சனி, 29 பிப்ரவரி, 2020

மார்ச் 01 வரலாற்றில் இன்று

மார்ச் 01 வரலாற்றில்  இன்று

இன்று பத்திரிக்கை உலக ஜாம்பவான்... பிறந்த தினம் !

இன்றைய பொன்மொழி
'விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு... அனைத்தையும் சாதிக்கலாம்..!"ஏ.என்.சிவராமன்



📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார்.

📰 இவர் கல்லூரியில் படிக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

📰 காந்திஜியின் 'ஹரிஜன்" இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1934ஆம் ஆண்டு 'தினமணி" இதழ் தொடங்கப்பட்டபோது, இவர் உதவி ஆசிரியராக பணியாற்றினர்.

📰 கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.

📰 பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.

📰 தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், 'ஏஎன்எஸ்" என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 2001ஆம் ஆண்டு மறைந்தார்.எம்.கே.தியாகராஜ பாகவதர்



🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்.

🎼 இவர் தன்னுடைய 16வது வயதில் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. 'தியாகராஜன் ஒரு பாகவதர்" என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

🎼 திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார். அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

🎼 1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, 3 தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

🎼 தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற, உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
★ 1873ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதன்முதலில் நடைமுறை தட்டச்சுப் பொறியை ஈ.ரெமிங்டன் சகோதரர்கள் நியூயார்க்கில் தயாரித்தனர்.🌀 1912ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.


வியாழன், 27 பிப்ரவரி, 2020

‘லீப் நாள்’ வினோதங்கள்


‘லீப் நாள்’ வினோதங்கள்

குட்டீஸ் லீப் நாள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறையே வரும் சிறப்பு கொண்டது லீப் நாள். ஆமாம், லீப் நாளில் யாராவது பிறந்திருந்தால் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாள் வரும். பிறகு அவர்களின் வயதை எப்படி கணக்கிடுவார்கள் என்று யோசிக்கிறீர்களா? இது பற்றியும், லீப் நாள் வினோதஙக்ள் பற்றியும் அறிந்து கொள்வோமா?
பிப்ரவரி 28, 09:00 AM

நாம், நாள் என்பதை பூமி சுற்றுவதில் இருந்து கணக்கிடுகிறோம். பூமியானது தன்னைத்தான் சுற்றிக் கொள்வதால் இரவு பகல் ஏற்படுகிறது. அதேபோல பூமி சூரியனையும் ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீண்ட வட்டப்பாதையில் பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலமே ஒரு ஆண்டு எனப்படுகிறது.

இப்படி பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. துல்லியமாக சொல்லப்போனால் அந்த 365 நாட்களுக்கும் கூடுதலாக சில மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது 365.242189 நாட்கள் கொண்டதுதான் துல்லியமான ஒரு வருடமாகும். கூடுதலாக இருக்கும் நேரம் 5 மணி நேரம் 48 நிமிடங்கள், 45 வினாடி களாகும். இந்த கூடுதல் நேரமானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சேர்ந்து கூடு தலாக ஒரு நாளை உருவாக்கிவிடுகிறது. அதுவே லீப் ஆண்டு என்று அழைக்கப்படு கிறது. அந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்த்து கணக்கிடப்படுகிறது. அதுவே லீப் நாள் என்றும் வரை யறுக்கப்படுகிறது. 100 ஆண்டுகளில் சுமார் 24 லீப் நாட்களே வந்து செல்லும்.

லீப் நாளை பிப்ரவரியில் சேர்த்ததன் பின்னால் ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. நாம் இப்போது பின்பற்றும் உலகளாவிய பொது காலண்டர் முறை ஜூலியன் நாட்காட்டி முறையாகும். ஆங்கிலேய நாட்காட்டி முறையான இதில் மற்ற எல்லா மாதங்களும் 30 அல்லது 31 நாட்கள் கொண்டு உள்ளன.

ஆனால் பிப்ரவரி மட்டும் ரோமானிய பேரரசர் சீசர் அகஸ்டஸின் பொறாமை எண்ணத்தால் குறைந்த நாட்களை கொண்டுள்ளது என்பது ஒரு ரகசிய உண்மையாகும். அவரது முன்னோடி ஜூலியஸ் சீசர் நாட்காட்டியை அமல்படுத்தியபோது, பிப்ரவரி மாதத்தில் 30 நாட்கள் இருந்தன. அவரது பெயரால் அழைக்கப்டும் ஜூலை மாதத்தில் 31 நாட்கள் இருந்தன. அப்போது ஆகஸ்டுக்கு 29 நாட்கள் மட்டுமே இருந்தன.

சீசர் அகஸ்டஸ் பேரரசராக ஆனபோது, தனது பெயர் சார்புடைய ஆகஸ்ட் மாதத்தை ஜூலை மாதத்திற்கு இணையாக மாற்ற அவர் ஆகஸ்டு மாதத்திற்கு இரண்டு நாட்களை சேர்த்தார். அந்த இரண்டு நாட்கள் பிப்ரவரியில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே பிப்ரவரி குறைந்த நாட்கள் கொண்டமாதமாக மாறியது. நாட்களை துல்லியமாக கணக்கிடும் முறை வந்தபோது, குறைந்த நாட்களுள்ள பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக சேரும், லீப் நாள் சேர்க்கப்பட்டு, அந்த வருடம் மட்டும் பிப்ரவரி 29 நாட்களுடன் கணக்கிடப் படுகிறது.

கிரீஸ் நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தங்களது திருமணத்தை லீப் ஆண்டில் வைத்துக் கொள்வதை விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் அதை கெட்டதாக நினைக்கிறார்கள்.

பிப்ரவரி 29-ந் தேதி பிறந்தவர்கள் ‘லீப்பிங்ஸ்’ என்றும் ‘லீப்பர்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பிப்ரவரி 29-ந் தேதி பிறந்த தினம் கொண்டவர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிஜமான பிறந்த தினம் வருகிறது. இந்த நாளில் பிறந்தவர்களுக்காக உலகளாவிய சங்கம் இருக்கிறது தெரியுமா? ‘ஹானர் சொசைட்டி ஆப் லீப் இயர் பேபீஸ்’ எனப்படும் இந்த அமைப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.

பிப்ரவரி 29-ல் பிறப்பவர்கள் அபூர்வ திறன்களை பெற்றிருப்பார்கள் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. அதாவது எந்தத் துறையில் இருந்தாலும் அதில் முன்னணி வகிக்கும் அளவுக்கு ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 29-ந் தேதியில் பிறந்தவர்களும், இதே நாளில் இறந்தவர்களும் பலர் இருக்கலாம். ஆனால் பிப்ரவரி 29-ந் தேதி பிறந்து, அதே போன்ற லீப்நாளில் உயிர் துறந்த அரிய ஒற்றுமைக்குரிய நபர் இதுவரை உலகில் ஒரே ஒருவருக்குத்தான் உண்டு. அவர் டாஸ்மேனியைாவைச் சேர்ந்த ‘சர் ஜேம்ஸ் வில்சன்’ ஆவார். இவர் 1812-ல் லீப்நாளில் பிறந்தார். 1880-ல் லீப் நாளில் இறந்தார்.

1500 பேரில் ஒருவர்தான் லீப்நாளில் பிறப்பதாக மதிப்பிடப்படுகிறது.

நார்வேயைச் சேர்ந்த ஹரின் ஹென்ரிக்சென் என்னும் பெண்மணி தனது 3 குழந்தைகளையும் அடுத்தடுத்த பிப்ரவரி 29-ந் தேதியில் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 1960-ல் லீப்நாளில் பெண் குழந்தை பிறந்தது, அடுத்து 1964 மற்றும் 1968 லீப் நாட்களில் ஆண் குழந்தைகள் பிறந்தன.

பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சரியாக அதே தேதியில் பிறந்த நாள் வரும் என்று சொன்னோம். அதனால் இந்த நாளில் பிறந்தவர்கள் பிப்ரவரி 28-ல் அல்லது மார்ச் 1-ல் பிறந்த நாளை கொண்டாடுவது உண்டு. இதே முறையில் வயதை கணக்கிடுவதும் உண்டு. இந்த நடைமுறை பல்வேறு நாடுகளிலும் வேறுபட்டதாக உள்ளது. ஹாங்காங்கில் மார்ச்-1-ந்தேதியை அடிப்படையாகக் கொண்டும், நியூசிலாந்தில் பிப்ரவரி 28-ந் தேதியை அடைப்படையாகக் கொண்டும் பிறந்தநாள் மற்றும் வயது கூடுதல் கணக்கிடப்படுகிறது.

ரஷியாவில் லீப் ஆண்டு என்பது, வித்தியாசமான காலநிலையைக் கொண்டிருக்கும் என்றும், மரணம் மற்றும் கெட்ட நிகழ்வுகள் நிறைய நடைபெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

/>டைட்டானிக் கப்பல் மூழ்கியது (1912), மின்னலில் இருந்து மின்சாரம் பெறும் முறையை பெஞ்சமின் பிராங்கிளின் உருவாக்கியது (1752), கலிபோர்னியாவில் தங்கம் கிடைத்தது (1848), லிட்டில் பிக்கார்ன் போர் நடந்தது (1876) போன்றவை லீப் ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சிலவாகும்.

லீ ப் நாளுக்கு அடையாளமாக தவளை சின்னம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராக்கெட் தவளை இனம், ஒரு தாவுதலில் 2 மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியதாகும். எனவே இவை ராக்கெட் தவளை என்று பெயர் பெற்றன. லீப்நாள் நீண்ட இடைவெளியுடன் தாவி வருவதால், லீப் தினத்திற்கும் இந்த தவளையை அடையாளமாக பயன்படுத்துகிறார்கள். 

புதன், 26 பிப்ரவரி, 2020

இன்றைய நாள் பிப்ரவரி 27... வரலாறு யாரை சிறப்பிக்கிறது?



இன்றைய நாள் பிப்ரவரி 27... வரலாறு யாரை சிறப்பிக்கிறது?

முத்தான சிந்தனை துளி !
நூறு நண்பர்கள் தரும் ஊக்கத்தை விட, நாம் வளர ஒரே ஒரு எதிரி தரும் ஊக்கம் மிகச் சிறந்தது..!!

விஜய் சிங் பதிக்

🌟 சுதந்திரப் போராட்ட வீரரான விஜய் சிங் பதிக் 1882ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பிறந்தார்.

🌟 இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார். இவரது இயற்பெயர் பூப் சிங் குர்ஜர். இவரது பெற்றோர் பூப் சிங் குர்ஜர் என்ற பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினர்.

🌟 ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை நிறுத்த ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்ற பெயரில் சத்தியாக்கிரக இயக்கத்தை இவர் நடத்தினார்.

🌟 இவரது அயராத முனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. தன் எழுத்துக்களாலும் பேச்சாலும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை உண்டாக்கினார். அஜய் மேரு என்ற இவரது நாவல் மிகவும் பிரபலமானது.

🌟 புரட்சி வீரராக தனது வாழ்நாள் முழுவதும் தேச சேவையில் ஈடுபட்ட, தன்னலமற்று சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவருமான விஜய் சிங் பதிக் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.சந்திரசேகர ஆசாத்


இன்று இவரின் நினைவு தினம்....!!
🏁 இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

🏁 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தபோது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

🏁 கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். இவர் ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்" என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்" என்று அழைக்கப்பட்டார்.

🏁 சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பை தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

🏁 லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரேடியோ கார்பன் என்ற கார்பன்-14 (ஊயசடிழn-14) கண்டுபிடிக்கப்பட்டது.✍ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா (எஸ்.ரங்கராஜன்) மறைந்தார்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

வரலாற்றில் இன்று பிப்ரவரி 24


வரலாற்றில் இன்று பிப்ரவரி 24....

தமிழக முன்னாள் முதல்வர்... பிறந்த தினம் !!
மத்திய கலால்வரி தினம்

இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது.

சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும், சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்வதற்கும் மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும், இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
இ.எஸ்.ஐ.சி நிறுவன தினம்
(நு.ளு.ஐ.ஊ னுயல)


பண்டிட் ஜவஹர்லால் நேருவினால் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கான்பூரில் இ.எஸ்.ஐ (நுஅpடழலநநள ளுவயவந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் சமூக நோக்கத்தோடு காப்பீடு வழங்கப்படுகிறது. குறைந்த வருவாயுள்ள தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்கள் கஷ்டப்படும் நெருக்கடி காலத்தில் இ.எஸ்.ஐ.சி கழகம் உதவி செய்து வருகிறது.ஜெ.ஜெயலலிதா


தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்" என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

இவர் 'வெண்ணிற ஆடை" என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்" ஆகும்.

அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், ஜெயலலிதாவை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இவர் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.முக்கிய நிகழ்வுகள்
1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா, இலங்கையில் பிறந்தார்.1955ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மறைந்தார்.



வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பிப்ரவரி 22 வரலாற்று நிகழ்வுகள்

பிப்ரவரி 22 வரலாற்று நிகழ்வுகள்

இவர்தான் சாரணியத்தின் தந்தை... யார் இவர்?
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒரு வகை வெற்றி தான்...பேடன் பவல்


👮 தன்னலமற்ற மனிதநேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.

👮 இவர் 1907ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். முதலில் சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. பிறகு தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

👮 உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளை விரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி சிறப்பித்தது.

👮 சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1941ஆம் ஆண்டு மறைந்தார்.தில்லையாடி வள்ளியம்மை


🌹 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.

🌹 இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

🌹 'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

🌹 பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.ஜார்ஜ் வாஷிங்டன்


🌎 அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

🌎 இவர் 1753ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775ஆம் ஆண்டு அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌎 1783ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. இவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் 1789ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

🌎 அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாக கருதப்படும் பெருமைக்குரிய இவர் 1799ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்தார்.


சனி, 15 பிப்ரவரி, 2020

பிப்ரவரி 12: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் பிறந்த தின - சிறப்பு பகிர்வு


பிப்ரவரி 12: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் பிறந்த தின - சிறப்பு பகிர்வு...

உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை "இது தவறு!" என அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது. சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருந்தார்.

தட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றைச் சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார்  "உனக்குப் படிக்கவே வரலை; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது!" எனத் தன் மகனைப் பார்த்து சொன்னார் அந்த அப்பா.

அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின், அங்கே சிறுவன் ஒருவன், கதறக்கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து  வெறுத்துப்போனார். (அப்பொழுது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது, தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி 'இயற்கையியல் வல்லுநர்' ஆனார்.

தென்அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களைக் கண்டார். பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன. அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார். என்றாலும் இவற்றை அவரால் உடனே  இணைத்துப் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களைத் திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளைக் கண்டார். ஒருதீவில் கடலையைக் கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கு மற்றொரு தீவிலும் இருப்பதைக் கண்டார்.  ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்' என்று சொன்னார்.

பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு; மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளைப் பெற்றிருந்தாலும் வாயைத் திறக்கவே இல்லை டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின், அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.

அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.

1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )
2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில்
உண்டாகும் மாறுபாடுகள் )

பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.

மதத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்"  எனச் சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார். 'நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்' என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.
நன்றி விகடன்.

புதன், 12 பிப்ரவரி, 2020

உலக வானொலி தினம் பிப்ரவரி 13.


உலக வானொலி தினம் பிப்ரவரி 13.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல்,  ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.

ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது.

பிறகு 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.

வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்பு சம்பந்தமான முடிவெடுப்பவர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.


வானொலியும் அதன் நீண்ட வரலாறும்

“ஆகாசவானி செய்திகள் வாசிப்பது………..” 80,90 களில் வானொலியில் இந்த வார்த்தையைக்  கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி ஆவார். ‘கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவரே. இந்த கண்டுபிடிப்பிற்காக 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்ன்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ‘மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்’, ‘வானொலி’மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவரும் இவர் தான். மார்க்கோனி வாழ்ந்த காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் வெளியிட்டார். மின்காந்த அலைகளின் கொள்கைகளை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறப்பட்டிருந்தது. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்கோடுகளில் பயணிக்கின்றன.  மேலும் சோதனை கருவிகள் மூலம் பெற முடியும் என்று ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார். ஆனால் அதன் சோதனைகள் அவர்களால்  பின்தொடரப்படவில்லை. இங்கிலாந்தில் ஆலிவர் லாட்ஜ் என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த காப்புரிமையும் பெற்றிருந்தார். ஆனால் அவ்வுரிமையை மார்க்கோனிக்கு விற்று விட்டார்.


மார்கோனியின் பழைய புகைப்படம்

1894-ல் இந்திய இயற்பியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் கொல்கத்தாவில் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி பரப்பும் முறையைச் செய்து காட்டினார். ஜகதீஸ் சந்திர போஸ் இந்த காலக்கட்டத்தில் முந்தைய கம்பியற்ற தகவல் கண்டுபிடிப்பு சாதனம் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளை பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார். ஆனால் அதற்கான காப்புரிமைமை பெறாததால் அந்த ஆய்வை தொடரமுடியவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெய்லி குரோனிக்கல்’ என்ற ஆங்கில நாளிதழில் 1896ல் செய்தியாக வெளியிட்டது. 1891-93-ல் நிக்கோலா தேஸ்லா என்ற அறிவியல் அறிஞர் வானியல் பற்றிய தனது கண்டுபிடிப்பை உறுதி செய்து காப்புரிமை பெற்றார். தெஸ்லாவின் கம்பிச் சுருளை வைத்துதான் மார்க்கோனி ஆய்வுகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் என்னுடைய 17 காப்புரிமை கருவிகளை பயன்படுத்தி தான் தனது ஆய்வுகளை செய்தார் என்று டெஸ்லாவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முதன்முதல் வானொலியை கண்டுபிடித்தவர் டெஸ்லா என்ற ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்கோனி அதற்கு மேல் முறையீடு செய்து பல ஆண்டுகள் கழித்து மார்க்கோனிக்கு ஏற்புடைய தீர்ப்பு வழங்கப்பட்டது. 1894-ல் ஹெர்ட்சின் மறைவிற்குப் பிறகு போலக்னோ பல்கலைக்கழக மாணவர் எழுத்தாளர் ஆகஸ்டோ ரைட் என்று ஹெர்டினின் ஆய்வு அறிக்கைகளை கொண்டு  மேலும் ஆய்வுகளில் பங்கேற்றார். அப்போது  அவருடன் துணையாக மார்கோனியும் அதில் ஈடுபட்டார். பிந்தைய கண்டுபிடிப்பாளர்களால் கம்பியற்ற தகவல்தொடர்பு மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.


மார்கோனி தன் நிறுவனத்தில்

மார்க்கோனி தன் இல்லத்திலும் இந்த ஆய்வுகளை தொடர்ந்தார். எந்த பொருளின் மூலமாகவும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிபடுத்தினார். வானொலி அலைகளை கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் இந்த முயற்சியை 50ஆண்டுகளுக்கு முன்பே பலரும் செய்ய முயற்சி செய்த போதிலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி 1895 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் அளவுக்கு செய்தியை அனுப்பக்கூடிய ‘திசைதிரும்பும் மின்கம்பம்’ [Directional Antenna] என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றிக்கண்டார். இந்த அரிய முயற்சியில் இத்தாலிய அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. இதனால் லண்டன் சென்ற மார்க்கோனி தன்னுடைய ஆய்வுகளை பற்றிய செய்திகளை அங்கே பரப்பினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளரான ‘வில்லியம் ஃப்ரீஸ்’  இவருடைய  ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1897 மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கிலோமீட்டர் தூர அளவுக்கு செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பை (டிரான்ஸ்மிட்டர்) உருவாக்கினார். 1897-ல் மே 13 அன்று நீரின் வழியாக ‘நீங்கள் தயாரா?’ என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துவதற்கான ஒலிபரப்பியை உருவாக்கினார். அவரது இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்கள் மத்தியில் கம்பியில்லாத் தந்தி முறை என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896 இல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897 இல் ‘மார்க்கோனி நிறுவனம்‘ இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1897 ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தொலைவில் தொடர்பு ஏற்டுத்தி காட்டினார். 1899இல் ஆங்கிலக் கால்வாய் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும் எந்தவொரு காலநிலையிலும் இயங்கும் கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். 1912ஆம் ஆண்டு ஒரு மோட்டார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்த போதிலும் இவர் தனது ஆய்வை கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார். 1914-ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கடற்படைகளில் வானொலியைப் பயன்படுத்தி வேலை புரிந்தார். அமெரிக்காவின் போர்க்குழு உறுப்பினர் போலத் தொண்டாற்றினார். முசோலினியை அவர் ஆதரித்து இத்தாலியன் பாசிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள் மார்க்கோனி காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

பழைய வானொலிப்பெட்டி

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகள் ‘ரேடியோ கிளப் ஆப் பாம்பே’ என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நிர்வாகம் செய்து வந்தது. 1936 ஆம் ஆண்டு முதல் வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது. 1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெறும் போது 6 வானொலி நிலையங்கள், 18 டிரான்ஸ் மீட்டர்கள் இருந்தது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்து கொண்டிருந்தமையால் வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இந்தியா முழுவதும் 208 வானொலி நிலையங்கள் உள்ளது. பல்வேறு அலை நீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்ட வானொலி சேவை 89.5 சதவிகித பகுதிக்கு சென்று சேர்கிறது. 98.82 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய செயலே.

பண்பலை வானொலி

அகில இந்திய வானொலி நிறுவனம் 24 இந்திய மொழிகளில் அதன் உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​2.25 லட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன. தற்போது, ​​11.10 கோடி வானொலி பெட்டிகள் உள்ளன. அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது. இத்துடன் 42 மாநில மொழி நிலையங்கள் வழியாக 202 செய்தி தொகுப்புகளும் ஒலிபரப்பாகின்றன.

சென்னை வானொலி நிலையம்

வர்த்தக நோக்கில் ‘விவித் பாரதி‘ என்ற சேவை 1957 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கியது. 1969 ஆம் ஆண்டு ‘யுவவாணி’ என்ற ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், டிஜிட்டல் ரேடியோ, ‘பிராட்காஸ்டிங்’ ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும், ‘ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்’ என்ற இணைய சேவையும் தொடங்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டில், நியூஸ் அண்ட் டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் தான் முதல் பண்பலை நிலையம் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் துவங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் அகில இந்திய வானொலி ‘ரெயின்போ’, ‘கோல்டு’ என்ற இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரெயின்போ என்பது முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், சிறு சிறு தகவல்களையும் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் வெளியிடுவதாகும். கோல்டு என்ற இரண்டாவது அலைவரிசை இந்தியா முழுமைக்குமான ஒலிபரப்பாகும். இதில், தேசிய செய்திகள், செய்தி விமர்சனம் போன்றவை முக்கியமாக கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களும் கூட ஒலிபரப்புகிறது. பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர் தான் இருந்தது. குறைந்த தொலைவு, தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பது தான் பண்பலையத்தின் இலக்கணமானது. இதில்,விதிவிலக்காக  கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. அதன் டிரான்ஸ் மீட்டர் எனும் ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், அதன் ஒலிபரப்பு எல்லை கிட்டத்தட்ட 250 முதல் 300 கி.மீ. தொலைவில் வரை செல்கிறது. இதனால், தென்னிந்தியத்தின் 22 மாவட்டங்களுக்கு ஒலிபரப்பாகிறது.

இந்திய வானொலி வரலாறு

இந்திய வானொலி நிலையங்களின் வரலாறு

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானொலி நிலையங்கள் மத்திய அரசின் பிரசார் பாரதி மூலம் செயல்படும் வானொலி நிலையங்களாகும். இதுபோக, தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பண்பலை வானொலி நிலையங்களும் உள்ளன. இந்தியாவில் வானொலி சேவை 75 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்டது.

வரலாறு

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை 'ரேடியோ கிளப் ஆப் பாம்பே' என்ற தனியார் நிறுவனமே தயாரித்து, நிர்வாகம் செய்து வந்தது. 1936 ஆம் ஆண்டில் இருந்து வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது. 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ் மீட்டர்களும் இருந்தன. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்துகொண்டிருந்தது. வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலையில் இருந்தார்கள்.

இன்று நாடு முழுவதும் 208 ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன. பல்வேறு அலை நீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்ட வானொலி சேவை 89.5 சதவிகித பகுதிக்கு சென்று சேர்கிறது. 98.82 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பை கேட்கிறார்கள். அகில இந்திய வானொலி 24 இந்திய மொழிகளில் தனது உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, 2.25 லட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 11.10 கோடி வானொலி பெட்டிகள் உள்ளன.

அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது. இத்துடன் 42 மாநில மொழி நிலையங்கள் வழியாக 202 செய்தி தொகுப்புகளும் ஒலிபரப்பாகின்றன.

வர்த்தக நோக்கில் 'விவித்பாரதி' என்ற சேவை 1957 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கியது. 1969 ஆம் ஆண்டு 'யுவவாணி ' என்ற ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், டிஜிட்டல் ரேடியோ, 'பிராட்காஸ்டிங்' ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும், 'ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்' என்ற இணையதள சேவையும் தொடங்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டு, நியூஸ் அண்ட் டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்பலை வானொலி

சென்னையில், முதல் பண்பலை நிலையம் 1977 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அகில இந்திய வானொலி 'ரெயின்போ', 'கோல்டு' என்ற இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பு வருகிறது. ரெயின்போ என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், சிறு சிறு தகவல்களையும் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் ஒலிபரப்பு செய்யும். கோல்டு என்ற இரண்டாவது அலைவரிசை இந்தியா முழுமைக்குமான ஒலிபரப்பாகும். இதில், தேசிய செய்திகள், செய்தி விமர்சனம் போன்றவற்றை முக்கியமாக கொண்டு கூடவே பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒலிபரப்புகிறது.

பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது.

‘உலக வானொலி தினம்’- ஆன்லைன் வானொலி தளங்கள் தொகுப்பு!

இணையத்தில் அன்மையில் 90’ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றினாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினம் என அறிவித்து கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு வானொலி தினம், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி எனும் கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.


உலக வானொலி தினத்தை முன்னிட்டு, இணையத்தில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க உதவும் தளங்கள் பற்றி ஒரு அறிமுகம்:

ரேடியோ கார்டன் : http://radio.garden/

இணையத்தில் வானொலி என்றவுடன், ரேடியோ காரட்ன் தளம் தான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு  அருமையான இணையதளம் இது. உலகில் உள்ள வானொலி நிலைய நிலையங்களை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். இணைய வானொலி, பண்பலை வானொலி உள்ளிட்ட எல்லா வகையான வானொலி நிலையங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை இந்தத் தளம் ஒரே இடத்தில் அணுக வழி செய்கிறது.

அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.
நாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையைக் கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.

ஆன்லைன் ரேடியோஸ்; https://onlineradios.in/

ரேடியோ கார்டனோடு ஒப்பிடும் போது மிகவும் சாதாரணமான தளம் என்றாலும், ஆன்லைன் ரேடியோஸ் தளம் இந்தியாவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களையும் அணுக வழி செய்கிறது. இந்திய வானொலி நிலையங்களை காட்சிரீதியாக பட்டியலிடுகிறது. விரும்பிய வானொலியை கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம்.

ரேடியோ வேர்ல்ட்: https://www.radioworld.com/

வானொலி உலகம் தொடர்பான செய்திகள் மற்றும் போக்குகளை தெரிந்து கொள்வதற்கான இணையதளமாக ரேடியா வேர்ல்டு விளங்குகிறது. வானொலி நிலைய உரிமையாளர்கள், பொறியாளர்களை மனதில் கொண்டது என்றாலும், வானொலி உலக நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இண்டெர்நெட் ரேடியா : https://www.internet-radio.com/

வானொலி நிகழ்ச்சிகளை இணையம் மூலம் கேட்டு ரசிப்பதற்கான இன்னொரு இணையதளம். ஆயிரக்கணக்கான இணைய வானொலிகளை நேரலையாக கேட்டு ரசிக்க வழி செய்கிறது. முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வானொலிகளில் மேற்கத்திய இசை சார்ந்தவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானொலிகள் தனியேவும் பட்டியலிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள வானொலி நிலையங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளம் அளிக்கும் வசதி மூலம் சொந்த இணைய வானொலியும் துவக்கலாம். வானொலி தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கலாம்.

ரேடியோ லொக்கேட்டர் : https://radio-locator.com/

இணைய வானொலி நிலையங்களுக்கான எளிமையான தேடியந்திரம் இது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இணைய வானொலி நிலையங்களை தேட வழி செய்கிறது. தேடலுக்கான எளிமையான இடைமுகமும் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இணைய வானொலிகளை தேடலாம்.

இதே போல, streamit-online.com குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக வானொலி தேடல் வசதியை அளிக்கிறது.

இவைத் தவிர மொபைல் போனில் செயலி வழியே இணைய வானொலிகளை அணுக, https://www.radio.net/android, http://onrad.io/ உள்ளிட்ட செயலிகள் வழி செய்கின்றன. மேலும் இணைய யுகத்தில் வானொலியின் முக்கியத்துவத்தை அறிய விரும்பினால், ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் பார்ம்ரேடியா (https://farmradio.org/why-radio/) மூலம் அதற்கான பதிலை பெறலாம்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

உலக குடை தினம் பிப்ரவரி 10.


உலக குடை தினம் பிப்ரவரி 10.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சூரியன் கதிர் வீச்சு, மழையிலிருந்து நம்மை காப்பாற்றும் குடைக்கு அமெரிக்காவில் தனித் தினமே இருக்கிறது. அது குடைத் தினமாக (Umbrella Day) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.


அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.

ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் மரம் அல்லது திமிங்கலத்தில் எலும்பால் தயாரிக்கப்பட்டு ஆயில் கேன்வாஸால் மூடப்பட்டிருந்தது. மேலும், குடை கம்பியில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப விலை இருந்தது. 1852 ஆம் ஆண்டில் ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார். மேலும். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இன்றைக்கு குடை விதவிதமான வடிமைப்பில் பல்வேறு பொருட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இருட்டில் ஒளிரும் ரேடியம் குடை கூட விற்பனைக்கு கிடைக்கிறது.  அமெரிக்காவில் இந்தத் தினம் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது.



குடையின் வரலாறு

குடையின் ஆங்கில மொழி பெயர்ப்பான அம்பிரல்லா எனும் சொல் லத்தின் மொழியின் "அம்ப்ரோஸ்" ) எனும் வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. லத்தின் மொழியில் "அம்ப்ரோஸ்" எனும் சொல் "நிழல்" எனும் பொருள் தரும் வகையில் உள்ளது.

நாம் தற்போது உபயோகிக்கும் நவீன கால குடைகள் முதன் முதலில் 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த காலம் வரை குடை பெண்களுக்கான ஒரு அலங்கார பொருளாக மட்டும் பார்க்கப் பட்டது.

நவீன குடையை உபயோகித்த முதல் ஆண் "ஜோனஸ் ஹான்வே" என்பவர் என வரலாற்றில் பதிவிடப்பட்டுள்ளது. இவர் ஒரு ஆங்கிலேயர் ஆவார். இவர் தான் முதன் முதலில் பொது இடங்களுக்கு நவீன குடையை எடுத்து சென்ற முதல் ஆண் ஆவார்.

அவரை பார்த்து தான் இங்கிலாந்தில் வாழ்ந்த பல ஆண்கள் நவீன குடையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது வெகு விரைவில் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்து, உலகில் உள்ள பல ஆண்களும் உபயோகிக்கும் ஒரு பொருளாக நவீன கால குடைகள் மாறின.

நவீன கால குடைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடை மாதிரிகளை போல் வடிவமைப்பில் ஒத்திருக்கின்றன.

20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றம், நவீன குடைகளில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உருவெடுத்து இருக்கின்றன. குடைகள் தற்போது பல வகைகளாக தயாரிக்க படுகின்றன. அவை பாரம்பரிய குடைகள், தானியங்கி குடைகள், சிறிய குடைகள் மற்றும் சதுப்புக் குடைகள் (நடைபயிற்சிக்கு பெரிதும் உதவுவது) என வெவ்வேறு வகைகளில் உற்பத்தி செய்ய படுகின்றன.

நவீன கால குடை வெளிப்புறங்களில் டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும், அவை அவற்றின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது. நவீன குடைகள் பெரும்பான்மையானவை சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. சீனாவின் ஒரு நகரமான ஷாங்யுவில் ஆயிரம் குடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.

குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.


குடைகளின் நன்மைகள் :

மழைக்காலங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் இந்த குடை. நாம் மழையில் நனையாமல் இது பாதுகாக்கிறது.


சூரிய ஒளியால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சல்கள் குடையின் பயன்பாட்டால் குறைக்கப்படுகிறது.

எடை குறைவானதாவும், எடுத்து செல்வதற்கு வசதியாகவும் இருப்பதால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது.

விலை மலிவானது. எளிதில் கிடைக்கும் ஒரு பொருள். சாலையோரங்களில் சிறிய கடைகள் நடத்துபவர்கள், ஒரு பெரிய குடையை நட்டு வைத்துவிட்டு, அதன் கீழ் அவர்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வர்.

சினிமாக்காரர்கள், வெட்ட வெளியில் ஷூட்டிங் நடத்தும்போது டைரக்டர், நடிகர்,நடிகைகள் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு பெரிய குடையின் கீழ் அமர்ந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

குடைகளை ஒரு ஆயுதமாக தாக்குதல்களில் பயன்படுத்தலாம், குடையின் தண்டில் ஒரு இரகசிய கத்தி மறைக்க முடியும்.

மழை மற்றும் வெயில் நாட்களுக்கான ஒரு சிறந்த பாதுகாவலன் தான் இந்த குடை. இதன் தேவை இருக்கும் போது திறந்து வைத்து கொள்வதும், தேவை தீர்ந்ததும் மடித்து வைத்து கொள்ளவும் முடிவதால் இது ஒரு சௌகரியமான பொருளாகும்.இவ்வளவு நன்மைகள் உள்ள குடையில் சில தொந்தரவுகளும் இருக்கின்றன.

தொந்தரவுகள்:

காற்று மட்டும் இதற்கு எதிரியாகும். எந்த குடையும், காற்றடிக்கும் போது பயன் படுத்த முடியாததாகிவிடும். காற்றில் அதன் கம்பிகள் உடைந்து மடங்கி விடும்.

டென்னிஸ் போன்ற விளையாட்டு மைதானங்களில் பார்க்க போகும்போது, அங்கு ஒரு பெரிய குடையின் கீழ் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருப்பர்.

அது அவர்களுக்கு சுகமாக இருக்கலாம். வெயில் படாமல் நிழலில் அமர்ந்து விளையாட்டை பார்த்து கொண்டிருப்பர். ஆனால் பின்னா ல் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொந்தரவாக இருக்கும்.

இன்றைய காலங்களில் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு கூட குடை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மக்களின் குடை பற்றிய சிந்தனையை நாம் அறிந்து கொள்ளலாம்.


சின்ன சின்ன வரலாறு  : குடையின் கதை
 
பிப்ரவரி 14ம் தேதி. இதைப்பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அதற்குக் கொடுக்கப்படும் விளம்பரங்களினால் எல்லோருக்கும் தெரிந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதற்கு நான்கு நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி 10ம் தேதி, என்ன நாள் தெரியுமா?

அந்த நாள்... தேசியக் குடை நாள்.

இந்தக் குடை இருக்கிறதே. அது பெண்களுக்கான பொருளாக சில காலம் பார்க்கப்பட்டது. மழைக்கால தேவையாக சிலகாலம், பின் வெயிலுக்கான பாதுகாப்பாக சில நேரம், அல்லது அரசரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக, இன்னும் கோல்ஃப் மைதானத்தின் விளையாட்டுப்பொருளாக, நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக, ஏழ்மையின் சின்னமாக... என்றெல்லாம் பார்க்கப்பட்ட, பார்க்கப்படுகிற குடையின் நிலை, காலத்திற்கு ஏற்ப, நாகரீகத்திற்கு ஏற்ப, மாறும் விருப்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

ஒரு வேளை, கிருஷ்ணர் பிடித்த குடை மலை தான் உலகின் முதல் குடையாக இருக்குமோ? தெரியவில்லை. பதிவு செய்யப்பட்ட சரித்திரம் நான்காவது செஞ்சுரி பி.சி.யிலேயே ரோம், கிரேக்க நாடு,எகிப்து, தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் மழைக்காகக் குடை உபயோகத்தில் இருந்ததாகச் சொல்கிறது.

3500 வருடங்களுக்கு முன் எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரிடப்பட்டு பழக்கத்தில் இருந்ததாகப் பதிவாகி இருக்கிறது. பாரசோல் என்பது வெயிலில் உபயோகப்படுத்தப்பட்ட குடை. அந்தக் கால கட்டங்களில், எகிப்திய பிரபுக்கள், அரச பரம்பரை மற்றும் மதகுருக்களின் பிரத்தியேக உபயோகப் பொருளாக , ஒரு மரியாதைக்கு உரியவருக்கான பொருளாகவே குடை பார்க்கப்பட்டது.

இப்படி வெயிலிலிருந்து காப்பதற்காக அமைக்கப்பட்ட பாரசோல்கள் மெதுவாக மழைக்கான சேவைப் பொருளாக சீனர்களால் பதினோராவது சென்சுரி பி.சியில் மாற்றப்பட்டது. இங்கேயும் முதலில் இது பிரபுக்களின் பொருளாக மட்டுமே இருந்தது.

இதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, ஒருவரின் பண நிலையைக்காட்டும் விதமாகக் குடைகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு, சீன அரசரின் குடையில் நான்கு அடுக்குகள் அமைக்கப்பட்டன. அரசாங்கத்தில் உள்ளவரின் நிலைக்கு ஏற்ப இந்த அடுக்குகள் குறைக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் கிரேக்கம் மற்றும் ரோம் நகரில் குடையின் நிலை சற்றே மாறுபடத்தொடங்கியது. குடை பெண்களுக்கான பிரத்யேக பொருள் என்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் ஆண்கள் குடை எடுத்துச் செல்வதைத் தவிர்த்தார்களாம்!

பெண்களும் தங்கள் கைகளில் குடையைப் பிடிக்காமல், அவர்களின் பணிப்பெண்களை விட்டுப் பிடித்துவரச்செய்தனர்.

ஆனால் ஒருகட்டத்தில், சிறு கால அளவில், குடை வழக்கொழிந்து போயிற்று. ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து காணாமல் கண்ணாமூச்சி ஆடி, பின் ரினைசான்ஸ் காலத்தில் நாய்க்குடைகள் போல் கும்மென்று இவை மலர்ந்தன.

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா என்று எங்கும் வியாபிக்கத்தொடங்கியது குடை. ஆனால் அப்போதும் குடை பெண்களின் கைப்பொருள் என்றே எல்லோரும் சொன்னார்கள்.

இந்தக் கதையையெல்லாம் உடைத்தவர் ஜோனாஸ் ஹான்வே, இங்கிலீஷ் மாக்டெலெனின் ஹாஸ்பிடலை நிறுவியவர். இவர், தான் செல்லும் இடமெல்லாம் கைகளில் ஒரு குடையோடு திரிய, 1790 வாக்கில் குடை எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு மெதுவாக பொதுஜனப்பொருளாக மாறி, மிக விரிவாக விளம்பரங்களில் காட்டத்தொடங்கிய காலமாகவும் விரிந்தது.

பிரிட்டனில் குடைக்குப் பெயர் காம்ஸ். காரணம் சார்ல்ஸ் டிக்கென்ஸின் ஒரு நாவலில் மிஸஸ் காம்ப் எப்போதும் கைகளில் குடை வைத்திருந்ததாள்.

நம் நாட்டுக்கதைக்கு வருவோம்.

மஹாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஜமதக்னியின் மனைவி ரேணுகா தன் கணவர் வில்லிலிருந்து அம்பை விடும் போது உடனே சென்று அந்த அம்பைச் சேகரித்து வந்து விடுவாராம். இப்படி ஒருநாள் அம்புகளைச் சேகரிக்கச்சென்று வெகு நேரத்திற்குப் பிறகுதான் திரும்பி வந்தாராம். வந்தவுடன் கணவரிடம் கோபத்தோடு அவரை எரித்துத் தாமதப்படுத்திய சூரியனைப்பற்றிப் போட்டுக்கொடுக்க, ஜமதக்னி சூரியனை அம்பெய்தி காயப்படுத்தினராம். பயந்துபோன சூரியன் மன்னி ப்புக் கேட்டு ரேணுகாவிற்கு பாதுகாப்பாக முதல் முதலாகக் கு டை ஒன்றைத் தந்தாராம்.

இது எந்த அளவிற்கு உண்மை தெரியவில்லை. ஆனால் ஜீன் பாபிஸ்டி டவேர்னியர் பதினேழாம் நூற்றாண்டில் எழுதிய " Voyage to the East" புத்தகத்தில் முகலாய சிம்மாசனத்தின் இரு புறமும் குடைகள் இருந்ததாக பதிவு செய்திருக்கிறார்.

தற்போது உள்ள மடக்கும் மாடல் குடைகள் முதல் முதலில், 1710 ல் ஒரு பாரிஸ் வியாபாரியால் கண்டுபிடிக்கப்பட்டது.

1769ல் மெய்சன் அந்டொய்னி என்பவரால் பாரிஸ் நகரத்தில் குடைகள் வாடகைக்குக் கொடுக்கும் கடை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மிக அதிக அளவில் நடந்த குடை திருட்டைச் சமாளிக்க பாரிஸின் லெப்டினெண்ட் ஜென்ரல் ஆப் போலீஸ் ஒரு கட்டுப்பாட்டை விதித்தார். எண்ணெய் பச்சை நிறத்தில் இந்த வாடகை குடைகள் இருக்கவேண்டும் என்று. இதனால் குடை திருடர்களை மிகவும் சுலபமாக பிடிக்க இயலும் என்று. யார் கண்டது அப்போதும் திருடிய குடையை பாரீஸில் இல்லாமல் வேறு நாடுகளுக்குத் தூக்கிச்சென்று உபயோகப்படுத்தியவர்கள் இருந்திருப்பார்கள்.

ஆக, தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்த குடை, மெதுவாக தன் குடையை விரித்துக்கொண்டே போனதுதான் சரித்திரம்.

சரி, முக்கியமான ஒரு பகுதிக்கு வருவோம்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி உள்ள காலாவைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோ ஆயுதம் வைத்துக்கொண்டு அவரைத் தாக்க வரும் பல நூறு பேர்களை தன் கையில் உள்ள ஒரு குடையால் அடித்து வீழ்த்துவதை. இதை நம்பமுடியாமல் நீங்கள் திகைத்திருந்தால், இதோ அதைப்போன்ற மற்றுமொரு தகவல் உங்களுக்கு.

1902 ல் The Daily Mirror குடையை ஒரு ஆயுதமாக உபயோகிப்பது எப்படி என்று ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. 2005ல் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு கணக்கு அசிஸ்டண்ட் புரொபஸர், மாணவனால் அடித்துக்கொல்லப்பட்டார். அடிப்பதற்குப் பயன்படுத்தியது குடையைத்தான்!

இந்தக் குடையால், குடும்பங்களில் பல குடைச்சல்களும் சண்டைகளும் எழும். நினைவிருக்கிறதா? மழைக்காலத்தில் குடையை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டு, திரும்பும் போது, குடையை மறதியாக எங்கேயோ விட்டுவிடுவார்கள். வெறுங்கையுடன் நுழைபவருக்கு, செம திட்டு கிடைக்கும். கல்யாணத்தன்று காசியாத்திரை செல்லும்போது குடை பிடித்துப் போனவர்கள், அப்புறம் மழைக்கு மட்டும்தான் குடையை தூசுதட்டி எடுப்பார்கள். அதன் விளைவுதான் மறதி!

நம்முடைய குடை, இன்னொருவரின் வாழ்க்கை. ஆமாம்... குடை ரிப்பேர் செய்து தருபவர்கள் வீதிவீதியாக அப்போது வருவார்கள். ‘குடை ரிப்பேர் பாக்கறதேய்... குடை சரி செய்யுறதேய்...’ என்று குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள்.

இன்னொரு விஷயம்... ஒற்றுமைக்கும் இணைபிரியாமல் இருப்பதற்குமான அற்புதமானதொரு வார்த்தை... ‘ஒரு குடையின் கீழ் செயல்படுவோம்!’

அதானே... ஒரு குடையின் கீழ் செயல்படுவோமே!

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

உலக குடை தினம் பிப்ரவரி 10


☔அனைவருக்கும் இன்று குடையை பரிசாக அளியுங்கள்... வரலாறு..!!☔

முத்தான சிந்தனை துளிகள் !
அறிவுரையினால் புரிந்து கொள்வதை விட அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்பவரே அறிவாலும், மனதாலும் பலசாலியாகின்றார்கள்..!!

உலக குடை தினம்

🌂 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.

🌂 இந்த நாளில் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்


💉 உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (துழாn குசயமெடin நுனெநசள) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

💉 இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்.

💉 போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் (pழடழைஅலநடவைளை) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

💉 வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 1985ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🌄 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.
♗ 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஐடீஆ சதுரங்கக் கணினி 'னுநநி டீடரந", உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.


உலக திருமண தினம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை


உலக திருமண தினம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை.

உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட உறவுமுறையாகும். திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.


திருமணமாம் திருமணமாம்...

திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை. கோட்டைக்கு வெளியில் இருப்பவன் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவன் வெளியில் வரவும் துடிப்பாங்கன்னு  ஒரு சினிமா வசனமுண்டு. திருமணமென்பது ஒதுக்கி தள்ளுமளவுக்கு   பயங்கரமானதுமல்ல! வாழ்ந்து பார்த்திடலாம்ன்னு அசால்ட்டா இறங்குமளவுக்கு சுலபமானதுமல்ல!


திருமணம்’ன்ற  வார்த்தைக்கு   தெய்வீகம் வாய்ந்த இணைதல்ன்னு பொருள். இரு மனங்கள் இணைதல்ன்னும் பொருள்படும். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரையொருவர் தனக்குத்தான் பாத்தியம் என எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும்கூட இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. இந்த திருமணத்தின்மூலம் மாமனார், மச்சினர், நாத்தனார், மச்சினன், மச்சினிச்சி, மகன், மகள்ன்னு புதுபுது உறவுகளை தரக்கூடியது திருமணம். இதைவிட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவுன்னு சொன்னா அது மிகையுமில்லை!!

ஆதிக்காலம் தொட்டு திருமண முறை நம்மிடையே இல்லை. பறந்து விரிந்திருந்த இயற்கையை தன்னகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தபின்னே பொன், பொருள், நிலம் மாதிரி பெண் இனத்தையும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது திருமணம் உருவானது. பொருள் சேரச்சேர தனக்குண்டான சொத்துக்கள் வெளியாட்கள் வசம் போய்விடக்கூடாதென வாரிசு முறை உண்டானது. வாரிசு முறை வந்தபின் தன் பிள்ளை எதுவென அடையாளப்படுத்திக்கொள்ள ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலை உண்டானது. மருத்துவமுறையும், ஆரோக்கிய சிந்தனையும் உண்டானபின்  ஒருவனுக்கு ஒருத்தின்னு உண்டானது.


திருமணத்தில் பலவகை இருக்கு. கற்பு மணம், களவு மணம், கடிமணம், கந்தர்வ மணம், பதிவு மணம்,... இப்ப டிக்டாக் மணம்ன்னு பட்டியல் நீளுது.  இன்னிக்கு புனிதமா சினிமாக்களிலும், நம் திருமணங்களில் கா(க)ட்டப்படும் தாலி பண்டைய தமிழர்  திருமணங்களில்  கிடையாது.  இதுக்கு உதாரணமா ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலையே சொல்லலாம். மெட்டி அணிவித்தல், காசி யாத்திரை, அருந்ததி பார்த்தல், அக்னி வலம்வருதல்ன்னு திருமண சடங்கினை பற்றி கனவு கண்ட ஆண்டாள் தாலி கட்டுவதை பத்தி பாடவே இல்ல. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் தாலி பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைக்குது.  தாலம் பனை ன்ற பனை ஓலையில் இன்னாரது மகனான இவன், இன்னாரது மகளான இவளை, இன்னார் முன் மணந்ததாய் குறிப்பெழுதி, கையொப்பமிட்ட சுருள் ஒன்றையே மணமகள் கட்டப்பட்டது. அதனாலாயே தாலின்னு பேர் வந்தது. பனை ஓலை சுருள் அடிக்கடி பழுதானதால் உலோகத்தால் ஆன தாலி உண்டானது.

ஆண் நிமிர்ந்து நடந்தே பழக்கப்பட்டவன், அப்படி நிமிர்ந்து நடப்பவனுக்கு எதிரில் வரும் பெண்ணின் கழுத்து தெரியும். அதில் தாலி இருந்தா கல்யாணம் ஆன பெண்ன்னு ஒதுங்கி போவான். அதேமாதிரி தலைக்குனிந்து நடக்கும் பெண்ணுக்கு எதிரில் வரும் ஆணின் கால்தான் தெரியும். எதிரில் இருப்பது திருமணம் ஆன ஆண்ன்னு சொல்லி அவள் விலகிப்போவாள். காலப்போக்கில் அஞ்சு கிராம் மெட்டியை சுமக்கமுடியாம அதையும் பெண்ணுக்கு போட்டுவிட்டாங்க. ஆனா, இன்னிக்கும் எங்க ஊர் திருமணங்களில் ஆணுக்கும் மெட்டி அணிவிப்பாங்க. திருமணம் முடிஞ்ச சிலநாட்களில் அந்த மெட்டியை கழட்டிடுவாங்க :-(. அதேமாதிரி முன்னலாம் புரோகிதர் வச்சுலாம் கல்யாணம் நடத்தினதில்ல. இன்னிக்கும் வட தமிழகத்தில் சில இனத்தவரில் புரோகிதர் வழக்கமில்லை.

ஒருவனை வீழ்த்தனும்ன்னா அவனுக்கு ஆசைய உண்டாக்கனும்ன்ற சினிமா வசனத்துக்கேற்ப திருமண வாழ்க்கை கொண்டாட்டமாதான் இருக்கும்ன்னு ஆசைக்காட்டவோ அல்லது இப்படி கொண்டாட்டமாதான் இருக்கும்ன்னு  அறிவுறுத்தவோ பல சடங்குகள் நடத்தப்படுது. இதுலாம் வெறும் சடங்குகள் மட்டுமில்லை. அந்த சடங்குகளில் பல அர்த்தங்கள் இருக்கு. இனி தமிழர் திருமண சடங்கில் சிலவற்றை  பார்க்கலாம்...

பந்தகால் நடுவது..
பந்தகால் நடுவதுதான் திருமண நிகழ்ச்சியின் முதல் சடங்கு. இது மூன்று அல்லது ஐந்து நாட்கள் முன்னதாக நடக்கும். பந்தல் அமைப்பதின் நோக்கம், அழகுக்காகவும், திருமணதின்போது மேலிருந்து அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்து, அபசகுனமாகிடாமல் இருக்க உண்டானது. பந்தகால் நட வேரில்லாமலும் துளிரும் தன்மையுடைய பூவரசம் மரத்தை வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்துகட்டி, சிறுகுழியில் வெள்ளி நாணயம்,  பூ, நவ தானியம் இவற்றை போட்டு பந்த கால் நடனும். கற்பூரம், சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைத்து. பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவி குங்குமம் வைக்கவேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும்.  பஞ்சபூதங்களுக்கும் திருமணத்தை பற்றி அறிவித்து, அவற்றின் ஆசிகளை பெறுவதே இதன் நோக்கமாகும். பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலை, பனை, மாவிலைகளால் அலங்கரிப்பாங்க.

வாசலில் வாழைமரம் கட்டுவது..
திருமணம் நடைப்பெறும் சத்திரம், வீடுகளில் வாழைமரம் கட்டுவது வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும். அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துவே வாழைமரம் கட்டப்படுது. அதுமட்டுமில்லாம வாழைமரத்தின்ன் இலை, பூ, காய், கனி, தண்டு என அனைத்து பாகமும் அடுத்தவருக்கு உதவும். அதுபோல் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்கனும். வாழை காற்றில் உள்ள தீயசக்திகளையும் நஞ்சினையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும்.
சில பகுதிகளில் வாழைமரத்தோடு பாக்கு, தென்னங்குலை, பனங்குலையும் கட்டப்படுது. பாக்கு கொத்து கொத்தாய் காய்க்கும். அதுப்போல உறவுகள் கூடி வாழ்வதே சிறப்பு என உணர்த்தவும்,  தென்னை மரம் கற்பகத்தரு. இது நூற்றாண்டு காலம் வாழும். அதுமாதிரி நூறாண்டுகாலம் அடுத்தவர் பயனுற வாழவேண்டுமென உணர்த்தவே இந்த ஏற்பாடு.

முளைப்பாலிகை..
திருமண வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றி நவதானியங்களையிட்டு வளர்ப்பாங்க. விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடு.

கலப்பரப்பு அல்லது சம்பந்தம் கலத்தல்..
மணமகள் அழைப்பின்போது,  சேலை, மாலை, வரிசை தட்டோடு, பானகம், மோரும் இரு பானைகளில் எடுத்துக்கொண்டு சென்று மணமகளின் சேலையை விரித்து( இப்ப ஜமுக்காளம்) அதில் இரு வீட்டாரும் எதிரெதிராய் அமர்ந்து சந்தனம், குங்குமமிட்டு, மாலை மாற்றி, இருவேறு சூழல், பழக்கவழக்கம் என மாறுப்பட்ட இரு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உறவாய் கலந்ததுக்கு அடையாளமாய் இனிப்பான பானகத்தண்ணீரையும், புளிப்பான மோரும் கலந்து குடிப்பாங்க.

ஆணைக்கால் அல்லது முகூர்த்தக்கால்  நடுதல்..
மன்னர் காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவாங்க. எல்லாத் திருமணங்களுக்கும் அரசனால் போகமுடியாதே! அதனால்  தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால்ன்னு ஆனது.   அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டதுன்னு அர்த்தம்.  திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை  வெட்டி அதன் மேல்நுனியில் 5 மாவிலைகளை  மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, பட்டுத்துண்டில் நாணயத்தை முடித்து பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டுவார்கள். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 அல்லது 5சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தி, இத்திருமணம்  வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றுவர்.

பெண் அழைப்பு..
முன்னலாம்  திருமணம் மணமகன் வீட்டில் நடக்கும். வெளியூரிலிருந்து வரும் பெண்ணை, இந்த பெண்ணைதான் இன்னார் மணக்கப்போறன்னு ஊருக்கு தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு. சிலசமயம் பெண்வீட்டிலும் திருமணம் நடக்கும். மணமகனை ஊருக்கு அறிமுகப்படுத்தவே இந்த ஏற்பாடு.

கும்பம் வைத்தல்..
கும்பம் இறைவனது திருஉடம்பின் அடையாளம் .இறைவன் முன் இத்திருமணம் நடைப்பெறுகின்றது என உணர்த்தவே இந்த சடங்கு.

காப்புக்கட்டுதல்..
திருமணத்தில் நல்லவர், கெட்டவரென பலரும் கலந்திருப்பர். அவர்களால் எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களை பாதிக்காதிருக்கவே மஞ்சள் கயிற்றில் விரளி மஞ்சளை கோர்த்து காப்பு கட்டப்படுது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி உலகுக்கே தெரியும்.

ஹோமம் வளர்த்தல்..
அரச, புங்க, சந்தனம், வேம்பு, வேங்கை, பட்டை, பொரி, அவல், பேரிச்சை, பச்சை கற்பூரம்.. என பலவகை பொருட்கள் ஹோமத்தில் இடப்படும். இந்த பொருட்கள்  சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் .

தாரை வார்த்தல்..
’தாரை’ன்னா நீர். நீருக்கு தீட்டில்லை. தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர்.  என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உங்கள் வீட்டுக்கு மருமகளாகவும், உன் மகனுக்கு மனைவியாகவும் மனதார  கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என ஏற்றுக்கொள்ளும் சடங்கு இது.


பாதபூஜை...
பெற்று வளர்த்த பெற்றோருக்கு மரியாதை செய்யும் விதமாய் பாதபூஜை செய்யப்படுது.
பால், தயிர், நீர் கொண்டு செய்யப்படும் இந்த நீர் நூறு கங்கை நீருக்கு சமம்.

தாலி கட்டுதல்..
இன்றிலிருந்து நீ என்னவள், நான் உனக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் சுகதுக்கங்களில் பங்கெடுப்பேன் என உணர்த்தவே இந்த சடங்கு...

கெட்டி மேளம்
திருமண சடங்கின்போது மேளம் நாதஸ்வரம் ஒலிக்கவிடுவது சபையில் கூடியிருப்போரின் அமங்கலச்சொல், தும்மல், இருமல் மாதிரியான அபசகுன ஓசை மணமக்கள் காதில் விழாமல் இருக்கவே கெட்டி மேளம் ஒலிக்கவிடப்படுது.

விளக்கு பிடித்தல்
சில திருமணங்களில் தாலி கட்டும்போது மணமகனின் சகோதரி அல்லது அத்தை மணமக்கள் பின்னிருந்து விளக்கு பிடிப்பர். இத்திருமணத்திற்கு விளக்கு பிடித்தவர் சாட்சி என சொல்லவெ இந்த சடங்கு. .

மாலை மாற்றுதல்..
நெஞ்சை தொட்டிருக்கும் மாலையை மூன்றுமுறை மாற்றிக்கொள்வது, இருவரும் மனங்களை பரிமாறிகொள்வதன் அடையாளம்..

தாலிக்கட்டியபின்  மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமம் வைப்பது. இனி இவள் தன் கணவனுக்கே உரியவள் என எடுத்துக்காட்ட..

அட்சதை
மஞ்சள் கலந்த அரிசி அட்சதை எனப்படும். மணமக்களை தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமையவும் ஆசீர்வதிப்பதன் அடையாளம்.
tamil wedding
கைப்பிடித்தல்
இன்பம் துன்பம், செழுமை ஏழ்மை, இளமை முதுமை என அனைத்திலும்  ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என சொல்வதே கைத்தலம் பற்றுதல்.

அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை  மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி போடுவது ஒரு சடங்கு. எந்த நிலையிலும் இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் ஒருசேர உணர்த்தும் சடங்கு. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என உணர்த்துது.

அருந்ததி பார்த்தல்..
தாலிக்கட்டி,  முடித்து, அக்னியை வலம்வந்தபின் இருவரையும் கூட்டிக் கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பர். இப்பலாம் மணமேடையிலேயே காண்பிக்கப்படுது. “நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என பெண் உறுதி எடுத்திக்கொள்ளும் சடங்கு இது. அதுமட்டுமில்லாம சப்த ரிஷி மண்டலம் எனும் ஏழு நட்சத்திரக்கூட்டம் இருக்கும். அதில் ஆறாவது நட்சத்திரம் வசிஷ்டர். அவருக்கு அருகிலேயே அருந்ததி நட்சத்திரம் இருக்கும். இரு நட்சத்திரம் இருந்தாலும் நாம் பார்க்கும்போது ஒரே நட்சத்திரமாய் தெரியும். கணவன், மனைவி இருவராய் தனித்து இருந்தாலும்  ஒருவராய் ஒற்றை கருத்துடையவராய் இருக்கனும்ன்னு சொல்லும் சடங்கு இது.

மறுவீடு..
முன்பின் அறிமுகமில்லாத வீட்டுக்கு மணமகளை(னை) ஒற்றை ஆளாய் திடுதிப்புன்னு அனுப்பமுடியுமா?! அதனால் மறுவீடுன்னு மூன்றுமுறை சொந்தங்கள் சூழ போய் வருவாங்க.  இந்த நாளில்தான் சீர்வரிசை, பண்டம்லாம் கொடுத்து அனுப்புவாங்க. இப்ப மண்டபத்துலயே முடிச்சுக்குறாங்க.  மறுவீட்டில் மாப்பிள்ளை, பெண்ணும் சந்தனம் தடவி குங்குமம் இட்டு பால் பழம் சாப்பிட்டு சின்ன சின்ன விளையாட்டுகளில் ஈடுபடுவாங்க. அது எதுக்குன்னா, இன்னிக்கு மாதிரி திருமணம் நடந்த அன்னிக்கே சாந்திமுகூர்த்தம் நடத்தி தாம்பத்தியத்துல ஈடுபடுத்த மாட்டாங்க. இந்த சின்ன விளையாட்டுகளால், ஒருவருக்கொருவர் உடல் ஸ்பரிஷம் ஏற்பட்டு கூச்சம் மறையும். அதுக்கப்புறம் தாம்பத்தியத்தின்போது கூச்சம் இருக்காது. அதுக்காகவே சந்தனம் தடவுறது, குங்குமம் வைக்குறது, கணையாழி எடுப்பது, அப்பளம் உடைக்குறது, பொன்னூஞ்சல் ஆடுறதுன்ன்னு சின்ன சின்ன விளையாட்டுகள் நடத்தப்படுது.

விருந்து..
நமக்காக, நம் அழைப்பை ஏற்று பல்வேறு இடர்களுக்கிடையில் வந்து திருமணத்தில் கலந்துக்கிட்டு, மணமக்களை வாழ்த்தி நம் மனசை நிறைய வைத்த சொந்தங்களின் வயிறு நிறைக்க அறுசுவை உணவை பரிமாறுவது..

அவரவர் இடம்,  பழக்கவழக்கம், இனம், மதம் சார்ந்து சடங்குகள் மாறினாலும் அத்தனை சடங்கின் நோக்கம் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்.இரு உடல்களை இணைச்சு வைக்கும் நோக்கம் மட்டுமே அங்கில்லை. இரு மனங்களையும் இணைச்சு, அதன்மூலம் நல்வாரிசுகளை பெற்றெடுத்து இரண்டு குலம் தழைக்க உண்டானதே இந்த திருமணம் முறை. திருமணத்துக்கு வெறும் உடல் தகுதி, சொத்து, நகை மட்டும் போதாது. மனசளவிலும் தயாராகனும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகனும்.  ஒரு திருமணம் தோற்குதுன்னா அங்க இரு பிடிவாதக்காரர்கள்தான் காரணமே தவிர, எங்கோ இருக்கும் ஒன்பது கிரகங்கள் இல்லைன்ற வார்த்தை 100% உண்மை.  இதை உலகுக்கு உணர்த்தவே ,
உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

சனி, 1 பிப்ரவரி, 2020

காதலர் தினம் பிப்ரவரி 14, Valentine's Day February 14.


காதலர் தினம் பிப்ரவரி 14, Valentine's Day February 14.

புனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine's Day) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14  அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.


காதலர் தினம்
பழமையான வேலன்டைன் வாழ்த்து அட்டை
பிற பெயர்(கள்)
வேலன்டைன் தினம்
அன்பர்கள் தினம்
கடைபிடிப்போர்
பல நாடுகள்
வகை
புனித வேலண்டைன் திருவிழா, அன்பு, காதல் மற்றும் பாசத்தின் கொண்டாட்டம்
முக்கியத்துவம்
காதலர் தம்மிடையே காதல் மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவது
அனுசரிப்புகள்
வாழ்த்து மடல்கள் மற்றும் அன்பளிப்புகள் பரிமாறல், காதலர் சந்திப்பு
நாள்
பெப்ரவரி 14
இந்த நாள், நேர்த்தியான காதல் என்ற கருத்து தழைத்தோங்கிக் கொண்டிருந்த உயர் மத்திய காலத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சாஸர் வட்டத்தில் உருவாகியிருந்த ரொமாண்டிக் காதல் என்ற விஷயத்தோடு தொடர்புகொண்டிருந்தது. "வாலண்டைன்கள்" வடிவத்தில் காதல் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவதோடும் இந்த நாள் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தது. இதய வடிவலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகளுள்ள தேவதையின் உருவம் ஆகியவை நவீன காலத்திய காதலர் தின குறியீடுகளில் அடங்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள், பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு நாகரீகமாக இருந்தது, 1847 ஆம் ஆண்டில் எஸ்தர் ஹாவ்லண்ட் தன்னுடைய வெர்ஸ்டர், மசாசூஸெட்ஸ் வீட்டில் ஆங்கிலேய உருமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வாலண்டைன் அட்டைகளை கையால் செய்யும் தொழிலை வெற்றிகரமாக உருவாக்கினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில், தற்போது காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொதுவான வாழ்த்து அட்டைகளாக உள்ள பல வாலண்டைன் அட்டைகளும் பிரபலமாக இருந்தபோது அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[5]

கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான வாலண்டைன்ஸ் தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.

புனித வாலண்டைன்

இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: புனித வேலண்டைன்.
முற்காலத்தில் கிறிஸ்துவ தியாகிகள் பலரும் வாலண்டைன் என்று பெயரிடப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு வரை கத்தோலிக்க தேவாலயம் பதினோரு வாலண்டைன் தினங்களை அங்கீகரித்திருந்தது.

பிப்ரவரி 14 அன்று கௌரவிக்கப்படும் வாலண்டைன்கள் ரோமைச் சேர்ந்த வாலண்டைன்கள் ஆவர் (வாலண்டைன் பிரிஸ்ப்.எம்.) ரோமா மற்றும் வாலண்டைன் டெர்னி (வாலண்டைனஸ் எப். இண்டராநெமிஸிஸ் எம். ரோம் .
வாலண்டைன் ரோம்  என்பவர் ஏறத்தாழ 269 ஆம் ஆண்டில் உயிர்த்தியாகம் செய்த ரோமானிய மதகுரு ஆவார், அவர் வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் ரோமிலுள்ள செயிண்ட் பிராக்ஸ் தேவாலயத்திலும், அயர்லாந்து டப்ளினிலுள்ள ஒயிட்ஃபிரையர் தெரு கார்மலைட் தேவாலயத்திலும் உள்ளன.

டெர்னி வாலண்டைன்  197 ஆம் ஆண்டில் இண்டெரெம்னாவின் பிஷப்பாக இருந்து (நவீன டெர்னி) பேரரசர் அரேலியன் கொடுமையால் கொல்லப்பட்டார். அவரும் வாலண்டைன் ரோம் புதைக்கப்பட்ட வயா ஃப்ளமெனியாவில் உள்ள வேறு இடத்தில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் டெர்னியில் உள்ள செயிண்ட் வாலண்டினா பசிலிக்காவில் உள்ளது. (பசிலிக்கா டி சான் வாலண்டினா ).

பிப்ரவரி 14 தேதியின் கீழ் முற்காலத்திய தியாகிகள் பட்டியலில் வாலண்டைன் என்று குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது புனிதர் ஒருவர் பற்றியும் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. அவர் தன்னுடன் இருந்த பல கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆப்ரிக்காவில் புதைக்கப்பட்டார், ஆனால் இதற்குமேல் இவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை.

இந்தத் தியாகிகளின் அசல் மத்தியகால சரிதைகள் எவற்றிலும் ரொமாண்டிக் கூறுகள் எதுவும் இல்லை. இக்காலத்தில் தூய வாலண்டைன் பதினான்காம் நூற்றாண்டில் ரொமாண்டிக் கூறுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டார், வாலண்டைன் ரோமிற்கும் வாலண்டைன் டெர்னிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் தொலைந்துபோய்விட்டன.

1969 ஆம் ஆண்டில் புனிதர்களின் ரோம கத்தோலிக்க நாட்காட்டி திருத்தப்பட்டபோது பிப்ரவரி 14ஆம் நாளின் புனித வாலண்டைனுடைய விருந்துநாள் பொதுவான ரோமானிய நாட்காட்டியிலிருந்து நீ்க்கப்பட்டு குறிப்பிட்ட (உள்ளூர் அல்லது தேசிய நிகழ்ச்சி) நாட்காட்டிகளி்ல் பின்வரும் காரணங்களுக்காக மாற்றித்தரப்பட்டது: "புனித வாலண்டைனின் நினைவு புராதனமானது என்றபோதிலும், இது குறிப்பிட்ட நாட்காட்டிகளுக்கு மட்டும் தரப்படுகிறது, இதிலிருந்து, அவரது பெயரைத் தவிர்த்து அவர் பிப்ரவரி 14 அன்று வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார் என்பது தவிர அவரைப் பற்றி்த் தெரிந்துகொள்ள எதுவுமில்லை." இந்த விருந்துநாள் புனிதரின் நினைவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பால்சன் மால்டாவில் இப்போதும் கொண்டாடப்படுகிறது, அத்துடன் உலகம் முழுவதிலும் பழங்கால, இரண்டாம் வாடிகன் நாட்காட்டியைப் பின்பற்றும் பழமைவாத கத்தோலி்க்கர்களாலும் கொண்டாடப்படுகிறது.

புனித வாலண்டைன் பற்றி முந்தைய மத்தியகால அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பீட் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டு லெஜண்டா ஔரியில் விவரிக்கப்பட்டுள்ளது.[16] அந்தப் பதிப்பின்படி, புனித வாலண்டைன் ஒரு கிறித்துவர் என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டு ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளேடியசால் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

வாலண்டைனால் தாக்கம் கொண்டு அவருடன் விவாதம் செய்த கிளேடியஸ் அவருடைய உயிரைக் காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை மறுத்த வாலண்டைன் அதற்குப் பதிலாக கிளேடியஸை கிறித்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். இதன் காரணமாக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மரண தண்டனைக்கு முன்பாக, அவரது சிறைக் காவல் அதிகாரியின் குருட்டு கண்களைக் குணப்படுத்தும் அற்புதத்தை செய்துகாட்டியதாகக் கூறப்படுகிறது.

லெஜண்டா ஔரி உணர்ச்சிப்பெருக்கான காதலுடன் இருப்பதான எந்த ஒரு தொடர்பையும் தரவில்லை, இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே இருக்க வேண்டும் என்று அதிரடியான கட்டளையிட்ட ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளாடியசுக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத விதியை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு மதகுருவாக இருந்த வாலண்டைனைப் பற்றி சித்தரிப்பதற்கு நவீன காலத்தில் போதுமான கற்பனைகள் செய்யப்ட்டிருக்கின்றன.

திருமணமானவர்கள் நல்ல போர்வீரர்களாக உருவாவதில்லை என்று நம்பியதன் காரணமாக, தன்னுடைய படையை வளர்ப்பதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் மதகுருவான வாலண்டைன் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்திவைத்தார். கிளாடியஸ் இதைக் கண்டுபிடித்தபோது, அவர் வாலண்டைனை கைது செய்து சிறையிலடைத்தார். கோல்டன் லெஜண்டில் உள்ள ஒரு கற்பனையில், வாலண்டைன் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய மாலை, அவருக்கு தோழியாகவும் அவர் குணப்படுத்தியவராகவும் அல்லது இரண்டுமாகவும் இருந்த சிறை அதிகாரியன் மகளான, அவரது அன்புக்கினியவராக பரவலாக அடையாளம் காணப்பட்ட இளம் பெண்ணைக் குறித்து முதன்முறையாக வாலண்டைனே எழுதிறார். அந்தக் குறிப்பு "உன் வாலண்டைனிடமிருந்து" என்பதாகும்.

இதேபோன்ற ஒரு தினம் நீண்டநாட்களுக்கு முன்பு, காதல் மற்றும் காதலர்கள் தினமாக புராதன பெர்ஷியாவில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியங்கள்

லூபர்கேலியா

பிரபலமான நவீன ஆதாரங்கள் கிரெகோ-ரோமன் பிப்ரவரி கொண்டாட்ட தினங்களை இனப்பெருக்கத்திற்கும் காதலுக்கும் என்று வாலண்டைனுக்கான தினமாக அர்ப்பணிக்கப்பட்ட போதிலும், கென்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஜாக் ஓரிச்,சாஸருக்கு முன்பு வாலண்டைனஸ் என்று பெயர்கொண்ட புனிதர்களுக்கும் ரொமாண்டிக் காதலுக்கும் இடையே எந்த தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று வாதிடுகிறார்.

புராதான அதீனியன் நாட்காட்டியில் மத்திய ஜனவரிக்கும் மத்திய பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலமானது, ஜீயஸுக்கும் ஹெராவுக்கும் நடந்த தெய்வீக திருமணத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கெமீலியன் மாதமாக இருந்துள்ளது.

புராதன ரோமில் பிப்ரவரி 13 முதல் 15 வரை அனுசரிக்கப்படும் லூபர்கேலா இனவிருத்தியோடு தொடர்புடைய பழங்கால சடங்காகும். லூபர்கேலா ரோம் நகர உள்ளூர் மக்களுக்கான ஒரு திருவிழா. மிகவும் பொதுவான திருவிழாவான ஜூனோ ஃபெப்ருவா, அதாவது "தூய்மையாக்கும் ஜூனோ" அல்லது "கற்புள்ள ஜூனோ" பிப்ரவரி 13-14 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. போப் முதலாம் கெலாசியஸ் (492-496) இதை நீக்கினார்.

கிறித்துவ தேவாலயம், வாலண்டைன் விருந்து தினத்தை புறச்சமய லூபர்கேலா கொண்டாட்டங்களை கிறிதுதுவமயமாக்கும் முயற்சியாக பிப்ரவரி மத்தியில் கொண்டாட முடிவுசெய்திருக்கலாம் என்ற பொதுவான கருத்தும் இருக்கிறது.

இருப்பினும், விருந்து தினங்கள் தியாகிகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இருப்பதால் கிட்டத்தட்ட எப்போதும் தியாகிகள் தினத்தன்றே கொண்டாடப்படுவதற்கு, லூபர்கேலாவிற்கும் செயிண்ட் வாலண்டைன் விருந்திற்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் தற்செயலானதுதான். கத்தோலிக்க தேவாலயத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட லூபர்கேலா திருவிழாவை முற்றிலுமாக அழித்துவிட முடியவில்லை என்பதால், அந்த நாளை கன்னி மேரியை கௌரவப்படுத்தும் தினமாக மாற்றியது என்றும் ஒரு வரலாற்றாசிரியர் வாதிடுகிறார்.

Geoffrey Chaucer by Thomas Occleve (1412)
சாஸரின் காதல் பறவைகள் தொகு
ரொமாண்டிக் காதலுடன் சம்பந்தப்பட்ட வாலண்டைன் தின அமைப்பு குறித்த பதிவு ஃபவுல்ஸ் பாராளுமன்றத்தில் ஜெஃப்ரி சாஸரால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறினாலும் [21] இதுகூட தவறான விளக்கத்தின் விளைவாக இருக்கலாம். சாஸர் இவ்வாறு எழுதுகிறார்:

இது செயிண்ட் வாலண்டின் தினத்திற்கானது
ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது .

இந்தக் கவிதை, இங்கிலாந்து அரசர் இரண்டாம் ரிச்சர்ட்டுக்கும், போஹிமியா ஆன்னுக்கும் நடந்த திருமண ஒப்பந்தத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை கௌரவிக்கும் விதமாக எழுதப்பட்டது.[22](அவர்கள் எட்டு மாதங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டபோது அவருக்கு 13 அல்லது 14 வயதும், அவளுக்கு 14 வயதும் ஆகியிருந்தது.)

பிப்ரவரி 14 ஆம் நாளை வாலண்டைன் தினமாக சாஸர்தான் அறிவித்தார் என்று வாசகர்கள் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர்; இருப்பினும், இங்கிலாந்தில் மத்திய பிப்ரவரி மாதம் பறவைகள் இணைசேருவதற்கு ஏற்ற நேரமல்ல. ஹென்றி ஆன்ஸ்கர் கெல்லி,[23] பொதுவழிபாட்டு நாட்காட்டியில் ஜெனொவா வாலண்டைனுக்காக புனிதர்கள் தினமாக மே 2 உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

இந்த செயிண்ட் வாலண்டைன் 307 ஆம் ஆண்டில் இறந்துவிட்ட ஜெனொவா பிஷப் ஆவார்.

சாஸரின் ஃபவுல்ஸ் பாராளுமன்றம் பழம் பாரம்பரியத்தின் புனைவு சூழ்நிலைக்கேற்ப பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் சாஸருக்கு முன்பு அப்படி ஒரு பாரம்பரியம் இல்லவே இல்லை. வரலாற்று உண்மைகளாக காட்சி தரும், உணர்ச்சிப்பெருக்கான பழக்கவழக்கங்களின் யூகவாத விளக்கங்கள் பதினெட்டாம் நூற்றாண்ட முற்காலங்களிடைய தங்கள் மூலங்களைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக பட்லர்ஸ் லைவ்ஸ் ஆஃப் செய்ண்டஸ் என்ற புத்தகத்தை எழுதியவரான ஆல்பன் பட்லர் மரியாதைக்குரிய நவீன ஆய்வாளர்களாலும் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், "வாலண்டைன் தின சம்பிரதாயங்கள் என்ற கருத்தாங்கள் ரோமானிய லூபர்கேலாவால் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல்வேறு வடிவங்களில் இன்றுவரை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது"

மத்திய காலமும் ஆங்கில மறுமலர்ச்சியும்

சட்ட மொழியைப் பயன்படுத்தி நேர்த்தியான காதலின் சம்பிரதாயங்களுக்கான "காதல் உயர்நீதிமன்றம்" 1400 ஆம் ஆண்டு வாலண்டைன் தினத்தன்று பாரீசில் நிறுவப்பட்டது. இந்த நீதிமன்றம் காதல் ஒப்பந்தங்கள், துரோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கவனித்தது. கவிதை வாசிப்பின் அடிப்படையில் பெண்களால் நீதிபதிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

முற்காலத்தில் நீடித்த வாலண்டைன், தனது உயிர்க்காதல் மனைவிக்கு ஆர்லியன்சைச் சேர்ந்த பிரபுவான சார்லஸ் என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கவிதை, இவ்வாறு தொடங்கிற்று.

Je suis desja d'amour tanné
Ma tres doulce Valentinée…

—Charles d'Orléans, Rondeau VI, lines 1–2
அந்த நேரத்தில், இந்த பிரபு அஜின்கோர்ட் சண்டையில் பிடிபட்டு லண்டன் டவரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ஹாம்லெட் டில் ஓஃபிலாவால் வாலண்டைன் தினம் வருத்தத்தோடு (1600-1601) குறிப்பிடப்படுகிறது:

To-morrow is Saint Valentine's day,
All in the morning betime,
And I a maid at your window,
To be your Valentine.
Then up he rose, and donn'd his clothes,
And dupp'd the chamber-door;
Let in the maid, that out a maid
Never departed more.

—William Shakespeare, Hamlet, Act IV, Scene 5

வாலண்டைன் தின அஞ்சலட்டை, ஏறத்தாழ 1910
நவீன காலங்கள் தொகு
பதினேழாம் நூற்றாண்டில், கடையில் வாங்கப்பட்ட அட்டைகள் சிறியதாகவும் விலைமிகுந்ததாகவும் இருந்தபோது கையால் செய்யப்பட்ட அட்டைகள் பெரிதாக்கப்பட்டு விரிவான அளவில் செய்யப்பட்டன. 1797 ஆம் ஆண்டில், சொந்தமாக கவிதை இயற்ற முடியாத இளம் காதலர்களுக்கென்று உணர்ச்சிப்பெருக்கான வரிகள் கொண்ட பாடல்கள் அடங்கிய தி யங் மான்ஸ் வாலண்டைன் ரைட்டர் என்ற புத்தகத்தை ஒரு ஆங்கிலேய பதிப்பாளர் வெளியிட்டார். பதிப்பாளர்கள் "மெக்கானிக்கல் வாலண்டைன்கள்" எனப்பட்ட கவிதை வரிகளும் உருவப்படங்களும் அடங்கிய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அட்டைகளை ஏற்கெனவே உருவாக்கத் தொடங்கியிருந்தனர், அடுத்த நூற்றாண்டிலேயே அஞ்சல் கட்டணங்களில் ஏற்பட்ட விலை குறைப்பு, தனிப்பட்ட முறையில் குறைவான ஆனால் வாலண்டைன்களை அனுப்பும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. இது அதற்கு மாற்றாக, முதல் முறையாக அநாமதேய அட்டைகளை மாற்றிக்கொள்ளப்படுவதை சாத்தியமாக்கியது, வரலாற்று காலத்தில் மற்றவகையில் முற்றிலும் விக்டோரியன் மயமாக இல்லாத இனவாத கவிதை வரிகளின் திடீர்த் தோற்றத்திற்கான காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காகித வாலண்டைன்கள் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்தன, காகித வாலண்டைன்கள் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டன. சித்திர வேலைப்பாடு கொண்ட வாலண்டைன்கள் நிஜமான சரிகைகளும் ரிப்பன்களும் கொண்டு தயாரிக்கப்பட்டன, காகித சரிகைகள் 1800 ஆம் ஆண்டுகளின் மத்தியில் அறிமுகமாயின.[31].

1840 ஆம் ஆண்டுகளில் புத்துருவாக்கம் செய்யப்பட்ட வாலண்டைன் தினம் லீஹ் எரிக் ஸ்மி்த் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[32] 1849 ஆம் ஆண்டில் கிரகாம் அமெரிக்கன் மாதாந்திர இதழில் எழுத்தாளராக இருந்த இவர், "செயிண்ட் வாலண்டைன் தினம்... தேசிய கொண்டாட்ட தினமாகிறது, இல்லையில்லை, ஆகிவிட்டது" என்று அறிவித்தார்.[33]அமெரிக்காவில், 1847 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறுகிய காலத்திலேயே சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட காகித சரிகை கொண்ட முதல் வாலண்டைன்கள் வெர்சஸ்டர், மசாசூஸெட்சைச் சேர்ந்த எஸ்தர் ஹாவ்லண்ட் (1828-1904) அவர்களால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அவருடைய தந்தை பெரிய புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரிகளை விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தார், ஆனால் ஹாவ்லண்ட் தனக்கான தாக்கத்தை அவர் பெற்ற ஆங்கில வாலண்டைனிடமிருந்தே பெற்றார், எனவே வாலண்டைன் அட்டைகளை அனுப்புவது வட அமெரிக்காவில் பிரபலமாவதற்கு முன்பே இங்கிலாந்தில் இருந்துவந்துள்ளது என்பது தெளிவாகிறது. வாலண்டைன் அட்டைகள் அனுப்புதல் என்ற முறை எலிசபெத் காஸ்கெல் எழுதிய மிஸ்டர். ஹாரிசன்ஸ் கன்ஃபெஷன்ஸ் (1851 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து வாழ்த்து அட்டைகள் அமைப்பினர் வருடாந்திர "எஸ்தர் ஹாவ்லண்ட் வாழ்த்து அட்டைகள் கற்பனைத்திறன்" விருதினை வழங்கி வருகின்றனர். கிறித்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவதாக உள்ள கொண்டாட்ட தினமாக இருப்பது வாலண்டைன்ஸ் தினத்தன்று உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டது.[34] மத்திய-பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்த்து அட்டைகள் விற்பனை அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[35]

அமெரிக்காவில், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வழக்கமாக ஆண்கள் பெண்களுக்கு வாழ்த்து அட்டைகளை மாற்றிக்கொள்ளுதல் என்ற முறை எல்லா வகையிலும் பரிசளிப்பது என்பது வரை நீட்டித்துக்கொண்டது. இதுபோன்ற பரிசுகள் ரோஜாக்கள் மற்றும் சிகப்பு சாடின் துணி கொண்டு சுற்றப்பட்ட இதய வடிவிலான பெட்டியில் வைத்து சாக்லேட்டுகளை அளிப்பது என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. 1980 ஆம் ஆண்டுகளில், வைரத் தொழிலானது ஆபரணம் வாங்கித்தரும் தருணமாக வாலண்டைன் தினத்தை மேம்படுத்தத் தொடங்கியது. இந்த நாள் பொதுவான ஆன்ம நேயமுள்ள "இனிய வாலண்டைன் தின வாழ்த்துக்கள்" என்று வாழ்த்துச் சொல்லுவதோடும் தொடர்புள்ளதாகும். வாலண்டைன் தினம் "தனித்திருப்பவர்கள் விழித்திருக்கும் நாள்" என்றும் வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. சில வட அமெரிக்க துவக்கப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறையை அலங்கரித்து, வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டு, இனிப்புகளை சாப்பிடுகின்றனர். இந்த மாணவர்களின் வாழ்த்து அட்டைகள் ஒருவரையொருவர் பாராட்டுதலைப் பற்றிய குறிப்புகளையே கொண்டிருக்கும்.

இந்த புத்தாயிரம் ஆண்டு துவக்கத்தில் எழுச்சியுற்ற இணையங்கள் புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் இதில் மின்-வாழ்த்து அட்டைகள், காதல் கூப்பன்கள் அல்லது அச்சிடக்கூடிய வாழ்த்து அட்டைகள் உள்ளிட்ட வாலண்டைன் தின வாழ்த்து அட்டைகள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

பழமையும் உயர்சிறப்பும் வாய்ந்த வாலண்டைன்கள்,1850–1950 தொகு
மத்திய 19ஆம் மற்றும் முற்பட்ட 20ஆம் நூற்றாண்டு வாலண்டன்கள் தொகு

எஸ்தர் ஹாவ்லண்ட் வாலண்டைன், ஏறத்தாழ 1850: "Weddings now are all the go, Will you marry me or no"


கையால் எழுதப்பட்ட கவிதை," "To Susanna" Valentine's Day, 1850 தேதியிட்டது (கோர்க், அயர்லாந்து)


காமிக் வாலண்டைன், மத்திய-19ஆம் நூற்றாண்டு: "R stands for rod, which can give a smart crack, And ought to be used For a day on your back."


வாலண்டைன் அட்டை, 1862: "My dearest Miss, I send thee a kiss"


நாட்டுப்புற கலை வாலண்டைன், நியூஜெர்ஸி நியூஃபீல்டு கிளாரா டன் 1875 ஆம் ஆண்டு தேதியிட்ட உறை.


விட்னி வாலண்டைன், 1887; ஹாவ்லண்ட் தனது புதிய இங்கிலாந்து வாலண்டைன் நிறுவனத்தை ஜார்ஜ் சி. விட்னி நிறுவனத்திடம் 1881 ஆம் ஆண்டில் விற்றார்


கடல்சூழ் வாலண்டைன், தேதி தெரியவில்லை

அஞ்சல் அட்டைகள், "பாப்-அப்கள்" மற்றும் இயந்திரத்தனமான வாலண்டைன்கள், ஏறத்தாழ 1900-1930 தொகு

ரிச்சர்டு ஃபெல்டன் அவுட்கால்டால் உருவாக்கப்பட்ட பஸ்டர் பிரவுன் வாலண்டைன் அஞ்சல் அட்டை, 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதி


நிஸ்டர் உருவாக்கிய அஞ்சல் அட்டை, ஏறத்தாழ 1906


வாலண்டைன் அஞ்சல் அட்டை, ஏறத்தாழ 1900-1910


மெல்லிய இரண்டு அங்குல பாப்-அப் வாலண்டைன், ஏறத்தாழ 1920


கால்பந்து விளையாடும் டிஸ்னி போன்ற எலி மற்றும் நாய் புல்-டாப் விளையாட்டில் காண்பிக்கப்பட்டது, ஏறத்தாழ 1920


அட்டையின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோக வளையம், நீலநிற அம்பு நகரும்போது ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்கும்படி அமைந்திருந்தது


Rocking horse and rider, ஏறத்தாழ 1920-1930

கருப்பு அமெரிக்கர்கள் மற்றும் குழந்தைகள் வாலண்டைன்கள் தொகு

அஞ்சல் அட்டை, 1906


Raphael Tuck Valentine by Frances Brundage, ஏறத்தாழ 1910


கருப்பு அமெரிக்க வாலண்டைன், ஏறத்தாழ 1940


கேள்விக்குரிய இரசனையில் இருக்கும் குழந்தைகளின் வாலண்டைன், 1940-1950

இதேபோன்று காதலை கௌரவிக்கும் தினங்கள் தொகு
மேற்கத்திய நாடுகளில் தொகு
ஐரோப்பா தொகு
வாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் 'ஜாக்' எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று பலரும் டைடு சாண்டேஸ் டிவைன்வன் (தூய டிவைன்வென் தினம்) கொண்டாடுகின்றனர். வெஸ்ஷ் காதலர்களுக்கு ஆதரவாளரான இந்த தூய டிவைன்வென் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய கத்தோலிக்க நாடான பிரான்சில் வாலண்டைன் தினம் "செயிண்ட் வாலண்டைன்" என்றே அறியப்படுகிறது என்பதுடன் மற்ற மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது.

ஸ்பெயினில் வாலண்டைன் தினம் சான் வாலண்டைன் என்று அறியப்படுவதோடு பிரிட்டனில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது, இருப்பினும் கத்தோலோனியாவில் லா டியாடா டி சாண்ட் ஜோர்டி (செயிண்ட் ஜார்ஜ் தினம்) அன்று ரோஜா மற்றும்/அல்லது புத்தகம் வழங்கி கொண்டாடப்படும் இதேபோன்ற தினத்தால் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. போர்த்துக்கலில் இது மிகப்பொதுவாக "டயா டோஸ் நெமோரடஸ்"(ஆண்கள்/பெண்கள் தினம்) என்று குறிப்பிடப்படுகிறது.

டென்மார்க் மற்றும் நார்வேவில் வாலண்டைன் தினம் (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே என்று அறியப்படுகிறது. இது பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால் பலரும் தங்கள் இணையுடன் ரொமாண்டிக் உணவு உண்ணவும், தாங்கள் நேசிக்கின்றவருக்கு ரகசியக் காதலுக்கான வாழ்த்து அட்டை அனுப்பவும் அல்லது சிகப்பு ரோஜாவைக் கொடுக்கவும் நேரத்தை செலவிடுகின்றனர். ஸ்வீடனில் இது அலா ஹர்டன்ஸ் டேக் ("அனைத்து இதயங்களின் நாள்") என்றழைக்கப்படுகிறது, இது 1960 ஆம் ஆண்டுகளின் பூ தொழில் வணிக நோக்கங்களுக்காகவும், அமெரிக்க கலாச்சாரத்தின் செல்வாக்கினாலும் துவக்கி வைக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமான விடுமுறை தினம் அல்ல, ஆனால் இந்தக் கொண்டாட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அன்னையர் தினத்தைவிட அழகுசாதனப் பொருட்களும் பூக்களும் மட்டுமே இந்த தினத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.

ஃபின்லாந்தில் வாலண்டைன் தினம் ஸ்த்வான்பைவா அதாவது "நண்பர்கள் தினம்" என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல, இந்த நாள் நீ்ங்கள் நேசிப்பவர் மட்டுமல்லாது உங்கள் நண்பர்களையும் நினைவுகூறும் நாளாக இருக்கிறது. எஸ்தோனியாவில் வாலண்டைன் தினம் இதேபோன்று பொருள் கொண்ட சோப்ராபேவ் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்லாவேனியாவில், "தூய வாலண்டைன் வேர்களின் சாவியை கொண்டுவந்திருக்கிறார்" என்று ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு, எனவே பிப்ரவரி 14 அன்று செடிகளும் மலர்களும் வளரத் தொடங்குகின்றன. ஓயின் நிலங்களில் வேலை தொடங்கும்போது அது வாலண்டைன் தினமாக கொண்டாடப்படுகிறது. பறவைகள் ஒன்றுக்கொன்று கோரிக்கை விடுக்கின்ற அல்லது திருமணம் செய்துகொள்கிற நாளாகவும் அது இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும், இது இப்போதுதான் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக காதல் தினம் என்பது தூய கிரிகோரியின தினமான மார்ச் 12 அன்றுதான் கடைபிடிக்கப்படுகிறது. மற்றொரு பழமொழி "Valentin - prvi spomladin" (வாலண்டைன் - இளவேனிற்கால முதல் தூயவன்) என்று கூறுகிறது, சில இடங்களில் இருப்பதுபோல் (குறிப்பாக, ஒயிட் கர்னியோலா) தூய வாலண்டைன் இளவேனிற்கால தொடக்கத்தையே குறிப்பிடுகிறார்.

ரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அவர் பெயரின் ஒரு பகுதி, dragoste ("காதல்") என்ற வார்த்தையிலும் காணப்படுகின்ற drag ("அன்புக்குரிய") என்ற வார்த்தையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஏற்கனவே டிராகோபீட் என்ற பாரம்பரியமான கொண்டாட்ட தினம் இருந்தபோதிலும் ரோமானியாவும் வாலண்டைன் தினத்தைக் கொண்டாட தொடங்கியுள்ளது. இது பல்வேறு குழுக்கள், மேம்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது,[36] அத்துடன் வாலண்டைன் தினத்தை மேலோட்டமான, வணிகமயமான மற்றும் மேற்கிலிருந்து இறக்குமதியான மோசமான விஷயமாக இருக்கிறது என்று கண்டிக்கின்ற நோவா டிரெப்தா போன்ற தேசியவாத அமைப்புக்களும் இதை எதிர்க்கின்றன.

வாலண்டைன் தினம் துருக்கியில் Sevgililer Günü அதாவது "இனிய இதயங்களின் தினம்" என்று அழைக்கப்படுகிறது.
யூத மரபுப்படி Av - Tu B'Av (வழக்கமாக ஆகஸ்டு பிற்பாதி) காதல் திருவிழா தினமாகும்.
முற்காலத்தில் பெண்கள் வெள்ளை உடையணிந்து ஓயின் நிலங்களில் நடனமாடுவர், ஆண்கள் அவர்களுக்காக காத்திருப்பர் (Mishna Taanith நான்காம் அத்தியாய முடிவு).
நவீன இஸ்ரேலிய கலாச்சாரத்தில் காதலைச் சொல்லவும், திருமண கோரிக்கை வைக்கவும், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்கள் போன்ற பரிசுகளை வழங்குவதற்கும் ஒரு பிரபலமான நாளாக இருந்து வருகிறது.
மத்திய மற்றும் தென் அமெரிக்கா தொகு
கௌதமாலாவில், வாலண்டைன் தினம் "Día del Amor y la Amistad" (காதல் மற்றும் நட்பு தினம்) என்று அழைக்கப்படுகிறது. இது பல வழிகளிலும் அமெரிக்க வடிவத்தை ஒத்திருக்கிறபோதும், தங்கள் நண்பர்களுக்கான "பாராட்டு தெரிவித்தல்" என்ற செயலை மக்கள் செய்வது பொதுவான விஷயமாகும்.

பிரேசிலில்,Dia dos Namorados (இலக். "நேசம்கொண்டவர்கள் தினம்", அல்லது "ஆண் நண்பர்கள்/பெண் நண்பர்கள் தினம்") ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது, அப்போது ஜோடிகள் பரிசுகள், சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் மலர்ச்செண்டுகளை பரிமாறிக்கொள்வர்.

இந்த நாள் ஃபெஸ்டா ஜுனினாவின் செயிண்ட் அந்தோணி தினத்திற்கு முன்பாக வருவதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம், அவர்களுடைய திருமண புனிதராக அறியப்படும் இவருடைய நாளில், பாரம்பரியமாக, திருமணமாகாத பெண்கள் தங்கள் கணவரையோ காதலனையோ கண்டுபிடிக்கும் விதமாக சிம்பதியா எனப்படும் பிரபலமான சடங்குமுறையைச் செய்வார்கள். பிப்ரவரி 14 வாலண்டைன் தினம் முக்கியமாக பிரேசில் கலாச்சார மற்றும் வர்த்தக காரணங்களுக்காக கொண்டாடப்படுவதே இல்லை. பிரேசிலில் பிரதான ஃப்ளோட்டிங் விடுமுறை தினமும் - நீண்டகாலமாக பாலுறுவுக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் என்று அந்த நாட்டிலுள்ள பலராலும் குறிப்பிடப்பட்டது - பிப்ரவரி முற்பாதியிலிருந்து மார்ச் முற்பாதிவவரை எந்த நாளிலும் வந்துவிடக்கூடிய கேளிக்கைகளுக்கு முன்போ பின்போ  வெகு விரைவிலேயே வாலண்டைன் தினம் வந்துவிடுவதால் கொண்டாடப்படுவதில்லை.

வெனிசுலாவில், 2009 ஆம் ஆண்டில் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தனது ஆதரவாளர்களிடம் பிப்ரவரி 15 அன்று வரவிருந்த பொதுவாக்கெடுப்பு குறித்து இவ்வாறு கூறினார், "பிப்ரவரி 14 அன்றிலிருந்து எதையும் செய்வதற்கு நேரமிருக்காது அல்லது எதுவுமிருக்காது... ஒரு முத்தமோ அல்லது வேறு ஏதேனுமோ மிகவும் அற்பத்தனமானதே", அவர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு முடிந்த பின்னர் ஒரு வாரம் முழுவதையும் காதல் வாரமாக கொண்டாடுமாறு பரிந்துரைத்தார்.

தென் அமெரிக்காவில் பெரும்பாலும் 1}Día del amor y la amistad (இலக். "காதல் மற்றும் நட்பு தினம்") மற்றும் Amigo secreto ("ரகசிய நண்பன்") முற்றிலும் பிரபலமானது என்பதுடன், இரண்டும் பிப்ரவரி 14 அன்று ஒன்றாகவே கொண்டாடப்படுகிறது (ஒரே விதிவிலக்கு என்னவெனில், கொலம்பியாவில் இது செப்டம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் கூறியதில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தற்செயல் முறையில் ஒரு பெறுபவர் ஒதுக்கப்படுவார், அவர் அநாமதேய பரிசு ஒன்றைத் தருவார் (இது கிறித்துவ பாரம்பரியத்தில் உள்ள சீக்ரெட் சாண்டாவைப் போன்றது).

ஆசியா

மையப்படுத்தப்பட்ட சந்தையிடல் முயற்சியின் காரணமாக சிங்கப்பூர், சீனா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களால் வாலண்டைன் பரிசுகளுக்கு பெரும்பாலான பணம் செலவிடப்பட்டு சில ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[40]
ஜப்பானில், 1961 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஜப்பானிய தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான மோரிநாகா, ஆண்களுக்குத்தான் பெண்கள் சாக்லேட் தரவேண்டும் என்ற பழக்கத்தை தொடக்கி வைத்தது. குறிப்பாக, அலுவலக பெண்கள் தங்களது சக ஊழியர்களுக்கு சாக்லேட் தருவார்கள். ஒரு மாதத்திற்குப் பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானிய தேசிய தின்பண்டத் தொழில் அமைப்பினரால் "திருப்பியளிக்கும் நாள்" என்று உருவாக்கப்பட்ட வெள்ளை தினமான வாலண்டைன் தினத்தன்று தங்களுக்கு சாக்லேட் வழங்கியவர்களுக்கு ஆண்கள் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைப் போன்று அல்லாமல் மிட்டாய்கள், பூக்கள் போன்ற பரிசுகளை அளித்தல் அல்லது டின்னர் தேதி ஆகியவை சாதாரணமானவை. உடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் பெண்கள் சாக்லேட்டுகளை கொடுப்பது ஒரு கடமையாகவே ஆகிவிட்டது. ஒரு ஆணின் பிரபலம் அந்த நாளில் அவர் எத்தனை சாக்லேட்டுகளைப் பெற்றார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது; பெருமளவில் சாக்லேட்டுகளைப் பெறுவது ஒரு ஆணுக்கு ஒரு உணர்வுசார்ந்த பிரச்சினை, அந்த அளவு வெளியில் தெரியப்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டைப் பெற்றபிறகே அவர்கள் அதைப்பற்றித் தெரிவிப்பார்கள். இது giri-choko (義理チョコ) எனப்படுகிறது, அதாவது giri ("கடமை") மற்றும் choko, ("சாக்லேட்") என்பதிலிருந்து வந்தது, பிரபலமடையாத உடன்பணிபுரிவர்கள் "எதிர் கடமை" chō-giri choko விலைகுறைவான சாக்லேட்டுகளை மட்டுமே பெறுவர்.
இது honmei-choko (本命チョコ); நேசிப்பவருக்கு சாக்லேட் தருவது என்பதுடன் முரண்படுகிறது. நண்பர்கள், குறிப்பாக பெண்கள், சாக்லேட்டுகளை பகிர்ந்துகொள்வது tomo-choko (友チョコ); எனப்படுகிறது, அதாவது tomo என்றால் "நண்பன்".
தென் கொரியாவில், பெண்கள் பிப்ரவரி 14 அன்று ஆண்களுக்கு சாக்லேட் தருவார்கள், ஆண்கள் மார்ச் 14 அன்று பெண்களுக்கு சாக்லேட் அல்லாத மிட்டாய் தருவார்கள். ஏப்ரல் 14 அன்று (கருப்பு தினம்), 14 பிப்ரவரி அல்லது மார்ச்சில் எதையும் பெறாதவர்கள், ஒரு சீன உணவகத்திற்கு சென்று கருப்பு நூடுல்ஸ் சாப்பிட்டு தங்கள் தனி வாழ்க்கையை நினைத்து துயரப்படுவார்கள். கொரியர்கள் நவம்பர் 11 அன்று பெப்பரோ தினத்தையும் கொண்டாடுவார்கள், அப்போது இளம் ஜோடிகள் ஒருவருக்கொருவர் பெப்பரோ குக்கிகளை தருவார்கள். '11/11' என்ற நாள் நீண்ட வடிவமுள்ள குக்கியை நினைவுபடுத்துவதற்கென்றே வைக்கப்பட்டுள்ளது. கொரியாவில் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி காதல் சம்பந்தப்பட்ட நாளாகவே குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் பெரும்பாலானவை மறைந்துபோயுள்ளன.
ஜனவரி முதல் டிசம்பர் வரை: மெழுகுவர்த்தி தினம், வெள்ளை தினம், கருப்பு தினம், ரோஜா தினம், முத்த தினம், வெள்ளி தினம், பச்சை தினம், இசை தினம், வைன் தினம், திரைப்பட தினம், மற்றும் கட்டிப்பிடி தினம்.

சீனாவில், ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்கு சாக்லேட்டுகள், பூக்கள் அல்லது இரண்டையும் தருவது ஒரு பொதுவான சூழ்நிலையாகும். சீனாவில் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுவது.

பிலிப்பைன்ஸில் வாலண்டைன் தினம் "Araw ng mga Puso" அல்லது "இதயங்கள் தினம்" என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக மட்டுமீறிய அளவில் பூக்களின் விலைகள் அதிகரி்ககும் தினமாக குறிப்பிடப்படுகிறது.
இதேபோன்ற ஆசிய பாரம்பரியங்கள் தொகு
சீனக் கலாச்சாரத்தில், காதலர்கள் சார்ந்த பழம் மரபு அனுசரிக்கப்படுகிறது, அது "ஏழுகளின் இரவு" என்று அழைக்கப்படுகிறது (சீனம்: 七夕; பின்யின்: Qi Xi). இந்த மரபுப்படி, கவர்டு ஸ்டார் மற்றும் வீவர் மெய்ட் ஸ்டார் ஆகியவை வழக்கமாகபால்வீதியால் பிரித்து வைக்கப்படும் (வெள்ளி ஆறு) ஆனால் அதை சீன நாட்காட்டியின் ஏழாவது மாதம் ஏழாவது நாளில் கடந்துசெல்வதற்கு அனுமதிக்கப்படும்.
இதே நாளில் கொரியாவில் கடைபிடிக்கப்படுவது சில்சியோக் எனப்படுகிறது, ஆனால் ரொமாண்ஸ் உடன் உள்ள இதன் உறவு நீண்டகாலமாக மங்கிப்போய்விட்டது.[மேற்கோள் தேவை]
ஜப்பானில் 七夕 (தனபதா எனப்படுவது 棚機 என்ற நெசவுக் கடவுளைக் குறிக்கும்) கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஜூலை 7 அன்று கொண்டாடப்படும். இதன் பின்னணியில் உள்ள புராணம் சீனத்தில் உள்ள ஒன்றுதான். [மேற்கோள் தேவை]இருப்பினும், இந்தக் கொண்டாட்டம் வாலண்டைன் தினத்துடனோ அல்லது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக்கொள்வதுடனோ கொஞ்சம்கூட தொடர்புபடுத்திக் குறிப்பிடப்படுவதில்லை.

மத அடிப்படைவாதிகளுடனான மோதல்கள்

இந்தியா

இந்தியாவில் வாலண்டைன் தினம் வெளிப்படையாகவே இந்து அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்படுகிறது.[43] 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வாலண்டைன் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும், இதை "மேற்கிலிருந்து வந்த கலாச்சார சீர்கேடு" என்று எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனாவின் தீவிரப் போக்குள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

 குறிப்பாக, மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பால்தாக்கரேவும் மற்ற சிலரும் இந்த நாளுக்கு முன்பாக, வாலண்டைன் தினத்தன்று எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
 இதில் வன்முறை நிகழ்த்துபவர்கள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களில் களியாட்டங்களில் ஈடுபடும் இளம் ஜோடிகளையும், காதலர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுபவர்களையும் விரட்டிப் பிடித்து குறுந்தடிகளை வைத்திருக்கும் கொள்ளையர்களால் மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் காணப்படும் ஜோடிகள் உடனடியாக அந்த இடத்திலேயே திருமணம் செய்துகொள்ளும்படி சிவசேனா மற்றும் இதேபோன்ற போராட்டக்காரர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மத்திய கிழக்கு

இளம் ஈரானியர்கள் இந்த நாளில் வெளியில் சென்று பரிசுகளை வாங்கிக் கொண்டாடுவதை காணமுடிகிறது.

சவுதி அரேபியாவில், 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், கலாச்சார காவலர்கள் வாலண்டைன் தின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்து, இந்த நாள் இஸ்லாம் அல்லாத கொண்டாட்ட நாள் என்று கருதப்படுவதால் கடை ஊழியர்களிடம் சிவப்பாக உள்ள எந்த அம்சத்தையும் நீக்கிவிடும்படி கூறினர். 2008 ஆம் ஆண்டில் இந்தத் தடை கருப்புச் சந்தையில்  பூக்கள் மற்றும் அலங்காரக் காகிதம் விற்கப்படுவதற்கு வழிவகுத்தது