பக்கங்கள்

திங்கள், 25 ஜூன், 2018

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26


சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.


இன்று - ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் - சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்

1987 ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருளானது பயன்படுத்துபவரை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் இது பாதிக்கிறது. இதுதான் அனைத்து நோய்களுக்கும் முன்னோடியாக இருக்கின்றது. சிலர் இதற்கு அடிமையாக மாறிவிடுகின்றனர்.

போதைப்பொருளைப் போலவே, அதை கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவே ஜூன் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை என்றாலே, பெரும்பாலானோர் மது மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த அரக்கன்களாக போதை மருந்துகள் உள்ளன. கஞ்சா, அபின், புகையிலை, மது, கொகைன், பிரவுன் சுகர், ஹெரோயின், , ஊக்க மருந்து, ஒயிட்னர் முதலிய போதை வஸ்த்துப்பாவனை இளைஞர்களிடம் வேகமாக பரவும் பழக்கங்களாக மாறி வருகின்றன. உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்பத்தையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்து செல்லும் சமுதாய அரக்கன்கனாக இந்தப் போதைப் பொருட்கள் மாறியுள்ளன.

அறியாமை, விரக்தி, உளவியல் குறைபாடுகள், பொழுதுபோக்கு, தற்காலிக உற்சாக தேவைப்பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பாவனை அறிமுகமாகின்றது. இதுவே பின்னர் போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விiயாட்டு வீரர்கள், இரசிகர்கள் என்று அனைவராலுமே போதைப் பொருள் பாவிக்கப்படுகின்றது. அவரவர் வசதிக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு மாறுகின்றதே தவிர குறைந்தபாடில்லை.

ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு தனி நபரை திட்மிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஓர் ஆயுதம் என்கின்ற குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன.

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

ஆனாலும் இதன் பயன்பாடு, அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறன. நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது.

ஆகவே, போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். விற்பனையை தடை செய்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.

ஓவ்வொரு மனிதனது உள்ளத்திலும் நற்சிந்தனைகளை ஏற்படுத்துவற்காக உண்மையான ஆத்மீக சிந்தனைகளை மனித மனங்களில் பதிய வைத்து சீர் திருத்தங்களைச் செய்வதே ஆரோக்கியமானதும் நிரந்தரமானதுமான தீர்வாக அமையும். ஆ-ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக