வியாழன், 17 மே, 2018

சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18



சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18

ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதேபோல் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்இ இத்தினம் 1977ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகின்றது
.

சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்" என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.


2009 "Museums and tourism"
2008 "Museums as agents of social change and development"
2007 "Museums and Universal Heritage"
2006 "Museums and young people"
2005 "Museums bridging cultures"
2004 "Museums and Intangible Heritage"
2003 "Museums and Friends"
2002 "Museums and Globalisation"
2001 "Museums: building community"
2000 "Museums for Peace and Harmony in Society"
1999 "Pleasures of discovery"
1998-1997 "The fight against illicit traffic of cultural property"
1996 "Collecting today for tomorrow"
1995 "Response and responsibility"
1994 "Behind the Scenes in Museums"
1993 "Museums and Indigenous Peoples"
1992 "Museums and Environment"


சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.



உலக அருங்காட்சியக நாள் ( International Museum Day ) மே 18

உலகின் மிகப் பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் "பிரிட்டிஷ் அருங்காட்சியகம்"

உலக வரலாற்றின் 80 லட்சத்திற்கும் மேலான சேகரிப்பை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
மனிதன் உருவான காலத்திலிருந்து இப்போது வரையிலான வரலாறு, கலை, கலாச்சாரம் தொடர்பான ஆதாரங்களையும், வேலைப்பாடமைந்த வினோத பொருள்களையும், கதை ஆவணங்களையும் அதிக அளவிலும் விரிவான முறையிலும் விளக்கும் உலக வரலாற்றின் ஒரு வாழ்விடம் என்றே இந்த அருங்காட்சியத்தை சொல்லலாம்.

பிரிட்டனின் டாப் 15 அருங்காட்சியகங்கள் இவை தான்!

பிரிட்டன் நாடு அருங்காட்சியகங்களுக்கு பெயர் பெற்றதாகும். கலாச்சாரம், விளையாட்டு, மீடியாக்கள் ஆகிய துறைகள் கொண்ட அருங்காட்சியகங்கள், புகைப்பட காட்சியகங்கள் ஆகியவைகளின் முன்னணி பட்டியல் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் போன வருடத்தை விட இந்த வருடம் மூன்று மில்லியன் அளவுக்கு குறைந்துள்ளது.

இந்த பட்டியலில் பிரிட்டீஷ் அருங்காட்சியகம் முதல் இடத்தை பிடிக்கிறது.
முதல் 15 இடங்களுக்கான பட்டியல் :
1. British Museum
2. National Gallery
3. Tate Modern
4. Natural History Museum
5. Science Museum
6. V&A Museum
7. Royal Museums Greenwich
8. National Portrait Gallery
9. White Tower
10. Tate Britain
11. IWM London
12. Horniman Museum
13. Science National Railway
14. Science and Industry Manchester
15. Tate Liverpool

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு



தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். கடந்த 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

மாணவராக இருந்த போதே பிரபாகரன் தமிழ் ஆதரவாளர் கள் குழுவில் இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந் தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.

பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, “உங்களுக்கோ, குடும்பத் துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம். என்போக்கில் விட்டு விடுங் கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின் வீடு திரும்பவேயில்லை. கடந்த 1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறையும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர் கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது.

பார்லிமென்டில் தமிழ்த்தலைவர் களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாணவர் பேரவை துவங்கப் பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை “தம்பி’ என்றே எல்லாரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பஸ்சை எரிப்பது என்று முடிவு செய்தனர். அதன் படி 16 வயதாக இருந்த
பிரபாகரன், பஸ்சை எரித்து தனது போராட்டத்தை துவக்கினார்.
மாணவர் பேரவையில் இருந்தவர்களை, சிங்கள போலீசார் கைது செய்து கொழும்பில் சித்திரவதை செய்தனர். இச்சூழ்நிலையில் பிரபாகரன் தமிழகம் வந்தார். பின் 1972ல் இலங்கை திரும்பிய அவர், “புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தை துவக்கினார். ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.

கடந்த 1974ம் ஆண்டில் யாழ்ப் பாண நகரில் தமிழ் ஆதரவு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். இச்சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, 1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த, யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப் பட்டார். துரையப்பா, இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர், தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தவர். இச்சம்பவத்தை முன்னின்று நடத்தியவர் பிரபாகரன். இதுதான் பிரபாகரனின் முதல் கொலை நடவடிக்கை.

கடந்த, 1975ல் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்து, ஐந்து லட்ச ரூபாய் மற்றும், இரண்டு லட்ச ரூபாய் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றார். இதனால் சிங்கள போலீசார் புதிய தமிழ்ப் புலிகளை அழிக்க தீவிரம் காட்டினர். கடந்த, 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை – தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக, புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார். இலங்கை உளவுப் படையினரை அழித்தல், போலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், ராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.


கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை ராணுவம் அவரை தேடத் தொடங்கியது. போலீசார் மீதும், ராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த, 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் இலங்கை பார்லிமென் டில் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தனா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப் படுத்தும் வேலையில் பிரபாகரன் ஈடுபட்டார். 1981ல் சிங்கள ராணுவமும், ஐக்கிய தேசிய கட்சியினரும் இணைந்து யாழ்ப் பாண நூலகத்தை எரித்தனர். தெற்காசியாவில் சிறந்ததாக கருதப்பட்டது இந்த நூலகம். 94 ஆயிரம் புத்தகங்கள் சாம்பலாகின.
கடந்த, 1981ல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே ராணுவத்தினர் மீது புலியினர் நடத்திய முதல் தாக்குதல். 1982ல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத் துக்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணிவெடிகுண்டுகளை புதைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த, 1983 உள்ளூராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், ராணுவத்தினரை நிலைகுலைய செய்தது, கண்ணிவெடித்தாக்குதலில் 13 ராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபாகரன் நேரில் நடத்தினார். இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின. இதையடுத்து கண்ட இடத்தில் போராளிகளை சுடவும், சுட்டுத் தள்ளிய பின் பிணங்களை பிரேத பரிசோதனை இன்றி புதைக்கவும் வழிசெய்யும் ஆணையை சிங்கள அரசு பிறப்பித்தது.

அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள ராணுவம் அதிகரித்தது கருப்பு ஜூலை என்று அழைக்கப் படும், 1983 ஜூலை 23ல், சிங்களர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடந்த, 1983 ஜூலை, தமிழ் ஈழப் போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம். ராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபாகரன் தொடங்கினார். அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.
இந்தியா ஆயுத பயிற்சி: கருப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திரா, இலங்கை பிரச்னையில் தலையிடுவது என்று முடிவு செய்தார். இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முயற்சி செய்தார். புலிகளுக்கு ராணுவ பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இந்நேரத்தில், தமிழ் ஈழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர். இந்நேரத்தில் இலங்கை அரசு கலக்கம் அடைந்திருந்தது. தமிழ் ஈழ மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.

அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார். இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு அக்., 1ம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர். இவர்களில் சார்லஸ் அந்தோணி தற்போது போர் முனையில் மரணமடைந்துவிட்டார்.

திம்பு மாநாடு: கடந்த, 1985ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் போர்நிறுத்தம் ஏற்பட்டது. பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்பின், திரிகோணமலை அருகே, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது. இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவுக்கும் – பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்பு: கடந்த, 1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங் கள் பறிக்கப் பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப் பட்டன. 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், “தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்’ என்றார்.
கடந்த, 1987ம் ஆண்டில் டில்லியில் ராஜிவைச் சந்திக்கும் வழியில், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையும் பிரபாகரன் சந்தித்தார். ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் பற்றி அப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக பிரபாகரன் கூறினார். மற்ற தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்று கூறி, அப்போது ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் நிறைவேறியது.

அமைதிப்படை: இந்த ஒப்பந்தப்படி, ஆயுதங்களை புலிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இந்திய அமைதிப் படை இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடக்காமல் கண்காணிக்கும். இதுபற்றி பேசிய பிரபாகரன், “மக்களது விடுதலைக்காக, விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து, தமிழ் ஈழ மக்களின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறது.
நாங்கள் ஆயுதங்களை அளிக்காவிட்டால் இந்திய ராணுவத்துடன் மோதும் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழ் ஈழ தனி அரசே நிரந்தரத் தீர்வைத் தரும்’ என்றார். பலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலிருந்த விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கோரி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய கொள்கை உறுதியால் உண்ணாவிரதத்திலேயே மரணமும் அடைந்தார்.
திலீபன் மரணத்துக்குப் பின், விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. “இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது’ என்று கூறிய ஏழு புலிகள் சயனைடு குப்பிகளைச் சாப்பிட்டு மரணம் அடைந்தனர். புலிகளும் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் போராடுவது குறித்து, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், “இந்திய ராணுவம் புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் எங்களது தற்காப்புக்காகப் போராடி வருகிறோம்’ என்று பிரபாகரன் எழுதியிருந்தார்.
1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவுக்கு எழுதினார் பிரபாகரன். இந்த சமயத்தில் பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார். பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர் ளை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடந்து கொண்டது எனக் கூறி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராணுவத்தினரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை. அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.

குற்றச்சாட்டுகள்: கடந்த, 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப் பட்டார். ராஜிவ் -ஜெயவர்தனே மற்றும் அமைதிப்படை விவகாரங்களில் பிரபாகரன் அதிருப்தி அடைந் தது அதற்கு காரணமாக சொல்லப் பட்டது. 2006ல் ராஜிவ் படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, “ஒரு துன்பியல் சம்பவம்’ என்றார்.

தமிழ் ஈழ விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலைகளிலும், 1990ல் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் பத்மநாபா மற்றும் அவரது சகாக்கள் 14 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. அதிபர் பிரேமதாசா, அதிபர் வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது.
முப்படை அமைப்பு: புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை – 1984 ம் ஆண்டு முதல் பிரபாகரன் முயற்சி செய்ததன் விளைவாக 1992ல் உருவாக்கப் பட்டது) மற்றும் வான்புலிகள் (விமானப்படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.

கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம் போல் வெற்றி பெறவில்லை. இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது.
2005ல் ராஜபக்ஷே அதிபர் ஆனபின், நார்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில் பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.
கடந்த ஆண்டு இறுதியில், புலிகளின் கிழக்குப் பகுதியில் கடுமையாக சண்டை நடந்தது. 2009 புலிகளுக்கு சோகமானதாகவே இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது. ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. இப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.

இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக் கணக் கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். புலிகள் இருக்கும் இடத் துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் அந்தோணி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஈழப் போராட்டத்தில் 70 ஆயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.

வான்படை உருவாக காரணமான சார்லஸ்: புலிகளின் வான்படை உருவாக காரணமாக இருந்த சார்லஸ் அந்தோணி பலியானது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று அதிகாலை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிவுக்கு வந்த பின், ராணுவ வீரர்கள் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டையில் பலியான புலிகளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், 24 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் சடலம் என தெரிய வந்துள்ளது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் சண்டையில் பலியானார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்லஸ் அந்தோணி இறந்த நிலையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. சார்லஸ், ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர். புலிகள் வான்படையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். தகவல் தொடர்பு பிரிவையும் கவனித்து வந்தார். சமீப காலமாக நடந்த சண்டைகளை சார்லஸ் தான் தலைமையேற்று நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதேபோல், தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின் புலிகள் அரசியல் பிரிவு தலைவராக பதவியேற்றவர் நடேசன். இவர், இலங்கையில் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஈர்த்துள்ளது

உலக தொலைத்தொடர்பு தினம் மே 17.



உலக தகவல் சமூக தினம் மே 17   (World Information Society Day

உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு
தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது.
 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும்
இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.

உலகத் தகவல் சமூக நாள்

நவம்பர் 2005இல் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாடு தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) இன்றியமையாமை மற்றும் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல்வேறு எழுவினாக்களைக் குறித்துமான குவியத்தை ஏற்படுத்த மே 17ஆம் நாளை
உலக தகவல் சமூக நாள் என்று அறிவிக்க
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது. மார்ச்சு 2006 அன்று பொதுச்சபை அவ்வாறே தீர்மானம் (A/RES/60/252) நிறைவேற்றியது. முதல் உலக தகவல் சமூக நாள் மே 17, 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள்

நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண்டாட தீர்மானித்தது. இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானம் 68 உறுப்பினர் நாடுகளையும் துறை உறுப்பினர்களையும் ஆண்டுதோறும் தேசியளவில் தகுந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தது.


 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் மே 17.

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.
நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.
தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.
இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.


மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.
1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தொரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.
மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது
அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.
ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது.. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .
அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. 'நெவிகேடர்" மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.
அதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.

செவ்வாய், 15 மே, 2018

சர்வதேச குடும்ப தினம் மே 15.


சர்வதேச குடும்ப தினம் மே  15.

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
“இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதைக் கூட வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பது வேதனையிலும் வேதனை. ஆம்.. இளைய தலைமுறையினரின் மெத்தனப்போக்கு, தான்தோன்றித் தனம், கட்டுப்பாடில்லா வாழ்க்கை முறை போன்றவை தற்போது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. காதல், திருட்டு, வன்முறை போன்றவற்றால் பிஞ்சு மனம் நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம். மேலும் சீரழிந்து வரும் கலாசார மாறுபாடும் இது போன்ற சம்பவங்களுக்கு அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. கணவன், மனைவி உறவில் விரிசல், மாமியார், மருமகளிடையே நல்லிணக்கம் இல்லாமை போன்றவற்றால் காலம் காலமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும்.இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை.
உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.
பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.
இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது.தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும்.
இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும்.
அதிலும் முன்னரே குறிப்பிட்ட இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. அதாவது ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போ விட்டோம்.முன்னெக்காம் கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருந்தவர்கள் சிலர் இருந்தன்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்டக் குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினமின்று மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன் மே 15 இன்று காலமானார்.


பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன் மே 15 இன்று காலமானார்.

பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிகிறது.
மறைந்த பாலகுமாரனுக்கு மனைவி கமலா, துணைவி சாந்தா, மகள் கவுரி, மகன் சூர்யா ஆகியோர் உள்ளனர். இதில் சூர்யா, சினிமா இயக்குனர்.
ஏராளமான சிறுகதை, நாவல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது, மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரை, தாயுமானவன் ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்ஷா, டைரக்டர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உட்பட சுமார் 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்ற ஊரில் பிறந்தவர். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜுடன் இணைந்து சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ’இது நம்ம ஆளு’ படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.


பாலகுமாரன் (Balakumaran, சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் , திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்ப்பார்வையில் இயக்கினார்.


படைப்புகள்
புதினங்கள்
அகரவரிசையில்
கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் இடம்பெற்றுள்ள நூலின் பெயர்
வெளியீட்டாளர் பெயர்
முதற்பதிப்பு ஆண்டு குறிப்பு
அகல்யா - - அகல்யா (5ஆவது நூல்) - -
அடுக்கு மல்லி - - - - -
அத்திப்பூ - - - - -
அப்பம் வடை தயிர்சாதம் - குமுதம் - - -
அப்பா! 1993 - - - -
அமிர்தயோகம் - - - - -
அம்மாவும் பத்து கட்டுரைகளும் - - - - -
அரசமரம் - - - - -
அவரும் அவளும் - - - - -
அன்பரசு - - - - - மாணிக்கவாசகர் புராணம்
ஆசை என்னும் வேதம் - - - - -
ஆசைக்கடல் - - - - -
ஆயிரம் கண்ணி - - - - -
ஆருயிரே மன்னவரே - - - - -
ஆனந்த யோகம் - - - - - தாயுமானவர் புராணம்
ஆனந்த வயல் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
இதுதான் வயது காதலிக்க... - - - - -
இரண்டாவது கல்யாணம் - - - - -
இரண்டாவது சூரியன் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
இரும்பு குதிரைகள் 1984 கல்கி
இரும்புக் குதிரைகள் (7ஆவது நூல்)
- - மோட்டார் தொழில் பற்றிய கதை
இனி என் முறை - - - - -
இனிது இனிது காதல் இனிது - - - - -
இனிய யட்சினி - - - - -
உச்சித் திலகம் - - - - -
உடையார் - - - - - தஞ்சை பெருவுடையார் கோவிலின் கதை
உத்தமன் - - - - -
உள்ளம் கவர் கள்வன் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
உறவில் கலந்து உணர்வில் நனைந்து - - - - -
எங்கள் காதல் ஒரு தினுசு - - - - -
எட்ட நின்று சுட்ட நிலா - - - - -
எதிர்ப்பக்கம் - கல்கி
நானே எனக்கொடு போதி மரம்
- ஏப்ரல் 1989
திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை
என் அன்புள்ள அப்பா - - - - -
என் கண்மணி - - என் கண்மணி (20ஆவது நூல்) - -
என் கண்மணித் தாமரை - - - - -
என் மனது தாமரைப்பூ - -
என் மனது தாமரைப்பூ (18ஆவது நூல்)
- -
என்றென்றும் அன்புடன் - -
என்றென்றும் அன்புடன் (9ஆவது நூல்)
- -
என்னுயிரும் நீயல்லவோ - - - - -
என்னுயிர் தோழி - - - - -
ஏதோ ஒரு நதியில் - -
ஏதோ ஒரு நதியில் (2ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
- குறுநாவல்
ஏழாவது காதல் - - - - -
ஏனோ தெரியவில்லை - - - - -
ஒரு காதல் நிவந்தம் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல்
ஒரு சொல் - - - - - காஞ்சி சங்கரர் கதை
கங்கை கொண்ட சோழன் - - - - - 'கங்கைகொண்டசோழபுரத்தின் கதை
கடல் நீலம் - -
நானே எனக்கொரு போதிமரம் (28ஆவது நூல்)
- 1989 ஏப்ரல்
கடலோரக் குருவிகள் - - - - -
கடற்பாலம் - - கடற்பாலம் (15ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
கடிகை - - - - -
கண்காட்சி - - - - -
கண்ணாடிக் கோபுரங்கள் - - - - -
கண்ணே கலைமானே - - - - -
கரையோர முதலைகள் - -
கரையோர முதலைகள் (14ஆவது நூல்)
- -
காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை
கர்ணனின் கதை - - - - -
கல்குதிரை - - - - -
கல்யாண முருங்கை - - - - -
கல்யாணத் தேர் - - - - -
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - - - - -
கவிழ்ந்த காணிக்கை - - - - -
திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை
கள்ளி - - - - -
கற்றுக்கொண்டால் குற்றமில்லை - - - - -
கனவு கண்டேன் தோழி - - - - -
கனவுகள் விற்பவன் - - - - -
காதல் சொல்ல வந்தேன் - - - - -
காதல் வரி - - - - -
காதல் வெண்ணிலா - - - - -
காதற் கிளிகள் - - - - -
காதற் பெருமான் - - - - - அருணகிரிநாதர் புராணம்
காமதேனு - - - - -
காற்றுக்கென்ன வேலி - - - - -
கானல் தாகம் - - - - -
கிருஷ்ண மந்திரம் - - - - -
குயிலே குயிலே - - - - -
குரு - - - - -
கூடு - - - - -
கை வீசம்மா கை வீசு - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
கொஞ்சும் புறாவே - - - - -
கொம்புத்தேன் - - கொம்புத்தேன் (13ஆவது நூல்) - -
சக்ரவாஹம் - - - - -
சக்தி - - - - -
சிநேகமுள்ள சிங்கம் - - - - -
சிம்மாசனம் - - - - - குமரகுருபரர் கதை
சின்ன சின்ன வட்டங்கள் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - - - - -
சுழற்காற்று - - - - -
செண்பகத்தோட்டம் - - - - -
செப்புப் பட்டயம் - - - - -
செவ்வரளி - - என் கண்மணி (20ஆவது நூல்) - - விலங்கு மருத்துவனின் கதை
தங்கக் கை - - - - -
தனரேகை - - - - -
தனிமை தவம் - - - - -
தாயுமானவன் - - தாயுமானவன் (19ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
திருப்பூந்துருத்தி - - - - -
திருமணமான என் தோழிக்கு - - - - -
திருவடி - - - - -
துணை - - - - -
துளசி - - - - -
தென்னம் பாளை - - - - -
தொப்புள் கொடி - - - - -
தோழன் - - - - -
நல்ல முன்பனிக்காலம் - - - - -
நான்காம் பிறை - - - - -
நான் என்ன சொல்லி விட்டேன் - - - - -
நிகும்பலை - - - - -
நிலாக்கால மேகம் - -
நிலாக்கால மேகம் (12ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
நிலாவே வா - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
நிழல் யுத்தம் - - நிழல் யுத்தம்
நர்மதா பதிப்பகம், சென்னை
1987 நவம்பர்
சங்கரன் மகள் லலிதாவிற்கும் முரளிக்கும் நடந்த மணவாழ்க்கை
நீ வருவாய் என - - நீ வருவாய் என (8ஆவது நூல்) - -
நெளி மோதிரம் - - - - -
நெல்லுச் சோறு - - - - -
நேற்று வரை ஏமாற்றினாள்! - - - - -
பச்சை வயல் மனது - -
பச்சை வயல் மனது (6ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
பட்டாபிஷேகம் - - - - -
பணம் காய்ச்சி மரம் - - - - -
பந்தயப் புறா - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
பயணிகள் கவனிக்கவும் - - - - -
பவழமல்லி - - - - -
பனி விழும் மலர் வனம் - - - - -
பலாமரம் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
பிரம்புக்கூடை - - - - -
புருஷ வதம் - - - - -
பெண்ணாசை - - - - - 'பீஷ்மரின் கதை
பெரிய புராணக் கதைகள் - - - - -
பேய்க் கரும்பு - - - - -
பொய்மான் - - - - -
பொன்னார் மேனியனே - - - - -
போகன் வில்லா - - - - -
போராடும் பெண்மணிகள் - - - - -
மணல் நதி - - - - -
மரக்கால் - - மரக்கால் (17ஆவது நூல்) - - விபத்தில் காலை இழந்த சிறுவனின் கதை
மனக் கோயில் - - - - -
மனசே மனசே கதவைத் திற - - - - -
மனம் உருகுதே - - - - -
மண்ணில் தெரியுது வானம்
மாலை நேரத்து மயக்கம் - - - - -
மாவிலைத் தோரணம் - - - - -
மானச தேவி - - - - -
மீட்டாத வீணை - - - - -
முதிர்கன்னி - - - - -
முந்தானை ஆயுதம் - - - - -
முன்கதைச் சுருக்கம் - - -
நர்மதா பதிப்பகம், சென்னை
-
மெர்க்குரிப் பூக்கள் - சாவி
மெர்க்குரிப் பூக்கள் (3ஆவது நூல்)
- - தொழிற்சங்க ஊழியனின் கதை
மெளனமே காதலாக... - -
மெளனமே காதலா (4ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
மேய்ச்சல் மைதானம் - - - - -
யானை வேட்டை - -
யானை வேட்டை (23ஆவது நூல்)
- - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கதை
ரகசிய சிநேகிதனே - - - - -
ராஜ கோபுரம் - - - - -
வன்னி மரத் தாலி - - - - -
வாலிப வேடம் - - - - -
வாழையடி வாழை - - - - -
விழித்துணை - - விழித்துணை (234ஆவது நூல்) - -
வில்வ மரம் - - வில்வமரம் (22ஆவது நூல்)
நர்மதா பதிப்பகம், சென்னை
-
வெற்றிலைக் கொடி - - - - -
வேட்டை - - - - -
கட்டுரைகள்
காதலாகிக் கனிந்து
ஞாபகச் சிமிழ்
சூரியனோடு சில நாட்கள்
அந்த ஏழு நாட்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
பாலகுமாரன் கட்டுரைகள்
சிறுகதைகளும் கட்டுரைகளும்
சிறுகதைத் தொகுப்புகள்
சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
சுகஜீவனம்
கடற்பாலம்
கவிதைத் தொகுப்புகள்
விட்டில்பூச்சிகள்
சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள்
விசிறி சாமியார் (1991 திசம்பர்)
வாழ்க்கை வரலாறுகள்
பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
தன்வரலாறு
முன்கதைச் சுருக்கம்
இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமரா
ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்
பாலகுமாரன் சிறுகதைப்பட்டியல்
(அகரவரிசைப்படி முறைப்படி)
கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் தொகுப்பின் பெயர்
வெளியீட்டாளர் பெயர்
முதற்பதிப்பு ஆண்டு
இடையினங்கள் - - விசிறி சாமியார்
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை
1991
ஒன்றானவன் - - - -
ஒன்றுமில்லாதவர்கள் - - விசிறி சாமியார்
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை
1991
ஓசையற்ற அலறல் - அமுதசுரபி
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989
கரை தொடும் அலைகள் - 1989 குங்குமம்
நானே எனக்கொரு போதிமரம்
ஏப்ரல் 1989
கல் பரிசல் - - விசிறி சாமியார்
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை
1991
சிட்டுக்குருவியும் ஸ்வர்ணலதாவும் - இதயம் பேசுகிறது
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989
தாக்கம் 1989 குங்குமம்
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989
தோழி - - - - -
நானே எனக்கொரு போதிமரம் - சாவி
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989
பாகல் - - விசிறி சாமியார்
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை
1991
மின்மினிக்கூட்டம் - - விசிறி சாமியார்
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை
1991
விகல்பம் 1988 அக்டோபர்
ஜாப் கைடுலைன்ஸ்
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989
ஸ்திரீ லோலன் - ஆனந்த விகடன்
நானே எனக்கொரு போதிமரம்
- ஏப்ரல் 1989

திரைக்கதைகள்

வ.எண் திரைப்படத்தின் பெயர்
வெளியான நாள் இயக்குநர் நடிகர்
01 நாயகன் 1987 மணிரத்னம் கமல்ஹாசன்
02 குணா 1992 சந்தான பாரதி கமல்ஹாசன்
03 செண்பகத் தோட்டம் 1992 மனோபாலா
04 ஜென்டில்மேன் 1993 சூன் 30 ஷங்கர் அர்ஜுன்
05 காதலன் 1994 பிப்ரவரி 19 ஷங்கர் பிரபுதேவா
06 கிழக்கு மலை
07 மதங்கள் எழு
08 ரகசிய போலிஸ்
09 பாட்ஷா 1995 சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்த்
10 சிவசக்தி 1996 சுரேஷ் கிருஷ்ணா சத்யராஜ்
11 உல்லாசம் 1997 ஜெ. டி. ஜெர்ரி
அஜித் குமார்
12 வேலை
13 வல்லவன்
14 ஜீன்ஸ் ஷங்கர் பிரசாந்த்
15 முகவரி 2000 வி. இசட். துரை
அஜித் குமார்
16 உயிரிலே கலந்து
17 சிட்டிசன் 2001 சரவண சுப்பையா
அஜித் குமார்
18 மஜ்னு 2001 ரவிச்சந்திரன் பிரசாந்த்
19 கிங் 2002 சாலமோன் விக்ரம்
20 காதல் சடுகுடு 2003 ஏப்ரல் 13 விக்ரம் வி. இசட். துரை
21 மன்மதன்
22 கலாபக் காதலன் 2006 பிப்ரவரி 17 ஆர்யா
23 புதுப்பேட்டை 2006 மே 26 செல்வராகவன் தனுஷ்

விருதுகள்

இலக்கிய விருதுகள்
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
கலை
கலைமாமணி

திரையுலக விருதுகள்

தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
மறைவு
மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஞாயிறு, 13 மே, 2018

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் எலியட் சுக்கர்பெர்க் பிறந்த நாள்: மே 14 , 1984 .


ஃபேஸ்புக்  நிறுவனர் மார்க் எலியட் சுக்கர்பெர்க் பிறந்த நாள்: மே 14 , 1984 .

மார்க் எலியட் சுக்கர்பெர்க் ( ஆங்கிலம் :Mark Elliot Zuckerberg , பிறப்பு: மே 14 , 1984 ) ஒரு
அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார். அவர் தொழில் துவங்கியதைப் பற்றிய சச்சரவுகளின் பொருளாக அவர் உள்ளார்.
2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக சுக்கர்பெர்க்கை சேர்த்தது. அவரது வலைத்தளத் தோற்றப்பாடு, பேஸ்புக் ஆகியவற்றிற்காக அறிவியலர்கள் & சிந்தனையாளர்களின் கீழ் வரும் 101 மனிதர்களுள் 52வதாகத் தரவரிசைப் படுத்தப்படுகிறார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்இருந்து ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்புடன் சுக்கர்பெர்க் இளம் தொழிலதிபராக இருக்கிறார்.


மார்க் சுக்கர்பெர்க் "உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக" டைம் இதழின் 2010ஆம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு மார்க் எலியட் சுக்கர்பெர்க்
மே 14, 1984 (அகவை 34)
ஒயிட் பிளைன்ஸ்,
நியூயார்க்
இருப்பிடம் பாலோ ஆல்டோ,
கலிபோர்னியா
தேசியம் அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்
ஹார்வர்ட் கல்லூரி (2004 இடையில் வெளியேறினார்)
பணி இணை-நிறுவனர், முதன்மை செயல் அதிகாரி & தலைவர் ஃபேஸ்புக்
செயல்பட்ட
ஆண்டுகள்
2004–தற்போதுவரை
அறியப்படுவது Co-founding Facebook; இளவயது பில்லினியர் வளர்ந்திருப்பவர்
சொந்த ஊர்
டாப்சு பெரி, நியூயார்க்
சொத்து மதிப்பு
US$ 6.9 billion (2010)
உறவினர்கள் ராண்டி சுக்கர்பெர்க் (தமக்கை)
விருதுகள் டைம் பத்திரிக்கை


ஆரம்பகால வாழ்க்கை

நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில் சுக்கர்பெர்க் பிறந்தார். நியூயார்க்கில் உள்ள டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்தார். அவர் நடுநிலைப்பள்ளியில் இருந்த போதே நிரலாக்கம் செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் சுக்கர்பெர்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகள் மற்றும் விளையாட்டுகள் நிரலாக்கங்களில் ஆர்வமாய் இருந்தார். பிலிப்ஸ் எக்ஸெட்டர் அகாடமியில் சேர்வதற்கு முன்பு அர்ட்ஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்று கொண்டிருந்தார். “உயர்நிலைப் பள்ளியில் அவர் இலக்கியங்களில் சிறந்து விளங்கினார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார். அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார்; அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார். மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயனர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கு செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் மற்றும் AOL ஆகிய நிறுவனங்கள் சினாப்சிஸை வாங்கி சுக்கர்பெர்க்கை பணியமர்த்த முயற்சித்தது. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார். அங்கு அவர் ஆல்ஃபா எப்சிலிலோன் பீ என்ற அதன் துணைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் த இல்லியாட் போன்ற வீரகாவியங்களில் இருந்து ஒப்புவிக்கும் வரிகளுக்காக அறியப்பட்டார்.


ஃபேஸ்புக்

நிறுவுதல்

பிப்ரவரி 4, 2004 அன்று சுக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியார்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளியிடும் நீண்ட-கால மரபுடைய வழக்கம் இருந்தது. அது "ஃபேஸ்புக்" என அறியப்பட்டிருந்தது. கல்லூரியில் ஒருமுறை சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது "ஹார்வர்டு-நினைவு" என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா , கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். மேலும் பின்னர் ஹார்வர்ட்டின் சமுதாய இணைப்புடன் மற்ற பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.

கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்தல்

மோஸ்கோவிட்ச் மற்றும் சில நண்பர்களுடன் சுக்கர்பெர்க் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர்கள் ஒரு சிறிய இல்லத்தை குத்தகைக்கு எடுத்து அவர்களது முதல் அலுவலகமாக மாற்றினர். அந்தக் கோடைகாலத்தில் அந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்த பீட்டர் தீலை சுக்கர்பெர்க் சந்தித்தார். 2004 ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது அவர்களுக்கு அவர்களது முதல் அலுவலகம் கிடைத்தது. சுக்கர்பெர்க்கைப் பொறுத்தவரை இலையுதிர் காலத்தில் அந்தக் குழுவினர் ஹார்வெர்டுக்குத் திரும்புவதற்கு முடிவெடுத்திருந்தனர். ஆனால் கடைசியாக அவர்கள் கலிபோர்னியாவிலேயே தங்கி விட்டனர். அதன் பிறகு அவர் மாணவராகக் கல்லூரிக்குத் திரும்பவே இல்லை.


நியூஸ் பீடு

செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக் நியூஸ் பீடு அறிமுகமானது. நியூஸ் பீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் பீடை தேவையற்றதாக சிலர் [ weasel words ] பார்த்ததற்காகவும் சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் சுக்கர்பெர்க் விமர்சிக்கப்பட்டார்.
ஃபேஸ்புக் இயங்குதளம்
மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குனர் சமூகத்தில் ஆர்வத்தீயை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதில் சிலவற்றை ஏற்கனவே இலட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்று உலகம் முழுவதும் 800,000 ஐக் காட்டிலும் அதிகமான உருவாக்குனர்கள் ஃபேஸ்புக் இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஜூலை 23, 2008 அன்று ஃபேஸ்புக் கனெக்ட்டை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது பயனர்களுக்கான ஃபேஸ்புக் இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும்.

பேஸ்புக் பீகான்

நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய முடியும்.
இந்த நிரலானது இரண்டு இரகசியக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களிடன் இருந்து பலமான இரகசிய ஈடுபாடுகளுடன் வந்தது. சுக்கர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கால் இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் இறுதியாக டிசம்பர் 5, 2007 அன்று ஃபேஸ்புக்கில்  ஒரு வலைப்பதிவை ஜுக்கர்பர்க் எழுதினார். பிக்கானுடன் உள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொண்டு பயனர்களுக்கு எளிதான வழியில் பொருத்தமாகவும் உள்ள சேவைகளை வழங்க உள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.


கனெக்ட்யூ சச்சரவு

ஹார்வர்டு மாணவர்களான கேமரான் வின்கில்வோஸ், டைலர் வின்கில்வோஸ் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகிய ஹார்வர்டு மாணவர்கள் சுக்கர்பெர்க் மீது குற்றம் சாட்டினர். அதாவது அவர்களுக்கு HarvardConnection.com (பின்னர் கனெக்ட்யூ என்றழைக்கப்பட்டது) என்ற சமுதாய நெட்வொர்க்கை அமைப்பதற்கு உதவுவாதக் கூறி சுக்கர்பெர்க் அவர்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறினர். [14] 2004 ஆம் ஆண்டில் அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மார்ச் 28, 2007 அன்று இந்த வழக்கு பாராபட்சம் இன்றி இரத்து செய்யப்பட்டது. பின்னர் விரைவில் போஸ்டனில் உள்ள U.S. மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 25, 2007 அன்று அவ்வழக்கின் பூர்வாங்கமான கேட்டறிதலானது திட்டமிடப்பட்டது. [15] அவர்களது புகாரின் ஒரு பகுதிகளான கனெக்ட்யூ தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும், திருத்தப்பட்ட புகாரை மீண்டும் பதிவு செய்யும் திறமையை அவர்களுக்கு வழங்குவதாகவும் அந்தக் கேட்டறிதலில் நீதிபதி கூறினார். ஜூன் 25, 2008 அன்று இந்த வழக்கு முடிவுற்றது. மேலும் ஃபேஸ்புக் அவர்களுக்கு முடிவாக $65 மில்லியன் கொடுப்பதற்கு ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கின் ஒருபகுதியாக 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹார்வர்டு முன்னாள் மாணவர்கள் பத்திரிகை 02138 இன் வலைத்தளத்தில் இரகசிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவர்கள் அதில் சுக்கர்பெர்க்கின் சோசியல் செக்யூரிட்டி எண், அவரது பெற்றோர்களின் வீட்டு முகவரி, அவரது கேர்ல்பிரண்டின் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தனர். ஃபேஸ்புக் அந்த ஆவணங்களை வெளியே எடுக்கும் படி வழக்கு பதிவு செய்தது. ஆனால் நீதிபதி
02138க்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார்.

ஃபேஸ்புக்கில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு

அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் இன்க். 1.6% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மேலும் ஆன்லைன் தேடுதல் முனைவரான
கூகுள் இன்க்.கிடம் இருந்து போட்டி கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம் அந்த சமயத்தில் $15 பில்லியன் சந்தை மதிப்பை ஃபேஸ்புக் கொண்டிருப்பது தெரியவந்தது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதுப்பித்தலின் வெளியீட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் லாஸ்ட்.எஃபெம்மின் ஆதரவு இருந்தது.


2009 இல் ஃபேஸ்புக்

டிசம்பர் 2, 2009 அன்று ஃபேஸ்புக்கில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
திரைப்படம்
மார்க் ஜூக்கெர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்களை சார்ந்த திரைப்படம் ' 'த சோசியல் நெட்வொர்க் என அழைக்கப்பட்டது, இப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜீஸ் ஏய்சென்பெர்க், ஜஸ்டின் டிம்பர்லேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

நன்கொடை

இவர் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் உள்ளார்
ஆதார நூற்பட்டியல்
யோகேஷ் சாபிரா, ஹேப்பினர்'ஸ் சீஷ் த கிரஷ் . CNBC - நெட்வொர்க்18. ISBN 978-81-906479-5-3 - 2009

வெள்ளி, 11 மே, 2018

கைவிளக்கேந்திய காரிகை புளோரன்ஸ் நைட்டிங்கேல் ( The Lady with the Lamp Florence Nightingale),பிறந்த தினம் மே 12 , 1820



கைவிளக்கேந்திய காரிகை புளோரன்ஸ் நைட்டிங்கேல்  ( The Lady with the Lamp Florence Nightingale),பிறந்த தினம் மே 12 , 1820 

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12 , 1820 – ஆகஸ்ட் 13 , 1910 ) நவீன
தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி . போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை ( The Lady with the Lamp ) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்புக்கள்

ஆரம்பகால வாழ்க்கை

பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி , புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ( 1889 - 1880 ), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)( 1794 - 1875 ). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் ) அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார்.
எம்ப்லீ பார்க், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடம், இப்பொழுது ஒரு பாடசாலையாக உள்ளது.
கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.
புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில் , இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.
1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.
தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

கிரிமியன் போர்

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் , ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.
கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும்
துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு
நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர். நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.
புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின்
மருத்துவமனையையும் , கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது.  அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர்,
டைபாய்ட் , வாந்திபேதி ( cholera ),
வயிற்றோட்டம் ( dysentery ) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள்,
காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை
நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.
பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals) , அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட
தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing)  , "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" (Notes on Matters Affecting the Health) , "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army)
என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

நாடு திரும்பல்

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக
பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.
விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. [10][11] சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business". மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

பிற்கால வாழ்க்கையும் பணிகளும்

ஹம்ப்ஷயரில் உள்ள சென். மார்கிரட் தேவாலய வளவில் அமைந்துள்ள புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சமாதி.
துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9
1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.
தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல்
1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.
1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.
குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் ( Chronic Fatigue Sydnrome )(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார். Park Lane.  இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.

தரவியல் பங்களிப்புக்கள்

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார்.
தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.
இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.
1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.
இலக்கியத்துக்கும் பெண்ணியக்கத்திற்குமான பங்களிப்புக்கள்
மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார்.
1850 - 1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் ( The Cause) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.
கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காக அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்பவள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.

சாதனையும் நினைவு கூரலும்


பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.
நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.
உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.
கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.
இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.
ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் ( இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' ( bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.
புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும்,
கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் ( Chronic Fatigue Sydnrome ) பற்றி ஆராய்கிறது.

உலக செவிலியர் தினம் ( International Nurses Day ) மே 12 .


உலக செவிலியர் நாள் ( International Nurses Day ) மே 12 .

