பக்கங்கள்

திங்கள், 30 மார்ச், 2020

உலக இட்லி தினம் மார்ச்-30.


 உலக இட்லி தினம் மார்ச்-30.
 உருவான சுவாரசிய வரலாறு!

#உலக #இட்லி #தினம் #உருவான #சுவாரசிய #வரலாறு!

உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது. அதன்படி கடந்த, 2015ம் ஆண்டு முதல் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.

கோயமுத்தூரை சேர்ந்தவர் இனியன், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இவர், ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இத்தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.


அப்போதுதான், தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். அப்படித்தான், மார்ச்-30 தேதி என்ற தினம் இட்லி தினமாக அறிவிக்கப்பட்டது.

#இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. அதோடு, சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். இதுபோக 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.


ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது. இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும்.

ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி சாம்பார் இட்லி, ஃப்ரைடு இட்லி, மசாலா இட்லி, சில்லி இட்லி, கைமா இட்லி... என இட்லி வகைகள் ஏராளம்.


இட்லி நல்லது... ஏன், எதற்கு, எப்படி?

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. `ரெண்டு இட்லி’ என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது. நாற்பது வயதைத் தாண்டியவர்கள், தங்களின் இளம் பிராயத்தில் அம்மாவின் கையால் பதினைந்து, இருபது இட்லிகளை அள்ளிப் போட்டுக்கொண்டதாகச் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போகும் இன்றைய தலைமுறையினரும் உண்டு. பந்தயமெல்லாம் வைத்து, கபளீகரம் செய்த இட்லிதான்... இன்றைக்கு நான்கு அல்லது ஐந்துக்கு மேல் உள்ளே இறங்க மறுக்கிறது. என்ன காரணம்?

ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள்... போன்ற முக்கிய தினங்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது. போதாக் குறைக்கு இன்ஸ்டன்ட் மாவுக் கடைகள்! அது, இரவோ, பகலோ... அரை கிலோ மாவு வாங்கிக்கொள்ளலாம். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்கிற லெவலுக்கு இறங்கிவந்துவிட்டது இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் நம் ஆட்களுக்குக் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.


குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள்... என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான். என்னதான் தென்னிந்தியாவில் கர்நாடகா மாநில மக்களும், தமிழ்ச்சமூகமும் `இட்லியைக் கண்டுபிடித்தது நாங்கள்தான்’ என்று கட்டைவிரலை உயர்த்தட்டும்... வரலாற்றில் சில எதிர்க் கருத்துகளும் உள்ளன. இந்தோனேஷியாதான் இதன் தாயகம் என்று தன் `ஹிஸ்டரிக்கல் டிக்‌ஷனரி ஆஃப் இந்தியன் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார், வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சய்யா (K.T.Achaya).  அதோடு, சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதையும் சொல்கிறார். ஆக, இது இந்தியாவுக்கு கி.பி.800-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வந்திருக்கலாம் என்கிறது ஒரு சாரார் வரலாறு.

இந்தோனேஷியாவில் இதை `கெட்லி” (Kedli) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் மருவி, `இட்லி’ ஆனது என்கிறார்கள். `அதெல்லாம் இல்லை கன்னடத்தில் இதற்கு ஒரு வார்த்தை உண்டு... இட்டாலிகே’ (Iddalige). கி.பி.920-ம் ஆண்டிலேயே சிவகோட்டிஆச்சார்யா என்பவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்’ என்றும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டுகிறார்கள். கி.பி.1130-ம் ஆண்டில் மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” (Manasollaasa) என்ற நூலில், `இட்டாரிகா’ (Iddariga) என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ (Idada) எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு. சமீபத்திய வரலாற்று ஆய்வுகளோ, கி.பி.1250-க்குப் பிறகுதான் இந்தியாவில் இதை தயாரித்திருக்கிறார்கள்... அதுவும் இந்தியாவுக்கு வந்த அரேபிய வணிகர்களால்தான் சாத்தியமானது என்கின்றன. இதன் ரிஷிமூலத்தைத் தேடிப் போவது உண்மையின் கடினமான வேலையே.

இது, ரவை, கோதுமை, ஓட்ஸ், சிறுதானியங்கள்... என விதவிதமான தானியங்களில் செய்யும் அளவுக்கு இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. ஒருபடி மேலே போய், `இட்லி திருவிழா’ நடத்துகிறவர்களும், அதற்கு அலைமோதும் கூட்டமும் உண்டு.` சாம்பார் இட்லி’, `ஃப்ரைடு இட்லி’, `மசாலா இட்லி’, `சில்லி இட்லி’, `கைமா இட்லி’... என விதவிதமான வெரைட்டிகள். சினிமாவில் பிரபலமாக்கப்பட்டு, மீந்துபோனது, `இட்லி உப்புமா’வாக பல வீடுகளில் வலம் வந்த கதையெல்லாம் இங்கு உண்டு. விதவிதமாக, வகை வகையாக செய்து பார்த்து, சுவைத்து மகிழ மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மகத்தான படைப்பு இது என்பதில் சந்தேகம் இல்லை.

`எல்லாம் சரி... இது ஆரோக்கியமானதுதானா?’ என்கிற கேள்வியை டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம். “உலக அளவில் இட்லி ஒரு சிறந்த, சுவை மிகுந்த காலை உணவு. ஏனெனில், ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது என்பதே இதற்குக் காரணம். ‘ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் சுவையான கேக்’ என்று இதைச் சொல்லலாம். இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும். தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னி, புளித்துவையல் மற்றும் சாம்பாருடன் சாப்பிட ஏற்ற அருமையான உணவு இது.

சரி... ஒரு இட்லியில் சராசரியாக என்னென்ன பொருள்கள் இருக்கின்றன... பார்க்கலாமா? 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து இல்லை.

இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி, ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை. குறிப்பாக, தேங்காய் சட்னி. ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன. தேங்காயில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சாப்பிடும்போது அதிகமான அளவில் கலோரிகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது. இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய், நெய் அதிகமாக ஊற்றினால், இதுவும் அதிக கலோரி உடலில் சேரக் காரணமாகிவிடும்.

இதனோடு மெதுவடை சாப்பிடுவது பொருத்தமானது அல்ல. வடை, எண்ணெயில் பொரிக்கப்படுவது. அதிக கலோரிகளை உடலில் சேர்க்கக்கூடியது. வடையை மாலை நேரத்தில் லேசாக பசி வயிற்றைக் கிள்ளும்போது சாப்பிடலாம், தவறில்லை. காலையில் இட்லியுடன் வேண்டாம்.

பெஸ்ட் சைடுடிஷ்...

இட்லிக்கு பெஸ்ட் சைடுடிஷ் சாம்பார்தான். சாம்பாரில் உள்ள பருப்பு உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. அதனுடன் தேங்காய், புதினா, தக்காளி அல்லது வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிட்டால் புரதம், கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்தும் கிடைக்கும்’’ என்கிறார் சௌமியா.

ஆக, இட்லி நல்லது. சாம்பார், தக்காளி, வெங்காய சட்னிகளுடன் ஒரு வெட்டு வெட்டலாமா?

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக