லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர் ( செப்டம்பர்28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
திருமணம் செய்யாமலே இருந்து விட்டவர். பாடகி ஆஷா போன்ஸ்லேயின் சகோதரி. முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்தி பாடலை பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக