சனி, 13 ஏப்ரல், 2019

தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14.



தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு

ஒரு புத்தாண்டுக் கோலம்
கடைபிடிப்போர்
தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ் தமிழர்
வகை
பண்டிகை,
முக்கியத்துவம்
தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாட்டங்கள்
பகிர்ந்து உண்ணுதல், பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
நாள்
தமிழ் நாட்காட்டியில் சித்திரை முதல் நாள்
2018 இல் நாள்
ஏப்ரல் 14
தொடர்புடையன
வைசாக்கி, விஷூ (கேரளா), பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய்லாந்தின் புத்தாண்டு


ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

வரலாறு
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி  முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.

மரபுகள்

தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி. புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
தைப்புத்தாண்டு சர்ச்சை
தைப்புத்தாண்டு
முதன்மைக் கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்  தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஆண்டுகள்
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.
சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்
 பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பானை தினம் ஏப்ரல் 13.


பானை தினம் ஏப்ரல் 13.

மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.

பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.


பானை செய்முறை :

இதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி  , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள்  (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள  வண்டிச்சக்கரத்தின்   நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் .


பானை வகைகள்

நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.

அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
ஓதப் பானை - ஈரப் பானை
ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
கரிப்பானை - கரி பிடித்த பானை
கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
காடிப் பானை - கழுநீர்ப் பானை
காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
கூர்ப் பானை - கூர் முனைப் பானை
கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
சின்ன பானை - சிறிய பானை
தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
படரப்பானை - அகற்ற - பெரிய பானை
பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
மிண்டப் பானை - பெரிய பானை
மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை


பானைகளுக்குள்பானைகளுக்குள்  பண்பாடு..  பண்பாடு.

இயந்திரத்தைக் காட்டிலும் மனித கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களில் கலைநயம் மிளிரும். கலைநயத்துடன் பக்குவமாய் வடிவமைக்கப்படும் பொருள்தான் மண்பானை.பழந்தமிழர்கள் களிமண்ணால் செய்து சூளையில் சுட்டு பயன்படுத்திய தொழில்நுட்பமே பானை. உலோகங்கள் கண்டுபிடிப்பதற்கு முன் சமைக்கவும் தண்ணீர் பிடித்து வைக்கவும் பானைகள் பயன்படுத்தப்பட்டன; பண்டங்கள் நிரப்பி வைக்கவும் பயன்பட்டன. பிள்ளைகள் விளையாடும் சின்ன சொப்பில் இருந்து பெரிய பெரிய பானைகள் வரை விதவிதமான வடிவில் தயாரிக்கப்பட்டன.பானைகளை செய்வதற்கு அதற்கென்று உரிய களிமண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அதை பதமாகக் குழைத்து சக்கரத்தில் ஏற்றி தேவையான வடிவில் பானைகளைச் செய்வார்கள்.உலக நாகரிகத்தின் முன்னோடியாக மண்பானைகள் கருதப்படுகின்றன. மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஓட்டுத்துகள்களைக்கொண்டு காலத்தையும் நாகரிகத்தையும் கண்டறிகின்றனர் தொல்லியல் அறிஞர்கள். பானைகளிலும் பாறைகளிலும் சித்திரங்கள் எழுதித் தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட மனிதன் எழுத்துருவைப் பிற்காலத்தில் கண்டுபிடித்தான். தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இறந்தவர்களை பானைக்குள் வைத்து புதைக்கும் பழக்கம் ஆதிக்காலத்தில் இருந்துள்ளது. இதை ஈமத்தாழி என்று அழைத்தனர். மண் சட்டியை பானை கலம் குடம் தாழி குழிசி தசும்பு என பல்வேறு பெயர்களில் அழைத்தனர். பல்வேறு வடிவங்களில் அமைத்தனர்.'மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறை' என்பது புறநானூற்று(௩௩) வரி. காட்டில் வேட்டையாடிய வேடுவன் மான் கறியை வட்டியிலே கொண்டு வந்து கொடுக்கிறான். அதற்கு பண்டமாற்றாக ஆயர்குல பெண் தயிரை பானையில்(தசும்பு) கொண்டுவந்து தருவாள் என்கிறது இந்தப் பாடல்.'ஆங்கண் இருஞ்சுனை நீரோடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி'இது அகநானூற்று(௩௯௩)பாடல். பானைகளில் (குழிசி) சுனை நீர் கொண்டு வந்து சோறு சமைத்து உண்டதை தெரிவிக்கிறது இந்தப் பாடல்.பானை குடங்களைச் செய்து பழகிய தமிழர்கள் அக்குடங்களில் அழகியலை புகுத்தினர். பல்வேறு பூ வேலைப்பாடுகளையும் வண்ணங்களையும் தீட்டி அழகு பார்த்தனர். 'நுண் செயல் அம்குடம் இரீஇப் பண்பின்'(அகம் ௩௩௬) என்ற வரிதான் நம் மூதாதையர் பானைகளில் வண்ணங்களையும் ஓவியங்களையும் தீட்டி மகிழ்ந்தனர் என்பதற்கு சாட்சி.பண்டை தமிழ் மக்கள் இறந்து விட்டால் ஈமத்தாழி எனப்படும் பெரிய பானைகளில் வைத்து புதைத்தனர். அரசன் மீது அன்பு வைத்திருக்கிறாள் ஒரு பெண். அரசனோ இறந்து விடுகிறான். அந்தப் பெண்ணோ அரசனுடன் சேர்ந்து தானும் இறந்து போக ஆசைப்படுகிறாள். அதற்காக குயவனிடம் தனக்கும் சேர்த்து பெரிய பானையாக செய்யுமாறு கூறுகிறாள். 'கலம்செய்கோவே கலம் செய் கோவே......வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி'(௨௫௬)என்று துயரத்துடன் வேண்டுகோள் வைக்கிறாள். மண்பானையில் சமைக்கும் உணவு சுமை மிகுந்தது. ஆரோக்கியம் மிக்கது. ஆனால் மண் பானைகள் வெறும் சமையல் பாத்திரங்களாக மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவை சரித்திர பானைகளாகவும் காலத்தை அறியும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன.மண்ணின் இயல்புமண்ணுக்கென்று ஓர் இயல்பு உண்டு. வெப்பமற்று இருக்கையில் தனித்தனித் துகள்களாய் இருக்கும். ஒன்றோடொன்று பிணைபடாமல் அதன் மூலக்கூறுகள் அமைந்திருக்கும். ஆனால் ஈரமானதும் அவற்றுக்கிடையே நீரேறுவதால் சற்றே நெகிழ்வடைந்துவிடும். வண்டல் அதிகமுள்ள களிமண் தான் ஏற்றுக்கொண்ட நீரை எளிதில் இழக்காது. முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கும். அந்த மண் தான் பானைகள் செய்வதற்கு ஏற்றது. நெகிழ்வும் நுண்மையும் களிமண்ணுக்கு அதிகம். அவ்வாறு ஈரத்தில் குழைத்து குழைத்துப் பிசைந்த களிமண்ணை தேவையான வடிவங்களில் வார்த்து எடுக்கலாம். வார்க்கப்பட்ட பொருள்கள்தாம் மட்பாண்டங்கள். பின்பு அவற்றைக் காயவைத்தாலோ தீயிலிட்டுச் சுட்டாலோ பிரிக்கமுடியாதவாறு இறுகிவிடும். அதனால்தான் சுட்ட பாண்டங்கள் உறுதியாக இருக்கின்றன. நன்றி தினமலர்.


ஆரோக்கியம் தரும் மண் பானை சமையல்

உணவு பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அனைவருமே தங்களுடைய ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே வரத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் ஆர்கானிக் பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் தயாரிக்கப்படுகின்ற உணவின் மூலக்கூறுகளால் மட்டுமே, முழு ஆரோக்கியத்தை பெற முடியாது. உணவு சமைக்கப்படும் பாத்திரம், எரியூட்டப்படும் நெருப்பு ஆகியவையும் முக்கியம்தான் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“உணவு சமைப்பதற்கு மண் பாத்திரமே மிகச்சிறந்தது. மண்பானை பாத்திரம் என்பது மரபு மட்டும் அல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரித்து தரக்கூடியது. மண் பானை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது. இப்போது கிடைக்கக்கூடிய பாத்திரத்தில் உலோகத் தன்மை இருப்பதால் உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் சில்வர் பாத்திரத்தில் சமைத்த உணவை உண்ணுவது சிறந்தது. ஆனால் இவை அனைத்தும் வியாதி உள்ளவர்களுக்கு சொல்லக்கூடியது. நல்ல பசி, நல்ல தூக்கம், சிக்கல் இல்லாத இயற்கை உபாதை, இவை மூன்றுமே மனிதனுக்கு மூன்று தூண்கள் போன்றது. இவை மூன்றையுமே மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நமக்கு வழங்குகிறது. மண் பானை ஒரு குளிர் பதன பொருளாகவும் பயன்படுகிறது.

சென்னை போன்ற இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. ஆனால் மண் பானையை பயன்படுத்த முடியும். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண் பானையில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. மண்பானை உணவு ரத்தக் குழாய்களை சீராக்குகிறது, ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

உடல் சூட்டை தணிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ள வேண்டி நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பதே புத்திசாலித்தனம். இயற்கை உணவுகள் எப்பொழுதுமே நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது. அவற்றை முறையாக சமைத்து உண்ணும் போதுதான் அதனுடைய முழு சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.


மண்பானை சமையல் & மண் பானை குடிநீர் நன்மைகள்:

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும்.மண்பானை சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண்பானை சமையல் முறையில் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

மண் பானை பயன்கள் :
மண்பானை சமையல்:
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.

மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்றவை குணமாகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. நீண்ட ஆயுள் தருகிறது. ஆகையால் நாம் தினமும் மண்பானையில் சமைப்போம்.


மண் பானை குடிநீர் :

மண் பானை குடிநீர் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்தது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. .

நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன. அந்த தாதுக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கப்படும்.

மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.


தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும். பிராண சக்தி அதிகரிக்கும். மண் பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.

புட் பாய்சன் (Food Poison) குணமாக கைவைத்தியம்..!

 முன்னோர்கள் கூறிய மண் பானை பயன்கள் -:
மண்பானை சமையல் அந்த காலத்து முன்னோர்கள் அதிக வயது வரை வாழ்ந்த காரணம் என்ன என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் மண்பானையில் சமைத்தது தான் காரணம்.

மண்பாண்டத்தை மட்டும் அந்த காலத்து முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர்.

அவற்றிலும் வெள்ளிப் பாத்திரங்கள் உடலுக்கு மிக அதிகமாக குளிர்ச்சியை அளிக்கிறது.

நீண்ட ஆயுள் வேண்டுமா?களிமண் பாத்திரங்கள்
நாம் உடலுக்கு அதிகம் நன்மை அளிக்க கூடிய பித்தலை, செம்பு, வெண்கலம் மற்றும் மண்பானைகள் ஆகியவற்றை தினமும் உங்கள் சமையல் பாத்திரங்களாக பயன்படுத்தினாலே போதும். நீண்ட ஆயுள் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

மண் பானை பயன்கள் அறிந்து கொண்டீர்களா சரி இனியாவது மண்பானை சமையல் மற்றும் மண்பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.


செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

உலக வானொலி தினம் பிப்ரவரி 13.


உலக வானொலி தினம் பிப்ரவரி 13.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல்,  ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. 
பிறகு 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. 
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்பு சம்பந்தமான முடிவெடுப்பவர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .


மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25 .

வீர வணக்கம் ! வீர வணக்கம் !!

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.

சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.

சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.

இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.

'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.


வியாழன், 24 ஜனவரி, 2019

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24...!!

பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லி கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்கள் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லி கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்கள் இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்திற்கேற்ப உங்கள் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

பெண் குழந்தைகள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்....

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

புதன், 9 ஜனவரி, 2019

பொங்கல் விழா தகவல்கள்


பொங்கல் விழா தகவல்கள்...

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை (13-1-18)

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை (சனிக்கிழமை) கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.
இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.



இரண்டாம் நாள் தைப்பொங்கல் (14-1-18)

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் (15-1-18)

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


நான்காம் நாள் காணும் பொங்கல் (16-1-18)

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். நன்றி மாலை மலர்.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

உலக ஆண்கள் தினம் நவம்பர் 19.


உலக ஆண்கள் தினம் நவம்பர் 19.

நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது.
இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்கள்:
ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது,
ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது
அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை.


இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன!
இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது/
முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும்,
ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும்,
பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது போன்றவற்றிற்காகவுமே ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதிருக்கிறது.
ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக் களைய பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “AIMWA” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

திங்கள், 8 அக்டோபர், 2018

உலக அஞ்சல் தினம் (World Post Day ) அக்டோபர் 9


உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 

உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.
அக்டோபர் 9 , 1874 இல்
சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில்
சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினப் பிரகடனம்.

உலக அஞ்சல் தினப் பிரகடனம்

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும், பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவோம்.

உலகில் முதலிடம்
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது,
இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.


உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!
உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.
இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து தான் வருகின்றது. அவ்வாறிருக்கு இந்திய தபால் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதில் ஒன்று தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன. தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும் இவ்வேளையில், அத்துறையையும் நாம் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், மக்களாகிய நாம் தபால் துறையைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!
ஏ.உதயகுமாரி

அ றிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.
அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.
உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கணினி மையமாக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை விளங்கிவருகிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில், அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தபால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்களைக்கொண்டு ஒவ்வோர் ஊர்களுக்கும் தபால்கள் அனுப்பப்பட்டு உரியோரிடம் சேர்க்கப்படுகிறது. பதிவுத் தபால், விரைவுத் தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் தவிர, ஸ்டாம்ப் விற்பனை, சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றையும் தபால் துறை செய்துவருகிறது. தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தபால் நிலைய ஏ.டி.எம் மிஷின்களும் உள்ளன. தந்திப் பிரிவு செயல்பாட்டில் இருந்தபோது அது, தபால் துறையிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இளையத் தலைமுறையினர், தபால் மூலமும் செய்திகளை அனுப்பலாமே?
- ஜெ.பிரகாஷ்


அஞ்சல் துறை பரிசளித்த கடித இலக்கியம்!
சா ர்.. போஸ்ட்...
இந்தக் குரலுக்காவே காத்திருந்தவர்கள்போல வீட்டிற்குள் இருந்து சிறுவர்கள் முண்டியடித்து ஓடி வருவார்கள். யார் கடிதத்தை வாங்குவது என்று பெரும் சண்டையே நடக்கும். தபால்காரர் சிறிது நேரம் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துவிட்டு, 'சண்டை போடக்கூடாது, இன்னைக்கு நீ வாங்கிக்க.. அடுத்த முறை அவன் வாங்கிக்கலாம்' என்றுகூறி கடிதத்தை கொடுத்துச்செல்வார்.
இந்தக் காட்சியை சமீபத்தில் எங்கேயாவது பார்த்திருந்தால் மறைந்து வரும் அரியக் காட்சியைப் பார்த்த பாக்கியசாலிதான் நீங்கள். 1712 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் அஞ்சல் சேவை முதன்முதலில் தொடங்கியது. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் 1764-66 காலக்கட்டத்தில் பெருநகரங்களிடையே அஞ்சல் சேவை தன் பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் 1900ஆம் ஆண்டை ஒட்டி சற்றுமுன்னும் பின்னும்தான் இந்திய மக்களின் கடிதப் பரிவர்த்தம் பரவலானது.
இன்றைய தினம் உலக அஞ்சல் தினம். அஞ்சல் சேவையால் விளைந்த அற்புதமான வடிவம்தான் கடித இலக்கியம். இலக்கியச் செய்திகளை பரிமாறிக் கொள்வதை குறிப்பது மட்டுமே அல்ல. சில கடிதங்களின் தன்மையே இலக்கியமாகி விடுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தி எழுதிய கடிதங்களை அரசியல் தொடர்பான உரையாடலாக மாற்றியிருப்பார்.
1918 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் தனது மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடித்தத்தை 'என் அருமை காதலி செல்லமாளுக்கு... எனத் தொடங்குவார். மேலும் தன்னைப் பற்றி கவலை கொள்ளும் நேரத்தில் தமிழை நன்கு படித்தால் மகிழ்ச்சியடைவேன் என்று நெகிழ்ச்சியோடு முடித்திருப்பார். அதே ஆண்டில் நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தனது படைப்புகளை டெபுடி இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரின் ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் மட்டுமே பிரசுரம் செய்ய முடியும் என்ற சூழலில் பாரதியார் இருந்ததையும் தெரிவிக்கிறது.
காந்தியடிகள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய தலைமை உரையை கடித வடிவில் நிகழ்த்தினார். தமிழறிஞர் மு.வ. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு என்று நான்கு கடித நூல்களை எழுதியுள்ளார். இவரின் கடிதங்களில் மிக செறிவான தமிழ் நடையை காணலாம். அறிஞர் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபலாமனவை. அண்ணாவின் கடிதங்கள் பலருக்கு அரசியல் உணர்வை ஊட்டியவையாகவும் அமைந்திருந்தன.
எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுவன. தன் மனைவியை பிரிந்த நிலையில் தன் அன்பை கடிதங்கள் வழியே பகிர்ந்துகொண்டிருப்பதையும், காந்தியடிகள் கொல்லப்பட்டதை உருக்கமாக எழுதியிருப்பதையும் காணமுடியும். இது எல்லாவற்றையும் விட, அவரின் துன்பமான சூழலிலும் மனைவிக்கு தனது கடிதங்களால் நம்பிக்கை ஊட்டுவதையும் காணமுடியும்.
வல்லிகண்ணன் - தி.க.சி. இந்த இருவரின் கடிதங்கள் வராத இலக்கியவாதி தமிழில் அநேகமாக இருக்க முடியாது. அந்தளவு புதிதாக எந்த படைப்பு வந்தாலும் அதில் இருக்கும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை கவனமாக அந்தப் படைப்பாளர் திருத்திக் கொள்ளும் விதமாய் பக்குவமாய் குறிப்பிடுவார்கள். கடிதங்களில் மட்டுமல்லாமல் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் அவர்களைப் பற்றி குறிப்பிடுவதும் உண்டு. தி.க.சி. தான் தினமும் ஆறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதுவதாக குறிப்பிடுவார்.
எழுத்தாளர் வண்ணதாசன் கடிதங்கள் ரசனையானவை. தான் சந்திக்கும் எளிய மனிதர்கள் பற்றி அழகியல் பூர்வமாக தன் நண்பர்களுக்கு அவர் எழுதும் கடிதங்களை பலரும் ஆவலோடு எதிர்ப்பார்கலாம். வண்ணதாசன் கடிதங்கள் எனும் தலைப்பில் இவரின் கடிதங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதைப் படிக்கும்போது, நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை இந்த கோணத்தில் பார்க்க முடியும் என்பதும், அதனை இத்தனை ரசனையோடு எழுத முடியுமா என்றும் ஆச்சரியத்தை தரும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்களின் தொகுப்பும் அன்புள்ள கி.ரா.க்கு எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் கணவரான மு.முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் கனவிருந்த கூடு எனும் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் ஒரு பெண் தன் காதலனிடம் எதிர்ப்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்களை மிக நுணுக்கமாக பதிவு செய்திருப்பார். இன்னும் பலரும் தன் கருத்துகளை கடித வடிவில் வெளிப்படுத்தி வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்த வகையில் எழுத்தாளர் பாமரனின் பகிரங்க கடிதங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.
இப்படி தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய பதிவுகளை தந்த கடித இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துபோய்க்கொண்டிருப்பதுதான் சோகம்.
-விஷ்ணுபுரம் சரவணன்

வியாழன், 4 அக்டோபர், 2018

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5 , 1823


வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5 , 1823

வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் ( அக்டோபர் 5 , 1823 – சனவரி 30 , 1874 ) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.
 "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.  திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர் .

பிறப்பு

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள
மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு
பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர்
சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

பசியாற்றல்

அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1. அருளாசிரியர்
2. இதழாசிரியர்
3. இறையன்பர்
4. உரையாசிரியர்
5. சமூக சீர்திருத்தவாதி
6. சித்தமருத்துவர்
7. சிறந்த சொற்பொழிவாளர்
8. ஞானாசிரியர்
9. தீர்க்கதரிசி
10. நூலாசிரியர்
11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
12. பதிப்பாசிரியர்
13. போதகாசிரியர்
14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
சர்வ சமய சமரச சுத்த சன்மார்கம்
இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்திய ஞான தர்ம சபையின் முக்கிய நுழைவாயில்,வடலூர்
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க
சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
இவருடைய காலத்தில் இருந்தவர்கள்
ஆறுமுக நாவலர்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
இராமலிங்க அடிகள் கோட்பாடுகள்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
7. புலால் உணவு உண்ணக்கூடாது
8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
9. சாதி , மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
10. மத வெறி கூடாது
அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
படைப்புக்கள்

வள்ளலார் பதிப்பித்தவை
1. சின்மய தீபிகை

2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
1. மனுமுறைகண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. [5] இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.
அருள் விளக்க மாலைப் பாடல் (4174)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கண்டன நூல்கள்
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய
சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.
1904 இல் நா. கதிரைவேற்பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.

நினைவு அஞ்சல்தலை

இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.


சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
l தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.
l ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.
l சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.
l ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.
l பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.
l சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.
l தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.
l வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.
l வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51-வது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.

உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 05.


உலக ஆசிரியர் தினம்  அக்டோபர் 05.

🌸 மாதாஇ பிதாஇ குருஇ தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சி. இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

🌸 ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாகஇ யுனெஸ்கோ (Unesco) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும்இ விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.


மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.
அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.
எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.
இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.
மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.
ஒக்டோபர் 05 ‘உலக ஆசிரியர் தினம் உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்’என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.
பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.
இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.
அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான்!!



புதன், 3 அக்டோபர், 2018

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை


உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை

உலக புன்னகை தினம் என்பது அக்டோபர்
மாதம் முதல் வெள்ளிக்கிழமை
கொண்டாடப்படுகிறது. புன்னகை
என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின்
வெளிப்பாடு. ஆரோக்கியமான
மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. இது
மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க
உதவுகிறது.


ஹார்வே பால் ( Havey Ball) என்பவர் 1963-
இல் புன்னகை முகம் (Smiley) என்ற குறியீட்டை
1963 இல் அறிமுகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து உலக புன்னகை
தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்படுகிறது.

சிறிய புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுவோம்..


உலக புன்னகை தினம்
ஹலோ உங்களைத்தான்... சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க?!
எதிரிகளையும் நண்பர்களாக்கும் சக்தி உங்களது சிறு புன்னகைக்கு உண்டு எப்படிப்பட்ட கணத்திலும் புன்னகைப்பது அப்போதிருக்கும் சூழலை உற்சாகமாக்க உதவுகிறது ஒருவரின் தோற்றத்தை செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே...


இந்த புன்னகை என்ன விலை..?

சாலையில் நடந்து செல்கிறோம். பைக்கில் செல்கின்ற ஒருவர் இடித்துவிடுகிறார். தாங்க முடியாத வலி. கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் என்கிற அளவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் சின்னதாய் நம் உதடுகளில் பரவ விடுகின்ற ஒரு புன்னகை, அந்த இறுக்கமான சூழலிலும் ஒரு வித அமைதியையும், இடித்தவர் வெட்கம் கொண்டு ஓடி வந்து. உதவ நினைக்கும் நிலையையும் உருவாக்கிவிடுகிறது.


புன்னகைக்கு அப்படியொரு அசாத்தியமான ஆற்றல்

அடித்துத் துன்புறுத்துகின்ற ஒருவனை அரவணைத்து... நீ செய்வது தவறு என்று உணர்த்துகின்ற பாங்கு இருக்கிறதே அதை தான் அகிம்சை என்கிறோம்.

இந்த ஒற்றை ஆயுதத்தால்தான் இன்று உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனை உரத்து ஒலிக்கச் செய்த காந்தி உலக நாடுகளின் தெருக்களில் சிலையாய் நிறுத்திவைக்கப்பட்டு நன்றி கூறப்படுகிறார்.

அதே போன்ற வலிமையும், மாபெரும் ஆற்றலும் நம் உதடுகள் உதிர்க்கும் புன்னகையில் இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. 'இந்தப் புன்னகை என்ன விலை?' என்று கண்ணதாசன் காதலுக்காக புன்னகைக்கு விலை வைத்தார். காதலுக்காக என்றாலும்கூட, அந்தப் புன்னகைக்கும்கூட இதயத்தையே விலையாய் வைத்தார்.



ஆனாலும் புன்னகை விலை மதிப்பற்றது...

அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இன்று உலக புன்னகை தினம்

முடியாது... இயலாது... வேண்டாம்... என்பதைக் கூட சிறிய புன்முறுவலோடு சொல்லிப் பாருங்கள்... அப்போது தெரியும் புன்னகையின் மகிமை...

யாரெல்லாம் திறந்த மனதோடு, வெளிப்படையாக எதையும் அணுகுகின்றார்களோ அவர்களுக்கே இந்த மகிழ்ச்சியும், புன்முறுவலும் வாய்க்கும். இதிலும் கூட கள்ளத்தனமான சிலரின் புன்னகை, அவர்களை யாரெனக் காட்டிக் கொடுத்துவிடும்.



ஆடம்பரமாய் நகைகள் இருக்காது. பகட்டான பட்டாடைகள் இருக்காது. அடித்துப் போடுகின்ற அலங்காரத்தை மறந்தும் காணமுடியாது.



ஆனாலும் அந்தப் பெண் அழகாக இருக்கிறார். இது போன்ற பலரை நாம் இயல்பாக கண்டிருப்போம்... அந்தக் கலையான முகம்தான் அதற்குக் காரணமாக இருக்கும். ஆனால் களையான அந்த முகம்... அழகான புன்னகையில்தான் சாத்தியம்.

ஒருநாளில் 400 முறை சிறு குழந்தைகள் சிரிக்கின்றனவாம். ஆனால் வளர வளர நாமோ ஒரு நாளில் வெறும் 15 முறையே சிரிக்கிறோம். இப்போது தெரிகிறதா ஏன் குழந்தைகள் அழகாய் இருக்கிறார்கள் என்று..!



வருகின்ற 2020ஆம் ஆண்டில் மன அழுத்தமே உலக நோயாகவும், முதல் நோயாகவும் இருக்கும் என்று மருத்துவப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தற்போதைய நமது வாழ்வியல் முறையும், இயங்கும் வேகமும் அதை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சற்றேறக்குறைய 10 சதவிகிதம் பேர் மனநோய் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தூண்டப்படுகின்றனர்.



மன அழுத்தம் மற்றும் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் ஆற, அமர குடும்ப உறவுகளோடு உட்கார்ந்து பேசி மகிழ்கின்ற தருணங்கள் குறைந்து வருவதாகவும், அலுவலகம் மற்றும் சுற்றுப்புற எதார்த்தம் போட்டி நிறைந்ததாக உள்ளன என்று அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஓவியம் இன்றைக்கும் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த ஓவியத்தின் பிரதிகள் விற்ற அளவிற்கு, உலகில் வேறு எந்த ஓவியமும் இதுவரை அந்தச் சிறப்பிற்கு அருகே கூட வரவில்லை.



மோனாலிசா... இந்த ஒற்றை ஓவியத்தால் உலகம் முழுவதும் பெயரைப் பெற்றார் லியானார்டோ டாவின்ஸி. சின்னதாய் இதழ்களில் இழையோடும் அந்தப் மர்ம புன்னகை... நம்மால் இன்றைக்கும் கூட ரசிக்க முடிகிறது. அவள் மர்மமாய் சிரித்தாளா... அல்லது மயக்கத்தில் சிரித்தாளா.. என்பது வேறு.

எனினும் அந்த ஒற்றைச் சிரிப்பு, உலகம் முழுவதும் நிறைய கவிஞர்களை இன்றைக்கும் எழுத ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.



ஒவ்வொரு நொடியும் புன்னகைப்போம்... பிறர் மனம் நோக அல்ல...

நம் மனம் நோய்வாய்ப்பட நேராமல் இருக்க...



உலகை வசமாக்க...புன்னகையை பதிலாக்குவோம்..!!

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் புன்னகையை விதைத்து ஆரோக்கியத்தை அறுவடை செய்வோம்.

ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. 

ஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். 

இதனை தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகின்றது.

ஹார்வே பற்றிய நினைவுகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுவதோடு அவருடைய பெயரிலேயே ஒரு அறக்கட்டளையும் 2001-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

சிரிப்பு என்பது ஒரு தியானம் என்று யோகா வல்லூர்கள் கூறுகிறார்கள். இதுக்குறித்து ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் யோகா கலை நிபுணர் விஜயகுமார் கூறும்போது, 

சிரிப்பு தியானம், என்பது தன்னை உணர்தலுக்கான ஓர் உன்னத பயிற்சியாகும். இந்த பயிற்சியானது கோபம் பயம் மன அழுத்தம் இவற்றில் இருந்து ஒவ்வொரு மனிதனும் வெளியேற மிகவும் உறுதுணையாக உள்ளது என்று கூறுகின்றனார். 

ஓவ்வொரு முறையும் நாம் சிரிக்கும் போது அது உடலை தளர்த்தி உடல் சோர்வை நீக்கி செல் திசுக்களை புதுப்பிக்கின்றன. 

தசைகளின் சோம்பலுக்கு காரணமான லேக்டிக் ஆசிடை குறைக்கிறது. சிரிப்பு என்பது மனித உடலில் என்டார்பின் ஹார்மோன் சுரப்பியிலிருந்து நீர் சுரப்பி உருவாகி மனிதர்களுக்கு சோகத்தை தரக்கூடிய கார்டிசால் ஹார்மோனை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். 

பொதுவாக சிரிப்பு என்பது மனிதனுடைய இதய நோய்களில் இருந்து 40 சதவீதம் வரை குறைக்கிறது. அதோடு மனித மூளையின் செரட்டின் உற்பத்தி கூடுகிறது. செலினீயம் அதிகரித்து நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பைட்டோ எஸ்ட்ரோஜன் சுரந்து கவலை குறைத்து மகிழ்ச்சியை தூண்டுகிறது. 

இந்த சிரிப்பு பயிற்சி, சிரிப்பு தியானம் போன்ற வகைகளுக்கு மேலை நாடுகளில் தனி படிப்புகள் உண்டு. கர்நாடக மாநிலத்தில் சிரிப்பு தியானத்திற்கான பல்கலைகழகம் இயங்கி வருகிறது. 

இங்கு முழுவதும் சிரிப்பு பற்றிய பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிரிப்பின் தன்மை சிரிப்பின் வெளிப்பாடு சிரிப்பின் தேவை சிரிப்பின் செயல்பாடுகள் சிரிப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பலவற்றை குறித்த ஆராய்ச்சிகளுடன் கூடிய படிப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.



இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் விஜயகுமார் அவர் பணியாற்று கல்லூரியில் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சிரிக்கும் தியானத்தை கற்று தருகிறார். 

அவர்களுக்கு சிரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மாணவிகள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தும் விதமாகவும் அவர்களின் மனசோர்வு மன அழுத்தம் போன்றவற்றை நீக்க தொடர்ந்து அவர்களுக்கு சிரிப்பு தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். 

இந்த சிரிப்பு தியானத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ஒன்று தான் சிரிப்பு என்பது காரணம் இல்லாமல் சிரிக்க வேண்டும். காரணம் இல்லாமல் சிரித்தால் தான் நம்முடைய மூளை அந்த காரணத்தை பற்றி யோசிக்காமல் அமைதியாக இருக்கும் என்றும் காரணத்தோடு சிரிப்பது என்பதை தவிர்த்து சிரித்தால் உடல் முழுவதும் சோர்வடையாமல் துடிப்போடு செயல்பட முடியும் என்று கூறுகிறார்.



எனவே, சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, நீங்கள் சிரித்து மகிழ்வதோடு மற்றவர்களையும் சிரிக்க வைத்து வாழ்கையை ஆரோக்கியமுடன் வாழுங்கள்.