பக்கங்கள்

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

முரசொலி மாறன் பிறந்த தினம் ஆகஸ்ட் 17 , 1934.


முரசொலி மாறன்  பிறந்த தினம்  ஆகஸ்ட் 17 , 1934.

முரசொலி மாறன் ( ஆகஸ்ட் 17 , 1934 - நவம்பர் 23 , 2003 ) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. முரசொலி வார/நாளேட்டின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
தி. மு. க தலைவர் கருணாநிதி இவரின்
தாய் மாமன் ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி , ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார்.
கலாநிதி சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர்; இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார்.
திரையுலகில்
முரசொலி மாறன் சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதுபவராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மறக்க முடியுமா (1966 ஆகஸ்ட் 12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக