செவ்வாய், 19 ஜூன், 2018

உலக யோகா தினம் ஜூன் 21 (International Yoga Day )


உலக யோகா தினம் ஜூன் 21 (International Yoga Day ) 

உலக யோகா நாள் (International Yoga Day ) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த
யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு
கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.  அமெரிக்கா , கனடா , சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதல் சர்வதேச யோகா தினம்
முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.

உலக யோகா தினம்! அதன் சிறப்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்... #Yoga

5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா ஆண்டுதோறும் சூன் 21-ஆம் திகதி பன்னாட்டு யோகா தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
யோகா எனும் பழமையான கலைப்பயிற்சி, மனிதர்களின் வாழ்வில் மன அமைதியை ஏற்படுத்தி, உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்?
யோகா எனும் தியான பயிற்சியை தினமும் செய்து வருவதால், உடல் மற்றும் மனதளவில் ஒருவித புத்துணர்ச்சி தன்மையை அளிக்கிறது.
தினமும் யோகப் பயிற்சியை 25 நிமிடங்கள் தொடர்ந்து வந்தால், நம் உடலில் உள்ள ரத்தோட்டம் சீராகி, உடலை எப்போதும் இளமையுடன் வைக்க உதவுகிறது.
உடல் மற்றும் மனதை ஒருங்கிணைந்து செயல்படும் இந்த யோகா பயிற்சியில், சுவாசக் கோளாறுகள் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
யோகாவில் பலவகைகள் உண்டு. இந்த பயிற்சிகளை தினமும் முறையாக செய்து வந்தாலே, அதனுடைய சிறந்த அனுபவத்தை நாம் பெறலாம்.
தினசரி நாம் முறையாக கடைபிடிக்கும் யோகா பயிற்சியினால், நம்முடைய மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
யோகா பயிற்சிகள் மூலம் நம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு, உடல் பருமனால் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
இதயத்தின் ஆரோக்கியத்தை இந்த யோகா பயிற்சியின் மூலம் நாம் பாதுகாக்க முடியும். இது போன்று உடல் உறுப்பிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, யோகா பயிற்சி மிகவும் சிறந்தது.


என்றென்றும் இளமைக்கு வழிவகுக்கும் “யோகா”

#Yoga #Fitness
எந்த ஒரு கருவியோ, உணவோ, புறவிசையோ எதுவுமில்லாமல், நமது சுய மூலதனத்தில் ரத்தத்தை சுத்திகரித்து, நரம்புகளை முறுக்கேற்றி, தோல்களில் மினுமினுப்போடு கூடிய நிரந்தரமான ஆரோக்கியத்தையும் இளமையையும் தருவது யோகாசன பயிற்சி.

அதற்கு நாம் அளிக்கும் கைமாறு நேரம் ஒதுக்குதலும் பயிற்சி உழைப்பு மட்டுமே. ஆனாலும், அதை சரியாக புரிந்துகொள்ளாததும் சிலர் தவறாக பயிற்சியில் ஈடுபடுவதுமே அது எல்லோரிடமும் இன்னும் பரவாதிருக்க காரணம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தனிப்பட்ட முயற்சியால், யோகாசனத்தின் சிறப்புகளை புரிந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையும் ஜூலை 21 ம் திகதியை யோகா தினமாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.

அந்த முதல் யோகா தினத்தில் பிரதமர் மோடியும் மக்களோடு ஆசனம் செய்தார். தனிப்பட்டும் தொடர்கிறார்.

யோகாசன முன்னோடிகள்

யோகாசனம் தோன்றியது இந்தியாவில்தான், அதுபோல அது உலகம் முழுவதும் பின்பற்றபடுவதுக்கு இந்தியாவின் முயற்சியால் ஐ.நா அறிவித்தது பொருத்தமே.

யோகா இன்று நேற்று தோன்றியதல்ல, யோகிகள், முனிவர்கள், சித்தர்கள் காலத்தில் இருந்தே, அவர்களுடைய மெய்ஞானத்தால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பாட்டு, கடைப்பிடிக்கப்பட்டு, மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட்டதுதான்.


அணுகவேண்டிய முறை

ஒரு ஆரோக்கிய கேடான விஷயம், விளம்பர கவர்ச்சியால் எளிதாகவும் விரைவாகவும் மக்களை சென்றடைந்துவிடுகிறது.

ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானதும் ஆயுளை நீட்டிப்பதுமான இந்த யோகா பயிற்சி இவ்வளவு காலத்துக்கு அங்கீகரிக்கப்படாதிருந்தது ஆரோக்கியத்திற்கான துரோகமே.

யோகாவை பொறுத்தவரை சாதாரண உடற்பயிற்சியை போல மனம்போன போக்கில் செய்யக் கூடாது. அது சரியான பயனளிக்காதது மட்டுமல்ல, ஏதாவது தவறுகள் நேரலாம், ஆனாலும் பெரிய பதிப்புகள் வந்துவிடப்போவதில்லை.

எதுவாக இருந்தாலும் யோகாவை நன்கு அறிந்தவர்களை அணுகினால், அது சரிசெய்யக்கூடியதே.

யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் துணைகொண்டு செய்வதே சிறந்தது.

யோகாவும் வியாபாரம் ஆகிவிட்ட சூழலில், வசதியில்லாதவர்கள் புத்தகங்களை படித்துவிட்டு செய்கின்றனர். அது சரியான வழியல்லா, அப்படி செய்பவர்கள் அதை சரியாக செய்யாமல், அதனுடைய முழுப்பயனை அடையமுடியாததால் அதில் சிறப்பில்லை என்று விட்டுவிடக்கூடும்.

அது தாவறான முடிவுதான். மேலும் யோகாவை பற்றிவரும் புத்தகங்கள் எல்லாமே சரியென்று சொல்லமுடியாது.

யோகா குருக்களும் எல்லோருமே யோகாவை நன்கு அரிந்தவர்கள் என்றும் சொல்லமுடியாது. அதனால், யோகா கற்றுக்கொள்பவர்கள் தேர்ந்தெடுப்பதில் தெளிவான எச்சரிக்கை தேவை. செய்பவர்களுக்கும் சரி தவறுகளை ஆராயும் மனப்பக்குவம் இருப்பது நல்லது.


பயிற்சியை அறிவோம்

யோகாசனம் என்பது ஒரு நிலையில் மனதையும் சுவாசத்தையும் நிதானப்படுத்தி 30 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இருப்பதாகும். அதுவே ஒரு ஆசனத்திற்கு போதுமானதாகும்.

மூச்சை உள்ளிழுப்பது, வெளியிடுவது, முச்சை உள்ளிழுத்து வைத்துக்கொண்டு அடக்கியிருத்தல், மூச்சை முழுதாக வெளியேவிட்டுவிட்டு நுரையீரலில் காற்று இல்லாது நிலையில் இருத்தல், மூச்சை சாதாரணமாக வைத்திருத்தல் போன்ற, ஐந்து நிலைகள் உண்டு அது ஒவ்வொரு பயிற்சிக்கும் ஏற்ப மாறுபடும்.

ஒரு நாளைக்கு 7 (அ) 8 ஆசனங்கள் மட்டுமே செய்வது நலம். அதிக ஆர்வமிருந்தாலும் 10 ஆசனங்களுக்கு மேல் செய்ய தேவையில்லை.

அதிக ஆசனங்கள் களைப்பை ஏற்படுத்தும் நமது தினசரி அலுவல்களை கவனிக்கவும் விரைவான இந்த சமுதாயத்தில் இயங்கவும் எற்றதாக இருக்காது.

ஆசனங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன அவைகளில் மிகக் கடினமான ஆசனங்களும் உள்ளன. யோகாசனம் செய்பவர்கள் சிரமம் உள்ள ஆசனங்களே செய்யக்கூடது என்று யோகா ஆசிரியர்களே கூறுகின்றனர்.


ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: இன்று உலக யோகா தினம்

யோகாவா? சாமியார்களும் முனிவர்களும் தெருவில் வித்தை செய்வோரும் செய்யக்கூடியது. வேலை வெட்டி இல்லாதவர்களை போய் பாருங்க. எங்களை வந்து உயிரை வாங்காதீர்கள்!'-இவை எல்லாம், முன்புதமிழ்நாடு மக்களிடையே யோகாசனத்திற்கு இருந்த வரவேற்பு வாசகங்கள்.பள்ளிக் குழந்தைகளிடையே, பொது மக்களிடையே இந்த வித்தைகளை செய்துக் காட்டி இதற்கு பெயர்தான் யோகாசனம். இதை செய்வதால் உடம்பிற்கு நல்லது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். நோய் வராமல் பாதுகாக்கும். வந்த நோயை போக்கும் என்றெல்லாம் முன்பு விளக்கினோம்.
பாமர மக்களும் உணரும் வண்ணம் 1988 ஜூலையில் மூன்று நாட்கள் மதுரையில் முதல்யோகாசன மாநாடும், குழந்தைகளுக்கான யோகாசன போட்டியும் நடத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
ஐ.நா., அங்கீகாரம்
இப்போது தமிழகம்மட்டுமின்றி, உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்தசிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம், உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.சபையே ஜூன் 21ஐ உலக யோகா தினமாக கொண்டாடவும் கட்டாயம் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி யோகாசனமே என்பதை பறைசாற்றியுள்ளது.
நம்மை அறியாமலே பயன்
நம் முன்னோர்கள் முழுமையாக செயல்திறன் மிக்கவர்கள். இதை தான் யோ கர்மஸீ கெளலசம் (பகவத்கீதை) - செயலில் திறமையே யோகம் - என்கிறது. உடல் ஆரோக்கியமாக, வலிமையாக இருந்தால் மனதிடம் அதிகமாகும். மனதிடம்அதிகமானல் செயல்திறன் கூடும். உடல், மனம், எண்ணம் ஒருங் கிணைந்து செயல்பட்டால் நாம் ஒழுக்க சீலராக வாழ்வோம். நம் திறமை மேம்பட்டு நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். இதுவே உன்னதமான வாழ்வாக அமையும். நம்மை அறியாமலே இது அனைத்தையும் யோகாசனப் பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கும்.

வெற்றிக்கு வழி

யோகாசனத்தின் முழுபலன் நோயற்ற தன்மை, நோய்களை போக்கும் தன்மை, மனதை அடக்கி ஆளும் தன்மை ஒருங்கே அமையப்பெற்றது. இதை தான் ஒருங்கிணைத்தல் என்று சொல்வர். இதையே யோகா, யோக், யோகம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆசனம் என்பது இருக்கை நிலைகள்.
ஆசனத்தில் அமர்ந்து மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதால் யோகாசனம் என்று கூறுகிறோம். மிகவும் எளிதான பயிற்சிகள் உண்டு. யோகாசனம் செய்தால் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தன்மை கூடுகிறது. நரம்பு மண்டலம் புத்துணவு பெறுகிறது. தசைநார்கள் உறுதியடைந்து ரத்த நாளங்களின் செயல்திறனை கூட்டுகிறது. நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மனம், உடல் வலிமை பெறும். வேறென்ன வேண்டும் நமக்கு. உழைக்க உடம்பும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
பழக்கவழக்கங்களில் மாற்றம்
உணவுக் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லை. நீங்கள் யோகாசனம் செய்ய செய்ய தானாக, தனிச்சையாக இந்த உடம்பிற்கு எது நல்லதோ அதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளும். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவரா? கவலை வேண்டாம். நீங்கள் குடிக்காத போதுயோகாசனம் செய்யுங்கள்.
நாளடைவில் அப்பழக்கம் நம் உடம்பிற்கு தேவைதானா? என உணர்ந்து நீங்களே விட்டுவிடுவீர்கள். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை யோகாசனத்தின் மூலம் உணரலாம்.

வருத்தம் நன்மை தரும்

உடலையும், மனதையும் பல ஆண்டுகள் தியாகம் செய்து பொருள் ஈட்டுகிறோம். பின் ஈட்டிய பொருளை இந்த உடம்பிற்கு தியாகம் செய்தும், பிழைக்க வைக்க முடியாமல் மருத்துவர்கள் எங்களால் முடிந்ததை செய்துவிட்டோம், இனி இறைவன் கையில் தான் உள்ளது, என்பர். கடைசி நேரத்தில் இறைவனையும் நினைத்து நாம் வருத்தப்படும் நிலையில், அவரும் கைவிட்டுவிட்டார் என்று கூறுவோம். இதை தான் முன் யோசனையுடன் நம் முன்னோர்கள்தெய்வத்தால் ஆகாது எனினும்,முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்'என்றனர்.நீங்கள் மெய்யை (உடம்பை) வருத்தி எவ்வளவு நேரம் யோகா பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாளமில்லா சுரப்பிகளின் இயக்க தன்மை கூடும். நரம்புகள் புத்துணர்வு பெற்று உடம்மை நோயற்ற தன்மைக்கு இட்டுச்செல்லும் என்பதே இதன் பொருள்.

சமச்சீர் மனநிலை

உணர்ந்து செய்தால் உயர்வு பெறுவோம். விருப்பு வெறுப்பு இன்றி வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.யாரிடமும் எதையும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் ஏமாற்றம் வரும். ஏமாற்றம் வந்தால் கோபம் வரும். கோபம் வந்தால் ரத்தம் சூடேறி இருதயத் துடிப்பு குறைந்து, மன அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரலின் இயக்கத்தன்மை குறைந்து ஆக்சிஜன் உள்ளே செல்ல தடுமாறி கார்பன்டை ஆக்சைடு வெளியேற தடைபெற்று, தேவையற்ற அமிலங்கள் சுரந்து அல்சர் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் வழிவகுக்கும். இது வேண்டுமா நமக்கு?யோகாசனம் செய்வதால் மேற்கூறிய மனநிலை சமசீர் அடையும். இதன் மூலம் உடல் உபாதைகளில்இருந்து விடுதலை கிடைக்கும். இந்த உலகத்தில் எல் லோரிடமும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும். அந்த பலவீனத்தை நாம் அனுசரித்து, அனுமதித்து அல்லது அவர்களை விட்டு ஒதுக்கி வாழ்வதே மேலானது. எந்த துன்பமும் உங்களை வந்து சேராது. இயல்பான வாழ்வு முறையில் வாழ்வோம். வெளியில் உள்ள நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை வைத்து ஆய்வு செய்யும் முறையே விஞ்ஞானம் எனப்படுகிறது.

வியக்கும் உலகம்

நம் உடம்பில் உள் இருக்கும் நுண்கருவிகளாகிய நாளமில்லா சுரப்பிகள், பெருமூளை, சிறுமூளை நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள், கல்லீரல்,
மண்ணீரல், பித்தப்பை, கருப்பை, இரைப்பை, நுரையீரல்கள், இருதயம், ரத்த நாளங்கள் அனைத்தையும் உள்ளிட்ட இயற்கை கருவிகளை வைத்து ஆய்வு செய்வது மெய்ஞானம் முறை என்று நம் சித்தர்கள், வெளிஉலகத்தை விஞ்ஞானமாகவும், உள்முகஞானத்தை மெஞ்ஞானமாகவும் அறிந்து உணர்ந்து உள்ளனர் என்பதை உலகமே வியக்கிறது. யோகாசனத்திற்கு இப்போது உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் இந்திய மக்களுக்கே பெருமைக்குரியது. யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால் நம்முடைய கலாசாரபண்பாடுகளை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. தனி மனிதனுடைய மனப்பக்குவமே உலக அமைதிக்கு வழிவகுக்கும். ஜாதி, மதம், மொழி, இனங்கள் ரீதியாக பிரிந்த மனித இனத்தை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற முது மொழிக்கேற்ப உலகத்தை ஓர் இனமாக்கியது நம் யோகாசனமே.நேரமில்லை என்று சொல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்து உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உணவே மருந்தாகட்டும், உணர்வே தியானமாகட்டும்.ஆசனங்களை மிஞ்சிய வைத்தியமில்லை. ஆண்டவனை மிஞ்சிய வைத்தியருமில்லை.
யோகி. நீ.ராமலிங்கம் சுவாமி சிவானந்த
யோகாசன ஆய்வு மையம்  மதுரை. 93441 18764
நன்ற விக்கிப்பீடியா .ஒன் இந்தியா. தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக