பக்கங்கள்

சனி, 30 ஜூன், 2018

உலக விண்கற்கள் தினம் - ஜூன்-30.



உலக விண்கற்கள் தினம் - ஜூன்-30.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்- 30 ஆம் தேதி சர்வதேச விண்கற்கள் காணும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுவே, தேசிய விண்கல் தினம் (National Meteor Day) என்றும் அழைக்கப்படுகிறது.

வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் பார்க்கலாம். 

விண்கற்கள் அபாயம்:-

1908 ஆம் ஆண்டு, ஜூன்-30 அன்று சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 2000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. எனவே தான் ஜூன் 30 உலக விண்கற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இரவில் சில சமயம் வானில் வேகமாக விரைந்து  செல்லும் பளிச் சென்ற வெளிச்சக் கீற்றுகளைப் பார்த்திருக்கிறோம்,அவைதான்   “எரிநட்சத்திரம்” என்று அழைக்கும் விண்கல் (meteor ) ஆகும். அவற்றைப்  பார்த்தால் நமக்கு ஞாபகமறதி ஏற்படும் என்றெல்லாம் மிகப்பெரிய மூடநம்பிக்கையை வேறு மக்களிடையே அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறோம். இது உண்மையல்ல.

இவைகள் எல்லாம், நமது சூரிய குடும்பத்தில் கோள்கள் உருவாகும்போது விடுபட்டுப்போனவை. இவைகளின்  வேகம் மணிக்கு
சுமாராக நொடிக்கு 11 கி.மீ.லிருந்து 70 கி.மீ வரை கூட இருக்கும்.

விண்கற்கள்:-

விண்கல் என்பது சின்ன பாறைபோன்ற உலோக பொருளாகும்.
இது வான்வெளியில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவை அஸ்டிராயிடுகளைவிட மிகச் சிறியவையே. இதன் அளவு என்பது ஒரு நெல்   அளவிலிருந்து ஒரு மீட்டர் சைசில் உள்ள கல் போலவும் இருக்கும். இவைகளின் அளவை வைத்தே, இவற்றை மைக்ரோ விண்கல், வான் துகள்/வான் தூசு  என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இவை எல்லாம், நம்ம வால் நட்சத்திரம் என்னும் வால் மீன்கள்(comets)./ அஸ்டிராய்டுகள் விட்டுவிட்டுப் போன அல்லது உதிர்த்துவிட்டுப்போன துகள்கள்.

சில சமயம், சந்திரன் மற்றும் செவ்வாய் மோதலின் போது உதிர்ந்த துகள்களாகவும் கூட இருக்கலாம்.

விண்கற்கள் பொழிவு
ஒரு விண்கல் தனது சுற்றுப்பாதையிலிருந்து நழுவி, புவியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிட்டால், அதன் தன்மையே/ வேகமே  தனிதான். அது பூமியின் வளிமண்டலம் ஈர்ப்புக்குள் வந்தாச்சு என்றால்   அதன் நகர்வு வேகம் நொடிக்கு 20 கி.மீ லிருந்து அதிகரிக்கும். சுமாராக மணிக்கு 72,000 கி.மீ வேகம் வரை பறந்து போகும். இந்த வேகத்தில் இது வளிமண்டலக் காற்றுடன் உரசுவதால், ஏரோ டைனமிக் வெப்பம் ஏற்பட்டு எரிந்து போகும் வாய்ப்பு அதிகம். அத்துடன் இது ஒளியையும் கக்கிக்கொண்டே எரிந்து கரைந்து காற்றில் கலந்துவிடும்.

அப்படியே போகிற போக்கில் அந்த ஒளி ஒரு கீற்றாகத்  தெரியும். விண்கற்களின் இந்த தன்மைக்குத்தான் எரியும் விண்மீன் என்றும் எரிநட்சத்திரம் என்று  அழைக்கின்றனர். 

அப்படிப்பட்ட ஒளித்துகள்கள் சில நொடியில்,/நிமிட நேரம்  தொடர்ந்து ஒரே இடத்திலிருந்து கொட்டுவது போல தெரிந்தால் அந்த  ஒளி , அதுவும் வண்ண வண்ண மயமான ஒளித்துகள்கள் கொட்டுவது போலவே  தெரியும் . இதனை விண்கற்கள் பொழிவு என்றே அழைக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், பூமியின் வளிமண்டலத்துக்குள் கோடிக்கணக்கான விண்கற்கள் பயணித்து  கொண்டே இருக்கின்றன.

விண்கற்கள் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது,
அது காற்றில் வேகமாக உரசி எரிந்து விடுகிறது. அப்போது அது வந்த வழியை வெளிச்சமாக விட்டுச் செல்கிறது.

ஒரே பகுதிக்குள் ஏராளமான விண்கற்கள் எரிந்து தொடர்ந்து அப்பகுதியை வெளிச்ச புள்ளிகளை விதைத்து வைப்பதை காட்சியளிப்பதை
 விண்கற்கள் பொழிவு என அழைக்கிறோம்.

இப்படி எரிந்து விழும் பொருளை , எரி நட்சத்திரம் என்ற விண்கல் வீழ்ச்சியை மனித இனம்  வானைப்   பார்க்கத் துவங்கியதிலிருந்தே  பார்த்திருக்கிறது. ஆனாலும்  கூட, அவற்றைப் பற்றிய பதிவு என்பது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்திருக்கிறது.  கவிஞர்.சாமுவேல் டெய்லர் கொலெரிட்ஜ்.. இவர் தனது பிரபலமான வரிகளில்  அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

அவர் லியோனிட் விண்கற்கள் பொழிவைப் பார்த்துவிட்டு 1797ல் செய்த பதிவுதான் இது.

விண்கற்கள் பொழிவு:-

இரவின் வானில் நிகழும் ஓர் அற்புத வானியல் நிகழ்வு. 

விண்கற்கள் பொழிவின் வண்ணங்களும் அதன் அழகும் நம்மை அதனை நோக்கி ஈர்க்கும். அது வானின் ஒரு மைய புள்ளியில் துவங்கி, அதிலிருந்து பலமுனைகளுக்கும் தெறித்து சிதறி ஓடும். இவை, வானில் வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற பொருட்கள் அல்லது அஸ்டிராயிடுகள் விட்டுச் சென்ற 5x3 001பொருட்களில் வான் துகள்கள்.

இவை சூரிய மண்டல சுற்று  வேகத்தால் அல்லது எப்படியோ தடம்  மாறி, புவியில் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டால், அவை பூமியின் ஈர்ப்பு விசையால், வேகமாக காற்றுடன் உரசி கீழே இறங்கும். அப்போது உரசலில் ஏற்படும் வெப்பத்தால் பல கோடிக்கணக்கானவை பூமியை வந்தடையுமுன் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

சுமாராக ஒவ்வொரு ஆண்டும், இந்த பூமியில் 15,000 டன்  விண்கற்கள்/மைக்ரோ விண்கற்கள் , வான் தூசுகள், பூமி மேலே பலப்பல வடிவங்களில் கொட்டிக்கொண்டே தான் இருக்கின்றன..
 
நிறம்:-

ஆரஞ்சு –மஞ்சள் நிறம், விண்கல்லில் உள்ள சோடியம்தான் காரணி.

முழு மஞ்சள் நிற விண்கல் பொழிவு அதிலுள்ள இரும்பால் ஏற்படும்.

விண்கல் பொழிவின் நிறம் நீலப்பச்சை எனில் அதில் மக்னீஷியம்/தாமிரம் ,இருப்பதால் உண்டாகிறது.

வயலட் நிறம் கால்சியம் தனிமத்தால் ஏற்படுகிறது. 

சிவப்பு நிறம் வளிமண்டலத்தின் இரும்பு/ நைட்டிரஜன் மற்றும் ஆக்சிஜனால் உருவாகிறது.

விண்கற்கள் விண்ணிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் வீழுமுன் அதற்கு விண்வீழ் (meteoroid ) என்று பெயர்.

எரிந்து விழும் விண்கல் எரிநட்சத்திரம் என்று அழைக்கபப்டுகிறது.

இது புவியின் வளிமண்டலத்தில் எரிந்து இல்லாமலே  போய்விடுகிறது.

ஒரு சில விண்கற்கள் எரிதலையும் தாண்டி, அரிதாக, சிலசமயம் பூமியை வந்து சேருவதும் உண்டு.
அது ஒரு சில மி.மீ லிருந்து பல மீட்டர்கள் பெரியதாகவும் இருப்பதுண்டு. பூமித்தரையை எட்டிப் பிடித்த விண்கல்லுக்கு விண்கற்கள் என்றே பெயர். குட்டியூண்டாக உள்ள சில மி.மீ சைஸ்
விண்கல்லுக்கு வான் தூசு என்று அழைக்கின்றனர்.

தரையில் வீழ்ந்த  விண்கற்கள் வகை:-

தரையில் வீழ்ந்த  விண்கற்களை 3 வகை, அவை இரும்பு விண்கற்கள்,
கல் விண்கற்கள் மற்றும் கல்லும் இரும்பும் இணைந்த விண்கற்கள் . பெரும்பாலும் விண்கற்கள் இரும்பு வகையைச் சேர்ந்தவையே. இதில் இரும்பும் நிக்கலும் இருக்கும்.
இவை : 90-95%. கல்லாலான விண்கற்கள் காந்த  தன்மை  உள்ளவையாகவும் கோள்களின் பாறைத்  தன்மையும் கொண்டிருக்கும்.. இவற்றில் சிலவற்றில் வண்ண வண்ண தனிமங்கள் இருக்கும்.இவை நம் சூரியகுடும்பம் உருவாவதற்கு முன் வந்தவை ஆகும்.  இவற்றிற்கு, காண்டிரைட்ஸ் ( “chondrites) என்று பெயர். இவைதான் மிகப் பழமையான  விண்கற்களாகும்.கல்லும் இரும்பும் உள்ள விண்கற்கள் Pallasites எனப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக