வெள்ளி, 7 அக்டோபர், 2016

உலக அஞ்சல் தினம் ( World Post Day ) அக்டோபர் 9.

உலக அஞ்சல் தினம் ( World Post Day ) அக்டோபர் 9.

அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு
கொள்ளப்படுகிறது.  ஒக்டோபர் 9,
1874 இல் சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில்
சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட
தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக்
கொள்ளப்படுகிறது.
மொத்தம் 150 மேற்ப்பட்ட
நாடுகளில் இந்த தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு
ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக
அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம்
குறித்து முடிவெடுத்து
கடைபிடிக்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினப்
பிரகடனம்
உலகில் முதலிடம்
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை
கொண்ட நாடாக
இந்தியாவுள்ளது, இந்திய அஞ்சல் துறை
1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு
முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333
தபால் நிலையங்கள்
செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம்
கிராமங்களில் உள்ளன. இந்தியா
முழுவதும் 22 மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட
ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
****************************
உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி
சர்வதேச ரீதியில்
கொண்டாடப்படுகிறது. இது முதன்
முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின்
பெர்ன் நகரில் சர்வதேச தபால்
ஒன்றியம் (Universal Postal Union)
ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில்
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம்
9-ம் தேதி உலக தபால் தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
தபால்துறை என்பது மற்ற எல்லாத்
துறைகளையும் விட சிறப்பான
தொன்றாகும். இது மனித
வாழ்வின் அங்கமாக
தற்பொழுதும் விளங்கிக்
கொண்டிருக்கிறது. அறிவியல்
கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக்
கருவியாய் விளங்கியது நம் தபால் துறை
தான். ஆரம்ப காலத்தில் ஒருவர்
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
செய்திகளை அனுப்பப் பயன்பட்டது
கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள்
மட்டும் அல்ல. சில கடிதங்கள்
காவியமாகவும், வரலாறாகவும்
ஆகியுள்ளன!
உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்
போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு
விளைவின் ஞாபகார்த்தமாகவே
ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று
கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல்
பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை
அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு
தபால்பெட்டிகள்
பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக்
கொண்டு செல்பவர்களே
கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653
ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville)
மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister
Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின்
யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி
அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை
சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக்
கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில்
தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன்
காரணம் மக்களின் பார்வையை உடனடியாக
ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.
இன்றளவும் நம்
உலகம்
அறிவியல்
ரீதியாக
வளர்ந்து
தான்
வருகின்றது.
அவ்வாறிருக்கு
இந்திய தபால்
துறை மூலம்
அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும்
தெரியாமல் இருக்கிறது. அதில் ஒன்று
தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). இது
என்னவென்றால் நம் புகைப்படங்களையே
நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை
ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300.
இதனை முறையாக தபால் துறையில்
விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு
தபால் தலைகளைத் பெறலாம். இவை
அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.
நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக
பார்க்கும் இந்த நடைமுறை
மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு
பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள்
உள்ளன. தபால் துறையில் மக்களின்
பயன்பாடு குறைந்து கொண்டே வரும்
இவ்வேளையில், அத்துறையையும் நாம் பயன்படுத்தி
மகிழ்வதோடு மட்டுமல்லாமல், மக்களாகிய
நாம் தபால் துறையைப்பற்றிய
விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக