செவ்வாய், 27 ஜூலை, 2010

சின்ன‌ குயில் சித்ரா பிற‌ந்த‌ நாள் ஜுலை 27

சின்ன‌ குயில் சித்ரா பிற‌ந்த‌ நாள் ஜுலை 27 ...
சின்ன‌ குயில் சித்ரா திருவனந்தபுரத்தில் வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயர் தம் மூத்தபெண் பீனாவின் அரிய குரலினிமையையும் , இசைத் திறமையையும் கண்டு அவரே தம் புகழை இசையுலகில் பட்டொளி வீசி பறக்கச் செய்வார் என்று கணக்கிட்டார். ஆனால் இறைவன் சித்தம் வேறாக இருந்தது. கிருஷ்ணன் நாயருடைய மனைவி சாந்தகுமாரி ஒரு வீணை வித்தகி. அவர் பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. ஆனால் திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் பிறந்த அவருடைய இளையமகள் சித்ரா கணக்கற்ற அபூர்வத் திறமைகளைத் தம்முள் பொதித்துக் கொண்டு அவருடைய தந்தையின் கனவுகளை எல்லாம் நனவாக்குபவர் என்பதைக் காலம் உலகிற்கு உணர்த்திற்று.
சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் ஒலிபரப்பட்ட சுசீலா அம்மாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் இசை என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் பீனாவிற்கு சங்கீதம் கற்பிக்கப்பட்ட பொழுது சின்னஞ்சிறு சித்ரா தன் கேள்வி ஞானத்தினாலேயே கேட்ட பாடல்களை நினைவு படுத்திக் கொண்டு பாடும் திறமை படைத்தவராக இருந்தார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒரூ பரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார் என்பது வியக்க வைக்கிறது. பள்ளியில் பயின்ற நாட்களிலும் கையில் புத்தகத்துடன் தேர்விற்குô படிக்கும் வேளையிலும அவருடைய கவனம் படிப்பின் பால் செல்லாமல் பக்கத்து கோவிலிருந்து ஒலிக்கும் பாடலின் ஸ்வரங்களிலேயே லயித்து வந்தது. இதை கண்ட அவர் தந்தையார் தம் மகள் சார்பாக National Talent Search Scholarship க்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்குî சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும் பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட scholarship ஐப் பெற்றார். பின்னர் இசை பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
சித்ரா பேராசிரியர்.ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார் அவருடைய சகோதரர் எம்.ஜி..ராதாகிருஷ்ணன் அவர்கள் திரைத்துறையில் புதுì குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி அவர்கள் சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன் மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.
தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவ ருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.யேசுதாஸ் அவர்களுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்குô பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக்குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடி பெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி ' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு S.P.வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை P.B.ஸ்ரீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காகî சென்னைககு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. ஒரு முறை இயக்குனர் ஃபாஸில் தம்முடைய Nokkethadhoorathu Kannum Nattu என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுததார். இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன.
1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் ' துள்ளி எழுந்தது பாட்டு சின்னக்குயிலிசை கேட்டு' , வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ') சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட 'சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து' , 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். தன்னுள் ஒளிந்திருந்த திறமையை உலகிற்கு வெளிக்கொணர்ந்து புடமிட்ட பொன்னாக ஒளிரச் செய்ததில் தான் திரு.இளையராஜா அவர்களுக்கு பெரிதும் கடமைப் பட்டிருப்பதாக சித்ரா அவர்கள் கூறுகிறார்.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் பல்சுவையாக சுவைக்கக் கிடைத்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன் படுத்தி தீஞ்சுவை விருந்தை படைக்கத் துவங்கினார்கள். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய திரு.கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ஷங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
எண்பதுகளின் பிற்பகுதியில் திரு.சந்திரபோஸின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் திருமதி.சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு போன்ற அரிய பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் திரு எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா ' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில' பாடல்களையும் பாடி அசத்தினார்.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். R.D.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லக்ஷ்மிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), V.S. நரசிமமன் (விழிகளில் கோடி அபிநயம்), L.வைத்யநாதன்(என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்ஸலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்யராஜ் (அம்மாடி இது தான் காதலா), S.P.B (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), S.A.ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்Îம்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் A.R. ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. அவர்கள் தம் கற்பனை வளத்திற்கேற்ப இசைத்துறையில் பல புது முயற்சிகளில் இறங்கினர். இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சிதராவின் குரலில் ' புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ஊ லலலா,எங்கே எனது கவிதை போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்.
சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடல் தமக்கு சவாலாக இருந்ததாக சித்ரா உரைக்கிறார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்கள் அற்புதமானவை. 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, I love you love you , தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரொட் (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு , அடி ஆத்தி , அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களின் தொகுப்பைô பார்க்கிறோம்.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி பி.லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் ஒப்பாரும், மிக்காருமில்லாமல் செங்கோலோச்சி பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் இளையராஜா,ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ்.பி.பி, மனோ , ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் மந்திரக்குரலால் உயிர்ப்பித்த திருமதி .சித்ராவைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தெலுங்கில் சித்ராவை ' பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் ' பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ்.பி.பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி(மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறையைî சுட்டிக் காட்டியபொழுது கற்பூர புத்தி கொண்டவரான சித்ரா அவர்கள் வெகு விரைவில் கற்று திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாகô பாடி பிற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என உறுதியாகக் கூறலாம்.
பாலிவுட்டையும் திருமதி.சித்ராவின் குரல் வசீகரிக்கத் தவறவில்லை. இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'LOVE ' என்ற பெயரில் தயாரித்த பொழுது இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்த பாடல்கள் பல வடநாட்டில் விரும்பிக் கேட்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி..சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கரின் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதாஜி கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'rasika balma' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
சித்ரா அகில் இந்திய வானொலியிலும், தொலைகாட்சியிலும் Grade 'A' artiste ஆக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி, வடுக மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா ' என்ற Indipop தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'Piya Basanti' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம்.டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'Sunset Point' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப் படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உன்னி மேனனும் , சித்ராவும் 'Swarnarekha' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே ' என்ற தொகுப்பும், ஸ்வாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'Enchanting Melodies' ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. இன்னிசையரசி எம்.எஸ் அவர்களின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'My Tribute' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ' குறை ஒன்றும் இல்லை' , ' பாவயாமி ரகுராமம்' , ' காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு ' சுனாமி ' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்' பின் 'We Believe in Now' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
'ஸ்ருதி' என்று பொருத்தமான பெயரில் சாலிகிராமத்தில் தனக்கென அழகுற கட்டிக் கொண்ட இல்லத்தில் 'விஜய ஷங்கர்' என்ற பொறி இயல் வல்லுனரான தன் கணவருடன் வாழ்ந்து வரும் சித்ராவின் சகோதரரும்., சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.
திருமதி.சித்ரா வாங்கிய விருதுகள் கணக்கற்றவை. தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப்பாடகி அவரே. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (ஜானகி அவர்கள் 12 முறை) அவர் கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும் , நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. விராசத் ஹிந்தி படத்தில் paayalEn chunmun chunmun' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து ஹிந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தெரிவிக்கிறார். 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா அவர் S.P.சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலை முறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும் மழலைக்கு தாயாகிய சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்.
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் திரு.அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்மஸ்ரீ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறும் சித்ரா இன்னும் பல காலம் இசைத்துறையில் பல சாதனைகள் புரிய இறைவனை வேண்டுவோம்.

புதன், 21 ஜூலை, 2010

சூர்யா பிற‌ந்த நாள் ஜுலை 23

சூர்யா பிற‌ந்த நாள் ஜுலை 23
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975, கோயம்புத்தூர், இயற்பெயர் - சரவணன்), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் கிடைத்தது.

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர்

2010 சிங்கம் அனுஷ்கா ஹரி DURAISINGAM

2009 ஆதவன் நயன்தாரா K.S ரவிக்குமார் ஆதவன்/முருகன்

2009 அயன் தமன்னா K.V ஆனந்த் தேவா

2008 வாரணம் ஆயிரம் சமிரா, சிம்ரன், திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன்

2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு

2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா, பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம்

2006 ஜூன் R ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா

2005 ஆறு த்ரிஷா ஹரி ஆறு

2005 கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி

2005 மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா

2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல்

2004 பேரழகன் ஜோதிகா சசி சங்கர் சின்னா, கார்த்திக்

2003 பிதாமகன் லைலா பாலா சக்தி

2003 காக்க காக்க ஜோதிகா கௌதம் மேனன் அன்புச்செல்வன்

2002 மௌனம் பேசியதே த்ரிஷா, லைலா அமீர் கௌதம்

2002 ஸ்ரீ ஸ்ருதி நரசிம்மன் ஸ்ரீ

2002 உன்னை நினைத்து ஸ்னேகா, லைலா விக்ரமன் சூர்யா

2001 நந்தா லைலா பாலா நந்தா

2001 பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சித்திக் சந்த்ரு

2000 உயிரிலே கலந்தது ஜோதிகா K.R ஜெயா சூர்யா

1999 பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வசந்த் கிருஷ்ணா

1999 பெரியண்ணா மானஸா எஸ். ஏ. சந்திரசேகர் சூர்யா

1999 சந்திப்போமா ப்ரீதா விஜயகுமார் ரமேஷ்குமார் சந்துரு

1998 காதலே நிம்மதி கவிதா இந்திரன் சந்த்ரு

1997 நேருக்கு நேர் சிம்ரன் வசந்த் சூர்யா

செவ்வாய், 20 ஜூலை, 2010

இய‌க்குன‌ர் ஸ்ரீதர் பிறந்த‌ நாள் ஜூலை 22

இய‌க்குன‌ர் ஸ்ரீதர் பிறந்த‌ நாள் ஜூலை 22..
ஸ்ரீதர் (1933 - அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் ஒரு இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இருவரின் திரைவாழ்க்கையிலுமே இது ஒரு பொன்னான படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் காலத்தை வென்ற கீதங்களாக விளங்குகின்றன.
1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவரது கண்ணாகப் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் இன்றளவும் பேசப்படுபவை.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர், வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதரின் பொற்காலம் என்றே கூறலாம். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
இயக்கிய திரைப்படங்கள் சில...
1957 கல்யாணப் பரிசு
1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம்
1961 தேன் நிலவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், ஆலயமணி
1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1965 சுமை தாங்கி, வெண்ணிற ஆடை
1967 ஊட்டி வரை உறவு
1968 கலாட்டா கல்யாணம்
1969 சிவந்த மண்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1972 அவளுக்கென்று ஒரு மனம்
1974 உரிமைக்குரல்
1978 இளமை ஊஞ்சலாடுகிறது
1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1980 சௌந்தர்யமே வருக வருக
1981 நினைவெல்லாம் நித்யா
மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 80 வது அகவையில் காலமானார்.

வியாழன், 15 ஜூலை, 2010

பார‌திராஜா பிற‌ந்த‌நாள் ஜூலை 17

பார‌திராஜா பிற‌ந்த‌நாள் ஜூலை 17
பாரதிராஜா (Bharathiraja), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதா நாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.இயக்குனர் இமயம் பாரதிராஜா!
தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை பெரிய மாயத் தேவர், தாயார் மீனாட்சியம்மாள் ( எ ) கருத்தம்மாள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி. இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். "ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார். ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ( "அதிகாரம்" ), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார். அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா மற்றும் பேத்தி.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருதுகளும் பாராட்டுகளும்
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு விருதுகள்
*16 வயதினிலே 1977 மத்திய அரசின் சிறந்த பாடலுக்கான தேசிய விருது. பாடல்-செந்தூரப்பூவே
*கிழக்கே போகும் ரயில் 1978 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
*புதிய வார்ப்புகள் 1979 தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது
*கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980 எஸ்.ஐ.எஃப்டி-யின் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருக்கான விருது
*நிழல்கள் 1980 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
*அலைகள் ஓய்வதில்லை 1981 தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
*சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 1. சிறந்த இயக்குநருக்கான ஸ்வர்ண கமலம் மற்றும் சித்தாரா விருது
2. ஆந்திர மாநில அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
3. தெலுங்கில் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான விருது
புதுமைப்பெண் 1984 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
முதல் மரியாதை 1985 சிறந்த இயக்கநர், தமிழில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடலை இயற்றியது ஆகியவற்றுக்கான தேசிய விருது

கடலோரக் கவிதைகள் 1986 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்

வேதம் புதிது 1987 சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது

கருத்தம்மா 1994 குடும்பம் மற்றும் சமூக பொதுநலனைக் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது

அந்தி மந்தாரை 1996 சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது

கடல் பூக்கள் 2000 1. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது

2. சாந்தாராம் விருது: 7 விருதுகள்(சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட)

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய நடிகர், நடிகையர்கள்
சத்யஜித் (16 வயதினிலே) சுதாகர்

பட்டாளத்து விஜயன் நிழல்கள் ரவி

டைரக்டர் (ராபர்ட்) ராஜசேகர் கே. பாக்யராஜ்

டைரக்டர் ரா. சங்கரன் கவுண்டமணி

ஜனகராஜ் சந்திரசேகர்

கல்லாப்பெட்டி சிங்காரம் கே.கே. சௌந்தர்

ஷியாம் சுந்தர கார்த்திக்

கண்ணன் 'மண்வாசனை' பாண்டியன்

தியாகராஜன் லல்லு அலெக்ஸ்

தீபன் ராஜா (வெங்கடேஷ்)

டாக்டர் ராஜசேகர் மலேசியா வாசுதேவன்

தாசரதி ராஜா

வசீகரன் மனோஜ்

ராதிகா ரத்தி அக்னிஹோத்ரி

வடிவுக்கரசி உஷா

ராதா ரேவதி

அருணா விஜயசாந்தி

ரோகிணி சுபத்ரா

அனிதாபதன் ஸ்ரீலதா

லட்சுமிகலா ரஞ்சனி

ரேகா ஜென்ஸி

பானுப்ரியா கமலா காமேஷ்

அனுராதா வாசுதேவ் ரஞ்சிதா

உமா சிந்து

பிரியாமணி பாலகுரு

மணிவண்ணன கே. ரெங்கராஜ்

மனோபாலா ஜே. ராமு

சித்ரா லட்சுமணன் மனோகரன்

க. சந்திரசேகர் திலகர் மருது

நிவாஸ் கணேச பாண்டியன்

பி. கண்ணன் லதா ரஜினி காந்த்

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய படங்கள்
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு ஓடியநாட்கள்

16 வயதினிலே 1977 30 வாரம்

கிழக்கே போகும் ரயில் 1978 52 வாரம்

சிகப்பு ரோஜாக்கள் 1978 25 வாரம்

புதிய வார்ப்புகள் 1979 25 வாரம்

நிறம் மாறாத பூக்கள் 1979 100 நாள்(இலங்கையில் 52 வாரம்)

ஸோல்வா ஸாவன்(ஹிந்தி) 1979 கல்கத்தாவில் 25 வாரம்

யார் குலாபி(தெலுங்கு) 1979

கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980

நிழல்கள் 1980

நிறம் மாறாத பூக்கள்(மலையாளம்) 1980

ரெட் ரோஸஸ்(ஹிந்தி) 1980

அலைகள் ஓய்வதில்லை 1981 25 வாரம்

சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 100 நாள்

டிக் டிக் டிக் 1981

காதல் ஓவியம் 1982

ராகமாலிகா 1982 100 நாள்

வாலிபமே வா வா 1982 131 நாள்

மண்வாசனை 1983 286 நாள்

லவ்வர்ஸ் (ஹிந்தி) 1983

புதுமைப்பெண் 1984 100 நாள்

மெல்லப் பேசுங்கள்(தயாரிப்பு) 1984 100 நாள்

சவரே வாலி கரடி(ஹிந்தி) 1984

தாவணிக் கனவுகள்(நடிப்பு மட்டும்) 1984 100 நாள்

ஒரு கைதியின் டைரி 1985 100 நாள்

முதல் மரியாதை 1985 130 நாள்

யுவதரம் பிலிசிந்தி(தெலுங்கு) 1985

ஈதரம் இல்லாளு(தெலுங்கு) 1985

கைதிபேட்டா (தெலுங்கு) 1985

கடலோரக் கவிதைகள் 1986 100 நாள்

நீதானா அந்தக் குயில்(திரைக்கதை மட்டும்) 1986 100 நாள்

வேதம் புதிது 1987

ஜமதக் கனி(தெலுங்கு) 1987 100 நாள்

கொடி பறக்குது 1988

நாற்காலிக் கனவுகள்(டப்பிங்) 1988

என் உயிர்த் தோழன் 1990

புது நெல்லு புது நாத்து 1991

நாடோடித் தென்றல் 1992

கேப்டன் மகள் 1993

கிழக்குச் சீமையிலே 1993

கருத்தம்மா 1994

பசும்பொன் 1995

தமிழ் செல்வன் 1996

அந்தி மந்தாரை 1996

தாஜ்மகால் 1999

கடல் பூக்கள் 2000

ஈர நிலம் 2003

கண்களால் கைது செய் 2004

கோதா ஜீவித்தாலு(தெலுங்கு)

ஆராதனா(தெலுங்கு)


சுவையான தகவல்கள்
திரைப்படத் துறைக்கு வரும் முன்னர், மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ந‌ன்றி விக்கிப்பீடியா... &lashman

புதன், 14 ஜூலை, 2010

காம‌ராஜ‌ர் உத‌ய‌ நாள் ஜுலை 15

காம‌ராஜ‌ர் உத‌ய‌ நாள் ஜுலை 15
குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆரம்ப வாழ்க்கை


காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
தனது பள்ளி படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் துவங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராஜுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் குரு
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில்சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது) குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.
வித்தியாசமான அமைச்சரவை
காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.) அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.
காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.
அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராஜர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராஜாரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராஜருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.
திரைப்படங்கள்
2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.

“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சிதம்பரம் சுப்ரமண்யம்

"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி
"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி