வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உலக சாக்லெட் தினம் செப்டம்பர் 13.




உலக சாக்லெட் தினம்   செப்டம்பர்  13.
சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்னால அமெரிக்காவுல இருந்து ஐரோப்பாவுக்கு சாக்லெட் விதை அறிமுகமானது ஜூலை 7-ம் தேதிதான். அதான் செப்டம்பர்  13 -ம் தேதியை உலக சாக்லெட் தினமா கொண்டாடுறாங்க. சரி வாங்க நாம்ம சாக்லெட்டோட வரலாறப் பாக்கலாம்.

மாயர்கள் உலகைத் தாண்டி கோகோவின் மகிமையை வெளி உலகத்துக்குத் தெரிய வைத்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ். ஒரு பயணத்தின்போது, 1502ம் ஆண்டு அவர் ஒரு படகைப் பார்த்தார். படகு நிறைய கோகோ கொட்டைகள். ஸ்பெயின் நாட்டில் கோகோ கொட்டைகளே கிடையாது. கொலம்பஸும் அவருடைய சக மாலுமிகளும் முதன் முறையாக இவற்றைப் பார்த்தார்கள். வித்தியாசமான இக்கொட்டைகளைத் தங்கள் மன்னரிடம் கொடுக்க ஒரு பிடி எடுத்துக் கொண்டார்கள். மொழி தெரியாததால், மாய நாட்டுக்காரர்களிடம் பேசி கொக்கோ கொட்டைகளின் மகிமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கொலம்பஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு வந்தார். தன் மன்னருக்கு அவற்றைப் பரிசாகக் கொடுத்தார்.

மன்னருக்கு கோகோ சுவை பிடித்தது. ஆனால் கொலம்பஸ் புதிய கண்டமான அமெரிக்கா கண்டுபிடித்தது தலைப்புச் செய்தியாகிவிட்டதால் கோகோ மன்னரின் நினைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கொலம்பஸ் கோகோவை ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், கோகோ வரலாற்றில் சிறப்பு இடம் பெறுபவர் ஹெர்னாண்டோ கோர்ட்டெஸ் என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர். புதிய நாடு களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆசையில் பயணங்கள் மேற்கொள்ளும் துணிச்சல்காரர். கோர்ட்டெஸ் பயணம் செய்த கப்பல் மாயர் பகுதியில் கரை தட்டியது. கோகோவின் சுவை கண்ட கோர்ட்டெஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்கு எடுத்துப் போனார்.

மன்னர், பிரபுக்கள், பணக்காரர்கள் அதன் சுவையை விரும்பினார்கள். ஆனால், இப்போதும் கோகோ ஒரு பானமாகத்தான் இருந்தது. ஸ்பெயின் நாட்டு மக்கள் கோகோ பயிரிடத் தொடங்கினார்கள். கொட்டைகளைத் தூளாக்கி அந்தத் தூளால் பானம் தயாரித்தால் கூடுதல் சுவை வரும் என்று அறிந்தார்கள். இந்தத் தூளை, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். ஏற்றுமதி பெருகியது. ஆனால், தூள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பரம ரகசியமாக வைத்துக்கொண்டார்கள். அந்த நாடுகளும் கோகோ பயிரிட ஆரம்பித்துவிட்டால் ஸ்பெயினின் ஏற்றுமதி வியாபாரம் படுத்துவிடுமே?

ஆனால் இந்த விஷயங்களை எத்தனை நாள்கள் ரகசியமாகக் காப் பாற்ற முடி யும்? பதினாறாம் நூற்றாண் டின் தொடக் கத்தில் கோகோ ரகசியம் ஐரோ ப்பிய நாடு களுக்குக் கசிந்தது. குறிப்பாக பெல் ஜியம், இங்கி லாந்து, சுவிட்ஸ ர்லாந்து நாட்டுக்காரர்கள் கோகோவைப் பிடித்துக் கொண்ட £ர்கள். கசப்பைப் போக்க, அவர்கள் இந்தப் பானத்தில் சர்க்கரை சேர்த்தார்கள். இங்கிலாந்தில் கோகோ கிளப்புகள் தொடங்கப் பட்டன. இங்கே இனிப்பு கோகோ பானம் மட்டுமே கிடைக்கும். இவை மக்க ளிடையே மிகுந்த வரவேற்பு பெற்றன. கோகோ வின் சுவை மக்களுக்குப் பிடித்தது.

1674 ல் சாக்லெட் தூளை கேக்களில் சேர்க்கும் வழக்கம் வந்தது. குடிப்பதற்குப் பதில் சாப்பிட முதன் முதலாகக் கோகோ பயன்பட்டது இப்போதுதான். 1828 ல் கொன்ராட் வான் ஹூட்டன் கோகோவில் எண்ணெய் எடுக்க ஒரு இயந்திரம் உருவா க்கினார். கோகோவின் எண்ணெய் வெண் ணெய் என்று அழைக்கப் பட்டது. இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் ஓடின. ஜோஸஃப் ஃப்ரை என்ற ஆங்கிலேயர் சாக்லெட்டின் முதல் வடிவை உருவாக்கினார். கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணைய் ஆகிய மூன்றையும் சேர்த்தார். பசைத் தன்மை கொண்ட மாவு கிடைத்தது. இவற்றைப் பல வடிவங்கள் கொண்ட சாப்பிடும் சாக்லேட்டுகளாக மாற்றினார்.

1861- இல் ரிச்சர்ட் காட்பரி சாக்லெட் கடை தொடங்கினார். இவருடைய உற்பத்தி பெரிய அளவில் இருந்தது. சாப்பிடும் சாக்லெட் அதிக அளவு மக்களைச் சென்றடையத் தொடங்கியது. மில்க் சாக்லெட், ஃபை ஸ்டார், ஜெம்ஸ், எக்லயர்ஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாக்லெட் ரகங்கள் தயாரிக்கும், உலக நாடுகள் பலவற்றிலும் தன் கிளை களைப் பரப்பி யிருக்கும் காட்பரி கம்பெனி பிறந்த கதை இதுதான். இன்னும் பதினைந்து வருடங் களுக்கு சாக்லெட் என்பது கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணெய் ஆகிய மூன்றின் கலவைதான். மாற்றம்தானே முன்னேற்றம்?

1879 - இல் டானியல் பீட்டர் என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர் இந்த மூன்று பொருள்களோடு பால் கலந்தார். சுவை அமிர்தம்! அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த இனிப்பாக இருக்கிறது சாக்லெட்.




உடல்நலப் பயன்கள்:
• டார்க் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன.

• சாக்லெட் உடலில் கொழுப்பைக் குறைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பான எல்டிஎல்-ஐ குறைப்பதில் உதவுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைக்க நினைத்தால் சாக்லேட் சாப்பிட வேண்டும். மேலும், இது உடலில் 'நல்ல' கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது.

• சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் இதில் அதிகம் உள்ளது.

• ஒருவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அச்சுறுத்தும் விதமாக நாள்பட்ட சோர்வு உள்ளது. அதில் தலைவலி, உடல் வலி, இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகளும் இருக்கக்கூடும். ஆனால் தினமும் 50 கிராம் சாக்லெட் எடுத்துக் கொண்டால், நாள்பட்ட சோர்வு நீங்கிவிடும்.

• வாழ்க்கை முழுவதும் சாக்லெட் சாப்பிட்ட மக்கள், சாக்லெட் சாப்பிடாதவர்களை விட சுமார் ஒரு வருடம் அதிகமாக வாழ்கின்றனர். இந்த உண்மை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
• பக்கவாதத்தால் மூளை பாதிப்பதைத் தடுப்பதற்காக சாக்லெட் சாப்பிடுவது நல்லது.



பாதிப்புகள்:

• சாக்லெட்டில் கஃபைன் அளவு குறைவாக இருந்தாலும்,சாக்லெட்டை அதிகமாக உட்கொண்டால் குழந்தைகளின் தூக்கத்தில் தொந்தரவு ஏற்படும்.

• கஃபைனில் சிறுநீர் பெருக்கி குணம் அடங்கியுள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி சிறுநீர் வரலாம்.

• குழந்தைகளுக்கு அதிகமாக சாக்லெட் கொடுத்து பழக்குவது அவர்களை சாக்லெட்டிற்கு அடிமையாக்கிவிடும்.

• சாக்லெட்டை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் பருமன் ஏற்படும்.

நன்றி-ஜன்னல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக