உலக தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு தினம்
தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு நாள் ( International Day of Solidarity with Detained and Missing Staff Members ) என்பது ஐக்கிய நாடுகளினா ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 கடைப்பிடிக்கப்படும் நாளாகும்.
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அவரது உடல் 2009ஆம் ஆண்டில் லெபனானில் பேக்கா பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக