கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பிறந்த நாள் ஜூலை 12 1972.
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பி. 12 சூலை 1972 ), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகத்து(ஆகஸ்ட்) u10, 2015 அன்று கூகுள் அறிவித்தது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர்,
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
பணி
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு
ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார் ..கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர்,
கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார்.
கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை சம்பளம் ரூ.1,285 கோடி
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். இவரது கடந்த ஆண்டு (2016) சம்பளம் ரூ.1,285 கோடி (20 கோடி டாலர்) என தெரியவந்திருக்கிறது. முந்தைய 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு சம்பளம் 6,52,500 டாலர்கள். 2016-ம் ஆண்டு சம்பளம் 6,50,000 டாலர்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒதுக்கப்பட்ட பங்குகள் இரு மடங்காக உயர்ந்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு 9.98 கோடி டாலர் அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. 2016-ம் ஆண்டு 19.87 கோடி டாலர் அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. பல வெற்றிகரமான திட்டங்களை அறிவித்ததால் ஊதிய நியமன குழு அதிக சம்பளம் வழங்கி இருப்பதாக சிஎன்என் தெரிவித்திருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் நிறுவனர் லாரி பேஜ், புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்தை கவனிக்க சென்றுவிட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டார்.
2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் இதர பிரிவு வருமானமும் (ஹார்ட்வேர் மற்றும் கிளவுட்) 310 கோடி டாலரை தொட்டிருக்கிறது. ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 60,000 கோடி டாலரை முதல் முறையாக தொட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக