செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம் செப்டம்பர் 18.


சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம் செப்டம்பர் 18.

இந்த நாளில்  குடிமக்கள் தங்கள் வாழும் சூழலில்
தங்களுக்கான நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும் அவற்றை கண்காணிப்பதற்குமான ஒரு ஈடுப்பாட்டை, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவற்றை  நினைவில் இருத்தி கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.

மூன்று முக்கிய அம்சங்களாக இந்த நாளில், நமக்கான செயல் திட்டமாக கொள்ளலாம்.

1) நீரை சோதனை செய்தல்,(டெஸ்ட்)
2) அறிந்த  நீர் தன்மையின் விவரங்களை பகிர்தல் (ஷேர்),
3) கிடைத்த தகவலை வைத்து நீரை பாதுகாத்தல் (ப்ரொடெக்ட்)
- நம் தேசத்தில் மேற்கூறிய மூன்றும்
சாத்தியப்படும் நிலையில் இல்லை என்பதும், தனி மனிதனாகவும், தனிக்குழுக்களாகவும்  செயலில் இறங்க நாம் தயாராக இருந்தாலும், அதற்கான வசதிகள் நமக்கு அளிக்கப்படவில்லை என்பதும் நடைமுறை. மேற்கத்திய நாடுகளில் கைகளுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் தகவல் பகிர்வு,
நம் தேசத்திலும் சாத்தியமே, அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டும்.

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.நாமும் இன்னாளில் நீரின் தேவை உணர்ந்து நீரினை சேமிப்போம்....

திங்கள், 16 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17, 1879.



தந்தை பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17, 1879.

#ஈ. வெ. ராமசாமி #E-V-Ramasamy

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1879

இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)

இறப்பு: டிசம்பர் 24, 1973

பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.



ஆரம்ப வாழ்க்கை:

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம்:

காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம்:

பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம்:

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு:

1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.

பெரியாரின் திராவிட கழகம்:

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:


பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம்:

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973  டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

புனைபெயர்கள்:

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.

இறப்பு:

‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.

காலவரிசை:

1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

1898 – நாகம்மையாரை மணந்தார்.

1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.

1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.

1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.

1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.

1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.

1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.

1939 – நீதி கட்சி தலைவரானார்.

1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.

1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.

1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அனைத்துலக மக்களாட்சி நாள் செப்டம்பர் 15 (International Day of Democracy

அனைத்துலக மக்களாட்சி நாள் செப்டம்பர் 15
(International Day of Democracy)

மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பார்கள். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்கிற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு 'மக்கள்' என்றும் கிராட்டோஸ் என்பதற்கு 'அதிகாரம்' அல்லது 'ஆட்சி' என்றும் பொருள்.
தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துகளைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தனிக் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி செய்வார்கள்.
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்கலாம். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இந்த மக்களாட்சி நடைபெற்றது.
மறைமுக மக்களாட்சி முறையில், மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கம் நடத்துகிறார்கள்.
“மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும் “மக்களால் மக்களுக்காக மக்களால் செய்யப்படும் ஆட்சியே மக்களாட்சி” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனும் கூறியிருக்கிறார்கள்.
இதுபோல மக்களாட்சிக்கான விளக்கம் அழகாக இருந்தாலும், ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மாறிவிடுவது ஜனநாயக நாடுகளில் பொதுவாகக் காணக்கூடிய நடைமுறையாக இருக்கிறது.

* மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்க ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது.
* பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது



Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 14 செப்டம்பர், 2019

அறிஞர் அண்ணா பிறந்த தினம் செப்டம்பர் 15, 1909.


அறிஞர் அண்ணா பிறந்த தினம் செப்டம்பர் 15, 1909.

#சி. என். அண்ணாதுரை
 #C-N-Annadurai

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த  கா. ந. அண்ணாதுரை  அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார்.  திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த கா.ந. அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப்  பெற்று விளங்கிய அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற ஒரு கட்சி எம். ஜி ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண  மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர்  அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

பிறப்பு : செப்டம்பர் 15, 1909

இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

இறப்பு : பிப்ரவரி 3, 1969

தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை : இந்தியா

ஆரம்ப வாழ்க்கை:

அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக  செப்டம்பர்  15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த  முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப்  பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார  சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர்  தன்னுடைய பட்டப்  படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.

1930-ல் தனது 21வயதில்  ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும்,  பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை  பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில  ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப்  பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.


அண்ணாவின்  அரசியல் தொடக்கம் :

தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா  1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த  ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.  பிறகு பெரியாருக்கும்  அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து  “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர்,  பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.

திமுக உருவாக்கம்:

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது  காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட்  15, 1947ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால்  மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார்,  இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948ல்  நடந்த “திராவிட கட்சியின் கட்சி”  கூட்டத்திலிருந்து  அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி  1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.

திராவிட நாடு:

பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்த போது, அண்ணா பெரியாரின் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு அளித்தார். ஆனால், பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட அவரின் மருமகனான  இ.வி.கே சம்பத்  இக்கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பது மட்டும் அல்லாமல் பெரியாரின் திராவிட கழகத்தை  விட்டு திமுகவிலும் இணைந்தார்.  ஆனால் அண்ணாவின் திமுக கட்சி தமிழ் திரைப்பட கலைஞர்களை முன்னிறுத்தி செயல்பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத்,  தி.மு.கவிலிருந்து விலகி 1961-ல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற தனி கட்சியை தொடங்கினார்.

1962 ல் நடந்த மாநிலங்கள் அவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா  என்ற நாடு’என்று உரையாற்றினார்.   அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது.  “அண்ணா திராவிட நாடு, திராவிடர்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.

இந்தி எதிர்ப்பு :

1928-ல் மோதிலால் நேரு அவர்கள் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை  பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும்  ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள்.  இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும்  கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.   ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள்,  புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும்  அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு”  நடத்தப்பட்டது.  பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேரு   இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.

தமிழக முதல்வராக அண்ணா:

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல்  கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக   தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3,  1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு”  நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக  கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.


அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:

அண்ணா  அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில்  அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும்  எழுதினார்.  அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா,  பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம்  இவரின் முக்கிய படைப்புகளாகும்.

அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:

1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத்  திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி,  K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.

இறப்பு:

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி  3 ஆம் தேதி இறந்தார்.  அவர் புற்று நோயால் அவதிபட்டுக்  கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார்.  அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்  என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :

திமுக வில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை”  என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு  சென்னையில்  நிறுவப்பட்டது.

அண்ணாவின் படைப்புகள்:

1939  – கோமளத்தின் கோபம்
1942  – களிங்கரணி
1943  – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி

குறிப்பிடத்தக்க படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்

காலவரிசை:

1909  – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்

1930  – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.

1934  – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1935  – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

1938  – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

1944  – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1948  – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி”  திரையிடப்பட்டது.

1949  – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.

1962  – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1967  – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968  – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.

1969  – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.

1969  – பிப்ரவரி 3 ம்தேதிதன்னுடைய   59 வது வயதில்சென்னையில்காலமானார்.

1972  – அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.

1978  – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.

1987  – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.

2010   – அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.


அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

தமிழ் திராவிட கழகத்தை தமிழகத்தில் விதைத்தவர், திராவிடக்கழகத்தின் முதல் பொதுச் செயலாளர், திராவிடக் கழகத்தில் இருந்து வந்த தமிழகத்தின் முதல் முதலமைச்சர், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அனைவரையும் கவரும் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்களே வியந்து பார்க்கும் எழுத்தாளர், கைதேர்ந்த நடிகர், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த மக்கள் நாயகன்,  எல்லாவற்றிக்கும் மேல் தமிழகத்தில் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கிய 'அண்ணா'. அவர் தான் நமது பேரறிஞர் அண்ணா.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் மக்களுக்கும், தனது தம்பிகளும் எப்படி இருக்க வேண்டும் என வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே...

►  போட்டியும்,பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.

►  பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்றும் முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது..செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

►  எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.


►  சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.

►  அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்; அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்; ஆள்பவர்கள் பெண்கள்.

►  அஞ்சா நெஞ்சம் படைத்த லட்சியவாதிகள் நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால், இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

►  விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.

►  புகழை நாம் தேடி சொல்லக்கூடாது; அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.

►  ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

►  பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது.

►  சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம் ஆனால் வளமான பொது அறிவு பெற்று இருக்கிறான். எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்கு தெரியும்.

►  சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.


►  அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

►  பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.

►  வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

►  பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

►  கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.

►  நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.

►  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

►  பிறருக்கு தேவைப்படும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் முடிந்தவுடன் 'கெட்டவர்களாகி' விடுகின்றோம்.

►  எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம்; மன்னிப்போம், கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பிரபலமான வரிகள் அண்ணாவினுடையதே..


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக முதலுதவி தினம் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை


உலக முதலுதவி தினம் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை.(செப்டம்பர் 14.)

இந்த தினத்தை ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் – International Red Cross Red Crescent Movement) 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக அனுசரிக்கப்படுகிறது.  ஓர் உயிரைக் காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் பேருந்து மற்றும் இரயில் பெட்டிகளில் முதலுதவிப் பெட்டி இருப்பது நல்லது. அதை அவ்வப்போது சரியாக பராமரிக்க வேண்டும். அதில் துணி, காயங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்து, அவசர உதவி எண்கள், அருகிலிருக்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
பல மருத்துவமனைகளிலும், செஞ்சிலுவைச் சங்கங்களிலும் முதலுதவி செய்வதற்கான பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. முதலுதவி சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்… அது எங்கேயும், எப்போதும், எல்லோருக்கும் தேவையான உயிர் காக்கும் ஆயுதம். .


முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். முதலுதவி சாதாரண, சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைய வேண்டும்.

முதலுதவி அனைத்து விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றபோதிலும், பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும் கவனிப்பையே குறிக்கிறது.


ஒரு அமெரிக்க கடற்படை வீரர் ஒரு ஈராக்கிய குடிமகனுக்கு முதலுதவி அளிக்கிறார்
வரலாறு
தொகு
முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் இடைக்காலங்களில் (middle ages) வெகுவாக கைவிடப்பட்டது . அதன் பிறகு 1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது. இது எப்படி நிகழ்ந்ததென்றால் பல தொடர்வண்டி மையங்களிலும் சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை(first treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை(national aid) என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878இல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார் ஒரு டாக்டர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார் . ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.[1] இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன.

முதலுதவியில் நிறைய வளர்ச்சிகள் போர்களால் இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் போர் க்லரா பார்டன் என்பவரை அமெரிக்க செஞ்சிலுவையை உருவாக்க ஊக்குவித்தது .


உலக முதலுதவி தினம்

செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகின்றது. இத்தினம் இரண்டாயிரத்தில் சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு,மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. இது நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

முதலுதவிப் பெட்டி

காயம்பட்டவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்யாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும்.முதலுதவிப்பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்,

மென்மையான துணி-காயத்தை தூய்மை செய்ய,
துணிச்சுருள்-காயத்தின் ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதற்காக கட்ட,
கிருமிநாசினி-காயத்தினை சுத்தம் செய்ய,
முக்கோண வடிவ பான்டேஜ்,
பிசின் நாடாக்கள்,
தீப்புணுக்கான கிரீம்.
கத்தரிக்கோள்.
முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நோக்கங்கள்

முதலுதவியின் முக்கிய நோக்கங்களை மூன்று புள்ளிகளில் சுருக்கிவிடலாம்:

உயிர் பாதுகாத்தல் : முதல் உதவி உட்பட அனைத்து மருத்துவ கவனிப்புகளின் சாராம்சம் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே.
இன்னும் கூடுதலான ஆபத்து நேர்வதை தவிர்த்தல் : நிலைமை மோசமடைவதை தவிர்த்தல் அல்லது இன்னும் கூடுதலான காயம் ஏற்படுவதை தவிர்த்தல் என்றும் இதற்கு தலைப்பிடலாம்.இது சம்பந்தப்பட்ட நபரை நிலைமையின் காரணியிடமிருந்து நகர்த்துதல் போன்ற வெளி காரணங்களையும், அழுத்தம் கொடுத்து உதிரப்போக்கு தீவிரமடைவதை தவிர்த்தல் போன்ற முதலுதவி அளிக்கும் நுட்பங்களையும் உள்ளடக்கயுள்ளது.
குணமாவுதலை ஊக்குவித்தல் : முதல் உதவி குணமாகும் காரியத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்க வேண்டும்.சிறு காயத்திற்கு பிளாஸ்திரி போடுவது போன்ற சில சந்தர்ப்பங்களில் இது முழு சிகிச்சையையும் அளிக்குமாறு கூட அமைந்துவிடும்.
முக்கிய திறன்கள்
தொகு

நாக்கு சுவாசவழியை அடைத்திருந்தால் தலையை கீழ்தள்ளி தாடையை மேலிழுத்து நாக்கை அடைப்பிலிருந்து வெளிவரவைக்க வேண்டும்.
சில திறன்கள் முதலுதவி வழங்குதலுக்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. ஆதலால் இவை உலகெங்கும் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மற்ற சிறு காயங்களை கவனிக்குமுன் முதலுதவியின் "ஏபிசி" கள் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் இவை மிகவும் தேவையான உயிர்க்காப்பாற்றல் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன. ஏபிசி ,Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.அதாவது காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் என்று விரிகிறது. முதலில் சுவாசவழி தெளிவாக உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். மூச்சுக்குழலில் அடைப்பு இருப்பது உயிர் அச்சுறுத்தும் அவசர நிலையாகும். இதன் பிறகு மூச்சு விடுவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து தேவையானால் செயற்கையாக பாதிக்கப்பட்டவரை மூச்சு விடவைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்று சரிபார்ப்பது இல்லை . அதற்கு பதிலாக செயற்கை இரத்த அழுத்தம் கொடுக்கும் மார்பு அழுத்தம் (chest compressions) தரப்படும். நாடி சரிபார்த்தல் தீவிர நிலையில் இல்லாத ஆட்களிடம் நடத்தப்படலாம்.

சிலர் abcயுடன் ஒரு dயையும்( deadly bleeding or defibrillation ) சேர்த்துக்கொள்வர். அனால் இது இரத்த ஓட்டத்திலேயே அடங்கும் என்று சிலர் கூறுவர் . இந்த ABC களை பாதுகாத்தப்பின் , முதலுதவி அளிப்பவர் கூடுதல் சிகிச்சையை தொடங்கலாம். சில நிறுவனங்கள் abcக்கு பதிலாக மூன்று bக்கள் ( breathimg, bleeding and bones ) என்பதை பின்பற்றுவன. ABC களையும் 3Bக்களையும் பொதுவாக தொடர்நிலையாக செய்ய வேண்டும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படிநிலைகளை ஒரே நேரத்தில் அளிக்கவேண்டிவரும். உதாரணத்திற்கு மூச்சு மற்றும் நாடி இரண்டும் இல்லாதவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் மார்பழுத்தம் இரண்டையுமே ஒன்றாக தர வேண்டும்.


உயிர் பாதுகாத்தல்

உயிருடன் இருக்கவேண்டுமெனில், ஒருவருக்கு அவருடைய சுவாசவழி தெளிவாக இருக்க வேண்டும். காற்று வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உள்ளிழுக்கப்பட்டு உணவு குழாயையும், வாயையும் இணைக்கும் பகுதி (pharynx) மூலமாக நுரையீரலுக்கு எந்த இடர்ப்பாடுமின்றி செல்லவேண்டும். நினைவு நிலையில் உள்ளவர்கள் தடையற்ற சுவாசவழியை தானாகவே கொண்டிருப்பார்கள். அனால் நினைவற்றவர்களுக்கு (GCS எண்ணிக்கை எட்டுக்கும் கீழ் உள்ளவர்கள்) சுவாசவழியை தெளிவாக வைத்துக்கொள்வது முடியாமல் போகலாம் . ஏனெனில் சாதாரண நிலையில் சுவாசத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி இவர்களுக்கு வேலை செய்யாமல் போகலாம்.

பாதிக்கப்பட்டவர் மூச்சு விடுகிறார் என்றால் முதலுதவி அளிப்பவர் அவரை ஒரு விதமாக படுக்கவைத்து அவரது நாக்கு சுவாசவழியை தடை செய்யாதவாறு செய்வார். மேலும் இச்செயல் நினைவிழந்த ஆட்குளுடைய இறப்பின் முக்கிய காரணமான வயிற்றிலுள்ள தேவையில்லாத பொருட்களால் (regurgitated stomach contents) மூச்சடைத்து இறப்பதையும் தவிர்க்கும்.

ஒரு பொருள் சுவாசவழியை அடைத்து மூச்சுத்தினரலை உண்டாக்கும்போது முதலுதவி அளிப்பவர் அந்நபருக்கு பின்னால் அடித்தும் வயிற்று பகுதியை அழுத்தியும் நிவாரணம் தருவார்.

சுவாசவழி திறக்கப்பட்டவுடன், முதல் உதவி அளிப்பவர் பாதிக்கப்பட்டவர் ஒழுங்காக மூச்சு இழுக்கிறாரா என்று பார்ப்பார் . பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இல்லை என்றால் ,முதலுதவி அளிப்பவர் இதய இயக்க மீட்பை (cardiopulmonary resuscitation) உடனடியாக அளிப்பார். இதில் முதலுதவி கொடுப்பவர் பாதிக்கப்பட்டவருக்காக மூச்சிழுப்பார் என்று சொல்லலாம். அப்படி செய்யும்போதே பாதிக்கப்பட்டவரின் இதயத்தை அழுத்தி விடுவார் (massage).

குணமடைவதை ஊக்குவித்தல்
தொகு
முதலுதவி அளிப்பவர் வெட்டுகள், எலும்பு முறிவுகள் போன்ற காயங்களை கையாளவும் கற்பிக்கப்படுவார் . இதுபோன்ற சந்தர்ப்பங்களை இவர்கள் முழுமையாகவோ ( ஒரு சிறு பான்டேஜை வெட்டுபட்ட இடத்தில் ஓட்டுவது, இதில் சிகிச்சை இங்கேயே முடிவுக்கு வந்துவிடுகிறது ) அல்லது எலும்பு முறிவுகள் போன்ற சந்தர்ப்பங்களில் அவசர ஊர்தி வரும் வரை அந்த முறிவை கட்டுக்குள் வைத்திருக்கவோ கற்பிக்கப்ப்டுவர்.

பயிற்சி

முதலுதவி பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் பெரிதாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. உதாரணத்திற்கு இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு மேற்சொன்ன வாக்கியம் வெகுவாக பொருந்தும்.இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது,நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பல நாடுகளில், அவசர ஊர்தி வந்துகொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்யவேண்டுமென்று அடிபட்டவரை பார்த்துகொண்டிருப்பவரிடம் சொல்வார்கள்.

முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். இது ஒரு சான்றிதழைக் கொடுக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் இவ்வகுப்புகளுக்கு போவதும் சான்றிதழை புதுப்பித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று. ஏனெனில் புதிய ,இன்னும் அதிக செயல்திறன் மிக்க பயிற்சிகள் கண்டுபிடிக்கப்படலாம். முதல் உதவி பயிற்சி செஞ்சிலுவை மற்றும் புனித ஜான் அவசர ஊர்தி போன்ற சமூக அமைப்புகள் மூலம் அடிக்கடி கிடைக்கும். மேலும் கட்டணம் செலுத்தி கூட சில அமைப்புகளிலிருந்து இதை பெற்றுக்கொள்ளலாம். பல சமூக அமைப்புகள் தங்களது சமூக திட்டங்கள் முழுமையடைய ஒரு வர்த்தக சேவை, வழங்குகின்றன.பல சமூக அமைப்புகளும் கூட வணிகரீதியான பயிற்சிகள் தருவன. இது ஏனெனில் இப்பணம் தங்கள் இலவச பயிற்சிகளுக்கும் சமூக வேலைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

குறிப்பிட்ட துறைகளில்

சில குறிப்பிட்ட துறைகளில் முதலுதவி அளிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படும்.

கடல்சார் முதலுதவி : இது கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் பணியாளர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் தெரிந்துகொள்ள வேண்டிய முதலுதவி ஆகும்.
போர்க்கள முதல் உதவி : ஆயுதம் பயன்படுத்தி ஒரு மோதல் நிகழும்போது, அதில் பாதிக்கப்படும் வீரர்கள் அல்லது அப்பாவி பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி.
உயிர்வளி முதல் உதவி : உயிர்வளி பற்றாக்குறை விளைவிக்கும் நிலைமைகள் ஏற்படும் நபர்களுக்கு தரும் முதலுதவி .
சூழற்சார் முதல் உதவி : பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமெனில் ( நிலப்பகுதியின் காரணமாகவோ, தட்பவெப்பநிலை காரணமாகவோ அல்லது ய்பகரங்கள் பற்றாக்குறை காரணமாகவோ ) இம்முதலுதவி வழங்கப்பட வேண்டும். இவ்வகை முதலுதவி மூலம் காயப்பட்ட நபரை மணிக்கனக்கிலோ நாட்கணக்கிலோ பாதுகாக்க முடியும்.
ஹைட்ரோப்லூறிக் அமிலம் முதல் உதவி : இது இரசாயன தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களுக்கு, ஹைட்ரோப்லூறிக் அமிலம் உடலில் பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திகொள்ள கற்றுத்தரப்படும்.
மன நல முதல் உதவி மனநிலை பாதிப்பது போன்ற தருணங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் முதலுதவி ஆகும். மேலும் மனநோயின் முதல் அறிகுறிகளை கண்டறிவதையும் இது உள்ளடக்குகிறது.

சின்னங்கள்

முதல் உதவியுடன் பொதுவாக தொடர்புடைய சின்னமாக செஞ்சிலுவை சின்னம் அமையும்போதிலும் அது செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரப்பூர்வமான சின்னமாகும். ஜெனீவா உடன்படிக்கை மற்றும் ஏனைய சர்வதேச சட்டங்களின் படி, இது போன்ற சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை(red crescent) ஆகியனவற்றிக்கு மட்டுமே உரிமை உள்ளது. மேலும் வேண்டுமென்றால் மருத்துவ உதவி தேவைப்படும் ஒரு நபருக்கு இதை ஒரு பாதுகாப்பு சின்னமாக பயன்படுத்தலாம். வேறு எந்த நபரோ அல்லது நிறுவனமோ இவற்றை பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

அகில உலக அளவில் முதலுதவியின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது எதுவென்றால் கீழே காண்பிக்கப்பட்டிருக்கும் பச்சை பின்னணியில் உள்ள வெள்ளை குறுக்கு சின்னமாகும்.

சில நிறுவனங்கள் வாழ்வின் நட்சத்திரம்(star of life) சின்னத்தை பயன்படுத்தலாம்.எனினும் வழக்கமாக இது அவசர ஊர்திகளின் பயன்பாட்டுகேன்று ஒதுக்கப்பட்டவையாகும்.சில நிறுவனங்கள் மால்டிஸ் கிராஸ் சின்னத்தை பயன்படுத்தலாம்-மால்ட அவசர ஊர்தி அல்லது புனித ஜான் அவசர ஊர்திகள் பயன்படுத்துவது போல. மற்ற சின்னங்களும் பயன்படுத்தப்படலாம்.


ISO முதலுதவி சின்னம்


புனித ஆன்டிரூ முதலுதவி சின்னம்


செஞ்சிலுவை சின்னம்


மால்டீஸ் அல்லது அமால்ஃபி சின்னம்


வாழ்வின் நட்சத்திரம்(star of life)

முதல் உதவி பெரும்பாலும் தேவைப்படும் நிலைமைகள்
தொகு
உயர நோய் ,சில நபர்களுக்கு 5,000 அடி உயரத்திலேயே கூட இது ஏற்படும். இதன் விளைவாக மரணம் வரக்கூடிய அளவிற்கு கூட மூளை, நுரையீரல் ஆகியவை வீங்கலாம்.[4]
காப்புப்பிறவு, இதனால் மூச்சுக்குழல் சுருக்கப்பட்டுவிடும்.இது சில நேரங்களில் உயிரையே கூட எடுத்துவிடும்.இதனால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சிக்குள்ளாவார்.இந்த நிலை பூச்சிக்கடி அல்லது பட்டாணி போன்ற ஒவ்வாமை ஊக்கிகளால் உடம்பில் ஏற்படும் ஒரு முறைப்படுத்தப்பட்ட விளைவினால் உண்டாகும்.ஆரம்பத்தில் எபிநெஃரைன் ஊசி அளித்து இதற்கு சிகிச்சை அளிப்பார்கள்.
போர்க்கள முதல் உதவி -இது துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயம் ,தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற போர்க்களத்திலோ அல்லது குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலோ ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதை சார்ந்தது.
எலும்பு முறிவு, ஆரம்பத்தில் ஒரு சிம்பு வைத்து முறிவை நிலைப்படுத்த வேண்டும்.
தீக்காயங்கள்,இவை திசுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.மேலும் உடலிலுள்ள முக்கிய திரவங்கள் இழந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது.
இதய செயல்பாட்டுத்தடை (cardiac arrest) :இதய இயக்க மீட்பு (CPR) உடனடியாக தரப்படவில்லைஎன்றல் இந்நிலை மோசமாகி எளிதில் மரணம் நிகழும்.
மூச்சடைத்தல்(choking), இது பல நேரங்களில், பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்குழல் சுத்தமாக்கப்படாவிட்டால் ,உடனடியாக மரணத்தை தர வல்லது.
குழந்தை பிறப்பு
தசைப்பிடிப்புகள் ,போதிய உயிர்வளி தசைக்கு கிடைக்காததாலும் போதிய தண்ணீர் அல்லது உப்பு இல்லாததாலும் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம் காரணமாக இவை ஏற்படும்.
டைவிங் குறைபாடுகள், நீரில் மூழ்குதல் அல்லது மூச்சு திணறல்.
மாரடைப்பு,அல்லது இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் வழங்கும் இரத்த நாளங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமை.
இரத்த ஓட்டத்தை நிறுத்துமளவிற்கு ஒரு முடியோ அல்லது வேறு நூலோ விரல் போன்ற உடற்பாகங்களில் இறுக கட்டிக்கொள்ளப்படுவது.
வெப்ப மயக்கநிலை, வெப்ப வீச்சு அதே செயல்முறை மற்றொரு கட்டத்தில், வெப்ப பக்கவாதம் போன்ற சூழ்நிலையில் ஏற்படும் மற்றும் சில அதிகாரிகள் பிந்தைய இருந்து வேறுபடுத்தி இல்லை.
மிகுந்த உதிரப்போக்கு,இதற்கு காயம் உள்ள இடத்தில் அழுத்தம் கொடுத்தும் (முதலில் கைமூலமாகவும் பின்னர் ஒரு பேன்டேஜுடனும்), முடிந்தால் அடிபட்ட இடத்தை உயர்த்துவதன் மூலமும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை மிகுதியாகவோ குறைவாகவோ இருப்பது(hyperglycemia and hypoglycemia)
ஒரு நபரின் உடல் வெப்பநிலை 33.7 ° செல்சியஸ் (92.6 டிகிரி பாரன்ஹீட்) என்ற நிலைக்கு கீழே விழும் போது (hypothermia), 33.7 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலைக்கு சற்றே ஒரு நபரின் உடற்வேப்பநிலை குறையும்போது ,அவரது உடம்பிற்கு மறுசூடேற்றல் செய்யலாம். ஆனால் 33.7 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலைக்கு மிகுதியாக ஒருவரின் வெப்பநிலை குறையும்போது அவருக்கு மறுசூடேற்றல் செய்தல் அவரை மரண நிலைக்கே கொண்டு செல்லலாம்.
பூச்சி மற்றும் விலங்கு கடி மற்றும் குளவி போன்ற பூச்சிகளின் கொட்டுகள்.
எலும்பு இணைப்புகளின் பெயர்ச்சி.
ஊசி மூலமோ ,மூச்சு உள்ளிழுத்தல் மூலமோ , உறிஞ்சுதல் மூலமோ , அல்லது உணவு உட்செலுத்தலால் ஏற்படும் நச்சேற்றம்.
வலிப்பு, அல்லது மூளையின் மின் செயல்பாட்டில் ஒரு செயலிழப்பு. க்ராண்ட் மால் என்ற வகையான வலிப்பு தற்காலிக சுவாச கோளாறுகள்,தோல் நிற மாற்றம் போன்றவற்றை உள்ளடக்கும்.பெடிட் மால் என்ற வகையான வலிப்பு சட்டென்று சடசடவென கண்ணிமைப்பது மற்றும் நினைவிழத்தல் இல்லாமல் ,ஆனால் நினைவு மாற்றம் நிகழ்வது போன்றவற்றை உள்ளடுக்கும்.
தசை இறுக்கங்கள் மற்றும் சுளுக்குகள், உடனடியாக தானாகவே சரியாகிவிடும். ஆனால் கட்டுநாண்(ligament) சேதம் விளைவிக்கும்.
பக்கவாதம், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஒரு தற்காலிக நிறுத்தம்.
பல் வலி,இது கடுமையான வலி மற்றும் பள்ளிழப்பை ஏற்படுத்தலாம். இது எப்போது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்றால் சம்பந்தப்பட்ட
நோய் தொற்று தாடை எலும்பிற்கு பரவி ஆஸ்டியோமைலிடீஸ் என்னும் நோயை தொடங்கிவிடும்போதுதான்.

காயம் மற்றும் உதிரப்போக்கு ,கல்லீரல் மண்ணீரல் போன்ற உள்ளுடம்பு உதிரப்போக்குகள் ,காற்றை வெளிவிடும் ஆனால் உள்ளே விடாத ஒரு குறிப்பிட்ட கட்டு தேவைப்படும் மார்பு காயங்கள் (sucking chest wounds) ஆகியவை உட்பட.
முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
தொகு
முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
நோயாளருக்கு உதவியளித்தல்.
முதலுதவியின் நோக்கங்கள்
தொகு
உயிரைப் பாதுகாத்தல்.
நிலமை மோசமடையாமல் தடுத்தல்.
குணமடைய முன் ஏற்பாடு செய்தல்.
அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
தொகு
முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்தைரியத்தை அளிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி
தொகு
காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
தொகு
வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்
தொகு
காயத்தின் மீது வீக்கம்.
காயம் சிவந்து காணப்படுதல்.
வலி.
காய்ச்சல்.
காயத்தில் சீழ்பிடித்தல்.
மூச்சுத்திணறல்
தொகு
மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.

மயக்கம் ஏற்படுதல
தொகு
அறிகுறிகள்
தொகு
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
சோர்வு
வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
தோல் வெளுத்துக் காணப்படுதல்.
முதலுதவி
தொகு
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது

முன்புறமாக சாய வேண்டும்
தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது

பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.

வலிப்பு
தொகு
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.

அறிகுறிகள
தொகு
உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
முதலுதவி
தொகு
பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

வெப்ப நோய்கள்
தொகு
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
தொகு
வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

புதன், 11 செப்டம்பர், 2019

பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11, 1921.


பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11, 1921.

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.


பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் செப்டம்பர் 10, (World Suicide Prevention Day)


உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் செப்டம்பர் 10, (World Suicide Prevention Day)

உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10ஆம் திகதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது. இத் தினத்தினை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு ( (IASP), இ உலக சுகாதார‌ அமைப்பு (WHO) ஆகியன இணைந்து 2003 ஆம் ஆண்டில் இருந்து பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்துவருகிறது.

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். முட்டாள்தனமாக, கோழைத்தனமாக, பரிதாபமாக மனிதன் எடுக்கும் முடிவுகளில் ஒன்றாகவே இது இருக்கின்றது. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கிறது. அதிக தற்கொலைகள் இடம்பெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் இனங்காணப்படுகின்றன. அதேவேளை, பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்காவும் ஆசியாவின் சில சில பகுதிகளும் அறியப்பட்டுள்ளன.

''தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது'' என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் 40 செக்கன்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொதுவாக, தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.


தற்கொலைக் களங்கள்!

உலக அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10-ம் தேதி 'உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்' (World Suicide Prevention Day) ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.

ஏன் தற்கொலை?

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். ##~~##

பொதுவாக, தற்கொலை என்பது இயற்கைக்கு எதிரானச் செயலாக கருதப்படுகிறது. இந்தியாவில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள், கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. பகுத்தறிவின் பலனாக அது காலப்போக்கில் மறைந்துவிட்டது.

அதிக உடல் வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக இயங்க முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கம் உள்ளது.

தான் மட்டுமே தோல்வியை சந்தித்து வருவதாகவும், தான் எதற்கும் லாயக்கு இல்லாதவன், குடும்பமே என்னை வெறுக்கிறது, எல்லா பிரச்னைகளுக்கும் நான்தான் காரணம் என்பது போன்ற எண்ணங்களே தற்கொலைக்கு முக்கிய மூலமாக இருக்கின்றன.

காரணங்கள்..!

* காதல் தோல்வி மற்றும் திருமண முறிவு
* மிகவும் சோர்வான நிலை
* தீராத பிரச்னைகள் - நோய்கள் (புற்றுநோய், பக்கவாதம்)
* பாலியல் பலாத்காரம்
* தேர்வில் தோல்வி
* தாம்பத்திய உறவில் சந்தேகம்
* குழந்தை இல்லாமை
* போதை - மது பழக்கம் அடிமை
* திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம்
* கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்
* கடன் - சொத்து பிரச்னை
* வேலையின்மை அல்லது வேலை இழப்பு
* வியாபாரம்/தொழிலில் பிரச்னை

எப்போது நடக்கிறது?

பொதுவாக தனிமையில் இருக்கும் போது இரவு 12 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அல்லது பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) தான் தற்கொலைகள் நடக்கின்றன.


உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென் இந்தியாவில்தான் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நாட்டின் மொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சென்னையில் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது காவல் நிலையங்களில் பதிவான வழங்குகளின் அடிப்படையிலான விவரம். பதிவு செய்யப்படாதவை இவற்றை விட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மருத்துவத் தீர்வு..!

உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மூலம் தற்கொலை எண்ணங்களை தவிர்க்க முடியும். மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை போக்க குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் முக்கியமாக தேவை.

சிநேகா தற்கொலை தடுப்பு மையம் (பெசன்ட் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, 044 - 2835 2345) பொன்றவை தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்து அவர்கள் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாதவாறு செய்து வருகிறார்கள்.

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மீண்டு(ம்) வாழ்கிறோம் என்ற தலைப்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்கள் மனம் திறந்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் இந்தத் தினத்தில் நடக்கிறது.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள். அதவாது, ஒரு புறம் வாழத் துடிக்கிறார்கள். அது முடியாத போதுதான் தற்கொலைக்கு வருகிறார்கள். அது ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை.

சமூக நோக்கத்துக்காக..!

பெரும்பாலான தற்கொலை தனக்காக நடக்கும் நிலையில் உலகில் அத்திப்பூத்தாற் சில தற்கொலைகள் சமூக நோக்கிற்காக நடக்கவும் செய்கிறது.

முத்துக்குமார், செங்கொடி முதல் துனீசியாவின் முகமது புவாஸிஸி (Mohamed Bouazizi) வரை பலரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தன்னையை தீக்கு இரையாகினார், முத்துக்குமார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்டார், செங்கொடி.

துனிசீயாவைச் சேர்ந்த முகமது புவாஸிஸி என்ற 26 வயது இளைஞனின் தற்கொலை, அந்த நாட்டில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டது. முகமது வேலைக்காக ராணுவத்தில் சேர முயற்சி எடுத்தார். லஞ்ச ஊழல நிறைந்திருந்த அந்த நாட்டில் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. பல வேலைகளுக்கு முயற்சி செய்து முடியாமல் போகவே, தெருக்களில் காய்கறி விற்று பிழைப்பு நடத்தினர். அதற்கும் மாமூல் கேட்டு அதிகாரிகள் அராஜகம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் ஒருவர் முகமதுவை அடித்துவிட, மனம் வெறுத்த அவர், இது போன்ற பிரச்னை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கடந்த 2010, டிசம்பர் 17-ம் தேதி நடந்தது. உயிருக்கு போராடிய முகமது 2011, ஜனவரி 4-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் துனீசியா நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தை தூண்டியது. விளைவு.. 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிபர் பென் அலி பதவி இழந்தார். இந்தப் புரட்சி, இதர அரபு நாடுகளுக்கும் பரவியது.

மக்கள் பிரச்னைகளில் நல்வழி காட்டும் நம்பத்தகுந்த அரசியல் தலைமைகள், சமூகப் போராளிகளின் முயற்சிகளுடன், பிறர் நலம் பேணும் மனோபாவத்துடன் மக்களும் நியாயத்துக்காக போராட முன்வருவது மட்டுமே சமூக நோக்கத்துக்காக தன்னுயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுப்பதற்கான வழி!


 உலக தற்கொலை தடுப்பு தினம்: மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 104 மருத்துவ உதவி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


104 என்ற எண்ணில் மருத்துவ உதவி சேவை மையம் 24 மணி நேரமும் மருத்துவ தகவல் உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யோகா-இயற்கை டாக்டர்களும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை, எண்ணச்சிதறல்கள், மனஅழுத்தம், தன் நம்பிக்கையின்மை, நினைவாற்றலை பெருக்குவது, உறவுகளிடையே ஏற்படும் பூசல், பயம், தோல்வியை துணிவுடன் எதிர்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 104 சேவை மையத்தில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் அழைப்புகள் பெறப்படுகின்றன.

இவற்றில் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்காக அழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, நம்பிக்கையூட்டி மீண்டும் வெற்றியடைய வழிகாட்டியாகவும் 104 மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது. இதுவரை 725 தற்கொலைகள் எண்ணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மனம் திறந்து பேசினால் இப்படிப்பட்ட தவறான முடிவுகளில் இருந்து நிச்சயம் வெளிவர முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...!

இன்று (செப்டம்பர் 10-ந்தேதி) உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம். மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு.

இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக இடத்தையும், தற்கொலை செய்யும் முறையையும் மிகவும் கடினமானதாக அமைத்துக்கொள்வர். ஒருமுறை தற்கொலை முயற்சியை மேற்கொண்டவர்கள் தகுந்த ஆற்றுபடுத்துதல் இல்லாவிட்டால் மறுபடியும் தற்கொலை முயற்சி எடுப்பது திண்ணம். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையை வழிவகுப்பது அல்லது யோசிக்காமல் எடுக்கும் முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த இரு வகையினருக்கும் உள்ள ஒற்றுமைகள் தங்கள் பிரச்சினைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு என்று நம்புவது தான். மன வலியில் இருந்து விடுதலை பெறுவதற்கும், உடல் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வாழ்க்கையை சரியான முறையில் கையாளத் தெரியாமையால் இந்த விபரீத முடிவை மேற்கொள்கின்றனர். தாங்கள், அதிகம் நேசிக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரின் பிரிவை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதை தாங்கி கொள்ளமுடியாத இளைஞர்கள் தற்கொலை முடிவை மேற்கொள்கின்றனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி, சில இடங்களில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர்.


ஒருவர் மன அழுத்தம் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டால் அது அவர்கள் செய்த பாவத்துக்கு கிடைத்த சன்மானம் என்று கருதுகிறார்கள். அது தவறு. சர்க்கரை நோய், இருதய நோய் ஏற்படுவதைப் போல் மூளையில் ஏற்படும் ரசாயன குறைபாட்டாலும், மாற்றத்தாலும் விளைவதே இந்த நோய். இதைக்கண்டு வெட்கப்பட வேண்டாம். அவர்களை ஒதுக்கவும் வேண்டாம், உதாசினப்படுத்தவும் வேண்டாம். அவர்களை நம்மில் ஒருவராக கருதி தகுந்த மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிப்பது அவசியம் என்பதால் இந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் தற்கொலையை தடுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதை கருத்தாக அறிவித்து உள்ளது. ஆகவே தற்கொலை எண்ணம் உள்ளவர்களும் அதை மறந்துவிட்டு தகுந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் நட்பு வட்டாரங்கள் அல்லது உறவினர்கள் இவர்கள் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் அதை லேசாக ஒதுக்கிவிடாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசி தகுந்த ஆலோசனைகளை பெற அழைத்து செல்வது அவசியம். இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு. ஆகையால் ஒவ்வொரு தனிமனிதனும், அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதலில் ஒரு பிரச்சினை உண்டு என்று இருந்தால் அதற்கு தீர்வு உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஆயினும் தற்கொலையை தடுப்பது இந்நாளின் முக்கிய நோக்கமாகும். தற்கொலை செய்து கொள்ள தூண்டும் காரணங்களில் இன்றளவும் இதுவே முக்கிய காரணம் என்று எவராலும் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை. ஆயினும் மன அழுத்தம், மனச்சிதைவு நோய், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமை, போதை பழக்கம், குடும்ப உறவில் சிக்கல் போன்ற காரணங்கள் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணிகள் என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது என்பதை நாமும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்வது தலையாய கடமையாகும். உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தகுந்த உளவியலாளரிடம் சென்று அவர்களின் வழிகாட்டுதல் மூலமும், ஆற்றுப்படுத்துதல் மூலமும் தெளிவு பெற இயலும் என்பதை உணர்ந்து மனநலத்தைப் பேணவேண்டியது அவசியம்.

உளவியல் வல்லுனரை அல்லது மனநல மருத்துவரை சந்திப்பதைக்கண்டு வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மன நோயையும், மற்ற நோய் போன்றே என்று புரிந்து கொள்ளவேண்டும்.


ஒருவர் தற்கொலை முயற்சி செய்தால் அவரைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டும்?முதல் 48 மணி நேரத்திற்கு தகுந்த மருத்துவமனையில் அனுமதித்து தீவிரமாக அவர்களைக் கண்காணிக்கவேண்டியது அவசியம். இல்லையேல் மறுமுறை தற்கொலை முயற்சி செய்ய முனைவார்கள். பின்னர் சிலகாலம் அதாவது சில வாரங்கள் வரை தற்கொலை செய்ய உதவும் உபகரணங்களை அவர்கள் முன் வைக்காமல் இருப்பது, குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்கள் உணர்வை புரிந்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது. பின்னர் இந்த தற்கொலை செயலுக்குக் காரணமாக ஏதாவது உடல் ரீதியான பிரச்சினை அல்லது மனரீதியான பிரச்சினை அல்லது போதைப்பழக்கம் உள்ளதா என்று ஆராயவேண்டும். பலநாள் வரை அதாவது சில மாதங்கள் வரை குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே அவர்கள் இருத்தல் அவசியம். மன நோய் அல்லது போதைப்பழக்கத்திற்கான மருத்துவப் பரிந்துரை அவசியம். பின்னர் பிரச்சினைகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல் முக்கியமான படிகளாகும். சற்று ஆராய்ந்து பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றத்தை எளிதில் ஏற்கும் பக்குவம் இல்லாமை, வேலை இல்லாமை, சமுதாயத்தில் இருந்து விலகி அல்லது விலக்கி வைக்கப்படுவது, ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு தீரா காயத்தை ஏற்படுத்தி விடுவது இயல்பு. ஆனால் இந்த காரணங்கள் தன் திடமனத்தாலும், தன் மீது நம்பிக்கை வைத்தாலும் ஜெயிக்க இயலும் என்பது முற்றிலுமாக நம்ப மறுக்கிறார்கள்.

இவர்களை இனம் கண்டு நாம் நேசக்கரம் நீட்டி, ஆதரித்து வெற்றிப்பாதையில் பயணிக்க உறுதுணையாக நிற்போம் என்று இந் நாளில் உறுதி எடுக்கவேண்டும் என்பதே நமது நோக்கம். பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வர தற்கொலை எண்ணமும் வரும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றுவது அவசியம். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சிறார்களும் இதை வெளியில் சொல்ல பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இன்றளவும் நடந்து வருகிறது. ஆகையால் ஆற்றுப்படுத்துதலும், வழிகாட்டுதலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிப்பதால், இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு,

ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் மனநோய் வல்லுனர்கள் இருப்பது அவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவரை மனநோயில் இருந்து காப்பாற்ற ஏதுவாக இருக்கும். நாம் வாழப்பிறந்தவர்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி, அதில் கிடைக்கும் அனுபவத்தைக்கொண்டு நம் வாழ்க்கையை நேர் செய்ய இயலும். நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு வெற்றிநடை போட ஒவ்வொருவரும் உறுதி எடுக்கவேண்டும். சோதனைகளை தடைக்கற்களாக எண்ணாமல் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நிச்சயம் தற்கொலை எண்ணம் நம் மனதில் உருவாகாது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. வாழ்ந்து பார் வாழ்க்கை சுகமானது. வாழ்வோம் மற்றவரையும் வாழ செய்வோம்.
- டாக்டர் நற்பின்னை சேரன், உளவியல் வல்லுனர், தனியார் மருத்துவ கல்லூரி, காஞ்சீபுரம்.


’சொல்றவன் செய்ய மாட்டான்னு அலட்சியம் வேண்டாம்’ - தற்கொலை தடுப்பு நாள்


’சொல்றவன் செய்ய மாட்டான்னு அலட்சியம் வேண்டாம்’ - தற்கொலை தடுப்பு நாள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்கொலை என்பது தடுக்கக் கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும்.

உலக தற்கொலை தடுப்பு தினம் முதன்முதலாக 2000ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.


உலகின் ஏதொவொரு மூலையில் உள்ள ஒருவர் தற்கொலைக்கு ஒவ்வொரு நிமிடமும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ‘மைண்ட் ஸோன்’ உளவியல் கிளிக்னிக்கின் நிறுவனர் டாக்டர் சுனில். ‘ஒவ்வொரு நான்கு நொடிக்கும் ஒருமுறை தற்கொலை நடக்கிறது. தன் வாழ்நாளில் தற்கொலையைப் பற்றி யோசிக்காத மனிதர்கள் மிகக் குறைவு. தற்கொலை என்பது ஒருவகை மனநோயின் வெளிபாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்னை. தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை வரையறுத்துக் கூற முடியாது. குடும்ப வன்முறைகள், உறவுச் சிக்கல்கள், காதல் தோல்வி, நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்கிற விரக்தி மனப்பான்மை, மதுபோதை, சிதையும் குடும்ப அமைப்பு என பல காரணங்கள் உள்ளன. இந்தியா போன்ற நாட்டில் அரசியல், பொருளாதாரக் காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது மிகவும் கவலையடைக் கூடிய விஷயம்.

ஒரு தனிமனிதன் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள தற்கொலை செய்துகொள்கிறான். நான் இந்தத் தவறை செய்து விட்டேன். அதனால் இதிலிருந்து எனக்கு தண்டனை வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உண்டு. உதாரணமாக தமிழகத்தில் முத்துக்குமார், செங்கொடியின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அரசியல் காரணக்களுக்காக செய்யப்பட்ட தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ’நான் எவ்வளவு நல்லவன்னு அவங்க புரிஞ்சக்கணும்’ என்று ஒரு விஷயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. மனதளவில் ஏற்படும் மாற்றங்கள். குறிப்பாக அதீத வேதனை, நோயின் வலியை தாங்க முடியாமை, தொழிலில் ஏற்படும் தோல்வி என Mood regulation காரணமாகத் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.

சமூகக் காரணம் என்று பார்க்கும்போது மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலாத நபர் தற்கொலைக்கு முயல்கிறார். பெருகிவரும் போட்டிக்கு ஏற்ப தன்னை உயர்த்திக்கொள்ள இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. இப்படி ஒருவன் தற்கொலைக்குப் பின்னால், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற காரணங்கள் இருந்தாலும், தனிமனிதனுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. தீராத மன அழுத்தம் சீசோபெர்னியா எனும் மனநோய் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.

இது குறித்து டாக்டர் ஜெயசுதா காமராஜ் கூறுகையில், ‘பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்பவர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஆனால், உண்மை அதற்கு மாறானது. பதினைந்து முறை தற்கொலைக்கு முயன்றவர், இறுதியில் ஒரு முயற்சியில் வெற்றி பெற்று இறந்து விடுகிறார். அதேபோல் பெண்கள்தான் அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வார்கள். ஆனால், அதை நிறைவு செய்ய மாட்டார்கள். குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்குப் பின்னால் பல சமூகக் காரணங்கள் உள்ளன. அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது ஆண்கள்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். குடும்பத்தில் இதற்கு முன்பு வேறு யாரேனும் தற்கொலை செய்து கொண்டிருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வரும். இப்படியான எண்ணம் வரும்போதே அதை மனநல அவசரம் என்று கருதி தகுந்த மனநல மருத்துவரை அணுகுவதுதான் இந்த பிரச்னையைத் தடுக்க உதவும். மிக முக்கியமாக வீட்டில் யாரேனும் நீண்ட நாட்களுக்கு சோகத்துடனும் தனிமையிலும் உழன்று வந்தால் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களை பேச அனுமதிக்க வேண்டும். நாம் அட்வைஸ் செய்கிறோம் என்கிற பெயரில் நீண்ட லெக்சர் தரக்கூடாது என்கிறார்’ டாக்டர் ஜெயசுதா.


‘குறிப்பாக சட்டென முடிவெடுக்கும் இளைஞர்களிடத்தில் உஷாராக இருக்க வேண்டும். மது குடித்துவிட்டு தற்கொலை பற்றிப் பேசுகிறவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்களது பேச்சைக் கவனிப்பது முக்கியம்’ என்கிறார் ஜெயசுதா. இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியம், ஒவ்வொருவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். அன்பும் பரிவும் மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்.


தற்கொலையை தவிர்ப்பது எப்படி?

sucideவேறெந்த தாவரம் விலங்கினத்திடம் காணமுடியாத ஒரு வினோத வியாதி மனிதனிடமுண்டு இயற்கைக்கு புறம்பான,படைப்புக்கு முரணான,பரிணாமத்திற்கு பழக்கமில்லாத இந்த பரிதாப நோய், எங்கே என்று எப்படி ஏன்ட என புரியாது தொடங்கி தொடர்ந்து பல்கி பெருகி வரும் இந்த கொடுமையான குழப்பம்,என்று மாறுமென்றும் தெரியவுமில்லை.

தாங்க முடியாத துயரத்துக்கு மனிதன் கண்டறிந்த மகத்தான மருத்துவம் இதுதானா? துன்பமான ஐந்த மனித உயிருக்கு மனம் கண்டுபிடித்த மாற்று வழி சரிதானா?

நோய்க்கு மருந்து மரணம? காயத்துக்கு சிகிச்சை கையை வெட்டுவதா தோல்விக்கு பரிசு தூக்கு தண்டனையா?

மற்றவரை தண்டிக்க சுய தண்டனையா?அடக்க முடியாத ஆத்திரம்,அவமானம் குற்ற உணர்வு,சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் உச்ச கட்டம்,தற்கொலை.

ஒவ்வொரு தற்கொலையும் மனிதன் இறைவனின் மகத்தான படைப்பு என்பதை மறுசிந்தனை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையே ஒரு நொடி அதிர வைக்கிறது.

பலருக்கு தினம் செய்தி தாளில் படித்து படித்து பழக்கமாகி விட்டதோ என்னவோ இறப்பவரை விட இருப்பவரை வாழ் நாள் முழுதும் வதைக்கும் இந்த கொடூர செயல்கள் முடிவுக்கு வருமா?

ஆயிரம் வருடத்திற்கு முந்தைய பழைய இலக்கியங்களில் தற்கொலை செய்திகள் அபூர்வமாகவே காணப்படுகிறது.

சமீப காலத்தில் நவீன வாழ்வின் விளைவு அதிகமாக தற்கொலை நடைபெறுகிறது.

10 வயது முதல் 90 வயது வரை கிராமம் நகர்புறம் ஏழை பணக்காரர் பாமரர் படித்த்வர் தேசம் காலம் வித்யாசமின்றி பரவலாக நடைபெறும் இந்த அவலம் ஏன் என பல நூறு விதமான ஆராய்வுகள் நடை பெறுகின்றன.

நாளுக்கு நாள் தற்கொலை அதிகமாகி கொண்டே போகிறதே ஒழிய குறைந்தபாடாக தெரியவில்லை


தற்கொலை என்பது என்ன

1.அது விரக்தியா? வேதனையா?
2.அது சோகமா? சோர்வா?
3.அது அவசரமா? ஆத்திரமா?
4. அது கொதிப்பா? கோபமா?
5.அது குற்றஉணர்வா? சுயதண்டனையா?
6.அது வெறுப்பா? பழிவாங்குதலா?
7. அது பேயா ? நோயா?
8. அது குடும்பத்தாலா? சமூகத்தாலா?
9.அது வறுமையாலா ? வளமையினாலா ?
10.அது தோல்வியா ? வெற்றியா?
11.அது அறிவாலா ?அறியாமையாலா?

ஆயிரமாயிரம் கேள்விகள் அதற்கு ஆயிரமாயிரம் பதில்கள்.ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு புதுவித காரணம் ஆனால் பொதுவாக பரவலாக சில காரணங்கள் உண்டு.

விவரம் தெரிந்த வயது முதல் நினைவு பதிவுள்ள நாள் தொடங்கி தற்கொலை எண்ணங்கள் ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனத்திலும் ஆழமாக தொடர்கிறது.

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்வின் ஆசை மரணத்தின் ஆசை பிரிக்க முடியாத உடலின் இரு பாகங்கள் போல தொடர்ந்து வருகிறது.

இன்பம் வரும் போது வாழ்வின் ஆசை வருகிறது துன்பம் வரும் போது மரண ஆசை வருகிறது வெற்றி வரும் போது வாழ்வுசுவையாக தோன்றுகிறது.தோல்வி வரும் போது வாழ்வு சுமையாக தெரிகிறது.

இது போல துக்கமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வாழ்வு முழுவதும் தொடரும் போது மரண ஆசையும் வாழும் ஆசையும் நிலவு போல குறைந்தும் வளர்ந்தும் தொடர்கிறது. இந்த சுழற்சிதொடர் நிகழ்ச்சியாக பிறப்பு முதல் இறப்பு வரை சக்கரம் போல சுழல்கிறது.

எனவே உயிர் என்பது இன்ப குறிக்கோளை அடிப்படையாக கொண்டது.

அத்தியவசயமான அடிப்படை தேவைகள் தீர்ந்தால் இன்பமாகவும் தீராவிட்டால் துன்பமாகவும் அமைகிறது. உணவு தேவை என்பது பசி என்ற துன்பமாக பதிவாகிறது.சாப்பிடும் போது இன்பமாகவும் பசி பட்டினி என்பதும் துயரமாகவும் மாறுகிறது.

உணவு என்ற தீர்வு கிடைக்காத போது பட்டினி என்ற துயரத்திற்கு தீர்வாக மரண “ஆசை” வளர்கிறது.மரண ஆசை என்ற வார்த்தை வினோதமாக இருக்கலாம் ஆனால் அது மனித குலத்துக்கு வளர்ந்தது உண்மை உலகில் மற்ற எல்லா சீவராசிகளும் பசியும் பட்டினியும் தொடர்ந்து உயிர் விட்டாலும்கூட அதற்கு “மாற்று தீர்வு” என்று ஒன்று பற்றி அது யோசித்தது கூட இல்லை.

ஆனால் ம்னிதன் என்ற மாபெரும் சிந்தனை வாதிசெயற்கையான ஒரு குறுக்கு வழியை கண்டறிந்தான் தூயரத்திற்கு சுலபமான தீர்வு தற்கொலைதான் என்று அதற்கு பிறகு கோடானு கோடி பேர் தவறு என்று சொன்னாலும் அவர்களுடைய மனதிலே கூட விச செடி இது மறைந்து கிடக்கிறது

நேரமும் காலமும் சூழலும் கனிந்து வ்ரும் போது இந்த நச்சு விதை முளை விட்டு வளர்ந்து விசுவரூபமடைந்து விருட்சமாக வளர்கிறது.தற்கொலையைதூண்டி வெற்றிகரமாக தோன்றுகிறது

இந்த விச சிந்தனை வளர்வதற்கு காரணங்களென்ன? முன்பே சொன்னது போல ஒவ்வொரு தற்கொலை முயற்சிக்கும் ஒவ்வொரு புது காரணம் உண்டு.ஆனாலும் சில பொது காரணங்கள் உண்டு

வாழ்வு பிடிக்காமல் போவது, மரணத்தை விரும்புவது என படிபடியாக வளரும் விச எண்ணங்கள் தற்கொலை முயற்சியை தூண்டுகிறது துரதிக்ஷ்டவசமாக பலர் இதில் வெற்றி அடைகிறார்கள்.

முதலில் பார்த்தது போல பட்டினி துயரத்திற்கு வலி நிவாரணியாக பல ஆண்டுகள் முன்பு துவங்கிய இந்த தற்கொலை தீர்வு காலப்போக்கில் பரிணாமமடைந்தது

நமது தேவைகளின் பட்டியல் நீண்டு நீண்டு விண்வெளியையும் தாண்டி தாண்டி சென்றுவிட்டது.

வெறும் உணவு, உறவு, உறக்கம், உறை என வளர்ந்த பட்டியல் பிறகு பணம்,பதவி என உயர்ந்தது அது பறந்து பறந்து நிலவு,சூர்யன் என நீண்டுவிட்டது.

இமயத்தை தொட்டாலும் வானத்தில் ஏறு என தொடர்கிறது.இந்த ஆசையும் ஆர்வமும் வாழ்வின் ஆசையில் முளை விட்டு வளர்ந்தது.ஆனால் நடைமுறையில் நாம் எதிர்பார்த்தது பெரும்பாலும் நடப்பதில்லை.எப்போதும் எதிர்பாராத துயரங்களே நடக்கிறது.

அப்போதெல்லாம் வாழ்வின் ஆசை காற்று போன பலூன் போல சுருங்கி விடுகிறது.அந்த இடத்தில் மரண ‘ஆசை’ வேர் விட்டு வளர்கிறது.

வாழ்வின் ஆசை மூன்று கால்களில் நடக்கிறது.ஒன்று நமது கடந்த காலம் என்ற சாதனைகள் பிறகு நிகழ்காலம் என்ற நமது பந்தங்களும் சொந்தங்களும் மற்றது எதிர்காலம் என்ற திட்டங்களும் நம்பிக்கைகளும்.

நான் ஏன் பிறந்தேன் உபயோகமில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை முதல் படியில் ஏறுகிறது.எனக்கு யாருமில்லை அனாதை என்ற சுய பச்சாதாபம் இரண்டாவது.மேலும் படியில் ஏற்றுகிறது.மூன்றாவதாக எனக்கு எதிர்காலமில்லை என்ற அவ நம்பிக்கை முழுமையாக தூக்கு மேடையில் ஏற்றுகிறது.

மற்றபடி தற்கொலையை தூண்டும் காரணிகள் என்று சொல்லப்படும் பல காரணங்கள் உண்மையில் மாயத்தோற்றமே.

உதாரணமாக மயிலிறகு போல மென்மையானது என்றாலும் எடை கூட கூட அச்சு பாரம் தாங்காது விரிசல் கூடும்.ஆனால் இறுதியாக ஒரு சிறு மயிலிறகு வைத்ததும் அச்சு இற்று உடையும்.ஆனால் பார்ப்பவர் கண்களுக்கு இந்த மயிலிறகு ஒன்று தான் அனைத்துக்கும் காரணம் என முக்யத்துவம் கொடுக்க தோன்றும்.

பணம் பழம் விழுத்து விழ தயாராக இருந்தாலும் காகம் உட்கார்ந்தது தான் உலகில் முக்யமாக பேசப்படும்.

ஆனால் பிறப்பு,வளர்ப்பு,கடந்த காலம்,நிகழ்காலம்,இயல்பு, நிகழ்வு என்ற பல நூறு முந்தைய காரணங்கள் ஒன்று கூடி தர்கொலை மேடையை அமைத்து விடுகின்றன.

இறுதியில் ஒரு சிறு காரணம் காரணியாக அமைகிறது.ஒவ்வொரு தற்கொலையையும் பிரேத பரிசோதனை செய்தால் அதன் பரிணாம வளர்ச்சி நன்கு புரியும்.

‘இவன்’அந்த வீட்டில் நான்காவது ‘வேண்டாத’குழந்தையாக வந்து பிறந்தான்.எல்லோருக்கும் செல்ல தம்பி ஆனாலும் ‘எடுபிடி’ வேலை முரணான கட்டளைகள் முரட்டு கட்டுபாட்டு வேலிகள்.அன்பில்லாத ஒரு விரக்தியான அன்னை,தந்தையோ குடித்தே சொத்தையும் தன்னையும் கூடவே குடும்பத்தையும் அழித்தவர்.

இவனோ ஆசிரியருக்கும் அடங்காது அனைவருக்கும் பணியாது படிப்பை விட்டு காதலித்து தோல்வியடைந்து வாழ்வில் சருக்குகிறான்.

போதை பழக்கம்,உறவுகளால் ஒதுக்கபட்டு தானாக ஒரு ஆதரவற்ற மூத்தபெண்ணுடன் முறையற்ற உறவு முறையில் வாழ்கிறான் வாங்கிய கடன்களை அடைக்க முடியாது வாடுகிறான்.

அப்போது கடன் கொடுத்தவர் தரக்குறைவாக பேசியது ஏசியது தாங்காது ரயிலில் விழுந்து மாள்கிறான் காவல்துறை வயிற்று வலி தாங்காத மரணம் என தற்கொலைக்கு காரணக் கணக்கு எழுதி விடும்.

ஊரும் உறவும் ஏசியவரை ஏசி விட்டு ஓய்ந்து விடும் ஆனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தற்கொலைக்கு பல காரணங்களின் கூட்டனி இருப்பது புரியும்.

முன்பே பார்த்த மாதிரி பல நூறு காரணங்கள் பல்வேறு காலகட்டங்களில் சுழன்று வரும் இறுதியாக அந்த சூழலில் ஒரு உணர்வு இறுதி முடிவுக்கு வழியாகும்.

எனவே நிச்சயமாக தற்கொலைக்கு முன்னதாகவே அவர் ஆயிரமாயிரம் எச்சரிக்கைகள் கொடுக்கிறார் ஆனால் பலரும் அதை சுலபமாக புரிந்து கொள்வதில்லை இழந்த பின் அழுது என்ன பயன்?

ஆகவே தர்கொலை எண்ணம் உருவாகாமல் தன்னைத் தானே காத்து கொள்வது சிறந்தது ஆனால் அப்படி ஒருவரால் இயலாத போது மற்றவர் எல்லோரும் அவரை காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

குரைக்கிற நாய் கடிக்காது என அவரை அலட்சியபடுத்துவது ஆபத்து.

ஆறுதல் ஆற்றுபடுத்துதல் அன்பு பரிவு போன்ற மன நல ஆலோசனைகள் அவசியம்.ஆழமாக ஆராய்ந்து அவரது சிக்கல்களுக்கு தீர்வு காண்பிக்க வேண்டும்.

இடமாற்றம் மன மாற்றம் சூழல் மாற்றம் யாவும் உபயோகமானது முறையான பயிற்சி பெற்ற தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் தேவை.

கண்துடைப்புக்காக ஒப்புக்காக உபயோகமற்ற கண்டிப்புகளும் தண்டனைகளும் தற்காலிக நிவாரணங்களும் ஆபத்தானவை.

மனபதட்டம் மனசுழற்சி மனசோர்வு மனஎழுச்சி மனசிதைவு தீய வழக்கங்கள்,போதை பழக்கங்கள் உடலுறவு பிரச்சனைகள் போன்ற பல தீவிரமான மன நல தாக்கங்களும் தற்கொலைக்கு தூண்டுதல்களாக அமைகிறது.எனவே மன நல மருத்துவ சிகிச்சைகள் அவசியமானது.
எனவே தற்கொலை தடுப்பு முயற்சிகள் தீவிரமாக மேர் கொள்ளபட வேண்டும்
தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டவுடன் பெரும்பாலானவர்கள் அதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள்.

அதை வெளிப்படுத்தினால் தன்னை எல்லோரும் ஏளன‌மாக அவமானமாக துணிவில்லாத கோழையாக நினைப்பாரோ என்றதொரு அச்சமே அவர்களை தடுகிறது.

இரண்டாவதாக மற்றவருக்கு தெரிந்தால் தனது ‘முயற்சி’யில் தோல்வியடைவோம் வெற்றி கரமாக தற்கொலை செய்து தப்பித்து கொள்ள முடியாது என்ற ‘அச்சமும்’காரணமாகிறது.

எனவே அவர் எப்படியாவது இந்த அச்சங்களை மீறி தன் உள்ளத்தை யாராவது ஒருவரிடம் வெளிபடுத்த வேண்டும்.அல்லது கடிதம் ,தொலைபேசி அல்லது ஏதாவது ஒரு வழி மூலம் மறைமுகமாவது தனது ஆழ்மனதை சொல்ல முயற்சிக்க வேண்டும்.

இதை கேட்பவர் யாரும் அதை பயமுறுத்தல்,ஏமாற்றுதல்,blackmail என்று ஏளனம் செய்யாது மனிதாபிமான விஞ்ஞான ரீதியான மன நல மனோதத்துவ மருத்துவ சிகிச்சைகளை கொடுக்க வேண்டும்.

இயன்ற அளவு அவரது சமூக பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவோ,குறைக்கவோ முயற்சிக்க வேண்டும்.

பல நேரங்களில் ஒரே ஒரு சிறிய பார்வை, வார்த்தை, பாடல் கூட பல தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்தியிருக்கிறது உலகில் தன்னை நேசிக்க ஒரு உயிருண்டு என்ற எண்ணம் பலரை வாழ வைத்திருக்கிறது. ஒரே ஒரு சிறிய அதிட்டமான சுப சம்பவம் கூட பலரை புதிய புணர் வாழ்வுக்கு மாற்றியிருக்கிறது. தீவிர முயற்சி செய்தால் நிச்சயம் தற்கொலையை தடுக்கலாம்.


நன்றி விகடன்,புண்ணியமீன்,தினத்தந்தி.
மின்னம்பலம்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144