தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம் நவம்பர் 21.
மாவீரர் நாள் என்பது தாய்/தந்தை
நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது
உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி
செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது
உலகின் பல நாடுகளிலும் அந்தந்த
நாட்டு வீரர்களுக்காக நினைவு
கூரப்படுகிறது. ஒவ்வொரு
நாட்டவரும் தத்தமக்கென ஒரு
குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த
நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம்
செய்து இந்த அஞ்சலியைச்
செய்வார்கள். குறிப்பிட்ட சில
நாடுகளில் அந்த நாள் விடுமுறை
நாளாகக் கூடப் பிரகடனப்
படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழத்தில் மாவீரர்
நாள்
முதன்மைக் கட்டுரை: மாவீரர் நாள்
(தமிழீழம்)
தமீழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ
விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி
தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
உறுப்பினர்களையும், புலகளோடு இணைந்து
உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர்
இயக்க உறுப்பினர்களையும், மற்றும்
குட்டிமணி , தங்கத்துரை போன்ற வேறு சில
ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து
அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும்
நாள் ஆகும். இதற்குரிய நாளாக
நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 இல்
பிரகடனம் செய்யப்பட்டது.
நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற
நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும்
நாள்கள்க்கு மாவீரர் நாள் ஒத்தது.
ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு
அரசியல் நிலைப்பாடுகளைக்
கொண்டிருந்தாலும், ஈழப்
போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை
செய்வர். மற்ற இயக்கங்களுடைய
போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம்
செலுத்தும் நாட்கள் உண்டு.
விடுதலைப் புலிகளின் லெப். சங்கர் (எ)
சத்தியநாதன் என்ற முதல் மாவீரனின்
நினைவு நாள் தான், நவம்பர் 27. விடுதலைப்
புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய
சங்கர் மீது சிங்கள இராணுவம் கடும்
கோபம் கொண்டிருந்தது. 1982-ம்
ஆண்டு இராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு
இலக்கானான். 1982-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 20-ம் தேதியன்று சிங்கள
இராணுவத்தினரால் சுற்றி
வளைக்கப்படுகிறார். சங்கர் தப்பி ஓட
முயன்ற போது, வயற்றில் குண்டு பாய்கிறது.
அப்படியும் சிங்கள இராணுவத்தினரிடம்
சிக்காமல் தப்பிக்கிறார்.
மேற்சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி தலைவர்
பிரபாகரனின் மடியிலேயே சங்கரின் உயிர்
பிரிந்தது.
ஏனைய நாடுகளில்
மாவீரர் நாள்
ஈரான் : மே 24 , 1982 ஆம் ஆண்டு
ஈரான்-ஈராக் போரின் போது
கொரம்ஷார் துறைமுக நகரம்
ஈராக்க்கியப் படைகளிடம் இருந்து
கைப்பற்றப்பட்ட நாள் ஈரானில் மாவீரர்
நாளாகக்
கொண்டாடப்படுகிறது.
அல்பேனியா: மே 5 , 1942 இல் அல்பேனிய
கம்யூனிஸ்ட் தலைவர் கெமால்ல்
ஸ்டாஃப்ஃ கொல்லப்பட்ட
நாள், மற்றும் இரண்டாம் உலகப் போரில்
இறந்த 28,000 மாவீரர்களை நினைவுகூரல்.
பர்மா: ஜூலை 19 , இந்நாளில் 1947 ஆம்
ஆண்டு ஏழு பர்மிய விடுதலைப் போராளித்
தலைவர்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.
***********************************
தாயக விடுதலைக்காக போராடி
வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட
அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவு
கூருகின்ற தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று
21 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும்
ஆரம்ப சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
தமிழர் தாயகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சில
இடங்களில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள்
இந்த மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை
நடத்தியிருந்தனர். ஆனால்,
தொடர்ந்து அந்த இடங்களில்
வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க
முடியாமையால் அந்த இடங்களில் ஆரம்ப
நிகழ்வாக சுடரேற்றல் நிகழ்வுகள் மட்டுமே
நடைபெற்றுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஒன்றுகூடிய
மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வுகளில்
தீபமேற்றியுள்ளனர். இந்த ஆரம்ப
நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழர்
தாயகம் எங்கும் படையினரின் சோதனை
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் எத்தகைய இடர்கள் வந்தாலும்
மாவீரர்களை நினைவுகூருவார்கள் என்று
நம்பிய படையினர் இவற்றை எப்படியாவது
தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர
முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்காக புலனாய்வுத் துறையினரும்
களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் என்ன
தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை
தாங்கள் அனுஸ்டிப்போம் என்று
சபதமெடுத்துள்ள தமிழ் மக்கள்
சிறிலங்கா படையினரின் கண்களில்
மண்ணைத் தூவிவிட்டு நேற்றைய ஆரம்ப வணக்க
நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியின் சில
இடங்களிலும் தீவகம் மற்றும்
வலிகாமத்தின் சில இடங்களிலும் இந்த
ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதேவேளை, தென்மராட்சியில்
கொடிகாமம் மாவீரர் துயிலும்
இல்லம் சிறிலங்கா படையினரால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த
இடத்திற்கு சமீபமாக நேற்று மாலை
ஒன்றுகூடிய சில இளைஞர்கள் மாவீரர்களின்
நினைவாக மலர்தூவி வணக்கம்
செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து
சென்றுவிட்டதாகவும் அந்தச்
செய்தியைக் கேள்வியுற்ற படையினர் அங்கு
வந்து விசாரணைகளை
மேற்கொண்டதாவும் நேற்றிரவு
தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது
பிள்ளைகளான வீர மறவர்களை நினைத்து
வீடுகளில் தீபமேற்றி ஆரம்ப வணக்க
நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணம்
எங்கணும் நேற்று பெரும்பாலான
மக்கள் தமது வீடுகளில் நேற்று
மாவீரர்களுக்கு வணக்கம்
செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா படையினர் எத்தகைய தடைகளைப்
போட்டாலும் தமிழர் தாயகத்தில் தமிழீழ
தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை
எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு
தமிழ் மக்களின் நேற்றைய மாவீரர் தின
தொடக்க நிகழ்வு
எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று
வியாழக்கிழமை ஆரம்பமாகியதைத்
தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும்
சிறிலங்கா படையினரின் நடமாட்டங்கள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழுவதும்
வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா
படையினர் சோதனை நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தியிருந்தனர். வீதிகளில்
சென்ற இளைஞர், யுவதிகள் மறிக்கப்பட்டு
சந்தேகத்திற்கிடமானவர்கள்
உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர்
நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக