பக்கங்கள்

புதன், 3 அக்டோபர், 2018

வன உயிரின வாரம் OCT அக்டோபர் 02- அக்டோபர் 08



வன உயிரின வாரம் OCT அக்டோபர் 02- அக்டோபர் 08
------------------
வன விலங்குகள் தான் மனிதர்களை பாதுகாத்து, மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. ஆகவே விலங்குகளை நாம் பாதுகாத்து அதன் அழிவுக்கு காரணமாக இல்லாமல் நாம் இருந்தாலே போதும்.
இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது. அத்தகைய விலங்குகளை பாதுகாப்பதையும், அவற்றிற்கு எதிரான செயல்களை தடுப்பதையும், அவற்றின் வாழ்விடங்களை காப்பதுடன் விலங்கினங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுவதையும் நோக்கமாக கொண்டே வன உயிரின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் உள்ள காடுகளையும், கடல்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருபவை பல்லாயிரக்கணக்கான விலங்கினங்கள். மனிதர்களின் பேராசையாலும், பெருகி வரும் மக்கள் தொகை, அறிவியல் வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளாலும் உலகம் முழுவதும் வாழும் விலங்கினங்கள் அருகி வருகின்றன.
நம் நாட்டின் மொத்த காடுகளின் பரப்பளவு 6 லட்சம் ச.கி.மீட்டர். இதில் சுமார் 89,450க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உலகில் காணப்படும் விலங்கினங்களில் 7.31% ஆகும். இவற்றில் 372 வகையான பாலூட்டி இனங்களும், 1330 வகையான பறவை இனங்களும், 399 வகையான ஊர்வன இனங்களும், 60 ஆயிரம் பூச்சி இனங்களும், 181 வகையான நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும், 1693 மீன் இனங்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் 8% வன உயிரினங்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்து வருவனவாகும்.
இந்த வருட வன உயிரின வாரத்தின் கருப்பொருள் என்னவென்றால் "வன உயினங்களின் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு"
இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் காடு வளம் இல்லாத நிலையில்
இந்த வனவிலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
இத்தனை இருந்தும் காலநிலை மாற்றங்கள், வேட்டையாடப்படும் முறைகள், வறட்சி, பிளாஸ்டிக் பொருட்களால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல், பெருகிவரும் மக்கள் தொகை போன்றவற்றால் உலக விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே வன விலங்குகளை பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அதன் அழிவுக்கு துணை போகாமல் இருந்தால் போதும்.
நாம் வாழ... விலங்குகள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக