இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கே. பி. ஜானகி அம்மாள் பிறந்த தினம் டிசம்பர் 09.
கே. பி. ஜானகி அம்மாள் ( K. P. Janaki Ammal ) இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை , மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
1917 ஆம் ஆண்டு பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார். [3]
ப.ஜீவானந்தம் மற்றும் பி.ராமமூர்த்தி ஆகியோரை வத்தலக்குண்டுவில் சந்தித்தார். கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
ஜானகி அம்மாள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாட்டின் முதல் தலைவர் ஆவார்.
இறப்பு
1992 மார்ச் 1 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக