மு. க. ஸ்டாலின்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009ல் பொறுப்பேற்றார்.[1]. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் மு.க. அழகிரியும் தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் [2] [3]எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[பள்ளிப்பருவம்
ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
அரசியல் வாழ்க்கை
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.
மாநிலச் செயலாளர்
இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [2]. 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.
சிறை செல்லல்
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்[
இளைஞரணி தலைமையகம்
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்[].
தேர்தலில் தோல்வி
ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்[2]. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.
மேயர்
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்].
மேம்பாலங்கள்
மேயராக இருந்து ஸ்டாலின் சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டினார். அவர் சாதனைகளில் சில:
பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன].
மேயராக இருந்தபொழுது கட்டப்பட்ட 9 பாலங்கள்[]
வ.எண் அமைந்துள்ள இடம்பாலம்
1பீட்டர்ஸ் சாலைகான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு
2பீட்டர்ஸ் சாலைவெஸ்ட்கார்ட் சந்திப்பு
3பாந்தியன் சாலைகாசா மேஜர் சந்திப்பு
4புரசைவாக்கம் செடுஞ்சாலைபெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பு
5டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைராயப்பேட்டை செடுஞ்சாலை
6டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைடி டி கே சாலை
7டி டி கே சாலை சந்திப்புசி பி ராமசாமி சாலை சந்திப்பு
8சர்தார் பட்டேல் சாலைலாட்டீஸ் பாலம் சாலை சந்திப்பு
9சர்தார் பட்டேல் சாலைகாந்தி மண்டபம் சாலை சந்திப்பு.
2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்தல்
மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை பற்றி நன்மதிப்பை உருவாக்கவும் முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்].
ஏழைக்குழந்தைகளின் வசதிக்காக, தனியார் பள்ளிகளில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தபட்டு இருந்த நிலை மாறி மழலையர் பள்ளிகளை மாநகராட்சிகளில் இளம்நிலை (எல்.கே.ஜி), மேல்நிலை (யூ.கே.ஜி), விளையாட்டுத்துறை என 30 வகுப்புகளுடன், 132 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டன].
மேயர் பதவி பறிப்பு
2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[2][6][7]. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்[].
அமைச்சர்
மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்[].
அரசியல் வளர்ச்சி
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் அதீத வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது அவருடைய ஆதரவாளர்களால் கருதப்பட்டது[2]. ஆனாலும் கால ஒட்டத்தில், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.
இருப்பினும் சொந்த சகோதரரான மு.க. அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம்[2]. நிலவியது. ஆனால் இதையும் கூட கட்சித் தலைமை படுசாதுர்யமாக சமாளித்த்து. இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட கட்சித்தலைமை பணித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக