திங்கள், 27 ஜனவரி, 2020

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட... பஞ்சாப் சிங்கம் பிறந்த தினம் !!



இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட... பஞ்சாப் சிங்கம் பிறந்த தினம் !!
இன்றைய பொன்மொழி !
ஓடிச்செல்லும் ஆறு ஒரு பாறையை பொடித்து உடைப்பது அதன் பலத்தால் அல்ல... அதன் விடாமுயற்சியால்..!! விடாமல் முயற்சி செய், எதையும் உன்னால் சாதிக்க முடியும்..!!லாலா லஜபதி ராய்


இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று கூறினார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.இராஜா இராமண்ணா


இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.

எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களின் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.

1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்" (ழுpநசயவழைn ளுஅடைiபெ டீரனனாய) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, லுநயசள ழக Pடைபசiஅயபந (1991)இ வுhந ளுவசரஉவரசந ழக ஆரளiஉ in சுயபய ரூ றுநளவநசn ளுலளவநஅள (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

இந்திய அணு ஆற்றல் துறைக்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
1882ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.1898ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இந்திய தரைப்படையின் முதல் படைத்தலைவர் கே.எம்.கரியப்பா பிறந்தார்.

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு

 உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு

ஜனவரி
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

பிப்ரவரி
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

ஏப்ரல்
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜீன்
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்

செப்டம்பர்
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26. குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!



இந்திய குடியரசு தினம் ஜனவரி 26.
குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!

உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு.
 
உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின.
சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, ஜனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

இந்தியர்களாகிய நாம் இன்று 71 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.


உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின.
சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, ஜனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
இந்தியர்களாகிய நாம் இன்று 69வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.

உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
நன்றி சமயம்.
இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இன்றைய தினம்... வரலாறு ஜனவரி 19



திரைப்பட பின்னணி பாடகர்... சங்கீத அகாடமி விருது... இன்றைய தினம்... வரலாறு !
சீர்காழி கோவிந்தராஜன்

🎼 கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பிறந்தார்.

🎼 பி.எஸ்.செட்டியார், அவர்களின் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். 1951ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

🎼 1953ஆம் ஆண்டு பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

🎼 சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

🎼 தன் இனிமையான குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 1988ஆம் ஆண்டு மறைந்தார்.ஜேம்ஸ் வாட்


🏆 பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

🏆 இவருக்கு சிறுவயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

🏆 இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.

🏆 இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

🏆 இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.

🏆 மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.

🏆 இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1819ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஓஷோ மறைந்தார்.👉 1806ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது.


வெள்ளி, 17 ஜனவரி, 2020

இன்றைய தினம்... வரலாற்றில் தடம் பதித்தவர்கள்... யார்? யார்?



இன்றைய தினம்... வரலாற்றில் தடம் பதித்தவர்கள்... யார்? யார்?
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
'வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே... என்ன செய்கிறாய்? என்பதை அறிந்து செய்.. செய்வதை விரும்பிச் செய்.. செய்வதை நம்பிக்கையோடு செய்..!"எம்.ஜி.ராமச்சந்திரன்



✌ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

✌ இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

✌ சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

✌ 1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காகத்" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

✌ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.பெஞ்சமின் பிராங்கிளின்



🌀 ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

🌀 இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார்.

🌀 இவர் 'Pழழச சுiஉhயசனள யுடஅயயெஉம" என்ற புகழ்பெற்ற இதழை இவ்வுலகுக்குத் தந்தவர்.

🌀 மின்சாரம் பற்றியும், இடி மற்றும் மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (டிகைழஉயட படயளளநள) மற்றும் பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.

🌀 அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வளைகுடாப் போர் ஆரம்பித்தது. l

புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்




பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்

#பண்டைய நாள் முதல்
#போகிப் பண்டிகை
#தைப் பொங்கல்
#மாட்டுப் பொங்கல்
#காணும் பொங்கல்

திருநாளின் நோக்கம்
அறிமுகம்
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல்தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

பண்டைய நாள் முதல்
தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும். இதனை மனதில் வைத்துத்தான், தை நோன்பை சங்ககாலப் பெண்கள் கடைபிடித்தார்கள். மார்கழியில் தொடங்கிய நோன்பை, தை முதல் நாள் முடிப்பார்கள். தங்கள் பயிர் செழிக்க உதவிய பகலவனுக்கும், மண்ணுக்கும் (பூமிக்கும்), உழுத கால்நடைகளுக்கும், பால் வழங்கிய பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்தையும் சுத்தப்படுத்தி, அலங்கரித்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கல் திருநாள், வேளாண்மையைத் தொடர்புபடுத்தியே நடத்தப்படுகிறது.

"மணிமேகலை" காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா 28 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அதாவது 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப, ஏறக்குறைய தை மாதம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இப்போது போகி, அன்று, பழையனவற்றைக் கழித்து, வீட்டை, தெருவைச் சுத்தப்படுத்துவது போல, அப்போதும் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்ததைத்தான் காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். வீதிகளைச் சுத்தப்படுத்தி, புதுமணல் பரப்புவர்.

காவல் தெய்வம், இஷ்டதெய்வம், ஊரின் பொது தெய்வம் என அனைத்துத் தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்தனர். மழைக்கு உரிய தெய்வம் இந்திரன். இந்திர வழிபாட்டால், மாதம் மும்மாரி பொழியும் என்று நம்பினர். உலக உயிருக்கு ஒளி கொடுத்து, ஆதார சுருதியாக இருக்கும் சூரியனை வணங்கி, கொண்டாட்டத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதோடு வாழ்வின் நோக்கம் & மக்களின் பசி, நோய் நீங்க வேண்டும். பகைமை மறைய வேண்டும். உறவுகள் மலர வேண்டும் என்பதுதான்.

ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஐப்பசியில் மழை பொழிய, உழைப்பால் விளைவித்த நெல்லை மார்கழியில் சேகரித்து, தங்கள் உழைப்பின் பயனை நுகரும் நாளே, தைத் திருநாள். புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகையில், 'தை'க்கு சிறப்பு தெரிவித்து பாடல்கள் உள்ளன. பொங்கல் திருநாள் தற்போது நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் உலகில் வாழும் பகுதிகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை
'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தமிழரின் மரபு. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்-களைக் கழித்து, வீட்டை சுத்தமாகத் துடைத்து, வர்ணம் தீட்டி, புதுப் பொலிவோடு மாற்றுவார்கள். இப்படிச் செய்யும் மாற்றம், வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை. இதில் பழைய பொருட்களை, தேவையற்றவைகளை தீயிட்டுக் கொளுத்துவது சேர்ந்துவிட்டது. இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று வலியுறுத்தப்படுவதால் 'போகி கொளுத்துவது' கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இது ஆரோக்கியமான விஷயம். இப்போது 'தூய்மை இந்தியா' நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளிலேயே 'தூய்மை இல்லத்தை தொடங்கி வைத்தவர்கள், அதற்காக ஒரு விழாவினைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் என்பது பெருமைதானே!

தைப் பொங்கல்
தை முதல் நாளில், அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானை வைத்து, புது அரிசியிட்டு, பொங்க வைப்பார்கள். தலைவாழையிலையில், நிறைகுடம் வைத்து, விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று, 'பொங்கலோ... பொங்கல்' என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை எடுத்து சூரியனுக்குப் படைத்து, உற்றார், உறவினர், சுற்றத்தாருக்குக் கொடுத்து, அதன்பின்னே குடும்பத்தார் உண்பார்கள். 'மகிழ்வித்து மகிழ்' என்னும் தமிழனின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு இது.

மாட்டுப் பொங்கல்
தமிழனின் உழவுக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது ஆவினங்களே, அந்த ஆவினங்களுக்கு நன்றி கூறும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. அதோடு பண்டைய தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் அன்று நடைபெறும். கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கரித்து, அவைகளுக்கு பொங்கலிட்டு, 'பட்டி பெருக, பால் பானை பொங்க, நோவும், பிணியும் தொழுவோடு போக' என்று முழக்கமிட்டு, மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். கிராமத்து வீதிகளில் ஜல், ஜல், சலங்கை ஒலிகளோடு, மாடுகள் உலா வருவது, மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கும். பிற உயிரையும், தன் உயிராக நினைக்கும், உயர், தமிழர் பண்பாடே மாட்டுப் பொங்கல்.

காணும் பொங்கல்
மனிதனை சமூக விலங்கு என்பர். காரணம், மனிதனும் கூடி வாழ்பவன்தான்-. கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். உற்றார், உறவினர்களை, காணும் பொங்கலன்று, கண்டு, பரிசளித்து மகிழ்வர். அதோடு குடும்பத்தார், சுற்றத்தார் புடை சூழ நகரை வலம் வருதலும் காணும் பொங்கலன்று நடக்கும் உன்னத நிகழ்ச்சியாகும். வீட்டை விட்டே வெளியே செல்லாதவர்கள் கூட, காணும் பொங்கலன்று வெளியே வந்து, வெளியுலக மகிழ்ச்சியை அனுபவிப்பர்.

திருநாளின் நோக்கம்
பொங்கல். இது ஒரு தமிழர் இனத் திருவிழா. சாதி, சமயம் மற்றும் பல வேறுபாடுகளை மறந்து, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த குடியின் அடையாள, பண்பாட்டு விழாவாக பொங்கல் திகழ்கிறது. உழைப்பின் மகிமையை ஊருக்கு, உலகுக்கு சொல்லும் விழா, பொங்கல் விழா, இது இயற்கையோடு இயைந்த மூத்த குடியின் திருநாள். இத்தகைய பொங்கல் விழாவினை ஏன் கொண்டாடுகிறோம் என்பதனை கவிஞர் வாணிதாசன், தனது கவிதையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த மழைக் களிர் வாடையை வீழ்த்தி விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம் வெளியெலாம் விளைவினைக் கண்டோம்! பண்ணிடைக் கலந்த தமிழ்ச் சுவை போல மனத்திடைப் பரந்ததே இன்பம்! கண்ணிடை மகிழ்ச்சி கருத்திடைத் தெளிவு கண்டனம் வாழ்த்துவோம் பொங்கல்என! மனிதன் உயிர் வாழ உணவு தேவை. நமது முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இதனை விளைவித்து, அறுவடை செய்து, வையத்து உயிருக்கெல்லாம் சோறிடும், அறுவடைத் திருநாளான பொங்கல் விழா போற்றத் தகுந்ததல்லவா! பொங்கல் நன்றி தெரிவிக்கும் விழா, மேற்கு நாடுகளிலும், நமது பொங்கல் போன்றே, நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒரு விழா, கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், தை முதல் நாளைப் போன்று (ஜனவரி 14, 15 வாக்கில்) சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். சூரியன், தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழைந்து, உத்தரயானத்தில் சஞ்சரிக்கும் காலம் தொடங்கிறது. இதுவே மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

உலகெங்கிலும் மக்கள் விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கம். இயந்திர கதியிலான தங்கள் இயல்பு வாழ்க்கையில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்படைவதற்காகத்தான். தேக்கமான வாழ்க்கைக்கு வடிகாலாக இருப்பவைகளே விழாக்கள். விழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம், புத்துணர்வும், புது எழுச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. காலைக் கதிரவன் அன்றைய நாளின், நம்பிக்கையின் அடையாளம். விழாக்கள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மகிழ்ச்சியின் அடையாளம்

சனி, 28 டிசம்பர், 2019

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார்... பிறந்த தினம் !!
வரலாற்றில் இன்று !!
ராஜேஷ் கன்னா


🎬 இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.

🎬 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து 'சூப்பர் ஸ்டார்" அந்தஸ்தை பெற்றார்.

🎬 இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை 'இந்தித் திரையுலகின் சிவாஜி" என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.

🎬 இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.

🎬 இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 2012ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.குவெம்பு


✍ இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார்.

✍ 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

✍ இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும்.

✍ இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் 1994ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1949ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர், சையத் கிர்மானி சென்னையில் பிறந்தார்.
👉 1993ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உலகின் மிகப்பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.

மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.


மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?

ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம்.



கடவுளின் கரம்

யூதப் பாரம்பரிய மக்கள் கனவு வழியாக கடவுள் மக்களோடு பேசுகிறார் என்று நம்பினர். எனவே, கனவு வருகிறபோது, அவர்கள் அதை சாதாரணமானதாக கருதுவதில்லை. அதில் இருக்கக்கூடிய அர்த்தங்களை விளக்குவதற்கு ஏராளமான பேர், பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். எனவே, யோசேப்பு கனவை சிந்தித்து, அர்த்தம் கண்டுபிடிக்க முனைவதில், பொருள் இருக்கிறது. ஆனால், இந்த பகுதியை வாசிக்கிறபோது, நமக்கு எழுகிற முக்கியமான கேள்வி: யோசேப்பு எதற்காக எகிப்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்? எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இவற்றை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு எப்பொழுதெல்லாம் வேற்று அரசர்கள் வந்து அவர்களைத் துன்புறுத்தினார்களோ, அப்போதெல்லாம் தாங்கள் புகலிடம் செல்லும் இடமாக எகிப்தை அவர்கள் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்களது முன்னோர் அங்கே பல ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்ததால், அவர்களின் பல உறவுகள் அங்கே இருந்தனர். அங்கிருந்து வேற்று நாட்டிற்கு வந்துவிட்டாலும் கூட, நிச்சயம் எகிப்தும் அவர்களுக்குத் தாய்வீடு போன்றதுதான். அவர்களது முன்னோர் வாழ்ந்த நாடு. இதனால், எகிப்தின் ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் மட்டும் ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு புள்ளவிபரம் கூறுகிறது. எனவே, எகிப்திற்குச் சென்றால் உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களுக்கு அந்நிய தேசம் அல்ல. ஆக, குழந்தைக்கு ஆபத்து என்றதும், யோசேப்பு தப்பியோட, எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் அல்ல.

கடவுளுடைய கரம் தேவைப்படுகிற நேரத்தில், யோசேப்பிற்கு கிடைக்கிறது. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பமான நேரத்தில் கடவுள் யோசேப்பிற்கு உதவி செய்கிறார். நிச்சயம் அந்த கடவுளின் கரம் நம்மையும் தேற்றும் என்றால் அது மிகையாகாது. நாம் துன்பப்படுகிற நேரத்தில் கடவுள் தாமே, தம் தூதரை அனுப்பிக் காத்திடுவார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 25 டிசம்பர், 2019

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 05.


உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 05.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒங்கிணைத்து ஐ.நா. சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது.

அதில் பேசியவர்கள் இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் சுனாமியில் இருந்து உயிர் பிழைத்த செக் குடியரசின் பிரதிநிதி உட்பட சிலர் பேசும்போது சுனாமி தொடர்பான தங்கள் எண்ணங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசைச் சேர்ந்த பெட்ராநெம்கோவா என்பவர் பேசும்போது, ‘‘தண்ணீர் அல்ல ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடம் தன் மீது விழுந்ததைப் போன்று உணர்ந்தேன். நான் தங்கியிருந்த பயணியர் விடுதி சில வினாடிகளில் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. எல்லா இடங்களிலும் இடிபாடுகளே காணப்பட்டன. எனவே இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் கையாள்வது அவசியம்’’ என்றார்.

முடிவில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.

இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

கடலில் நிலத்தட்டுகள் மோதுவதால் கொந்தளிப்பு

கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதை சுனாமி என்று அழைக்கிறார்கள்.

கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியன வற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.

சுனாமி அபூர்வமாக நிகழக் கூடியதுதான். எனினும் இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமிக்கு எல்லையே கிடையாது.

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 58 சுனாமிகளால் இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒவ்வொரு முறை ஏற்பட்ட சுனாமியின்போது சராசரியாக 4,600 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இடிபாடுகளில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் சுனாமி, தமிழில் ஆழிப்பேரலை

சுனாமி என்பது ஜப்பான் சொல். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை. எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.

ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன் புலூக்" என்று அழைப்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் “சுமாங்" என்றும், சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைக்கப்படுகிறது.

சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுனாமியின் வேகம் ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது.

ஆபத்தை உணர்ந்து பலரை காப்பாற்றிய மாணவி

இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவி டில்லி ஸ்மித் தனது பெற்றோர் மற்றும் ஏழு வயது சகோதரியுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டில் உள்ள மைக்காவோ கடற்கரைக்கு வந்திருந்தார்.

டிசம்பர் 26, 2004-ம் ஆண்டு மைக்காவா கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கடல் உள்வாங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடற்கரையில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த டில்லி ஸ்மித், தனது பெற்றோரிடம், ‘‘நாம் தற்போது ஆபத்தில் இருக்கிறோம். சுனாமி அலைகடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடற்கரையை விட்டு நாம்தூரத்தில் சென்று விடவேண்டும். சுனாமிகுறித்து எனது பள்ளியில் புவியியல்ஆசிரியர் பாடம் எடுத்தார். சுனாமி வந்தால்எப்படி முன்னெச் சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்’’ என்றார்.

உடனே டில்லி ஸ்மித்தின் பெற்றோர் கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தனர். இதனால் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறினர்.

சுனாமியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியதற்காக பிரான்ஸின் குழந்தைகள் பத்திரிகையான மோன் கோடிடியன் 2004-ம் ஆண்டின் மிகச் சிறந்த குழந்தை விருதை வழங்கியது. மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனிடம் பாராட்டு பெற்றார்.
நன்றி இந்து தமிழ் திசை.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சுனாமி நினைவு தினம் டிசம்பர் 26


15வது சுனாமி நினைவு தினம் - கடல் அரக்கனின் கோரத்தாண்டவம் மறந்து போகுமா?
#Tsunami #MemorialDay

15வது சுனாமி நினைவு தினம் - கடல் அரக்கனின் கோரத்தாண்டவம் மறந்து போகுமா?

கடல்... உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.

14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.



சுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை.

“ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று... சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.

2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

எனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.

எந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.


15-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். 

நன்றி மாலை மலர்.
#Tsunami #MemorialDay #சுனாமி #சுனாமி_நினைவு_தினம்
 
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம்.. டிசம்பர் 25


வீரமங்கை வேலு நாச்சியார்  நினைவு தினம்..
டிசம்பர் 25 

வீரமங்கை #வேலு_நாச்சியார்
அவர்களின் நினைவு தினம்..

வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர்.

உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.

தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார்.

மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர்.

சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.

ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரை வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்.

1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார்.

அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் மன்னர் வளரிவீச்சீல் பல எதிரிகளை கொன்றார்.

நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர்

இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார் வேலு நாச்சியார்.

காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார்.

அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர்.

அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் .

விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.

ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார்.

இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார்.

மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது.

ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார்.

தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார்.

சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார்.

மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது.

அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.இந்நாளில் அவரை வணங்குவோம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

விவசாயிகள் தினம் டிசம்பர் 23.


விவசாயிகள் தினம் டிசம்பர் 23.

விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை

நமக்கு உணவிடும் விவசாயிகளுக்கு இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் !!
🌾இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். உணவு மனித வாழ்வில் மகத்தான இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விவசாயம்.

🌾இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

🌾ஊருக்கே உணவளிப்பவன் விவசாயி. விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் விவசாயிகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

📅இல்லை இல்லை.. டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டதே தவிர, இந்த நாளை இதுவரை யாரும் கொண்டாடி நாம் பார்த்திருக்க மாட்டோம். அதுமட்டுமில்லாமல் இப்படியொரு தினம் இருப்பது பலருக்கும் தெரியுமா..? என்றால் அதுவும் சந்தேகம் தான்.

👉இந்த தேசிய விவசாயிகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? என இப்போதாவது தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

👉நம் நாட்டின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்தநாளே விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


👉உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராக வாழ்ந்து வந்தார்.

👉இவர் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 7 மாதங்கள் வரை மட்டுமே ஆட்சியில் இருந்த இவர் முதன் முதலில் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார்.

👉மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பதற்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார்.

👉அதோடு இவர் கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

👉தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர். அதனால் இவருடைய பிறந்தநாளை 2001ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌱பலர் தனக்கும், விவசாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் விவசாயிகள் தினம் கொண்டாடுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

🌱ஆனால் அது தவறு.. நாம் உண்ணும் உணவிற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நம் மீது அக்கறை கொண்ட யாரோ ஒரு விவசாயி, ஏதோ ஒரு மூலையில், பல கஷ்டங்களுக்கு மத்தியில் காய்கறி, பழம், அரிசி என அனைத்தையும் நமக்காக விளைவித்து கொடுக்கிறார்.

🌱அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாகவும், விவசாயத்தை காக்கவும் தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாட வேண்டும் என விரும்பி உங்களில் ஒருவராக நாங்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🌱இந்த தலைமுறைக்கு தெரியாமல் போன மகிழ மரமும், இலுப்பை மரமும் ஊருக்கு ஊர் வைக்க வேண்டியதும் நமது கடமையே.

பல பேர் சோற்றில் கை வைக்க..
தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து பாடுபடுபவன்...
விவசாயி..🌱


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 18 டிசம்பர், 2019

டிசம்பர் 18 சிறப்புகள்.


டிசம்பர் 18 சிறப்புகள்.

நவீன அணு இயற்பியலின் தந்தை பிறந்த தினம் !!
முத்தான சிந்தனை துளிகள்!
மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.சர்வதேச இடம்பெயர்வோர் தினம்


சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்காக பலரும் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்கள் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.ஜெ.ஜெ.தாம்சன்


நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தை செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (றுநளவ ஆinளைவநச யுடிடிநல) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.நா.பார்த்தசாரதி


தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி, கம்பராமாயணத் தத்துவக் கடல் போன்ற பல விருதுகளைப் பெற்ற நா.பார்த்தசாரதி 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தமிழ் மொழி செழிக்க பாடுபட்ட ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் பிறந்தார்.1890ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பண்பலையைக் (குஆ) கண்டுபிடித்த எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்காவில் பிறந்தார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

வெற்றி தினம் டிசம்பர் 16


வெற்றி தினம் டிசம்பர் 16.

வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

வெற்றி தினம்

டாக்காவில் 16 திசம்பர், 1971ல் இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பாகிஸ்தான்  சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பாகிஸ்தான் லெப்டினன்ட். ஜெனரல் ஏ. ஏ. ஏ. கே. நியாசி
1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.


வெற்றி தினம் 2014ல் விசாகப்பட்டினம் தியாகிகள் போர் நினைவிடத்தில் துணை அட்மிரல் பிமால் வர்மா அஞ்சலி செலுத்துகிறார்.
இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்
நன்றி விக்கிபீடியா.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 14 டிசம்பர், 2019

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.



உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் என்றாலே சுற்றிலும் பசுமை நிறைந்த காட்சிகளைத் தான் நிறையக் காண்பிப்பார்கள். எவ்வளவு குளுமையான இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல்… என்று மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம். அப்படிக் காட்டப்படும் இடங்களில் டீத் தோட்டமும் ஒன்று. மலை முகடுகளில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் டீ செடிகளால் மலைக்கே ஏதோ பச்சைப் போர்வை போர்த்தியது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் நாம் தான் அதனை ரசித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அங்கிருக்கும் மக்கள் குறிப்பாக டீ தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள் தெரியுமா?

டயர்டாக இருக்கிறதென்றும்… தலைவலிக்கிறது என்றும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஆனால் டீயை விளைவித்து அதனை மக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்திடும் தொழிலாளர்கள் பலர் இன்றளவும் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இன்றைக்கு பன்னாட்டு தேயிலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களை விட இந்த தொழிலாளர்களின் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இவர்களது பிரச்ச னையை வெளிப்படுத்த தனியான ஒரு நாள் வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்ட போது, அசாம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த சீன ஒப்பந்த தொழிலாளர்கள் 1838 ஆம் ஆண்டு திசம்பர் பதினைந்தாம் நாள் முதலாவது சம்பளப் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் பதினைந்தாம் நாள் சர்வதேச தேயிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தி யில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின்  தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புது டெல்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

ஆனாலும் பரந்த விரிந்த கண்ணைக் கவரும் பசுமை, சில்லென உடல் வருடும் குளிர்காற்றென மலைப் பிரதேசங்களின் நினைவே நமக்குப் பரவசமூட்டுவதாய் அமைகின்றன. ஆனால், அவற்றின் மறுபுறத்தில், அகண்ட பள்ளத்தாக்குகளில் தலைமுறைகளாய் உழைத்தும் தலையெடுக்க வழியின்றி கொத்தடிமைகளாக உழலும் பல இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் இருள் நிறைந்த வாழ்வோ நம்மால் அறியப்படாமலே கிடக்கின்றது, நூறாண்டுகள் கடந்த பின்பும்.

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங் கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.

வெள்ளையர்களின் காலனியச் சுரண்டல் ஆட்சியின் கீழ், செழிப்பான மலைப்பிரதேசங்களில் தேயிலை, மிளகு, காப்பி உள்ளிட்ட பணப்பயிர் வளர்த்துக் கொள்ளை இலாபம் ஈட்டிய ஆங்கிலேய முதலாளிகளால் வதைத்துக் கொல்லப்பட்டோர் ஏராளம். இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளின் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர் வெள்ளை முதலாளிகள். வறண்டு போன பூமியில் வாழ வழியின்றி ஆண்டு முழுவதும் வேலை, நல்ல வருமானம் என்ற ஏஜென்டுகளின் பேச்சில் மயங்கி, பசி, பட்டினிக் கொடுமைகளிலிருந்து தப்பித்துப் பஞ்சம் பிழைக்க மலைப் பிரதேசங்களை நாடி வந்தவர்களை எதிர்கொண்டதோ நரக வாழ்க்கை.

மலைத் தோட்டப் பயிர்களில் பிரதானமானது தேயிலை, அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இமயமலை அடிவாரத்திலும், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன தேயிலைத் தோட்டங்கள், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்க இடமின்றி, நோய்க்கு மருந்தின்றி கொத்தடிமை வாழ்வில் அடக்கி, ஒடுக்கி, ஒட்டச் சுரண்டப்பட்டு, அரைவயிற்றுக் கஞ்சியுடன் கடுங்குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் உழைத்துக் களைத்து, இளைத்துப்போய் இற்றுவீழும் உழைக்கும் மக்களின் உடல்களில் உரம்பெற்றுத் தழைத்து நிற்கின்றன தேயிலைச் செடிகள்; கொழுத்துக் கிடக்கின்றனர் இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளுக்குச் சொந்தக்காரர்களான பன்னாட்டு முதலாளிகளும், டாடா, வாடியா, கோத்ரெஜ் உள்ளிட்ட தரகு முதலாளிகளும்.

இந்தியா முழுவதிலும் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற் பட்டோர் பணிபுரிகின்றனர். நம் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலோ அவலச் சுவை மண்டிக்கிடக்கிறது.

அதிகாலையில் எழுந்து சமைத்து முடித்து, இருள் அகலும் முன்பே கிளம்பி நடந்து சென்று மலையேறி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை இடைவேளையின்றித் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து, ஆலைக்கு எடுத்துச் சென்று எடைபோட்டு முடிப்பதற்குள் இரவாகி விடும். பின்னர் இரவு உணவுக்கான சமையல் வேலைகள். இடைப்பட்ட மிகக்குறைவான நேரத்தில்தான் கண்ணயர முடியும்.

இப்படி இரவு, பகல் பாராமல் ஒய்வு, ஒழிச்சலின்றிப் பாடுபடும் இவர்களுக்கு வழங்கப்படும் கூலியோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூடப் போதுமானதாக இருப்பதில்லை. சத்தான உணவின்மை, நோய் வாய்ப்படுதல் போன்றவற்றால் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைக்குச் செல்ல முடிவதில்லை. மாதத்தில் அதிகபட்சமாக 20 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகின்ற நிலையில் கணவனும்,மனைவியுமாக குடும்பமே பாடுபட்டாலும் மாதக் கூலியாக அவர்கள் பெறும் தொகை பத்தாயிரத்தைத் தாண்டுவதில்லை. அதிலும் பல்வேறு பிடிமானங்கள் போக சொற்பத் தொகையே கைவந்து சேருகிறது. இதைக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளைச் சமாளிக்க முடியாத தொழிலாளர்கள் கந்துவட்டிக்கு கடன் பெற்றே காலம் தள்ளுகின்றனர். மறுபுறத்தில், அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் எஸ்டேட் முதலாளிகளோ கோடிகளில் இலாபத்தை வாரிச்சுருட்டுகின்றனர்.

தேயிலை பறிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். வெயிலிலும், மழையிலும் காலையிலிருந்து மாலைவரை நின்றபடியே, அட்டைக்கடியையும், உண்ணிக் கடியையும் தாங்கிக் கொண்டு, முதுகில் பாரத்தையும் சுமந்தகொண்டு, கொழுந்து பறிக்க வேண்டும். சிறிது நேரம்கூட ஓய்வெடுக்க முடியாது. மதிய உணவுக்கு மட்டுமே சிறிது இடை வேளை உண்டு. மற்றபடி இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கினால்கூட கங்காணிகளின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு தொடர்ச்சியாக நின்றுகொண்டே வேலைசெய்வதால் ஏற்படும் மூட்டுவலி, போதிய பாதுகாப்புக் கவசங்களின்றி வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப் படுவதாலும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற நச்சு இராசயனங்களாலும் ஏற்படும் தலைவலி, நரம்புக் கோளாறுகள், மார்புவலி, கருச்சிதைவு, சிறுநீரக, கருப்பைக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இரையாக்கப்படுகின்றனர் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள். ஆனால், இவற்றிற்கெல்லாம் உரிய சிகிச்சை அளிப்பதற்கான எவ்வித மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில்லை முதலாளிகள். இதுதவிர, பாம்புக்கடி, வனவிலங்குகளால் தாக்கப்படுதல், விபத்துகள் உள்ளிட்ட எதற்கும் உரிய மருந்துகளோ பெயரளவுக்கு நடத்தப்படும் எஸ்டேட் மருத்துவமனைகளில் இருப்பதில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சொற்ப வருமானத்திலும் கணிசமான தொகையை மருத்துவத்திற்காகச் செலவளிக்க வேண்டியுள்ளது.

பனியிலும், மழையிலும், வெயிலிலும் வாடி வதங்கி, வேலைசெய்துவிட்டுச் சோர்வுடன் திரும்பும் இந்தத் தொழிலாளர்கள் தங்கி, உண்டு, உறங்கி ஓய்வெடுக்கத் தரமான வீடுகள் எதுவும் கிடையாது.ஆங்கிலேய முதலாளிகள் காலந்தொட்டு இன்றுவரையிலும் லைன் வீடுகள் எனும் கொட்டடிகளில் தான் வதைபடுகிறது இவர்களது வாழ்க்கை. ஆஸ்பெஸ்டாஸ் எனும் நச்சுக் கூரையால் மூடப்பட்ட இத்தகரக் கொட்டகைகளில் பல்லாண்டுகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களில் பலர் புற்று நோய்க்கு ஆட்பட்டு மாண்டுபோகும் அவலங்களும் தொடர்கின்றன. மேலும், இந்த ஒண்டுக் குடித்தனமும் இவர்களுக்குச் சொந்தம் கிடையாது. 58 வயதில் பணியிலிருந்து நீக்கி, குடியிருப்புகளிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி வீடற்ற அநாதைகளாக நிறுத்துகின்றனர் முதலாளிகள்.



தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவற்றவர்கள்; ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. இந்நிலையில், இவர்களது குழந்தைகளின் கல்விக்காக போதிய உட்கட்டமைப்புகள், ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிக்கூடங்கள் எதுவும் எஸ்டேட்டுகளில் கிடையாது. எனவே, தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி வெளியுரில் படிக்க வைப்பதால், தனியார்பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரையாக்கப்படுகின்றனர், இத்தொழிலாளர்கள். இப்படி வெளியூர்களில் தங்கிப் படிக்கவைக்க முடியாத நிலையிலுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளோ, குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி, தாயுடன் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு, இளமையிலேயே சிறகுகள் முறிக்கப்பட்டு, மீண்டும் அடிமை வாழ்விலேயே புதைக்கப்படுகின்றனர்.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்கை நெருக்கடிகள் மென்மேலும் முற்றிப்போயுள்ளன. தனியார்மய தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக தேயிலை இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பச்சைத் தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப் படுத்தியுள்ளனர், எஸ்டேட் முதலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப்பணிக்கு அமர்த்தி வருகின்றனர். ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்தப் பணிக்கு அமர்த்தி,நிரந்தரத் தொழிலாளர்களைப் போல இருமடங்கு பணிச்சுமையை அவர்கள் மீது திணித்து கொடூரமாகச் சுரண்டுகின்றனர். ஆனால், வழங்கப்படுவதோ அற்பக்கூலி, இந்த அற்பக்கூலியைக் கூட முறையாக வழங்காமல், விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி, மாதக்கணக்கில் இழுத்தடித்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

இந்த விலை வீழ்ச்சி என்பதே முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனத்தின், சதியின் விளைவாக, செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றுதான். தேயிலை உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபடுகின்ற டாடா போன்ற தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தேயிலை உற்பத்திக்கும், தேயிலையைத் தூளாக மாற்றி விற்பதற்குமென தனித்தனியாக வெவ்வெறு பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் கள்ளக்கூட்டை (cartels, syndicates) உருவாக்கிக்கொண்டு திட்டமிட்டே பச்சைத் தேயிலையைக் குறைவான விலையில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் மீதான பணிச்சுமையை அதிகரிப்பது, கூலியைக் குறைப்பது, சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்துவது என்று உழைப்பவர்களைச் சுரண்டுகின்றனர். மறுபுறத்திலோ, மிக அதிகமான விலைக்குத் தேயிலை தூளை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இந்த செயற்கை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட, தேயிலை உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வந்த பல சிறிய, நடுத்தர எஸ்டேட் முதலாளிகள் நட்டம் ஏற்படுவதாகக் கூறி எஸ்டேட்டுகளை இழுத்து மூடிவருகின்றனர். இதுநாள்வரை தங்களுக்காக உழைத்து, கோடிகளில் இலாபத்தை ஈட்டித்தந்த தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இப்படித்திடீரென இழுத்து மூடப்பட்ட எஸ்டேட்டுகளால் வாழ்விழந்த தொழிலாளர்கள் பலர் பசியிலும், பட்டினியிலும் வாடி கொத்துக் கொத்தாக மடியும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, குறைந்த பட்ச ஊதியம் சட்டம் 1948, தொழிற் தகராறுகள் சட்டம் 1947, காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைபடுத்தல் மற்றும் ஒழிப்புச்சட்டம் 1970, உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலச் சட்டம் 1979 உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டங்கள் அனைத்தையும் குப்பையென ஒதுக்கித் தள்ளியுள்ளனர், முதலாளிகள். இச்சட்டங்களை அமல்படுத்த மறுக்கும் முதலாளிகள் மீது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமல் வேடிக்கை பார்க்கிறது அரசு. பெருமளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள போலிக் கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்களோ முதலாளிகளின் எச்சில் காசுக்கு வாலாட்டிக் கொண்டு தொழிலாளிகளுக்குத் துரோகமிழைக்கின்றன. போலிகளின் முகத்திரை கிழித்தெழுந்த மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டமும் சித்தாந்த வலுவின்றிப் போனதால் கோரிக்கைகளை முழுமையான நிறைவேற்ற முடியாமல் முட்டுச்சந்தில் முடங்கிப்போனது. தற்போது இருக்கின்ற சட்டங்களையும் திருத்தி, தொழிலாளர் களை போராடிப்பெற்ற உரிமைகளைப் பறித்து, அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வேலைகளில் சதித்தனமாக ஈடுபட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

சட்டங்கள் அனைத்தும் செல்லாக் காசுகளாகிவிட்டன. பிழைப்புவாதிகளின், போலிக் கம்யுனிஸ்டுகளின் தொழிற்சங்களோ கங்காணிகளாக மாறி நிற்கின்றன; ஆங்கிலேயன் காலத்தில் பூட்டப் பட்ட அடிமை விலங்கோ அகற்றப்படாமலேயே கிடக்கிறது இன்றுவரை. தமது வாழ்க்கை யைச் சிதைத்துச் சூறையாடும் பன்னாட்டு, இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களைத் தாங்கி நிற்கும் இந்தப் போலி ஜனநாயக அரசமைப்பையும் தாக்கித் தகர்த்து, தூக்கியெறியும் வகையிலான போராட்டங்களைக் கட்டிமைப்பதன் வாயிலாகவே தோட்டத் தொழிலாளர்கள் தங்களைப் பிணைத்துள்ள கொத்தடிமைத் தளையை அறுத்தெறிய முடியும்.



எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் :✍?

•☕உலகம் முழுவதும் 1500 தேநீர் வகைகள் உள்ளன.

•☕சீனாவில் உள்ள ஹூனான் பிரதேசம்தான் தேயிலையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த 800 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

☕•சீனாவில் கிரீன் டீ தேசிய பானமாகும்.

•☕உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுபவர்கள் உள்ள நாடு இந்தியாதான். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் ருசிப்பவர்கள் இந்தியர்கள்தாம்.

•☕இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், வட வங்காளம் மற்றும் நீலகிரி டீ வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

•☕சாதாரண டீயுடன் சேர்ந்து இப்போது ஆர்கானிக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஹுலாங் டீ, ஃபிளேவர்டு டீ, டீ காஃப் டீ, ஹெர்பல் டீ போன்ற மருத்துவப் பயன்பாடுள்ள தேநீர் வகைகளும் இப்போது கிடைக்கின்றன.

•☕ஷன்ஷா, கியமாகரோ, ஜென்மாய்ஷா, மேட்ஷா, பன்ஷா, குகிஷா, ஹங்ஜிஷா இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஜப்பானில் கிடைக்கும் புகழ் பெற்ற டீயின் பெயர்கள்.

•☕உலகத்தில் ஜப்பானியர் மட்டுமே சா நோ ஹூ என்ற டீ விழா எடுக்கிறார்கள். தேநீர் உடல் நலத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீக நலனுக்கும் உகந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை.

•☕தேநீரைப் பற்றியும், தேயிலைத் தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கென்றே ஓர் இதழ் வெளிவருகிறது. பெயர்: டீ தி மகஸின். இந்த ஆங்கில இதழின் நிறுவனரான பேர்ஸ் டெக்ஸ்டர் என்ற பெண்மணி ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதற்குப் பெயர்: தி டீ ஸ்கூல்.
நன்றி ஆந்தையார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*