 1968 செப்டம்பர் 6 முத்துச் சிப்பி
34 1968 செப்டம்பர் 20 ஒளி விளக்கு
35 1968 அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா
36 1968 அக்டோபர் 21 காதல் வாகனம்
37 1968 இஜத் (இந்தி படம்
38 1969 சூன் 14 குருதட்சணை
39 1969 செப்டம்பர் 5 தெய்வமகன்
40 1969 நவம்பர் 7 நம் நாடு
41 1969 அடிமைப்பெண்
42 1970 ஜனவரி 14 எங்க மாமா
43 1970 ஜனவரி 14 மாட்டுக்கார வேலன்
44 1970 மே 21 என் அண்ணன்
45 1970 ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை
46 1970 செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன்
47 1970 அக்டோபர் 9 எங்கள் தங்கம்
48 1970 அக்டோபர் 29
எங்கிருந்தோ வந்தாள்
49 1970 நவம்பர் 27 பாதுகாப்பு
50 1971 ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி
51 1971 ஜனவரி 26 குமரிக்கோட்டம்
52 1971 ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி
53 1971 சூலை 3 சவாலே சமாளி
54 1971 ஆகஸ்ட் 12 தங்க கோபுரம்
55 1971 அக்டோபர் 17 ஆதி பராசக்தி
56 1971 அக்டோபர் 18
நீரும் நெருப்பும்
57 1971 திசம்பர் 9 ஒரு தாய் மக்கள்
58 1971 பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில்
59 1972 ஜனவரி 26 ராஜா
60 1972 ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை
61 1972 மே 6 பட்டிக்காடா பட்டணமா
62 1972 சூலை 15 தர்மம் எங்கே
63 1972 செப்டம்பர் 15 அன்னமிட்ட கை
64 1972 திசம்பர் 7 நீதி
65 1973 ஜனவரி 14 கங்கா கௌரி
66 1973 மார்ச் 16 வந்தாளே மகாராசி
67 1973 ஆகஸ்ட் 10 பட்டிக்காட்டு பொன்னையா
68 1973 ஆகஸ்ட் 15 சூரியகாந்தி
69 1973 அக்டோபர் 25
பாக்தாத் பேரழகி
70 1974 ஜனவரி 11 திருமாங்கல்யம்
71 1974 மார்ச் 7 தாய்
72 1974 மே 24 ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
73 1974 மே 24 வைரம்
74 1974 ஆகஸ்டு 30 அன்புத்தங்கை
75 1974 நவம்பர் 13 அன்பைத்தேடி
76 1980 ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல்
பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
1972 - சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது
1973 - சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது
*******************************************
ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாக காண்போம்.
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: மைசூர், இந்தியா
தொழில் துறை: நடிகை மற்றும் அரசியல்வாதி
ஆரம்ப வாழ்க்கை:
‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.
சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
தொழில்:
ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.
அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி, இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
பங்களிப்புகள்:
அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
விருதுகள்
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.
சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
காலவரிசை
1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
1980: பிரச்சார செயலாளராக எம்.ஜி. ஆரால் தேர்வு செய்யப்பட்டார்.
1984: மக்களவைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
2011  -2016: வரை தமிழக முதல்வராக பணியாற்றுகிறினார்.
மறைவு
டிசம்பர் 5, 2016 ல் மறைந்தார்.