உலக யோகா தினம் ஜுன் 21.
#InternationalYogaDay
சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஒவ்வொரு வருடமும் ஜுன்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இன்று 3வது சர்வதேச யோகா தினம் ஆகும்.
2014 டிசம்பர் 11ம் தேதி 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜுன் 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
5ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினத்தை ஆண்டின் ஒரு நாளாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் கேட்டுக்கொண்டார்.
2014 செப்டம்பர் 27ம் திகதி இதுதொடர்பாக இந்தியப்பிரதமர் வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன.
முதல்முறையாக சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது.
யோகா செய்வதனால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நீங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடினாலும் சரி உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் சரி, உள்நிலை மாற்றம்தான் உங்கள் நோக்கம் என்றாலும் சரி, இங்கு வழங்கப்படும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய் கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே யோகா செய்வதனால் ஒவ்வொருவரும் பின்வரும் நன்மைகளை அடையமுடியும்.
.ஞாபக சக்தி, மனம்குவிப்பு திறன், செயல்திறன், மேம்படுகிறது.
· உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன.
· முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது.
· முதுகு வலி, மன அழுத்தம், பயம் மற்றும் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை.
· நாட்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
· வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது.
· அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்கச் செய்கிறது.
யோகா பயிற்சியானது மக்கள் நல்வாழ்விற்கான முழுமையான அணுகு முறையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக