செவ்வாய், 24 அக்டோபர், 2017

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் அக்டோபர் 24 .



மருதுபாண்டியர்கள் நினைவு நாள் அக்டோபர் 24 .

*மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு.*


இன்று உலகமயமாக்களின் காலத்தில் அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

*குழந்தை பருவம் : -*

*1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.*


*அரச சேவை :-*

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

*முத்து வடுகநாதர் மரணம் :-*

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

*படை திரட்டல் :-*

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி,  மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.

*ஆட்சி மீட்பு :-*

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார். காளையார்கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடிய முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகளையும் மருது சகோதரர்கள் செய்கின்றனர்.

*மக்கள் பணி :-*

குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற'' கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

*போர் :-*

1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17 ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகிறார். அதற்கு பிறகு,  வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்தனர். ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டனர்.

விருப்பாச்சியில் ஆங்கிலேய படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையைதிறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.

ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள்.

*போர் களம்:-*

அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

*மரணம் :-*

அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

*முதல் சுதந்திர போர்::-*

1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது.

*ஆனால்,*

அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.

மேற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காது.

மாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

*விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.*


*மாமன்னர்,*
*மருதுபாண்டியர்கள்*

*1801- ஆம் ஆண்டு அக்டோபர் 24- ஆம் நாள் சிவகங்கை திருப்பத்தூரின் மையப்பகுதியில் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர் அந்த சகோதரர்கள். தூக்குகயிற்றை மாட்ட வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.???*

*தங்கள் கட்டியாண்ட சிவங்கைச் சீமை மண்ணிலே கைதியாக நின்ற மருது சகோதரர்கள் “ எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நான் என் நாட்டைக் காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.*

*ஆனால் என் உயிரோடு எதற்காக, இந்த சின்னஞ்சிறு உயிர்களையும் சேர்த்து பறிக்கின்றீர்கள்?... இந்த சிறுவர்களா உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள் என்று நினைக்கீன்றீர்கள்?*

*எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்” என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதட்டமும் இல்லாம் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள்.*

*வீரத்தின் விளைநிலமாக இனமான தமிழர்களாக விளங்கிய மருது சகோதரர்கள்தான் அவர்கள்.*

*அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்று ஐநுாறு பேரையும் துாக்கில் ஏற்றினார்கள் ஆங்கிலேயர்கள்.*

*மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்!*

*உயிர் போகும் நிலையில் கூட ஜாதி, மதம் பார்க்காமல் நாங்கள் கொடுத்த அனைவரது சொத்துக்களையும் அவரவரிடமே கொடுக்கப்படவேண்டும்.*

*என்ற கடைசி ஆசை கண்ட!!*

*மாமன்னர் மருதுபாண்டியர்களின் 216- வது நினைவு நாளான இன்று அந்த இனமான தமிழர்களின் செயற்கரிய புகழ்மிக்க வாழ்க்கை முறையை நினைத்து வீரவணக்கம் செய்வோம்.*


திங்கள், 23 அக்டோபர், 2017

ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24.


ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24.

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.
1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார் [3] .
உலக மேம்பாட்டுத் தகவல் நாள்
1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் தினம்

முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ம் தேதி உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.
ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலக மகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகா யுத்தமாகும்.
2ம் உலக மகா யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945ல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர்.
ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.
இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.
இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சான்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது.
இம் மாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 அக்டோபர் 24ம் தேதி இந்த சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகிறது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946ல், லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960ல் 100 நாடுகளும், 1980ம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில் 2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அரபி, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எஸ்ப்பானிய ஆகியவை உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை:
192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும், எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.
இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன:
அரசியல் பாதுகாப்பு,
பொருளாதாரம், சமூகம்,
கலாசாரம்,
தர்மகர்த்தா,
நீதி, நிர்வாகம்,
சிறப்பு அரசியல் குழு
என்பனவாகும்.
பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச் சபையே தேர்வு செய்யும்.
பாதுகாப்புச் சபை:
இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15. நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தேர்வு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற முயன்று வருகிறது.
பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் 'வீட்டோ" எனப்படும். இந்த 'வீட்டோ" அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஷ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்
ஐ.நாவின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்
இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா. மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.
பொருளாதார சமூக சபை:
அங்கத்துவ நாடுகள் 54யைக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும், ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்).
இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளி விபரக் குழு, ஜனத் தொகைக் குழு, சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கைப் பொறுப்புச்சபை:
சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கிறது.


சர்வதேச நீதிமன்றம்:
இது ஹேக் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்).
செயலகம்:
ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் 'பன்-கீ மூன்" ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.
சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
1967ம் ஆண்டு ஐ.நாவின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, 1968ம் ஆண்டில் சோவியத்- செக்லோஸ்லவியா பிரச்சனை, 1974ம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991ம் ஆண்டு அமெரிக்க- ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க- ஈராக், அமெரிக்க- ஆப்கான் யுத்தம்... இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
பிரச்சனை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா. சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன.
எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரிட்டன் 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரிட்டனின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம், பொருளாதாரச் சுரண்டல், ராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறைமுகமாக ஐ.நா. சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா?.
இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான செயல்களை இந்த சபை ஆற்றி வருவதை நம்மால் மறுக்க முடியாது.



24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம்: 2ம் உலகப்போரை நிறுத்த உருவானது ஐ.நா.

‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்கிறோம். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப்புக்கு முன்னதாக இதுபோன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தை பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே 2ம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. 2ம் உலகப்போரின்போது எதிரி நாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்தார்கள். பிறகு 1945ம் ஆண்டு 50 நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைப்பெற்றது. அமெரிக்க, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின்பேரில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஓக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவு செய்யப்பட்டது. 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி 50 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலந்து நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இடத்தின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51ஆனது. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது.
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன.
ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.
1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களை பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.
2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற அதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.
3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் 2ம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.
5. ஐ.நா. செயலகம்: ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.
6. சர்வதேச நீதிமன்றம்: ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.
ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவி மக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு என்பது அனைத்து நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள்
* உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது.
* நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது.
* ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்.
* குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.

உலக இளம்பிள்ளை வாத தினம் அக்டோபர் 24.



உலக இளம்பிள்ளை வாத தினம் அக்டோபர் 24.

இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத்
தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர் , அல்லது
உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.
போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால்
தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான
தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும்
நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான
வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம்.
முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம.

நோய் அறிகுறிகள்

குழந்தைகளில் 72% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஆனால் போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக, நோய்த்தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.
ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள். 1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும். ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.உடம்பிலுள்ள முக்கிய அங்கமான கை, கால் மற்றும் முதுகுதண்டு வடம் பகுதிகளை அசைக்க முடியாமல் பலவீனம் அடையும். ஒரு சில நாட்களில் வெப்பகாய்ச்சல் ஏற்பட்டு பேதி ஏற்படும்; தலை பாரமாக இருக்கும்; உடல் முழுதும் தீராத வலி இருக்கும்.

சிக்கல்கள்

நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் வாழவேண்டியுள்ளது. கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
நுரையீரல் அழற்சி
இதயக்கீழறை மிகுவழுத்தம்
அசைவின்மை
நுரையீரல் பிரச்சினைகள்
நுரையீரல் வீக்கம்
அதிர்ச்சி
நிரந்தரத் தசை வாதம்
சிறுநீர்ப்பாதைத் தொற்று
நோய்கண்டறிதல்
வைரசைத் தனிமைப்படுத்தல்
இளம்பிள்ளை வாதமுடைய ஒருவரின் மலம் அல்லது தொண்டையில் இருந்து போலியோவைரஸ் எடுக்கப்படுகிறது. மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருந்து வைரசைப் பிரித்து எடுப்பதே நோய்கண்டறிதல். ஆனால் அது அபூர்வமாகவே முடியக்கூடியது ஆகும். கடும் தளர் வாதம் உடைய ஒருவரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் மேலும் சோதிக்கப்பட வேண்டும். ஒலிகோநியூக்ளியோடைட் படமிடல் (oligonucleotidemapping) அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் (genomic sequencing) மூலம் அந்த வைரசு இயற்கையானதா (“wild type”) அல்லது தடுப்புமருந்து வகையா (தடுப்பு மருந்து திரிபில் இருந்து பெறப்பட்டது) என்று தீர்மானிக்கப்படும்.

ஊனீரியல்

தொடக்கத்திலேயே சமன்படுத்தும் எதிர்பொருட்கள் தோன்றி, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதிக அளவில் பெருகி இருக்கும். இதனால் நான்கு மடங்கு அதிகரிப்பை எதிர்பொருள் வேதியல் வினையூக்கி சோதனையால் காட்ட முடியாது.
மூளைத்தண்டுவடப் பாய்மம்
இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளணுக்களின் என்ணிக்கை அதிகமாய் இருக்கும் (10-20 உயிரணுக்கள்/mm3, பெரும்பாலும் வடிநீரணுக்கள்). மேலும், புரத அளவும் சற்றே அதிகரிக்கும் (40–50 mg/100 mL).
நோய் மேலாண்மை
இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.அளிக்க வேண்டும்.
தடுப்புமுறை
இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும்.
இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து . வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில்.
வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அவர், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க்.
1957ம் ஆண்டில, 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால்
தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான
தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும்
நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான
வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம்.
முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.
இந்தியாவில் இளம்பிள்ளை வாதம்
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும். தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை கால்வாய் நீரை பரிசோதித்தபோது போலியோ வைரஸ் அதில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது

பாதிப்புகள
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.

தடுப்பூசி

இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர். போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளிநாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இளம்பிள்ளை வாதம் அற்ற நாடு இந்தியா !

இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது.
அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம்.
அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை.
முதுகுத் தண்டு நரம்புகளையும் ( spinal cord ) தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன.
இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் ( motor neurones ) செயல் இழந்து போகின்றன.
குறிப்பாக கை கால்கள் பாதிக்கப்பட்டால் அவை சூம்பிப்போகின்றன. அதனால் அவர்களால் நடக்க முடியாமல் போய்விடுகிறது.
உலக முழுதும் போலியோ வியாதி காணப்பட்டாலும், அது தோன்றும் அளவு ( incidence ) தற்போது குறைந்துள்ளது இதற்குக் காரணம் மக்களிடையே உண்டான சுகாதார விழிப்புணர்வு, முறையான கழிவறைகள், பரவலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவது போன்றவை எனலாம்.
இந்த வைரஸ் மலம் – வாய் வழியாக (faecal – oral route) பரவுகிறது.
மலத்தில் இந்த வைரஸ் வெளியேறும்.
அதனால் அந்த மலம் கலந்த நீரைக் குடிப்பதால் வைரஸ் தொற்று உண்டாகிறது.
இதனால்தான் பாதுகாப்பான குடிநீர் வலியுறுத்தப்படுகின்றது .
அதோடு உணவகங்களில் பணிபுரிவோரின் கைகள் எப்போது சுத்தமாக இருக்க வேண்டும்.

இளம்பிள்ளை வாத நோயின் அறிகுறிகள்:

வைரஸ் தொற்று உண்டான பின் நோயின் அறிகுறி தோன்ற 7 முதல் 14 நாட்கள் ஆகும் . இதை உறங்கும் காலம் ( incubation period ) என்பர். அதன் பின்பு வைரஸ் தன்மைக்கு ஏற்ப அறிகூறிகள் மாறும்.

* வெளியில் தோன்றாத தொற்று வகை – inapparent infection

வைரஸ் தொற்று உண்டான 95 சத விகிதத்தினருக்கு இந்த வகை இருக்கும். இதில் அறிகுறிகள் ஏதும் இருக்காது.

* வெளியில் தோன்றும் தொற்று வகை ( abortive poliomyelitis)

இந்த வகை 4 முதல் 5 சத விகிதத்தினருக்கு உண்டாகலாம். இதில் காய்ச்சல், தொண்டை வலி, தசைகள் வலி போன்றவை தோன்றி சில நாட்களில் தானாக குணமாகும்.

* முடக்குவாதம் இல்லாத இளம்பிள்ளை வாதம் ( non – paralytic poliomyelitis )

இதில் வெளியில் தோன்றும் வகைக்கான அறிகுறிகள் தோன்றுவதோடு மூளைச் சவ்வு தொடர்புடைய தொந்தரவுகள் ( meningeal irritation ) உண்டாகும். ஆனால் நோய் தானாக முற்றிலும் குணமாகிவிடும்.

* முடக்குவாத இளம்பிள்ளை வாதம் ( paralytic poliomyelitis )

இந்த வகைதான் ஆபத்தானது . போலியோ வைரஸ் கிருமியால் தாக்கப்படும் பிள்ளைகளில் ௦.1 சத விகிதத்தினர் இந்த கொடிய வகையால் பாதிக்கப்படுகின்றனர். வாதம் உண்டாவதை துரிதப்படுத்துபவை வருமாறு:

* ஆண் பிள்ளைகள்

* காயம், அறுவை சிகிச்சை, ஊசி போட்டுக் கொள்ளுதல்

* சமீபத்திய தொண்டை சதை அறுவை சிகிச்சை.

இந்த வகையில் காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி உண்டாகி 4 முதல் 5 நாட்களில் சரியாகும். ஆனால் அதன்பின் நோய் மீண்டும் கடுமையாகத் தோன்றும். மூளை சவ்வு பிரச்னை அதிகமாகும். அதோடு கழுத்து, இடுப்புப் பகுதி தசைகள் கடுமையாக வலிக்கும். இவை ஒருசில நாட்கள் தொடர்ந்தபின் வாதம் உண்டாகும். பாதிக்கப்பட்ட காலில் தசைகள் செயலிழந்து போய்விடும். ஆனால் தொடு உணர்ச்சி குன்றாமல் நிலைத்திருக்கும்.

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு கால்கள் மட்டும் வாதத்தால் பாதிக்கப்படுவர். அதைவிட பெரிய பிள்ளைகளுக்கு கைகளில் வாதம் உண்டாகும். பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் இரண்டு கால்களும் ( paraplegia ) அல்லது கால்களுடன் இரண்டு கைகளும்கூட ஒரே நேரத்தில் ( quadriplegia ) செயல் இழக்கலாம்.

* முருள வாதம் ( bulbar paralysis )

இதில் தலை நரம்புகள் ( cranial nerves ) மற்றும் சுவாச தசைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டு ( respiatory muscle paralysis ) செயல் இழந்து போகலாம். இதுபோல் உதடு, நாக்கு, தொண்டை ஆகிய பகுதிகளிலும் வாதம் உண்டாகும். இந்த பாதிப்பால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். அதனால் மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இளம்பிள்ளை வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்

நோய் வந்தபின் இதற்கு அதிகமான சிகிச்சைகள் இல்லை.

துவக்கக் காலத்தில் நல்ல ஓய்வு தேவை.

அதிலிருந்து விடுபட்டு வாதம் உண்டானால் உடற்பயிற்சி மருத்துவம் ( physiotherapy ) , தொழில் முறை மருத்துவம் ( occupational therapy ) போன்றவை தரப்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கலாம். உடல் ஊனமுற்றிருந்தாலும் மனோதிடத்துடன் தான் கற்ற தொழில் செய்யலாம். கால் நடக்க முடியாதவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கிடுக்கிமானி ( calipers ) உதவியுடன் நடக்கலாம்.

இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு:

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தடுப்பு மருந்து பயன்படுத்தியதால் இன்று உலகளாவிய நிலையில் இந் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது நல்ல செய்தி.

இந்த சொட்டு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மாதங்களில் வாய் வழியாக தந்தாலே போதுமானது.

எப்போதுமே பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரையே பருக வேண்டும் என்பதும் மிக முக்கியமானது.

#இன்று 19-2-2012 ஞாயிற்றுக் கிழமை தமிழகமெங்கும் "இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து தினம்"அனுசரிக்கப்படுகிறது !

தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு இன்று 19-2-2012 சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இளம்பிள்ளை வாத நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 838 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 19-2-2012 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் (15-4-2012) ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

முகாம் நாளன்று இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 8-வது வருடமாக இளம்பிள்ளை வாத நோய் இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும்.

"இந்த பூமியிலிருந்து இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்"



#இளம்பிள்ளைவாததினம் ...

இன்று அக்டோபர் 24 சர்வதேச இளம்பிள்ளை வாத தினம்....

உலகப் போலியோ தினம்
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களின் நினைவாக உலகப் போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலக அளவில் போலியோ தடுப்பு மருந்தினால் 99% கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஏற்படும் 200 போலியோ தொற்றில் ஒன்று குணப்படுத்த முடியாத வாதத்திற்குக் கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேருக்கு

மூச்சு தசைகள் இயக்கம் இழப்பதால் மரணம் அடைகின்றனர். 1988-ல் 350000 நோயாளிகள் என்ற கணக்கில் இருந்து 2015 –ல் 74 என்று நோயாளிகளின் எண்ணிக்கை  குறைந்தது.

இது 99% குறைவாகும். இந்தக் குறைவுக்குக் காரணம்  இதை ஒழிக்க உலக அளவில் எடுக்கப்பட்ட முயற்சியே ஆகும்.

#போலியோவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை....

போலியோ பரவும் ஒரு வைரல் நோய். கடும் நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமமும் குணப்படுத்த முடியாத வாதமும் ஏற்படும்.

இது போலியோ வைரசால் உண்டாகிறது.
இந்த வைரஸ் மல-வாய் மூலம் நபருக்கு நபர் பரவுகிறது.

குறுகிய அளவில், அசுத்த நீர் அல்லது உணவு போன்றவற்றாலும் பரவலாம்.

குடலில் இந்த வைரஸ் பலுகிப்பெருகும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே பெரும்பாலும் இது பாதிக்கும்.

ஒரே ஒரு போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் வரை ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆபத்துள்ளது.

போலியோவைத் தடுக்கவே முடியும் குணப்படுத்த முடியாது. போலியோ தடுப்பு மருந்து குழந்தையை வாழ்நாள் முழுதும் காக்கும்.

இரு வகை தடுப்பு மருந்து உண்டு. ஒன்று வாய் மூலம் கொடுக்கும் சொட்டு மருந்து.

இன்னொன்று வயதுக்கு ஏற்றபடி கை அல்லது காலில் அளிக்கும் ஊசி மருந்து.

#போலியோவின் அறிகுறிகள்...
*காய்ச்சல்
*தலைவலி
*தொண்டைவலி
*வாந்தி
*களைப்பு
*கழுத்து, முதுகு, கை அல்லது காலில் வலி அல்லது விறைப்பு
*தசை பலவீனம்
இந்த அறிகுறிகள் தொற்று ஏற்பட்டு 10 தினங்கள் வரை இருக்கும்.

கடுமையான  அறிகுறிகளாவன மூளைக்காய்ச்சல் (மூளயும் தண்டுவடமும் தொற்றால் பாதிக்கப்படல்) மற்றும் 200 பேரில் ஒருவருக்கு ஏற்படும் குணப்படுத்த முடியாத வாதம்.

#போலியோவால் வாதம் ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகள்...

*தடுப்பாற்றல் குறைவு
*கர்ப்பம்
*டான்சில் அகற்றல்
*தசைக்குள் செலுத்தும் ஊசி
*காயம்
*போலியோ தடுப்பு

போலியோவைக் குணப்படுத்த முடியாது என்பதால் அதைத் தடுப்பு மருந்தின் மூலம் தடுக்கவே முடியும்.

முறைப்படி அளிக்கப்படும் போலியோ தடுப்பு மருந்து குழந்தையை வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும்.

இரு வகை தடுப்பு மருந்து உண்டு. ஒன்று வாய் மூலம் கொடுக்கும் சொட்டு மருந்து. இன்னொன்று வயதுக்கு ஏற்றபடி கை அல்லது காலில் போடப்படும் ஊசி மருந்து.

#போலியோ தடுப்பு மருந்தின் அளவு....

போலியோ சொட்டு மருந்து 5 தடவைகளாக அளிக்கப்படுகிறது:

பிறப்பின் போது முதல் வேளை. 6,10, 14 வாரங்களில் மூன்று முறை.

16-24 மாதத்தில் ஊக்க மருந்தாக ஒருமுறை. 2016-ல் ஒரு புது அறிமுகம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இது ஊசிமூலம் செலுத்தக் கூடிய செயலிழப்பு செய்யப்பட்ட போலியோ தடுப்பு மருந்தாகும்.

3 வது வேளை சொட்டு மருந்துடன் சேர்த்து இது அளிக்கப்படுகிறது.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

உலக நாச்சோ தினம் அக்டோபர் 21.



உலக நாச்சோ தினம் அக்டோபர் 21.

நாச்சோ ( ஆங்கிலம் : Nachos, பிரெஞ்சு : Nachos, எசுப்பானியம் : Nachos) என்பது
மெக்சிக்கோவில் தோன்றிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி ஆகும். இதில் நிரம்ப சேர்பொருட்களைக் கூட்டி முழுமையான உணவாகவும் கொள்ளலாம். இவற்றின் மிக எளிய தயாரிப்பில் தார்த்தியா தட்டைகளில் உருக்கிய பாலாடைக் கட்டியையும் சல்சா எனப்படும் தக்காளிச் சட்னியையும் (sauce) ஊற்றி செய்வதாகும்.1943ஆம் ஆண்டு இக்னேசியோ "நாச்சோ" அனயாவால் தயாரிக்கப்பட்ட முதல் நாச்சோக்களில் சுட்ட சோளத் தார்த்தியாவின் மேல் செத்தர் பாலாடைக்கட்டியை உருக்கி ஊற்றி சிவந்த ஜலபெனோ மிளகாய் ஊறுகாயுடன் வழங்கப்பட்டது.

பன்னாட்டு நாச்சோ தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள்
பன்னாட்டு நாச்சோ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1990களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 1943ஆம் ஆண்டு இந்நாளில் இருநாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்த பீதரஸ் நெக்ரஸ் நகரின் எல் மோடர்னோ உணவகத்தில் இக்னேசியோ அனயா தயாரித்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டது. இந்த நகரத்தில் அக்டோபர் 13 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் பன்னாட்டு நாச்சோ விழா வும் நடத்தப்படுகிறது.

நாச்சோ சீஸ்
Nachos using a processed-cheese sauce.
ஒவ்வொரு முறையும் பாலாடைக்கட்டியை உருக்கி அதனுடன் காரமான சட்னிகளை கூட்டுவதற்கு பதிலாக பெரியளவில் தயாரிக்கக்கூடிய சமையற்கூடங்களில், காட்டாக பள்ளிகள், திரையரங்குகள், விளையாட்டரங்குகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவில் நாச்சோ சீஸ் என்று அறியப்படுகிறது. துவக்கத்தில் நாச்சோக்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த சீஸ் மிகவும் புகழ்பெற்று பிற தொட்டுக்கொள்ளும் உணவுப்பண்டங்களுக்கும் பயன்படுத்தலாயிற்று. அமெரிக்காவின் பல மளிகை அங்காடிகளிலும் ரிகோஸ், ஃபிரிட்டோ லே, டோகோ பெல் வணிகப்பெயர்களிலும் அல்லாதும் விற்கப்படுகின்றன.

வியாழன், 19 அக்டோபர், 2017

கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பிறந்த நாள் அக்டோபர் 20 , 1978.



கிரிக்கெட் வீரர்  வீரேந்தர் சேவாக் பிறந்த நாள் அக்டோபர் 20 , 1978.

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (பி.அக்டோபர் 20 , 1978 ) இந்தியாவின்
துடுப்பாளர் . வலதுகைத் துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத் துடுப்பாளராகக் களமிறங்குபவர். 1998 இல் ஒருநாள் போட்டிகளிலும் 2001 இல் தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரராக அறிமுகமானார். இந்தியா சார்பாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் இவர். 2004 மார்ச்சில்
பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் 309 ஓட்டங்களையும் 2008 மார்ச்சில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ஓட்டங்களையும் பெற்றார்.
தென்னாபிரிக்காவுக்கெதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச் சாதனையாகும்; மேலும்
இலங்கைக்கு எதிராக டிசம்பர் 2009 மும்பை பிராபோன் அரங்கத்தில் 207 பந்துகளில் அடித்த 250 ஓட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமானதாகும். டிசம்பர் 8, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 149 பந்துகளுக்கு 219 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் ஆட்டங்களில் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாகப் பெற்றார். தற்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை புரிந்தவராக உள்ளார்.

துவக்க கால வாழ்க்கை

சேவாக் வலைப்பயிற்சியில் பந்து வீசுகிறார்
கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் ; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.

