பல விருதுகளைப் பெற்ற... இந்தி உலகின் படைப்பாளி பிறந்த தினம் !
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

✍ இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியான பவானி பிரசாத் மிஸ்ரா 1913ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள டிகரியா என்ற கிராமத்தில் பிறந்தார்.
✍ இவர் பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கி விட்டார். பிரபல கவிஞர்களின் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். இவர் காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார்.
✍ இவரது நூல்கள் மொத்தம் 22 வெளிவந்துள்ளன. சம்பூர்ண காந்தி, வாங்மய, கல்பனா உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார்.
✍ இவரது புனீ ஹுயி ரஸ்ஸி படைப்புக்காக 1972ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்மஸ்ரீ, உத்தரப் பிரதேச இந்தி அமைப்பின் இலக்கிய விருது, மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
✍ இவர் இலக்கிய வட்டாரத்தில் பவானி பாய் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மிக எளிமையான, நேரில் நின்று பேசுவதுபோலவே காவிய நடையைப் படைக்கும் ஆற்றல் கொண்ட பவானி பிரசாத் மிஸ்ரா 1985ஆம் ஆண்டு மறைந்தார்.
சாமுவேல் வால்டன்

🏢 உலகப் புகழ்பெற்ற வால்மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் 1918ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
🏢 இவர் ஓட்டப்பந்தய வீரராகவும் பிரகாசித்தார். 1942ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். பின்னர் ஒரு பிரபல விற்பனை நிலையத்தின் விநியோக உரிமையை பெற்றார்.
🏢 இதுபோல பல உத்திகளை செயல்படுத்தி வெற்றி கண்டார். செல்ஃப் சர்வீஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் கிளைகள் திறந்தார். அமெரிக்காவின் நம்பர் ஒன் அங்காடியாக அது வளர்ந்தது.
🏢 1998ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை 20-ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. சிறந்த தொழிலதிபரான சாம் வால்டன் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நார்வே நாட்டின் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக