சனி, 24 மார்ச், 2018

அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு தினம் மார்ச் 25.


அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு தினம்
மார்ச் 25. ( International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ) 

அடிமைப்படுத்தல், மற்றும் திரான்சு-அத்திலாந்திக்கு அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் ( International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ) என்பது ஆண்டுதோறும் மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் அவையினால் நினைவுகூரப்படும் ஒரு பன்னாட்டு நாளாகும்.
அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்ப்ட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூரும் முகமாக ஐக்கிய நாடுகள் அவை 2007 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது "வரலாற்றில் இடம்பெற்ர மிக மோசமான மனித உரிமை மீறல்" எனக் கருதப்படுகிறது.

உலக தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு தினம்


உலக தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு தினம்

தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு நாள் ( International Day of Solidarity with Detained and Missing Staff Members ) என்பது ஐக்கிய நாடுகளினா ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 கடைப்பிடிக்கப்படும் நாளாகும்.

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.  அவரது உடல் 2009ஆம் ஆண்டில் லெபனானில் பேக்கா பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.  இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெள்ளி, 23 மார்ச், 2018

உலக காச நோய் தினம் மார்ச் 24, ( World Tuberculosis Day ),


உலக காச நோய் தினம் மார்ச் 24, ( World Tuberculosis Day ),

அனைத்துலக காச நோய் நாள் ( World Tuberculosis Day ), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும்
மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.
வரலாறு
மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர்
றொபேர்ட் கொக் ( Robert Koch ) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus )
பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்
அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.



இன்று உலக காச நோய் தினம்

 காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், "காச நோயை தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
காரணகர்த்தா...
"டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது
பாதிப்பு
பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது
அறிகுறி
தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள்.
தொற்றும் வாய்ப்பு
நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும்.
புள்ளிவிவரப்படி...
ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். பெரும்பாலானோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆசியாவில் அதிகம்
காசநோயின் பாதிப்பு, உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.
சிகிச்சை
துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை. காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு தேவை.
அரசு, காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காச நோயை தடுக்கும் திட்டம் 2006-2015
உலக சுகாதார நிறுவனம், "காச நோயை தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.


இந்திய விடுதலை போராளி சுக்தேவ் நினைவு தினம் - மார்ச் 23, 1931 .


இந்திய விடுதலை போராளி  சுக்தேவ் நினைவு தினம்  - மார்ச் 23, 1931 .

சுக்தேவ் தபார் அல்லது சுக்தேவ் (15 மே 1907 - மார்ச் 23, 1931 (பஞ்சாபி: ਸੁਖਦੇਵ ਥਾਪਰ, سُکھدیو تھاپر) பஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இந்திய விடுதலை போராளி. பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் லாலா லஜபத் ராய் என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடையக் கூட்டாளிகளான பகத்சிங், சிவராம் ராஜ்குரு போன்றோருடன் சேர்ந்து சான்டர்சு பதில் கொலை செய்ததற்காக அதிகம் அறியப்பட்டவர்.

இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை

சுக்தேவ், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தில் சேர்ந்து, இந்திய விடுதலை போராளி ஆனார்.

காந்தியின் ஒப்புதல்

இம்மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. இதற்கான ஆதாரம் ஃபிரன்ட் லைன் பத்திரிக்கையில் உள்ளது.

இந்திய விடுதலைப் போராளி ராஜகுரு நினைவு தினம் மார்ச் 23 , 1931.


இந்திய விடுதலைப் போராளி ராஜகுரு நினைவு தினம் மார்ச் 23 , 1931.

சிவராம் ஹரி ராஜகுரு அல்லது ராஜகுரு (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), பகத் சிங் , சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து,
பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர்.
இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 1928ஆம் ஆண்டில் லாகூரில் , பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், பகத் சிங் , சுக்தேவ் ஆகியோர் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்கிலிடப்பட்டனர்.


கொலைக்கு காரணம்

லாலா லஜபதி ராயை பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, பகத் சிங் ,
சுக்தேவ் , ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர்.
தூக்குத் தண்டனை
காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, அவர்களுக்கு மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மூவரின் உடல்கள் பஞ்சாப் , பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் ஆற்றங்கரையில் உள்ள உசைனிவாலா என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு தினம் மார்ச் 23, 1931.


இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு தினம் மார்ச் 23, 1931.

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 27, 1907
இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
இறப்பு: மார்ச் 23, 1931
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.
விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.
லாகூர் கொலை வழக்கு
1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
இறப்பு
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர் ஜி டி நாயுடு பிறந்த தினம் மார்ச் 23.


அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர் ஜி டி நாயுடு பிறந்த தினம் மார்ச் 23.

*‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (G.D.Naidu) பிறந்த தினம் இன்று (மார்ச் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:*

# கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் (1893) பிறந்தார். பயின்றது தொடக்கக் கல்வி மட்டுமே. ஏராளமான நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். வியாபாரத் திறனும் பெற்றிருந்தார்.

# ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார். அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார். அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார். அப்போது அவருக்கு வயது 18.

ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார். அதில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும் பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ் ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார்.

# # திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார். ஆனாலும், தோல்வியால் துவளவில்லை. போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.

# ‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

# ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்தார். இந்தியாவிலேயே தயாரிக்க அரசிடம் நிதி கோரினார். காழ்ப்புணர்ச்சி கொண்ட பிரிட்டிஷ் அரசு மறுத்தது. மனம் உடைந்த இவர் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு இலவசமாகவே அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.

# தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.

# விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.

# பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார். தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தார்.

# சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு 81-வது வயதில் (1974) மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது.


வியாழன், 22 மார்ச், 2018

வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,



வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,

மார்ச் 23 அன்று, நம்முடைய வீரத் தியாகிகள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் ஈடுஇணையற்ற தியாகத்தை நாம் வணங்குகிறோம். இந்தியாவை ஆங்கிலேய காலனியர்களுடைய பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவும், மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சமுதாயத்தை நிறுவுவதற்காகவும், பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் அழைப்பு விடுத்தனர். அவர்களுடைய இந்த எழுச்சிமிக்க உணர்வு, எண்ணெற்ற தியாகிகளிடமிருந்தும், 1857 கெதர் எழுச்சியின் வீரமிக்க போராளிகளிடமிருந்தும், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்தும், இந்திய மண்ணிலிருந்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைக்காக 1915-இல் குரலெழுப்பியவர்களிடமிருந்தும் பெற்றனர். நமது நாட்டு மக்களுக்கு எதிராக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான கொடூரங்கள் தங்களுடைய நோக்கங்களுக்காகப் போராடுவதற்கான நம்முடைய தியாகிகளுடைய மன உறுதியை மேலும் வலுப்படுத்தியது. 19 வயது கர்த்தார் சிங் சாராபா போன்ற இளைஞர்களுடைய பணிகளால் அவர்கள் ஆர்வமூட்டப் பட்டனர்.
சுரண்டலற்ற ஒரு நியாயமான வளமான ஒரு சமுதாயத்திற்காக நமது தியாகிகள் கண்ட கனவுகள் இன்றுவரை நிறைவேறாமல் இருக்கின்றன. பெரும்பான்மையான நமது மக்களைக் கொள்ளையடிப்பது, சுரண்டுவது மற்றும் ஒடுக்கும் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அமைப்பை நிறுவினர். இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற பெயரில் அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஆங்கிலேயர்கள் நிறுவிய அந்த அமைப்பை மேலும் பன்மடங்கு தீவிரப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பெரும் முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பொருளாதாரத்தின் போக்கும், அரசு அமைப்பும் தீர்மானிக்கப்பட்டன. காங்கிரசு அல்லது பாஜக என எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும், அவர்களுடைய நலன்களுக்காக ஆட்சி நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று ஒரு பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய முதலாளிகள், உலகிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் நமது மக்கள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், வேலையற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும், சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். நமது நாடு நீர், வனம், நிலம், மற்றும் கனிம வளங்கள் நிறைந்ததாக இருந்தாலும், கடன்களில் சிக்கிக் கொண்ட காரணத்திற்காக ஒவ்வொரு நாளும் உழவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். தொழிற் சாலைகள், ஆலைகள், இயற்கை வளங்களென எல்லா குறிப்பிடத்தக்க உற்பத்திக் கருவிகளும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் உடமைகளாக இருக்கின்றன. அவர்கள், மேலும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்களை ஓட்டாண்டிகளாக ஒதுக்கித் தள்ளுவதற்கும் இந்த வளங்களை வெட்கமின்றி கொள்ளையடித்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் மிகப் பெரிய இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் மாற்றப்படுகின்றன.
“மக்களுடைய கட்டளையை” வெளிப்படுத்தும் விதமாக, உலகின் மிகப் பெரிய சனநாயகத்தில் தேர்தல்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. வாக்களிப்பதற்கான உரிமை, சுதந்திரத்திற்கும் சனநாயகத்திற்கும் மிகப் பெரிய அத்தாட்சியாக கூறப்படுகிறது. ஆனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவோ, தங்கள் பிரதிநிதிகளைத் தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக ஆக்கவோ அல்லது அவர்களைத் திருப்பியழைக்கவோ மக்களுக்கு எவ்வித உரிமையையும் இல்லை. கொள்கைத் திட்டங்களைத் தீர்மானிக்கவோ, சட்டங்களை முன்வைக்கவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சனநாயகமானது ஒரு மோசடியாகும். இந்த மாயைகளை நீடிப்பதற்கும், இளைஞர்களிடையே இதன் மீது நம்பிக்கையை உறுதி செய்வதற்கும், முதலாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும், பாராளுமன்ற அரசியல் கட்சிகளும், முதலாளி வர்க்கத்தின் எல்லாவகையான கருத்தை உருவாக்குபவர்களும் காது செவிடாகும் வண்ணம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அநீதிக்கு எதிராகப் போராடுவதில் நமது இளைஞர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்திருக்கிறார்கள். பாரம்பரியமாகவே, நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும், வளமைக்காகவும் எந்தத் தியாகங்களைச் செய்வதற்கும் நமது நாட்டு இளைஞர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இன்றும் கூட இது உண்மையாகும். இன்றும் கூட நம்முடைய இளைஞர்களிடையே பகத் சிங்குகளுக்கும், கர்த்தார் சிங்களுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன்களுக்கும் ஜான்சி ராணிகளுக்கும் கொஞ்சமும் குறைவு இல்லை. எனவே தான், நம்முடைய இளைஞர்களைக் குழப்புவதற்கும், அவர்களுடைய புரட்சிகர எண்ணங்களை சிதறடிப்பதற்கும், இந்த அமைப்போடு அவர்களைக் கட்டிப்போடுவதற்கும் சுரண்டும் முதலாளி வர்க்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்த அமைப்பில், முதலாளிகளுக்குத் தேவைப்படும் உழைப்பாளர்களுக்கு ஆதாரமாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுரண்டுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் முதலாளி வர்க்கம் தங்களுடைய இலாபத்தைப் பெருக்கி வருகிறார்கள். முதலாளி வர்க்கத்தின் போர்களில் இளைஞர்கள் தள்ளப்பட்டு, பீரங்கிகளுக்குத் தீனியாக ஆகிறார்கள். அவர்களுடைய பிணங்கள் மீது, முதலாளி வர்க்கம் தன்னுடைய ஏகாதிபத்தியப் பேராசைகளை அடைய முடியும். குற்றச் செயல்களிலும், போதைப் பழக்கங்களிலும் இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள், எனவே சமுதாயத்தின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தேர்தல் மோதல்களாகட்டும் அல்லது அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத படுகொலைகளாகட்டும், எல்லா வகையான குற்றவியலான செயல்களுக்கும் இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சமுதாயத்தில் உள்ள பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் குரலெழுப்பினால் அவர்களை பயங்கரவாதிகளென அவர்களுடைய கதையை முடிக்கிறார்கள் அல்லது சிறையிலடைக்கின்றனர். மதம், தேசியம் ஆகிய அடிப்படைகளில் குறிப்பாக இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பிலேயே அவர்கள் முன்னேற முடியுமென தவறான கனவுகளில் ஒரு பக்கத்தில் அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம், இந்த அமைப்பை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறு அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.


இந்திய மற்றும் அயல்நாட்டு சிறுபான்மையான சுரண்டல் பேய்கள், நம்மீது ஆட்சி செலுத்தி வரும் வரை, இந்தச் சுரண்டலிலிருந்தும் அநீதியிலிருந்தும் நாம் விடுதலை பெற முடியாதென நமது வீரத் தியாகிகள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இந்த உண்மையானது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் இன்று மிகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். சுரண்டலதிபர்களுடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதும், பெரும்பான்மையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் அரசை அமைப்பதும் எப்படி என்ற சவாலை இன்று இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
நம்முடைய விடுதலைக்கு, நம்முடைய வீரத் தியாகிகள் சுட்டிக் காட்டியுள்ள புரட்சிகரப் பாதையே ஒரே வழியாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ், முன்னணி கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் எல்லா ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களோடு இளைஞர்கள் அணிதிரட்டப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அறிவியலான மார்க்சிசம்-லெனினிசத்தால் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு சில முதலாளிகளுடைய பைகளை நிரப்புவதற்காக இல்லாமல், எல்லா மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றுமாறு பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சமுதாயத்திற்காக நாம் போராட வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் எல்லா உற்பத்தியும் நடைபெறும், தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும். நமக்கு முன்னே இருக்கும் சவால், முதலாளிவர்க்கத்திற்கும், அதனுடைய அரசுக்கும் எதிராக வாளை உயர்த்துவதாகும். இதுவே இளைர்களுக்கு முன்னாலுள்ள சவாலாகும்.
நம்முடைய இளைஞர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே ஒரே வழியாகும்!
அணிதிரள்வோம், ஆளும் வர்க்கமாக ஆவோம், சமுதாயத்தை மாற்றியமைப்போம்!
நன்றி -   CGPI


இன்று பக்த்சிங்-ராஜகுரு-சுகதேவ்க்கு மரண தண்டனை உறுதி செய்த நாள் மார்ச் 23,.....

சுதந்திர இந்தியாவிற்கு பூரண சுதந்திரம், சுரண்டலற்ற சோசலிச சமூகம் என்ற லட்சியங்களை முன்வைத்து, தேச விடுதலையின் இன்பமே தங்களின் இன்பம் என சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரமிக்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிவவர்மா, பி.கே.தத், சந்திர சேகர அசாத், ஜதீன் தாஸ், துர்கா தேவி, யஷ்பால் மற்றும் தோழர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
அகிம்சை என காந்திஜி புன்னகைத்தபோது மாற்று திட்டத்தின் மூலம் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றையே மாற்றியமைத்தனர், கேளாகாதர்களாக இருந்த பிரிட்டிஷ் பக்கிங்காம் அரண்மனையை அசைத்து பார்த்து இளைஞர்களையும், மாணவர்களையும் சுதந்திர போரில் ஈடுபட வைத்தனர். அதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் அடையாளமாக இவர்களையே வரலாற்று பக்கங்கள் நிருபிக்கின்றன. ஆனால், இவர்கள் கண்ட கனவுகள் தான் தற்போது பொய்த்து போனது.
விடுதலைப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்டோருக்கு மரண தண்டனையை ஆங்கிலேய அரசு
உறுதி செய்த நாள் பிப்ரவரி 14. மரண தண்டனையை உறுதி செய்து நிறைவேற்றும் தேதியாக மார்ச் 24-ஐ அறிவிக்கின்றார்கள்.
கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். 

உலக வானிலை தினம் மார்ச் 23.


உலக வானிலை நாள் ( World Meteorological Day ) மார்ச் 23.

உலக வானிலை நாள் ( World Meteorological Day ); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள்.
ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.


மழை வருமா? வராதா?

வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' (வேர்ல்டு மெட்ராலாஜிகல் டே - World Meteorological Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தினத்தில், மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.
வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்ப மயமாதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் முக்கியமானவை. தற்போது விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வானிலை செய்திகளை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.
வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம்.
சில வானிலை குறியீடுகள்
ஷாஃப்ட் (Shaft) - 3 mphக்கும் குறைவான காற்று.
காம் (Calm) - காற்று இல்லாத நிலை.
பென்னன்ட் (Pennant) - காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph - mile per hour) இடையில் 1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான மையப் பொருள்: 'அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக மழை - எதிர்கொள்ளும் விதம்'.


கி.மு. 687 - சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அபூர்வமான வானியல் நிகழ்வு. செவ்வாய் கிரகம் பூமியுடன் மோதுவது போல மிக அருகில் நெருங்கி வந்ததாம். இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக இரண்டின் சுழற்சியும் சுற்று வேகமும் நிலை தடுமாறியது. இந்த இயற்கை நிகழ்வால் வானில் பெரிய இடி முழுக்கமும் வெடிச்சத்தமும் கேட்டது. ஆஸ்திரியப் படை வீரர்கள் 1,85,000 பேர் அந்த இடத்திலேயே கருகி மாண்டதாக Book of Kings & Chronicles என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இரவில் "புவியே அதிர்ந்தது" விண்மீன்கள் மழை போலப் பொழிந்தன என்று Bamboo Books என்ற சீனப் புத்தகத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது.


வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர்போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம்,பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
வானிலை மாறுபடுவதால்…: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.
காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளைஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.


புதன், 21 மார்ச், 2018

உலக தண்ணீர் தினம் மார்ச் 22.



உலக தண்ணீர் தினம் மார்ச் 22.

உலக நீர் நாள் ( World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும்
மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 , ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி "பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்" எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
நீர்த் திட்டம் குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக மட்டத்தில் நீர் வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐநா நிறுவனத்தின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள்
யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" ( Water and Culture ) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
2007 இல், "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ( 'Coping with Water Scarcity' ) என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கருப்பொருள்கள்

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.
2018 - இயற்கைக்காக தண்ணீர்
2017 - ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?
2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள்
2015 - நீரும், நிலையான மேம்பாடும்
2014 - நீரும் ஆற்றலும்
2013 - நீர் நிறுவனம்
2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு
2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்
2010 - தரமான நீர்
2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்
2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு
2007 - தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்
2006 - நீரும் பண்பாடும்

நோக்கம்

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.


உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் ‌தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி ‌திண்டாடி வரும் ‌நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, ‌நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 ‌விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். ‌மீதமிருக்கும் 70 ‌விழுக்காடும் ‌நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 ‌விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான ‌நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.
உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.


உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்....

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22&ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.


நீர்வளம் நம் உயிர்நலம்

தமிழகத்தில் சில மாதங்களுக்குமுன் உயிர்களையும் உடமைகளையும் காவு வாங்கியதோடு, லட்சக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது பெருவெள்ளம். அனைத்தையும் இழந்து இன்றும் நடைபிணமாக அலைபவர்கள் ஏராளம். இந்தச் சேதத்துக்கான முக்கியகாரணம் வானம் பொத்துப் பெய்த மழைமட்டுமல்ல. நீர்மேலாண்மையில் நாம் தோற்றுப்போனதும்தான்.அசுரத்தனமாகப் பெய்த இந்த மழைக்கு, புவிவெப்பமயமாதல்தான் பிரதான காரணம் என்றாலும், இனி இப்படித்தான் இருக்கும். அதிக வெப்பத்தையும் அனுபவிக்கவேண்டியதிருக்கும். அதிக மழையையும் எதிர்நோக்க வேண்டியதிருக்கும். வருங்காலங்களில் தமிழகத்தில் பருவ மழை பெய்யும் நாட்கள் குறையலாம்.
ஆனால், மழையின் அடர்த்தி 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக நீடிக்கவேண்டிய பருவ மழைக்காலம், 30 நாட்களாகச் சுருங்குவது மட்டுமன்றி, ஐந்து, ஆறு மணி நேரம் பெய்ய வேண்டிய மழை இரண்டு, மூன்று மணி நேரத்தில் பெய்து தீர்த்துவிடும். குறைந்த நேரத்தில் கொட்டித்தீர்க்கும் மழையை, எதிர்கொள்ள நாம்தான் தயாராக இருக்கவேண்டும். நமது நீர்நிலைகளைத் தயாராக வைத்திருக்கவில்லை யெனில், வெள்ளச் சேதம் தவிர்க்க முடியாததாகிவிடும். மழை நீரைச் சேமிக்கவில்லையென்றால் கோடையில் கடும் வறட்சி தலைகாட்டும்.
மழை மறைவு பிரதேசம் :ஏன் நீர்நிலைகளில் நீரை சேமிக்கவேண்டும்? எனக் கேட்கலாம். தமிழகம் மழை மறைவு பிரதேசம். தேசத்தின் மக்கள் தொகையில் தமிழகம் 7 சதவிகிதம். ஆனால், நீர்வளத்தில் 3 சதவிகிதம்தான். இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை 925 மி.மீ. இது, தேசிய சராசரியை விடக்குறைவு.உலக நீர்வளத்தில் மனிதன் பயன் படுத்தக் கூடிய நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டர். இதில் தமிழ்நாட்டில் 4.8 கனகிலோ மீட்டர்தான் உள்ளது. இது, உலக அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை உலகில் நுாறில் ஒரு பங்கு. மக்கள் தொகையில் நுாறில் ஒரு பங்கு இருந்தாலும் கிடைக்கும் நீரின் அளவோ பத்தாயிரத்தில் ஒரு பங்குதான். இதிலிருந்தே தமிழ்நாடு மிகமிக அதிக நீர் பற்றாக்குறையோடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலும். அதனால் நீர்நிலைகளில் மழைநீரை சேமித்தல் அவசியமாகிறது.


நீர் ஆதாரங்களை உருவாக்குதல் :தண்ணீரின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். பண்டை மன்னர்கள் ஒரு கிராமத்தை உருவாக்கும் போது அங்கு நீர்ஆதாரங்களையும் ஏற்படுத்தினர். "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெருகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி சான்று. நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திய முறையை மணிமேகலையிலுள்ள "கருங்கை" என்ற வார்த்தை சான்றளிக்கிறது.
தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும், சேமிக்கும் இடமாகச் சிவகங்கைக் குளத்தை மன்னன் ராஜராஜன் அமைத்தான் என்ற கல்வெட்டு செய்தி மூலம் நீர்சேமிப்பில் தமிழ் மன்னர்களின் கரிசனம் புலனாகிறது. நீர்நிலைகளைப் பழுதுபார்த்ததையும், கரைகளைச் செப்பனிடப்பட்டதையும் கல்வெட்டு செய்தி மூலம் அறிகிறோம். அன்று நாம் நீர்மேலாண்மையில் கில்லாடிகளாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று...? பெய்யும் மழையைக் கூட சேமித்து வைக்க முடியவில்லை.
எங்கே நீர்நிலைகள்:1970--80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விபரப்படி தமிழகத்தில் 39,202 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதில் எத்தனை நீர்நிலைகள் இருக்கின்றன? என்பது ஆக்கிரமித்தவர்களுக்கே வெளிச்சம். "தமிழ்நாட்டிலுள்ள 39,202 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன' என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையம். அதாவது சுமார் நான்காயிரம் கண்மாய்கள் அழிந்துவிட்டன. நீர் தேங்கி வந்த இடங்கள் அரசியல் செல்வாக்கினாலும், அதிகாரிகள் துணையாலும் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. "வளர்ச்சி" என்ற பெயரில் அரசும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யத் தவறவில்லை.
2015-ல் ஏற்பட்ட சேதத்துக்கு கொட்டிய மழைதான் காரணம் என நாம் சொல்வது தவறு. 1976, 1985, 1996 மற்றும் 2005லும் அதிகளவு மழை பெய்து உள்ளது. எனவே நீர்நிலை கொள்ளையே சேதத்துக்குக் காரணம். வரும் காலங்களிலாவது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் நீர்நிலைகளைப் பயன்படுத்திடக் கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.
சீனத்து வேளாண்மையின் அடிப்படையே நீர் மேலாண்மைதான். மக்கள் சீனம் மலர்ந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு எல்லாம் நீர் மேலாண்மை பற்றி மாவோ பயிற்சி வழங்கியதாக சீன வரலாறு சொல்லுகிறது.இப்போது நெல் உற்பத்திக்கு ஒரு டன் நெல்லுக்கு ஆயிரம் டன் தண்ணீர் என்ற அளவு குறைக்கப்பட வேண்டும். நுாறு டன் நீரே போதும் என்பதே நவீன விஞ்ஞானத்தின் முடிவு. நீர் பயன்பாட்டில் 91 சதவிகிதம் விவசாயத்திற்கு செல்கிறது என்பதால் இந்த நடவடிக்கை அவசியம்.
குறைந்த நீர் தேவைப்படும் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காசோளம், தினை, வரகு போன்ற பயிர் வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும். இதனால் பாசனத்திற்கு என செலவாகும் தண்ணீரை பெரும் அளவில் சேமிக்க முடியும். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாளலாம்.
தண்ணீர் சேமிப்பு:நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நமக்குக் கிடைக்கும் கூடுதல் நீர் என்பதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம். குழாயைத் திறந்து வைத்து ஹாயாகக் குளிக்காமல் வாளியில் நீரை பிடித்துக் குளியுங்கள். 22 லிட்டர் வரை சேமிக்கலாம். மேற்கத்திய கழிவறைகளுக்குப் பதிலாக, நமது நாட்டு கழிவறை கோப்பைகளை பொருத்துவதால், ஒரு முறைக்கு 12 லி., நீரை சேமிக்க முடியும். ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைக்கவேண்டும். மக்கள் கையில் நீர் நிர்வாகம் வரவேண்டும்.,
ஆறுகளிலும், நீர் நிலைகளிலும், நீரைத் தக்கவைப்பது மணல்தான். எனவே மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். நீர் வளத்தை பாதுகாத்திடவும், பராமரித்திடவும், சேமித்திடவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்.
தண்ணீர் தினம்:தண்ணீரே வாழ்க்கையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள். உண்மையான வளர்ச்சிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார, சமூக மற்றும் மனித மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானது. நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து மக்களிடம் உணர்த்த 'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று ஐ.நா., 1992-ல் தீர்மானித்தது. இதையடுத்து ஆண்டு தோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்
சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. "சிறந்த தண்ணீர்... சிறந்த வேலை" என்பதே இந்தாண்டு (2016) உலக தண்ணீர் தினத்தின் கோஷம்.தமிழகம் வறட்சியையும் வெள்ளத்தையும் மாறிமாறி சந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்போது கூட வெள்ள நிவாரணம் அல்லது வறட்சி நிவாரணம் இரண்டில் ஒன்றைத்தானே மாறிமாறி பெற்று வருகிறோம். இந்தநிலை மாறவேண்டும். நீர்நிலைகளைக் காப்பதன் மூலம் நீர்வளம் காப்போம். நீர்வளம், நிலவளத்தை உருவாக்கும். நிலவளம் என்பது நம் உயிர்நலம்.

உலக தண்ணீர் தினம்... கொண்டாடும் நிலையிலா இருக்கிறது தமிழகம்? #WorldWaterDay

மார்ச் 22-ம் தேதியான இன்று 'உலக தண்ணீர்தினம்'. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உயிராதாரம். இந்த நீரைத்தான் மனிதனின் தேவைகளுக்கும், விவசாயம் என பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றிப்போனது. ஆனால் அதற்கு முந்தைய 2015-ம் ஆண்டில் பெய்தமழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் வர்ணித்தனர். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்கவில்லை என்பதே உண்மை. அன்று தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சரிபாதி நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டது என்பதை அந்த மழை உணர்த்தியது.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமையமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சம். முன்னரெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கே காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள தமிழகத்தை வறட்சிக்குத் தாரைவார்த்து விட்டனர், நம்மை ஆண்ட அரசியல்வாதிகள். காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பதே நாம் தண்ணீர் மேலாண்மையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டும் கிடக்கின்றன. இதற்கெல்லாம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன, ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.
கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) அறிக்கை கூறுகிறது.
 தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அண்டையில் இருக்கும் மூன்று மாநிலங்களிடமும் கெஞ்சும் நிலைதான் இருக்கிறது. தண்ணீருக்குத் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும் அணு உலையையும் தீர்வாகத் தருகிறது, மத்திய அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல் தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர்விடும்போது எங்கே போனது என்று தெரியவில்லை... இந்த 'உலக தண்ணீர் தினம்' என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 'தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்' என்பதை ஒவ்வொரு மனிதனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை
இப்போதிருந்தே சேமித்துப் பயன்படுத்த ஆரம்பிப்போம்.



நீரை சேமிக்க சில குறிப்புகள்

இந்த பிரபஞ்சமானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லை என்றால் இந்த உலகத்தில் எந்த உயிரனமும் வாழ முடியாது. ஆனால் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசுபடுத்துகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.
இந்நிலையில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான தண்ணீரை பாதுகாக்க உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தண்ணீரை சேகரிக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கவும், இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணிரை சேமிக்க முடியும்.
2. தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைத்துவிட வேண்டும்.
3. வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை கண்டிப்பாக அடைக்க வேண்டும்.
4. ஷவரில் குளிக்கும் போது அதிக நேரம் நின்று கொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. ஷவரில் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
5. வெயில் காலங்களில் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு குளிக்கலாம்.
6. வாஷிங் மிஷினில் துணி துவைக்கும்போது முழு கொள்ளளவையும் பயன்படுத்த வேண்டும். குறைவான அளவு மட்டுமே துணிகளை துவைக்கும் போது அதிகமாக தண்ணீர் செலவாகும்.
7. அக்குவா ஃபினா, கென்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்படுத்தும்போது வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
8. தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தொட்டி நிறைந்து தண்ணீர் வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
9. சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் லாரியில் தண்ணீரை பிடிக்கும்போது போட்டி போட்டுக்கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.
10. புதிதாக வீடு கட்டுபவர்கள் மழை நீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டினால் உங்களுடைய வருங்கால சந்ததியினர் அதிகம் பயன்பெறுவார்கள்.

-நன்றி விக்கிபீடியா,புதியதலைறை,தினகரன்,தினமலர்,விகடன்.நியூஸ்7.

உலக வண்ண தினம் ( International Colour Day (ICD ) மார்ச் 21.


உலக வண்ண தினம் ( International Colour Day (ICD ) மார்ச் 21.

பன்னாட்டு வண்ண நாள் ( International Colour Day (ICD ) எனும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன.



பன்னாட்டு வண்ண நாள்
International Colour Day
அதிகாரப்பூர்வ பெயர் பன்னாட்டு வண்ண நாள்
பிற பெயர்(கள்) ஐ சி டி ( ICD )
கடைபிடிப்போர் 30 க்கும் மேற்பட்ட நாடுகள்
நாள் மார்ச் 21
காலம் ஒருநாள்
நிகழ்வு ஆண்டுதோறும்
தொடர்புடையன வண்ணம்
அனைத்துலக வண்ண அசோசியேசன் ( International Colour Association


பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD)

பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) எனும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன..

இந்நாளையொட்டி வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் நம் குழு உறுப்பினர்களுக்காக இதோ !

அதாவது தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. அதிலும் வண்ணங் களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

அடர் சிவப்பு – cramoisy

அடர் நீலம் – perse / smalt

அடர் மஞ்சள் – gamboge

அயிரை/ அசரை – sandy colour

அரத்த(ம்) (நிறம்) – heliotrope / haematic

அருணம் – bright red, colour of the dawn;

அவுரி(நிறம்) – indigo

அழல் நிறம் – reddish colour of fire

ஆழ் சிவப்பு – cinnabar

ஆழ் செந்நீலம் (ஊதா) – claret

ஆழ் பழுப்பு – brunneous

ஆழ் பைம்மஞ்சள் – citrine

ஆழ்சிவப்பு – cramoisy

ஆழ்நீலச் சிவப்பு – aubergine

இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous

இருள் சிவப்பு – puccoon

இருள்சாம்பல் – slate

இள மஞ்சள் – flavescent / primrose

ஈய(ம்) (நிறம்) – plumbeous

ஈரல்நிறம் – Dark red colour, purple colour

உறைபால்(நிறம்) – whey

எண்ணெய்க்கறுப்பு – dark black colour

எலுமிச்சை ம் – citreous

ஒண்சிவப்பு – cardinal

ஒளிர் செஞ்சிவப்பு – phoeniceous

ஒளிர் செம்மை – coccineous

ஒளிர் வெண்கலம் – aeneous

ஒளிர் வெண்கலம் (நிறம்) – aeneous

ஒளிர்சிவப்பு – puniceous

ஒளிர்மஞ்சள் – sulphureous / vitellary

கசகசாச் சிவப்பு – ponceau

கடல்நீல (நிறம்) – ultramarine

கடற்பச்சை – cerulean

கத்தரிநீலம் – periwinkle நித்திய கல்யாணி

கபிலை / புகர்நிறம் – Tawny, brown or swarthy colour;

கரு (நிறம்) – sable

கருஞ்சிவப்பு – porphyrous/purpureal

கரும்பச்சை – corbeau

கருமை – nigricant / nigrine

காயாம்பூ (நிறம்) – purple colour

காளிமம் – black colour

கிளிச்சிறை – Gold resembling the parrot’s wing in colour

குங்குமச் சிவப்பு- vermeil

குங்குமப்பூ(நிறம்) – croceate / saffron

குரால் – Dim, tawny colour;

குருதிச்சிவப்பு – erythraean / sanguineous / incarnadine

குருதிச்செம்மை – vermilion

கோமேதக(நிறம்) -topaz

சருகிலை (நிறம்) – filemot

சாம்பல் – cinerious

சாம்பல் பச்சை – caesious / sage

சாம்பல் மஞ்சள – isabelline

சுடர் (நிறம்) – flammeous

சுடுமண்(நிறம்) – terracotta

சுதை வெண்மை – cretaceous

செக்கர் – reddish sky

செங் கருநீல(நிறம்) – violet / violaceous

செங்கருப்பு – piceous

செங்கல்மங்கல் – Dim red colour

செங்கற்சிவப்பு – lateritious / testaceous

செந்தீவண்ணம் – colour of glowing fire

செந்தூரச்சிவப்பு – minium

செப்புநிறம் – Dark-red colour

செம்பட்டை – Brown colour of hair

செம்பவளம் – deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு

செம்பழுப்பு – sinopia/ sorrel

செம்பு – Copper colour;.

செம்பூச்சி – kermes

செம்பொன் – titian

செம்மஞ்சள் -jacinthe

செவ்வல் (செந்நிறம்) – Redness;

சோணம் – Red colour, crimson colour

தசை (நிறம்) – sarcoline

தவிட்டுநிறம் – Brown, dun colour

திமிரம் – Colour ofDarkness

தும்பை நிறம் – pure white colour

துமிரம் – Deep red colour .

துரு (நிறம்) – ferruginous

துருச் சிவப்பு – rubiginous

துவர் (சிவப்பு) – Scarlet Red colour,

துவரி (காவிநிறம்) – Salmon colour

தூயபழுப்பு – sepia

தெள்ளுப்பூச்சி (நிறம்) – puce

நட்டுச்சினைமண் – A kind of earth of the colour of crab’s spawn

நல்சிவப்பு – coquelicot

நறுமஞ்சள் – lutescent

நன்மஞ்சள் – luteolous

நன்னிறம் – White colour

நீல (நிறம்) – azuline

நீல மணி – sapphire

நீலச்சாம்பல் – glaucous / cesious / gridelin / lovat

நீலச்சிவப்பு – amaranthine / solferino

நீலப்பச்சை – turquoise / viridian

பச்சை – chlorochrous

பசுமை – virid

பழுக்காய் – Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;

பழுப்பு மஞ்சள் – fulvous

பழுப்புச் சிவப்பு – castaneous / rufous / russet / umber

பழுப்புச்சாம்பல் – greige / taupe

பளீர்சிவப்பு – stammel

பனிவெண்மை – niveous

பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) – Colour of a class of pearls, resembling that of toddy

பால்வண்ணம் – white colour

புகர் நிறம் – tawny / tan

புகைக்கரி – fuliginous

புள்ளிச் சாம்பல் – liard grey

புற்பச்சை – prasinous

புறவு (நிற) – columbine

பூஞ்சல் – Brown- ish colour; மங்கனிறம்

பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) – Deep, ruddy colour;

பூவல்- Red colour

பைந்நீல(நிறம்) – teal

பைம்பொன் – chrysochlorous

பொன் மஞ்சள் – goldenrod

பொன்மஞ்சள் luteous

பொன்மை – aurulent

மகரம் – Pink colour

மங்கல் பழுப்பு – fuscous

மங்கல் பழுப்பு – khaki

மங்கல்பச்சை – eau-de-nil

மஞ்சள் – xanthic / icterine / icteritious

மஞ்சள் பச்சை – chartreuse / zinnober

மஞ்சள் பழுப்பு – lurid / ochre

மஞ்சள்சிவப்பு – wallflower

மணிச்சிவப்பு – rubious

மணிநிறம் – Dark blue colour, as of sapphire;

மயில்நீலம் – pavonated

மரகதப்பச்சை – smaragdine

மருப்பு (தந்தம்) – eburnean

மல்லிகை மஞ்சள் – jessamy

மாமை- dark-brown colour

முக்கூட்டரத்தம் – Red colour produced by chewing betel, arecanut and lime

முத்துச்சாம்பல் – griseous

வளர்பச்சை – virescent

வாதுமை (நிறம்) – ibis

வான் நீலம் – cyaneous

விண் நீலம் – celeste

விழி வெண்மை – albugineous

வெங்காயப் பச்சை – porraceous

வெண்சாம்பல் – hoary

வெண்மங்கல் – leucochroic

வெண்மஞ்சள் – ochroleucous

வெளிர் நீலம் – azure

வெளிர் பச்சை – celado

வெளிர் மஞ்சள் – nankeen

வெளிர் மஞ்சள் பச்சை – tilleul

வெளிர்நீலம் – watchet

வெளிர்பழுப்பு – suede

வெளுப்பு – albicant

வைக்கோல் (நிறம்) – stramineous


உலக மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் சுற்றி அனைத்து பெருகிய முறையில் சர்வதேச கலர் நாள் போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
நிறம் ஒரு சர்வதேச நாள் தத்தெடுப்பு அதன் தலைவர், மரியா ஜோவா Durao, சர்வதேச கலர் சங்கம் யோசனை வழங்கினார் போர்த்துகீசியம் கலர் சங்கம், 2008 இல் முன்மொழியப்பட்டது.
ஆலோசனை, தேசிய சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறிக்கும் இது இயற்றப்பட்டது இந்த சமூகத்தில், உறுப்பினர்கள் மத்தியில் 2009 ல் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தேதி தேர்வு விவாதம் ஒரு நல்ல ஒப்பந்தம் கொண்டதாகும். அனைத்து ஆலோசனைகளையும் மத்தியில், லியோனார்டு Oberascher (ஆஸ்திரியா இருந்து) மூலம் வெளிப்படும் யோசனை நிலவிய: ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 21 “சம இரவு நாள்” ஆகும்
சம இரவு நாள் முழுவதும், இரவும் பகலும் சுமார் சமமாக நீண்ட, அடையாள ஒளி மற்றும் இருள், ஒளி மற்றும் நிழல் நிரப்பு தன்மை தொடர்பான அனைத்து மனித கலாச்சாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன. சர்வதேச கலர் நாள்
கலை கண்காட்சிகள், கட்டடக்கலை திட்டங்கள், வடிவமைப்பு, அலங்காரம், ஃபேஷன்
கூட்டங்கள், விவாதங்கள், அறிவியல் நிகழ்வுகள் …
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் வண்ண ஒளி பயன்படுத்துவதை பட்டறைகள்.
வண்ண ஒளி வடிவமைப்பு போட்டிகள் தேசிய அல்ல.




வண்ணமும் வாழ்க்கையும்
வித்யா குருமூர்த்தி

கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம், ‘இந்த உலகத்தில் வண்ணங்களே இல்லையெனில் எப்படி இருக்கும்’ என்று கற்பனை செய்து  பாருங்கள். எவ்வளவு செயலற்றதாகவும் சலிப்பானதாகவும் இருக்கும்? நிறங்களற்ற வாழ்வில் எந்தக் கவர்ச்சியும் இல்லை!

வானவில்லின் 7 அடிப்படை நிறங்கள் மற்றும் அதன் கூட்டு சேர்க்கை என 2 ஆயிரத்துக்கும் அதிக நிறங்களை மனிதனால் வெறும் கண்ணில்  பிரித்தறிய இயலும். நம்மைச் சூழ்ந்துள்ள வண்ணங்கள் நம் மனநிலை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையது  என்பதை அறிவீர்களா? நம்மைச் சூழ்ந்துள்ள நிறங்களுக்கேற்ப கோபம், சந்தோஷம், அமைதி, உற்சாகம் போன்ற உணர்வுகளை நம் மனம்  பிரதிபலிக்கும்.

ஒவ்வொரு வண்ணமும் அதற்குரிய ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் (frequency) மற்றும் அதிர்வைக் (vibration) கொண்டது. மனிதர்கள் தங்கள் எண்ணங்கள் (thoughts) மற்றும் ஆளுமைகளை (personality traits) வெளிப்படுத்தும் காரணிகளாக நிறங்களை உபயோகிக்கின்றனர். சில அடிப்படையான நிறப் பிரிவுகள்...

முதன்மை (primary colors)

நிறங்கள் - சிவப்பு, மஞ்சள், நீலம்.

இரண்டாம் நிலை நிறங்கள் (secondary colors) - இரு முதன்மை நிறங்களின் இணைப்பால் உருவாவது.

எ-கா:  

சிவப்பு + மஞ்சள் = ஆரஞ்சு
நீலம் + மஞ்சள் = பச்சை

சூடான (warm) நிறங்கள் - சிவப்பு, மஞ்சள், பழுப்பு (brown).
குளுமையான (cold) நிறங்கள் - நீலம், பச்சை, ஊதா.

சிவப்பு: முதன்மையான மற்றும் மிகவும் துடிப்பான வண்ணம் இது. சக்தி (power) மற்றும் சுறுசுறுப்பை (active) குறிப்பது. அட்ரினல் சுரப்பு  மற்றும் நரம்புகளைத் தூண்டக்கூடிய வல்லமை உடையது. காதல், பாலியல் உணர்வைத் தூண்டுதல்,  நெருக்கம் (intimacy) ஆகியவற்றுடன்  நெருங்கிய தொடர்புடையது.

மஞ்சள்: மஞ்சள் நிற ஸ்மைலிகளை (smiley) கவனித்ததுண்டா? மஞ்சள் நிறத்துக்கு, மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டனின் (Serotonin)  வேதிப்பொருளை மூளை வெளிப்படுத்தத் தூண்டுவதில் பெரும்பங்கு உண்டு.

நீலம்: மனதுக்கு இதம் தரும் நிறம். குளியலறை, படுக்கை அறை போன்றவற்றுக்கு நீலத்தின் வெவ்வேறு ஷேடுகள் உகந்தவை. பெரும்  நிறுவனங்கள், பணப்புழக்கம் நிறைந்த வங்கிகள் போன்றவற்றில் நீலத்தின் ஆளுமை அதிகம். ஏனெனில், நம்பிக்கை (trust) / விசுவாசம்  (loyalty) போன்றவற்றுடன் நீல நிறம் நெருங்கிய தொடர்பு உடையது.

கருப்பு: ஆதிக்கம் (Dominance),  அதிகாரம்  (authority) போன்றவற்றைக் குறிப்பது. அறிவைப் பிரதிபலிக்கும் நிறம். அணிபவர்களுக்கு  மிகுந்த வனப்பை அளித்து, அழகை எடுத்துக்காட்டும் நிறமாகவும் இருப்பதால் ஃபேஷன் துறையின் தனித்துவச் சிறப்பு பெற்றிருக்கிறது.

வெள்ளை: மிகவும் நடுநிலை பெற்றது. பேபி புராடெக்ட்ஸ் (குழந்தைப் பராமரிப்புப் பொருட்கள்) வெண்மையைப் பிரதானமாகக்  கொண்டிருக்கும். சுத்தம், தூய்மை, அப்பழுக்கற்றது என்பதைக் குறிக்கும்.

அடர் ஆரஞ்சு + சிவப்பு: இந்தக் கலவை பசி உணர்வைத் தூண்டக் கூடியது. பிரபலமான உணவகங்கள், ஃபுட் ஜாயின்டுகள் போன்றவற்றில் இந்நிறங்களே பிரதானமாக இருக்கும்.

பச்சை: இயற்கை, ஆரோக்கியம், வளம் போன்றவற்றைக் குறிக்கும் நிறம். மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்  வல்லமை பசுமைக்கு உண்டு. பார்வையை மேம்படுத்தும் திறன் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது (வகுப்பறைப்  பலகைகள் பச்சை நிறத்தில் இருப்பதைக் கண்டிருக்கலாம்).



உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) மார்ச் 21.


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)  மார்ச் 21.

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான
பொம்மலாட்டம் , பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது ' கூத்து ' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.
தென்னிந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் இருபதாம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடனே இன்னும் நடைப்பெற்று வருவதை அவதானிக்கலாம்.


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)  ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான  பொம்மலாட்டம் என்பது  பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் ஒருவித கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது.  நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

தென் இந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை,  ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடனே இன்னும் நடைப்பெற்று வருவதை அவதானிக்கலாம்.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம், ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும், ஒரிசாவில் கோபலீலா எனவும், மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும், அசாமில் புதலா நாச் எனவும், ராஜஸ்தானில் காத்புட்லி எனவும், மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. பொம்மலாட்டம் என்பதை ஆங்கிலத்தில் ‘Puppet’ என அழைக்கப்படுவதோடு இலங்கையில்  ‘ரூகட’ என அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் ரூகட என்பது அறை உருவம் என்று விளங்குவதோடு உருவத்தின் மீதி அறைக்கான பங்களிப்பை பொம்மலாட்ட கலைஞனால் வழங்கப்படும். பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். தற்போது  அரசியல் விடயங்களும் முக்கியம் பெறுகின்றன.

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை பெரும்பாலும் முள் முருங்கை மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும்.

பல வகையான பொம்மைகளைக் காணலாம். இதனை உற்பத்தி செய்கின்ற பொருள், மற்றும் பொம்மையை இயக்குகின்ற முறைக்கமைய பொம்மைகள் வகைப்படுத்தப்படும். நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழல் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும்,  தோற்றத்தின் படி இருகோண, முக்கோண வடிவத்தில் நிர்மாணிக்கப்படும். பொம்மைகளின் படைப்பாளர்களின் திறமைக்கேற்றப்படி பொம்மை வகைகளை நிர்மாணிக்கின்ற போது அதில் ஒரு நிலையான தரத்தை காணலாம்.

உடல் உறுப்புகளின் அசையக்கூடிய இடங்களை பெரும்பாலும் மாதிரிக்கமைவாகவே நிர்மாணித்து அவற்றிற்கு துணி மணிகளை அணியவைத்து இயக்கும் பலகைகளில் பொருத்திக்கொள்ளப்படும். ஒவ்வொரு பாத்திரங்களின் தராதரம், தகைமைக்கு அமைய அந்தந்த கலைஞனால் தொடர்புப்பட்ட பொம்மையை நடிக்க வைக்கின்ற போது பொம்மலாட்ட கலையின் ஒப்பனை, ஒலி அமைப்பு, உரை, இசை, மேடை அலங்காரம் எனும் மேலும் பல துறைகள் ஒன்றிணைவதை காணலாம்.

ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்தலுக்கு பயன்படுத்தப்படும். தற்போது சிலர் எலக்ட்ரானிக்ஸ் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபு ரீதியாக இந்த கலை நிகழ்த்தப்படும். தென்இந்தியாவில் எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபாகப் பேணப்படுகின்றது.

அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும். பொம்மலாட்டத்தில் பொதுவாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார்.

இலங்கையில் பொம்மலாட்டக் கலை ஒரு நாட்டுப்புற கலையாக ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது. ஆயினும் இது ஒரு நாடகக் கலையாக பிரபல்யமடைந்தமை  சுமார் இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரென கருதப்படுகின்றது. இந்திய பொம்மலாட்ட நாடகத்தின் பாதிப்பு காரணமாக இக்கலை இந் நாட்டுக்கு கிடைத்திருப்பதோடு ‘ நாடகம் எனும் நாடக கலைக்கு பின்னர் பிரபல்யம் அடைந்திருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியா பிரதேசங்களில் இன்றும் பரலவாக காணக் கிடைப்பதோடு இப் பிரதேசங்களின் முன்னோடியான பொம்மலாட்ட வித்துவனாக கந்தெகொட பிரதேசத்தில் வாழ்ந்து வந்த திரு. பொடிசிரினா என்ற கலைஞரே கருதப்படுகின்றார். இவரது பிற்கால சந்ததியினர் சார்ந்த பல குடும்பங்கள் தற்போதும் இப் பாரம்பரிய பொம்மலாட்ட கலையை ஆடி வருகின்றனர். இக் குடும்பங்களை சார்ந்த உறவினர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் குடியேறியதினால் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலும் இக்கலையினை காணக்கூடியதாக உள்ளது.

இந் நாட்டில் பாரம்பரியமற்ற பொம்மலாட்ட கலை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பாதிப்பிற்கு உட்படடிருந்தது. பல்கலைக்கழக அறிஞர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததினால் இத்துறை பல நவீன பரிணாமங்களை இன்று அடைந்துள்ளது.  அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு கலை துறையான பொம்மலாட்ட நாடகக் கலையை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குவது கலைஞர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

உலக கவிதை தினம் மார்ச்21 (WORLD POETRY DAY)


 உலக கவிதை தினம் மார்ச்21  (WORLD POETRY DAY)

மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன.
இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும்”,,, எழுதி வெளியிடுவதை மற்றும் உலகம் முழுவதும் கவிதை கற்பித்தல் மற்றும், படித்தல்ஊக்குவிப்பது என்ற நோக்கில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.


உலக கவிதைகள் தினம்: கவிதை பற்றி சில புத்தகங்கள்

உலக கவிதைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான கவிதை பற்றிய புத்தகங்களை அறிந்துகொள்ள உதவும் தொகுப்பு இது.
கொங்குதேர் வாழ்க்கை
தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியானது. ஒன்றில் பழந்தமிழ் கவிதைகளும் மற்றொன்றில் புதுக்கவிதைகளும் அடக்கம். தமிழ் கவிதைகள் பற்றிய முழுமையான அறிமுகம் தரும் முக்கியமான தொகுப்பு நூல்.
கவிதை என்ன்னும் வாழ்வீச்சு
கவிஞர் ஆனந்த் எழுதிய கவிதை சார் கட்டுரைகளின் தொகுப்பு இது. சில ஆத்மாநாம், எம்.யுவன், பிரம்மராஜன் போன்ற சில கவிஞர்களின் கவிதையாக்கம் குறித்த மதிப்பீட்டுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. தமிழில் கவிதை பற்றி எழுதப்பட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நூல்.
நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்
கவிஞர் தேவதேவனுடன் வெவ்வேறு காலங்களில் நடத்தப்பட்ட கவிதை பற்றிய உரையாடலின் தொகுப்பு. கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே கவிதை ஏற்படுத்தும் உறவு, கவிதையில் படிமங்களுக்கான இடம், நல்ல கவிதையை வாசகன் கண்டுகொள்ளும் தருணம் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தேவதேவனின் பதில்கள் இதில் உள்ளன. முதல் பதிப்பில், கவிதை பற்றி என்ற தலைப்புடன் வெளியாகி, மறுமதிப்பில் 'நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்' என்ற பெயரில் வெளியானது.
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளக் கவிதைகளை அறிமுகம் செய்யும் மூன்று நூல்களில் ஒன்று. தற்கால மலையாளக் கவிதைகள், இன்றைய மலையாளக்கவிதைகள் ஆகியவை மற்ற இரு நூல்கள். இந்நூல்களில் ஜெயமோகன் மலையாளக் கவிஞர்கள் பற்றி எழுதியுள்ள அறிமுகக் குறிப்புகள் சிறப்பானவை.
சங்கச் சித்திரங்கள்
சமகால புதுக்கவிதை வாசகனுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிய ஈடுபாட்டையும் தேடலையும் அளிக்கும் முக்கியமான நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளியானபோது பரவலான வாசக கவனம் பெற்றது.
சமகால உலகக் கவிதை
உலக அளவில் கவிதை இயக்கம் பற்றிய திறப்பை அளிக்கும் நூல் இது. கவிஞர் பிரம்மராஜன் தொகுத்திருக்கும் இந்த நூல் உலக அளவில் குறிப்பிடத்தக்க 58 கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டது.

உலக டவுன் சிண்ட்ரோம் தினம் மார்ச் -21,(World Down Syndrome Day)



 உலக டவுன் சிண்ட்ரோம் தினம் மார்ச் -21,(World Down Syndrome  Day)


💕 *டவுன் சிண்ட்ரோம்* என்பது *மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது.*

💕 இந்த நோயானது *மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது.*

💕 இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த *ஐ.நா.  பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.*

💕 *‘டவுன் சிண்ட்ரோம்’* - ஒரு பார்வை..
___________________

💕 *‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள்  என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு… இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது.*

💕 *மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.*

💕 *டவுன் சிண்ட்ரோம் பாதித்த குழந்தையை அடையாளம் காணுதல்:*

⭕ *தட்டையான முகம்,*

⭕ *சரிவான நெற்றி,*

⭕ *கண்கள்மேல் நோக்கிச் சாய்ந்திருத்தல்,*

⭕ *தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர்.*

⭕ *மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று ரேகைக்கு பதில் ஒரு ரேகையுடன் இருப்பர்.*

💕  *காரணங்கள்*


💕 *பொதுவாக, உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும், மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும். இவை, ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாக்கத்தில், தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும், 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும். இந்த குரோமோசோம் இணைவின்போது, தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும், 21-வது குரோமோசோமுடன், அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால், 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும், 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வு தான், டவுண் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத்தன்மை இருக்கும் என்பதால், தமிழில் இது, மன நலிவு’ எனப்படுகிறது.*

💕 *கண்டறியும் முறை:*


💕 *இவர்களுக்கு, இயல்பான தசை உறுதி குறைந்து, தளர்வாக இருக்கும்.*

💕 *பிறக்கும்போது எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும்.*

💕 *தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும்.*

💕 *காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக் கொண்டும் காணப்படும்.*

💕 *டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி நிலை:*


❗ *சீரானதாக இருக்காது. இவர்களின் உடல், மன வளர்ச்சி, மற்ற குழந்தைகளைவிட குறைவாகவே இருக்கும்.*

❗ *இந்தக் குழந்தைகள் தவழ்வது, உட்காருவது போன்றவற்றைச் செய்ய, மற்றக் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிக காலம் எடுத்துக் கொள்வர்.*

💕 *பரிசோதனை முறைகள்:*

🔆  *டி.என்.ஏ., பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம், குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம்.*

🔆  *ரத்தப் பரிசோதனையில், தாயின் ரத்த மாதிரி பரிசோதித்து அறியப்படும்.*

🔆 *மீயொலி பரிசோதனை மூலம், குழந்தையின் பின் கழுத்து பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால், குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.*


💕 *பொது வாழ்க்கை முறையை மேற்கொள்ளுதல்:*


*இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், மன நலிவு குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.*
___________________