துடுப்பாட்ட வாழ்க்கை

உள்ளூர் போட்டிகள்
சர்வதேச ஒருநாள் போட்டிகள்
மொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில்
சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. [5]
சர்வதேச தேர்வுப் போட்டிகள்
தனக்கு பிடித்தமான "ஊக் சாட்" அடிக்கும் சேவாக்
சர்வதேச இருபது20 போட்டிகள்
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்
இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை
கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார்.
இருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.
பெற்ற விருதுகள்
அருச்சுனா விருது (2002)
உலகின் விஸ்டன் முன்னணி துடுப்பாட்ட வீரர் (2008), (2009)
ஐசிசி யின் 2010 ஆவது ஆண்டின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட வீரர்
பத்மசிறீ (2010)
தேர்வுத் துடுப்பாட்ட விருதுகள்
தொடர் நாயகன் விருதுகள்
எண் தொடர் காலம் தொடரி பங்களிப்பு
1
பாகிஸ்தானில்
இந்திய அணி தேர்வுத் தொடர்
2003/04
440 ஓட்டங்கள் ( ஆட்டங்கள், 4 இன்னிங்ஸ், 1×100, 1×50); 60–27–0; 2 பிடிகள்
2
இந்தியாவில்
தென் ஆப்பிரிக்க அணி தேர்வுத் தொடர்
2004/05
262 ஓட்டங்கள், ஆட்டங்கள், 3 இன்னிங்ஸ், 1×100, 2×50); 1 பிடிகள்
3
இந்தியாவில்
பாகிஸ்தான் அணி தேர்வுத் தொடர்
2004/05
544 ஓட்டங்கள் ( ஆட்டங்கள், 6 இன்னிங்ஸ், 2×100, 1×50); 52–14–0; 2 பிடிகள்
4
இந்தியாவில்
இலங்கை அணி தேர்வுத் தொடர்
2009/10
491 ஓட்டங்கள் ( ஆட்டங்கள், 4 இன்னிங்ஸ், 2×100, 1×50); 13–47–1; 1 பிடிகள்
5
இலங்கையில்
இந்திய அணி தேர்வுத் தொடர்
2010
348 ஓட்டங்கள் ( ஆட்டங்கள், 5 இன்னிங்ஸ், 2×100, 1×50); 7 இலக்குகள்
ஆட்ட நாயகன் விருதுகள்
எண் எதிரணி இடம் கா
1
மேற்கு இந்தியத் தீவுகள்
வான்கேடே அரங்கம், மும்பை 200
2 பாகிஸ்தான் முல்தான் 200
3 பாகிஸ்தான் Gaddafi Stadium, Lahore 200
4 மேற்கிந்திய தீவுகள் Gros Islet, St Lucia 200
5 தென் ஆபிரிக்கா
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் சென்னை
200
6 இலங்கை காலி பன்னாட்டு அரங்கம் இலங்கை 200
7 இங்கிலாந்து
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் சென்னை
200
8 இலங்கை
பிராபோர்ன் விளையாட்டரங்கம்
மும்பை
200
ஒருநாள் போட்டி விருதுகள்
தொடர் நாயகன் விருதுகள்
எண் தொடர் காலம் தொடர பங்களிப்ப
1
நியூசிலாந்தில்
இந்திய அணி ஒருநாள் தொடர்
2008/09
299 (5 ஆட்ட 5 இன்னிங் 1×100, 2×50); பிடிகள்
2
இந்தியா ,
நியூசிலாந்து ,
இலங்கை முத்தரப்பு தொடர் இலங்கை
2010/11
268 (5 ஆட்ட 5 இன்னிங் 1×100, 1×50);
ஆட்ட நாயகன் விருதுகள்
படைத்த சாதனைகள்
சர்வதேச ஒருநாள் போட்டிகள்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும்,
கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர்களில் 2001 ஆம் ஆண்டில்
கென்யாவுக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் கடந்த சேவாக் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை ராகுல் திராவிட்,
கபில் தேவ் , மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அரைசதத்தை விட கூடுதலாக சதமடித்துள்ள (15ச/14அ) ஐந்தே வீரர்களில் இவரும் ஒருவராவார்.
டொனன் பிராட்மேன் (29ச/13அ), முகமது அசாருதீன் (22ச/21அ), மேத்யூ ஹெய்டன் (30ச/27அ) மற்றும் கெவின் பீட்டர்சன் (13ச/11அ) ஆகியோர் மற்ற நால்வர் ஆவர்.
2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.
சர்வதேச தேர்வுப் போட்டிகள்
தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)
தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)
தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 284 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.
ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.
தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று
சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.
சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.
துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

இந்திய கிரிக்கெட்வீரர்
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் (Virender Sehwag) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*தில்லியில், நஜஃப்கட் என்ற இடத்தில் பிறந்தவர் (1978). தந்தை, தானிய வியாபாரி. ஆரம்பக் கல்வி முடித்து, விகாஸ்பூர் மேல் நிலைப்பள்ளியிலும் பின்னர் ஜாமிய மில்லியா இஸ்லாமிய ஆண்கள் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
*படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதில் சச்சின் டெண்டுல்கராக வேண்டும் என்ற லட்சியம் கொண் டிருந்தார். பின்னாளில் ‘நிஜாஃபர்கட் டெண்டுல்கர்’, ‘தி லிட்டில் டெண்டுல்கர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
*1998-ல் ஒருநாள் போட்டிகளிலும், 2001-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார். இவரது டைமிங் அதிசயிக்கத்தக்கது, ஆட்டத்தில் பதற்றமான சூழலாக இருந்தாலும் சரி, வலிமைமிக்க எதிரணியோடு விளையாடும்போது சரி, பதற்றிமின்றி விளையாடுவார்.
*சிறந்த ஆஃப்-ஸ்பின் பவுலரும்கூட. சாதனை புரிய வேண்டும் என்பதற்காகத் தன் அதிரடி ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஒருமுறை 195 ரன்கள் இருக்கும்போது நிதானமாக ஆடி, இரட்டை சதம் அடிக்கலாம் என்று நினைக்காமல் அடுத்த பந்தில் சிக்சருக்கு முயல, அவுட் ஆனார். ஆனால் அதற்காகக் கவலைப்படவில்லை, இந்த அதிரடி மன்னர்.
*‘வீரு’ என்று சக வீரர்களாலும் ரசிகர்களாலும் நேசத்துடன் அழைக்கப்படும் இவர், இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராகப் பாராட்டப்பட்டவர். ஒரு இன்னிங்சில் அதிக ரன்களைப் பெற்ற சாதனையாளர். 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களையும், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ரன்களையும் எடுத்தார்.
*தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் 300 ரன்கள், இலங்கைக்கு எதிராக 2009-ல் 207 பந்துகளில் 250 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக ரன்கள் எடுத்தது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்தது, சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தது, சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 200 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனைகளோடு, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக மூன்று முறை முச்சதங்கள் அடித்த சாதனையையும் படைத்தவர்.
*ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், 20/20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த ஒரே வீரர். பத்ம விருது, அர்ஜுனா விருது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பலமுறை தொடர் நாயகன் விருது, ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றவர்.
*இரண்டு முறை ‘விஸ்டன் முன்னணி பேட்ஸ்மேன்’ என்ற கவுரவம் (இந்த கவுரவம் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர்) வழங்கப்பட்டது. துணிச்சல், வலிமை, திறன், தெளிவு இவை அனைத்தும் சேர்ந்த இவரது விளையாட்டை ‘சேவாக் பிராண்ட்’ என்று விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள்.
*‘ஒவ்வொருமுறை நான் ஆடும் போதும் இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்பார். சைவ உணவு பழக்கம் உடைய இவர், சைவ உணவகம் ஒன்றின் உரிமையாளர்.
*‘நவாப் ஆஃப் நஜஃப்கட்’, ‘ஜென் மாஸ்டர் ஆஃப் மாடர்ன் கிரிக்கெட்’ என்றெல்லாம் போற்றப்படும் வீரேந்திர சேவாக், இன்று 39வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது இவரது பங்களிப்பு கிரிக்கெட் வர்ணனையாகத் தொடர்கிறது.

உலகளாவிய புள்ளிவிவரம் நாள் அக்டோபர் 20 .


உலகளாவிய புள்ளிவிவரம் நாள் அக்டோபர்  20 .

உலகளாவிய புள்ளிவிவரம் நாள் உலகம் முழுவதும் 20 அக்டோபர் 2010 அன்று முதல் முறையாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையம் அந்த நாளையே அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு வரை, 103 நாடுகளில் தேசிய புள்ளிவிவர தினம் கொண்டாடப்படுகிறது, அதில் 51 ஆபிரிக்க நாடுகளும், நவம்பர் 18 அன்று ஆண்டு ஒன்றிணைந்த ஆபிரிக்க புள்ளிவிவரம் தினத்தை கொண்டாடுகின்றன.

புதன், 18 அக்டோபர், 2017

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் அக்டோபர் 19 , 1888 .



நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் அக்டோபர் 19 , 1888 .

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை ( அக்டோபர் 19 , 1888 - ஆகஸ்ட் 24 , 1972 ) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம் , தற்போதைய நாமக்கல் மாவட்டம்
மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
கவிஞரின் நாட்டுப்பற்று
முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
புகழ்பெற்ற மேற்கோள்கள்
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
மொழிப்பற்று
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ
நாமக்கல்லாரின் படைப்புகள்
இசை நாவல்கள் - 3
கட்டுரைகள் - 12
தன் வரலாறு - 3
புதினங்கள் - 5
இலக்கிய திறனாய்வுகள் - 7
கவிதை தொகுப்புகள் - 10
சிறுகாப்பியங்கள் - 5
மொழிபெயர்ப்புகள் - 4
எழுதிய நூல்கள்
1. மலைக்கள்ளன் (நாவல்)
2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
3. பிரார்த்தனை (கவிதை)
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
5. திருக்குறளும் பரிமேலழகரும்
6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
7. திருக்குறள் புது உரை
8. கம்பனும் வால்மீகியும்
9. கம்பன் கவிதை இன்பக் குவியல்
10. என்கதை (சுயசரிதம்)
11. அவனும் அவளும் (கவிதை)
12. சங்கொலி (கவிதை)
13. மாமன் மகள் (நாடகம்)
14. அரவணை சுந்தரம் (நாடகம்)
மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு
கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.
நினைவு இல்லம்
தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த
நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
காட்சிக்கூடம்
சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள்
சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள்

செவ்வாய், 17 அக்டோபர், 2017

உலக வறுமை ஒழிப்பு நாள் ( International Day for the Eradication of Poverty ) அக்டோபர் 17 .



உலக வறுமை ஒழிப்பு நாள் ( International Day for the Eradication of Poverty )  அக்டோபர் 17 .

உலக வறுமை ஒழிப்பு நாள் ( International Day for the Eradication of Poverty ) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள்
1987 ஆம் ஆண்டு முதன் முதலாக
பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்

உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. “ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். வறுமை, பட்டினி வன்முறைக்கு வழிவகுக்கிறது.

உலகில் ஏற்படும் மரணங்களில், அதிகம் வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமையினால் இறப்பவர்கள் அதிகம். உலகில் 87 கோடி பேர் போதிய உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. இதில் 40 கோடி பேர் சிறுவர்கள். 160 கோடி பேர் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிபேரின் (50 சதவீதம்) ஒருநாள் வருமானம் 150 ரூபாய்க்கு கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது.
என்ன காரணம்:மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் முக்கிய காரணம் ஏழை மக்களின் பசியை போக்குவதற்கு எந்த அரசுக்கு அக்கறையில்லாதது தான் முக்கிய காரணம்.

தேர்தலின் போது கட்சிகள் நிறைய வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களின் பசியைக்கூட போக்க முன்வருவதில்லை. தங்களை செல்வந்தராக மாற்றிக்கொள்வதற்காகவே சிலர் பதவிக்கு வருகின்றனர். இதனை நாம் நேரடியாகவே பார்க்க முடிகிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. ஆனால் இப்போதிருந்து பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் தொடர்ந்து வறுமைக்கோட்டிலேயே வசிப்பதை தவிர்க்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினால் வறுமை ஒழியும்.

வறுமை என்பது, உணவு , உடை ,
உறைவிடம் , பாதுகாப்பான குடிநீர் , கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை,
அனைத்துலக வளர்ச்சி , பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற
அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி
வளர்ந்த நாடுகளிலும் , வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
வறுமையின் வகைகள்
வறுமையை முற்றிலும் வறுமை(absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்ஹ்ட அளவு வழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே.
விளைவுகள்
வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக
இந்தியாவிலும் , அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அக்டோபர் 16, 1799.


விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அக்டோபர் 16, 1799.

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 3, 1760

பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: அக்டோபர் 16, 1799

தொழில்: மன்னர், போராட்ட வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

ஆங்கிலேயர்களுடன் மோதல்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,

“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?

“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


போர்

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.

இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள்

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

இறப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்கள் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே பிரதிபலித்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், பலருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே நிவைக்கு வருவார். அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.

மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்

கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.
கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவு கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 இல், கட்டபொம்மன் அவர்களுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது.
அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இரு நூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது.
இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.
1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

உலக உணவு நாள் ( World Food Day ) அக்டோபர் 16 .



உலக உணவு நாள் ( World Food Day )  அக்டோபர் 16 .

உலக உணவு நாள் ( World Food Day ) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.



உணவு பாதுகாப்பில் இந்தியா: சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தரும் அதிர்ச்சி!
   
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம். உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் அக்.16-ம் தேதி, உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொடக்கம்

1945 அக்டோபர் 16 -ம் நாளன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில்தான் நவம்பர் 1979 - ம் ஆண்டில்  நடந்த 20-வது பொது மாநாட்டில் ஐ.நா,  உலக உணவு தினத்தை அறிவித்தது.  ஹங்கேரியின் முன்னாள் அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் தற்போது 192- க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.



இந்தியாவில் உணவு நிலை

உணவுப் பாதுகாப்பில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் மகாராஷ்டிரா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1,274 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானேயில் 194 குழந்தைகள் என அதிர்ச்சி அளிக்கிறது புள்ளிவிவரங்கள். தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சராசரி எடைக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 286-ஆக இருந்தது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும், இந்தியாவில் அதிகப்படியாக மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது, 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்யூரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

1990-92-ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது.

சர்வதேச விருது

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் வறுமையினால் தற்கொலையை எதிர் கொண்டு வரும் சூழலில், இன்றும் நமக்கு கிடைத்த உணவை வீணடிக்கிறோம். அன்று முதல் இன்று வரை நம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளையும் அவர்கள் படும் துயரத்தையும் எண்ணிப் பார்ப்பதில்லை. இனியாவது நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை மதித்து, அவர்களால் கிடைக்கக்கூடிய உணவை வீணாக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.


சர்வதேச உணவு தினம்

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அக்டோபர் 16ம் தேதி சர்வதேச உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உணவு தினத்தை முன்னிட்டு அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான உணவின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. பசி, பட்டினி ஒழிந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக உலக உணவு தினம் கடைப்பிடிப்படுகிறது.

கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த உலக உணவு தினம், ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஐ.நா. பொது கூட்டத்தில் சிறப்பு தினமாக அறிவிக்கபப்ட்ட இத்தினத்தை ஆண்டுதோறும் பல்வேறு நாடுகள் கொண்டாடி வருகின்றது.


இந்நிலையில் இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும் அதன் பாதுகாப்பில் பின் தங்கி உள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சது குறைப்பட்டால் சுமார் 20கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் அளவு 21கோடியாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் 15% மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உலகில் அதிக அளவு உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வித்தத்தில் சர்வதேச உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது அமேரிக்காவை சேர்ந்த நார்மன் போர்லாக் முயற்சியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் நாட்டில் பட்டினியால் சாகும் உயிர்களை விட மந்தமான விவசாயத்தில் பாதிக்கப்பட்டு உயிர்விடும் விசாயிகளே அதிகம் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.