உலக செவிலியர் நாள் ( International Nurses Day ) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பின்னணி
உலக செவிலியர் அமைப்பு ( International Council of Nurses ) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.
1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் ( Dorothy Sutherland ) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 1974இல் , நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் செவிலியர் நாள்
ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில்
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ( Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. [2]
செவிலியர் வாரம்
ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும்
மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.


மே 12: உலக செவிலியர் தினம்: மறுஅவதாரம் எடுத்த இன்னொரு தாய்!
செவிலியர்... இன்னொரு தாய்!

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.
1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

’கை விளக்கேந்திய காரிகை’ நைட்டிங்கேல்!
நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.'கை விளக்கேந்திய காரிகை' (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.
பிரிட்டனில் செல்வச் செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.
பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.
1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.
வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் டையினரைக் குணப்படுத்தினார்.
இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர்.
மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.
போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக 'பிபிசி'யினால் இனங்காட்டப்பட்டார்.
நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அவருக்கு பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்' என்கிற பெயரில் இயங்கி வருகிறது.
இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை பாராட்டுவது மிக அவசியம்.
மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்! நன்றி விகடன்.

தேசிய தொழில்நுட்ப தினம். (NATIONAL TECHNOLOGY DAY) மே-11.


தேசிய தொழில்நுட்ப தினம். (NATIONAL TECHNOLOGY DAY)  மே-11.

உலகில் தொழில்நுட்பம் என்பது நாளுக்கு நாள் அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.

 தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனின் வேலைகள் எளிதாகியுள்ளன.

முக்கியமாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றிமையாத ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் இன்று, மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நோக்கம்:-

💻அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது,
💻புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது,
💻வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ஆம் தேதி இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ஆம் தேதி, இந்தியா ஐந்து அணுகுண்டு சோதனையை நடத்தி வெற்றி கண்டது.*

இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.

இதை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி ‘தேசிய தொழில்நுட்ப தினமாக’ அறிவிக்கப்பட்டது.

இந்தியா விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், சிறப்பாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சி:-

தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்பம் சேவையில் கொல்கத்தாவில் 93 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர். இன்று உலகின் மொத்த சந்தாதாரர்களில் 13 சதவிகிதம் இந்தியர்கள். அதாவது, இந்தியா சந்தாதாரர்களின் எண்ணிக்கை 86.30 கோடி ஆகும்.

உலகிலேயே இந்தியாதான் குறைந்த தொலைப்பேசி கட்டணம் கொண்ட நாடாகும்.

சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்துவதில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

 உலகளவில் தொலைப்பேசி மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5,00,000 கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.

எனவே, நம் அனைவராலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் தொழில்நுட்பங்களை நுட்பத்துடன், அளவுடன், *ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்*!!.

வியாழன், 10 மே, 2018

சகோதரர் நாள் மே 24-


சகோதரர் நாள்  மே 24-
ஒவ்வொரு வருடமும் மே 24-ல் சகோதர சகோதரிகளிடம் நம் வாழ்க்கையில் சகோதரர்கள் மரியாதை காட்டுகிறார்கள். ஒன்று அல்லது பலர் இருந்தாலும் நம் சகோதரர்கள் நம் இருதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை வைத்திருக்கிறார்கள். சகோதரர்கள் இல்லாதவர்களுக்கு, தங்கள் வாழ்க்கையில் யாராவது ஒரு சகோதரரைப் போலவே இருப்பார்கள். மற்ற தாய்மாரிடமிருந்து வந்த சகோதரர்கள் ஒரு சிறந்த நண்பனாக, சகோதரன் அல்லது உறவினரிடத்தில் காணப்படுகிறார்கள். நாம் அடிக்கடி பேசாத சமயத்தில், நம் வாழ்வில் உள்ள ஆண்கள், நாம் நம்புகிறோம். நாம் நினைவுகள், அடிக்கடி தொடங்கும் சவால்கள், "இது என்ன!" விரைவில் ஒரு சில தையல்களால் தொடங்குகிறது.
நாம் அடிக்கடி பேசாத சமயத்தில், நம் வாழ்வில் உள்ள ஆண்கள், நாம் நம்புகிறோம். நாம் நினைவுகள், அடிக்கடி தொடங்கும் சவால்கள், "இது என்ன!" விரைவில் ஒரு சில தையல்களால் தொடங்குகிறது. அவற்றின் சொந்த வியாபாரத்தை கருத்தில் கொண்டு, அவசியமான சமயத்தில் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சகோதரர்கள் என்ன செய்கிறார்கள்.
நிச்சயமாக, அவர்கள் உங்கள் தலை அல்லது கூந்தில் உங்கள் தலைமுடியில் toads போட அறியப்பட்டிருக்கிறேன். அவர்கள் உங்களுக்காக ஒருமுறை கூட குளிர்ச்சியாக இருந்திருக்கலாம். சகோதரர்கள் பல வடிவங்கள் மற்றும் அளவுகள் வந்து தங்கள் உறவுகளை செய்ய. உங்களுடையது என்னவென்றால், சகோதரர் தினத்தில் உங்கள் சகோதரரைக் கொண்டாட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒப்சேர்வ் எப்படி
சகோதரர்களுடன் நேரத்தை அனுபவித்து மகிழுங்கள். புதிய சகோதரர் உடன்பிறப்புகளுக்கு நேரத்தைச் செலவழிக்க சில வேடிக்கை, சந்தோசமான நேரம் செலவிட நேரம் கிடைக்கும். சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு # மகளிர் தினம் பயன்படுத்தவும்.
வரலாறு
அலபாமாவின் சி. டேனியல் ரோட்ஸ் சகோதரர் தினத்தை நிறுவினார்.
1,500 க்கும் அதிகமான தேசிய நாட்கள் உள்ளன. ஒருவரை இழக்காதீர்கள். தேசிய நாள் அட்டவணை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள்.