பக்கங்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.


ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 06.1945 .

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. லிட்டில்பாய்அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் 1941, டிச.7ல், அதிர்ச்சி தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப் போரில் இறங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. ஜப்பானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. 1945 ஆக., 6ம் தேதி, ஜப்பான் நேரப்படி காலை 8:16 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4:46) ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3,50,000. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மீண்டும் தாக்குதல்:

மூன்று நாட்கள் கழித்து ஆக. 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது 'பேட்மேன்' என்ற 2வது அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை, 2.30 லட்சமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, 6 நாட்கள் கழித்து 1945 ஆக.15ல் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சிஅடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

90 : ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்படுவதற்கு முன், நகரில் 90 ஆயிரம் கட்டடங்கள் இருந்தன. தாக்குதலுக்குப்பின் 28 ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தப்பின. அதே போல 200 டாக்டர்கள் இருந்தனர். 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1780 செவிலியர்கள் இருந்தனர். தாக்குதலுக்குப்பின் 150 பேர் மட்டுமே பிழைத்தனர்.
நன்றி தினமலர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக