உலக பார்க்கின்சன் தினம் ஏப்ரல் 11.
ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிறந்தார்.
இவர் தான் பார்க்கின்சன் நோய் அதன் அறிகுறிகள் விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.
இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans) முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது "பார்க்கின்சன் நோய்" என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.
முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது 69வது வயதில் (1824) மறைந்தார்.
பல்துறை ஆளுமை பார்க்கின்சன்
பார்க்கின்சன் என்ற நோய் பற்றியும், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்தும் உலகிற்கு முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட அறுவை சிகிச்சை மருத்துவ மேதை ஜேம்ஸ் பார்க்கின்சன். இவர் 1755ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது தந்தை அறுவை சிகிச்சை நிபுணர்.
ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது ஆரம்பக் கல்வியை திறம்பட முடித்துவிட்டு, லண்டன் மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியிலும் படித்து மருத்துவர் பட்டம் பெற்றார்.
மருத்துவத்துறையில் தன்னை முழுமனதோடு ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். புவி அமைப்பியல், தொல்லுயிரியல் மட்டுமின்றி, அரசியலிலும் பார்க்கின்சனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார். ‘ஓல்ட் ஹப்பர்ட்’ என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1799-1807 ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் மருத்துவத்தின் பக்கம் திரும்பினார். கீல்வாதம், கிழிந்த குடல்வால் (Raptured Appendix) உள்ளிட்டவை குறித்து பல மருத்துவக் கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.
பொது சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துவதில் தனி அக்கறை செலுத்தினார். அரசியலைப் போலவே தீவிரத் தன்மையுடன் பல மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்புக்காகப் போராடினார்.
அந்தக் காலகட்டத்தில்தான், பக்கவாத நடுக்கம் வந்து அவதிப்படும் பலரைக் கண்ட ஜேம்ஸ் பார்க்கின்சன் மனம் வருந்தினார். இந்த நோய் எதனால் வருகிறது என ஆய்வு மேற்கொண்டார். இந்த பக்கவாத நடுக்கம் மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். இந்த நோய்க்கு முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்பட்டது.
மருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட களங்களான புவி அமைப்பியல், தொல்லுயிரியல் மீது இவரது கவனம் திரும்பியது. இந்தத் துறைகளில் அதிக புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ‘ஆர்கானிக் ரிமைன்ஸ் ஆஃப் எ ஃபார்மர் வேர்ல்டு’ என்ற நூலின் முதல் பகுதியை 1804ம் ஆண்டு வெளியிட்டார்.
1808ம் ஆண்டு மற்றும் 1811ம் ஆண்டு அடுத்தடுத்த பகுதிகள் வெளிவந்து உலகப் புகழ் பெற்றது இந்த நூல்.பலவேறு திறமைகளைக் கொண்ட இவர் 1824ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார். இவரது பிறந்த தினமான ஏப்ரல் 11, உலக பார்க்கின்சன் தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் பார்க்கின்சன் 10
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1755) பிறந்தவர். அறுவை சிகிச்சை நிபுணரான தந்தை, மருந்துகள் தயாரித்தும் விற்பனை செய்துவந்தார். பார்க்கின்சன் சிறு வயதிலேயே லத்தீன், கிரேக்கம், இயற்கை தத்துவம், சுருக்கெழுத்து கற்றார்.
லண்டன் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியிலும் பயின்றார். தந்தைபோல இவரும் அறுவை சிகிச்சை நிபுணரானார்.
மருத்துவத் தொழிலில் சிறப்பாகப் பணிபுரிந்த இவர், பன்முகத் திறனும் பரந்த கண்ணோட்டங்களும் கொண்டிருந்தார். புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மட்டுமின்றி அரசியலிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.
பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். ‘ஓல்ட் ஹப்பர்ட்’ என்ற புனைப்பெயரில் இதுபற்றி பல கட்டுரைகள் எழுதினார். சமூக சீர்திருத்தங்களும் அவற்றுக்கு உலகளாவிய அங்கீகாரமும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட.
1799-1807 காலகட்டத்தில் இவரது கவனம் கொந்தளிப்பான அரசியல் களத்தில் இருந்து மீண்டும் மருத்துவத்தின் பக்கம் திரும்பியது. கீல்வாதம், கிழிந்த குடல்வால் (Raptured Appendix) உள்ளிட்டவை குறித்து பல மருத்துவக் கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.
மக்களின் பொது சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்து வதில் முனைந்து செயல்பட்டார். அரசியல்போல, அதே தீவிரத்தன்மையுடன் பல மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்புக்காகப் போராடினார்.
பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதன்முதலாக முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்றுதான் பெயரிட்டார். பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.
மருத்துவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட களங்களான புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மீது இவரது கவனம் திரும்பியது. இதுபற்றி ஆராய்ந்து பல்வேறு தாவரங்கள், விலங்குகளின் மாதிரிகளை சேகரித்தார்.
புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் துறையில் அதிக புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ‘ஆர்கானிக் ரிமைன்ஸ் ஆஃப் எ ஃபார்மர் வேர்ல்டு’ என்ற நூலின் முதல் பகுதியை 1804-ல் வெளியிட்டார். 1808 மற்றும் 1811-ல் அடுத்தடுத்த பகுதிகள் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன.
ஆண்டுதோறும் இவரது பிறந்த தினமான ஏப்ரல் 11-ம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 69 வயதில் (1824) மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக