புரட்சிதலைவர் எம் ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17
.
ஆரம்ப வாழ்க்கை:
உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.
திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம் என்று சொல்லும் அதே நேரத்தில் அரசியலிலும் அவர், யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராக விளங்கினார்.சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி வசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று தெய்வத்தாய் படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்படைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.
இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917-ந் தேதி ரேவதி நட்சத்திரத்தில்.
எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.
முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்ரபாணி.
பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதிர்க்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.
பள்ளி, நாடக வாழ்க்கை:
கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்ரபானியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.
பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த "லவகுசா" என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. லவகுசா நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.
தன்னையும் சேர்த்துக் கொண்டல்தால்தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே! என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.
நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.
இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜீ.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.
குரலில் ஏற்பட்ட மாற்றம்:
அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜி.ஆர், சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர், தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.
ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு காளி என்.ரத்தினம் ஆவார்.
சினிமா வாழ்க்கை ஆரம்பம்:
சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.
இந்த சமயத்தில் தான் "சதிலீலாவதி" படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.
அதைத் தொடர்ந்து தி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த இரு சகோதரர்கள் படத்தில் எம்.ஜீ.ஆர் மட்டுமின்றி, சக்ரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கதாநாயகன் ஆனார்:
சாலிவாகனன் படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.
அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். ராஜகுமாரி என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.
குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம் என்றார்.
செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.
ராஜகுமாரி படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.
யானையடி பள்ளிக்கு வந்த முதல்வர்:
எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தோம்.
எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ள பள்ளி பழைய இடத்திலிருந்து சற்று இடம் பெயர்ந்திருக்கிறது.
அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் நாகேஸ்வரம் வடக்கு வீதி என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.
ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானியையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.
எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.
கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
பள்ளியில் நடந்த லவகுசா நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.
இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.
பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார். 30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.
எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.
************************************************************************************************************
அரசியல் வரலாறு
சென்னை 14-Apr-2011
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.
****************************************************************************************************************
அ.தி.மு.க
எம்,ஜி,ஆர் அக்டோபர் மாதம் 17/1972 ம் தேதியன்று தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக்கட்சியைத் தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரைச் சூட்டினார், எம்,ஜி,ஆர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது குறித்த அறிவிப்பை முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கம் வெளியிட்டார் .
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.
புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த எம்.ஜி.ஆர் , அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.
தி.மு.க.வில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.
புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.
அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.
பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.
இவ்வாறாக அ.தி.மு.க தொடங்கப் பட்டது.
****************************************************************************************************************
எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதிகள்
வருடம்: 1967
தொகுதி: பரங்கிமலை
கட்சி: தி.மு.க
வருடம்: 1971
தொகுதி: பரங்கிமலை
கட்சி: தி.மு.க
வருடம்: 1977
தொகுதி: அருப்புக்கோட்டை
கட்சி: அ.தி.மு.க
வருடம்: 1980
தொகுதி: மதுரை மேற்கு
கட்சி: அ.தி.மு.க
வருடம்: 1984
தொகுதி: ஆண்டிபட்டி
கட்சி: அ.தி.மு.க
தமிழக முதலமைச்சர் [ 1977 to 1987 ]
வருடம்: 1977 - 1980
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1977
வருடம்: 1980 - 1984
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1980
வருடம்: 1984 - 1987
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1984
கருத்துக்களை பதிவு செய்ய...
**********************************************************************************************************
தமிழக முதலமைச்சர் [ 1977 to 1987 ]
வருடம்: 1977 - 1980
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1977
வருடம்: 1980 - 1984
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1980
வருடம்: 1984 - 1987
தேர்தல்: தமிழக சட்ட மன்ற தேர்தல் 1984
****************************************************************************************************************
இரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி?
இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலுக்குத்தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா என்ற ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, சரி வேட்பாளரை நிறுத்துவோம். இது நம் கட்சி ஜெயக்காவிட்டால் - நமக்கு பெரிய அவமானமாகிவிடும். நாம் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இதில் நாம் கட்சி தோல்வியடைந்தால் கட்சியை கலைத்துவிட வேண்டியது தான் என்று கட்சியில் உள்ள செயலாளர்களிடம் சொன்னார்.
கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடந்தது.
தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. அது சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. தி.மு.க. பிரச்சாரத்தில் இரட்டை இலை உதயசூரியனால் எரிந்து சாம்பலாக போய்விடும் என்றெல்லாம் பேசினார்கள். மகா பாரத யுத்தம் போல், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. யுத்த காலத்தில் போர்களத்தில் வலம் வந்த மாதிரி எம்.ஜி.ஆர். அன்று திண்டுக்கல்லை சுற்றி வந்தார். பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது.
************************************************************************************************************
காலத்தை வென்று நிற்கும் கழகம்
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 1967 ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலுருந்து விலத்திக் காட்டி, திராவிட இயக்கத்தை தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் அறிஞர் அண்ணா. அவரின் மறைவுக்குப் பின்னர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தயவினால் முதலமைச்சர் கருணாநிதி சுயநல வெறியோடு, கட்சியையும், ஆட்சியையும் தன் குடும்பச் சொத்தாக்க முனைந்தார். அண்ணா, திராவிட இயக்கத்தை ஆரம்பித்த பொழுது அவருடன் இருந்த ஐம்பெரும் தலைவர்களான டாக்டர் நாவலர் போன்றவர்களை ஓரங்கட்டி ஆட்சி, அதிகாரத்தை, கட்சியை தன் குடும்பத்திற்கு மட்டுமே என்ற சர்வாதிகாரப் போக்கில் நடந்தார். அண்ணாவின் இலட்சியங்கள், கொள்கைகளை புறக்கனித்தார். இந்நிலையில் கழகத் தொண்டர்களின், பொதுமக்களின் உள்ளக் குமுறலை வெளியிட்டதற்காக தி.மு.கழக பொருளாளராகவும், பரங்கிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த எம்.ஜி.ஆரை கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கினார். எம்.ஜி.ஆர். 1972 அக்டோபர் 17ல் புதிய இயக்கமாம் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். "அண்ணாவின்" திருவுருவத்தை கொடியில் பதித்தார். "அண்ணா" என்ற பெயரை கழகத்தின் பெயரில் இணைத்தார். அண்ணாயிசம் கழகத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தினார்.
எம்.ஜி.ஆர்.-மலையாளி,நடிகர் நாடாள முடியுமா? அவரின் திரைப்படத்தைப் போல அவருடைய கட்சியும் 100 நாட்கள் ஓடும் என்று கிண்டலும் கேலியும் பேசிய கருணாநிதியின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் கழகத்தின் கிளைகள் அமைக்கப்பட்டு கருணாநிதி அரசின் அடக்குமுறையை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தன. சென்னை - திருவான்மியூரில் கழகத்தின் முதல் மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார். கழகம் தோன்றிய 6 வது மாதத்தில் 1973 மே 21ம் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முதன்முதலாக "இரட்டை இலை" சின்னத்தை அறிமுகபடுத்த, இந்திய துணைக்கண்டமே வியக்கும் வண்ணம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றிவாகை சூடச் செய்தார்.
1974 ஜனவரி 25 சிதம்பரத்தில் முதன் முதலில் கழக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் மாநாட்டில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மாணவர்கள், இளைஞர்கள் அவர் பின்னே அணிவகுத்து வர வழி செய்தார். காலஞ்சென்ற சட்டப்பேரவைத் தலைவர் கா.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற அந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் மாநாட்டை கருணாநிதி அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிந்து வெற்றிகரமாக நடத்திய காரணத்தினாலும், முதலமைச்சர் கருணாநிதியின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து கருணாநிதி பிறந்த நாளில் அவரின் கொடும்பாவியை மாணவர் அணி சார்பில் கொளுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எங்கள் சக மாணவத் திறன் பாலசுந்தரத்தை பட்டப்பகலில் கருணாநிதி கட்சிக்காரர்கள் வெட்டிச் சாய்த்தார்கள். வத்தலக்குண்டு ஆறுமுகம்,பூலாவரி சுகுமாரன், மதுரை கர்ணன் போன்ற எண்ணற்ற இளம் வீரர்களை இயக்கம் பலி கொடுத்தது.
கருணாநிதியின் ஆட்சியில் 1977ம் ஆண்டு வரை கண்களை, கரங்களை, கால்களை, இழந்தவர்கள், சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்கள், தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை பிறந்த கழகக் குடும்பங்களின் எண்ணிக்கையை பட்டியல் இட்டால் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அத்தனை எதிர்ப்புகளையும் தாங்கி எம்.ஜி.ஆர். அந்த மகோன்னத தலைவரின் பின்னால் அணிவகுத்து கழகத்தை கட்டிக் காத்த வீரவரலாற்றுச் சரிதம் தான் அ.இ.அண்ணா தி.மு.கழகம். தமிழ்நாட்டில் கோயில், குளம் இல்லாத கிராமம் இருக்கும். ஆனால் அ.இ.அண்ணா தி.மு.க. அமைப்பு, அதன் கொடி பறக்காத கிராமம் இல்லை என்ற சிறப்புடன் இயங்கி 1977ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி வாகை சூடி அண்ணாவின் ஆட்சி பீடத்திலிருந்த சுயநலப்புலி, கருணாநிதியை அகற்றிவிட்டு, அண்ணாவின் இதயக்கனியாம் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்த இயக்கம் அ.இ.அண்ணா தி.மு.கழகம்.
அ.இ.அண்ணா தி.மு.க.வின் பெயரில் உள்ள அனைத்திந்திய என்ற பெயருக்கேற்ப மத்திய அமைச்சரவையில் கழகத்தை சார்ந்த திருமதி. சத்யவாணிமுத்து, திரு.பாலாபழனூர் இருவரும் கேபினெட் அமைச்சர்களாகவும், டாக்டர் மு.தம்பித்துரை இந்திய நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பொருப்பெற்றதொடு, நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு பொதுத்தேர்தல்களில் அ.இ.அண்ணா தி.மு.க. வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இப்படி அகில இந்திய அளவிலும் சிறப்பு பெற்ற இயக்கம் நம் இயக்கமாகும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபா எம்.பி.யாகவும், கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும் செல்வி.ஜெயலலிதா பொறுப்பேற்று கழக மற்றும் அரசுப் பணிகளில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உற்ற துணையாக திகழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் வண்ணம் கருணாநிதியின் கனவை பொடிப்பொடியாக்கி தமிழகம் முழுவதும் சுறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும் மீண்டும் கழகம் அமோக வெற்றி பெற்று 3வது முறையாக எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்கும் சிறப்பிற்கு அடித்தளமாக இரவு பகல் பாராது கண் துஞ்சாது உள்கட்சி - எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை துச்சமென மதித்து செயல்பட்டவர். கழகத்தின் வலிமையை உணர்த்தும் வண்ணம் எம்.ஜி.ஆர்., வேலூர், கடலூர், சேலம், கோவை மாநகர்களில் கழக மாநாட்டை நடத்தினார். 1986ம் ஆண்டு ஜூலை 12, ௧௩ நாட்களில் மதுரையில் கழகத்தின் அடிமட்டத் தொண்டனான கடலூர் முருகமணி தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் செல்வி.ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிடவும், அன்றே எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு ஜெயலலிதா தான் என்பதனையும் அந்த மாநாட்டின் மூலம் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்களுக்கும், லட்சோப லட்சம் மக்களுக்கும் அடையாளம் காட்டினார். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர். பேசும் போது குறிப்பித்தார், கருணாநிதி ஒரு தீய சக்தி. அந்த தீய சக்தியை தமிழகத்து அரசியலிலிருந்து விரட்ட வேண்டும் என்றார். அந்த மகத்தான மக்கள் தலைவர் 1987ம் ஆண்டு டிசம்பர் 25, அமரராகின்ற வரை கருணாநிதியால் ஆட்சி பொறுப்பை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்க்குப் பின்னால் இரண்டான கழகத்தை ஒன்றாக்கி முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கழகத்தை ஒரே குடும்பமாக்கி கழகத்தை வழிநடத்தி 1991-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் செல்வி.ஜெயலலிதா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.
1972 முதல் 2010 இன்று வரை இடைப்பட்ட 38 ஆண்டுகளில் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமரராகின்ற வரை 11 ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். 1972 முதல் 1977 வரை ஏறத்தாழ 5 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து போராட்ட அரசியல் செய்து பல கழகத் தொண்டர்களை பலி கொடுத்து ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆருக்குப் பின் 1988 -1991 மூன்று ஆண்டுகளும், 1996 -2001 வரை 5 ஆண்டுகளும் ஏறத்தாழ 8 ஆண்டுகள் செல்வி ஜெயலலிதா கருணாநிதியின் அரசு மற்றும் அதிகாரத்தை எதிர்த்து கழகத்தை கட்டிக் காத்ததோடு மட்டுமல்லாமல், பல வழக்குகளை எதிர்கொண்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கழகம் அழிந்துவிடும். தான் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடலம் என்று கனவு கண்ட கருணாநிதி,ஜெயலலிதா கழகத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்துவடை பொறுக்காமல் அவரை ஒழித்தால்தான் தனக்கு அரசியல் வாழ்வு என்று தப்புக்கணக்கு போட்டு ஒரு சர்வாதிகாரியைப் போல முதலமைச்சர் என்ற அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி 1996ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையிலடைத்து மகிழ்ந்தார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வந்து கழகத்தை மேலும் வலிமையுள்ளதக்கி கருணாநிதியை அவர்தம் அடக்குமுறையை தவிடு பொடியாக்கினார். கழகத்திற்கு தாயானார். இந்திய துணைக்கண்டம் உற்றுநோக்கும் முதல்வர் ஆனார்.
1998ம் ஆண்டு ஜனவரி 1, 2 நாட்களில் நெல்லை சீமையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாட்டில் இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையாக கட்சி தலைவர்கள் (அத்வானி, டாக்டர் ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள்) பங்கேற்ற மாநாட்டை நடத்தி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைத்து காட்டுவேன் என்று சூளுரைத்து 2001ல் கருணாநிதியை தமிழக அரசு கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்கள்.
ஆக, அ.இ.அண்ணா.தி.மு.க. 38 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள், இல்லாதவர்கள், இயக்கமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. பயங்கரவாதம், பிரவினைவாதம், தீவிரவாதம் தலைதூக்கா வண்ணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். வறட்சி மற்றும் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றத்திலும் துரித நிவாரணப் பணிகளால் தமிழக மக்கள் நிம்மதியாக சீரான வாழ்க்கை நடத்த முழுவீச்சில் அரசு எந்திரத்தை இயக்கி ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துள்ள உழவர் பாதுகாப்புத் திட்டம் வேறு எவருடைய ஆட்சியிலும் செய்யப்படவில்லை என்பதோடு வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகளுக்கு செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கழகத்தின் உள்கட்சித் தேர்தலை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடத்தி முடிக்கின்ற பெரிய கட்சி என்ற சிறப்பை ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். கழக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அகால மரணமடைந்தாலும் கழகத்தின் சார்பில் குடும்ப நிதி வழங்கி பாதுகாப்பதோடு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகை வழங்கி கழகத்தினருக்கு தாயாக அவர் வழங்கி வருகின்றார்.
1972ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நம் இயக்கம் 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் துணையோடு புதிய சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இந்தியாவை அன்று அசுர பலத்துடன் ஆண்டு கொண்டிருந்த இந்திராகாந்தி தலைமையிலான இ.காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் ஆக மூன்று பெருங்கட்சிகளை தவிடு பொடியாக்கி ஏறத்தாழ ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியதொடு, கருணாநிதி கட்சி வேட்பாளர் பொன் முத்துராமலிங்கத்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய இயக்கம் அ.இ.அண்ணா.தி.மு.கழகம். முதன் முதலில் கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் டாக்டர் அரங்கநாயகம் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இரட்டை இலை சட்டமன்ற உறுப்பினராக அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சட்டசபையில் அமர்ந்தார்.
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் முதல் 2005 காஞ்சிபுரம் - கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தேர்தல் வரை சராசரியாக ஒரு சட்டமன்றத்திற்கு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற இயக்கமாகவும், மக்கள் மனதில் ஒரு நிலைத்த உண்மையான இடத்தை தக்க வைத்துள்ள இயக்கமாகவும் அ.இ.அண்ணா.தி.மு.க. உள்ளது. இது தான் நமது இயக்கத்திற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம். தமிழகத்தில் கடந்த 38 ஆண்டுகளாக மற்ற எல்லா கட்சிகளை விடவும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து 39% சதவிகித மக்களின் அசைக்க முடியாத ஆதரவுடன் முதன்மை இடத்தில் முன்னிலையில் உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களை கட்டிக்காத்து திண்டுக்கல் தொடங்கி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி வரை 38 ஆண்டுகள் அ.இ.அண்ணா.தி.மு.க. பெற்று வரும் மகத்தான வெற்றியின் மூலம் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று செல்வி ஜெயலலிதா அவர்களால் பாதுகாக்கப்பட்டு அவரது தலைமையில் காலத்தை வென்று நின்று வெற்றி பெறுகிற கழகத்தின் பெருமைகளை காப்போம். வெற்றி வெற்றி வெற்றி எப்பொழுதும் நம் கழகத்திற்கு வெற்றி என்ற செய்தி திக்கெட்டும் பரவிட கண்துஞ்சாது பாடுபடுவோம்.
நன்றி -இதயக்கனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக