பக்கங்கள்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

உலக புகைப்பட நாள் ( World photograph day ) ஆகஸ்ட் 19 .


உலக புகைப்பட நாள் ( World photograph day ) ஆகஸ்ட் 19 .

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் , வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.

லூயிஸ் டாகுரே

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

முதல் புகைப்படம்

1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.

புகைப்பட விருதுகள்

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.


ஸ்மைல் ப்ளீஸ்...

ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே
சிறந்த நிழல் படம்...
காலம் தின்ற
கண்ணாடிக்குள் கரையான் அரித்த
அட்டையில்
ஒட்டியிருக்கும்
என் அம்மாவின்
சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.
கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.
புகைப்படக் கலை
புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்... ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

போட்டோகிராபி
1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.
ஒளியின் எழுத்து
போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
பிலிம் புகைப்படங்கள்
1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்

1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.
டிஜிட்டல் கேமராக்கள்
முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதிர வைத்த ஐலான்
ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.
எளிதான புகைப்படக்கலை
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.

செல்போன் செல்ஃபிக்கள்
கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.



உலக புகைப்பட நாள் ( World photograph day )
இன்று – ஆகஸ்டு 19.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி "பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்” இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு" என உலகம் முழுவதும் அறிவித்தது.
இதனை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.


உலகின் முதல் புகைப்படக்கருவி
உலகின் முதல் புகைப்படம்.
உலகை உலுக்கிய புகைப்படங்கள் சில…
“ I t all started with a man in a white shirt
who walked into the street and raised his right hand
no higher than a New Yorker hailing a taxi, ”
James Barron wrote the following day in The New York Times.
1989ம் ஆண்டு ஜூன் 5-ம் நாள் சீனாவின் பெய்ஜிங் தியானன்மென் சதுக்க எதிர்ப்புப்போராட்டத்தின் போது போராட்டக்கார்ர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த டாங்குகளை வழிமறிக்கும் விதமாக தனிமனிதனாக நின்றவரின் புகைப்படம்.
யார் என்ன பெயர் என்பதெல்லாம் தெரியாத அந்த மனிதரின் புகைப்படம் மறுநாள் நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாக உலகப்புகழ் அடைந்தார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படமாக அந்த புகைப்படம் அமைந்தது.

ஒரு போரையே நிறுத்தும் வல்லமை ஒரு புகைப்படத்துக்கு இருந்தது. ஆம்!
ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'.
இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலிக்க இந்த புகைப்படம் காரணமாக அமைந்த்து..
இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர். அந்த ஆண்டுக்கான 'புலிட்சர் விருது' பெற்றது இந்த புகைப்படம்.
ஒரு புகைப்படத்திற்காக உலகப்புகழ் பெற்று புலிட்சர் விருது பெற்று
அதே புகைப்படத்திற்காகவே தற்கொலையும் செய்து கொண்டவரும் உண்டு.
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 1993
இல் சூடானில் நிலவிய பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய் தார் . பசியினால் உடல்மெலிந்த சிறுமி ஐக்கியநாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்குத் தவழ்ந்து சென்று கொண்டிருப்பதை படமெடுத்தார் கெவின். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும் அவளை இரையாக்கிக்கொள்ளலாம் எனக் காத்திருந்து வல்லூறு ஒன்றையும் சேர்த்தே க்ளிக் செய்ய 1993 மார்ச் திங்கள் 26
ஆம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியானது .
சொல்லிவைத்தாற்போல எல்லா வாசகரும் கேட்ட கேள்வி “அந்த சிறுமி என்னவானாள்?
உயிர்பிழைத்தாளா?” என்பது தான் காட்டரிடம் பதில் இல்லை. 1994 மே திங்கள் 26-
ம் நாள் கொலம்பிய பல்கலைக்கழகத்தில்
புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் . ஆனாலும் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி அவரை சுழன்றடிக்க , சில நாட்கள் கழித்து ஜோஹன்ஸ்பர்க் கடற்கரையில் தன் காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். காரில் கிடந்த கடிதம் இப்படி தொடங்கியது.. I am Really, Really Sorry.
January 12, 1960 ஜப்பானிய சோசலிச கட்சியின் தலைவராக இருந்த Asanuma என்பவர் ஒரு எதிர் மாணவனால் கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்.
1963 தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி , அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சி, எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை.
இராணுவ துருப்புகளின் முன் வீரம் காட்டும் சிறுவன் .
.
போரில் தாய் தந்தையை இழந்த குழந்தை
போபால் விசவாயுக் கசிவின்
அடையாளமாகிப்போன புகைப்படம்.
2013-க்கான சிறந்த புகைப்படத்திற்கான
சோனி விருது பெற்ற புகைப்படம்.
2015-க்கான சிறந்த புகைப்படத்திற்கான
சோனி விருது பெற்ற ஜான் மூரின் புகைப்படம்.


உலக புகைப்பட நாள் (World photograph day)
உலக புகைப்பட நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில் இந்நாள் சிறப்பு பெற்றது.
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் அழிந்து விட்டது. அதற்கு பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுவேரே பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப் படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. டேங்க் மேன் (Tank Man) என்பவர் 1989 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் நாள், சீனாவின் தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது போராட்டக் காரர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த பீரங்கிகளை வழிமறித்தார். இவர் பீரங்கிகளை மறிக்கும் காட்சி புகைப்படமாக மறுநாள் பத்திரிகை களில் வெளியானதால் இவர் உலகப் புகழ் அடைந்தார். அவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் என்ன ஆனார்? என்பது இன்றளவும் தெரியவில்லை. இவர் பீரங்கிகளை மறிக்கும் புகைப்படம் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப் படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. வியட்நாம் போர் (Vietnam War), 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை நடை பெற்றது. இப்போரானது வட வியட் நாமுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் தென் வியட்நாமுகும் இடையில் நடைபெற்றது. வட வியட்நாம் வெற்றியுடன் இப்போர் முடிந்து வியட்நாம் ஒன்றுபட்டது. மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப் போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக் காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். லூயி தாகர் என்பவர் பிரான்சைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் டாகுவேரியோ வகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கியவர். லூயி தாகர் பிரான்சின், வல்டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சிக்கான அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது. உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சி யில் ஈடுபட்டார். ஆனால் 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா, நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தயாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணி னார்.டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோ வகை எனப் பெயரிடப்பட்ட திருத்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியது. டாகுவேரேவுடன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை ராயல்டியாக பெற்று வந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக