புதன், 26 அக்டோபர், 2016

முன்னாள் இந்தியக்குடியரசுத் தலைவர் கே. ஆர்.நாராயணன் பிறந்த தினம் அக்டோபர் 27,

முன்னாள் இந்தியக்குடியரசுத் தலைவர் கே. ஆர்.நாராயணன் பிறந்த தினம் அக்டோபர் 27, 1920 .

கே. ஆர். நாராயணன் என்று
அறியப்படும் கொச்செரில்
ராமன் நாராயணன் (பிறப்பு -
கோட்டயத்தில் உள்ள உழவூர் ( கேரளா),
அக்டோபர் 27, 1920 ; இறப்பு - புது தில்லி,
நவம்பர் 9, 2005 ) பத்தாவது இந்தியக்
குடியரசுத் தலைவர் ஆவார். இவர்
இப்பொறுப்பை வகித்த ஒரே
மலையாளிஆவார் .

கே.ஆர்.நாராயணன்

இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11
பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல்
கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர்
அரசியல்வாதிகள்தான்.
காங்கிரஸ்காரர்களும் கூட.
இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல்
சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது
தொழிலாளர் போராட்டங்களில்
கலந்துகொண்டவர்கள், மக்கள்
மத்தியில் செல்வாக்கு
பெற்றவர்கள். பின்னால் வந்த
சிலர் இந்திரா காந்தி, ராஜீவ்
காந்தி ஆதரவாளர்களாக
இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர்
பதவியைப் பெற்றவர்கள்.
கே.ஆர்.நாராயணன்
இவர்களிடமிருந்து
வித்தியாசப்படுகிறார்.
தொழில்முறை அரசியல்வாதி
இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய
வெளியுறவுத் துறையில் வெகு
காலம் பணியாற்றிய சிவில்
சர்வண்ட். பல நாடுகளில் இந்தியத்
தூதராக இருந்தவர். வெளியுறவுச்
செயலராக இருந்தவர். இவரது
மனைவி பர்மிய நாட்டைச் சேர்ந்தவர்
என்றும், அப்பொழுதைய பிரதமர்
நேருவிடம் விசேஷ அனுமதி
பெற்றுத்தான் Ma Trint Trint
என்பவரை மணம் செய்து
கொண்டார் (அவர் பின்னர்
தன் பெயரை உஷா என்று
மாற்றிக்கொண்டார்)
என்றும் இன்றுதான் தெரிந்து
கொண்டேன்.
Indian Foreign Service-இலிருந்து ஓய்வு
பெற்றதும் ஜே.என்.யு
துணைவேந்தராக இருந்திருக்கிறார். பின்
சில காலம்
அமெரிக்காவுக்கான இந்தியத்
தூதராக. அதையடுத்து அரசியலுக்கு வந்து
மூன்று முறை கேரளாவின் ஒட்டப்பாளம்
என்ற இடத்திலிருந்து
நாடாளுமன்றத்துக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில்
அமைச்சராக இருந்திருக்கிறார்.
எனக்கு நினைவு தெரிந்து நான்
அவரைக் கவனிக்க ஆரம்பித்தது குடியரசு
துணைத்தலைவர் பதவிக்காக இவர்
தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான்.
அப்பொழுது துணைத்தலைவராக
இருப்பவர் அடுத்த பதவிக்காலத்தில்
தலைவர் பதவிக்குச் செல்வது
வாடிக்கையாக இருந்தது. எனவே
இவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று
தீர்மானம் செய்திருந்தோம். இவர்
குடியரசுத் தலைவர் பதவிக்காக
நிற்கும்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்
டி.என்.சேஷன். சேஷன் 1991-96 தேர்தல்
கமிஷனராக இருந்து மிகப் பெரிய
பெயர் பெற்றிருந்தார். எனவே
இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல்
சுவாரசியமாக இருந்தது.
ஆனால் கே.ஆர்.நாராயணனுக்கு
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அவருக்கு
இருந்தது. பிற அரசியல் கட்சிகளும்
ஆதரவளித்தன. சேஷனுக்கு சிவ சேனா
மட்டும்தான் வெளிப்படையான
ஆதரவு கொடுத்திருந்தது.
அதுவுமில்லாமல் சேஷன் கிட்டத்தட்ட
எல்லா அரசியல்வாதிகளின்
வெறுப்பையும் சம்பாதித்திருந்தார்.
நாராயணன் ஒரு non-controversial
ஆள் என்பதால் அவரது வெற்றி
உறுதியாகியது.
அந்தச் சமயத்தில் ஜனதா தள அரசு
ஆட்சியில் இருந்தது. தேவே கவுடா பிரதமர்
பதவியிலிருந்து விலகி ஐ.கே.குஜரால்
பிரதமராகியிருந்த நேரம் அது. அடுத்த
சில வருடங்களுக்கு மைனாரிடி
அரசுகள்தான் வாடிக்கை என்று
தெரிந்துபோனது. அன்றிலிருந்து
இன்றுவரை கூட்டணி அரசுகள்தான்
தொடர்ந்து வருகின்றன. இந்த
நிலையில் சேஷன் குடியரசுத் தலைவராக
இருந்தால் என்ன நடந்திருக்கும்?
சர்வாதிகாரம்தான். ஏதாவது
செய்து குட்டையைக் குழப்பியிருப்பார்.
நல்ல வேளை!
நாராயணன் அதே சமயம் ரப்பர்
ஸ்டாம்பாக இல்லை. இன்று
வெளியான எல்லா அஞ்சலிக்
கட்டுரைகளிலுமே நாராயணன்,
குஜ்ரால் அரசு உத்தர பிரதேச மாநில
அரசைக் கலைக்க விரும்பியதையும்,
வாஜ்பாய் அரசு பிஹார் மாநில
அரசைக் கலைக்க விரும்பியதையும்
தடுத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளன.
நாராயணன்தான் முதல் முதலில்
தேர்தலில் வாக்களித்த இந்தியக்
குடியரசுத் தலைவர். அதை அப்துல்
கலாமும் தொடர்கிறார். இனி
வரும் குடியரசுத் தலைவர்களும்
தொடர்வார்கள் என்றே
நம்புவோம்.
நாராயணன் குடியரசு
துணைத்தலைவராக இருந்தபோது
அயோத்தியில் பாபர் மசூதி
உடைக்கப்பட்டது. தொடர்ந்து
நாடெங்கும் கலவரங்கள். மும்பை
தொடர் குண்டுவெடிப்புகள்.
அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும்
தொடர்ந்து குஜராத்
கலவரங்களும் நிகழ்ந்தன.
அப்பொழுது நாராயணன்
பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதி
ராணுவத்தை உடனே வரவழைக்கச்
சொன்னதாகவும் அதற்கு
மத்திய அரசு உடனடியாக பதில்
எதுவும் சொல்லவில்லை என்றும்
பின்னர் நாராயணன்
தெரிவித்தார். அந்தக் கடிதத்தை
வெளியிட மத்திய அரசும்,
ராஷ்டிரபதி பவனும் மறுத்துள்ளன.
இப்பொழுது நாராயணன்
இறந்துவிட்டார். அந்தக் கடிதம் ஒரு
முக்கிய ஆவணமாகக் கருதப்படலாம்.
அதை இனியாவது வெளியிட
வாய்ப்புகள் உண்டா என்று
பார்க்கவேண்டும்.
நாராயணன் தலித் பின்னணியில்
வந்தவர், என்றாலும் அதனை
அழுத்திக்கூற விரும்பவில்லை. தலித்
என்பதால்தான் அவருக்கு
முக்கியமான பதவிகள் கிடைத்தன என்று
யாரும் சொல்லிவிடக் கூடாதே
என்பதால். அம்பேத்காருக்குப் பிறகு
அரசியல் அளவிலும் அறிவுத்தளத்திலும்
மிக அதிக சாதனைகளைச் செய்தவர்
இவர்.
இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப்
எகனாமிக்ஸில்
பொருளாதாரக் கல்வி
பயின்றவர். 1954இல் டில்லி ஸ்கூல்
ஆஃப் எகனாமிக்ஸில் பாடம்
நடத்தியிருக்கிறார். ஆனால்
பொருளாதாரம் பற்றி இவர்
எதுவும் எழுதியதாகத்
தெரியவில்லை.
இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு
சம்பவம் முக்கியமானது. தி ஹிந்து,
விக்கிபீடியா இரண்டிலிருந்து
ஒட்டவைத்துச் சொல்கிறேன். இவர்
திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ
ஆங்கிலத்தின் முதலாவதாக
வந்திருக்கிறார்.
தனது எம்.ஏ சான்றிதழைக் கூட
வாங்கப்போவதில்லை என்று கோபத்துடன்
நாராயணன் சென்னை வந்து தி
ஹிந்து நாளிதழில் இதழாளராகச்
சேர்ந்திருக்கிறார். அதன்பின் மும்பை டைம்ஸ்
ஆஃப் இந்தியாவில் சில காலம் வேலை
செய்து, பிறகு ஜே.ஆர்.டி டாடா
ஸ்காலர்ஷிப்பில் லண்டன்
சென்று பொருளாதாரம்
படித்திருக்கிறார்.
இவர் குடியரசுத் தலைவரான பிறகு
திருவாங்கூர் பல்கலைக்கழகம் இவரது
சான்றிதழை இவருக்குக்
கொடுக்க விரும்பியதும்,
அப்பொழுதுதான் அதைப்
பெற்றுக்கொண்டிருக்கிறார்.
இவர் 2001. மே மாதம் 13ம் தேதி
காலமானார்.
இந்திய ஆங்கில இலக்கியத்தை
மக்களிடம் கொண்டு சேர்த்த
ஆர்.கே.நாராயணின் பிறந்தநாள்
இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்
பத்து…
• ராசிபுரம் கிருஷ்ணசாமி
நாராயண், சென்னை
புரசைவாக்கத்தில் பிறந்தவர். அப்பா
பள்ளி ஆசிரியர். அவர் வேலை பார்த்து
வந்த பள்ளியிலே நாராயண்
படித்தார். இளம் பிராயத்தில்
பெரும்பாலும் பாட்டியிடமே
வளர்ந்தார்.
• கல்லூரி இளங்கலை நுழைவுத் தேர்வில்
இருமுறை தோல்வி. அதில் ஒரு முறை
ஆங்கிலத்தில் என்பதுதான் ஆச்சரியம்.
ஆசிரியர் வேலை சலித்துப்போக அப்போது
பேனாவுடன் அமர்ந்தவரிடம்
உருவானதுதான் ‘மால்குடி டேஸ்’.
• கோவையில் சகோதரியின் வீட்டிலிருந்தபோது
கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த
ராஜம் மீது காதல்
கொண்டார். முதலில் அவரது
தந்தையை நட்பு பிடித்தவர், பின்பு ராஜத்தை
திருமணம் செய்து
கொண்டார்.
• ‘தி இந்து’விலும் ஆனந்த விகடனில்
இருந்து வெளிவந்த ‘The merry’
இதழிலும் எழுதி வந்தார். அவரின்
முதல் கதை வேர்க்கடலை உண்ண
பாக்கெட் மணி இல்லாமல்
அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு
அவர் பெற்ற சன்மானம் 10
ரூபாய்.
• வருமானம் பெரிதாக
இல்லாமல் இருந்த சூழலில் அவரின்
‘ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ்’ நாவல்
ஆக்ஸ்போர்டில்
படித்துக்கொண்டிருந்த அவரின்
நண்பன் கிட்டு பூர்ணாவின் மூலம்
பிரபல எழுத்தாளர் கிரஹாம் க்ரீன்
வசம் போனது. அவர் அதை ஹாமிஷ்
ஹாமில்டன் பதிப்பகத்தில்
வெளியிட செய்தார்.
எளிமையான ஆங்கில நடை, சமூகத்தின்
மீதான இயல்பான பார்வை இவையே
அவரது எழுத்து நடை. “ஆர்.கே-வின்
மால்குடி நகரில் எந்த நிகழ்வும்
அர்த்தமில்லாமல் நிகழாது. அங்கே
எந்தத் துயரத்துக்கும் விடிவு இல்லாமல்
போகாது” என்பார் அமிதவ் கோஷ்.
• வீணை வாசிப்பில் ஆர்வம்
கொண்டவர். மகாபாரதம்,
ராமாயணம் ஆகியவற்றை
ஆங்கிலத்தில் சுருக்கமாக
எழுதியிருக்கிறார். அவரின்
அமெரிக்க அனுபவங்களை ‘My
Dateless Diary’ என்றும், நினைவலைகளை ‘My
Days’ என்றும் பதிவு செய்துள்ளார்.
• ‘மால்குடி டேஸ்’ கதைகள் ஷங்கர் நாக்
என்பவரால் தொலைக்காட்சி
தொடர் ஆக்கப்பட்டது. தேவ்
ஆனந்தின் நவ்கேதன் தயாரிப்பு
நிறுவனம் ‘தி கைட்’ நாவலை ஹிந்தியில்
படமாக எடுத்தது.
• அவரை ஆங்கில அறிவுலகுக்கு
அறிமுகப்படுத்திய கிரஹாம் க்ரீன்
இப்படி அவரின் எழுத்தைப்பற்றிச்
சொன்னார்: “அவரின்
படைப்புகள் அவரின் சொந்த
பிராந்திய அனுபவத்தில் இருந்து
வருபவை. அதனால் அவர் ஆங்கிலத்தில்
எழுதினாலும் அது
அமைதியான,தெளிவாக அமைந்தது.
அந்த ஆங்கில நடை தமிழோடு மிகவும்
நெருக்கமானது!”
• கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மண் இவரது
இளைய சகோதரர். இருவருக்கும் 18
வருடங்கள் இடைவெளி. ராஜ்ய
சபா எம்.பி.யாகவும் இருந்திருக்கும்
நாராயண் எல்லோரையும் சமமாக
நடத்தும் பண்பு கொண்டவர்.
அவரது எழுத்துப் பயணமும் அரை
நூற்றாண்டைக் கடந்தது!
நன்றி விவேகபாரதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக