அரேபியா நாட்டுப் பழமொழிகள்...
*அதிட்டம் உள்ளவனை நைல் நதியில் தள்ளினாலும்
அவன் தன்னடைய வாயில் ஒரு மீனோடு வெளி வருவான்.
*எனக்கு செருப்புக்கள் இல்லை என்று முணுமுணுத்தேன்
பாதங்களே இல்லாத நம்பிக்கையுள்ள மனிதனைச் சந்திக்கும்வரை.
*தன் மனைவியை மதிக்காதவன்
தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
*தகுதிக்கு மீறி செலவு செய்பவன்
தன் உயிரை முடித்துக்கொள்ள கயிறு திரிக்கிறான்.
*ஓநாய்க்கு கருணை காட்டுவோர்
மறைமுகமாக ஆட்டுக்குட்டிக்கு தீங்கு செய்கிறார்கள்.
*தாயின் செல்லக் குழந்தைகள்
இறுதியில் வெண்ணெய் வெட்டும் வீரராகவே இருப்பர்.
*அறிவைத் தேடும் ஒருவருக்கு
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுக்கின்றன.
*நண்பர்களைப் பற்றி நல்லது பேசு
விரோதிகளைப் பற்றி எதுவும் பேசாதே.
*குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,
கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.
நன்றி-அலைகள்,.
*எனக்கு செருப்புக்கள் இல்லை என்று முணுமுணுத்தேன்
பதிலளிநீக்குபாதங்களே இல்லாத நம்பிக்கையுள்ள மனிதனைச் சந்திக்கும்வரை.
Super Mahi