உலக கருணை தினம் நவம்பர் 13.
கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார். கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார். இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.
நவம்பர் 13-ம் தேதியன்று கருணை நாளாக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. லூயிஸ் பர்பிட் டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.
வயதான நபர் சாலையை கடக்க உதவி செய்தல், குழந்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் இரக்கம் முக்கிய பங்காகும்.
இந்த உலக கருணை தினம் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே செய்கிறது. நாம் அன்புடன் ஒருவரை அணுக அதே அன்பு நம்க்கும் திரும்பக் கிடைக்கிறது. இதனால் நம் மனம் மகிழ்ச்சியடைகிறது.
உலக மஹான்கள் பலரும் மதங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அன்பையும் கருணையும் முக்கியமாகக் கருதி போதித்தார்கள் .எனவே நாம் சில மனிதாபிமான வேலை செய்ய வேண்டும் என்றும் நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்கள் சிந்திக்க வேண்டும்.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக