தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 .
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை "தேசிய வாலிபர் தினமாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு
ஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் தினமாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார் மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.
2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 15௦-வது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப் பிறந்தநாள் விழாவை இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் (ஜன.12), தேசிய இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது.
விவகானந்தர், 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது. "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
எதிர்பார்ப்பு:
இளைஞர்களளில் சிலர் புகையிலை, போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபட, இளைஞர்கள், சிறுவயதிலேயே லட்சியத்தை கைக்கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.தற்போது, இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். சீனா, ஜப்பான் நாடுகளில் முதியவர்களே அதிகம். இதனால், அந்நாடுகளில் வளர்ச்சி விகிதம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அரசியலில் இளைஞ்கள் நுழைந்தால் நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதற்கேற்ப மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். திட்டங்களை தீட்டி கொடுத்து, அவர்கள் வழியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக